கலைக்களஞ்சியம்/அரசன் சூளாமணிச் சோழன்
அரசன் சூளாமணிச் சோழன் திருச்சிராமலையைத் தரிசித்து நீங்கும்போது ஒரு கோழி பறந்து வந்து தடுக்க, அவ்விடம் பெருமையுடையது என்று அங்குக் கோழி என்னும் பட்டணம் அமைத்தான். அதனால் கோழிவேந்தன் என்னும் பெயர் பெற்றான் (செவ்வந்தி புராணம்).