கலைக்களஞ்சியம்/அரசிக்கெரே
அரசிக்கெரே மைசூர் இராச்சியத்தில் ஹாசன் மாவட்டத்திலுள்ள நகரம். இந்தப் பெயருள்ள தாலுகாவின் தலைநகர். இது ஒரு முக்கியமான ரெயில்வே நிலையம். இங்குப் பயிராகும் கொப்பரை வேறு ஊர்களுக்கு அனுப்பப்பெறுகிறது. தாலுகாவின் பரப்பு: 487.4 ச. மைல். தாலூகாவின் மக்: 1.07,841 (1931) நகரத்தின் மக்: 6,611 (1931).