கலைக்களஞ்சியம்/அறந்தாங்கி
அறந்தாங்கி : தஞ்சாவூர் மாவட்டத்தின் தென்கோடித் தாலுகா. தாலுகாத் தலைநகரத்துக்கும் அதே பெயர். பட்டுச் சேலை நெசவு உள்ளது. சிதைந்த கோட்டையும் அதனுள் சில கோயில்களும் குளமும் வீடுகளும் உள. கோட்டைக்கு வெளியே உள்ள ஒரு கோயில் இராசேந்திர சோழன் 11ஆம் நூற்றாண்டில் கட்டியது. அறந்தாங்கியில் புகைவண்டி நிலையம் உண்டு.