கலைக்களஞ்சியம்/அல்ஸ்டர்
அல்ஸ்டர் (Ulster) அயர்லாந்து பிரிக்கப்படு வதற்குமுன் அதன் ஐந்து மாகாணங்களுள் ஒன்று. அப்போது அதில் தற்போதுள்ள வட அயர்லாந்தும், அயர் நாட்டின் வட பகுதியிலுள்ள கவான், டானிகால், மொனகான் என்னும் மாவட்டங்களும் அடங்கி யிருந்தன.
இப்போது மேற்கூறிய மூன்று மாவட்டங்கள் மட்டும் அல்ஸ்டர் என்னும் பெயருடன் வழங்கி வருகின்றன. பரப்பு : 3,123 ச. மைல். மக் : 2,65,654 (1943). துணி நெசவும் வேளாண்மையும் முக்கியத் தொழில்கள். பெல்பாஸ்டும் லண்டன்டெரியும் முக்கிய நகரங்கள்.
ஆயினும் பொதுவாக மக்கள் வட அயர்லாந்தையே அல்ஸ்டர் என்று குறிப்பிடுகிறார்கள்.