கலைக்களஞ்சியம்/அழகிய சொக்கநாதபிள்ளை

அழகிய சொக்கநாதபிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சநல்லூரிற் பிறந்தவர். நெல்லைக் காந்தியம்மை பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி முதலியவை பாடியவர். தம்மை ஆதரித்த முத்துசாமிப் பிள்ளைமீது 'காதல்' என்னும் நூல் பாடியிருக்கிறார். சிலேடை பாடுவதில் வல்லவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியினர்.