கலைக்களஞ்சியம்/அவொகாடோ
அவொகாடோ (Avocado) அயனமண்டல அமெரிக்காவில் வளரும் பெர்சியா கிராட்டிசிமா என்னும் மரத்தின் பழம். இந்தியா உட்பட மற்ற இடங்களிலும் இப்போது இது பயிராகிறது. இதில் பல வகைகளுண்டு. உருண்டையாகவும், முட்டை வடிவமாகவும், புட்டி வடிவமாகவும் இருக்கும். பசுமை முதல் சிவப்புக் கலந்த கறுப்பு வரையில் பல நிறமாக இருக்கும். பழம் 3-3 ராத்தல் நிறையிருக்கும். மேலே தோலும் உள்ளே வெண்ணெய் போன்றதும் மணமுள்ளதுமான மஞ்சள்-பச்சை நிறச் சதையும் நடுவில் ஒரு பெரிய கொட்டையும் இருக்கும். தோலை நீக்கித் தின்னத் தக்கது.