கலைக்களஞ்சியம்/ஆக்கன்

ஆக்கன் (Aachen) மேற்கு ஜெர்மனியிலுள்ள நகரம். இது ஒரு சமயம் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த போது ஐலா ஷாப்பெல் என்று வழங்கி வந்தது. இங்குள்ள கந்தக நீர்ச்சுனைகள் பேர்போனவை. அருலுள்ள சுரங்கங்களிலிருந்து எடுக்கும் இரும்பு, துத்தநாகம், ஈயம் ஆகியவற்றின் உதவியால் பல பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. இந்த நகரம் ரோமானியர் காலமுதல் இருந்து வருவது. சார்லமேனுடைய வட தலைநகரமாகவும் இருந்துளது. 1818-ல் இந்நகரம் ஜெர்மானியர் வசம் வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் 1944 அல்டோபரில் நேசப்படையினரால் கைப்பற்றப்பட்டது. மக் : 1,62,164 (1989).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆக்கன்&oldid=1456120" இலிருந்து மீள்விக்கப்பட்டது