கலைக்களஞ்சியம்/ஆசிரியவிருத்தம்

ஆசிரியவிருத்தம் ஆசிரியப்பாவின் இனம். ஐஞ்சீரடிக்கு மேற்பட்ட அடிகளாகிய கழிநெடிலடிகள் நான்காய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியவிருத்தம் எனப்படும். ஒவ்வோரடியினும் ஆறு சீர்கள் முதலாக எட்டுச் சீர்கள் வரை வருவன சிறப்பாகும்.