கலைக்களஞ்சியம்/ஆஞ்சு

ஆஞ்சு பிரான்சின் ஒரு பழைய மாகாணம்; பாரிஸிற்கு மேற்பாலுள்ள பிரதேசம். 11. 12ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் ஒரு முக்கியமான படைமானியமாக இருந்தது இங்கிலீஷ் அரசனான I-ம் ஹென்ரி தன் மகள் மாடில்டாவை ஜாப்ரே பிளான்டாஜனட் (GeoffreyPlantagenet)என்பவனுக்குமணம் செய்து கொடுத்தான்; அவர்களுடைய மகனான III-ம் ஹென்ரி இங்கிலிஷ் அரசனானபோது அவன் இங்கிலாந்து, நார்மண்டி, ஆஞ்சு ஆகிய மூன்றிற்கும் அரசனானான். அன்றியும், பிரிட்டனி, அக்விட்டேன் என்னும் பிரதேசங்களும் அவன் இராச்சியத்தில் அடங்கியிருந்தன. இவை முழுவதையும் சேர்த்து 'ஆஞ்சுப் பேரரசு' என்றும் சொல்வதுண்டு. 1203-ல் பிரெஞ்சு மன்னனால் ஆஞ்சு கைப்பற்றப்பட்டு, அரச வமிசத்தவர்களின் சொந்த உரிமையாக இருந்து வந்தது; 1584-ல் இறுதியாகப் பிரெஞ்சு இராச்சியத்தின் பகுதியாயிற்று. ஆஞ்சு இருந்த பிரதேசம் தற்போது 'மெயின் வார்' என்னும் மாகாணமாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆஞ்சு&oldid=1456462" இலிருந்து மீள்விக்கப்பட்டது