கலைக்களஞ்சியம்/ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன்

ஆண்டர்சன், ஹான்சு கிறிஸ்தியன் (1805-1875) டென்மார்க் நாட்டுக் கவிஞர்; நவீனங்களும் கதைகளும் எழுதுபவர். தேவதைக்கதைகள் எழுதுவதில் மிக்க புகழ் பெற்றவர். இவருடைய இலக்கியங்கள் ஜெர்மன், ஆங்கில, டச்சு, ரஷ்ய மொழிகளில் பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவருடைய ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் தேவதைக்கதைகளே உலகப்புகழ் பெற்றவை. கே. ஆர்.