கலைக்களஞ்சியம்/ஆரசோனா

ஆரசோனா அமெரிக்க ஐக்கிய நாடுகளுள் ஒன்று. பரப்பு: 1,13,580ச. மைல். மக் : 7,49,587 (1950). இங்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு. இதைச் சேர்ந்த பல தொழிற் கல்லூரிகளும் இருக்கின்றன. சிறுவர்களுக்குக் கட்டாயக் கல்வி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு உருளை முதலிய கிழங்குகளும், ஆரஞ்சு முதலிய பழங்களும் பருத்தியும் மிகுதியாக விளைகின்றன. சுரங்கத்தொழில் முக்கியமானது; ஐக்கிய நாடுகளிலேயே மிக அதிகமாகத் தாமிரம் கிடைக்கும் நாடு இதுவே .தலைநகரம் : பீனிக்ஸ். மக் : 1,06,818 (1950).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆரசோனா&oldid=1457257" இலிருந்து மீள்விக்கப்பட்டது