கலைக்களஞ்சியம்/ஆரிஸ்டாபனீஸ்
ஆரிஸ்டாபனீஸ் (Aristophanes) (கி.மு. 448?-385) இன்ப நாடகங்கள் எழுதியுள்ள கிரேக்க ஆசிரியர்களுள் தலை சிறந்தவர். அவருடைய நாடகங்கள் நகைச்சுவையும், எள்ளித் திருத்தும் சுவை யும் நிறைந்தவை, அவர் ஐம்பத்தாறு நாடகங்கள் செய் யுள் நடையில் இயற்றினார். ஆனால் இப்போது கிடைப் பவை பதினொன்றே. அவருடைய நடையும் சந்தமும் மிகவும் உயர்ந்தவை. அவருடைய நாடகங்கள் அவர் காலத்துச் சமூக வாழ்வின் ஓவியங்களாக விளங்குகின் றன. அவற்றுள் சிறந்தவை வீரர்கள், முகில்கள், குளவிகள், பறவைகள், தவளைகள் என்னும் பொருள் படும் கிரேக்கப் பெயரின.