கலைக்களஞ்சியம்/ஆர்கனாட்டுக்கள்

ஆர்கனாட்டுக்கள் கிரேக்கப் புராண வீரர்கள். தலைவன் ஜேசனுடன் ஆர்கோ என்னும் கப்பலில் கருங்கடற் கரையில் பூதம் காத்துவந்த பொன் மயிர்த் தோலைத் தேடிச்சென்றனர். அங்கு அரசகுமாரி மீடியா தனது மந்திர சக்தியால் பூதத்தை உறங்கச் செய்தாள். ஜேசன் தோலைக் கைப்பற்றினான்; மீடியா அவனுடன் தெசாலி நாட்டுக்குச் சென்றாள்.