கலைக்களஞ்சியம்/ஆர்க்கேஞ்சல்
ஆர்க்கேஞ்சல் சோவியத் ரஷ்யாவின் வடகோடி பகுதியில் உள்ள ஒரு நகரம். இது இப்பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரம்; ஆர்க்டிக் வட்டத்திற்கு சு. 100 மைல் தெற்கே துவீனா நதி வெண்கடலோடு கலக்குமிடத்தில் இருக்கிரது. 1584-இல் நிறுவப்பட்டது. இத்துறைமுகம் பெரிய வியாபாரத்தலமாக விளங்குகின்றது. இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் வழியாக பல பண்டங்களும் சோவியத் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன. ஆண்டில் ஆறு மாதம் இத்துறைமுகத்தில் பனி உறைந்துவிடுன்றது. இங்கிருந்து தெற்கேயுள்ள இடங்களுக்கு ரயில் பாதை செல்கிறது. இங்கு நடைபெறும் முக்கிய கைத்தொழில் மரமறுத்தல். மக்.சு.2,81,000(1939).