கலைக்களஞ்சியம்/ஆர்தர்

ஆர்தர் இங்கிலாந்து நாட்டுப் பிரசித்திபெற்ற புராண வீரர். இவர் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் பிரிட்டானியரை ஆண்டதாகக் கூறுவர். இவர் மனைவி கினிவர் ராணி. இவருக்குத் துணைவர் மந்திரவாதி மெர்லின். இவருடைய வீரர்கள் நாட்டில் தீயோரை அழித்து நல்லோரைக் காத்து வந்தனர். இவருடைய மருமகனுடன் நடந்த போரில் இவர் காயமுற்று ஆவலோன் தீவுக்குச் சென்றார் என்பர். இவரைப் பற்றிய கதைகளைச் சர் தாமஸ் மாலரி 1485-ல் சேகரித்து எழுதினார். டெனிசன் போன்ற ஆங்கிலக் கவிகள் இக் கதைகளை அடிப்படையாக வைத்துப் பல அழகிய பாடல்கள் செய்துளர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆர்தர்&oldid=1457150" இலிருந்து மீள்விக்கப்பட்டது