கலைக்களஞ்சியம்/ஆர்பியஸ்

ஆர்பியஸ் கிரேக்கப் புராணக் கவிஞன்; அற்புதமாக இசை பாட வல்லவன். யூரிடிசீ என்பவளை மணந்தான். ஆனால் ஹைமன் வாழ்த்தாததால் அவள் பாம்பு கடித்து இறந்தாள். ஆர்பியஸ் பாதாளலோகம் சென்ற போது அதன் அரசனும் அரசியும் இவனுடைய இசைக்காக யூரிடிசீயை இவனுடன் பூலோகத்துக்கு அனுப்பிப் பின்னால் திரும்பிப் பாராமல் செல்லுமாறு அனுப்பினர். ஆனால் இவன் பின்னால் திரும்பிப் பார்க்கவே மனைவி மறைந்தாள். பக்கான்டீஸ் என்னும் பெண்களின் காதலை இவன் மறுக்கவே அவர்கள் இவனைக் கொன்றனர். இறந்தபின் இவன் பாதாளம் சென்று தன் மனைவியை அடைந்தான்.