கலைக்களஞ்சியம்/ஆலமீடா
ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற்கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப்பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்றமளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945).