கலைக்களஞ்சியம்/ஆல்பாமா

ஆல்பாமா : டென்னெசி பள்ளத்தாக்குக்குத் தெற்கே மெக்சிகோ வளைகுடாவுக்கு வடக்கே அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஓர் இராச்சியமாகும். நல்ல நீர்ப்பாசனம் உடையது. முன்னாளில் பருத்தி மிகுதி. அதனால் பருத்தி இராச்சியம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இப்போதும் வேளாண்மை மிகுதியாக உடையது. முன் னாளில் வாழ்ந்துவந்த அமெரிக்க இந்திய சாதியாருடைய பெயரிலிருந்து இந்தப் பெயர் வந்தது. மக்: 30,61,743 (1950). இதில் 65 சதவிகிதம் வெள்ளையர். ஏனையோர் நீக்ரோக்கள், தலைநகரம் மான்ட்காமரி. மக்: சு.1,06,525 இந்நகரத்தில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. பர்மிங்காம் என்னும் நகரத்தில் பெரிய தொழிற்சாலைகள் பல இருக்கின்றன. மோபீல் என்னும் துறைமுகம் முக்கியமான கப்பல் சுட்டும் தலம். முக்கியக் கைத்தொழில்கள் பருத்தி நெசவு, இரும்புக்குழாய் செய்தல், மரம் அறுத்தல், நிலக்கரி எடுத்தல். புக்கர் வாஷிங்க்டன் என்னும் பேர்பெற்ற நீக்ரோ அறிஞர் பிறந்த நாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆல்பாமா&oldid=1457605" இலிருந்து மீள்விக்கப்பட்டது