கலைக்களஞ்சியம்/ஆல்ஸ்பைஸ்
ஆல்ஸ்பைஸ் (Allspice): இது ஒரு வாசனைப் பண்டம். கருவாப்பட்டை, சாதிக்காய், இலவங்கம் இவை மூன்றின் மணமும் இதில் உள்ளதுபோல் தோன்றும். மேற்கு தீவுகளில் வளரும் பிமென்டோ என்னும் மரத்தின் உலர்ந்த கனி. இதற்கு ஜமெய்க்கா மிளகு என்பது பெயர். சமையலுக்கும் ஊறுகாய்க்கும் உதவும். குடும்பம்: மிர்ட்டேசி ; இனம் :பிமென்டோ அபிஷினாலிஸ் (Pemento officinalis).