கலைக்களஞ்சியம்/ஆஷ் மரம்
ஆஷ் மரம் (Ash) மல்லிகைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம். இதில் ஐம்பதுக்கு மேற்பட்ட இனங்கள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் உண்டு. இலை இறகு வடிவ ஒற்றைக் கூட்டிலை. எழு சிற்றிலைகள் உண்டு. பூக்கள் சிறியவை. இலைகள் உண்டாவதற்கு முன் பூக்கும். விதைகள் இறகுள்ள கனியில் இருக்கும். மரம் ஆயுதப் பிடிகள், பந்தடிக்கும் துடுப்பு, பனிச்சோடு (Ski) முதலியவை செய்ய உதவும். நல்ல விறகு.
குடும்பம்: ஓலியேசீ (Oleaceae). சாதி : பிராக்சினஸ் (Fraxinus).