கலைக்களஞ்சியம்/இணைகரம்

இணைகரம் (Parallelogram) : இரு இணைகோடுகள் வேறு இரு இணைகோடுகளை வெட்டுவதால் நான்கு பக்கங்களை உடைய சமதள வடிவம் தோன்றுகிறது. இது இணைகரம் எனப்படும். நாற்கரத்தில் இது ஒரு வகை. இதன் எதிர்ப் பக்கங்களும் எதிரான உட் கோணங்களும் சமமாக இருக்கும். இதன் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமபாகங்களாக வெட்டும். இதன் உயரம், அடி ஆகியவற்றின் பெருக்குத்தொகை இதன் பரப்பாகும். அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள இணைகரம் சாய்சதுரம் (Rhombus) எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் லம்பமாக ஒன்றையொன்று வெட்டும். அடுத்துள்ள பக்கங்கள் லம்பமாக உள்ள இணைகரம் செவ்வகம் எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இணைகரம்&oldid=1463203" இலிருந்து மீள்விக்கப்பட்டது