கலைக்களஞ்சியம்/இந்துஸ்தானி தாலீமி சங்கம்
இந்துஸ்தானி தாலீமி சங்கம் என்பது உடலுழைப்பு, கைத்தொழில்கள் ஆகியவற்றின் வாயிலாகப் பிழைப்புக்கு உதவக்கூடிய தேசியக் கல்வித்திட்டத்தை வகுத்துப் பரவச் செய்வதற்காகக் காந்தியடிகளால் 1938-ல் நிறுவப்பெற்றது. தலைமை அலுவலகம் வர்தாவுக்கருகிலுள்ள சேவாக் கிராமம்.