கலைச் சொல் அகராதி பெளதிகம்

GOVERNMENT OF MADRAS
GLOSSARY OF TECHNICAL TERMS
OF
PHYSICS
(MINOR)
கலைச் சொல் அகராதி:
பௌதிகம்
(பொது அறிவு )


ENGLISH-TAMIL
ஆங்கிலம் - தமிழ்


Prepared by:
THE COLLEGE TAMIL COMMITTEE


தயாரிப்பு:
கல்லூரித் தமிழ்க் குழு
1960
விலை 25 த. பை,
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
GLOSSARY OF TECHNICAL TERMS
OF
PHYSICS
(MINOR)
*
கலைச் சொல் அகராதி:
பௌதிகம்
(பொது அறிவு)
*
Prepared by:
THE COLLEGE TAMIL COMMITTEE
*
தயாரிப்பு :
கல்லூரித் தமிழ்க் குழு
சென்னை அரசாங்கம்
குறிப்பு

1. உலகப் பொதுக் கலைச் சொற்கள் தமிழ் ஒலியில், எழுதப்பெற்றுள்ளன.

2. இரு பகர [ ] வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கலைச் சொற்கள் அல்ல.

3. ஏற்றவையாய் உள்ள் - தமிழ்க் கலைச் சொற்கள் இரு பிறை () வளைவுக்குள் உள்ளன.

4. பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ள போது, அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற்றுள்ளன.

5. * இந்த உடுக்குறி ஏற்கெனவே அரசாங்கம் உயர்நிலைப் பள்ளிகளுக்காக வெளியிட்டுள்ள கலைச்சொற்களினின்றும் மாறுபடுவதைப் புலப்படுத்துகிறது.

*
மூலத் தொகுப்பு :
திரு. தி. அ. கறுப்பண்ணன், பி. எஸ்ஸி . (ஆனர்சு),
பௌதிக விரிவுரையாளர்,
பூ. சா. கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை.
திரு. தா. ஏ. ஞானமூர்த்தி , எம். ஏ.,
தமிழ்ப் பேராசிரியர்,
பூ. சா. கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை.
முன்னுரை

தமிழிலேயே கல்லூரிகளில், கற்பிப்பது ஒரு புது முயற்சி. வகுப்பில் எழும் சூழ்நிலைகளையெல்லாம் எதிர்பார்ப்பது அருமை. இங்கே அடிப்படை, முட்டுப்பாடுள்ள கலைச் சொற்களை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அமைப்பதேயாம். முடிவாக ஒரு கொள்கை உருவாகலாம். குழந்தை முதலடி எடுத்து வைக்கும்போது தட்டுத் தடுமாறி நின்று, பின் நன்றாக நடக்கக் கற்றுக்கொள்கிறது. அதுதான் இயற்கையோடியைந்த விஞ்ஞானப்போக்கு. இங்கே குறித்துள்ள கலைச்சொற்களின் மூலங்கள் ஆங்கிலப் பாடப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டன. தமிழ்ச்சொற்கள் இப்போதைக்கு உதவக்கூடும் என்ற நோக்கிலேயே உருவானவை. இவை குற்றமற்றன என்று யாரும் கருதவில்லை. இவற்றைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கையிலேயே எல்லோரையும் இவற்றைப்பற்றி எண்ணுமாறும், திருத்தங்களைத் தருமாறும் கேட்டுக்கொள்ளுகிறோம். பல கல்லூரி ஆசிரியர்களும் பிறரும் இந்த முயற்சியில் ஒத்துழைத்துள்ளார்கள். எல்லாவற்றையும் கலைச் சொல்லாக்காது, இன்றியமையாதவற்றை மட்டும் குறித்துள்ளோம். - மாணவர்கள் ஆங்கில நூல்களையும் புரட்டிப்பார்த்து அறிவைப் பெறவேண்டிய சூழ்நிலைக்கு உதவவேண்டும்

என்பதனையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும். இன்று கற்பிக்கும் ஆசிரியர்கள்- தமிழில் கற்பிக்கும் முயற்சியில் எளிதாகப்பங்கு பெறவேண்டும் என்ற நோக்கமும் உண்டு. இக்கலைச்சொற்கள் கல்லூரிப் பாட நூல்களுக்கே அன்றிப் பொதுமக்கள் நூல்களுக்காக அல்ல என்பதனையும் வற்புறுத்துகிறோம், சொல்லிக்கொடுக்கும்போதும் நூல்களை எழுதும் போதும் திருத்தங்கள் எழும் என்பதில் ஐயம் இல்லை. நூல் எழுதுவோர்க்கு இது காரணமாக உரிமை உண்டு. போராட்டம் இன்றி அன்பு வழியே சென்றால் இடர்ப்பாடு நீங்கும், வெற்றியே காண்போம்.
கல்லூரித் தமிழ்க் குழு உறுப்பினர்கள்
தலைவர்:

திரு. கோ. ர. தாமோதரன், முதல்வர், பூ. சா. கோ. பொறியியல் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

உறுப்பினர்கள்:

திரு. பி. எம். திருநாரணன், முதல்வர், அரசியலார் கலைக்கல்லூரி, கோயமுத்தூர் -1.

திரு. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், பேராசிரியர், தமிழ்க் கலைத் துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

திரு. சி, வேலாயுதம், தலைமைப் பேராசிரியர், பொருளாதாரத் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை.

திரு. டாக்டர், மு. அறம், முதல்வர், கிராமிய உயர்நிலைக் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர்.

திரு. கி. ர. அப்புள்ளாச்சாரி, முதல்வர், வ. உ. சி. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தூத்துக்குடி.

திரு. டாக்டர் தேவசேனாபதி, ரீடர், தத்துவ நூல் இயல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.

திரு. போ. ரா. கிருஷ்ணமூர்த்தி, முதல்வர், பூ. சா. கோ. கலைக் கல்லூரி, பீளமேடு, கோயமுத்தூர்-4.

செயலாளர்:

திரு. வெ. கண்ணையன், செயலாளர், சென்னை அரசினர் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,

சென்னை .
PHYSICS
(MINOR)
பௌதிகம்
(பொது அறிவு)


*Absolute zero - வெப்பக் கீழ் வரம்பு

Absorption - உட்கவர்தல்

Absorption Power - உட்கவர் திறன்

Acceleration - வேக வளர்ச்சி, முடுக்கம்

Accumulator - மின் சேமக்கலம்

Acetylene - அசிடிலின்

*Acid - ஆசிட், அமிலம்

Acoustics - ஒலியியல்

Action - தாக்கு, வினை

*Adhesiveness - ஒட்டுந்தன்மை

Adiabatic Expansion - மாறா வெப்ப விரிவு

*Aerial - ஏரியல் (அலைவாங்கி, வான்கம்பி)

Aeronautics - வானவூர்திக் கலை

*Aeroplane - ஏரோபிளேன், (வானவூர்தி)

Air - வளி

Aircraft - வான்கலம்

Air screw - வளித்திருகு

Alchemists - இரசவாதி

Alcohol - ஆல்க்கஹால்; (சாராயம்)

Alkali - ஆல்க்கலி, (காரம்)

*Alloys - உலோகக் கலவை

*Alternating current - மாறுமின்னோட்டம்

Altimeter - ஆல்டிமீட்டர் (உயரமானி)
2

Ammeter - அம்மீட்டர்

Ampere - ஆம்பியர்

Amplifier - ஆம்பிளிஃபையர், (பெருக்கி)

Amplitude - வீச்சு

Anemometer - அனிமாமீட்டர், (காற்று வேகமானி)

Angle - கோணம்

Anode - ஆனோடு, (நேர்மின்முனை)

Anticlock wise - இடஞ்சுழியாக

* Aperture - துளை

Apparent- தோற்ற அளவில்

Approximate - ஏறக்குறைய

Arc - வட்டப்பகுதி; பகுதி வட்டம்

Arctic - வட முனை

*Armature - ஆர்மேச்சர், (சுழல் சுருள் )

Artificial Radioactivity - செயற்கைக் கதிரியக்கம்

Artificial Satellite - செயற்கைத் துணைக்கோள்

Asbestos - ஆஸ்பெஸ்டாஸ், (கல்நார்)

* Astronomy - வான நூல்

Astrophysics - வானியல் பௌதிகம்

* Atmosphere - வளிமண்ட லம்.

Atom smasher - அணு நொறுக்கி

Atomic theory - அணுக் கொள்கை

Atomic Combustion - அணு எரிப்பு

Auxiliary - துணை

Average - சராசரி
B

*Bacteria - பாக்டீரியா

*Balance - சம நிலை, தராசு

*Band spectrum - பட்டை நிற மாலை

*Barmagnet - காந்தக் கட்டை

*Barometer - பராமீட்டர் (காற்று அழுத்த மானி)

Basic principles - அடிப்படை விதிகள்

*Basin - அகல் கலம்

Battery - பாட்டரி (மின்கல அடுக்கு)

Beaker - பீக்கர் (மூக்குக் குவளை)

Beam - விட்டம்

Beam of light - ஒளிக் கற்றை

Bellows - துருத்தி

*Binocular -பைனாகுலர் (இரு கண் நோக்கி)

Biology - உயிர் நூல்

Bioscope - படக்காட்சி

Bi-product - துணைப் பொருள், உடன் உற்பத்திப்பொருள்

Bladders - சவ்வுப் பைகள்

Blurred - மங்கலான, மங்கிய

Boiler - கொதி கலன்

Boiling point - கொதி நிலை

Bolometer - போலோ மீட்டர்

Bombard - தாக்கு

Brake - பிரேக்கு, (முட்டுக் கட்டை )

Broadcasting - ஒலி பரப்புதல்

Bubble - குமிழி

Burette - பியூரெட்டு Buoyancy - மிதக்கும் தன்மை, மிதப்பு

Buoy - மிதவை, மிதப்புக்கட்டை

C

Cadmium - காட்மியம்

Calorimeter - கலோரி மீட்டர் (வெப்பமானி)

Camera - கேமரா, (ஒளிப்படக்கருவி)

Cancer - புற்றுநோய்

Candle - மெழுகுவத்தி

Candle power - வத்தித் திறன்

Cantilever - வளைவுச் சட்டம்

Capacitor, condenser - மின் ஏற்புக் கலன்

Capacity - கொள்ளளவு

*Capillary - நுண் குழாய்

Carbon - கார்பன், கரி

Carrier waves - ஊர்தி அலைகள்

Casting - வார்ப்பு

*Catalyst - கிளர் மிகுவி

Categories - வகைகள்

Cathode - எதிர் மின்வாய்

Cathode raytube - எதிர்முனைக் கதிர்க்குழாய்

Cell - செல், உயிர் அணு; மின்கலன்

Celluloid - செல்லுலாய்டு

Centre of gravity - ஈர்ப்ப மையம்

Centrifugal force - மையம் விட்டோடும் விசை, புறமுக விசை

Centripetal - மையம் நாடு

Chain reaction - தொடரியக்கம் Charge - மின்னூட்டம், மின்னேற்றம்

Chart - அட்டவணை

Chemical balance - ரசாயனத் தராசு

Chemical effect - ரசாயன விளைவு

Chemical solution - ரசாயனக் கரைசல்

Choke - நெளிவு நிமிர்த்தி

Chromatic aberration - நிறப் பிறழ்ச்சி

Chromosome - குரோமோசோம் (நிறத்திரி)

Cine-camcra - திரைப்பட ஒளிப்படக்கருவி

Cinematograph - திரைக் காட்சிக் கருவி

Circuit - சுற்று

Circumference - சுற்றளவு, சுற்று வட்டம், பரிதி

Clockwise - வலஞ்சுழி

Cloud chamber - முகில் அறை

Coaxially - ஓரச்சாக

Code - குறியீடு

*Cohesion - அண்மைப் பிணைவு

Coil - சுருள்

Coldness - குளிர்

Collision - மோதல்

*Combustion - எரிதல்

Communication - தொடர்பு

*Commutator - மின்போக்கு மாற்றி

Compass - திசை காட்டி

*Component - கூறு

Compound - கூட்டுப் பொருள், சேர்க்கைப் பொருள்

Compound microscope - கூட்டுப் பெருக்காடி

Compound wound - கூட்டுச் சுற்று

*Compressed - அழுத்திய, இறுக்கிய

Compressor - இறுக்கி, அழுத்தி Concave lens - குழிவில்லை.

Concave mirror - குழி ஆடி

Concentration - செறிவாக்கல்

Concentric circle - பொது மைய வட்டம்

*Condense - நீர்ப் பொருளாக்கு

Condenset (eletrical) - மின் தங்கி

*Conduction - கடத்தல்

Conductor - கடத்தி

Cone - கூர் உருளை, கூம்பு

Constituent - பகுதிப் பொருள்

Continuous spectra - தொடர் நிறமாலை

Control - கட்டுப்படுத்து, அடக்கு

Convection - நகர் முறை கடத்தல்

Convergent - குவிந்த

Convex - குவி

Core - உள்ளகம்

Corpuscles - கார்ப்சல்கள், நுண்ணிமம், வடிகம்

Corrector plate - திருத்தித் தகடு

Cosmic rays - காஸ்மிக் கதிர்கள், அண்டக் கதிர்கள்

Counter - எண்ணி

Crank - மாற்றச்சு

Crest - முகடு, முடி, எழுச்சி

Criminology - குற்றவியல்

Critical size - மாறுதான அளவு

Crude - பண்படாத

Crystal - படிகம், சில்லு

Curative - குணப்படுத்தும்

Current - மின்னோட்டம்

Curvature - வளைவு

Cycle - சுழற்சி

Cyclotron - சைக்ளோட்ரான்

Cylinder - சிலிண்டர், (நீள் உருளை)
D

Deflection - ஒதுக்கம்

Density - அடர்த்தி

Dew point - பனி நிலை

Diagram - விளக்கப் படம்

Diameter - குறுக்களவு, விட்டம்

Diaphragam - டையாஃபிரம், இடைத் திரை

*Diffuse - பரவி விரவு

Dimension - பரிமாணம், அளவை

Diode - டையோடு, (இரு கருவிக் குழாய் )

Diverge - விரி

*Direct current - நேர் மின்னோட்டம்

Direct proportion - நேர் விகிதம்

Discharge lamp - மின் இழப்பு விளக்கு

Dispersion - நிறப் பிரிகை

*Dynamics - டைனமிக்ஸ் (பொருளியக்க நூல்)

*Dynamo - டைனமோ (மின்னாக்கி)

E

Echo - எதிரொலி

Eclipse - கிரகணம்

Effect - விளைவு

*Efficiency - பயனுறு திறன், (செய் வேலைக்கும் செய்ய வேண்டிய வேலைக்கும் உள்ள விகிதம்)

Elasticity - மீள் திறன், (நிலை மீட்பு)

Electric bell - மின்சார மணி

Electricity - மின்சாரம்

Electric field - மின் மண்டலம்

*Electrify - மின் ஊட்டு Electric impulse - மின் துடிப்பு

Electric spark - மின் பொறி

Electrode - மின் முனை மின்வாய்

Electrolysis - மின் பகுப்பு

Electrolyte - மின் பகுபொருள்

Electromagnet - மின்காந்தம்

Electromotive force - மின்னியக்கு விசை

Electron - எலக்ட்ரான், (மின் அணு)

Electron microscope - எலக்ட்ரான் மைக்ராஸ்கோப், எலக்ட்ரான் நுண் பெருக்கி

Electroplating - மின் முலாம்

Elements - தனிமங்கள்

Ellipse - நீள் வட்டம்

Emission spectra - வெளிவிடுநிற மாலை

*Energy - ஆற்றல்

*Engine - எந்திரம்

Ether - ஈதர்

Expansion - விரிவு

Explosion - வெடித்தல்

<centerF

Filament - இழை, எரிகம்பி, சுடுகம்பி

Fission - பிளவு

Flask - பிளாஸ்கு

Flint glass - ஃபிளிண்ட் கண்ணாடி

Fluid - பாய் பொருள்

Foam - நுரை

Formula - வாய்பாடு

Focal length - குவிதூரம்

Focus - குவியம் Force - விசை

Freezing point - உறை நிலை

*Frequency - அலைவெண்

Fuel - எரி பொருள்

Fusion - இளகல், சேர்க்கை

Furious rate - கடும் வேகம்

*Fuse wire - உருகு கம்பி

G

Gallon - கேலன்

*Galvanometer - கால்வனாமீட்டர்; (மின்னோட்ட அளவி)

Gas - வாயு

Gasoline - கேசலின், பெட்ரோல்

Gas turbine - வாயுச் சுழலி

*Graduation - அளவுக் குறி

Graph - வரை படம்

Graphite - கிராபைட் , (பென்சில் கரி)

Gravity - ஈர்ப்பு ஆற்றல்

Grid - கிரிட் [பல கருவி மின்குழாயிலுள்ள வலைக்கம்பி]

Ground glass - தேய்த்த கண்ணாடி

Guided missiles - [குறிப்பிட்ட இடத்திற்குப்போகும் வண்ணம் ஏவும் கணைகள்]

Gun barrel - துப்பாக்கிக் குழல்

H

Hertzian waves - ஹெர்ட்ஸ் அலைகள் (வானொலி அலைகள்)

* Horizon - அடி வானம், தொடு வானம்

Horizontal - கிடைக் (கோடு, தூரம்) Horse power - குதிரைத் திறன்

Humidity - ஈரப் பதன்

Hydrogen Bomb - ஹைட்ரஜன் குண்டு, (நீரகக் குண்டு)

*Hydrometer - நீரி அளவி, திரவமானி

Hygrometer - ஈர அளவி

I

Ignited gas - எரி பற்றிய வாயு

Ignition temperature - எரி பற்றிய வெப்ப நிலை

Incandescence - எரி ஒளிர்வு

*Incident ray - படுகதிர்

Inclination) - சாய்வு

Indium - இண்டியம்

Induced current - தூண்டிய மின் ஓட்டம்

Induction coil - மின் தூண்டு சுருள்

Inert gas - மந்த வாயு

Infra red rays - இன்ஃபராரெட் கதிர்கள், [சிவப்புக்கு இப்பாலைக் காணொணாக்கதிர்கள்]

Injector - செலுத்தி

Inlet - புகுவாய்

*Insulator - இன்சுலேட்டர்; (கடத்தாப் பொருள்)

Intensity - செறிவு

Intercepts - குறுக்கீடு

Interference - எதிர்த்தழித்தல்

Inter planetary space - கோளிடை வெளி

Invention - புதுக்கண்டுபிடிப்பு

lon - அயான் (அயனி)

*Isothermal expansion - வெப்ப நிலைமாறா விரிவு

Isotope - ஐசோடோப்பு (ஓரகத் தனிமங்கள் ) .
J

*Jet - ஜெட் (கூர் நுனி நீர்த் தாரை; பீற்றாங்குழல்)

Jet tube - ஜெட் குழாய் (கூர் நுனிக் குழாய்)

Jupiter - வியாழன்

K

Kilogram - கிளோ கிராம், ஆயிரம் கிராம்

Kinematics - இயக்க நூல்

*Kinetic energy - இயக்க ஆற்றல்

L

*Laboratory - சோதனைக்கூடம்

Latent - உள்ளடங்கிய

Lateral movement - பக்க இயக்கம்

Lateral inversion - இடவல மாற்றம்

Law of conservation of energy - ஆற்றல் அழியா விதி

Law of conservation of mass - பொருண்மை அழியா விதி

Law of gravitation - ஈர்ப்பு ஆற்றல் விதி

Lens - லென்ஸ், (கண்ணாடி வில்லை)

Lift - தூக்கி Light tight - ஒளி புகா

Line spectra - வரிநிற மாலை

Linear expansion - நீட்ட விரிவு

*Liquid - நீரி, திரவம்

Lode stone - காந்தக் கல்

Longitudinal vibration - நெடுக்கு அதிர்ச்சி

Loud speaker - ஒலிபெருக்கி
M

Machine - பொறி

*Magnetic field - காந்தப் புலம்

Magnetic effect - காந்த விளைவு

Magnification - உருப் பெருக்கம்

Magnifying power - உருப் பெருக்கும் திறன்

Mass - பொருண்மை

Mass spectrograph - பொருண்மை நிற மாலை வரைவான்

Matter - பொருள்

Measurement - அளவு

Mechanical - பொறித் தொடர்புள்ள

Mechanical energy - பொறி ஆற்றல்

Mechanics - பொறி நுட்ப வியல்

Medium - இடை நிலைப் பொருள்

Medium waves - இடைநிலை அலைகள்

Melting point - உருகு நிலை

*Microphone - மைக்ரபோன் (ஒலி வாங்கி)

*Microscope - மைக்ரோஸ் கோப்பு (நுண் பெருக்கி)

Microscopy - மைக்ரோஸ் கோப்பி, (நுண் பெருக்கி இயல்)

*Microphotography - நுண் பொருள் நிழற்பட இயல்

Mineral - கனிப் பொருள்

Minute (angle) - கோண நிமிஷம்

Minute (time) - நிமிஷம்

Mirage - கானல் தோற்றம்

Moderator - தணிப்பான்

Modulation - ஒழுங்கு படுத்தல்

Molecule - மாலிகியூல் (மூலக்கூறு கூட்டணு)

Molecular theory of matter - பொருள் மூலக்கூறுக் கொள்கை *Momentum - மோதப்பாடு [பொருண்மை வேகம்]

Mosaic screen - பொலிவுத் திரை

Motion - இயக்கம்

Motor - மோட்டார்

N

Natural gas - இயற்கை வாயு

Needle - ஊசி

*Negative - எதிரான

Negative electric charge - எதிர் மின் ஏற்றம்

Negative pole - எதிர் முனை

Neon - நியான்

Neucleus - அணுக்கரு, உட்கரு

Newton's telescope - நியூடனின் தொலைநோக்கி

Neutron - நியூட்ரான்

North pole - வடமுனை

Nozzle - குழாயின் நுனி

O

*Objective - பொருள் வில்லை

Observation - நுண்காட்சி, கண்டறிதல்

Observatories - வானாராய்ச்சி நிலையம், நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் நிலையம்

Ohm - ஓம்

Oil engines - எண்ணெய் என்ஜின்

Opaque - ஒளிபுகா

Opposite - எதிரிடை

Optic axis - ஒளி அச்சு

Optical instrument - ஒளியியற் கருவி

Optics - ஒளியியல்

Oscillatory - அலைகின்ற
P

Parabola - பரபோலா

*Parallel - இணையான

Partial vacuum - ஒரு சார் வெற்றிடம்

*Particle - துகள்

Particle α - ஆல்பாத்துகள்

*Pendulum - ஊசலி

Penetrating power - நுழையும் திறன்

Pentode - ஐங்கருவிக் குழாய்

Penumbra - புறநிழல்

Period of oscillation - அதிர்வு நேரம்

Periodic table - மூலக வரிசை அட்டவணை

Phosphorescence - ஒளிவிடல், பின்னும் ஒளிர்தல்

Photo-electric cell - ஒளி மின்கலம்

*Photograph - ஒளிப் படம்

Photo luminescence - ஒளிப் பொலிவு

Photo micrography - ஒளிப்பட நுண்ணியல்

Photo sphere - ஒளி மண்டலம், ஒளிப்புரை

Physical balance - பௌதிகத் தராசு

Photo-synthesis - ஒளிச் சேர்க்கை

Pigments - வண்ணம், நிறப்பொருள்

* Piston - உந்து தண்டு

Pitch - சுருதி

*Pivot - பிவட், சுழல் முளை

Plane - தளம்

Plane mirror - சம தள ஆடி

Planet - கோள்

Plate - தகடு, தட்டு

Plywood - ஒட்டுப் பலகை

*Pointer - காட்டி; குறிமுள் Polar axis - துருவ அச்சு

Polonium - பொலோனியம்

*Positive - நேரான

*Positive charge - நேர் மின் ஏற்றம்

Potential difference - மின் அழுத்த வேறுபாடு

Power - திறன்

Power house - மின் உற்பத்தி நிலையம்

*Pressure - அமுக்கம்

Primitive - மிகப் பழமையான

Principle - தத்துவம்

Principal focus - முதன்மைக் குவியம்

Principal section - முதன் நிலை வெட்டுமுகம்

Prism - பட்டகம்

Prismatic binocular - பட்டக விழி நோக்கி

Process - செய்முறை

Projected - நீட்டிய

*Projectile - எறிபொருள்

Projector - திரைப்படக் கருவி

Propagation - பரப்புதல்

Propellant - முன் தள்ளி

Property - தன்மை

Protein - புரோட்டீன் (புரதம்)

Proton - புரோட்டான்

Pulley - கப்பி

Pulse - துடிப்பு

Pyrex glass - பைரக்ஸ் கண்ணாடி

Q

Quality - பண்பு

Quanta - குவாண்டம்கள் (சத்தித் துணுக்குகள்)

Quantum theory - குவாண்டம் கொள்கை
R

Rabot - ரோபோ (இயந்திர மனிதன்)

Radar - ரேடார்

Radiation - கதிர்வீச்சு

Radio - ரேடியோ, வானொலி

Radioactive isotope - கதிரியக்க ஐசோடோப்புகள்

Radiograph - கதிர்வீச்சுப் படம்

Radiology - கதிர்வீச்சு அலைமுறை மருத்துவம், கதிரியல் துறை

Radium - ரேடியம்

Rays α - ஆல்பாக் கதிர்கள்

Rays β - பீட்டாக் கதிர்கள்

Rays ɣ - காமாக் கதிர்கள்

Reaction - எதிரியக்கம்

Real - மெய்யான, உண்மையான

Received signal - வந்த சைகை

Receiver (radio) - வானொலிப் பெட்டி, வாங்கி

Receptor - புகுவாய், கொள்வாய்

Rectifier - திருத்தி, சீராக்கி

Reflection - ஒளித் திருப்பம்

Refracting telescope - ஒளி விலகுமுறைத் தொலைநோக்கி

Refraction - ஒளி விலகல்

Refractive index - விலகு விகிதம்

Regulating - ஒழுங்கு படுத்தும்

Relative density - ஒப்பு அடர்த்தி

Relativity - சார்புக் கொள்கை

Reproduce - ஏற்றதை ஈதல், திரும்பத் தோற்றுவி

Residue - எச்சம் Resistance - தடை, எதிர்ப்பு

Resolving power - வேறுபடுத்திக் காட்டும் திறன், பிரிவு

Resonance - ஒத்த அதிர்வு

Retardation - வேகக் குறைவு

Retina - விழித்திரை

Reversible - திருப்பவல்ல

Revolution - சுற்று

Rheostat - தடைமாற்றி

Rhodium - ரோடியம்

Rickets - ரிக்கெட்ஸ், என்புமெலி நோய்

Rim - விளிம்பு

Ripple - சிறு அலை

Rocksalt - இந்துப்பு

Rocket - ராக்கெட்டு (வெடி ஊர்தி)

Rotary - சுழலும்

Rubidium - ரூபீடியம்

S

Salt - உப்பு

Salt petre - வெடியுப்பு

Sample - மாதிரி

Sand glass - மணல் வட்டில், மணற் கன்னல்

Satellite - துணைக்கோள்

Saturated condition - பூரிதமாக்கிய நிலை, நிறை நிலை

Scale - அளவு

Scattering light - சிதறொளி

Schmidt Telescope - இஷ்மிட் தொலைநோக்கி

Screen - திரை

Screw - மறை ஆணி, திருகாணி Secondary circuit - துணைச்சுற்று

Secondary waves - இரண்டாந்தர அலைகள்

Self luminous - தானே ஒளிவிடும் தன்மையுள்ள

Series connection - தொடர் அடுக்கு

Shaft - இயந்திரத் தண்டு

Short circuit - மின்வலியின் குறுக்குப் பாய்ச்சல்

Short waves - சிற்றலைகள்

Shunt-fed - இணைந்தூட்டி

Silver bromide - வெள்ளி ப்ரோமைடு

Simple microscope - தனிப் பெருக்காடி

Sine - சைன் (நெடுக்கை)

Slipping - நழுவும்

Slit - பிளவு, கீறல்

Solar system - சூரிய மண்டலம்

Solar day_mean - சராசரி ஞாயிற்று நாள்

Solenoid - வரிச் சுருள்

*Solid - திண் பொருள்

Solution - கரைசல்

Sound waves - ஒலி அலைகள்

South pole - தென்புலம், தென் முனை

Space stations - வானவெளி நிலையம்

Space travel - வானவெளிப் பயணம்

Spark play - பொரி விடுதல்

Specific gravity - அடர்த்தி எண்

Spectral lines - நிற மாலை வரிகள்

Spectrum - நிறமாலை

*Spectrometer - நிறமாலை காட்டி

Spectroscope - நிறமாலை காட்டி

Spherical abberration - குவி உருட்சிப் பிறழ்ச்சி

Spin - (தற்) சுழற்சி

Spindle - தண்டு

Spinal spring - சுருள் வில் Spots - புள்ளிகள்

Spranged - தெளிக்கப்பட்ட

Spring - வில்

Stabilising vanes - நிலைநிறுத்தும் தகடுகள்

Stable - நிலையான

Standard - தரமான

Star - விண்மீன்

Starter - தொடக்கி

Stationary - நிலையான

Steam engine - நீராவி இயந்திரம் (பொறி)

Steel - எஃகு

Step down - இறக்கு

Step up - ஏற்று

*Stereoscope - ஸ்டீரியாஸ் கோப்பு (முவ்வளவை உருக்கருவி)

Structure -அமைப்பு

Submarine - நீர்மூழ்கிக் கப்பல்

Sulphur - கந்தகம்

Sulphuric acid - கந்தக அமிலம்

Superheated - மீவெப்பமாக்கப்பட்ட

Superhet receiver - சூப்பர்ஹெட் வானொலி (கலவைச் சிறப்பு வானொலிப் பெட்டி)

Superimposed - ஒன்றின் மேலொன்றாக உள்ள

Supersonic plane - மீஒலி வேக விமானம்

Surface tension - மேற்பரப்பு இழுவிசை, புறப்பரப்பு இழுவிசை

*Switch - மின்சாரப் பித்தான்

Synchronisation - உடன் நிகழ்ச்சி

Synchornous motor - உடன் நிகழ் மோட்டார்
T

Table - அட்டவணை

Technical - தொழில் துறை சார்ந்த

Technology - பொறி நுட்பத் துறை

Telecommunication - தொலைவுச் செய்திப் போக்குவரத்து, தொலைவிணைப்பு

Telegraph - தந்தி

Telephone - தொலை பேசி

Telephotography - தொலை ஒளிப்பட இயல்

*Telescope - தொலைநோக்கி

Television - தொலைக் காட்சி

*Temperature - வெப்ப நிலை

Terminal - முடிவிடம்

*Terrestrial telescope - புவியியல் தொலைநோக்கி

Time - காலம்

Theorem - தேற்றம்

Theory of relativity - சார்புக் கொள்கை

Thermal conductivity - வெப்பம் கடத்தும் திறன்

Thermal efficiency - வெப்பத்திறன்

Thermal radiation - வெப்பக் கதிரியக்கம்

*Thermometer - வெப்பமானி

Thermionic tube - சுடு மின் குழாய்

Thermo nuclear reaction - வெப்ப அணுக் கரு இயக்கம்

Thorium - தோரியம்

Thrust - உந்துவிசை, தள்ளுதல்

Thyroid cancer - தைராய்டு புற்றுநோய் (குரல்வளைப்புற்று நோய்)

Tissue - திசு

Toothed wheel - பல் சக்கரம் Total reflection prism - முழு உட்திருப்புப் பட்டகம்

Transmutation - உருமாற்றம்

Transformer - மின் மாற்றி

Translucent - ஒளி கசியும் தன்மை

Transparent - ஒளி புகும்

Transverse vibration - குறுக்கு அதிர்வு

Triode - முக்கருவிக் குழாய்

Trough - பள்ளம்

Tumour - கட்டி, கழலை

Tuning circuit - சுருதி கூட்டுச் சுற்று

Tungsten - டாங்ஸ்டன்

Turbine - சுழலி

Turmeric paper - மஞ்சள் தாள்

U

Ultrasonics - மிகை அதிர்வு ஒலியியல், கேளா ஒலியியல்

*Ultra_violet rays - அல்ட்ரா வைலெட் கதிர்கள் (ஊதாவுக்கு அப்பாலைக் கண் காணாக்கதிர்கள்)

Umbra - கருநிழல், அகநிழல்

Unit - அலகு

V

Vacuum - வெற்றிடம்

*Valve - (ஒரு வழி) அடைப்பு

Velocity - நேர் வேகம்

Velocity of recoil - பின்னியக்க வேகம்

Vertex - கோணமுனை

Vertical - செங்குத்து, நிலைக்குத்து

Vibration - அசைவு Vibrator - அசைந்தாடி

Virtual - மாய, போலி

Virus - வைரஸ்

Viscosity - பாகு நிலை, [பாய் பொருள்களிடையே ஒரு பகுதியை நோக்க மற்றொரு பகுதியின் இயக்கத் தடை]

Volatalisation - ஆவியாக்குதல்

Volt - வோல்ட்

Voltaic cell - வோல்ட்டா கலம்

Voltage - வோல்டேஜ் (மின்னழுத்தம்)

Volt meter - வோல்ட்மீட்டர், (மின் அழுத்தமானி)

Volta meter - வோல்டா மீட்டர், (மின் முறிகலம்)

W

Water pump - நீர் பம்பு, நீர்க் குழாய்

Wave length - அலை நீளம்

Welding - உருக்கி இணைப்பு

Wireless wave - வானொலி அலை, கம்பியிலா அலை

X

X-axis - எக்ஸ் அச்சு, எக்ஸ் இருசு

X-ray - எக்ஸ் கதிர்

Z

Zone - மண்டலம்