கல்லாடம்/6-10
< கல்லாடம்
பாடல்:06 (அண்டம்ஈன்று)
தொகுபிரிவு அருமை கூறி வரைவு கடாதல்
தொகு- அண்டம்ஈன்று அளித்த கன்னி முனிவாக
- திருநுதல் முளைத்த கனல்தெறு நோக்கினில்
- ஆயிர மணிக்கரத்து அமைத்தவான் படையுடன்
- சயம்பெறு வீரனைத் தந்துஅவன் தன்னால்
- உள்ளத்து அருளும் தெய்வமும் விடுத்த (5)
- இருள்மனத் தக்கன் பெருமகம் உண்ணப்
- புக்க தேவர்கள் பொருகடற் படையினை
- ஆரிய ஊமன் கனவென ஆக்கிய
- கூடல் பெருமான் பொதியப் பொருப்பகத்து
- அருவிஅம் சாரல் இருவிஅம் புனத்தினும் (10)
- மயிலும் கிளியும் குருவியும் நன்றி
- செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வுஇல என்னும்
- குன்றா வாய்மை நின்றுநிலை காட்டித்
- தங்குவன கண்டும் வலிமனம் கூடி
- ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு (15)
- சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்இன்று
- ஊற்றெழும் இருகவுள் பெருமதத் கொலைமலைக்
- கும்பம் மூழ்கி உடல் குளித்து ஓட
- பிறைமதி அன்ன கொடுமரம் வாங்கி,
- தோகையர் கண்எனச் சுடுசரம் துரக்கும் (20)
- எம்முடைக் குன்றவர் தம்மனம் புகுதஇப்
- புனக்குடிக் கணியர்தம் மலர்க்கை ஏடவிழ்த்து
- வரிப்புற அணில்வால் கருந்தினை வளைகுரல்
- கொய்யும் காலமும் நாள்பெறக் குறித்து
- நிழலும் கொடுத்து அவர்ஈன்ற
- மழலை மகார்க்கும் பொன்அணிந் தனரே. (26)
பாடல்:07 (இரண்டுடல்)
தொகுஇளமை கூறி மறுத்தல்
தொகு- இரண்டுடல் ஒன்றாய்க் கரைந்து கண்படாமல்
- அளவியல் மணநிலை பரப்பும் காலம்
- தளைகரை கடந்த காமக் கடலுள்
- புல்நுனிப் பனியென மன்னுதல் இன்றி
- பீரம் மலர்ந்த வயாவுநோய் நிலையாது (5)
- வளைகாய் விட்ட புளிஅருந் தாது
- செவ்வாய் திரிந்து வெள்வாய் பயவாது
- மனைபுகை யுண்ட கருமண் இடந்து
- பவள வாயில் சுவைகா ணாது
- பொற்குட முகட்டுக் கருமணி அமைத்தெனக் (10)
- குங்குமக் கொங்கையும் தலைக்கண் கறாது
- மலர அவிழ்ந்த தாமரைக் கயல்என
- வரிகொடு மதர்த்த கண்குழி யாது
- குறிபடு திங்கள் ஒருபதும் புகாது
- பொன்பெயர் உடையோன் தன்பெயர் கெடுப்ப (15)
- தூணம் பயந்த மாண்அமர் குழவிக்கு
- அரக்கர் கூட்டத்து அமர்விளை யாட
- நெருப்புமிழ் ஆழி ஈந்தருள் நிமலன்
- கூடல் மாநகர் ஆட எடுத்த
- விரித்த தாமரை குவித்த தாளோன் (20)
- பேரருள் விளையாச் சீரிலர் போல
- துலங்கிய அமுதம் கலங்கிய தென்ன
- இதழ்குவித்துப் பணித்த குதலை தெரியாது
- முருந்து நிரைத்த திருந்துபல் தோன்றாது
- தெய்வம் கொள்ளார் திணிமனம் என்ன, (25)
- விரிதரு கூழையும் திருமுடி கூடாது
- துணைமீன் காட்சியின் விளைகரு என்ன
- பார்வையின் தொழில்கள் கூர்வழி கொள்ளாது
- மறுபுலத்து இடுபகை வேந்துஅடக் கியதென
- வடுத்தெழு கொலைமுலை பொடித்தில் அன்றே (30)
- செம்மகள் மாலை இம்முறை என்றால்
- வழுத்தலும் வருதலும் தவிர்தி
- மொழிக்குறி கூடாச் செவ்வே லோயே! (33)
பாடல்:08 (நிணமுயிர்)
தொகுசுவடு கண்டு இரங்கல்
தொகு- நிணமுயிர் உண்ட புலவு பொறாது
- தலையுடல் அசைத்து சாணைவாய் துடைத்து
- நெய்குளித்து அகற்றும் நெடுவேல் விடலை
- அந்தணர் உகும்நீர்க்கு அருட்கரு இருந்து
- கோடா மறைமொழி நீடுறக் காணும் (5)
- கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
- நெருப்பு உருத்தன்ன செருத்திறல் வரைந்த
- வாசகம் கண்டு மகிழ்ந்ததும் இவணே;
- துணைவிளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த்
- தோகை மண்புடைக்கும் காய்புலி மாய்க்க (10)
- வாய்செறித் திட்ட மாக்கடிப்பு இதுவே
- செடித்தலைக் காருடல் இடிக்குரல் கிராதர்
- மறைந்துண்டு அக்கொலை மகிழ்வுழி இந்நிலை
- தவநதி போகும் அருமறைத் தாபதர்
- நன்னர்கொள் ஆசி நாட்டியது இவ்வுழை (15)
- கறையணல் புயங்கன் எரிதழல் விடத்தை
- மலைமறை அதகம் மாற்றிய அதுபோல்
- கொடுமரக் கொலைஞர் ஆற்றிடைக் கவர,
- எண்ணாது கிடைத்த புண்எழு செருநிலைக்
- கைவளர் கொழுந்து மெய்பொடி யாகென (20)
- சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
- கவைஇய கற்பினைக் காட்டுழி இதுவே
- குரவம் சுமந்த குழல்விரித்து இருந்து
- பாடலம் புனைந்தகற் பதுக்கை இவ்இடனே
- ஒட்டுவிட்டு உலறிய பராரை நெட்டாக்கோட்டு (25)
- உதிர்பறை எருவை உணவுஊன் தட்டி
- வளைவாய்க் கரும்பருந்து இடைபறிக் துண்ணக்
- கண்டுநின்று உவந்த காட்சியும் இதுவே
- செம்மணிச் சிலம்பும் மரகதப் பொருப்பும்
- குடுமிஅம் தழலும் அவண்இருட் குவையும் (30)
- முளைவரும் பகனும் அதனிடை மேகமும்
- சேயிதழ் முளரியும் கார்இதழ்க் குவளையும்
- ஓர்உழைக் கண்ட உவகையது என்ன
- எவ்வுயிர் நிறைந்த செவ்விகொள் மேனியின்
- அண்டப் பெருந்திரன் அடைவுஈன்று அளித்த (35)
- கன்னி கொண்டிருந்த மன்னருட் கடவுள்
- மலைஉருக் கொண்ட உடல்வாள் அரக்கர்
- வெள்ளமும் சூரும் புள்ளியல் பொருப்பும்
- நெடுங்கடற் கிடங்கும் ஒருங்குயிர் பருகிய
- மணிவேற் குமரன் முதல்நிலை வாழும் (40)
- குன்றுடுத்து ஓங்கிய கூடலம் பதியோன்
- தாள்தலை தரித்த கோளினர் போல
- நெடுஞ்சுரம் நீங்கத் தம்கால்
- அடும்தழல் மாற்றிய கால்குறி இவணே. (44)
- = பாடல்:09 (பொடித்தரும்) =
நற்றாய் வருந்தல்
தொகு- பொடித்தரும் பாதசின் முலைக்கொடி மடந்தையள்
- மணிமிளிர் பெருங்கட்கு இமைகாப்பு என்ன
- விழித்துழி விழித்தும் அடங்குழி அடங்கியும்
- தன்னைநின்று அளித்த என்னையும் ஒருவுக
- பல்மணிக் கலன்கள் உடற்குஅழகு அளித்தென (5)
- சுற்றுடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக
- பிணிமுக மஞ்ஞை செருமுகத்து ஏந்திய
- மூவிரு திருமுகத்து ஒருவேல் அவற்கு
- வானுற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின்
- மனவுஅணி மடந்தை வெறியாட் டாளன் (10)
- வேல்மகன் குறத்தி மாமதி முதியோள்
- தொண்டகம் துவைப்ப முருகியம் கறங்க
- ஒருங்குவந்து இமையா அருங்கடன் முற்றிய
- பின்னர்நின்று எற்றகைத் தாயையும் பிழைக்குக
- கருந்தலைச் சாரிகை செவ்வாய்ப் பசுங்கிளி (15)
- தூவிஅம் தோகை வெள்ஓதிமம் தொடர்உழை
- இவையுடன் இன்பமும் ஒருவழி இழக்குக
- சேயிதழ் இலவத்து உடைகாய்ப் பஞ்சி
- புகைமுரிந்து எழுந்தென விண்ணத்து அலமர
- குழைபொடி கூவையின் சிறைசிறை தீந்த (20)
- பருந்தும் ஆந்தையும் பார்ப்புடன் தவழ
- உடைகவட்டு ஓமை உலர்சினை இருக்கும்
- வளைகட் கூகையும் மயங்கி வாய்குழற
- ஆசையின் தணியா அழல்பசி தணிக்கக்
- காளிமுன் காவல் காட்டிவைத்து ஏகும் (25)
- குழிகட் கரும்பேய் மகவுகண் முகிழ்ப்ப
- வேம்உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப
- நெடுந்தாட் குற்றிலை வாகைநெற்று ஒலிப்ப
- திசைநின்று எழாது தழல்முகல் தெறிப்ப
- சுடலையில் சூறை இடைஇடை அடிக்கும் (30)
- பேர்அழற் கானினும் நாடும்என் உளத்தினும்
- ஒருபால் பசுங்கொடி நிறைபாட்டு அயர
- பாரிடம் குனிப்ப ஆடிய பெருமான்
- வையகத்து உருவினர் மலரா அறிவினைப்
- புலன்நிரை மறைத்த புணர்ப்பு அதுபோல (35)
- குளிர்கொண்டு உறையும் தெளிநீர் வாவியை
- வள்ளை செங்கமலம் கள்ளவிழ் ஆம்பல்
- பாசடை மறைக்கும் கூடல் பெருமான்
- செந்தாள் விடுத்துறை அந்தர்கள் தம்மினும்
- மூவாத் தனிநிலைக்கு இருவரும் ஓருயிர் (40)
- இரண்டெனக் கவைத்தநல் லரண்தரு தோழியை
- செருவிழம் இச்சையர் தமதுடல் பெற்ற
- இன்புகள் நோக்கா இயல்பது போல
- மருங்குபின் நோக்காது ஒருங்குவிட்டு அகல
- பொருந்தியது எப்படி உள்ளம்
- அருந்தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? (46)
பாடல்:10 (உயிர்புகும்)
தொகுசெலவு நினைந்துரைத்தல்
தொகு- உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
- பழவினை புகுந்த பாடகம் போல
- முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
- கட்டுடைச் சூர்உடல் காமம் கொண்டு
- பற்றி உட்புகுந்து பசுங்கடல் கண்டு (5)
- மாவொடும் கொன்ற மணிநெடுந் திருவேல்
- சேவலம் கொடியோன் காவல்கொண் டிருந்த
- குன்றம் உடுத்த கூடல்அம் பதிஇறை
- தொடர்ந்து உயிர்வவ்விய விடம்கெழு மிடற்றோன்
- புண்ணியம் தழைத்த முன்ஓர் நாளில் (10)
- இருவிரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி
- குழைவுடல் தலைவிரி கைத்திரி கறங்க
- ஒரு விரல் தெறித்தும் ஐவிரல் குவித்தும்
- பெருவாய் ஒருமுகப் படகம் பெருக்க
- தடாவுடல் உம்பர்த் தலைபெறும் முழவம் (15)
- நான்முகம் தட்டி நடுமுகம் உரப்ப
- ஒருவாய் திறந்து உள்கடிப்பு உடல்விசித்த
- சல்லரி அங்கைத் தலைவிரல் தாக்க
- கயந்தலை அடிஎன கயிறமை கைத்திரி
- இருவிரல் உயர்த்திச் செருநிலை இரட்ட (20)
- இருதலை குவிந்த நெட்டுடல் தண்ணுமை
- ஒருமுகம் தாழ்த்தி இருகடிப்பு ஒலிப்ப
- திருமலர் எழுதிய வரைஇருபத் தைந்து
- அங்குலி இரண்டிரண்டு அணைத்துவிளர் நிறீஇ
- மும்முகக் கயலுடன் மயிர்க்கயிறு விசித்த (25)
- கல்ல வடத்திரள் விரல்தலை கறங்க
- மரக்கால் அன்ன ஒருவாய்க் கோதை
- முகத்தினும் தட்ட மூக்கினும் தாக்க
- நாடிரு முனிவர்க்கு ஆடிய பெருமான்
- திருவடி வினவாக் கருவுறை மாக்கள் (30)
- நெஞ்சினம் கிடந்து நீண்டவல் இரவில்
- செல்லவும் உரியம் தோழி நில்லாது
- எம்எதிர்வு இன்றி இருந்து எதிர்ப்பட்டு
- மறைவழி ஒழுகா மன்னவன் வாழும்
- பழிநாட்டு ஆர்ந்த பாவம் போலச் (35)
- சேர மறைந்த கூர்இருள் நடுநாள்
- அரிதின் போந்தனிர் என்றோர்
- பெரிதின் வாய்மை வெற்பனின் பெறினே! (38)