களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பிற்சேர்க்கை - 4

அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி கட்டுரைகள்


1923 - கொடுங்காற்று, லஷ்மி.
1926 - ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1.
- தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், Part 1, செந்தமிழ்ச் செல்வி
1927 - காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7
- இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி
- வெண்பா - நூற்கள், லஷ்மி
- தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி
1931 - கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே
- ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே
- சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே
- மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன்
- தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன்
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு
- இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு
- மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர்
- வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர்
1932 - சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல்
- இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல்
- 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர்
1933 - தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10
1934 - வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு
1935 - நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன்
- பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன்
1937 - கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6
1938 - நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6
- நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16
- மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8
1947 - பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7
- அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
- உரையூரழிந்த வரலாறு, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- யாரால் மழைபெய்கிறது? செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
1948 - சென்னை நகரம் யாருக்கு உரியது? செந்தமிழ்செல்வி, சிலம்பு 23
- இராவணன் ஆண்ட இலங்கை எது? செந்தமிழ்ச்செல்வி, 23:3
- திருவள்ளுவர் கூறிய பொருட் செல்வம், செந்தமிழ்ச்செல்லி, 23:11
- தமிழ் நூல்களில் மீன்வகை, செந்தமிழ்ச்செல்வி, 22:7
- கழுதை ஏர் உழவர், செந்தமிழ்ச்செல்வி, 23:1
- பண்டைக்காலத்து எழுது கருவிகள், செந்தமிழ்ச்செல்வி, 23:4
- விபுலானந்த அடிகள் - வரலாற்றுக் குறிப்பு, ஈழமணிமலர், 1:2
1949 - வசுந்த குக மாகர மாத்திரை, செந்தமிழ்ச்செல்வி. 25 (ஓலைச்சுவடியிலிருந்துபுதுப்பித்து எழுதப்பட்ட கவி வெண்பா - மருந்து செய்முறை குறித்தது )
- மணிபல்லவம் - ஜம்புகொல பட்டினம், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- நகில்குறைத்தல் - வரலாற்றுக் குறிப்பு, செந்தமிழ்ச்செல்வி, 24:3
- கடவுள் - முனிவர் - தெய்வம், செந்தமிழ்ச்செல்வி, 24:8
1950 - யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- எழுத்து ஆக்கம், செந்தமிழ்ச்செல்லி, 25:7
- சங்க காலத்து மதுரை, செந்தமிழ்ச்செல்வி, 25:3
- நான் கண்ட பெருந்தமிழன், செந்தமிழ்ச்செல்வி, (மறைமலையுள் குறித்தது) 25
- யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
1952 - செந்தமிழ்சிந்தாமணி - கால ஆராய்ச்சி, சீவக சிந்தாமனி சொற்பொழிவு நினைவு மலர் - ஜைனத் தமிழ் இலக்கிய மன்றம், காஞ்சிபுரம்.
1953 - கன்னடமும் தமிழும், செந்தமிழ்ச்செல்வி, 28:8
- மறைவுற்ற தமிழ் நூல்கள், செந்தமிழ்ச்செல்வி (தொடர்ச்சியாக சிலம்பு 28 முதல் 10 இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை இதுவே பின்னர் மறைந்துபோன தமிழ் நூல்கள். என நூலாக வெளிவந்தது. 25:7
1956 - பௌத்த சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்.
- தமிழ்நாட்டுச் சிற்பக்கலைகள், தமிழ் இலக்கியக்கோவை - ஐந்தாம் படிவம் (பாடநூல்), திருநெல்வேலி டயோச்சன் புக்டெப்போ, பாளையங்கோட்டை (1953 - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 28 இல் வெளிவந்த கட்டுரை)
- கூவத்துப் பௌத்த சிந்தனைகள், கலைக்கதிர், புத்தர் மலர், 8:6
1957 - பாவாடை, சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர்.
1958 - தமிழில் பிறமொழிச் சொற்கள், பாரதி - தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாட்டு மலர்.
- தேனவரை நாயனார் சாசனம். தமிழ்ப்பொழில், 34:11
- வருணன் வணக்கம், தமிழ்ப் பொழில், 34:3
- உன் மகள், கி.ஆ.பெ.மணிவிழாமலர்
- ஜைன மதமும் திருக்குறளும்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், தமிழ்ப்பொழில், 35:2
- பத்தினிச் செய்யுளும் கண்ணகியும், தமிழ்ப்பொழில், 35:6
- திருமாவுண்ணி கண்ணகியா? கலைக்கதிர், 9:11
- பஞ்ச சீலம், கலைக்கதிர் - பொங்கல் மலர்
- பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம், கலைக்கதிர், 1:1 சனவரி
- சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, தமிழ்ப்பொழில், 36: 4-5
- சிலப்பதிகாரமும் பங்களரும், கலைக்கதிர், 11:8 ஆகஸ்டு
- உண்மைப்பொருள், கலைக்கதிர், 11:10 அக்டோபர்
- பாமரர் பகர்ச்சி. நண்பன் ஆகஸ்டு: மலர் 7
- நடைவாவி, நண்பன், மலர் :3
- சிற்பக்கலையில் தாமரை, நண்பன், மலர் 5.
- கோழிப்பாம்பு. நண்பன், மலர் 6
- பாமரர் பகர்ச்சி, தண்பன், மலர் 7
- அடிமை வாழ்வு, நண்பன், மலர் 8
1960 - பௌத்த குட்டன், கலைக்கதிர்
- ‘மெய்’ என்னும் சொல் ஆராய்ச்சி, தமிழ்ப்பொழில், 36:4
- ஆல்நீர், ‘கலைக்கதிர்’, செப்டம்பர்.
1961 - மதுரைக் காஞ்சியின் காலம், இரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர்
- எழினி - யவனிகா, Tamil Culture vol.IX
- கொங்கு நாட்டில் பிராஃமி எழுத்துக்கள், செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு:35
- சிறுபாணன் சென்ற வழி, Tamil Culture vol.IX
- தமிழ் நாட்டில் யவனர், கலைக்கதிர், பிப்ரவரி.
- சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர்.
- சேரநாட்டு முத்து, தெ.பொ.மீ. மணிவிழா மலர், மார்ச்.
1962 - அவையடக்கம், தென்றல், பொங்கல்மலர்.
- தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள். செந்தமிழ்ச்செல்வி, 36:2
- துளுமொழியும் தமிழ் மொழியும், கலைக்கதிர் பொங்கல் மலர்.
1963 - கண்ணன் பிறந்த மாட்சி (கவிதை). (மலையாளக் கவிதையைத்தழுவி எழுதியது. பாரதி. - தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்.
- பௌத்த மதமும் திருக்குறளும், செந்தமிழ் 63:5
- சைவ சமய வரலாறு. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர்.
- ஒல்லாந்து தேசம், Recreation Club, Third Anniversary.
1964 - இந்தியால் தமிழ் கெடுமா?, முரசொலி, பொங்கல் மலர்.
- தமிழ் எழுத்தாளர் சங்க 12 ஆவது மாநாடு - தலைமையுரை, ‘பாரதி’, தமிழ் எழுதாளர் சங்கம், சென்னை .
1965 - முத்தமிழ் வள்ளல், நகரத்தார் மாநில மாநாட்டு மலர்,
- கம்பரும் சாளமும்
1966 - சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம், கல்வி, டிசம்பர்.
- வன பண்டித ஹிஸ்ஸென்லெ தருமரதன தெரோ, ‘பாரதி’14 ஆவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்.
- நற்பண்பாளர், குத்தூசி குருசாமி நினைவுமலர், சென்னை .
- சேரன் செங்குட்டுவன் AOR vol.XXI, part 1, University of Madras.
- கல்லாடனார், சுடர், பாரதிதாசன் மலர், 15 தில்லித் தமிழ்ச்சங்கம்.
1967 - பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள், தமிழ் வட்டம் முதலாம் ஆண்டு
1968 - சிவன் திருமால் உருவ அமைப்பு, புலவர்குழு வெளியீடு: திருச்சி.
- பௌத்தர் வளர்த்த தமிழ். உலகத் தமிழ் மாநாடு - விழா மலர்
- வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், 10:12
- மாதவி: காவிரிப்பூம் பட்டினத்தின் கலைச்செல்வி, பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் சிறப்பு மலர்.
- தேவநந்தி - கண்ணகியின் தோழி, சென்னை இளைஞர் கழக இரவு உயர்நிலைப்பள்ளி - பொன்விழாமலர்.
- முப்புரம் எரித்த முதல்வன். திருக்கோயில், 10:10 ஜூலை
- வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், செப்டம்பர்.
- வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள், திருக்கோயில். அக்டோபர்.
1969 - இளங்கோ அடிகளின் கவிதை நயம், தமிழ்வட்டம் இரண்டாவது ஆண்டு மலர்.
- மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா? தமிழ்ப்பொழில், 35:3
- திருமெழுக்குப்புரம், திருக்கோயில், சனவரி.
- சங்க காலத்து நடுகற்கள், ஆராய்ச்சி, மலர் 1.
1970 - இலிங்கோத்பவ மூர்த்தம், இராமலிங்கர் பணிமன்ற முத்திங்களிதழ். 3:12
- திருக்காரிக்கரை, திருக்கோயில், மார்ச்.
- திருவக்கரை, திருக்கோயில், மே
- சங்க காலத்து வாணிகம், ஆராய்ச்சி, மலர்2
- மறைந்துபோன மருகூர்ப்பட்டினம், இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள், தொகுதி III.
1971 - ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சியபாண்டியன் நெடுஞ்செழியன், செந்தமிழ்ச்செல்வி. 46:6
- சங்க காலத்துக் கைத்தொழிலும் வாணிகமும், ஆராய்ச்சி, மலர்:3
- திருவிளையாடற் புராணத்தில் பௌத்த கதைகள், தில்லி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்.
- மாநாய்கனும் மாசாத்துவானும், செந்தமிழ்ச்செல்வி, 46:1
- தொறு என்னும் சொல்லின் வரலாறு, மூன்றாவது உலகத் தமிழ்க்
கருத்தரங்கு நிகழ்ச்சி, தொகுதி III
1972 - சங்கநிதி பதுமநிதி, சிதம்பரம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயி திருக்கும்பாபிஷேக மலர்.
- காவியப் புலவரும் ஓவியக் கலைஞரும். ஆராய்ச்சி, 3:2
- சொல் ஆராய்ச்சி, செந்தமிழ்ச்செல்லி. 46:9
- சிலப்பதிகார ஆய்வுரை, செந்தமிழ்ச்செல்வி. 46:2
1973 - மணிமேகலையின் விண்விழிச் செலவு. தமிழ்ப்பொழில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
- வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள், பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்.
- கண்ணகியார் தெய்வமான இடம் எது? வ. சுப்பையா பவழவிழா மலர்.
- நல்ல சிற்றம்பலமும் தில்லைச் சிற்றம்பலமும், திருக்கோயில், 15:6
1974 - இலக்கியத்தில் நடு கற்கள், வீரர்கள் நடுகற்கள் Hero stones குறித்த கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு-தொல்லியல்துறை, தமிழக அரசு.
- தேசிகப் பாவை, முக்குடை.
- கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம், Journal of Tamil Studies vol.5
- திருக்குறளில் பௌத்தமும் சமணமும், திருக்குறள் கருத்தரங்கு மலர். திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி.
1975 - கவிமணிக்கு அஞ்சலி, கவிமணி மலர்.
- தமிழ் அகம், Joumal of Tamil Studies, vol.III (இக்கட்டுரை செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22லும் வெளிவந்துள்ளது.)
- நாய்வேடம் கொண்ட நம்பன், கொங்கு. 5:12
1976 - இளங்கோவும் சந்தனமும், மணிமேகலை மன்றம் விழா மலர்.
- வஞ்சிக்கருவூர்: சங்க காலச் சோழ நாட்டின் தலைநகரம், Journialor Tamil Studies:9
1978 - ஒரு குறளுக்கு பௌத்த விரிவுரை, தமிழ் ஆராய்ச்சியின் எல்லைகள், பேரா.நா.வா.மணிவிழா மலர்.
- காவியப் புலவரின் சொல்லோவியம், செந்தமிழ்ச் செல்வி, 52:4
- சீறாவின் காப்பியல் பண்புகள், சிந்திக்கினிய சீறா, பீராஃபௌண்டேஷன், சென்னை.
1980 - தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும், முக்குடை.

தொகுப்பு: வீ.அரசு

எழுதப்பட்ட வரலாறுகள் மறுவாசிப்பிற்குரியவை என நாம் இன்று சொல்கிறோம். கால் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தப் பணியைத் தொடங்கியவர் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். களப்பிரர் காலத்தை தமிழரின் வரலாற்றுத் தொடர்ச்சி அறுபட்ட, பண்பாடு அழிக்கப்பட்ட இருண்ட காலமாகத் தமிழ் அறிவுலகம் சித்திரித்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் களப்பிரர் காலத்தின் ஊடாகத் தமிழக வரலாற்றின் தொடர்ச்சியை நிறுவியவர் அவர். களப்பிரர் காலத்தில் தமிழ், மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை கண்ட வளர்ச்சிகளைச் சுட்டிக் காட்டியவர் அவர். சைவ- இந்துப் பண்பாடுகளைச் சாராதவர்களை அத்தியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைக்கும் வரலாற்றுச் சூழலில் தமிழ்த் தொன்மையின் பன்மைத் தன்மையின் பாற் கவனத்தை ஈர்த்தவர் அவர். சமணமும் பவுத்தமும் இன்றித் தமிழில்லை என நிறுவியவர் அவர். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்த இடைப்பட்ட காலத்தில் களப்பிரர் காலம் குறித்து வெளிவந்துள்ள புதிய ஆய்வு முடிவுகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு மயிலை சீனி அவர்களின் ஆய்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லமுனையும் நோக்கில் எழுதப்பட்ட பேரா.அ.மார்க்ஸ் இன் விரிவான ஆய்வுரையுடன் இந்நூலை வெளியிடுவதில் விடியல் மகிழ்ச்சி அடைகிறது.