கவிபாடிய காவலர்/அண்டர் மகன் குறுவழுதி

9. அண்டர் மகன் குறுவழுதி

தெய்வத்திரு மறையாம் திருக்குறளில் பொருட்பாலைச் சார்ந்த ஒழியியல் என்னும் பகுதியின்கீழ், குடிமை என்னும் அதிகாரம் காணப்படுகின்றது. அவ்வதிகாரத்தின் ஐந்தாவது குறளாகிய,

வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று

என்ற இதற்கு உரைவகுத்த பரிமேலழகர் அழகர், ' தொன்று தொட்டு வருகிற குடியில் பிறந்தவர் கொடுக்கும் பொருள் முன்னைய நிலையி ஆணும் சுருங்கிய போதும், தம் நற்குணத்தினின்றும் நீங்கார் என்று உரை கூறித் தொன்று தொட்டு வருதலாவது சேர சோழ பாண்டியர் என்பது போல ஆதிகாலம் தொடங்கி மேம்பட்டு வருதல் ' என்று விளங்கச் செய்துள்ளார். இதனால், தொன்று தொட்ட பழங்குடி முடிவுடை மூவேந்தர் குடிகளாகிய சேர சோழ பாண்டியர் குடிகள் என்பது நன்கு தெரிய வருகிறது. பாண்டியர்கள் பல சொற்களால் குறிக்கப்படுவர். மாறர், கெளரியர், செழியர், வழுதியர் என்பன அக்குடியினரைக் குறிப்பிடும் சொற்களாகும்.

இத்தகைய பாண்டியர் குலத்தைச் சார்ந்த ஒரு பாண்டியன் தன் விருப்பம் காரணமாகத் தன் அரச குலமாகிய மன்னர் குலத்தில் பெண் கொள்ளாது, ஆயர் குலத்தில் அதாவது இடை யர் குலத்தில் பெண் கொண்டனன். அவ்விடையர்குல மாதுடன் இன்புற்று இல்லறம் நடத்தும் காலத்து, அம்மாது கருவுற்று ஒர் ஆண் மகவை ஈன்றெடுத்தனள். அம் மகன் ஆயர் குல மரபும், பாண்டியர் குல மரபும் ஆகிய இரு மரபுகளும் கலந்த நிலையில் பிறந்தவன் ஆதலின், அவனுக்கு வேறு எத்தகைய பெயரையும் சூட்டி அழைக்காமல், இரு மரபின் பெயர்களும் அமைந்த நிலையில் அண்டர் மகன் குறுவழுதி என்றே அழைக்கப்பட்டு வந்தான். அண்டர் என்பார் இடையர். வழுதி என்பது பாண்டியன் என்னும் பொருள் தரும் சொல். ஆகவே, இரு மரபுகளின் பெயர்களை இணைத்தே அண்டர் மகன் குறுவழுதி என்று கூறப்பட்டனன். அம் மகன் வளர்ச்சி அடைய வேண்டிய அளவு வளர்ச்சி பெறாமல், குறுகி இருந்தமையால் குறுவழுதி என்று அழைக்கப் பட்டனன் போலும் !

இவ்வண்டர் மகன் குறுவழுதி இளமை முதற்கொண்டே கல்வியில் ஆர்வம் கொண்டு தீந்தமிழ் மொழியில் காணும் இலக்கண இலக்கியங்களை நன்கு ஓதிப் பயின்று வந்தனன். இப்பயிற்சியே பின்னல் பெரும் புலவர்களில் ஒருவனுய் இருக்கும் வாய்ப்பினைத் தந்தது. ஆகவே, இனி இவனைப்பற்றிக் கூறப்படும் போது மரியாதையாகவே கூறுதல் வேண்டும். இதற்குச் சான்றாக இவன் பின்னல் குருவழுதி யார் என்று மரியாதையாகக் குறிக்கப்பட்டு வந்ததையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

அண்டர் மகன் குறுவழுதி பாடியனவாக நமக்குக் கிடைத்துள்ள செய்யுட்கள் நான்கு. அவற்றுள் ஒன்று புறநானூற்றிலும், மற்றொன்று குறுந்தொகையிலும், ஏனைய இரண்டும் அகநானூற்றிலும் உள்ளன.

புறநானூற்றுச் செய்யுளில் இருந்து இப்புலவன் யார் மீது இச் செய்யுளை இயற்றியுள் ளார் ? எச்சந்தர்ப்பத்தில் இதனைப் பாடியுள் ளார் என்பன அறிந்து கொள்ளா நிலையில் உள்ளன. ஆனால், இவர் பாடியுள்ள அப்பாடலால் இவர் கல்வியைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டவர் என்பதும், அக் கல்வியைப் பயின்றவரை நன்கு பாராட்டுபவர் என்பதும் புலனுகின்றன. தாம் பாடியுள்ளவனைப்பற் றிக் கூறும்போது, ' கல்வியென் என்னும் வல்லாண் சிருஅன் ' என்று கூறி அந்த அளவில் நிறுத்தாது, அவன் தன் தாயில்லை மிகவும் விரும்பப்பட்டவகை இருந்தான். இதற்குக் காரணம் இவன் கற்ற கல்வியேயாகும் என்பதை

ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல்லாண் சிருஅன்

என்று கூறியுள்ளார். குறுந்தொகையில் இவரால் பாடப்பட்ட பாட்டு, அன்பு கலந்த இரு காதலர் தோழியின் துணை கொண்டு கூடி இன்புற்று வருகையில், பகலில் வந்து செல் அம் காதலனைப் பார்த்து, "நீ இரவிலும் இங்கு வந்து இல்லத்தில் தங்கித் தலைமகளை விட்டுப் பிரிந்து போதல் கூடாது' என்பதை வற்புறுத் திக் கூறுவதாகும். இப்படிக் கூறும் போது தோழி அத்தலைவனிடம் நாகரிகமான முறையில் கூறித் தங்குமாறு பேசியதுதான் நாம் இங்குப் பாராட்டற்குரியது. தலைமகனை நோக்கி நீ இங்கு இரவு தங்கித்தான் போக வேண்டும் ' என்று வன்மை மொழியால் கூறாமல், ' இங்கு இரவு தங்கிப் போவதில் தவறு உண்டாகுமோ?’ என்று வினவுடன் கலந்து கூறினாள். இவ்வாறு வினயமாகக் கூறினல், எவர்தாம் இணங்காது எதிர்த்துப் பேசுவர்? இத்துடன் இத் தோழி நீ இரவு நேரத்தில் இவண் வருவது எவரும் அறிதல் கூடாது என்பதையும் சமத்காரமாக ' வரை மருள் நெடுமணல் தவிர்ந்து நின்று அசைஇ" என்று பேசியதாகப் புலவர் கூறுகிறார். அதாவது, தலைவா! உன் தேரை மலையும் மருளும்படி மணல் குவிந்து மலைபோல் காணப்படும் மணல் குன்றுகளின் பின் மணல் பரப்பில் நிறுத்தி விட்டு வருக" என்பதாம்.

அகநானூற்றில் காணப்படும் செய்யுட் களில் இப்புலவர் கூறும் கருத்துக்கள் சில. அவற்றுள் ஒன்றில் தலைவியைக் கூடிச் செல்லும் தலைவனிடம் தோழி, தலைவ, நீ இப்படிப் பிறர் அறியா வண்ணம் வந்து செல்வது கூடாது. உன் காதலிக்கு நாளுக்கு நாள் கட்டும் காவலும் மிகுகின்றன. அவள் வெளியே வர ஒட்டாமல் வீட்டிலும் அடை பட்டு விடுவாள். ஆகவே, விரைவில் திருமணம் முடித்தற்கான செயலில் முனைந்து நிற்பா யாக ' என்பதாம். இக் கருத்தினைக் கொண்ட பாடலில், தலைவி தன் தலைவன் வரமாட்டான என்று எண்ணி ஏங்கிக் கூறியதாகத் தோழித் தலைவனிடம் கூறிய அடிகள் மிகவும் இரக் கத்தை எழத்தான் செய்கின்றன. வாரார் கொல் எனக் காண்தொறும் பருவரும் பருவருதலாவது துன்புறுதலாம்.

அதே அகநானூற்றில் காணப்படும் மற் ருெரு பாடல் தலைமகன் கேட்குமாறு தலைவியினிடம் தோழி சிலவற்றைக் கூறியது போல அமைந்தது. அப்படித் தோழி கூறு மாறு பாடியதன் கருத்துத் தலைவியைத் தலை வன் விரைவில் மணந்துகொள்ளத் துரண்டு தற்கேயாம். அப்பாடலில் கூறப்பட்டுள்ள உவமை படித்துச் சுவைத்தற் குரியது. அதாவது வேங்கை மரத்தின் மலர்கள் பாறைகளில் சிந்திக் கிடக்க, அத் தோற்றத்தைக் கண்ணுற்ற யானைகள், புலி பாறையின் மீதுபடுத்திருக்கிறது போலும் ! அது நம் மைக் கண்டால் பாய்ந்து நம்மைக் கொன்று விடும் ' என்று எண்ணி ஓடிவிடும் என்பதாம். அதனைப் புலவர் வேங்கை ஒள்வி புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் கயவாய் இரும்பிடி இரியும் " என்று பாடியுள்ளார்.