காக புசுண்டர்
காகபுசுண்டர் பாடல்கள்
நூல் – 26
பக்கம் 380
1 காகபுசுண்டர் பாடல்கள்
தொகு1
தொகுசிறந்த பாராபரம் ஆகி எங்கும் தானாய்த்
- தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் முன் ஆகிப்
பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
- பல்லாயிரங்கோடி அண்டம் படைத்த போதம்
வரம்பெருகி யனந்தனந்தம் உயிரும் ஆகி
- மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெரு கண்டத்தில் எழுந்தே நின்ற
- சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே
2
தொகுஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி
- ஒமுடிந்த பட்டணத்துக்கு அப்பாற் சென்று
நாமென்று சொல்லற்று யோக ஞானம்
- நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்
வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்
- வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்
காமென்ற பீடமதிற் கண்டு தேறிக்
- காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே
3
தொகுபாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்
- பத்தடா ஐம்புலனைப் பரத்தினூடே
சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்
- திருவான வுச்சியிலே சேரா மற்றான்
ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே
- அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று
வீரேதான் பேசியே மெலிந்து போவான்
- விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே
4
தொகுகாணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி
- கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று
பூணப்பா மனத்தையுந்தான் பிச்சொட்டாமற்
- பூட்டடா பிரமத்திற் புகுந்து எந் நாளும்
வீணப்பா மந்திரங்கள் ஒன்று மில்லை
- விதியில்லை மதியில்லை கெதியு மில்லை
தோணப்பா தோணுமடா மனம் ஒன் றான
- சுத்தமுடன் நீயிருந்து தவஞ் செய்வாயே
5
தொகுசெய்யப்பா வாசிமுனி மகனே கேளு
- தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயிரத்தில்
மெய்யப்பா சரக்கு நீத்து வகை யெல்லாம்
- மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள்
பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் பாக்குப்
- புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்
வையப்பா இந்நூலில் மவுனமெல்லாம்
- வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே
6
தொகுகேளப்பா கேசரமே அண்டவுச்சி
- கெட்டியாய்க் கண்டவர்க்கேமவுன மாகும்
ஆளப்பா பரப்பிரம யோக மென்றே
- அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்
வானப்பா கெவுன மணி விந்து நாதம்
- வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்
நாளப்பா அண்ண மெல்லாஞ் சத்தியோடு
- நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே
7
தொகுகாணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்
- காட்டுகிறேன் வாசமுனி கருவாய்க் கேளு
பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று
- பொறிகளையும் உண்டாக்கிப் புவனந் தன்னில்
தோணலாம் உயிர்ப் பயிரைப் படைத்தெந் நாளும்
- தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்றமாகி
ஆணலாம் நாலுவகை யோனி யாகி
- அண்டமடா அனந்தனந்த மான வாறே
8
தொகுவாறான பிரமத்தின் நடுவே மைந்தா
- வந்ததடா ரவிமதியும் சுடர் மூன்றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயும்
- கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
- வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணில் பின்னலாகி
- நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே
9
தொகுபாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே
- பத்தியே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
- அண்ட மெல்லாம் ஏகமாய்த் தெரியலாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
- கபாலத்தில் முக்கூறாயச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
- வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே
10
தொகுகேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
- கிருபையுடன் தண்டுக்குங் கீழ் மேலாக
நாளப்பா தமர்போலே பிடரி மார்க்கம்
- நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி உயர மைந்தா
- வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
- சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே
11
தொகுபாரடா புருவமத்தி யேதென் றக்கால்
- பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
- நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில்நேரே மைந்தா
- மேவடா மனந்தனையும் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
- கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே
12
தொகுபோமடா முன்சொன்ன நரம்பி னூடே
- பூரித்து ரவிமதியும் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியும் கீழே பாயும்
- அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளி திறந்து சொல்லி விட்டோம்
- நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
- உறுதியுடன் சித்தமதை ஊன்றிப் பாரே
13
தொகுபாரான சாகரமே அண்ட வுச்சி
- பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
- சித்தான சித்து விளையாடி நிற்கும்
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ
- விண்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்கள் உதித்த தெப்போ
- கூறாத அட்சரத்தின் குறியைக் காணே
14
தொகுகாணார்கள் பிரமுந்தான் உதிக்கு முன்னே
- கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ
தோணாமல் மந்திரங்கள் அனந்தங் கற்றுச்
- சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
- வேரோடே கெட்டுழல்வான் விருதாமாடு
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா
- குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முக்தி தானே
15
தொகுமுத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது
- மோசமடா :மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத்
- தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
- பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை
எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம்
- ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே
16
தொகுதானென்ற கற்பமடா மதுவுண்டக்கால்
- சஞ்சார சமாதி யென்பது அதற்குப் பேரு
ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்
- உதயகிரி தனிற் சென்று ஊடுருவிப் பார்க்கத்
தேனென்ற திரையெழுந் தீய்ந்து போகுந்
- திரிவாரே உச்சிநடுச் சென்ற போது
கோனென்ற கருவியெல்லாம் ஒடுங்கிப் போகுங்
- கூற்றுவனார் ஆட்டமதைப் பார்க்கலாமே
17
தொகுபார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்
- பாடுவான் ஒருகாலைத் தாழ விட்டே
ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்
- என்மகனே மதியெனபது அதற்குப் பேரு
கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா
- கண்டுபார் ரவியென்று கருதலாகும்
மார்க்கமுடன் அண்டவுச்சி மேலேதானும்
- மகத்தான வன்னி இருப்பிடந்தான் பாரே
18
தொகுபாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்
- பார் தனிலே அறுபத்து நாலுயோகம்
ஆரப்பா இருக்கு மென்று வெவ்வேறாக
- அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தங் கோடி
நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து
- நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே
- விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே
19
தொகுகாணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்டு
- காசுமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்
கோணாமல் நான்னா லைந்து சிறிது காலம்
- துருவ மென்ற பிரமத்தை யடுத்துக் கேட்க
நாணாமல் அண்டவுச்சி தன்னிலே தான்
- நாடியே மனத்தாலே நாட்ட மாகக்
கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்
- கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே
20
தொகுஇருத்திய இருதயத்தில் மனமொன்றாக
- ஏகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும்
- நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே வாலைக்கண் திறந்து பார்க்கப்
- பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்தென் மைந்தா
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்
- காரணத்தைக் கண்டு விளையாடு வாயே
21
தொகுவிளையாடிப் போதமய மாக வுந்தான்
- வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து
நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை
- நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி
அலையாமல் ஆரொருவர் உறவு மற்றே
- ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி
மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி
- மவுனமென்று மனந்தனையும் அடக்கி நில்லே
22
தொகுநில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்
- நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்
வல்லவர் போல் வேதபுராணங் காவ்யங்கள்
- மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்
சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்
- திருடர்கள் தான் அலைந்தலைந்து திரிவார மட்டை
வெல்வதொரு பிரமநிலை அறியா மாற்றான்
- வேரற்ற மரம் போலே விழுவார் பாரே
23
தொகுபாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்
- பார்த்தீப லிங்கத்தைப் பணியா மாற்றான்
வீரப்பா நீராட்டிப் பூசை செய்து
- வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள்
தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது
- செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு
காரப்பா மனங்கொண்டு பரத்தினூடே
- கண்டவரே கயிலாசத் தேகந் தானே
24
தொகுதானென்ற பிரமத்தை யடுத்தி டாமல்
- தாரணியில்தெய்வமடா அனந்த மென்னும்
ஊனென்ற குருவென்றுஞ் சீடன் என்றும்
- உதயகிரி பாராத உலுத்த மாடு
வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து
- வேசையர் மேலாசைவைத்து வீணன் ஆகித்
கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்
- கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே
25
தொகுபாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்
- பார்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை
ஆரப்பா கண் வெடிக்குந் தேகம் போகும்
- அடயோக மென்பார்கள் ஆகா தப்பா
சாரப்பா மனந்தனை யண்ணாக்கில் நேரே
- சார்ந்து மிகப் பார்க்கையிலே வாசி தானும்
வீரப்பா மேலடங்கும் கீழ் நோக்காது
- வெட்டாத சக்கரத்தை யறிய லாமே
26
தொகுஅறியலாம் மணந்தானே உயிர் தானாகும்
- அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்தலாகும்
- பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவதாக்கி
- விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியாமண்டவச்சி
- கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே
27
தொகுதாமென்ற உலகத்தில் மனித ரோடே
- சஞ்சாரஞ் செய்யாமல் தனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டிடாதே
- ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்திடாதே
- ஆயாச மாகவுந்தான் திரிந்திடாதே
காம்ப்பேய் கொண்ட வனோடு இணங்கிடாதே
- காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே
28
தொகுவிளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
- வேகாத தலையாகும் விரும்பிப் பாரு
மலையமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
- மைந்தனே சாகாக்கால் அதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
- அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
- கபடமற்ற தேகமடா கண்டு பாரே
29
தொகுகண்டு கண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்
- கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்
தண்டு முண்டு செய்யாதே மனம் வேறானால்
- தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்
தொண்டு செய்து பெரியோரை யடுத்து மைந்தா
- தொழுது நீ யென்னூலை அன்பாய்க் கேளு
விண்டுமவர் சொல்லாவிட்டால் இந்நூல் சொல்லும்
- வெற்றி பெற மனவடக்கம் வைத்துப் பாரே
30
தொகுபாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர்
- பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா
ஆரப்பா சென்றேறிப் பார்க்கும் போது
- அதீத முள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தங் காட்டும்
நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்
- நிமிடத்தில் செய்திடுவாய் நிலையைக் கண்டால்
வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்
- வேறில்லாக் கனிதனையும் உண்கலாமே
31
தொகுஉண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே
- உறுதியுள்ள அண்டத்தில் உருகிப் பாயுந்
திங்கலாந் தோணுமடா அமிர்தச் சீனி
- தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா
தங்கலாந் தேகமது அழியாமல் தான்
- சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
- பூரித்துப் பார்த்திடலே புவன மொன்றே
32
தொகுஒன்றான பிரமமே வெவ்வே றாக
- உலகத்தில் அனந்தமடா கூத்து மாச்சு
நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு
- ஞாயிறு திங்களென்று பேருண் டாச்சு
குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு
- குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு
நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற
- நாதனையும் ஒருமனமாய் நாட்டு வாயே
33
தொகுநாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக
- நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள்
பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்
- பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்
காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே
- கபடமாய் வாய்ஞானம் பேசுவார்கள்
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்
- கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே
34
தொகுகுறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்
- கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே
அறியாமல் பிரமத்தைப் பாரா மற்றான்
- அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி
விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு
- வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே
பரியாசமாகவுந்தான் தண்டு மேந்திப்
- பார்தனிலே குறட்டிடு நடப்பான் பாரே
35
தொகுபாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
- பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
- ஆகாசப் பொய்களையும் அவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சே
- நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
- விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே
36
தொகுவானென்ற அண்டமதில் சென்று புக்கு
- வடவரையில் உச்சிநடுத் தீபங் கண்டு
தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்
- தீர்த்தங்கள் ஆடித்திரு நாம மிட்டுக்
கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்
- கொடியமறை வேதமுந்தான் அடக்கங் கண்டு
தேனென்ற சித்தமே புத்தி யாகத்
- தெளிந்தவரே மெய்ஞ்சானி யாவர் பாரே
37
தொகுபாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது
- பலபேத மாளையெல்லாம் மருண்டே யோடுஞ்
சீரண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள்
- செனித்தவகை உயிர்தோறும் நாயாய் நிற்பாய்
காரண்டல் ஆடக்கண் திறந்த போது
- கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்
வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்
- மெய்ஞ்ஞான வெளியதனிற் தொடர்ந்து கூடே
38
தொகுகூடுவதென் குணமறிந்து மனமொன்றாகக்
- கூத்தாடித் திரியாமல் கெவுனமாகப்
பாடுவது பலநூலைப் படித்திடாமற்
- பராபரத்தின் உச்சிநடு வெளியே சென்றே
ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே
- அடுக்கடுக்காய் ஆயிரத் தெட்டிதழுங் கண்டு
வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்
- வாடாத தீபத்தை அறிந்து பாரே
39
தொகுபாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்
- பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்
வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி
- விராட பிரம மொன்றியாய் இருக்கும் போது
சீரென்ற உயிர்களெல்லாம் இருப்ப தெங்கே
- சித்தருடன் திரீபூர்த்தி யிருப்ப தெங்கே
கூரென்று நீர் தங்கும் இடந்தான் எங்கே
- குருபரனே இந்தவகை கூறு வீரே
40
தொகுகூறுகிறேன் என்மகனே வாசி நாதா
- குணமான வீச்சுரனார் சமையிற் கூடி
தேறுகின்ற பிரளயமாம் காலத் தன்னீர்
- சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே எங்கேநான் இருப்பா ரென்று
- விமலருந்தான் விண்ணுவையும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங்கு அவரை நோக்கிக்
- கண்டுமிகப் பணிந்தும் இனிக் கருது வானே
41
தொகுகருதுவான் ஆலிலைமேல் துயில்வேன் யானும்
- கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியாய் என்றனுடைக் கமலந் தன்னில்
- ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன்
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
- வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியாய் எனையழைத்தே சிவன்தான் கேட்கச்
- சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே
42
தொகுபாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
- பல்லாயிரங் கோடியண்ட உயிர்களெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
- திருமாலும் ஆலிலைமேல் துயிலும் போது
கூரென்ற உந்தியிடக் கமலந் தன்னிற்
- கூடியே அடைந்திருப்பார் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
- வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே
43
தொகுபாரப்பா ஆகாயஞ் செல்லும் போது
- பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட
ஆரப்பா சக்கரத்தைப் பாசகொட்டாமல்
- அதன் மேலே ஏறியுந்தன் அப்பாற் சென்றேன்
நேரப்பா நெடுந்தூரம் போகும் போது
- நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்
வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்
- வெளியொன்றுந் தெரியாமல் இருக்குந் தானே
44
தொகுஇருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
- என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்
- ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது
பெருக்கமுடன் முன்பார்த்தால் புருட ரூபம்
- புத்திரனே பின்பார்த்தால் பெண்போல் ரூபம்
மருக்கமுடன் யான்தானும் கம்பத் தூடே
- வத்தோடே வத்தாக இருக்கேன் பாரே
45
தொகுபாரப்பா இப்படியே அனந்த காலம்
- பராபரத்தி னூடே தானிருந்து வாழ்ந்தேன்
ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி
- அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போது
வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும்
- விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்
சீரப்பா சக்கரத்தில் இருந்து கொண்டு
- திருமலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே
46
தொகுபாரப்பா திருமாலும் கமலந் தன்னில்
- பல்லாயிரங் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்
நேரப்பா அழைத்து முக்குணத்தைக் காட்டி
- நிலையான சமுத்திரங்கள் பூமிதானும்
சேரப்பா ரவியோடு திங்கள் தானும்
- சிறந்தெழுந்த மலைகாடி சீவ சொத்து
வீரப்பா நவக்கிரகம் நட்சத் திரங்கள்
- வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே
47
தொகுவாறான தெய்வமென்றும் பூத மென்றும்
- வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்
கூறான மாமேரு கிரிக ளென்றும்
- கோவிலென்றும் தீர்த்த மென்றுங் குளமுண் டாக்கி
நேராகப் பிரமமே சாட்சியாக
- நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா
வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து
- வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே
48
தொகுகேளப்பா இப்படியே பிரள யந்தான்
- கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்
ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்
- அகண்ட மென்ற பிரமத்தில் அடங்கு வார்கள்
நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்
- நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்
வாளப்பா காகமென்ற ரூபம் ஆனேன்
- வடவரையில் கூடுதொத்தி யிருந்தேன் பாரே
49
தொகுபாரடா இப்படியே யுகங்கள் தோறும்
- பார்தனில் நானிருந்தேன் எத்தனையோ கோடி
ஆரடா என்னைப் போல அறிவாருண்டோ
- ஆதியென்ற சித்தருக்கும் ஆதி யானேன்
வீரடா விமலரிடஞ் செல்லும் போது
- வெற்றியுடன் எனையெடுத்து முத்தமிட்டார்
காரடா கைலையின்மேல் இருக்கச் சொன்னார்
- காகமென்ற ரூபமாய் இருந்தேன் பாரே
50
தொகுகாகமென்ற ரூபமாயிருந்து கொண்டு
- காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
- வெகுதூரம் சுற்றியின்மை விவரங் காணேன்
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
- மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க
நாகரீக மாகவுந்தான் அண்ட மேவி
- நடுவணைய முச்சிநடு மத்தி தானே
51
தொகுமத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்
- மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்
சக்தியும் ஆவியுடை மான லிங்கம்
- சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்
புத்தியால் மனம் ஒன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்
- பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்
எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்
- ஏகபர மான தொரு லிங்கந் தானே
52
தொகுதானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று
- தலைமாறிப் போனதொரு வாசி யைத் தான்
கோனென்ற பிரமத்தில் அடக்க மாகக்
- குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க
வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்
- மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும்
தேனென்ற சட்டைகளுங் கழன்று போகும்
- தேவனுக்குந் தேவனாய் இருக்கலாமே
53
தொகுஇருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும்
- ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்
- பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே
குருக்களைப்போல் அரசனைப்போல் இந்திரனைப்போல்
- முணமான மூவரைப் போற்பிரமத் தூடே
திருக்கெடுத்தே யெந்தெந்த அவதாரங்கள்
- செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே
54
தொகுதானவனே யென்குருவே புகண்ட நாதா
- தரணியிலே சிவசெந்தாம் அகண்டமெல்லாம்
தோணதுவே மும்மூர்த்தி யிவர்கள் தாமும்
- துடியாகப் பிரமத்தில் அடங்கு மென்றீர்
கோனவனே பின்னுந்தான் அகண்ட மெல்லாங்
- குறிப்புடனே புடைக்கும் வகைக் குறியுஞ் சொன்னீர்
தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா
- சத்தியமாய் அதன் விவரஞ் சாற்று வீரே
55
தொகுசாற்றுகிறேன் என்மகனே வாசி நாதா
- சத்தியமாய் அண்டத்தில் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்
- புலன்களைந்தும் சேர்ந்ததனால் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம்
- மைந்தனே அபுரூப மாகுப்பா
வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போகும்
- வலுத்தடா காயசித்தி யாச்சுப் பாரே
56
தொகுஆச்சென்ற அபுரூப மான போதே
- அட்டமா சித்திவகை யெட்டுமாடும்
மூச்சொன்றி யடங்கிப்போய் பிரமத் தூடே
- முன்னணியும் பின்னணியும் ஒன்றாய்ப் போகும்
காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு
- கலைமாறி நின்றிடமே கனக பீடம்
நீச்சொன்றும் இல்லையடா உன்னைக் கண்டால்
- நிலைத்தடா சமாதியென்ற மர்க்கந்தானே
57
தொகுமார்க்கமுடன் தவசுநிலை அறியா மற்றான்
- மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே
- இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா
காக்கவே சற்குருவின் பாதங் கண்டு
- கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றி
தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்
- சீவனுக்குச் சீவனாய் இருக்கலாமே
58
தொகுஇருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை
- ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்
உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே
- உத்தமனே காயமது உறுதியாச்சு
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல்
- வண்ட ரோடிணங்கியடா மருவி டாமல்
குருக்கியே கோளரிடஞ் சேர்ந்திடாமல்
- குருபாதங் கண்டு மிகப் பணிந்து பாரே
59
தொகுபாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி
- பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்
சீரென்று சொப்பனங்கள் அதிகமாகத்
- திடப்படவே காணுமிடய் தீர்க்கஞ் சொல்லும்
காரென்று மணம் பிறந்த இடந்தான் சொல்லும்
- கதிர்மதியும் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்
வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்
- வெற்றி பெற இந்தவகை விளம்பு வாயே
60
தொகுவாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு
- மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி
- உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்
மாயாமல் வாசியுந்தன் நடுவே நின்று
- மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்
காயான சுழுத்தி யென்றிதற்கு நாமம்
- கண்டுபார் கண்டுகொள்ளாப் போதந்தானே
61
தொகுதானென்ற பலரூப மதிகங் காணுந்
- தன்னுடைய தேவதைபோற் பின்னிம் காட்டும்
ஊனென்ற பெண்ணைப் போலுன்னைக் கூடி
- உத்தமனே சை யோகஞ் செய்தாற் போலே
தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே
- தித்திப்பு போலேதான் ருசியைக் காட்டும்
கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு
- குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே
62
தொகுநிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு
- நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினிப் படியே சேரு
- சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து
மலையாமல் ஏகபரா பரனே யென்று
- மனமயங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க
அலையாது மனந்தானும் பரத்திற் சென்று
- ஆகாய வீதிவழி யாட்டும் பாரே
63
தொகுஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே
- அன்னை சுற்றந் தனைமறந்தே அகண்ட மேவும்
பூட்டுமடா நவத் துவாரங்கள் தம்மைப்
- பொறிகள் ஐந்தும் சேருமடா புனித மாகக்
காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்
- காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி
வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகாசிக்கும்
- வெளியேறி னால்தீபம் விழலாய்ப் போமே
64
தொகுபோமடா புத்திசித்தம் என்ற தாக்கிப்
- புகண்ட னென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்
ஆமடா வடசாளி மைந்த னென்றும்
- அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்
நாமடா ஐந்துபேர் தம்மிலே தான்
- நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா
வாமடா சாண்முழத்தில் காட்சி பார்க்க
- வத்துவுந்தான் ஈச்சுரனார் என்பார் பாரே
65
தொகுபாரப்பா என்குலந் தான் சொல்லக் கேளு
- பார்தனிலே பிரமனுடை விந்து வாலே
ஆரப்பா பிறந்து விட்டோம் ஐந்து பேரும்
- ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்
நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்
- நிட்டையிலே மனந்தவறாது இருந்து கொண்டேன்
வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள்
- விட்டவிடந் தொட்டவிடம் விரும்பிக் காணே
66
தொகுகாணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை
- கருத்துடனே என் குலஞ் சுக்குலந்தான் மைந்தா
தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்
- சொல்லுவான் சுருக்கமாக சுருண்டு போனான்
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்
- வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம்
நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே
- நன்றாக வுதித்தவிடம் நாடி தானே
67
தொகுநாடியே யுதித்தவிடம் அறியாத் தோடம்
- நடுவாக வந்தவிடம் பாரத் தோடம்
கூடியே பிறந்தவிடங் காணாத் தோடம்
- குருபரனை நிந்தனைகள் செய்த தோடம்
வாடியே வத்தோடே சேராத் தோடம்
- வம்பரோ டிணங்கியே திரிந்த தோடம்
கூடியே உறவற்றே யிருந்த தோடம்
- கும்பியுங் கற்சிப்பியையும் அறியான் பாவி
68
தொகுஅறியாத பாவிக்கு ஞானமேது
- ஆறுமுகன் சொன்ன தொரு நூலைப் பாரு
பரிபாடை யாகவுந்தான் சொல்லவில்லை
- பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு
விரிவாகச் சித்தர் சொன்ன நூலை யெல்லாம்
- வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா
குறியான அண்டமதை யொளித்தே விட்டார் கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே
69
தொகுகுற்றமது வையாமல் அண்டத் தேகிக்
- கூறாத மர=ந்திரத்தின் குறியைப் பார்த்துச்
சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக்காலம்
- தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்
குற்றமது வையாமல் மனமன் பாலே
- குருபரனை நோக்கியடா தவமே செய்து
பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது
- பராபரையுங் கைவசமே யாகு வாளே
70
தொகுஆகுவாள் அந்திசந்தி யுச்சி யென்றால்
- அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்
ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்னலாகி
- இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்
போகுமே நீ செய்த காம மெல்லாம்
- புவனை திரிசூலக் கையுடையக் கிருபை யாலே
வாகுமே வழியோடே சேர்த்தா யானால்
- வாணியுந்தான் நாவில் நடஞ் செய்வாள் பாரே
71
தொகுபாரடா வாணியுந்தான் இருந்த வீடு
- பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே
- அண்டத்தைப் பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்
- நிலையான அக்கினியில் மத்தி தன்னில்
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து
- விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வானே
72
தொகுசொல்லுவா ளனந்தமறை வேதமெல்லாம்
- சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தானே
வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்
- வீறாண்மை பேசார்கள் மவுன மாகி
அல்லுபகல் அற்றதொரு பிரமந் தன்னை
- ஆரறிவார் உலகத் திலையா பாரு
சொல்லடங்கு மிடந்தன்னையுங் கண்டு தேறிச்
- சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு
73
தொகுவாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து
- வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா
தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்
- தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே
ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்
- உத்தமனே கள்ளியைத் தான் தரித்துக்கொண்டு
சாங்கமினிச் செய்யாமல் சீலை மண்ணுஞ்
- சத்தியமாய்ச் செய்தபின்பே உலர்த்திப் பாரே
74
தொகுபாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா
- பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்
ஆரப்பா ஆரவைத்தே யெடுக்கும் போதில்
- அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்
நேரப்பா அணுப்போல சரக்குக் கெல்லாம்
- நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு
வீரப்பா நீருமடா நவலோகந் தான்
- வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள்ளாச்சே
75
தொகுஆச்சடா உடம்பிலுள்ள வியாதி யெல்லாம்
- அணுப்போல வண்டிடவே பறந்து போகும்
வாச்சடா தேகசித்தி அதிக மாச்சு
- வத்துடனே கூடியுந்தான் வாழலாச்சு
மூச்சடா தலைப்பிண்டங்கொடியு மாவும்
- முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி
ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே
- இன்பமுடன் வந்துவையும் பூசை செய்யே
76
தொகுபூசையடா செய்து மிகப் பதனம் பண்ணு
- புத்திரனே பேய்பீர்க்குத் தைலம் வாங்கி
ஆசைபுல்லா மணக்கதவு மதுபோல் வாங்கி
- அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே
ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே
- உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா
- பாலகனே சவாதோடு புனுகு சேரே
77
தொகுசேரடா அணுப்போலே புருவத் தீட்டுத்
- தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும்போதில்
ஆரடா உன்னைத்தான் ஆர்த்தான் காண்பார்
- அண்டமெனும் பிரமத்தின் அருளினாலே
நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து
- நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு
வீரடா அரைத்த பின்பு புருவத் திட்டால்
- வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே
78
தொகுவாரான தில்லைப்பால் கருந்துளசியும்
- வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்தும்
சீராக முன்சொன்ன கருவை விட்டுத்
- திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று
நேராக அரைத்ததை எடுத்து மைந்தா
- நிச்சயமாய்ப் புருவத்தில் இட்டுப் பார்க்க
வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்
- வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே
79
தொகுபாரடா பரப்பிரமத் தூடே சென்று
- பரிதிமதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய்
நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை
- நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்
கூரடா கோடானு கோடி சித்துக்
- குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே
வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே
- வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே
2 காகபுசுண்டர் உபநிடதம்
தொகுகாப்பு
தொகுஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு
- அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு
நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற
- நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத்தொன்றித்
- துரியா தீதப் பொருளைத் துவக்க மாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
- சீவேச ஐக்யமது தெரியுந் தானே
நூல் - 1
தொகுதானென்ற குருவினுப தேசத்தாலே
- தனுகரண அவித்தை யெல்லாம் தவறுண்டே போம்
வானென்ற சுவானுபவ ஞானம் உண்டாம்
- மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்
நானென்ற பிரபஞ்ச உற்பத்திக்கு
- நாதா தீ தக்யானம் நன்றா யெய்தும்
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
- குறிப்பான யோகமிதைக் கூர்ந்துபாரே
2
தொகுபாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்
- பதல்லை யாதெனினும் பவ்யமில்லை
சேருமிந்தப் பிரமாணந் தான் உணர்ந்து
- தெரிவிக்கப் படாதருளிற் சிவசொரூபம்
ஊருகின்ற காலத்ர யங்களாலே
- உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்
சாருமிந்த உபாதான காரணத்தின்
- சம்பந்த மில்லாத சாட்சிதானே
3
தொகுசாட்சிசத்தா யதீதகுணா தீதமாகிச்
- சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்
சாட்சியதே யேது சாதனமுந் தள்ளிச்
- சகலவந்தர் யாமித்வ சர்வபூத
சாட்சியினை யிவ்வள வவ்வளவாம் என்று
- தனைக் குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபஞ்
- சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்
4
தொகுசொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்
- தூல காரணப்பிரமந் துரியா தீதம்
அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்
- அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்
சொல்லுமவனே நானென் றபிமானிக்குச்
- சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தானே
வெல்லறிஞர் பல போக விர்த்தி யோகி
- விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்
5
தொகுபிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்
- பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்
கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்
- சரணாதி நான்கு பிராணாதி யைந்தும்
வர்மமிவை இருபத்து நான்குங் கூடி
- வருந்தூல சரீரவி ராட்டெனவே சொல்லும்
தர்மலத்தைச் சாக்கிரபி மானி விசுவன்
- தனக்குவமை யாங்கிரியா சத்திதானே
6
தொகுசத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்
- தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா
வெற்றி பெறும் சீவாத்மா அசார மாச்சு
- விவகார சீவனிதை விராட் டென்பார்கள்
வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்
- விலாசமிந்தத் தூலசூக்க விருத்தியாச்சு
தத்வமசி வாக்குச் சோதனை யினாலே
- தான் கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே
7
தொகுகொள்ளடா ஞானேந் திரியங்கள் ஐந்து
- கூடினவை கர்மேந்திரி யங்கள் ஐந்து
தள்ளடா பிராணாதி வாய் வைந்து
- சார்வான மனம்புத்தி தான் இரண்டு
விள்ளடா பதினேழு தத்துவங்கள்
- விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்
துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்
- சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே
8
தொகுநூலான சாத்மிகமம் அகங்கா ரத்துள்
- நுழைந்த விச்சா சக்தியல்லோ நுணுக்கமாச்சு
காலான கண்டமெனுந் தானத்துள்ளே
- கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்
நாலான ஆன்மாவே அந்த ரான்மா
- ஞானமிந்தப் படி யறிந்தால் உகாரமாச்சு
தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கூர்ந்து நின்று
- சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே
9
தொகுதானயயாக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்
- தானமதே இதயமா ஞான சத்தி
வானமதே அகங்காரம் வித்தை யாகில்
- வரும் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்
கோனிதற்கே ஆனந்த போகமாகும்
- கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்
கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்
- காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே
10
தொகுகொள்ளுமந்தப் பொருள் தானே சத்துமல்ல
- கூரான அசத்துமல்ல கூர்மையல்ல
உள்ளுநிரா மயமல்ல சர்வ மயமல்ல
- உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகமாச்சு
தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல
- தான்பிரம ரகசியஞ் சந்தான முத்தி
விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்
- விஞாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே
11
தொகுவிட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்
- விடயசுக இச்சை வைத்தால் விவேகம் போச்சு
தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்
- துரியநிலை நன்றாகத் தோன்று மட்டும்
எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்
- தெண்ணமெனுந் தியானத்தால் எய்தும் முத்தி
தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்
- சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்
12
தொகுசாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்
- தத்வாதி வாசனைகள் தாமே போகும்
சூட்சாதி பிராந்தி யெனும் மாயா சத்தி
- தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்
தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்
- சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்
காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமல்
- காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டுகொள்ளே
13
தொகுகண்டுபார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்
- காணாது சீவான்மா பரமான் மாவும்
தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்
- சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே
உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்
- யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை
விண்டு சொல்வோம் ந்திகடக்க ஓட மல்லால்
- விடயத்தாற் சாதனங்கள் வீணாம் என்றே
14
தொகுவீணல்லோ சாதனப்ர யோச னங்கள்
- மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது
வீணல்லோ வேதபாடத்தின் இச்சை
- வியோம்பரி பூரணத்தின் மேவி நின்றால்
வீணல்லோ இருட்டறையில் பொருளைக் காண
- விளக்கதனை மறந்தவன்கை விடுதல்கபோலும்
வீணல்லோதியான தாரணைகள் எல்லாம்
- மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே
15
தொகுவேணுமென்றா வெள்ளுக்கு எண்ணெய் போலும்
- வித்தினிடத் தடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்
- கன்றாவின பாலிலுள்ள நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்
- தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்
- அபரோட்ச ஞானமுத்தி அரிது தானே
16
தொகுஅரிதில்லை பிரமவியா கிருத சீவன்
- ஐக்கிய மெனும் சந்த்யானம் அப்ய சித்துச்
சுருதி கயிற்றால் மனமாம யானை தன்னைச்
- சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்
குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்
- குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்
திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது
- சீவ்வை ராக்யமெனும் திறமி தாமே
17
தொகுதிறமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்
- திருசியசூன் யாதிகளே தியானமாகும்
சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்
- சாதனையே சமாதியெனத் தானே போகும்
வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்
- வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்
அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்
- அஞ்ஞான மவனிடத்தில் அணுகா தென்னே
18
தொகுஎன்னவே அஞ்ஞானி உலகா சாரத்
- திச்சையினால் தர்மார்த்த வியாபா ரங்கள்
முன்னமே செய்ததன் பின் மரண மானால்
- மோட்சமதற் கனுபவத்தின் மொழி கேட்பீரேல்
வின்னமதா யாங்கார பஞ்ச பூத
- விடயவுபாதி களாலே மேவிக் கொண்டு
தன்னிமைய இலிங்க சரீரத்தோ டொத்துச்
- சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே
19
தொகுதானிந்தப் படியாகச் சீல ரெல்லாஞ்
- சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்
ஏனிந்தக் கூரபிமா னத்தினாலே
- இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக்கும்பார்
வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்
- வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்றவேண்டி
தானிந்தப் பிரம வுபாசனையைப் பற்றி
- நாட்டம் வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே
20
தொகுஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்
- அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்
மூச்சப்பா வோடவில்லை பிரமாதீத
- முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்
கூச்சப்பா வற்ற பிர்ம சாட்சாத் காரம்
- குழிபாதம் ஆகிய கோசரமாய் நின்றேன்
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும் போது
- பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே
21
தொகுபேர்கொண்டேன் சொரூபசித்தி அநேகம் பெற்றேன்
- பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்
வேர்கண்டேன் ஆயிரத்தெட டண்ட கூட
- வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்
தார்கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்
- சாத்திர வேதங்கள் வெகு சாயுங் கண்டேன்
ஊர்கண்டேன் மூவர் பிறப் பேழுங் கண்டேன்
- ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே
22
தொகுயோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்
- உரைத்தாரே பெரியோர்கள் இரண்டா மென்றே
ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்
- அநித்யமல்ல நித்யமென் றறியலாகும்
சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்
- சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி
மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி
- மும்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே
23
தொகுமோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல்லாத
- மூடர்களுக் கபரோட்சம் மொழியலாகா
சூட்கமறிந் தாலவனுக் கனுசந்தானம்
- சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்
தாட்சியில்லை சாதனைத் துட்டயத்தில்
- சட்சேந்திரி யாநாதா தீதமாகும்
மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை
- மூலவிந்து சளாதீத மொழியலாமே
24
தொகுமொழிவதிலே அகாரமெனும் பிரணவத்தின்
- மோன பிராணாதியதே நாதமாச்சு
தெளியுமிந்த ஓங்காரத் தொனிவிடாமற்
- சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்
ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்
- உத்கிருட்ட பரம்பத வுபகாரத்தான்
வெளியோடே வெளிசேர்ந்தால் வத்து வாச்சு
- விரோத சாத்ராதியெலாம் விருத்த மாச்சே
25
தொகுவிருத்தமாம் அனாதி பிரார்த்த கர்மம்
- விடயாதி பரசஞ்ச வீட்டுமங்கள் எல்லாம்
ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆருடன்
- உலகமெலாம் தானவது உண்மை ஆகும்
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
- நிலைபுருவ மத்தியிலே நிட்டனாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
- கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே
26
தொகுபார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
- பரிதிமதி யுதயமெனப் பளிகபா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
- சாக்கிரத்தின் அடையாளம் தாக்கிப் பாரு
சேர்ப்பதற்கு சுழுமுனை யென்றிதற்கு நாமம்
- திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
- கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே
27
தொகுகண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
- கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்
விண்ணான பெருவெளிக்குளீன மானால்
- விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
- உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும்
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்
- அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே
28
தொகுஅறைகின்றேன் அசபையெனும் பிராணன் மாயை
- அகண்ட பாரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்
குறைவில்லை ஓங்கார மூல வட்டக்
- குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்
நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு
- நீக்காமல் ஏகமாய் நிர்ண யித்துப்
பறைகின்றேன் அட்சர சாதனமுந் தள்ளிப்
- பந்தமற்ற மாமோட்சப் பதிபெற்றேனே
29
தொகுபதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்
- பவள நிறம் போன்றிருக்குந் திரி கோணந்தான்
துதிபெறுங் குவையுபத்த சுகந்தி யாகச்
- சுபாவ சாதனையினால் மவுன மாச்சு
விதிவிகிதப் பாராரத்வ கர்மம் போச்சு
- விடயபோ கத்தினிச்சை விட்டுப் போச்சு
மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு
- வத்துவதே காரணமா மகிமை யாச்சே
30
தொகுமகிமையென்று யோகசா தனையினாலே
- மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே
அகமகமென் றாணவத்தை நீக்கலாச்சே
- அத்துவிதப் பிரமசித்தா னந்தகாரம்
சகளாதீதங் கடந்து களாதீ தத்தில்
- சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு
பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு
- பந்தமற்ற மாமோட்சப் பதம் பெற்றேனே
31
தொகுபெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை
- பிரித்துமுப்பத் தொன்றினிலே பிரம ஞானம்
தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகியானால்
- சாதனை செய்வான் அறிவான் சைதன் யத்தில்
முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்
- மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தியாவான்
நித்யமெனும் உபநிடதப் பொருள்தான் சொல்லும்
- நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே
3 காகபுசுண்டர் உபநிடதம்
தொகுகாப்பு
தொகுகணபதியே அடியாகி அகிலமாகிக்
- காரணத்தின் குருவாகிக் காட்சியாகிக்
குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞானக்
- குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்
கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற
- காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்
பணியரவம் பூண்ட சிவவாசி நேர்மை
- பாடுகின்றேன் காவியந்தான் எண்ணிப் பாரே
நூல் 1
தொகுஎண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்
- எந்நேரம் காமசிந்தை யிதுவே நோக்கும்
பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன
- பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ
சண்ணியுண்ணி இந்நூலை நன்றாய்ப் பாரு
- சக்கரமு மக்கரமும் நன்றாய்த் தோணும்
தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ
- சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே
2
தொகுபுகட்டினான் தசதீட்சை மகிமை தன்னைப்
- பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்
சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்
- சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்
பகட்டினாள் உலகமெல்லாம் முக்கோணத்திற்
- பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னாள்
அகட்டினா ளைவர்களை யீன்றாள் அம்மன்
- அந்தருமை சொல்லவினி அடியான் கேளே
3
தொகுகேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்
- கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது
வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி
- வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ
கோளப்பா செயகால லயந்தான் எங்கே
- குரு நமசி வாயமெங்கே நீங்க ளெங்கே
ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே
- அறுத் தெனக்கு இன்னவகை யுரைசெய்வீரே
4
தொகுஇன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்
- எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ
சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்
- சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன
அன்னை தனை முகம் பார்த்து மாலை நோக்கி
- அரிகரி ஈசர் மொழிக் குரைநீர் சொல்வீர்
பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி
- பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே
5
தொகுஎங்கென்று மார்க்கண்டன் எடுத்துச் சொல்ல
- என்ன சொல்வார் ஏகவெளிச் சிவனை நோக்கிக்
கங்கைதனைப் பூண்டானே கடவு ளோனே
- காரணமே பூரணமே கண்ணே மின்னே
- சங்கையினி யேதறிவேன் மகுட சோதி
- சந்திரனைப் பூண்டிருந்து தவம் பெற்றோனே
மங்கையிடப் பாகம் வைத்த மகுடத் தோனே
- மாமுனிகள் ரிடிசித்தர் அறிவார் காணே
6
தொகுஅறிவார்கள் ரிடிசித்தர் முனிவேர் ரையா
- அரகரா அதுக்கு கோளாறென் றக்கால்
பொறியாகப் புகண்டமுனி சொல்வா ரையா
- போயழைக்கக் கோளாறி வசிட்டராகும்
நெறியாக இவ்வகை நான்றிவே னையா
- நிலைத்தமொழி புகண்டரால் மற்றோர் சொல்லார்
புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர்
- பொருள் ஞானக் கடவுளைப்போல் மகிழ்ச்சி பூண்டார்
7
தொகுமகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே
- வரலாறு நீ யெவ்வாறு அறிவாய் சொல்வாய்
சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும்
- சூட்சமிந்த மாலொன்றன் வயிற்றில் சேர்வான்
அகட்சியுடன்ஆலிலைமேல் இருப்பா ரையா
- அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம்
இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன்
- இவ்வார்த்தை நான்றியேன் அவரைக் கேளீர்
8
தொகுகேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ
- கிருபையுடன் இவ்வளவும் அறிவா யோடா
ஆளுகின்ற ஈசனுநாம் அறியோ மிந்த
- அருமைதனை நீயறிந்தாய் அருமைப் பிள்ளாய்
காளகண்டர் மாயோனைச் சொல்லீர் என்றார்
- கருவேது நீயறிந்த வாறு மேது
பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற
- பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே
9
தொகுபரமான பரமகயி லாச வாசா
- பார்த்திருப்போ மாலிலைமேல் பள்ளி யாகித்
தரமான புசுண்டமுனி யந்த வேள
- சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தினாலே
துரமாக எவ்வாறோ திரும்பப் போவார்
- சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான்
வரமான வரமளித்த சூரன வாழ்வே
- வசிட்டார் போயழைத்துவரத் தகுமென்றாரே
10
தொகுதகுமென்ற வார்த்தைதனை அறிந்தே ஈசர்
- தவமான வசிட்டரே புசுண்டர் சாகை
அக மகிழ அங்கேகி அவர்க்கு உரைத்தே
- அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன
செகமான செகமுழுதும் ஆண்ட சோதி
- திருவடிக்கே நமக்கரித்துத் திரும்பினார் பின்
உகமானத் தனையறிந்தும் அரனார் சொன்ன
- எளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே
11
தொகுகாகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற்
- காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்
ஏகமதா யெட்டான வசிட்டரே நீர்
- எங்குவந்தீர் வாரும் என்றே இடமு மீயத்
தாகமுடன் ஈசரும்மை அழைக்கச் சொன்னார்
- சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்
பாகமுடன் எட்டான விவரந் தன்னை
- பத்துமெய்ஞ் ஞானபொருள் அருள்பெற் றோரே
12
தொகுபெற்றோரே யென்னுரைத்தீர் வசிட்டரே நீர்
- பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்
சத்தான சத்துகளும் அடங்கும் காலம்
- சக்கரமுந் திரும்பி விட்டாற் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும் போது
- சேரவே ரிடிமுனிவர் சித்த ரொடு
முத்தாகப் பஞ்செழுத்தில் ஒடுக்க மாவார்
- முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட்டீரே
13
தொகுமுளைத்திட்டீர் இத்தோடெட்டு விசை வந்தீர்
- முறையிட்டீர் இவ்வண்ணம் பெருமை பெற்றீர்
களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்
- கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவல் என்ன
கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார்
- கிளர்நான்கு யுகந்தோறும் இந்தச் செய்கை
பிழைத்திட்டுப் போவமென்றால் அங்கே போவோம்
- பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர்வந்தீரே
14
தொகுவந்தீரே வசிட்டரே இன்னங் கேளும்
- வளமைநான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி
இந்தமாமரக் கொம்பிலிருந்தே னிப்போ
- இதுவேளை யெவ்வளவோ சனமோகாணும்
அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார்
- அவர்களெல்லாம் ரிடி யோகி சித்த ரானார்
சந்தேகம் உமக்குரைக்கப் போக தையா
- சாமிக்கே சொல்லுமையா இதோ வந்தேனே
15
தொகுவந்தேனே யென்னுரைத்த வாறு கொண்டு
- வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி
இந்தேனே முனிநாதா சரணங் காப்பீர்
- என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார்
மைந்தனையே யீன்றருளும் கடவுள் நாதா
- மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்
சித்தனைசெய் ஈச்சுரனே வந்தேனையா
- சிவசிவா இன்னதென்று செப்பி டீரே
16
தொகுசெப்புமென்ற புசுண்டமுனி முகத்தை நோக்கிச்
- சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்புவார்கேள்
கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்
- குரு நமசி வாயமெங்கே பரந்தானெங்கே
அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவரெங்கே
- அயன்மாலும் சிவன் மூவரடக்க மெங்கே
ஒப்புமிந்த யெகமாறிப் பிறந்த தெங்கே
- ஓகோகோ முனிநாதா உரைசெய் வீரே
17
தொகுஉரையென் றுருந்தமக்குப் புத்தி போச்சு
- உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்
- பரமசிவன் தாமென்னும் பேறும் பெற்றீர்
இரையென்றால் வாய்திறந்து பட்சி போல
- எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள்
நிரையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்
- நிசங்கொள்ளா தந்தரங்கம் நிசங் கொள்ளாதே
18
தொகுகொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி
- கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்
உள்ளாக ரிடியொருவர் இல்லா விட்டால்
- யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்
விள்ளாகல் தீராது முனிவனே கேள்
- மெஞ்ஞான பரம்புகுந்த அருள்மெய்ஞ் ஞானி
தள்ளாமற் சபையிலுள்ளோர் எல்லார் கேட்கச்
- சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே
19
தொகுசாற்றுகிறன் உள்ளபடி யுகங்கள் தோறும்
- தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு
மாற்றுகிறேன் க்ஷணத்தின் முன்னுரைத்துப் போனேன்
- வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்
- திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்
ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது
- அரகரா அந்நேரம் நடக்கை கேளே
20
தொகுகேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை
- கெடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்
- பரமான மவுனமது பரத்திற் சாடும்
ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்
- இருந்த சதா சிவமோடி மணியில் மீளும்
கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்
- ஓகோகோ அண்டமெல்லாம் கவிழ்ந்து போமே
21
தொகுகவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே
- கருத்து வைத்துத் தியானமொரு தியானமுண்டு
தவழ்த்து போங் காமலப் போ நிறுத்தி வேன்யான்
- சமையமதி லச்கினிபோல் தம்பங் காணுஞ்
சிவந்த வண்ணம் நீலவுருச் சுடர்விட் டேகும்
- சிவசிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்
நவந்து அதனருகே நான் சென்று நிற்பேன்
- நகாரமுதல் அஞ்செழுத்தும் வரக் காண்பேனே
22
தொகுகாண்பேனே நகாரமது மகாரம் புக்கும்
- கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்
- சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோண்பேனே வகாரமது சுடரிற் புக்கும்
- குருவான சுடரோடி மணியிற் புக்கும்
நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்
- நற்பரந்தான் சிலம்புக்குஞ் சிவத்தைக் கேளே
23
தொகுகேளப்பா சிவமோடி அண்டம் பாயும்
- கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்
கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்
- குருவான தசதீட்சை யொன்று மாச்சு
மீளப்பா தம்பமது விளக்குஞ் செய்கை
- மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்
ஆளப்பா நரைத்தமா டேறு வோனே
- அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே
24
தொகுஅறிந்திலேன் என்றுரைத்த புசுண்ட மூர்த்தி
- அரகரா உன்போல முனியார் காணேன்
தெரிந்திலேன் என்றுரைத்தால் மனங் கேளாது
- சிவனயந்து கேட்கவும் நீ யொளிக்க வேண்டா
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை
- பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும்
பரிந்திலேன் மிகப் பரிந்து கேட்டேன் ஐயா
- பழமுனியே கிழமுனியே பயன் செய்வாயே
25
தொகுபழமுனிவ னென்றுரைத்தீர் கடவுளாரே
- பருந்தீப் தமத்தைப் பலுக்கக் கேளும்
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன்
- கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்
தழும்பணியச் சாகரங்கம் எங்கும் தானாய்ச்
- சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்
- அரகரா கண்ணாடி லீலை தானே
26
தொகுலீலைபோற் காணுமுகம் போலே காணும்
- நிலைபார்த்தால் புருடரைப் போற் றிருப்பிக் காணும்
ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத்துள்ளே
- அரகரா சக்கரங்கள் ஆறுங் காணும்
வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்
- மகத்தான அண்டமது கோவை காணும்
சோலையா யண்டமதில் சிவந்தான் வீசும்
- சிவத்திலே அரகரா பரமுங் காணே
27
தொகுபரத்திலே மணிபிறக்கும் மணியினுள்ளே
- பரம்நிற்கும் சுடர்வீசும் இப்பாற் கேளும்
நிரத்திலே சடம்தனில் யகாரங் காணும்
- நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்
வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்
- வரும்போலே சிகாரத்தில் மகரங் காணும்
நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்
- நன்றாம்பஃ பூமியப்போ பிறந்த தன்றே
28
தொகுபிறந்ததையா இவ்வளவும் எங்கே யென்றால்
- பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்
சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது
- சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை
கறந்ததையா உலகமெல்லாங் காம்பஃ பாலைக்
- காலடியிற் காக்க வைத்துச் சகல செந்தும்
இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது
- எங்கென்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி
29
தொகுஇடப்பாகம் இருந்தவளும் இவளே மூலம்
- இருவருக்கும் நடுவான திவளே மூலம்
தொடக்காக நின்றவளும் இவளே மூலம்
- சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்
அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்
- ஐவருக்குங் குருமீல மாதி மூலம்
கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்
- கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே
30
தொகுகன்னாயிவள் என்றுரைத்தார் புசுண்ட மூர்த்தி
- கர்த்தரப்போ மனஞ்சற்றேகசங்கி னார்பின்
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த
- மார்க்கத்தில் இருப்பதுவோ மவுனப் பெண்ணே
உன்னிதமாய் உன்கருணை யெங்கே காண்போம்
- ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்
கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி
- கொலுமுகத்தில் நால்வரும் போய் வணங்கி னாரே
31
தொகுவணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே
- மாதுகலி யாணியென வசனித் தார்கள்
வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்
- மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்
வணங்கினார்அட்டகசந் திகிரி எட்டும்
- வாரிதியும் சேடனுமால் அயனு மூவர்
வணங்கினார் மிகவணங்கித் தொழுதார் அப்போ
- வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே
32
தொகுஅருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்
- அரகரா சின்மயத்தி னீறு பூசிப்
பொருளீவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லிப்
- பொன்றாத பல்லுயிர்க்ககைக் கிடங்கள் வேறாய்க்
தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்
- செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்
திருளீவாள் தாயான சிறிய வாலை
- சிவசிவா சூட்சம் பூரணமு முற்றே
33
தொகுபூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று
- புகன்றுவிட்டுப் புசுண்டரும் தம்பதிக்குச் சென்றார்
காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானங்
- கம்பமணி வாலை கொலுக் கூட்ட ம்பபா
நாரணத்தில் நின்றிலங்கும் மவுன மாலை
- நாட்டினாள் சிவராச யோகங் கேளு
ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி
- ஆதி சக்தி வேதமுச்சி யருள் செய்வாளே
4 காகபுசுண்டர் குறள்
தொகுகுறள் வெண்பா
தொகு1
- சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
- நன்மை பராபரத்தை நாடு.
2
- அண்ட முடிமீதில் அங்கி ரவிமதியைக்
- கண்டு தரி சித்தல் கதி.
3
- வலம்இடமாய் நின்ற மதிரவியை மாறி
- விலகா தடியினிற் பின் வீடு
4
- அறுபத்து நால்யோகம் அவ்வளவும் தள்ளி
- ஒருபொயுதும் உண்டுநிலை யோர்
5
- உலகமே மாயமென உன்மனதிற் கண்டு
- நவமாக நாதனடி நம்பு
6
- சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத
- அத்தனரு ளூம்புசுண்டன் யான்
7
- சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்
- கெந்நாளும் வாழ்கவென்றே யான்
8
- கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
- மண்ணும் உயிர்பதியு மாறு
9
- விண்டேனே ஞானம் வெளியாக முப்பத்தி
- ரண்டில் அறிவீர் நலம்
10
- நேத்திரத்தைக் காகம்போல் நிச்சயமாய் நிற்க
- ஆத்துமத்தில் ஆனந்த மாம்
11
- உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார்
- பலநினைவை விட்டுநீ பார்
12
- கண்டோருஞ் சொல்லாற் கருத்தாற் பெரியோரைத்
- தொண்டு செய்து பெற்ற சுகம்
13
- ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
- மாது சிவன் பூசை செய்து வை
14
- முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
- தப்பாமல் உண்டுநிலை சார்
15
- யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
- வேகமுடன் கண்டுணரு வீர்
16
- வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
- மோசம் வாரா குறள்
முற்றும்