குடும்பப் பழமொழிகள்/உலகத்தோடு ஒழுகல்

உலகத்தோடு ஒழுகல்

மனிதர்களைச் சந்தித்தாலும், பேய்களைச் சந்தித்தாலும். அவர்கள் பேசுவது போலவே பேசவும். -சீனா

நீ விரும்பியதெல்லாம் உண்ணலாம், ஆனால் உடை மட்டும் மற்றவர்களைப் போலவே அணிந்து கொள்ள வேண்டும்.

-அரேபியா

நண்பகலில் அரசன் அது நிசி என்றால், நீயும் நட்சத்திரங்களைப் பார். -( , , )

ஒருவன் உன்னைக் கழுதை என்றால், கவனிக்க வேண்டாம்; இருவர் சொன்னால், உன் முதுகில் பொதியை ஏற்றிக்கொள்ள வேண்டியதுதான். -யூதர்

பலர் செய்வதைப் போல நீயும் செய், உன்னை மக்கள் பெருமையாய்ப் பேசுவர். -( , , )

மற்றவர்கள் உரக்கக் கூவினால் நீயும் ஊளையிடு. -ரஷ்யா

குருடர்கள் நடுவில் நீயும் கண்களை மூடிக்கொள். -துருக்கி

எந்த நாட்டிற்குப் போனாலும், அங்கே செய்யத் தகாதவை எவை என்று முதலில் தெரிந்து கொள்ளவும்.

-சீனா

ஒரு நகரத்தில் எல்லோரும் ஒரு கன்றைக் கும்பிடுவதைக் கண்டால். நீயும் அதற்குப் புல்லறுத்து போடு.

-எகிப்து