குடும்பப் பழமொழிகள்/வீடு

வீடு

ஒவ்வொரு வீடும் ஓர் உலகம். -ஸ்பெயின்

சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.

- லிதுவேனியா

நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை. -( ,, )

உயரே ஏறிப் பார் : எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாகவே தோன்றுகின்றன. - இந்தியா

யானை அசைந்து கொண்டே தின்னும், வீடு நின்று கொண்டே தின்னும். - தமிழ்நாடு

தொலைவிலே தங்க மழை பெய்தாலும், வீட்டைச் சுற்றி ஆலங்கட்டியே மழையாகப் பெய்தாலும், வீடுதான் சிறந்தது. -மலாய்

ஏழுமுறை இருக்கையை மாற்றுவோன் ஆண்டியாவான்.

-( ,, )

கட்டடம் கட்டுதல் இனிமையாக எளிமையடையும் வழி.

- இங்கிலாந்து

வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான். -எஸ்டோனியா

வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு. -( ,, )

நிலைப் படியிலே அமர்ந்திருப்பவன் எல்லோருக்கும் தடையாயிருப்பான். - நார்வே

வீட்டுக்குக் கேடு வருவது பின்கதவினால்தான். -ரஷ்யா

நம் வீடு இறைவனுடையது. -செர்பியா

வீட்டைவிட்டு ஓடுபவன் வீட்டுக்கே திரும்பி வருவான்.

-ஸ்பெயின்

ஒரு வீட்டை வாங்குமுன், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். -யூதர்

ஒவ்வொரு விலங்கும் தன் குகையில் உறுமும். - ஆப்பிரிகா

வீட்டைப் பெருக்குவோன் துடைப்பத்தின் மீது அமரக் கூடாது. -( ,, )

தன் வீட்டுக்குத் திரும்பிவரும் மனிதன் தீய சகுனங்களைப் பொருட்படுத்த மாட்டான். -( ,, )

பாழடைந்த வீட்டிலெல்லாம் ஒரு பேய் இருக்கும். - எகிப்து

வீடு அன்பு நிறைந்த இடம். -ஆப்பிரிகா

பாதி வீட்டில் குடியிருந்தால் பாதி நரகம். -ஜெர்மனி

பழைய வீடுகளில் எலிகள் அதிகம், பழைய துணிகளில் பேன்கள் அதிகம். -( ,, )

ஒரே கழியைக் கொண்டு எப்படி வீடு கட்ட முடியும்?
-சீனா

கட்டிய வீடு கிடைக்கும், ஆனால் மனைவியை நாம்தான் கட்டிக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து

மனிதனுக்குத் தன் வீடுதான் மாளிகை.
-( ,, )

முறையில்லாத வாடகைக்காரனைவிட, காலி வீடே மேலானது. -( ,, )

சத்திரத்தின் பக்கத்திலும், முக்குமுனையிலும் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். -( ,, )

வீட்டைப் பார்க்கிலும் கதவு பெரிதா யிருக்கக் கூடாது.
-( ,, )

வீட்டைப் பார்த்தே உடையவனை அறிந்து கொள்ளலாம்.

-( ,, )

வாழ்க்கையின் இன்பத்திற்குப் பலவகை இன்பங்கள் தேவை; ஆதலால் அடிக்கடி உன் வீட்டை மாற்றிக் கொள்ளவும். -அரேபியா

வெளியே விளக்கு வேண்டும், வீட்டிலே அனல் வேண்டும்.
-ஆர்மீனியா

[விளக்கு-வழி காண்பதற்காக; அனல்-குளிர் காய்வதற்காக.)

வெறும் கையோடு வீடு திரும்பினால், உன்னை வீட்டுக்கு உடையவனாக. எண்ணிக் கொள்ள வேண்டாம்.
-பல்கேரியா

[வீட்டில் அனைவரும் அலட்சியமாக எண்ணுவர்.]

வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவை. -ஃபிரான்ஸ்

இதயம் எங்கே தங்கியுள்ளதோ அதுவே வீடு. - லத்தீன்

என் வீட்டில் நானே அரசன். -ஸ்பெயின்

தன் வீட்டில் அமைதி கிடைக்காதவன் பூலோக நரகில் இருக்கிறான். - துருக்கி