குழந்தை இலக்கியம்-கவிமணி

குழந்தை இலக்கியம்

தொகு

ஆசிரியர்: கவிமணி

தொகு

மழலை மொழி

தொகு

1. முத்தந் தா!

1. கண்ணே! மணியே! முத்தந் தா,

கட்டிக் கரும்பே! முத்தந் தா;
வண்ணக் கிளியே! முத்தந் தா;
வாசக் கொழுந்தே! முத்தந் தா!

2. தேனே! பாலே! முத்தந் தா,

தெவிட்டாக் கனியே! முத்தந் தா,
மானே! மயிலே! முத்தந் தா,
மடியில் வந்து முத்தந் தா!


2. தாலாட்டு