குழந்தை இலக்கியம்/இயற்கை

இயற்கை





5.காலை ...11

6.அந்தி ......13
7.நிலவு......14
8.மழை .....15
9.மழை - II........17
10.கடல் ....18
11.ஆறு .....20
12.ஏரி ........23
13.தாமரை.......25
14.சிற்றூர் .......27

15.பேரூர் ........29
5

காலை வந்தது! காலை வந்தது!
கவின்மிகு விடியற் காலை வந்தது!

சாலை மரத்தில் தென்றல் தவழச்
சருகு பனியில் நனைந்து கிடக்க
மாலைப் பூக்கள் வருத்தம் காட்ட,
வானில் வெள்ளி மயங்கிக் கிடக்க- காலை

சேவல் கூவிக் காதைக் கிழிக்கச்
சிறுஒளி கீழ்வான் இருளை அழிக்கப்,
பூவிற் பனிநீர் உருண்டு கிடக்கப்,
புதரிற் சிட்டு பாடிக் களிக்க- காலை

செம்பொன் உருக்கைக் கீழ்வான் காட்டத்,
தேனுண்டு வண்டு புரண்டு கிடக்கத்
தம்பி விழித்துத் ‘தாத்தா’ பாடத்,
தங்கை எழுந்து கோலம் போட- காலை .

கும்பல் கும்பலாய்க் காக்கை பறக்க,
குளத்தில் தாமரை குலுங்கிச் சிரிக்க
வம்பணி மாதர் சோம்பல் முறிக்க,
மாமி முணறிக் கதவைத் திறக்க-

காலை



6

ந்தி வந்ததே அந்தி!
செந்தீ மேல்வான் சிந்திச் சிந்தி- அந்தி

வெந்து தணிந்த சிற்றூர் போலும்
மேற்கு வான் விரிவு தோணும் !-- அந்தி

செம்மண் மேட்டு நிலத்தைப் போலத்
தெரியும் வானில் செறிந்த மேகம்!
வெம்மை மாறிக் குளிர்ந்த காற்று
வீச மணமும் வந்து வீசும்!--- அந்தி

வானில் ஓடிய செம்மைக் கோடு
வாள ரிந்த இரத்தக் காடு!
கானும் மலையும் செந்தீ மேடு!
கண்ட பிறையும் யானைக் கோடு!-அந்தி

குயில்கள் கூவும் குளிர்ந்த காவில்!
குடித்து வண்டு பாடும் பூவில் !
அயலில் உள்ள துளிர்த்த மாவில்
அடங்கப் பட்கள், அடங்கும் செவ்வான்! அந்தி

7

நிலவே நிலவே! வாராயோ?
நீ பகல் எங்குச் சென்றாயோ?

உலகிற் கல்லார் உன்னிடத்தில்
ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே! அந்தக் கிழவிக்கு
நீரும் சோறும் கொடுப்பதியார்?- நிலவே!

அரிவாள் போல வான்தோன்றி
அழகாய் நாளும் வளர்கின்றாய்!
பெரிய வெள்ளித் தட்டாகிப்
பின்ஏன் குறைந்து தேய்கின்றாய்?- நிலவே!

தம்பி, தங்கை உனக்குண்டோ?
சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம் என் தம்பி!
வாட்டம் தீர்க்க வருவாயே!- நிலவே!

8

ழையே! மழையே! வா! வா
வாழ்வின் உயிரே! வா! வா!
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்!-மழையே!

ஏரி குளங்கள் நிறைந்திடவும்,
எருமை மாடு களித்திடவும்,
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்-மழையே!

மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்,
தெருவிற் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்-மழையே!

கும்பல் கும்பலாய்க் காக்கை பறக்க,
குளத்தில் தாமரை குலுங்கிச் சிரிக்க,
வம்பணி மாதர் சோம்பல் முறிக்க,
மாமி முணறிக் கதவைத் திறக்க- காலை




6

ந்தி வந்ததே அந்தி!
செந்தி மேல்வான் சிந்திச் சிந்தி- அந்தி

வெந்து தணிந்த சிற்றுர் போலும்
மேற்கு வான் விரிவு தோணும்!- அந்தி

செம்மண் மேட்டு நிலத்தைப் போலத்
தெரியும் வானில் செறிந்த மேகம்!
வெம்மை மாறிக் குளிர்ந்த காற்று
வீச மணமும் வந்து வீசும்!- அந்தி

வானில் ஓடிய செம்மைக் கோடு
வாள ரிந்த இரத்தக் காடு
கானும் மலையும் செந்தி மேடு!
கண்ட பிறையும் யானைக் கோடு!- அந்தி

குயில்கள் கூவும் குளிர்ந்த காவில்!
குடித்து வண்டு பாடும் பூவில்!
அயலில் உள்ள துளிர்த்த மாவில்
அடங்கப் புட்கள் அடங்கும் செவ்வான்! அந்தி

7

நிலவே! நிலவே! வாராயோ?
நீ பகல் எங்குச் சென்றாயோ?

உலகிற் கல்லார் உன்னிடத்தில்
ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே! அந்தக் கிழவிக்கு
நீரும் சோறும் கொடுப்பதியார்?- நிலவே!

அரிவாள் போல வான்தோன்றி
அழகாய் நாளும் வளர்கின்றாய்!
பெரிய வெள்ளித் தட்டாகிப்
பின்ஏன் குறைந்து தேய்கின்றாய்?- நிலவே!

தம்பி, தங்கை உனக்குண்டோ?
சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம் என் தம்பி!
வாட்டம் தீர்க்க வருவாயே!- நிலவே!

8

ழையே! மழையே! வா! வா
வாழ்வின் உயிரே வா! வா!
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்!-மழையே!

ஏரி குளங்கள் நிறைந்திடவும்,
எருமை மாடு களித்திடவும்,
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்-மழையே!

மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்,
தெருவிற் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும் - மழையே!

காடு கரம்பு துளிர்த்திடவும்,
காளை மாடு கொழுத்திடவும்,
ஓடை ஆறு கல்லிடுக்கில்
ஓயா திசையை மீட்டிடவும்- மழையே!

தவளை எல்லாம் ஓயாது
தத்திக் கத்திக் களித்திடவும்,
குவளை பூக்க வண்டினங்கள்
தேனைக் குடித்துப் பாடிடவும்- மழையே!

மழை -II
9

கொம்பு சுற்றி அடித்ததே!
குமுறி வானம் இடித்ததே!
அம்பைப் போல மழையும் பெய்தே
அல்லிக் குளத்தை நிறைத்ததே!.1

மின்னல் மின்னி இடித்ததே!
வீட்டில் சாரல் அடித்ததே!
சன்னல் வழியாய் நீர்பு குந்து
தரையில் பாயை நனைத்ததே!2

கன்னல் செந்நெல் சாய்ந்ததே!
காய்த்த முருங்கை மாய்ந்ததே!
தென்னை பனையை ஆட்டி அலுக்கித்
தெருவில் மழையும் ஓய்ந்ததே! 3

இருண்ட வானம் திறந்ததே!
எழுந்த கதிரும் விரிந்ததே!
இரண்டு கரையும் வெள்ளம் புரண்டே
ஏரி வந்து புகுந்ததே! 4

10

கத்துங் கடலே! இரவெல்லாம்
கரையைச் சீறி மோதுவதேன்?
பித்துப் பிடித்து விட்டதோ?
பிரிவுத் துயர்மே லிட்டதோ? 1

குஞ்சு பொரித்த பாம்பைப்போல்
குமுறிப் பாய்ந்து வருகின்றாய்;
மஞ்சுக் குனக்கும் இருக்கின்ற
வாழ்க்கைத் தொடர்பின் முறையாதோ?2

வானும் நீயும் ஒருதாயின்
வயிற்றில் உதித்த இருவர்போல்
மானும் தன்மை நிறத்தாலே;
வளர்த்தவர் யாரே கூறாயோ?3

பாடு பட்டுத் துய்க்காது
பதுக்கி வைக்கும் கஞ்சன்போல்
ஈடில் முத்தைப் பவழத்தை
எவருக் காகக் கொண்டுள்ளாய்? 4

எத்தனை நாட்டை நீ கண்டாய்?
எத்தனை உயிரை நீயுண்டாய்?
எத்தனை அரசைப் பார்த்தாலும்
எம்மூ வரசர் ஆவாரோ? 5



11

லையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
மலையில் இழிந்து வருகையிலே
மலையின் இடுக்கைப் பார்த்தாயோ?1

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
குலைகுலை யாகப் பொற்கொன்றைக்
குளிர்மலர் கொண்டு வந்தாயோ?2

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
கலையோ டாடும் பெண்மானின்
காட்டைக் கடந்து வந்தாயோ?3

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
இலையும் பூவும் குளிர்காவும்
எங்கெங் குண்டு. சொல்வாயோ?4

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
குலைகுலை யாகச் செவ்வாழை
முக்கனி கொண்டு வந்தாயோ?5

செந்நெல் வயலில் நுழைந்தாயோ?
திருக்குளம் புகுந்து வந்தாயோ?
கன்னற் காட்டைக் கண்டாயோ?
காலாற் கடந்து சென்றாயோ? 6

கற்கள் உருட்டி வந்தாயோ?
கழனிக் குணவைத் தந்தாயோ?
மக்கள் வாழாப் பாலையிலும்
வந்தாய்! குளிர்மை தந்தாயோ? 7

ஏழை எளியோர் எண்ணாமல்
எவர்க்கும் குளிர்மை தந்தாயே!
தாழை போர்த்த கடலோரம்
வந்தாய்! கலந்தாய்! தணிந்தாயே! 8

தடுத்த அணையைச் சினந்தாயோ?
தமிழர் போலத் தணந்தாயோ?
கொடுத்தே உதவி வாழ்வதில்தான்
குளிர்மை உண்டெனக் கண்டாயோ? 9

பொன்னை விளைக்கும் சிற்றுாரும்
புகையைக் கக்கும் பேரூரும்
உன்னால் வாழ்தல் கண்டோமே!
உன்னை வாழ்த்து கின்றோமே!



12

காரைத் தேக்கி ஊரைக் காக்கும் ஏரி!-நெற்
களையெடுத்துப் பசியைப் போக்கும் சேரி!
ஏரையோட்டி நெல்வி ளைக்கப் போமோ?-வான்.
ஏரியின்றேல் உணவைக் காணப் போமோ? 1

மாரி இல்லாப் போதும் உயிர்வாழ-மழை
தேக்கி வைக்கக் கண்டவழி ஏரி!
நீர்இறைத்தே கன்று காலி ஊட்ட-மக்கள்
தேர்ந்தெடுத்த நீள்உழைப்பே ஏரி! 2

ஏரிக்குத்தாய் ஆற்று வாய்க்கால் ஆகும்!-அந்த
ஏரி, சூழ்ந்த ஊருக்குத் தாய் ஆகும்!
சேரி மக்கள் வாழ்வூன்றும் கோல்கள்-நீரைச்
சேந்தி வயல் சென்றோடும் கால்கள்! 3

கரையில் எங்கும் நீண்டபனைச் சாலை!-அலை
காற்றடிக்கப் படபடக்கும் ஒலை!
நுரைகள் பூக்கும் மதகிடையில் வெண்ணெய்!-ஏரி
நொய்மணலோ காற்றுவாங்கும் திண்ணை4

புதரில் எங்கும் புட்கள் கூவும் கூச்சல்!-ஏரிப்
புல்வெளியோ எருமை கன்று மேய்ச்சல்!
மதகிடையில் வாளை வரால் கெண்டை-ஓடி
வந்து வந்து துள்ளிப் பாயும் அண்டை! 5

நாணற் காடு பூமணக்கும் ஓரம்!-வெண்
ணாரை வெய்யிற் காயும் அந்தி நேரம்
ஓணான் உச்சி மரமிருந்து விழும்!-ஏரி
ஓரப் பூக்கள் காற்றில் தலை தாழும்! 6

கரைகள் எங்கும் ஈச்சன் பனை காடு!-அந்திக்
கலகலப்பாம் ஓலை தொங்கும் கூடு!
நரைமலர்கள் கோடிநுனாப் பூக்கள்!-காய்த்த
நறுங்களாவின் பழமோ மொய்க்கும் ஈக்கள்! 7

ஏரியில்லா ஊருக் கழகு இல்லை!-ஏரி
நீர் வறண்டு போனால் வரும் தொல்லை!
ஏரி பெய்த நீரைக் காக்கும் எல்லை!-ஏரிக்
கரை யுடைந்து போனால் உயிர் இல்லை! 8

மீன்கொடுத்து வாழ வைக்கும் ஏரி!-நீள்
விழல் கொடுத்து வாழ வைக்கும் ஏரி!
வான்கொடுக்காப் போதும் செந்நெல் தந்தே-நம்மை
வாழ வைக்கும் வாழ வைக்கும் ஏரி ! 9

ஏரி பூத்த கொட்டி ஆம்பல் போலே-நித்தம்
இணைந்திருக்க வேண்டும் இமை போலே!
ஏரி காய்ந்து போனால் எட்டிப் பார்க்காக்-கெட்ட
நீர்ப்பறவை போலிருக்க வேண்டாம்! - 10

13

பூவிற் சிறந்தது தாமரையே!
பொலிவிற் சிறந்தது தாமரையே I
வாவிக் கழகு தாமரையே!
வளரும் குளத்தில் தாமரையே! 1

ஆடாப் பம்பரம் மொட்டாகும்!
அடர்ந்த இலைகள் தட்டாகும்!
நாடாத் துறட்டு முள்தண்டாம்!
தாமரை நற்காய் கற்கண்டாம்! 2

தம்பி முகமே தாமரைப்பூ!
தங்கை முகமே தாமரைப்பூ!
தம்பிப் பையன் பெருஞ்சிரிப்பு
தாமரைப் பூவின் இதழ்விரிப்பு! 3

தாமரை பூத்துக் கண்பறிக்கும்!
தாவத் தண்டு காலறுக்கும்!
தாமரை இதழ்கள் வெண்பட்டு!
தரையில் சாகும் கதிர்பட்டு! 4

தாமரை பிறந்தது சேறென்பார்!
தாமரை இலையிற் சோறுண்பார்!
தாமரை வாழ்வு நீரோடு
சார்ந்த தாகும் சீரோடு! 5


14

தோப்புக் கிடையில் சிறுகுடிசை!
தொடர்ந்து தொடர்ந்து பல்குடிசை!
காப்புக் கதவு கிடையாது!
காற்று வாங்கும் பலகுடிசை! 1

வீட்டின் முன்னர்ச் சிறுவேலி!
வேலிக் கிடையில் மண்பானை!
ஆட்டுக் கல்லில் வெறும்பானை!
அடுப்பின் மீதோ பெண்பூனை! 2

வாயிற் படியில் முருங்கைப்பூ
பாயைப் போட்டாற் போலிருக்கும்!
தாயைக் காணாச் சிறுகுழந்தை
தடவி எடுக்கும் வெறுமொந்தை! 3

எங்கோ இரண்டு கல்விடும்
இருக்கும்! அவையும் பழம்விடே!
தங்கும் திண்ணை மீதெல்லாம்
காய்ந்த வராட்டி பழஞ்சாலாம்! 4

பனையைச் சப்பும் ஒருபிள்ளை!
விரலைச் சப்பும் ஒருபிள்ளை!
தினையைக் கோதும் ஒருபிள்ளை!
கிள்ளிச் சிணுங்கும் ஒருபிள்ளை!5

மாட்டை ஓட்டும் ஒருபிள்ளை!
மனையைக் காக்கும் ஒருபிள்ளை!
வீட்டிற் சமைக்கச் சுள்ளிதனை
வெளியில் தேடும் ஒருபிள்ளை!6

வெய்யில் மழையில் வயல்வேலை!
வேண்டா மென்றால் உணவில்லை!
கையில் மிச்சக் காசில்லை!
காலம் முழுதும் இத்தொல்லை! 7

வேலிக் கறிகாய் பால்தயிரே
வெளியில் விற்றால் அரைவயிறே!
கூலிக் குழைத்தால் மாலையிலே
கூழும் வேகும் சாலையிலே! 8

அன்பும் வலிவும் சிற்றூரில்!
அடக்கம் வாய்மை சிற்றூரில்!
வம்பும் தும்பும் பேரூரில்!
வழிப்பறி கொள்ளை பேரூரில்! 9

உழைத்துத் தேய்ந்து பேருரை
உயர்த்தி வாழ்வோர் சிற்றூரார்!
கொழுத்த சோம்பர் சிற்றூரைக்
‘குப்பைக் காடெ’னக் கூறுவரே! 10

15

விண்ணை இடிக்கும் மேல்மாடி!
வெளியில் இருக்கும் ஆளோடி!
கண்ணைக் கவரும் முன்வாயில்!
கதவுக ளெல்லாம் பொன்சாயல்!
திண்ணை எல்லாம் தெருப்புழுதி!
செம்மண் கூட்டி இடையெழுதி
வண்ணஞ் செய்த பெருவிடு!
வாயிற் படியோ புலிக்கூடு! 1

தன்னில் ஓடிப் பகலிரவில்
சளைக்கா தோடும் பெருங்குரலில்!
செந்நெல் விளையும் நிலமில்லை!
தீம்பழம் விளையும் தோப்பில்லை!
பொன்னை விளைக்கும் பெருங்கடைகள்!
போக்கு வரத்தோ பெருந்தடைகள்!
மன்னி நிலைத்தே என்றென்றும்
மடியைப் பறிக்கும் அன்றன்றும்! 2



உருளை சேமை புளிமூட்டை
உடன்கொண் டேகும் கைவண்டி!
வருவோர் போவோர் யாவரையும்
வயிற்றில் நிரைக்கும் நகர்வண்டி!
இருளைப் போக்கும் தெருவிளக்கோ
எழுந்த நிலவின் பெருங்கூட்டம்!
தெருவில் என்றும் நடமாட்டம்!
வேண்டும் முன்பின் கண்ணோட்டம்! 3

ஊரின் நடுவில் புகைவண்டி
ஒடும் பற்பல திசைமுண்டி!
ஏரி குட்டை குளமில்லை!
எங்கும் குழாயில் நீருண்டு!
வாரிக் கூட்டும் தொழிலாளி!
வருவார் போவார் நோயுண்டு!
சேரி மக்கள் தெருவோரம்
செய்வார் மனையறம் பலநேரம்! 4

கலைகள் வளர்க்கும் பெருமன்றம்!
கருத்தை அளிக்கும் தமிழ்மன்றம்!
உலையை வளர்த்துத் தொழில்பெருக்கும்!
ஆலை உண்டு; பொருள்பெருக்கும்!
சிலையைத் தாங்கிப் பொதுமன்றம்
சிரிக்கும் எவரையும் வரவேற்கும்!
தலையைத் திருத்தும் தொழிலாளி
அறையில் இசைக்கும் வானொலியே!5

உணவு விடுதி பலஉண்டே !
உறங்கும் விடுதி பலஉண்டே !
உணவுக் காக எச்சிலையை
ஓர்ப்பாய் பொறுக்கும் உயிர்உண்டே!
மணமில் மலரும் மனமலரும்
மகளிர் கூந்தல் வான்வில்லாம்!
பணத்தைப் பறிக்கும் பகட்டெல்லாம்
பட்டணம் பார்க்கலாம் நாளெல்லாம்! 6

கூவும் குயில்கள் அங்கில்லை!
குளிர்செடி புதர்கள் அங்கில்லை!
பூவும் புத்தம் பூவில்லை!
பொலிவும் இயற்கைப் பொலிவில்லை!
தாவிப் பாயும் முயலில்லை!
சாரல் தவழும் காற்றில்லை!
ஆவி போக்க அங்கிங்கும்
ஆயிரம் உண்டே எங்கெங்கும்! 7

அறிவைப் பெருக்கக் கல்லூரி,
ஆடல் பாடல் கல்லூரி.
பொறியியல் உணர்த்தும் கல்லூரி,
பொருளியல் உணர்த்தும் கல்லூரி,
வெறியைப் போக்கும் கல்லூரி,
விளைவைப் போக்கும் கல்லூரி,
நெறியை உணர்த்தும் கல்லூரி,
நிறைய உண்டே! நெறியுண்டோ? 8

கடற்கரை யோரச் சுழல்விளக்குக்
கண்ணைக் கவரும் பால்விளக்கு!
நடக்கும் பாதைத் திருப்பத்தில்,
நான்கு சந்தின் சதுக்கத்தில்,
படுக்கும் அறையில், முன்விட்டில்
பட்டப் பகலாம் மின்விளக்கு!
வெடுக்கென் றணைந்தால், அந்தந்தோ!
பட்டின வாசம் வேடிக்கை!9

தாளால் மிதிக்கும் மிதிவண்டி,
தடபுட இசைக்கும் மின்வண்டி
நாளும் ஓடும்! நிற்காது!
நல்ல காதும் கேட்காது!
மூளும் இரைச்சல் அடங்காது!
மூடிய விழியும் உறங்காது!
ஆளை ஏற்றி ஆள்இழுக்கும்
அதிசயம் பார்க்கலாம் பேரூரில்! 10