கோமளத்தின் கோபம்/பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்
பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக் குறிப்புகள்:
15–9–1909 | — | தோற்றம்: சி.என்.அண்ணாதுரை |
தந்தை: | — | நடராசன் |
தாய்: | — | பங்காரு அம்மாள் |
சிறிய தாயார் (தொத்தா) |
— | ராஜாமணி அம்மையார் |
பிறந்தகம் | — | சின்ன காஞ்சிபுரம் |
வாழ்க்கைத்துணை | — | இராணி அம்மையார் |
”தொழில் புனைபெயர்: | — | நாட்டுத்தொண்டு-எழுத்தாளர் சௌமியன், வீரன், சமதர்மன், குறிப்போன், சம்மட்டி ஒற்றன், சாவடி, ஆணி, பரதன் |
1929–1934 | — | சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்சு பட்டப்படிப்பு |
26–5–1933 | — | கோவை மாவட்டம் காங்கேயத்தில் முதலாவது செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் திருச்சி சி.என்.சீனிவாசன் தலைமையில் தந்தை பெரியார் துவக்கஉரை ஆற்ற, அறிஞர் அண்ணா – மாணவர் அண்ணாதுரை சொற்பொழிவு நிகழ்த்த, கேட்டு வியப்புற்று, கண்டு பேச தந்தை பெரியார் முயன்று இயலாது போனமை (குடி அரசு 23–7–1933) |
11–2–1934 | — | முதல் சிறுகதை “கொக்கரகோ” ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. |
1–2–1936 | — | சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கல்வி அமைச்சர் குமாரசாமி ரெட்டியார் தலைமையில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமும் காங்கிரசும் பற்றிச் சொற்பொழிவு. |
ஆகஸ்டு 1936 | — | தந்தை பெரியாருடன் வடார்க்காடு மாவட்டச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளல் |
1936 | — | சென்னை மாநகராட்சித் தேர்தலில் நீதிக்கட்சி உறுப்பினராக நிற்றல். |
1937 | — | நவயுகம் ஆசிரியர். |
3–1–1937 | — | சென்னைத் தன்மான இயக்க இளைஞர் மன்ற ஆண்டுவிழாத் தலைமை ஏற்றல் |
11–4–1937 16–5–1937 |
— | நீதிக்கட்சி செயற்குழு உறுப்பினராதல், நீதிக்கட்சி பிரச்சாரக்குழு உறுப்பினராதல். |
1937 | — | விடுதலை, குடிஅரசு இதழ்களில் துணை ஆசிரியர் பணி ஏற்றல். |
29–8–37 | — | முசிரி தாலுக்கா தன்மான இயக்க மாநாட்டுத் தலைமை உரையாற்றல் |
9–12–37 | — | முதற்கவிதை, ‘காங்கிரஸ் ஊழல்’ விடுதலையில் |
2–9–38 | — | முதல் மடல் ‘பரதன் பகிரங்க கடிதம்’, விடுதலை. |
26–9–38 | — | இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் தூண்டிவிட்ட குற்றம்சாட்டி எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி குன்னி கிருஷ்ணநாயர் நான்கு மாத வெறுங்காவல் தண்டனை வழங்கினார். இராணி அம்மையார் சிறை செல்லும் அண்ணாவை வாழ்த்திய வாழ்த்துச் செய்தி குடியரசு, விடுதலையில் வெளி வந்தது. |
13–1–39 | — | தமிழுக்காக உயிர்நீத்த நடராசன் இறுதி ஊர்வல நாள் — அண்ணா இரங்கற் கூட்டத்தில் உரை. |
18–1–39 | — | தமிழர் திருநாள்—சென்னை உயர் நீதிமன்ற கடற்கரையில் டாக்டர் சி. நடேசனார் படம் திறந்து வைத்தல். |
10–2–38 | — | சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்புச் சொற்டோர் |
சூலை,1939 | — | முதல் குறும்புதினம் “கோமளத்தின் கோபம்” தொடக்கம் – குடிஅரசில். |
6–1–40 | — | பம்பாயில் பெரியார் அம்பேத்கார் உரையாடல்; மொழிபெயர்ப்பு |
23–3–40 | — | முதல் புதினம், “வீங்கிய உதடு” தொடக்கம் குடி அரசில். |
2–6–40 | — | காஞ்சியில் திராவிட நாடு பிரிவினை மாநாடு |
8–11–40 | — | விடுதலையில் தி.க.சண்முகம் நடித்த “குமாஸ்தாவின் பெண்” நாடகத் திறனாய்வு. |
7–3–42 | — | திராவிடநாடு கிழமை இதழ் தொடக்கம். தலையங்கம் “கொந்தளிப்பில்” புரட்சிக் கவிஞர் ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனும் பாடல் முகப்பில். |
14–3–43 | — | சேலத்தில் நாவலர் பாரதியார் உடன் அண்ணா கம்பராமாயணச் சொற்போர். |
5–6–43 | — | ‘சந்திரோதயம்’ நாடகம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் நடத்தல். |
19–8–44 | — | சேலம் நீதிக்கட்சி மாநாடு — அண்ணாதுரைத் தீர்மானம்– நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனப்பெயர் மாற்றம் பெற்று மக்கள் இயக்கமாக மலர்தல். |
15–12–45 | — | சென்னை செயின்ட் மேரி ஆலில் “சிவாஜி கண்ட இந்துராஜ்யம்” நாடக அரங்கேற்றம் — அண்ணா காகப்பட்டராக நடித்தல். |
13–1–46 | — | “பணத்தோட்டம்” கட்டுரை. |
மே 1946 | — | கருஞ்சட்டைப்படை மாநாடு–தந்தை பெரியாருடன் கருத்து மாறுபாடு முகிழ்ப்பு. |
29–7–46 | — | நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தருக்குப் பொற்கிழி அளித்தல். |
25–4–47 | — | “வேலைக்காரி” திரை நாடகம். |
1–6–47 | — | “நீதிதேவன் மயக்கம்” நாடகம். |
15–8–47 | — | திராவிட நாட்டில் “ஆகஸ்டு பதினைந்து” கட்டுரை – தந்தை பெரியார் ‘துக்கநாள்’ எனல் பொருந்தாது– அது ‘விழாநாளே’ எனக் கருத்து விளக்கம் தருதல். |
28–9–47 | — | தந்தை பெரியார் 69வது பிறந்தநாள் விழா சிறப்புக் கட்டுரை “இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்.” |
14–1–48 4–4–48 |
— | ‘நல்ல தம்பி’ திரையிடல். |
18–4–48 | — | திராவிட நாடு கட்டுரைகட்குத் தண்டனை ரூ 3000. “இதன் விலை மூவாயிரம்” நூலாதல். |
18–6–49 | — | தந்தை பெரியார் மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். |
10–8–49 | — | “மாலைமணி” — முதல் நாளிதழ் ஆசிரியர். |
17–9–49 | — | தி.மு.க. தோற்றம் “ஒட்டு மாஞ்செடி” தி.மு.க. துவக்க உரை. ராபின்சன் பூங்கா, ராயபுரம். |
18–9–49 | — | திராவிட நாடு இதழில் 4, 18—4—48 இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு. நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல். எதிர்ப்பு கண்டு பத்தாம் நாள் விடுதலை. |
12–1–50 | — | நாடெங்கும் பொங்கல் விழா— அறுவடை விழா — உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். |
1950 | — | திருச்சிச் சிறையில் ‘இலட்சிய வரலாறு’ எழுதுதல். |
1951 | — | ‘ஆரிய மாயை’ நூலுக்குத் தடை |
17–9–51 | — | திராவிட நாடு பிரிவினை நாள் எடுத்தல். |
13,14,15, 16–12–1951 |
— | தி.மு.க. முதல் மாநில மாநாடு, சென்னையில். |
1–8–52 | — | இந்தி எதிர்ப்பு அறப்போர் – இந்தி எழுத்துக்களை அழித்தல். |
25–4–53 | — | திருச்சி மாவட்ட மாநாட்டில் ‘காதல் ஜோதி’ நாடகம் அரங்கேற்றம். |
15–6–53 | — | ‘நம்நாடு’ நாளிதழ் தொடக்கம். |
13–7–53 | — | மும்முனைப் போராட்டம் — முன் முனைப் போராட்டத் தூண்டிய குற்றம் சாட்டி மூன்று மாதம்சிறையிடல் |
15–7–53 | — | மும்முனைப் போராட்டம் — கழகத் தலைவர்கள் தொண்டர்கள் கைதாதல். |
3–5–54 | — | மொழிவழி மாநில அமைப்பு அறிக்கை வெளியிடல் |
14–1–55 | — | சொர்க்கவாசல் திரையிடல் |
20–2–56 | — | தேவிகுளம் பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். |
29–4–57 | — | தமிழ்நாடு சட்டமன்ற தி.மு. கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். |
9–6–57 | — | ‘ஓம் லேண்டு’ ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்கல் |
3–1–58 | — | அண்ணா கைதாதல் |
2–3–58 | — | தி.மு.கழகத்தினை மாநிலக்கட்சியாகவும் உதயசூரியன் சின்னமாகவும் இந்திய அரசு ஒப்புதல் அளித்தல். |
24–4–59 | — | அண்ணாவின் தம்பியர் சென்னைப் பெருநகர் மன்ற ஆட்சிப் பொறுப்பினைப் பெறல். |
1–8–60 | — | இந்தி எதிர்ப்பு மாநாடு செங்கையில் அண்ணா தலைமை உரை நிகழ்த்தல். |
1962 | — | ‘சம்பத்’ விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல். |
26–2–62 | — | சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல். |
2–8–62 | — | விலைவாசி உயர்வுப்போர்— வேலூர் சிறையில் பத்து வாரம். |
7–1–63 | — | சீனப்போர் குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கிலப் பேருரை |
17–11–63 | — | கட்டாய இந்தி–17வது மொழிப் பிரிவு சட்டம் எரித்தல்—16–11–63 அன்றே கைதாகி, ஆறுமாதம் சிறைத் தண்டனை ஏற்றல். |
1–3–67 | — | தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்பியருடன் 138 பேர் அமர்ந்திட அண்ணா தமிழக முதல்வர் பொறுப் பேற்றல். (6–3–67) |
14–8–67 14–4–67 |
— — |
முதலமைச்சர் வானொலிச் சொற்பொழிவு ‘தமிழ்நாடு’ பெயரிட்டுப் பெருமைதரல் |
10–1–68 | — | இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார், உள்ளத்துள் எல்லாம் நிற்றல். |
8–9–68 | — | அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமை பெறல். |
4–1–69 | — | கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் பொழிந்த கடைசிச் சிறப்புப் பொழிவு. |
2–2–69 | — | தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல் |
பேரறிஞர் அண்ணா
"அண்ணாவின் பலதிற ஆற்றல் எவரையும் திகைக்க வைக்கக் கூடியது. பொது மேடை வானில் முன்பு ஒளிர்ந்த மினமினிகள், விண்மீன்கள், பிறைமதியங்கள் யாவும் ஒதுங்க, பேரொளி வீசிப் புதுப் பொழுது மலரச் செய்யும் "வெங்கதிரவன்" அண்ணா அவர்களே என்பதை அறியாதார் இலர். எழுத்துத் துறையிலும் சுவைகுன்றாது, எப்பொருள் பற்றியும் அறிவுப் பயன் நிறைவுறும் வண்ணம், எத்தனைப் பக்கம் வேண்டுமானாலும் எழுதும் திறன் அவா் தனியுரிமையே ஆகும். எழுத்துக்கு ஒரு நடை, மேடைப் பேச்சுக்கு ஒரு நடை, உரையாடலுக்கு ஒரு நடை என்பது அவரிடம் காண முடியாது. இருந்தால் இருப்பார்; எழுந்தால் எதிலும் ஒரே காளமேகந்தான்…"
பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63, பிராட்வே, சென்னை—600 108