சங்க இலக்கியத் தாவரங்கள்/109-150

 

அந்தி மல்லிகை
மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis (jalaba)

சங்க இலக்கியத்தில் காணப்படாத தாவரங்களுள் இதுவும் ஒன்று. இது மல்லிகை இனத்தைச் சேர்ந்தன்று. ஆயினும். மல்லிகை என்ற பெயர் இதனுடன் இணைந்துள்ளமையின் இதனைப் பற்றிய தாவரவியல் குறிப்புகள் இங்கே தரப் பட்டுள்ளன.

அந்தி–மல்லிகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : மானோகிளமைடியே:கர்வெம்பிரையே
தாவரக் குடும்பம் : நிக்டாஜினியேசி (Nyctaginaceae)
தாவரப் பேரினப் பெயர் : மிராபிலிஸ் (Mirabilis)
தாவரச் சிற்றினப் பெயர் : ஜலாபா ((jalaba)
உலக வழக்குப் பெயர் : அந்தி மல்லிகை, அந்தி மந்தாரை
ஆங்கிலப் பெயர் : “பெரு” என்ற நாட்டு அதிசயம் (Marvel of Peru)
இயல்பு : செடி 40 முதல் 60 செ.மீ. உயரம் வளரும்.
கிளைத்தல் : அடியில் இரு கிளைகளாகவும் மேலே மானோகேசியம்.
இலை : தனி இலை. எதிரடுக்கில்
வடிவம் : அடியில் அகன்று நுனி வர வரக் குறுகி இருக்கும் 5-8 x 3-5 செ.மீ
காம்பு : 1-2.5 செ.மீ. நீளம்
மஞ்சரி : நுனிக்குருத்தில் தனி மலராகும்.
மலர் : இரு பாலானது. புனல் வடிவானது. பல்வேறு.அழகிய நிறங்களை உடையது. சிவப்பு. ஊதா, மஞ்சள், வெள்ளை வண்ணங்கள் உள. 3-5 செ.மீ. நீளமான மலர்கள்.
மலர்க் காம்பு : மிகச் சிறியது. 1.5-2.5 மி.மீ.
மலரடிச் செதில் : பசிய புல்லி போன்றது. அடியில் இணைந்து, சிறு குவளை வடிவாயிருக்கும். மேலே 5 நீண்ட பல் விளிம்புகள் காணப்படும்.
அல்லி வட்டம் : இதனைப் பீரியாந்த் என்பர். புல்லியும், அல்லியும் இணைந்தது. அடியில் நீண்ட குழல் வடிவானது. மேலே மடல் 5 இதழ்கள் போன்று விரிந்து இருக்கும்.
மகரந்த வட்டம் : 5 நீண்ட மகரந்தத் தாள்கள். விரிந்த மலரில் வெளிப்பட்டு நிற்கும். சமம் அற்றவை.
சூலக வட்டம் : ஒற்றைச் சூலகம்.
சூல் தண்டு : மெல்லியது. நீளமானது. அரும்பில் உட்புறமாக வளைந்துள்ளது.
சூல் முடி : சிறியது, உருண்டையானது.
சூல் : ஒன்று, ஆந்தோகார்ப் எனப்படும்.
கனி : கனி முதிர்ந்து ஒரு விதையாகும்.
கரு : இரு வித்திலைகள் உள்ளன.
கரு முளை : பட்டையாக வளைந்து, வித்திலைகளை ஒட்டியிருக்கும். படம். (Rondle Vol. 2, Р. 107)

இச்செடியின் தண்டில் இயல்புக்கு மாறான இரண்டாம் வளர்ச்சி உண்டாகும். இச்செடியின் பல்வேறு வகைகள், பலவேறு வண்ண மலர்களைத் தரும். இது ஓர் அழகுச் செடி, மாலையில் நான்கு மணி அளவில் பூக்கும். அதனால் இதற்கு நான்காம் மணிச் செடி (Foபr ‘O’ clock plant) என்று பெயர். இது பெரு என்ற நாட்டில் வளமாகத் தோன்றியது போலும். இதனால், இதனைப் பெருநாட்டின் அதிசயம் (Marvel of Peru) என்பர்.