பக்கம்:நாடக மேடை நினைவுகள்.pdf/669: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்)
 
பக்கத்தின் நிலைமைபக்கத்தின் நிலைமை
-
மெய்ப்புப் பார்க்கப்பட்டவை
+
சரிபார்க்கப்பட்டவை
பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):பக்க நடுப்பகுதி (ஒருங்கிணைவுக்கு சேர்க்கப்பட போவது):
வரிசை 3: வரிசை 3:
எங்கள் சபை மதுரையிலிருந்தபோது எனது நண்பர்கள் வைகுண்டம் அய்யர் அவர்கள், ராமமூர்த்தி பந்துலு அவர்கள், டாக்டர் கோபால்சாமி ஐயங்கார் அவர்கள் முதலியோர் எங்களுக்கு விருந்தளித்தனர். பிறகு நான் அங்கத்தினனாகச் சேர்ந்த மதுரை டிராமாடிக் கிளப்பாரும் ஒரு நாள் சாயங்காலம் எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்தனர்.
எங்கள் சபை மதுரையிலிருந்தபோது எனது நண்பர்கள் வைகுண்டம் அய்யர் அவர்கள், ராமமூர்த்தி பந்துலு அவர்கள், டாக்டர் கோபால்சாமி ஐயங்கார் அவர்கள் முதலியோர் எங்களுக்கு விருந்தளித்தனர். பிறகு நான் அங்கத்தினனாகச் சேர்ந்த மதுரை டிராமாடிக் கிளப்பாரும் ஒரு நாள் சாயங்காலம் எங்களுக்கு டீ பார்ட்டி கொடுத்தனர்.


இங்கிருந்தபொழுது ஒரு நாள் சாயங்காலம் மேற்படி கிளப்பார் வேண்டுகோளின்படி, விக்டோரியா எட்வர்ட் ஹாலில் நாடக மேடையைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் நான் பேசியதில் ஒன்று மாத்திரம் மிகவும் நன்றாய் ஞாபகமிருக்கிறது. அச் சமயம் மதுரையில் இரண்டு நாடக சபைகளிருப்பதாகவும் அவைகளுக்குள் அவ்வளவாக ஒற்றுமை இல்லை யென்பதையும் அறிந்த வனாய், அந்த இரண்டு சபையாரும் ஒருங்கு சேர்ந்து ஒரே சபையாய் ஏகோபித்து உழைப்பார்களானால், மிகவும் நலமாயிருக்குமென்று கேட்டுக் கொண்டேன். இதன் பலன் என்னவென்றால், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் மதுரைக்கு மறுபடியும் போனபோது, இரண்டாயிருந்த சபைகள் மூன்றாக மாறின; 'ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்" என்றதுபோல் நமது வேண்டுகோளுக்கிணங்கி இரண்டாயிருந்தது மூன்றா யினாற் போலிருக்கிறது என்று பிறகு சும்மாயிருந்து விட்டேன்.
இங்கிருந்தபொழுது ஒரு நாள் சாயங்காலம் மேற்படி கிளப்பார் வேண்டுகோளின்படி, விக்டோரியா எட்வர்ட் ஹாலில் நாடக மேடையைப்பற்றி ஒரு உபன்யாசம் செய்தேன். அச்சமயம் நான் பேசியதில் ஒன்று மாத்திரம் மிகவும் நன்றாய் ஞாபகமிருக்கிறது. அச் சமயம் மதுரையில் இரண்டு நாடக சபைகளிருப்பதாகவும் அவைகளுக்குள் அவ்வளவாக ஒற்றுமை இல்லை யென்பதையும் அறிந்த வனாய், அந்த இரண்டு சபையாரும் ஒருங்கு சேர்ந்து ஒரே சபையாய் ஏகோபித்து உழைப்பார்களானால், மிகவும் நலமாயிருக்குமென்று கேட்டுக் கொண்டேன். இதன் பலன் என்னவென்றால், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் மதுரைக்கு மறுபடியும் போனபோது, இரண்டாயிருந்த சபைகள் மூன்றாக மாறின; “ஒட்டக் கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்றதுபோல் நமது வேண்டுகோளுக்கிணங்கி இரண்டாயிருந்தது மூன்றா யினாற் போலிருக்கிறது என்று பிறகு சும்மாயிருந்து விட்டேன்.


இவ் வருஷம் எங்கள் சபை இரண்டு மூன்று புதிய நாடகங்களை நடித்தது. அவைகளைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். முதலாவது “போஜ சரித்திரம்" ஆடப்பட்டது. இதன் ஆசிரியர் காலஞ்சென்ற எனது நண்பராகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார். அவர் இந் நாடகத்தைத் தான் ஸ்தாபித்த வித்வன் மனோரஞ்சித சபையாரைக் கொண்டு இதற்கு முன் ஆடி வைத்தார் . மறுபடி அவர் எங்கள் சபையை வந்து சேர்ந்த பிறகு பன்முறை எங்கள் சபை இதை ஆட வேண்டுமென்று
இவ் வருஷம் எங்கள் சபை இரண்டு மூன்று புதிய நாடகங்களை நடித்தது. அவைகளைப் பற்றிச் சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். முதலாவது “போஜ சரித்திரம்” ஆடப்பட்டது. இதன் ஆசிரியர் காலஞ்சென்ற எனது நண்பராகிய டி.எஸ். நாராயண சாஸ்திரியார். அவர் இந் நாடகத்தைத் தான் ஸ்தாபித்த வித்வன் மனோரஞ்சித சபையாரைக் கொண்டு இதற்கு முன் ஆடி வைத்தார். மறுபடி அவர் எங்கள் சபையை வந்து சேர்ந்த பிறகு பன்முறை எங்கள் சபை இதை ஆட வேண்டுமென்று
"https://ta.wikisource.org/wiki/பக்கம்:நாடக_மேடை_நினைவுகள்.pdf/669" இலிருந்து மீள்விக்கப்பட்டது