பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/271: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:51, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 269 பெண்கள் மறுமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற தமது புரட்சிக் கருத்தை வெளியிடுகின்றார். மணவாளனைப் பறிகொடுத்த ஒரு மங்கை அழுதலை முதலில் காட்டுகின்றார். கண்ணுக்கே மையானிர் கார் குழலில் பூவானிர் மண்ணாகிப் போனதுவே என்வாழ்வு. - பாரதிதாசன், காதற்பாடல்கள், ப. 153. கண்ணுக்கு மை எழுதல் கூடாது; கார்குழலில் பூச்சூடுதல் கூடாது. அவள் எதிரில் வரக்கூடாதாம்! கூட்டங்களில் போகக் கூடாதாம்! உடையையும் உணவையும் சுருக்கல். வேண்டுமாம்! அப்பெண் மூதேவியாய் விட்டாளாம்! " தரையிற் படுத்தல் வேண்டும் சாதம் குறைத்தல் வேண்டும் தாலி யற்றவள் மேல் அழுந்திடும் வேலின் அக்ரமம் ஞாலம் ஒப்புமோ? - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 118. அறுபது வயதிற்கு மேல் ஒருத்தி கணவனை இழந்தபின் தனிமையில் வாழலாம். வாழ முடியும். அது இயற்கையுங் கூட. ஆனால் கட்டிளங்குமரி கணவனை இழந்து தனித்து வாழ்தல் கூடுமோ? அது இயற்கையாகுமோ? ஆனால் நிலை என்ன? அறுத்தவள்’ மணத்திற்கு உரிமை உடையவள் அல்ல ள் என்ற எண்ணந்தானே அனைவரிடமும் இருந்து வருகின்றது. கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே-இங்கு வேரில் பழுத்த பலா-மிகக் கொடியதென்று எண்ணப்பட்ட தண்ணே - குளிர் வடிக்கின்ற வட்ட நிலா - பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 106.