பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/297: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Text from Google OCR
(வேறுபாடு ஏதுமில்லை)

04:55, 8 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 297 என்ற விளக்கத்தைத் தருகின்றார் பாவேந்தர். இவ்வாறு கட்டில்லாமல் கீழ் மேல் என்னும் கண்மூடித்தன வழக்கம் இல்லாமல் தமிழகம் விளங்க வேண்டும். இத்தகைய கட்டில்லா நாட்டில்தான் மட்டில்லா மகிழ்ச்சி நிலவும்; அம்மாற்றம் நிகழ்தல் வேண்டியே தாம் படைத்த நூல் களில், காப்பியங்களில், இருவேறுபட்ட சாதியில் பிறந்த இருவரை மணமக்களாக இணைத்துக் காண்கின்றார். "புரட்சிக் கவி' அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. வந்தவன் ஆண் சாதி என்றால் - அவனை மணந்தவள் பெண்சாதி யன்றோ? -பாரதிதாசன், காதற்பாடல்கள், ப. 13. என்று சாதிப்பாகுபாடு அற்ற மணவாழ்க்கையை ஆதரிக் கின்றார். இம்மண வாழ்க்கையைச் சுயமரியாதை இயக்கத்தார் கூறும் வகையில் முடித்தல் வேண்டும் என்று கூறி அம்முறையினையும் விளக்குகின்றார். இந்நாட்டின் முன்னேற்றம் எண்ணி உழைக்கின்ற நன்னோக்கம் கண்ணும் சுயமரியாதைக் காரர் காட்டும் நெறியே கயமணத்தை நீ முடிப்பாய். -பாரதிதாசன், காதல் நினைவுகள், ப. 46. அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க வடமொழிக் கூச்சலா? இன்பவாழ்வு தொடங்கையில் நடுவிற் சுடுநெருப்பா? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 215. என்று தமிழர் மணமுறையில் இருக்கக் கூடாததை எடுத்தியம்புகின்றார். திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர். காதலுற்ற இரு உயிர்களின் உள்ளங்கள் ஒன்றாவது போல் ஈருடலும் ஒருடலாய் இழையும் நாள். பா-19