பட்டினத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 744:
 
=பொது, மெய்யுணர்வு =
===1===
உடைகோ வணம் உண்டு உறங்கப் புறந்திண்ணை யுண்டு உணவிங்கு
அடைகாய் இலையுண்டு அருந்தத் தண்ணீர் உண்டு அருந்துணைக்கே
விடையேறும் ஈசர் திருநாமம் உண்டு இந்த மேதினியில்
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே (1)
 
வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே
ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே (2)
 
நாடிக்கொண்டு ஈசரை நாட்டமுற் றாயிலை நாதரடி
தேடிக்கொண்டாடித் தெளிந்தாயிலை செக மாயைவந்து மூடிக் கொண்டோமென்றும் காமாயுதங்கள் முனிந்த வென்றும்
பீடிப்பையோ நெஞ்ச மேயுனைப் போலில்லை பித்தர்களே (3)
 
கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே (4)
 
கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப்பல் பச்சிலையால்
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ கெடுவீர் இந்த மானுடமே (5)
 
சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலு (ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்
கல்லிலும் செம்புலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே (6)
வினைப்போகமே ஒரு தேகங் கண்டாய் வினை தான் ஒழிந்தால்
தினைப்போ தளவும்நில் லாதுகண்டாய் சிவன் பாதம்நினை
நினைப்போரை மேவு நினையாரை நீங்கி இந்நெறியில் நின்றால்
உனைப்போல் ஒருவருண்டோ மன மே எனக்கு உற்றவரே (7)
 
பட்டைக் கிழித்துப் பருஊசி தன்னைப் பரிந்தெடுத்து
முட்டச் சுருட்டி என்கொய்குழ லாள் கையில் முன் கொடுத்து
கட்டியிருந்த கனமாயக்காரி தன் காமம் எல்லாம்
விட்டுப் பிரியென் றோ இங்ங னேசிவன் மீண்டதுவே (8)
சூதுற்ற கொங்கையும் மானார் கலவியும் சூழ் பொருளும்
போதுற்ற பூசலுக்கு என்செய லாம் செய்த புண்ணியத்தால்
தீதுற்ற மன்னவன் சிந்தையில் நின்று தெளிவதற்கோ
காதற்ற ஊசியைத் தந்து விட்டான் என்றன் கை தனிலே (9)
 
வாதுற்ற திண்புயர் அண் ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலு நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே (10)
 
வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்
போதித்த வன்மொழி கேட்டிலையோ செய்த புண்ணியத்தால்
ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் அதாம் பொழுது
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே (11)
 
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமளவு எள்ளளவாகிலும் முன்பு செய்ததவம்
தனையாள என்றும் பரலைகம் சித்திக்கும் சத்தியமே (12)
 
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அயும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே (13)
 
சீயும் குருதிச் செழு நீர் வழும்பும் செறிந்தெழுந்து
பாயும் புடவை ஒன்றில்லாத போதுபகல் இரவாய்
ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்
மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே (14)
 
சிதப் பனிக்குண்டு சிக்கெனக் கந்தை தினம் இரந்து
நீ துய்க்கச் சோறு மனைதோறும் உண்டு நினைவெழுந்தால்
வீதிக்கு நல்ல விலைமாதர் உண்டு இந்த மேதினியில்
ஏதுக்கு நீசலித்தாய் மனமே என்றும் புண்படவே (15)
 
ஆறுண்டு தோப்புண்டு அணிவீதி அம்பலம் தானு முண்டு
நீறுண்டு கந்தை நெடுங்கோ வணமுண்டு நித்தம் நித்தம்
மாறுண்டு உலாவிமயங்கும் நெஞ்சே மனைதோறும் சென்று
சோறுண்டு தூங்கிப்பின் செம்மா இருக்கச் சுகமும் உண் டே (16)
 
உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில் ஒடுங்கி வந்தால்
தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு சகம் முழுதும்
படுக்கப் புறந்திண்ணை யெங்கெங்கு முண்டு பசித்து வந்தால்
கொடுக்கச் சிவனுண்டு நெஞ்சே நமக்குக் குறைவில்லையே (17 )
 
மாடுண்டு கன்றுண்டு மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள்மனமே
ஓடுண்டு கந்தையுண் டுள்ளே யெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே (18)
 
மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டை யுண்டோ நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்து விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே (19)
 
ஒன் றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வ மெல்லாம்
அன்றென் றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென் றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென் றிரு மனமே உனக்கே உபதேசமிதே (20)
 
===2===
 
===3===
"https://ta.wikisource.org/wiki/பட்டினத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது