நந்தீசுரர் பூசா விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
பக்கம் 323
==1-56==
 
எண்சீர் விருத்தம்
 
1
 
கேளப்பா ஓம்ஸ்ரீ கங்கு என்றும் தான்
:கெடியாக மூலத்தில் கும்பித் தக்கால்
வாளப்பா பழம் தெங்கு அவல் வடைகள் தோசை
:வளமாவிக் கினர்க்குப் புட்ப பரிமளங்கள்
நாளப்பா மனம் அடங்கித் தோத்ரம் செய்து
:நலமான விக்கினரைப் பூசித் தக்கால்
ஆளப்பா ஆசிர் வாதங்கள் ஈவார்
:அப்பனே விக்கினரைப் பூசை செய்யே
 
2
 
செய்யப்பா விக்கினர் தம் பூசை சொன்னேன்
:செயமான சண்முகவன் பூசை கேளு
வையப்பா சங்வங்மங் சரவணாய
:வளமாக அனாகதத்தில் பூசை பண்ணு
வையப்பா புட்பரி மளங்கள் கொண்டு
:மைந்தனே தூப நைவேத்யம் காட்டி
கையப்பா கனகசபை யதிலே பூசிக்
:கண்மணியே சண்முகத்தை வரங்கள் கேளே
 
3
 
காணப்பா ஆசார பூசை சொன்னேன்
:கண்மணியே சிவபூசை சொல்லக் கேளு
வாணப்பா நம சிவய கிம் ஆம் என்று
:வளமாகப் பூரணத்தில் இருத்திக் கொண்டே
ஆனப்பா தூப தீப நைவேத் யத்தோடு
:அப்பனே சதாசிவத்தைத் தோத்திரம் செய்
மாணப்பா நீ கேட்டது எல்லாம் ஈவார்
:மைந்தனே சிவத்தினுடைய மகிமை தானே
 
4
 
தானான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்
:தன்மையுள்ள சக்தியுடைப் பூசை கேளு
வானான இம்மென்றும் கும்பகத்தில்
:வட்டி வளமாக ஒருமனமாய் நின்று
ஆனான கதம்ப கத்தூரி புட்பம்
:அப்பனே பால் பழங்கள் வைத்து வைத்து
மானான தேவியைத் தான் தோத்திரித்து
:மைந்தனே சாட்டாங்கச் சரணம் பண்ணே
 
5
 
பண்ணப்பா என்னவம்மா என்று கேளு
:பலவிதமாய் நீ தொடுத்தது எல்லாம் மெய்யாம்
அண்ணப்பா என்றவளே சொன்னால் போதும்
:அப்பனே அட்சரத்தில் பலிக்கும் பாரு
வன்னப்பா சத்தியுடைப் பூசை சொன்னேன்
:வளமான சிவத்தினுடைப் பூசை சொன்னேன்
கண்ணப்பா விண்ணு பூசை சொல்லக் கேளு
:கண்மணியே மங்நங்சிங் என்றே ஏத்தே
 
6
 
ஏத்தப்பா புட்பரி மளங்கள் சார்த்தி
:என் மகனே கதம்பம் கத்தூரி சாத்து
வாத்தப்பா சங்கீதத் துடனே பூசி
:வளமான விண்ணுவுக்குப் பூசி பூசி
போற்றப்பா மனம் அடங்கிப் பத்தியாகப்
:போற்றவே விண்ணுவவர் கேட்டது ஈவார்
ஆற்றப்பா விட்டுணுவின் பூசை சொன்னேன்
:அகார கெசமுகவன் பூசை கேளே
 
==இரேசக பூசை==
 
7
 
பாரப்பா ரேசகத்தின் பூசை கேளு
:பண்பான ரேசகத்தின் ஆமென்று ஏத்தி
ஆரப்பா நைவேத்யம் கும்பகம் செய்
:அப்பனே ரேசகத்தில் மனத்தை நாட்டு
வாரப்பா மனமது ரேசகமே யாச்சு
:வளமான ரேசகந்தான் வசியம் ஆச்சு
நாரப்பா ரேசகத்தின் பூசை சொன்னேன்
:நலமான பூரகத்தின் பூசை கேளே
 
==பூரக பூசை==
 
8
 
கேளப்பா மணிப் பூரகத்தில் மைந்தா
:கெடியாக இம்மென்று கும்பித்து ஏத்து
வாளப்பா வகையாக நின்று கொண்டு
:வளமான பூரகத்தில் தோத்ரம் பண்ணி
வாளப்பா வேண்டியவாம் வரங்கள் கேளு
:வளமாக விண்ணுவரம் ஈவார் பாரு
ஆளப்பா பூரகத்தின் பூசை சொன்னேன்
அப்பனே கும்பகத்தின் பூசையாமே
 
==கும்பக பூசை==
 
9
 
ஆமப்பா கும்பகத்தின் உம்மென் நாடி
:அப்பனே மனத்தைக் கும்பகத்தில் வைத்து
வாமப்பா பூசை நைவேத்யம் செய்து
:வளமான கும்பகத்தை மனத்தால் வேண்டிக்
காமப்பா கும்பகத்தை வரங்கள் கேளு
:கண்மணியே வேண்டு வரம் ஈவார் ஐயா
நாமப்பா சூரியன் தன் பூசை கேளு
:நலமாக மங்குசிங் என்று சொல்லே
==சூரிய பூசை==
 
10
 
சொல்லப்பா சூரிய கும்பகமே செய்து
:சொற்பெரிய பூசை நைவேத்யம் செய்தே
அல்லப்பா சாட்டாங்க சரணம் செய்தே
:அப்பனே தோத்திரம் செய் கும்பகத்தை
மல்லப்பா அட்ட சவு பாக்யம் ஈவார்
:அகத்தியர் தாம் கும்பகத்தில் வரங்கள் ஈவார்
வல்லப்பா சூரியன் தன் பூசை சொன்னேன்
:வளமான சந்திரன் தன் பூசை கேளே
 
==சந்திர பூசை==
 
11
 
கேளப்பா யங்ஙுநங் என்று கும்பி
:கெடியாகப் பால் பழம்பா வாசம் வைத்தே
ஆளப்பா தூபதீப நைவேத்யம் செய்
:அப்பனே சந்திரனைத் தோத்திரித்து
வாளப்பா சோடச் சந்திரனில் நின்று
:வளமான சந்திரனை வரங்கள் கேளு
நாளப்பா வேணவரம் ஈவார் ஐயா
:நலமான சந்திரன் தன் மகிமை பாரே
 
==சனி பூசை==
12
 
பாரப்பா சனி பூசை சொல்லக் கேளு
:பண்பான வங்கென்றும் சங்கென்றும் தான்
நாரப்பா மேருவிலே குந்திக் கொண்டு
:நலமாகத் தோத்தரித்துப் பூசைசெய்நீ
வாரப்பா தூப நைவேத்யத் தோடு
:வளமாகத் தோத்தரித்துப் பானம் செய்து
ஆரப்பா வேணவரம் கேட்டுக் கொண்டே
:அப்பனே அட்சணத்தில் ஈவார் காணே
 
முற்றும்
"https://ta.wikisource.org/wiki/நந்தீசுரர்_பூசா_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது