சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/தண்ணீர் கரையிலேயே உள்ளது

20
தண்ணீர் கரையிலேயே உள்ளது


பண்ணையார் ஒருவர் தம்முடைய நிலங்களைப் பார்வையிடச் சென்றார். பண்ணை ஆட்களும், கணக்கரும் உடன் சென்றனர்.

அப்போது, அருகில் இருந்த ஏரியைப் பார்த்து, “இந்த ஏரி நீர் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார் பண்ணையார்.

“பால் போல் இருக்கிறது!” என்றார் ஒருவர்

“முத்துப் போல் இருக்கிறது!” என்றார் வேறொருவர்.

“தெளிவாய் இருக்கிறது!” என்றார் மற்றொருவர்.

அவர்கள் அளித்த பதில்கள் பண்ணையாருக்கு திருப்தி அளிக்கவில்லை அருகில் நின்று கொண்டிருந்த கணக்கரைப் பார்த்தார்.

“பண்ணையார் அவர்களே! தண்ணீர் கரையிலேயே இருக்கிறது” என்றார் கணக்கர்.

“ஏரித் தண்ணீர் சுருங்கி விட்டதா? விவசாயத்துக்குப் போதுமா!” என்ற கருத்தில் கேட்டார் பண்ணையார்.

“கரையிலேயே இருக்கிறது” என்றால், போதுமான அளவு நீர் உள்ளது என்று புரிந்து கொண்டார் பண்ணையார்.