சீனத்தின் குரல்/நால்வர்1

நால்வர்

டாக்டர் சன்-யாட்-சன்னுக்குப் பிறகு சின அரசியல் வானில் ஒளிவிட்ட நட்சத்திரங்கள் Shian-ke-Shaik; Koo-Kan-min, Liyavo-Sunka. Wan-Ching-Vail, - சியாங்-கே-ஷேக், கூ-கான்-மின், லியாவோ-சுங்கா, வான்-சிங்-வெய்ல், ஆகிய நால்வர்தான். இவர்களில் சியாங்-கே-ஷேக்கைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த நேரத்தில் சீனத்தின் எல்லாப் பகுதிகளிலும் சீனா சீனர்களுக்கே என்ற முழக்கமும், வெளி நாட்டாரிடம் வெறுப்பும் துவேஷமும் காட்டுத் தீப்போல் பரவி வருகின்றது.