சுவாமிமலைத் தெய்வப்புகழ்

தனன தனன தனன தனதன

   தனன தனதன ... தனதான

தகிட தகதிமி தகிட தகதிமி

ஜதியில் நடமிடும்  ...   மயிலேறி

டுடுடு டமடம முரசு ஒலிதர

  முகடு வெடிபட ...   வரும் சூரன்

படையும் பொடிபட கடலும்  சிதறிட  

அயிலை அனலென   ...   விடுவோனே

இனிய இசையுடன் தினமும் வழிபட

வரமும் திறமையும் ...   அருள்வாயே

சிறுவன் ஹரியென  அதிர ‌இடியென

நொடியில் வருபவன்  ...   அரிகேசன்

கடலும் கடைபவன் அமுதும்   அருள்பவன்

      நெடிய  வரதனின் ... மருகோனே

அருகு மதிநதி அணியும் இறைவனின்

      செவியில்  பிரணவம் ...  மொழிவோனே

முனிவர்  மனிதரும் திரளும் குருமலை

      மருவி வளரும்எம் ... பெருமாளே