சைவ சித்தாந்த அகராதி
1)ஏகான்மாவாதி 2)சிவசங்கிராந்தவாத சைவர். 3)சிவாத்துவித சைவர் 4)பேதவாத சைவர். 5)நையாயிகர்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பேரா.அ.கி. மூர்த்தி
திருநெல்வேலி, தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.
154, டி. டி. கே. சாலை, சென்னை - 600 018.
1) நூலின் பெயர்:சைவசித்தாந்த அகராதி
2) பொருள் :சமய அகராதி
3) ஆசிரியர் பெயர் :அ.கி.மூர்த்தி
4) வெளியீட்டெண் :2011
5) பதிப்பாண்டு :முதல் பதிப்பு-1998
6) நூலகக் குறியீட்டெண்:R673K N98
7) பதிப்பாளர் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-18
8) உரிமை : ஆசிரியர்
9) மொழி : தமிழ்
10) நூலின் அளவு : டெம்மி
11) தாள் : 14.4 kg
12) கட்டமைப்பு : அட்டைக்கட்டு
13) அச்சு எழுத்து :10 pt.
14) மொத்தப் பக்கங்கள் :yi+247
15) விலை : ரூ. 65
16) அச்சிட்டோர் : அப்பர் அச்சகம், சென்னை-108
17) கணிப்பொறி அச்சு : ஈசுவர் லேசர், சென்னை-18அகராதித் துறை மேலை நாட்டில் பல வழிகளில் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அகராதி தொகுக்கப் பெற்றுள்ளது. தமிழில் இதுவரை பொதுவான அகராதிகளே வெளி வந்துள்ளன. இலக்கணச் சொல் அகராதி, மரபுத் தொடர் அகராதி போன்று சில வெளிவந்துள்ளன.
கணிப்பொறிக்குரிய சொற்களைத் தொகுத்து, கணிப்பொறி அகராதி, இன்டர்நெட் - மல்டிமீடியா சொற்களஞ்சியம் போன்றவற்றைக் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
தமிழர் தம் தத்துவமான சைவசித்தாந்தம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் தனித்துறையாகப் பயிலப்பெறுகின்றது. இதன் அடிப்படையாகப் பதினான்கு சாத்திர நூல்கள் எழுதப் பெற்றுள்ளன. இவை தவிர இவற்றுக் கெழுந்த சிவஞானபோத மாபாடியம், சிவஞானபோதச் சிற்றுரை, சித்தியார் அறுவர் உரை போன்ற பழைய உரைகள் போகப். பிற்காலத்தில் திருமுறை சாத்திர நூல்களுக்கெழுந்த பல உரைகள் இன்று வழக்கில் உள்ளன. இவற்றில் காணப்படும் கலைச் சொற்களைத் தொகுத்து இவற்றுக்கான விளக்கங்களைத் தொகுக்கும் முயற்சியே இந்த அகராதி தோன்றுவதற்குக் காரணம்.
இம் முயற்சியில் ஈடுபட்டு சிறப்பாக அகராதியைத் தொகுத்துள்ளவர் திரு. அ.கி.மூர்த்தி. எம்.ஏ. ஆவர். சமய, சாத்திர நூல்களில் ஆழமான பயிற்சியுடைய இவர் பல்வேறு நூல்களைப் படித்தறிந்து அரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து உரிய விளக்கங்களை இணைத்து இதனை உருவாக்கியுள்ளார்.
சைவசித்தாந்தம் பயில்வார்க்கு இவ்வகராதி பெரிதும் பயன்படும். சாத்திர நூல்களில் வடமொழிச் சொற்கள் அதிக அளவில் விரவப் பெற்றுள்ளன. கழக் நூல்களில் வடமொழிச் சொற்களைக் களைந்து அவற்றுக்கீடான தமிழ்ச் சொற்களைப்பெய்வது முறை. ஆனால் இவ்வகராதியில் சாத்திர நூல்களிலிருந்தும் உரை நூல்களிலிருந்தும் சொற்கள் தொகுக்கப் பெற்றதால் அவற்றில் பயின்று வரும் வடசொற்கள் அப்படியே எடுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளன. இனி எதிர்வரும் பதிப்புகளில் உரை விளக்கத்தில் வரும் வடசொற்களைக் களைய முயல்வோம்.
அன்பர்கள் இவ்வகராதியைப் பயன்படுத்தி விளக்கம் பெறுவார்களாக.
- சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
முன்னுரை
சைவசித்தாந்தம் தலைசிறந்த தமிழ் மெய்யறிவு ஆகும். இம்மெய்யறிவு குறித்துத் தமிழில் முறையானதும் முழுதுமான அகராதி இல்லை. இக்குறையை நிறைவு செய்யவே இவ்வகராதி இப்பொழுது வெளியிடப்படுகிறது.
சைவசித்தாந்த நூல்கள் (மெய்கண்ட நூல்கள்) 14இல் தலைசிறந்தது சிவஞான போதமே. ஏனைய பதின்மூன்றும் அதன் அடி ஒற்றிச் செல்வனவே. இப்பதினான்கு நூல்களிலுள்ள இன்றியமையாச் சொற்கள் திரட்டப்பட்டு, அவை இவ்வகராதியில் விளக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு விளக்கப்படுவது பின்வரும் நிலைகளில் அமைகின்றன.
1. அடிப்படைக் கருத்துகள்.
2. கொள்கை விளக்கமும் கொள்கை மறுப்பும்
3. ஆசிரியர்கள் வரலாறு
4. நாயன்மார்கள் வரலாறு
5. திருவிழாக்கள்
6. இன்றியமையா இடஞ்சுட்டுக் குறிப்புகள்
7. இன்ன பிற அரிய குறிப்புகள்.
அகராதியின் தனிச்சிறப்பே எந்த ஒரு பதிவையும் நினைத்த அளவில் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பிருப்பதே. அவ்வகையில் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பதிவுச் சொற்கள் அனைத்தும் எளிமையாகவும் எடுத்துக்காட்டுடனும் விளக்கப்பட்டுள்ளன . சுருக்கம், தெளிவு, செறிவு, அறிவியல், செம்மை ஆகியவை இவ்வகராதியின் சிறப்புகள் ஆகும். ஆங்காங்கு அறிய அட்டவணைகள் உயரிய கருத்துக்களின் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
V
இவ்வகராதியின் கையெழுத்துப் படியைப் படித்துப் பார்த்துச் செம்மை பெறுவதற்குரிய கருத்தேற்றங்களை வழங்கிய சைவசித்தாந்த அறிஞர் தஞ்சை திரு. டி.என்.இராமச்சந்திரன் அவர்களுக்கும்,மேற்கோள் நூல்களிலும் காணப்படாத சில சொற்களுக்கு எளிய விளக்கம் தந்து உதவிய பாவலரேறு தமிழறிஞர் தஞ்சை திரு.ச.பாலசுந்தரனார் அவர்கட்கும், இம்முழுமையான அகராதியை உரிய காலத்தில் வெளியிட்டுச் சைவசித்தாந்த உலகிற்குச் சீரிய தொண்டு செய்துள்ள கழக மேலாண்மை இயக்குநர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்கட்கும் இவ்வகராதித் தொகுப்பாசிரியரின் உளங்கனிந்த நன்றி உரித்தாகும்.
இவ்வகராதியின் குறைநிறைகள் வாசகர்களிடமிருந்து இனிதே வரவேற்கப்படுகின்றன.
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பேரா.அ.கி.மூர்த்தி
பேரா. அ.கி.மூர்த்தி
தொல்காப்பியரகம்
123/8, சூளைமேடு நெடுஞ்சாலை,
பாண்டியன் நிழற்சாலை,
புதுஅங்காடித் தெரு, சென்னை -94
சைவசித்தாந்த அகராதி
அ
அ - சிவன்
அஃறிணை - தாழ்வுள்ள பொருள். எ-டு. மாக்கள். ஒ: உயர்திணை.
அகக்கரணம் - அகக்கருவி: இஃது அகம், உள்ளம் என்று பொருள்படும். சித்தம், மனம், அகங்காரம், புத்தி ஆகியவை அகக்கருவிகள். வேறுபெயர் அந்தக்கரணம்.
அகங்காரம் - செருக்கு எதற்கும் 'நான்நான்'என்று முற்படுதல்.ஒன்றை இன்னதென்று அறிவது. குற்றங்களில் ஒன்று. புத்தியினின்று இராசதத்தை மிகுதியாகக் கொண்டுதோன்றுவது. பா. அகந்தை, ஆங்காரம்.
அகங்காரக்கூறு - தைசதம், வைகாரிகம், பூதாதி என மூன்று.
அகங்கார சைதன்யவாதி - உயிர்வளி முதலிய வளிகளே ஆன்மா என்னும் கொள்கையன்.
அகங்காரமமகாரங்கள் - எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம். பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம். ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும் பசுபோதம் - ஆன்ம அறிவு. தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்.
அகங்காரவாதி - மனோமய கோசமே உயிர் என்னும் கொள்கையன். கோசம் - உடம்பு.
அகங்காரான்மாவாதி - அகங்காரமே உயிர் என்னும் கொள்கையன்.
அகச்சந்தானம் - அகப்பரம்பரையினர். சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கைலாய பரம்பரையில் அறிவுறுத்தி வந்தவர்கள். நந்திதேவர்,சனற்குமாரர்,சத்திய ஞான தரிசினிகள்,பரஞ்சோதி முனிவர் ஆகிய நான்கு குரவர்.
அகச்சமயம் - வேத சிவாகமங்களையே நூல்களாகக் கொண்டாலும்,அவற்றிற்குப் பொருள் கொள்வதில் சைவ சித்தாந்தத்தோடு வேறுபடும் அறுவகைச் சமயம். அவை யாவன: பாடாவாத சைவம், பேதவாதண சைவம், சிவ சமவாத சைவம், சிவ சங்கிராந்த வாத சைவம், சிவாத்துவித சைவம், சிறப்பாக, இவை முத்தி நிலையில் சைவசித்தாந்தத் தோடு வேறுபடுபவை. பா: அகப்புறச்சமயம்.ஒ.புறச்சமயம்
அகச் சுவை - இராசதம், தாமதம், சாத்துவிகம் என மூன்று.
அகண்டம் - எல்லாம். பிரிவு படாதது, முழுமையானது.
அகண்டாகாரம் - துண்டிக்கப் படாத வடிவம்.
அகண்டன், அகண்டிதன்- கடவுள், சிவன்.
அகண்டிதம் - முழுமை.
அகத்தடிமை - அணுக்கத்தொண்டு செய்பவன்.
அகத்தி - இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று.
அகத்திணை- அக ஒழுக்கம். கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை என ஏழு. ஒ: புறத்திணை.
அகத்தியர், அகத்தியன் - அகத்தியம் என்னும் இலக்கண நூலை இயற்றிய பேராசான். இவருக்கு 12 மாணவர்கள் உண்டு. எ-டு: அருமறை ஆகமம் அங்கம் அருங்கலை நூல் தெரிந்த அகத்தியன் (சி.சி.ப.ப5),
அகத்தியர் மாணாக்கர் - 1) செம்பூட்சேஎய் 2) வையாபிகர் 3) அதங்கோட்டாசான் 4)அவிநயர்5) காக்கைபாடினியர் 6)தொல்காப்பியர் 7) துரா லிங்கர் 8)வாய்ப்பியர் 9)பனம் பாரனார் 10) கழாரம்பர் 11)நற்றத்தர் 12) வாமனர் .
அகந்தை - செருக்கு. பா.அகங்காரம்.
அகத்தொண்டர் - உட்பணி செய்பவர்.
அகப்பகை - காமம், குரோதம், உலோகம், மோகம், மதம், மாற்சரியம்
அகப்புறச்சமயம் - வேதம், சிவாகமம் ஆகிய இரண்டையும் மறுக்காது உடன்பட்டாலும் அவற்றினும் சிறப்பாக வேறு நூல்களைக் கொள்ளும் சமயம், அவையாவன: பாசுபதம், மாவிரதம், காபாலம் (காளா முகம்), வாமம், வைரவம், ஐக்கிய வாதசைவம் என்னும் ஆறுமாகும்.பா:அகச் சமயம். ஒ. புறப்புறச் சமயம்.
அகம் - உயிர், உள்ளம். அகமே பிரமம்.
அகம் பிரமம் - நானே பிரமம் என்று கொள்ளுதல்.
அகம்பிரமவாதி, அகம் பிரமகாரர் - நானே பிரமம் என்று வாதிடும் அத்வைதி.
அகமருடணம், அகமருடம் - வேதமந்திரச் சிறப்பு. நீருள் மூழ்கிச் செபித்தல் அக மருடனக் குளியலாகும்.
அகமார்க்கம் - அகநெறி, மந்திரமுறை.
அகரம் - 1) பிரமன் 2) அகர உயிராகிய முதல் எழுத்து. ஒ: மகரம்.
அகர்த்தா - படைப்புக் கடவுள் இல்லை. பா. அகாரணன். ஒ. கர்த்தா.
அகர்த்திருவாதம் - படைப்புக் கடவுள் இல்லை என்னுங் கொள்கை
அகலம் - ஒரு மலமுள்ள உயிர் விஞ்ஞானகலர் அகல்தல்,அகறல் -நீங்குதல்
அகலர் - கலை நீங்கியவர்.அதாவது, கடவுள். பா. விஞ்ஞானகலர், பிரளயாகலர். ஒ. சகலர்.
அகலியை - கெளதம முனிவர் மனைவி. கல்லானது இங்குக் குறிப்பிடப்படுவது.
அகவிருள் - அஞ்ஞானம், அறியாமை
அகளம் - களங்கமின்மை, எ-டு: அகளமாய் யாரும் அறிவு அரிது (திஉ1), வடிவில்லாதது.
அகறல் - நீங்குதல், எ-டு ஆங்கு அகறல் வேண்டும் குணங்களும் (இஇ 4).
அகன்பதி - மதுரை, கூடல்
அகன்பதியர்- ஆடலார், பண்பலார், பாடலார், ஒண்பலார்.
அக்கம், அக்கமணி - உருத்திராக்கம், சிவசின்னம். அக்கமகாதேவி - வீரசைவத்தை நிறுவியவர்களில் ஒருவர்.
அக்கமாலை - உருத்திராக்க மாலை, சிவசின்னம்.
அக்கரங்கள் - (பிற) எழுத்துகள்
அக்கர் - சிவன்.
அக்கரையர்-பரலோக வாசிகள்.
அக்கழல்- கண்ணின் வெற்றிப்பாடு.
அக்கிரம் - படைப்புணவு.
அக்கிரமம் - அவ்வரிசை, ஒழுங்கின்மை.
அக்கினி - நெருப்பு: பா. முத்தீ
அக்கினிகுண்டம்-ஒமகுண்டம்
அக்கிணி கோத்திரம் - நாள் தோறும் செய்யும் ஒமச்சிறப்பு
அக்கினித் தம்பன் - சிவன்.
அக்கினி புராணம்-ஆக்கினேயபுராணம்.
அக்கை - அக்காள்.
அக்யாதி - அறிவின்மை
அகாரணன் - கடவுள். பா.அகர்த்தா.
அகாரம் - அகங்காரத்தைக்குறிக்கும் அகரம்.
அகிதம் - தீவினை, மறம். எ.டு. இவன் உலகில் இதம் = அகிதம் செய்த எல்லாம் (சிசிசு 304) ஒ. இதம்.
அகிலம் - உலகம்.
அகோர சிவபத்தி - ஆகமப் பிழிவு. சிவாசாரியார்கள் இயற்றியது. 15 ஆம் நூற் றாண்டில் தோன்றியதும் ஒ. சிவகுரு பத்ததி. அகோர சிவாசாரியார் - 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவசித்தாந்தி, வடமொழியில் நூல்கள் எழுதியவர்.
அகோரம் - இதயம், நெஞ்சம், சிவன் முகத்தில் ஒன்று. ஒரு சைவ மந்திரம்.
அகோரன் - சிவன்.
அங்கண் - அவ்விடம் அங்கதம் - 1) ஒருவகை அணிகலன் 2) வசைப்பாட்டு.
அங்கம் - உறுப்பு, தலைக்குறை.
அங்கம் ஆறு - 1) படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், 2) வேதப் பொருளை அறிதற் குரிய கருவிகள்: நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சாந்தம்.
அங்கம் ஐந்து - திதி, வாரம்,விண்மீன், யோகம், கரணம்.
அங்கம் நான்கு - தேர், கரி, பரி,காலாள்.
அங்கநியாசம் -ஒருவழிபாட்டுச் செயல். கைகால் முதலிய உட லுறுப்புகளைத் துய்மை படுத்தித் தெய்வத் தன்மை பெறுதல்.
அங்கநூல் -வேதாங்க நூல்.
அங்கலிங்கம் - வீரசைவர்கள் தங்கள் உடலில் அணியும் இலிங்கம்.
அங்காரகன் - செவ்வாய். 9 கோள்களில் ஒன்று.
அங்கி -நெருப்பு,உறுப்புடையது, சட்டை அங்கித்தம்பன் வடிவான சிவன்.
அங்கித்தம்பனை -தீச்சூட்டைத் தடுத்தல் அல்லது தனதாக்குதல், இவ்வாறு செய்பவர் அதில் மூழ்கி இருந்தாலும் அவர் சூட்டை உணரார். இது ஒரு சித்தியே ஒ. வாயுத்தம்பனை.
அங்கு - சங்காரக் கடவுள்.
அங்குசம் அங்குசம் - யானைத் தோட்டி
அங்குரம்-முளை தளிர்
அங்குலி-புருவநடு எ.டு அங்குலி தானே அருந்திடில் உடல் கண் (சநி 4).
அங்குளி - விரல்.
அசத்தர் - உலகாயதர், பெளத்தர் முதலியோர்.
அசத்தன்-கேவலநிலை ஆன்மா.
அசத்தின்மை - உள்பொருள். ஒ. சத்து.
அசத்து - முக்காலத்தும் ஒரே தன்மையாய் இராத பொருள். எ-டு உணருரு அசத்தெனின் உணராதின்மையின் (சிபோ பா 6). அறிவு அறிந்தது எல்லாம் அசத்து ஆகும். (வி வெ5) ஒ. சத்து.
அசம்பவம் - அல்நிகழ்வு.
அசம்பாவிதம் - இயலாத ஒன்று. எ-டு. ஓர் உடலில் ஐந்து ஆன்மாக்கள் உள்ளன.என்னும் பொருந்தாக்கூற்று.
அசலம், அசலலிங்கம் - நிலைத்துள்ள இலிங்கம்.
அசலன் - இறைவன் எ-டு அசலன் ஆகி (சநி3).
அசற்காரிய வாதம் - இல்லாதது தோன்றும் என்னும் கொள்கை இக்கொள்கையுள்ளவன் அசற்காரிய வாதி.ஒ.சற்காரிய வாதம்.
அச்சம் - பயம்.
அச்சயன், அச்சன் - முழு முதல் கடவுள்.
அச்சு - மெய்ப்பொருளாகிய சிவம். எ-டு அச்சு மாறாது இங்கு என்னில் (சிசிசு 131).
அச்சுமாறல்-இதுகன்மபலனால் ஏற்படுவது. இதற்குப் பின் வருவோர் எடுத்துக் காட்டுகள். 1.கெளதமமுனிவர் இட்டசாபத் தால் அகலியைக் கல்லானாள். 2.பிருகு முனிவர் இட்ட சாபத்தால் மச்சம் முதலியனவாகப் பத்து வகைத் தோற்றத்திலும் அச்சு அழிந்து மாறினான்அரி 3.சிலந்தியானது பகலவன் குலத்தில் தோன்றிப் பார் எல்லாம் ஆளும்படி முதல்வன் அருளால்ஒப்பிலாஅரசனாகியது. 4.எலியோ நிலவுலகின் நீடு உலகம் போற்ற, முதல்வன் அருளால் மகாபலி அரசனாக அச்சு அழிந்து மாறியது. (சிசிசு 134).
அசாதாரண - பொதுவில்லாத, சிறப்புள்ள ஒ. சாதாரண. அசாதாரண இலக்கணம் தன்னியல்பு .
அசித்தம் - ஏதுப்போலியில் ஒன்று. உபய அசித்தம், அன்னி யதர அசித்தம், சித்த அசித்தம், ஆசிரிய அசித்தம் என நான்கு வகை.
அசித்து -அறிவில்லாதது. ஒ. சித்து. எ-டு. உணருரு அசத்தெனின் உணராதின்மையின் (சிபோ பா 6).
அசிதம்-28 ஆகமங்களில் ஒன்று.
அசிதை - சிவ சத்திபேதங்களில் ஒன்று.
அசிந்தன் - 1. அசிந்திதன் அறிவிற்கு அப்பாற்பட்ட கடவுள். எடு அருள்உரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் அன்றே (சிசிசு 67) 2. சிந்திக்காதவன்.
அசிபதம் - ஆனாய் என்னும் பொருள் உள்ள சொல். அதாவது, வாக்கியத்தின் மூன்றாம் பதம். எ-டு.ஆரணங்கள் தருதத்துவம் அசிப தங்களின் பொருள் அறிந்திடாய் (சிசிபப 252).
அசீவன் - உயிரற்றது புத்தகலம், தாரகன் தர்மம், அதர்மம், காலம், ஆகாயம்
என்னும் 5 பொருட்கள் கொண்டது.
அசுசி- சுத்தமின்மை .
அசுத்தம் - சுத்தமின்மை , அழுக் குடைமை. எ-டு வைத்த மாயம் உறு சித்து அசுத்தம். உற (சிசிபப 250)
அசுத்த தத்துவம் - தூய்மை நீங்கிய மெய்ந்நெறி, மாயை காலம் நியதி, கலை, வித்தை , அராகம், புருடன் என்னும் ஏழு. ஒ. சுத்த தத்துவம்.
அசுத்த மாயை- மாயை இரண்டில் ஒன்று, மற்றொன்று சுத்தமாயை, மும்மலத்துள் ஒன்று. இதிலிருந்து அசுத்த கால முதல் அசுத்த நிலம் முடிபாக 31 தத்துவங்களும் தோன்றும்.
அசுர், அசுரர்- இராக்கதர் அரக்கர். ஒ. சுரர்.
அசுவத்தாமன்- 7 சிரஞ்சீவியரில் ஒருவர்
அசுவினிதேவர் -தத்திரன்,நாதத்தியன் என இருவர்.
அசேதனம் - பருப்பொருள் உலகம். பா. உலகம் ஓ.சேதனப் பிரபஞ்சம்.
அசோகு - அசோக மரம், ஒ.போதி
அஞ்சின் அடைவு - சிவன்,அருள், ஆவி, திரோதம், மலம் ஆகிய ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாகும் (உவி 42),
அஞ்சி அன்று அரிதான் ஓட- சூரபதுமனுக்கு அஞ்சித் திருமால் திருப்பாற்கடலை நீங்கி ஓடி அயனிடம் முறையிட, அயனும் முருகனை உண்டாக்கி, அவ்வசுரனை அழித்தார்.தாரகன் என்பவன் ஓர் அசுரன்.அவனுக்குத் திருமால் முதலிய தேவர் எல்லாம் அஞ்சி ஓடி அயனிடம் முறையிட்டனர்.அப்போது காளியின் மூலம் அவனை அயன் அழைத்தார்.திரிபோரத்து அசுரருக்கு அஞ்சித் திருமால் முதலிய தேவர்கள் அயனிடம் முறையிடத் திரிபுரத்தை அவர் எரித்தார். சலந்திரன் என்பவனும் ஓர் அசுரன்.அவன் திருமாலைத் திருபாற்கடலில் பள்ளி கொள்ளவொட்டாமல் தடுத்தான்.திருமால் அவனுக்கு அஞ்சி முறையிட,அயன் அவன் உடலைப் பிளந்து அரியைக் காப்பாற்றினார்.(சிசிபப292).
அஞ்சு-ஐந்து
அஞ்சு அவத்தை-ஐந்து அவத்தை உடலினுள் ஆன்மா அல்லது உயிர் நுகரும் ஐந்து நிலையுள்ள பாடுசாக்கிரம் ,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாகீதம் என ஐந்து வகையான காரிய அவத்தை.
அஞ்சு அவத்தைக் காரணிகள்-புலன் 10 வளி 10
அஞ்சுமான்-28 ஆகமங்களுள் ஒன்று
அஞ்செழுத்து-திரு ஐந்தெழுத்து.எ.டு சிவாய நம, நமச்சிவாய சைவ சித்தாத்தின் கரு.சி-சிவம் வ-அருள் ய-உயிர் ந-மறைப்பாற்றல் ம-மலம்
அஞ்செழுத்தின் பெருமை-அஞ்சு(5)எழுத்தே ஆகமம்(28) அதுவே அண்ணல் திருமறை (4).அதுவே ஆதிபுராணம் அதுவே ஆனந்த தாண்டவம்.ஆறாறுக்கு அப்பால் அதுவே மோனந்த மாமுத்தி(உவி45) அஞ்செழுத்துத் தாண்டவம் - ஐந்து எழுத்து நடனம் அல்லது கூத்து. இது தத்துவ நடனம்; ஊன நடனம், ஞான நடனம், ஆனந்த நடனம் என மூவகை இதனை நிகழ்த்துபவர் கூத்த பெருமானா கிய சிவன். இதனை உண்மை விளக்கம் 9 பாடல் களில் (31-39) விரிவாக விளக்குகிறது. அதன் சாறம் பின்வருமாறு:
1) நல்ல தவம் செய்தோர் காணு தற்கு ஏற்றவாறு, நாத அந்த முடிவிலே அஞ்செழுத்தே திருமேனி யாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (31)
2) எட்டும் இரண்டும் உருவான ஆன்மாவிலே, சிவன் சிவாய நம என்னும் திருவெழுத்து அஞ்சாலே,ஆன்மாக்களின் பிறவியற ஆடுவான் (32)
3) உன்னுதற்கரிய தன் திருவடியிலே நகாரமா கவும் கூடும் திருவுந்தியிலே மகாரமாகவும் திருத்தோனிலே சிகாரமாகவும் திருமுகத்திலே வகாரமாகவும் திருமுடியிலே யகாரமாகவும் ஆகஇம் முறையில் நமசிவாய என்னும் அஞ்செழுத்தே திரு மேனியாகக் கொண்டு ஐயன் ஆடுவான் (33)
4) டமருகம் ஏந்திய திரு அந்தத் திலே சிகாரமாகவும் ஆர்க்கும் திரு அந்தத்திலே யகாரமாக வும், தீ ஏந்திய திரு அந்தத் திலே நகாரமாகவும், முயல கனை மிதித்த அடியிலே மகார மாகவும் ஆக இம்முறையில் அஞ்செழுத்தே திருமேனியாகக் கொண்டு அம்மை அப்பன் ஆடுவான் (34).
5) ஓம் நல்ல திருவாசியாகவும், அதைவிட்டு நீங்காத அஞ்செழுத்து உள்ளொளியாகவும் இருப்பதைச் செருக்கற்றவர் அறிவர். எழில்மிகு திருவ்ம் பலத்தில் எம்பெருமான் ஆடுவதைக் கண்டவர் இறப்பு பிறப்பு அற்றவராவார் (35).
6) டமருகம் ஏந்திய திரு அந்தத்திலே படைப்பாகவும் தோயும் திரு அந்தத்திலே ஆன்மா காப்பாகவும், தீ ஏந்திய திரு அந்தத்திலே மலமழிப்பாகவும், உறுதியாய் ஊன்றிய திருவடி யிலே உலகை மறைக்கும் திரோதனமாகவும், தூக்கிய திருவடியிலே அருள் முத்தியாகவும், ஆக இம்முறையில் முத்தி பஞ்சகிருத்தியமே திருக்கூத் தாக அமையும் (36).
7) டமருகம் ஏந்திய திரு அந்தத்தி னாலே மாயையை நீக்கி, தீ ஏந்திய அந்தத்தாலே வல் வினையைச் சுட்டு ஊன்றிய திருவடியினாலே அருளே உலகமாக நிறுத்தி, அன்பால் இன்பக் கடலில் ஆன்மாவை ஐயன் அழுத்துவன். இதுவே அவன் திருக்கூத்துமுறை.
8) பேசா ஞானிகள் திருவருளால் மும்மலத்தை நீக்கி, ஆன்ம போதம் முடிகின்ற இடத்திலே தோன்றுகிற இன்ப வெள்ளத்திலே திளைத்து மகிழ்வார்கள். ஆன்மாக்களைக் காக்க வேண்டும் என்னும், இவ்வன்பையே திருமேனியாகக் கொண்டு திரு அம்பலத்தே ஐயன் ஆடுவான் (38).
9) ஒப்பற்ற இறைவன் அஞ்செழுத்து மிகுந்த அன்பே திரு மேனியாகக் கொண்டு பரையே திருவம்பலமாகிய இடமாக நின்று, பாதி வரைமகள் காணும் படி அன்பினாலே திருமேனி
கொண்டு எழுந்தருளி ஐயன் ஆடியருளுவான். இந்த ஆடலை விரும்பிப் பார்ப்பவர்க்கு மறுபிறவி இல்லை.(39)
அஞ்செழுத்துவகை - செவிக்குப் புலப்படும் வகையில் இது ஐந்து வகை. 1. பருமை - நமசிவாய 2. நுண்மை - சிவயநம 3. காரணம்-சிவயவசி 4. மாக்காரணம் - சிவசிவ 5. மாமந்திரம் - சி
அடங்கி - ஒடுங்கி
அடங்குதல் - உள்ளமைதல்
அட்சதை - மங்கல அரிசி
அட்சமணி - உருத்திராக்கமாலை
அட்டஇலக்குமி-தன இலக்குமி, தானிய இலக்குமி, தைரிய இலக்குமி, வீர இலக்குமி, வித்யா இலக்குமி, கீர்த்தி இலக்குமி, விசய இலக்குமி, இராச இலக்குமி என எட்டு.
அட்ட கணபதி - அதிகணபதி, மாகணபதி, நடன கணபதி, சத்தி கணபதி, வாலை கணபதி,உச்சிட்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி என எட்டு.
அட்ட கர்மம் - எண் வினை; ஆகருடணம், உச்சாடனம், தம்பனம், பேதனம், மாரணம், மோகனம், வத்து வேடணம், வசியம்.
அட்ட குணமுத்தி - என் குண வீடுபேறு. எட்டுத்தீய குணங் களை நீக்கி, எட்டு நல்ல குணங்களைக் கொள்ளுதல்.பா.முத்தி
அட்ட பந்தனம் - சுக்கான்கல்,கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நாற்காவி ஆகிய எட்டுப் பொருள்களின் கூட்டு, சில விக்ரகங்கள் அசைவன்றி இருக்கச் சாத்தப்படுவது எ-டு அட்டபந்தன கும்பாபிடேகம்
அட்டபுட்பம்-எட்டுப்பூக்கள். அவையாவன: கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.
அட்டமா சித்திகள் - எட்டுச் சித்திகள்: அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம். அட்ட மூர்த்தம் - சிவன் வடிவம் எட்டு: புவி, நீர், தேயு, ஆகாயம், தீ, கதிரவன், திங்கள், ஆன்மா.
அட்டவசுக்கள்- எட்டுத் தேவர்கள். அனலன், அனிலன், ஆபன்,சோமன்,தரன்,துருவன், பிரத்தியூடன், பிரபாசன்.
அட்ட வித்தியேசுரர் - ஈசுர தத்துவம், சுத்த தத்துவத்தில் ஒன்று. இதிலுள்ள எட்டு ஈசுரர்களாவன: அநந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி
அட்ட வீரட்ட தலங்கள் 1.திருக்கண்டியூர்-பிரமன் தலை கொய்தது. 2.திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது 3.திருஅதிகை - திரிபுரத்தை எரித்தது. 4 திருப்பறியலூர் - தக்கன் தலைகொய்தது 5.திருவிற்குடி- சலந்தராசுரனைக் கொன்றது 6.வழுவூர்(வைப்புத் தலம்)-யானையை உரித்தது. 7.திருக்குறுக்கை-காமனை எரித்தது 8. திருக்கடவூர்-எமனைஉதைத்தது.
அட்ட வீரட்டம் - கண்டியூர், கடவூர், அதிகை,வழுவூர்,பறியலூர்,கோவலூர், குறுக் கை,விற்குடி.
அட்டன் - அட்ட மூர்த்தியான சிவன்.
அட்டாங்கம்-எட்டுறுப்பு, இதில் இறுதி உறுப்பு சமாதி நிலை. இதுவே முத்தி.
அட்டாங்க நமக்காரம் - எட்டு உறுப்புவணக்கம். மோவாய், செவி இரண்டு, தலை, மேற்கை இரண்டு, கை இரண்டு, இவை நிலத்தில் பட வணங்குதல்.
அட்டாங்கயோகம்-எட்டுறுப்பு நுண்பயிற்சி. முத்தி நிலை பெறச் செய்யப்படுவது.
அடப்படுதல் - சமைக்கப்படுதல்
அடாது - கூடாது.
அடிகள் -தவசீலர். எடு இளங்கோ அடிகள், குன்றக்குடி அடிகள்.
அடிசேர் ஞானம் -பதி(இறை) அறிவு, ஆசிரியரின் அருளால் கிட்டுவது .
அடிப்பாடு - அமைவு.
அடிமை - தொண்டு செய்யும் நிலை. பா. தாச மார்க்கம்.
அடியார் - அடியவர். மெய்த் தொண்டர். இவர்கள் தொகை அடியார், தனி (பெண்) அடி யார் என இருவகையினர்.
அடியவர் சாதனம் - குரு,இலிங்கம், சங்கமம்.
அடுக்க - அண்மையாக
அடை - 1. அடைக்கலம். எ-டு அடை தரும் தனியே (சிசிசு 222) வெற்றிலை,
அடைகாய்- வெற்றிலைப்பாக்கு வழிபாட்டு முறையில் பயன்படுவது.
அடைவு-முறைமை, புகலிடம்,இலக்கணம்
அணல் - கழுத்து, மிடறு, கீழ்வாய் எ-டு சிறுபொறித் தறுகண் கறை அணல் சுடிகை (சநி 6).
அண்டசம் - அண்டம் + சம் முட்டை + பிறப்பு. முட்டையில் பிறப்பன. எ-டு பாம்பு, பல்லி, எ-டு அண்டசம் சுவேத சங்கள் (சிசிசு 179 ) நால் வகைத் தோற்றத்திலும் எழு வகைப் பிறப்பிலும் ஒன்று.
அண்டம் - வெளி, உலகம்.
அண்டர் - வாமனார்.
அண்டன் - கடவுள்.
அண்ணல் தாள் - இறைவன் திருவடி
அண்ணிடும் - நண்ணிடும் பொருந்தும்.
அணி - அழகுநலம். சைவசித் தாந்த நூல்களில் எளிய கருத்து விளக்கத்திற்காகப் பல அணிகள் பாங்குறப் பயன் படுத்தப்பட்டுள்ளன. இதன் வகையை அவ்வத் தலைப்பில் காண்க.
அணிமா - எண்வகைச் சித்திகளில் ஒன்று. மக்கள் நடுவில் இருந்து கொண்டே, அவர் தம் கண்களுக்குப்புலப்படாது இருத்தல்.
அணு - உயிர், ஆன்மா, நுண்ணுடம்பு, மாத்திரை, சாதாக்கியத்தில் அணுத்தத்துவம் சுத்தம் சாரும்.
அணு ஐந்து - ஆன்மாக்கள் ஐந்து பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆன்மா.
அணுகாரண வாதம் - பரமா ணுக்களே உலகக் காரணம் என்னும் கொள்கை.
அணு சதாசிவர் - சாதாக்காய தத்துவத்தால் இன்பம் நுகரும் ஆன்மாக்கள்.
அணு சைவம் -16 சைவ வகையில் ஒன்று.
'அணு நான்கு -நான்கு ஆன் மாக்கள். பிருதிவி, அப்பு, தேயு, வாயு.
அணுபட்சம் - புண்ணியங் காரணமாக முதற்கடவுளது தொழில்களுள் ஒரோ ஒன்றைப் பெற்று நிற்கும் கடவுளர் பகுதி அணு பட்சம் ஆகும்.முத்தொழிலின் முதன்மையையும் ஒருங் குடைய முதல்வன் அருள் காரணமாக மூவராய் நிற்கும் நிலைகள் சம்பு பட்சம் ஆகும்.
அனுபரிமாணம்-அணு அளவு. பாஞ்சராத்திரிகள் உடம்பிலே ஆன்மா அணுவாய் நிற்கும் என்பர்.
அணுப்பாகுபடு - அணு வகைப்பாடு. அணு ஐந்து, நான்கு, மூன்று என வகைப் பாடு செய்தல்.
அணு மூன்று - சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்.
அணுவதம் ஐந்து -கொல் லாமை, பொய்யாமை, களவா டாமை, காமுறாமை, பொருள் விரும்பாமை,
அணை -வரம்பு
அணை சகலன் - சகலான்மா.
அணைதல் - பற்றி நிற்றல்.
அணைந்தோர் - சீவன் முத்தர் உயிர்களிடத்துப் பரிவுடையவர்கள். குரு அருள் பெற் றவர்கள். ஞானம் நிகழ்ந்த செம்மையர்.
அணையும் - நுகரும்.
அதர்வணம் - 4 வேதங்களில் ஒன்று.
அதர்வணன் - சிவன்.
அதன்மம்-அதர்மம் ஒ. தர்மம்.
அதன்மாத்தி காயம் - பொருள்களையும் செய்யும் இயல்பு.
அத்தம் - அதை எ-டு அத்தம் ஒன்றையும் உணர்ந்திடான் (சிசி பப 153).
அத்தர் - சிவன், தேவர்.
அத்தன் - பரம்பொருள், குரு.
அத்தன்தாள் - இறைவன் (குரு) திருவடி
அத்தாணி மண்டபம் - அரச இருக்கை மண்டபம்,
அத்தன்தாள் - இறைவன் (குரு) திருவடி
அத்தால்-அது சிவ ஆற்றலுக்கு ஆகாமையால்.
அத்தான்-இறைவன். எ-டு வந்து ஒத்தான் அத்தான் மகிழ்ந்து (தி ப 33),
அத்தி - 1. அத்திப்பழம் 2.ஓர் அசுரன் 3, எலும்பு.
:அத்திதி - 'அந்தத் திதிக்கடவுள்.
அத்தியாச வாதம் - இப்பியை (சங்கை) வெள்ளி என்பது போல ஒன்றைப் பிறிதொன் றாகக் கூறும் திரிபுள்ள வழக்குரை. சங்கராசாரியரின் மூன்றுவாதங்களில் ஒன்று.
அத்தியான்மிகம் - 1, 3 கருடன் களில் ஒன்று 2. சைவாகமங் களில் ஒரு பகுதி 3 ஆன்மா பிறரால் அடையும் துயர்.
அத்தியான்மிகனை - 5 வினைகளில் ஒன்று. சிவ பூசை முதலியன செய்தல். வித்தியா கலையில் அடங்கும். சுத்தமும் அசுத்தமும் கலந்த போகங் களைத் தரும். அத்திரி - 1 ஏழு முனிவர்களில் ஒருவர் 2. தர்ம நூல் 18 இல் ஒன்று 3.பார்வதி 4இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று
அத்திரிகுப்தர் - அகத்திய கோத் திர அந்தணர், காச்மீர சைவ சாத்திரத்தில் மிக்க தேர்ச்சி பெற்றவர். கி.பி. 8 ஆம் நூற் றாண்டு.
அத்தின்-ஆற்றின்.எ டுஅத்தின் அளவறியாது (சிசி பப97),
அத்து-வழி, ஆறு. எடு அத்தின் அள வறியாது இக் கரையோர் தம்மை (சிசிபப97),
அத்துவ இலிங்கம் -' தத்துவ வடிவமான இலிங்கம்.
அத்துவா - வழி, ஆறு.
அத்துவா ஆறு- வழுவிலா வழிகள் ஆறு. வீடுபேறு அடைவதற்கும் ஆன்மவினை அடை வதற்குமுரிய வழிகள்.மந்திராத் துவா (மந்திரங்கள் 11), பதாத் துவா (பதங்கள் 81), வர்ணாத் துவா (வன்னங்கள் (51), புவ னாத்துவா (புவனங்கள் (224), தத்துவாத்துவா (தத்துவங்கள் 36) கலத்துவா (கலைகள் 64). அத்துவாக்களைப் படிப்படி யாக உயிர் விட்டுச்செல்லுதல் பாசநீக்கமாகும்.
அத்துவா சுத்தி - தீக்கை நடைபெறுங் காலத்தில் ஆசாரியன் ஆறு அத்துவாக்களிலும் சஞ்சி தமாய் இருக்கும் கன்மங்களைப் போக்குவார்.
அத்துவா சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
அத்துவா சோதனை- அத்துவா ஆய்வு, படிவழி ஆய்வு, நிரு வாணத் தீக்கையில் ஆசாரியர் மாணவனுக்கு இச்சோதனை யைச்செய்வார். அவனதுசஞ்சி தத்தைப் போக்கும் முகத்தான், அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தைத் தருவார். இதில் ஆன்மா ஐந்து கலைகளையும் கடந்து,மேலே சென்று தூய தாய் இறைவனை அடையும்.
அத்துவாதத்துவம் - இறைவன் திருமேனி அத்துவாக்களாலும் ஐந்து மந்திரங்களாலும் (மறை மொழிகள்) ஆனது. அவையாவன:
1.சொல் உலகம் : மறைமொழி - குருதி (மறைமொழிவழி), பதம் - முடி (சொல்வழி), வன்னம் - தோல் (எழுத்துவழி) 2.பொருள் உலகம் : புவனம் - மயிர் (உலக வழி), தத்துவங்கள் ஏழுதாது (பொருள் வழி)
ஐந்து மறைமொழியாவது -' தலை,முகம், இதயம் (நெஞ்சம்), மறைவிடம், திருவடி. இது முதல்வனது முழு உணர்வையும் வடிவமைப்பையும் குறிப்பது என்பது மரபு.
அத்துவா மூர்த்தி- வழிகாட்டும் இறைவன்
அத்துவித நிலை - ஒருவந்த நிலை
அத்துவிதம், அத்வைதம்-1இரு மையில் ஒருமை 2, ஏகான்ம வாதம் பா. துவிதம்
அத்துவித அதிகரணம் - சிவ ஞான போதம் 2 ஆம் நூற் பாவில் முதல் அதிகரணமான “அவையே தானே ஆய” என்பது இதில் அத்துவிதம் பற்றி விளக்கம் தரப்படுவதால்,இது அத்துவித அதிகர்ணமாகும். அத்துவிதக்கொள்கைகள்-அத்துவித விளக்கத் தொடர்பாக இவை எழுந்தவை. வகை மூன்று. 1. அபேத வாதம்: வேறன்மைக் கொள்கை. "இறைவனும் உயிர்களும் பொன்னும் பணியும் (அணிகலன்) போல ஒன்றே; வேறல்ல” என்பர் ஏகான்மவாதிகள். இதற்கு மறுப்பாக 'உடலில் உயிர் போல’ என்று மெய்கண்டார் கூறுகின்றார். 2. பேத வாதம்; வேறு என்னுங் கொள்கை “உயிரும் இருளும் ஒளியும் போல் உள்ளார்கள்” என்பர் பேதவாதிகள். உயிரும் இறைவனும் வேறுவேறு பொருள் ஆவதற்குச் சைவ சித்தாந் தத்தில் கண்ணொளியும் கதிரவன் ஒளியும் உவ மையாகக் கூறப்பெறும். 3. பேதா பேதவாதம்: வேற்றுமையில் ஒற்றுமை. “உயிரும் இறைவனும் ஒன்றுதான்; வேறுதான்” என்பர் பேதா பேதவாதிகள். பேதம், அபேதம் ஆகிய இரண்டும் வேறுபட்ட தன்மைகள். அவை ஓரிடத்து ஒருங்கு நில்லா. அவ்வாறே இறைவன் உயிர் என்னும் இரண்டிடத்தும் ஆகும். அதனால் பேதாபேதம் என்பது பொருளற்றதாகிறது. சிவஞானபோதத்தில் நூற்பா, 2, 5, 11 ஆகியவற்றால் அத்து விதம் முழுமையாக விளக்கம் பெறுகிறது.
அத்துவித சம்பந்தம் - இருமையில் ஒருமைத் தொடர்பு.அதாவது,உலகத்திற்கும் இறை வனுக்குமுள்ள தொடர்பு கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உயிர்க்கு உயிராகும் தன்மையால் உடனாயும் இருப்பது. இவை இறைவனின் மூன்று இயல்புகள். இதுவே மெய் கண்டார் கண்ட மெய்ப் பொருள். மெய் கண்டார் கூறும் இந்த அத்துவிதமே சைவ சித்தாந்த மாகும். இதனை உமாபதி சிவம் பின்வருமாறு குறிக் கின்றார்: "உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன் போலப் பொருள் தன்மையில் வேறாயும் ஆன்ம போத மும் கண்ணொளியும் போல, உயிர்க்கு உயிராதல் தன்மை யால் உடனாயும் இவ்வாறு இருபொருள் பிரிப்பின்றி உடனாய் நிற்றலாகிய அத்து விதத்தை (சைவ சித்தாந்தம்) உடையது.”
அத்துவிதி - அத்துவித நெறி முறை. எ.டு. அத்துவிதி அன்பில் தொழு (சி போ பா 78).
அத்துவைதி-ஏகான்மவாதி அத்துறைகள் கண்டு - கண் முதலிய பொறிகளை ஆன்மா வானது பற்றி, அதுவதற்குரிய உருவம் முதலிய பண்பு களைத் தெளிவாக உணர்ந்து.
அத்துர்டு - அப் பூதாசாரம் முதலிய உடம்பின் ஊடாக,
அத்தை - தலைவி, உமையவள்,அதை
அந்தம் - முடிவு. அந்தர் - வானவர். அந்தர் அனைவரும் கூடி, 2. குருடர், மூடர்.
அதிகம்- மிகுதி. ஒ. குறைவு. எ-டு குறைவு அதிகங்கள் தத்தம் (சிசி சுப. 232).
அதிகரணம்- இது கூறு அல்லது நிலைக்களம் என்று பொருள்படும். இதிலுள்ள 5 உறுப்புகள்: 1. கூறப்படும் பொருள் 2. அப்பொருளின் கண் ஐயப்பாடு, 3. ஐயப்பாட்டின் கண் பிறர் கூறும் பக்கம் 4. பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிவு 5.துணிவுக்கு எடுத்துக்காட்டும் இயைபு. இந்த ஐந்தின் நிலைக்களம் இது.
மேற்கோள் - கூறப்படும் பொருள். ஐயப்பாடும் பிறர் கூறும் பக்கமும் இதில் அடங்கும்.
ஏது : பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத்துணிவு
எடுத்துக்காட்டு: இயைபு, சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் அதிகரணங்கள் கொண்டது.
அதிகாரம் - 1. நூற்பிரிவு. எ-டு சிவஞான போதம் பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்னும் இரு அதிகாரங்களைக் கொண்டது. 2. அறிவு குறைந்து செயல் அதிகமுள்ள இறைநிலை, எ-டு ஆக்கிடும் அதிகாரத்திற்கு (சிசிசுப43) 3. தலைப்பாடு 4 ஆட்டல்
அதிகார அவத்தை - உலகைப்படைக்கும் நிலை
அதிகாரதத்துவம்- வினை அதிகமுள்ள ஈசுவரத் தத்துவம்.
அதிகார மலம் - உலக அதிகாரத்தை விரும்பும் ஆன்ம நாட்டம்.
அதிகார முத்தி - அதிகார சிவத்தைக் கொண்ட முத்தி உடல் பற்றை விடுதலாகும் வேறு பெயர் நின்மல சொப்பனம். சகலவகை ஆன்மாக்களுக்கும் அதிகார சிவம் இதுவே. சிவஞான போதம் நூற்பா 8 இல் “தம் முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு” என்பது இதனை உணர்த்தும்.
அதிகாரி - 1. தலைவன். எ-டு நூலுக்கு அதிகாரி. 2. கேட்கப் பதருவமுடையவன். 3. தொடர் புடையோன்
அதிசயம் - அற்புதம், புதுமை, எ-டு இறைவன் திருவிளையாடல்.
அதிசய மாலை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.
அதிசூக்கும தேகம் - பூதம், புலன், அறிவுப்பொறி, தொழிற்பொறி, அகக்கருவி, குணம், மூலப்பகுதி, கலாதி என்பவற்றால் ஒவ்வொன்று கொண்ட நுண்ணுடம்பு.
அதிசூக்கும பஞ்சாக்கரம் - பஞ்சாக்கரம் 4இல் ஒன்று.
அதி சூக்குமை - 1. சிவசத்தி பேதங்களுள் ஒன்று. உவர மிக நுண்மை.
அதி சூக்கும பஞ்சாக்கரம் - பஞ்சாக்கரம் 4 இல் ஒன்று.
அதிட்டானம் - பொது, சிறப்பு என இஃது இருவகை. இவ்விரண்டில் ஞான குருவல்லாத ஏனைய உயிர்களிடத்து மறைந்து வேறாய் நிற்பது பொது அதிட்டானம். ஞான குருவிடத்து அவர் தமக்கு விளங்கி ஒன்றாயும் பொருளின் தன்மையால் வேறாயும் நிற்றல் சிறப்பு அதிட் டானம். இவ்விரண்டிற்கும் பாலில் நெய் வேறாக மறைந் திருப்பதே உவமை.
அதிட்டித்தல் - கர்த்தா ஒன்றின் இடமாக நிற்றல்.
அதிட்டிக்கப்படுதல் - நிலைக்களமாகக் கொண்டு செலுத்தப் படுதல்.
அதி தீவிரம் - மிக்க தீவிரம்.
அதி தெய்வங்கள் - மேலான தெய்வங்கள். சதாசிவன் (நாதம்), மகேசுரன் (விந்து), உருத்திரன் (மகரம்), திருமால் (உகரம்), அயன் (அகரம்).
அதிதேவர்கள் - அக்கரங்கட்கு உரியவர். அவைகள் அவற்றைச் செலுத்த, அக்கரங்கள் அகக் கருவிகளைச் செலுத்தும்.
அதீதம்- கடாந்தது, மேற்பட்டது. புருடன் மட்டுமே நிற்க. ஏனைய எல்லாக் கருவிகளும் ஒடுங்கும் நிலை. வேறு பெயர் துரியாதீதம், உயிர்ப்படங்கள்.
அதிபத்த நாயனார் - பரதவர். நாகை சோழநாடு. தான் பிடிக்கும் மீன்களில் தலை மீனைச் சிவனுக்கு விட்டவர். இலிங்க வழிபாடு (63).
அதிபரிபக்குவம் - மிகுந்த பரிபக்குவம்.
அதிமார்க்கம் - தொன்மை நெறி. ஆகமமும் வேதமும் சைவாகமப் பிரிவினுள் ஒன்று.
அதிமார்க்க வினை - யோகஞ் செய்தல். சாந்தி கலையில் அடங்கும், சுத்தமும் அசுத்தமும் கலந்த போகங்களைத் தரும்.
அதிமார்க்கிக சாத்திரம் - பாசு பதம், காபாலிகம், மாவிரதம் என்னும் நெறிகளைக் கூறும் நூல்கள்.
அதிராவடிகள்- 11 ஆம் திருமுறையில் மூத்த பிள்ளையார். திரு மும்மணிக் கோவை பாடியவர்.
அதிவாசநம் - சுவாமியை விக்கிரகத்தால் வருவித்துப் பிரதிட்டை செய்தல்.
அதீதா அவத்தை - துரியாத்தம் அவத்தை வகையில் ஒன்று.
அதீதை - 5 கலைகளில் ஒன்று.
அது - ஒன்று, சிவம், அப்போது, சுத்த அவத்தை.
அது அதுதன்- சார்ந்த வண்ணம்.
அது அதுவாய் நின்றறிதல் - சார்ந்தன் வண்ணமாய் நின்றறிதல்.
அது இது - அதுவும் இதுவும் என்னும் பேத நிலை.
அதோ நியமிகா சத்தி - ஆணவ ஆற்றல் இரண்டில் ஒன்று. கீழ்ப்படுத்துவது. பொருள்களின் இயல்பை தவறாக உணரச் செய்வது. அதாவது, உணர்வை மறைப்பது. ஒ. ஆவாரக சத்தி.
அதோ மாயை - கீழே உள்ள மாயை
அதோமுகம் - சிற்சத்தின்ய உணர்த்துவது. முருகனுக்குச் சிவன் அளித்த ஆறாவது முகம்.
அநர்த்தம் - கேடு.
அந(ன)ன்னுவயம் - இயை பின்மை.
அந்தகர் - குருடர்.
அந்தகன்- குருடன், எமன்.
அந்தக்கரணம் - உட்கருவி. மனம், புத்தி, சித்தம், அகங் காரம்.
அந்தக் கரணம், உள் - காலம், நியதி, கலை, வித்தை, அராகம். வேறுபெயர் பஞ்ச கஞ்சுகம் - ஐந்து சட்டை அந்தக் கரணான்மாவாதம் - அந்தக் கரணங்களே ஆன்மா என்னும் கொள்கை. இக்கொள்கையினர் அந்தக் கரணான்மாவாதி
அந்தகாரம் - இருள்
அந்தணர் - அறவோர். உயிரிடம் செந்தான்மை பூண்டு ஒழுகு பவர்.
அந்தணர் தொழில்- ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஈவித்தல்
அந்தபுரம் - அரசி உறைவிடம்
அந்தம் - முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திநி பாதம்.
அந்தரம் - வானம்.
அந்தம் - முடிந்த முடிபு நெறி முறை. இறைவன். சித்தாந்தம் வேதாந்தம், நான்காம் சத்திரி பாதம்.
அந்ததர - சித்தாந்த மாணவனே
அந்ததரம் - 1. பெரும்பெயர். சைவசித்தாந்த மகாவாக்கியம் சித்தாந்தத்தில் அதன் பொரு ளைச் சுருக்கமாகக் கூறல், 2. சித்தம் 3. தீவிரதரத்தில் தீவிர தரமான சத்திநிபாதம்.
அந்தர சைவம் - சைவ பேதம்.
அந்தரர் - தேவர்.
அந்தராத்மா - கடவுள்.
அந்தரி - பார்வதி.
அந்தரியாகம்- உட்பூசை மான பூசை.
அந்தரியாமி - உயிருள் உயிராய் இருந்து இயங்கும் இறைவன்.
அந்திநிறம் - செக்கர் வானம் போன்ற சிவப்புத்திருமேனி.
அந்திய சைவர் - சிவ தீக்கை பெற்றவர்.
அந்நிய பாவனை - அந்துவித பாவனை.
அநந்தியம்- வேறாகாமை.
அந்நிய சாதி- வேற்றுச்சாதி,
அந்நியம்- வேற்றுமை.
அந்நியமின்மை - ஆன்மாவுக்கும் முதல்வனுக்குமுள்ள தொடர்பு அத்துவிதத் தொடர்பு
அந்நியர் - வேற்றவர்.
அந்நியோர் ரியாஸ்ரயம்- ஒன்றினை மற்றொன்று பற்றுதல்.
அநாதி - தொன்மை, கடவுள், ஆதி.
அநாதி சித்தன் - அநாதியே உள்ளவன்.
அநாதி சைவம் - சைவம் 16 இல்1.
அநாதி நித்தம் - அநாதியாய் இருக்கும் நித்தியம்
அநாதி பந்தம் - அநாதியாய் உள்ள பாசக் கட்டு.
அநாதிபெத்தசித்து- அநாதியே ஆணவ மலத்திலே கட்டுண்டு கிடக்கும் ஆன்மா.
அநாதி போதம் - இயல்பாகவே அறிவுடைமை.
அநாதி மல முத்தர் - இயல் பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர்
அநாதிமுத்தத்துவம்- இறைவன் குணங்களில் ஒன்று.அது இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியிருக்கும் தன்மை.
அநாதை - சிவசத்திபேதம்.
அநான்ம வாதி - ஆன்மா என்று ஒரு பொருள் இல்லை என்று கூறுபவன்.
அநித்தம்- நிலையாமை.
அநிந்தியானந்தம்- சிற்றின்பம். அநியமம்-ஒழுங்கின்மை, எ-டு: அடர்ச்சி மிகும் கெளரவம் அநியமம் இவை அடைவே (சிபி 42).
அநியத போக்கியம் - முதலில் நல்லதாகக் கருதப்பட்டுப் பின் அல்லாதென என்று தள்ளப்பட்ட கர்ம பலன்.
அநிர்வசனம், அநிர்வசனியம் - இன்னது என்று திட்டவட்டமாகக் கூற இயலாத பொருள். எ-டு பதிப்பொருள் அநிர்வசனமன்று. சிவமே மாயை அதிர்வசனம் என்பது சங்கரர் கொள்கை.
அந்நுவயம்-அன்வயம் இயைபு. எ-டு புகையால் அனல் உண்டு. அடுக்கனைபோல் என்று கூறுதல். (சிசி பப 17).
அநு(னு)க்கிரகம் - 1. தெய்வ அருள் 2. சிவனின் 5 கிருத்தி யங்களில் ஒன்று. பசுவாகிய ஆன்மாவில் மலம் நீங்கிச் சிவ தத்துவம் வருவித்தல் அது.
அநு(னு)கூலம் - இணக்கம்,நன்மை.
அநுணு)பவம் - பட்டறிவு
அநு(ணு)பூதி - 1. தானே கண் டறிவது; பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு. அதுணு)லப்தி-இல்லை என்றுஅறியும் முடிவு.
அநு(னு)வாதம் - முன் கூறிய தைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல்.
அநேகசுரவாதம் - உலகிற்குக் கர்த்தாவாகிய சங்ககாரக் கட வுள் பல என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் அநேகசுரவாதி.
அநேகம் - பல, வேறு.
அநேகன் - 1. கடவுள். பலவாய் இருப்பவன். எ-டு. ஏகனும் ஆகி அநேகனும் ஆனவன் (திஉ 5) 2 ஆன்மா.
அநேகாந்த வாதம் - அருமத வாதம் ஒரு முடிவைக் கூறாமல் பல முடிவுகளைக் கூறுதல். அநேக அந்தம் பல முடிவு. இம்முடிவைக் கூறுபவர் அநேகாந்தவாதி.
அந்நெறி-அப்பெத்தி நிலை எடு அவனே தானே ஆகிய அந்நெறி ( சிபோபா 10).
அநேகாந்தவாதி-அநேகாந்தக் கொள் கையுடைய வன். அதாவது, அருகனே கடவுள் என்பவர்.
அபகரித்தல் - கவர்தல்.
அபக்குவம் - பக்குவமின்மை.
அபரசாதி-குறைவு உடையவைகளிலே தோன்றுவது.
அபரஞானம் - பசு ஞானம்,பாச ஞானம் ஒ. பதி ஞானம்.
அபர முத்தி - பரமுத்தி, சுத்த தத்துவங்களில் பெறும் வாழ்வு
அபயம் - அருள்.
அபய முத்திரை - அபயமளித் தலைக் காட்டும் கைக்குறி.
அபவர்க்கம் - முத்தி,
அப்பன் - இறைவன், தந்தை.
அப்பர் - இயற்பெயர் மருள் நீக்கியார். இறைவன் தந்த பெயர் திருநாவுக்கரசர். வட மொழியில் வாகீசர் என்பர். வேளாளர். திருவாரூர் - சோழ நாடு சிறப்புப் பெயர் தாண்டக வேந்தர். உழவாரப் படையாளி. முதலில் பாடிய பதிகம் “கூற் றாயினவாறு" படி,ஞானத்தில் சரியை, நெறி, அடிமை நெறி,முத்திநிலை சாலோகம் பாடிய பதிகத் தொகை 49,000 இன் றுள்ள பாடல்கள் 3066 (63), திருமுறை 4-6, இறுதியாகப் பாடியது. "எண்ணுகேன் என் சொல்லி, முத்தியடைந்த அகவை 81 காலம் கி.பி. 6-7 நூற்றாண்டுகள்.
அப்பா - மகனே, அப்பனே.
அப்பிரகாசம் - எதனாலும் அறி யப்படாதது, அசித்து, சூனியம் காட்சிக்குப்புலனாகாதது. எ-டு முயற்கோடு, ஆகாயத்தாமரை ஒ. பிரகாசம்.
அப்பிரசித்தம்-விளக்கமின்மை, ஒ. பிரசித்தம்
அப்பிரமேயம் - அளவையால் அளக்கப்படாதது.
அப்பு-சிவம், நீர் ஐம்பூதங்களில் ஒன்று.
அப்பூதியடிகள் - மறையவர். திங்களுர் - சோழநாடு நாவுக் கரசர் பேரில் தண்ணிர்ப் பந்தல் அமைத்துத் தொண்டு செய்தவர். குருவழிபாடு.(6.3) அப்பைய தீட்சதர் - கி.பி. 16 ஆம் நூற்றாண்டு. பூரீகண்டா பாஷ்யத்திற்குச் சிவார்க்க மணி தீவிகை என்னும் அரிய உரைநூல் எழுதியவர்.
அப்ஜம் - நீர்
அபாவஅளவை-ஒரு பொருள் இல்லாமை பற்றிக் கூறும் பிரமாணம்
அபாவத்தே-இல்லாத இடத்து
அபாவம் - 1. இன்மை, எ-டு அருஞ்செயலின் அபாவத்தே (சிசி பப 205) 2. அளவை 8 இல் ஒன்று.
அபானன்-10 வளிகளில் ஒன்று.
அபிடேகம் - சமய விசேட நிருவாணம் பொருந்திய திரு முழுக்கு என்னும் நான்கு வகைத் தீட்சை.
அபிடேகப் பொருள்கள் - இங்குக் கொடுக்கப்பட்டிருப் பவை நிறை நிலவு நாட்களில் ஒவ்வொரு திங்களும் பயன்படுத் தப்பட வேண்டியவை 1. மருக் கொழுந்து சித்திரை 2.சந்தனம் வைகாசி3 முக்கனி ஆனி 4ஆவின் பால்-ஆடி 5.சர்க்கரைஆவணி 6. அதிரசம் - புரட்டாசி 7 அன் னம் - ஐப்பசி 8 தீபம் கார்த் திகை 9.பசு நெய் மார்கழி 10, கருப்பஞ்சாறு - தை 11. கம் பளம், இளவெந்நீர் மாசி 12 பசுந்தயிர் பங்குனி
அபிநவகுப்தர்- காச்மீர சைவத்தை நிறுவியவர். கி.பி. 8 ஆம் நூற்றாண்டு.
அபிமுக மாத்திரை - சந்நிதி மாத்திரை.
அபுத்தி பூருவம் -அறியப்படாதது.
அபூர்வம்-அரும்பொருள். எடு அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வம் எனும் அது தோன்றித் (சிசிபப 205).
அபேதம் - வேறில்லாத நிலை. அபேதசித்தாந்தம்-ஆன்மாவும் சிவமும் ஒன்று என வாதிக் கும் மாய வாதக்கோட்பாடு.
அபேத வாதம் - பா. அத்துவிதக்கொள்கை
அபேதவாதி-'அத்துவைதி
அபேதிகள் - மாயாவாதிகளான அபேதவாதக்கொள்கை யினர். சீவான்மாவும் பரமான் மாவும் ஒன்றெனக் கூறும் கொள்கை. அமண்
அமையாமை
அமண், அமணம்-சமணமதம்.
அமணர் - சமணர்.
அமரர் கோன், பதி-இந்திரன்.
அமர்நீதி நாயனார் - வணிகர், பழையாறை - சோழநாடு, சிவனடியார்க்குத் திருவமுது செய்வித்துக்கோவணம் முதலியன அளித்து வந்தவர். சங்கம வழிபாடு.(6.3)
அமனன் - இறைவன்.
அம்பலத்தான் - கூத்த பெருமான். எ-டுநல் அம்பலத்தான் ஐயனே.
அம்பலம் - 1. அவை, தில்லை 2, கருவுயிர் நெஞ்சத்தாமரை
அம்பலவாண தேசிகர் - பண்டாரசாத்திர ஆசிரியர். இவர் இயற்றிய 10 நூல்க்ள் 1. தச காரியம் 2 சன்மார்க்க சித்தி யார் 3. சிவாச்சிரமத் தெளிவு 4. சித்தாந்தப் பஃறொடை 5. சித்தாந்த சிகாமணி 6. உபாய நிட்டை வெண்பா 7. உபதேசவெண்பா 8. நிட்டை விளக்கம் 9. அதிசய மாலை 10. நமச்சிவாயம்.
அம்பிகை - அம்மை.
அம்பிகை ஆட்சித்தலங்கள் - 1. காஞ்சியில் காமாட்சி 2. மதுரையில் மீனாட்சி 3. காசியில் விசாலாட்சி 4. நாகையில் நீலாய தாட்சி.
அம்பிகை பாகன் - சிவன்.
அம்புலி - திங்கள்.
அம்ம - கேள் எ-டு மொழிந்தனை அம்ம (இஇ 4).
அம்மை - உமையவள்.
அம்மை அப்பர் - உமையவளும் சிவனுமாகிய உமாபதி.
அமிர்தம் - அமிழ்தம், அமுது.
அமுது - சோறு, அன்னம். பா. மஞ்சனம்.எ-டு அமுது செய்க.
அமுதுபடி - ஆலயங்களுக்கு அளிக்கும் அரிசி.
அமுர்த்தன் - திரிபின்றி இருப்பவனான இறைவன்.
அமுர்த்தி - சாதாக்கியம் 5 இல் ஒன்று. தழல் பிழம்பான சிவ வடிவம்.
அமைச்சு - அமைச்சர், 6 உறுப்புகளில் ஒன்று.
அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சரோடு கூடி நிற்பவன் அரசன் , அதுபோல, அகக் கருவிகளோடு ஆன்மா கூடி நின்று, அஞ்சவத்தைப்படும். அதாவது, அரசன் உலாச் செல்லும் போது, அமைச்சர், படைத்தலைவர் முதலிய பலரும் சூழச் செல்லினும், உலாச் சென்று திரும்பிய பின், அரண்மனையுள் புகும்பொழுது, அவரவரை அவரவர் நிற்றற்குரிய இடங்களில் நிறுத்திவிட்டுக் கடைசியில் ஒரு காவலனை மட்டும் அந்தப்புர வாயிலில் நிறுத்தி, அப்புரத்தில் தான் மட்டும் செல்வான். அது போல, ஆன்மாவும் சாக்கிர அவத்தையில் நிற்கும்பொழுது, அனைத்துக் கருவிகளோடு கூடி, அனைத்தையும் அறிந்து செயல் புரிகின்றது. பின்னர், ஒய்வு கொள்ளும்பொழுது, அக்கருவிகளை அவ்வவற்றுக் குரிய இடங்களிலேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியே ஒய்வு பெறுதற்குரிய இடத்திலே சென்று ஒய்வு பெறும். “அமைச்சரசு ஏய்ப்பநின்று அஞ்சவத்தைத்தே' (சிபோ நூற்பா 4)
அமைதல் - அறிதல், இருத்தல்.
அமையாமை- நிறைவு ஆகாமை அமையும்
அராகாதி
அமையும்- போதும்.
அயம் - இரும்பு.
அயர்ந்தனை - மறந்தாய்.
அயரா அன்பு - மறவா அன்பு,பா. அன்பு.
அயராமை - மறவாமை.
அயலினார் - எதிர்தரப்பினர். அயலார், எ-டு வாதியை அயலினார் மறுதலைத்து அருள் தர (சநி2)
அயன் - பிரமன், திருமால்.
அரக்கு - மெழுகு.
அரசர் - சேரன்,பாண்டியன்.
அரசர் குழு - பா. ஐவர்குழு
அரசர் கொடி - சேரன்-வில். சோழன்-புலி. பாண்டியன் -மீன்.
அரசர்க்குத் தானை - களிறு, தேர், பரி, வாள், வில், வேல்.
அரசர்க்குத் துணைவர் - பா.எண் பேராயம்.
அரசர் தொழில் - ஈதல், உலகு புரத்தல், ஒதல், படைபயிறல், பொருதல், வேட்டல்.
அரசர்மாலை - சேரன் - பனம்பூ , சோழன் ஆத்தி, பாண்டியன் - வேம்பு.
அரசு - அரசன், சமயக்குரவர் எழுவருள் ஒருவர். அங்கம் 6 இல் ஒருவர்.
அரசின் பத்துறுப்புகள் - பெயர், நாடு, வாழும் ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, மாலை, கொடி. இவை திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பவை.
அரணம் - 1. அரண், கோட்டை எ-டு வந்து இருக்க வல்லான் மதியாதார் வல் அரணம் (நெவிது 30) 2. முப்புரங்கள்.
அரண் - அங்கம் 6 இல் ஒன்று.
அரண்நால்வகை - மலையரண், காட்டரண், மதிலரண், நீரரண்.
அரணி - தீக்கடைகோல், எ-டு அரணியில் உதித்த கனல் (சநி4) .
அரந்தை - துன்பம்.
அரவக்கச்சு - பாம்புக்கச்சை இடுப்பில் சிவன் அணிந்திருப்பது.
அரவு - பாம்பு.
அரன் - சிவன், இறைவன்.
அரன் உடைமை - சிவனுக்கு உடைமை ஆதல்.
அரன்கழல் - இறைவன் திருவடி அரன்வினை - அநாதியாக இருந்து தொழிற்படுதல்.
அர்க்கியம் - தலையில் நீர்விடல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
அர்ச்சித்தல் - பூசனை செய்தல்.
அர்த்தகிரியாஸ்திதி - அறிவுக்கே ஏற்புடைமை.
அர்த்தம் - பொருள்.
அர்த்தப் பிரபஞ்சம் - பொருள்.
அர்த்த வேதம் - உபவேதம் 4இல் ஒன்று.
அர்ப்பணம் - ஒப்பு வித்தல், எ-டு ஈசுராப்பணம்.
அராகத்துவம் - வித்தியா தத்துவங்கள் 7 இல் ஒன்று.
அராகம் - விருப்பம். அசுத்த தத்துவம் 7இல் ஒன்று. ஆணவ விளைவுகளில் ஒன்று. விழைவாற்றலை உண்டாக்குவது. வித்தையிலிருந்து தோன்றுவது. அராகாதி, அராகதி, அராகமாதிவிருப்பம் முதலிய குணங்கள் எ-டு 1. அராகாதி குணங்கள் ளோடும் (சிசிசுப228) 2 அழிந் திடும் அராகமாதி (சிசிபப93),
அரிசனம் - மஞ்சள் முதலிய மணப்பொருள்கள். எ-டு அரிசனம் பூசி (சிசிசுப 185).
அரி-1 திருமால், சிவன் 2.சிங்கம்
அரிது - இனிமை குறிப்பது.
அரிமர்த்தனன் - பாண்டிய அரசன். இவனிடம் மாணிக்க வாசகர் அமைச்சராக இருந் தார்.
அரிய - அரிதான் எ-டு அரிய வெறுப்பு.
அரிவாட்டாய நாயனார் - வேளாளர். கணமங்கலம் - சோழ நாடு. சிவனுக்குச் செந் நெல், அரிசி, செங்கீரை, மாவடு ஆகியவற்றைத் திரு அமுதாகக் கொடுத்து வந்தவர். இலிங்க வழிபாடு.
அரிவையர் - பூவையர்.
அரிவை - பார்வதி.
அரு - சத்து, மாயை, நுண்மை.
அரு அவிகாரி- திரிபில்லாதது. எ-டு அரு அவிகாரி ஆன்மா (சிசிசு 203)
அருஇயல் - அருவமானது. சித்தம் கன்மம் என இரண்டு. ஒ. உரு இயல், இரு இயல், மரு இயல்.
அருஉரு - உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும். உடல் உருவ மாயும் உயிர் அருவமாயும் இருத்தல். வேறுபெயர் நாம ரூபம். காட்சி, கருத்து, உணர்வு ஆகியவை நாமத் தினும், நிலம் முதலிய நான்கு பூதங்களின் சேர்க்கையாகி, உடம்பு ரூபத்திலும் அடங்கும்.
அருகம் - சமணம்
அருகர் - சமணர்
அருகன் ஞானம் - அருகன் அறிவு. மதி ஞானம், சுருதி ஞானம், அவதி ஞானம், மனப் பரிய ஞானம், கேவல ஞானம் என ஐவகை.
அருகன் தந்த நூற்பொருள் - அருகன் தோற்றுவித்த அங்கா கமம், பூர்வர்கமம், பகுசுருதி ஆகமம் என்று மூவகையிலும் கூறப்பட்ட பொருள். தருமாத் திகாயம் முதல், வீடு ஈறாக உள்ள பத்துப்பகுதிகள்.
அருக்கன் - கதிரவன்.
அருக்கியம் - அர்க்கியம்.
அருங்கதி - வீடுபேறு.
அருங்கலச் செப்பு- ஒரு சைன நூல்.
அருங்குணங்கள் - பா. எண் குணங்கள்.
அருங்கோடு பறித்து அணிந் தான் - அருங்கோடு பன்றி யின் கொம்பு, பேரழிவுக் காலத்தில் திருமால் பன்றியாய் வடிவெடுத்து, ஏழு உலகங் களையும் பெயர்த்துத் தன் பெரிய கொம்பிலே ஏற்றிக் கொண்டு நின்றார். அப்பெரு வலிவை உலகோர் உயர்வாகப் புகழ்ந்தனர். அதற்கு வினை முதல்வன் தானே என்று திருமால் செருக்குகொண்டார். உடன் துயரினால் துவண்டு புவியில் விழும்படி, அப்பன்றியின் கொம்பைப் பறித்துத் தனக்கு அணியாக அணிந்து கொண்டார் அயன். இது வினை முதல் அயனே என்று மெய்ப்பிக்கின்றது.(சிசிபப282).
அருஞ்சுரம்- செல்லுதற்கரிய பாலை நிலம்.
அருட்குறி -சிவலிங்கம். அருட்கண் - திருவருட்பார்வை. எ-டு அருட்கண்ணால் பாசத்தை நீக்கும் (சிபோ பா 70)
அருட்கண்ணார் - மெய்யறிவுக் கண்ணுடையவர்.
அருட்கேவலம் - கேவலம் 5 இல் ஒன்று. தத்துவ சுத்தியின் பின் ஏற்படுங்கேவலம்.
அருட்சத்தி - சிவனைப் பிரியாதிருக்கும் ஆற்றல்
அருட்போதம் - திருவருள் வழிப்பெற்ற அறிவு.
அருணம் -பகலவன்
அருண்மயம்-கருணை வடிவம்
அருணந்தி சிவம், சிவாசாரியார் - ஆதிசைவர். திருத்துறையூர் வேறுபெயர் சகலாகம பண்டி தர் குரு, மெய்கண்ட தேவர். சீடர் மறைஞான சம்பந்தர். சிவஞான சித்தியார் (2), இருபா இருபஃது, சிவப்பிர காசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றிப் பஃ றொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய 10 மெய்கண்ட நூல் களின் ஆசிரியர். புறச் சந்தான குரவர். சிவ ஞான போதத்திற்கு விளக்கவுரை எழுதியவர்.13ஆம் நூற்றாண்டு.
அருத்தலின் - உண்பிப்பதால், எ-டு நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே (இஇ 16)
அருத்தாபத்தி - ஒப்பு
அருத்தாபத்திப் பிரமாணம் - ஒப்பு அளவை. பிரமாணங் களில் ஒன்று. பொருள் குறிப் புடையது. பகலில் உண்ணா தவன் பருத்திருக்கிறான். பருத் திருத்தல் உண்ணாது நிகழாது என்னுங் குறிப்பு கொண்டு, இரவில் உண்பான் என்று கொள்ளலாம். அதுபோல, உடம்பல்லாததாய் உயிர் இருந்தும், உடம்பிற்கிட்ட பெயரால் அழைக்க, அது என்னை என்றமையால், என் னென்ன என்ற கலந்து நிற்றா லன்றி நிகழாததால், கலந்து நிற்கும் எனக் கொள்ளுதல் அருத்தாபத்தி ஆகும். எ-டு இட்டது ஒரு பேர் அழைக்க என்என்றாங்கு (சிபோ பா 6)
அருட்போதம் - திருவருள் வழிப்பெற்ற அறிவு
அருத்தவாதம் - அளவைக்கு அடங்கும் பொருளை, ஆத்த வாக்கியங்கொண்டு அறிவது.
அருத்தி - விருப்பம், இசைவு, எ-டு மருத்துவன் அருத்தியோடு
அருத்தி - நுகரப்படும்.
அருந்தவன் - சைமினி. ஆரண நூலை ஆய்ந்தவன்.
அருந்துயர் - கொடிய துன்பம். அருநிதி - அரும்பொருள்.
அருமறை - வேதம் 4
அருமேனி - அருவ வடிவம். இறைவன் மும்மேனிகளில் ஒன்று. பா. திருமேனி , அருவ சொருபி- அருவ உருவ முள்ளவன். இருக்கிறான். அருவத்திருமேனிகள் - சிவம், சத்தி, நாதம், விந்து.
அருவம் - மிக நுண்மையாதல்.
அருவப் பிரபஞ்சம் - சேதனப்பிரபஞ்சம்
அருவருப்பு - சுவை9இல் ஒன்று
அருவாய் - அரு உருவாய், ஆற்றலாய், எ-டு அருவாய் ஆன்மா (சிசி சுப 213) அருவிடங்கள் - கொடிய நஞ்சு கள். எ-டு ஒளடதம் மந்திரம் உடையார்க்கு அருவிடங்கள் ஏறா (சிசிசுப 309)
அருவினை உடல் - அரிய வினை கொண்ட உடம்பு. இதில் அறிவினால் ஆவி அறி யும். எ-டு அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியும் அன்றே (சிபி 53),
அருவுடம்பு - நுண்ணுடல்
அருவுயிர் - பிரளயாகலர், விஞ்ஞானகலர்.
அருவுருவம் - 1.அசத்தும் சத்தும் இருப்பதும் இல்லாததும் 2. இறைவன் மூன்று திருமேனி களில் ஒன்று.
அருவுருவத்திருமேனி- சதா சிவன் .
அருவேல் - திருமேனி அருவம்.
அருள் - இரக்கம், திரோதன ஆற்றல், திருவடி, சிற்சத்தி,
அருள் ஆர் - அருள் நூல்களில் பேசப்படும்.
அருள் ஆற்றல் - பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி என ஐவகை.
அருள் உரு நிலை - சிவன், குரு உரு கொள்ளும் நிலை.
அருள் கிரியை - அருட்செயல்.
அருள் நீர்மை - சிவ அறிவு.
அருள் நூல் - வேதாகமம். அருளுதல் - கருணை காட்டல்
அலகில் - அளவிலா எ-டு அலகில் நிகழ்போகங்கள்
அலகில் குணம் - அளவிறந்த பண்பு. பிரகாசம், இலகுதை, வியாபிருதி, கெளரவம், அநி யமம் முதலியவை. 34க்குமேல்விரிதல். அவையாவன. உறுதி முதலியவை 34 பற்று முதலி யவை 9. விருப்பமின்மை முதலியவை 9.
அலகு - இயல்பு, அளவு, கூரி, வாள்
அலகு இறந்த - அளவிலா, எண்னிறந்த
அலகை - பேய் எ-டு அலகைத்தேர்.
அலங்காரம் - அழகு, அணி
அலமருவோர் - செல்வோர்.
அலமாரும் - சுழற்சியுற்று.
அலமாருவோர் - சுழல்வோர்.
அலர் - மலர்தல்,
அலர் சோகம் - மலர்தலும், வாடுதலும்,
அலர்த்துதல் - மலரச்செய்தல், அல் இருள்-இரவிலுள்ள அடர் இருட்டு,
அல்குல் - பெண்குறி, பக்கம்.
அல்லமப் பிரபு - வீரசைவத்தை நிறுவியர்களில் ஒருவர்.
அல்லல் - துன்பம்.
அல்லன - அல்லாதனவை,வேறு.
அல்லார் - அல்லாதவர்.
அலி - பேடி
அலிங்கம் - குறியற்றது. ஒ. இலிங்கம்.
அலுப்த சத்தி - பேரருள் உடைமை
அலைகடல் கடைந்தும் - தேவர்களுக்கு நித்தியத்துவம் ஏற்பட வேண்டி மகாமேருவை மத்தாகவும், வாசுகியை நாணா கவும் கொண்டு கடலைக் கடைந்து, அமுதம் தோற்று வித்துத் தேவர்களுக்குக் கொடுத்தவன் மாயவன். உலகில் கொடுந்தொழில் சகலம், சுத்தம் ஆகிய மூன்றில் செய்த அசுரர்களை அழித்துத் ஒவ்வொன்றாக முறைப்படி தேவர்களைக் காத்தவன் மாயவன். அனைத்துக் கலைகளும் பொ ருந்திய பொருள்களைத் தன் அன்பினால் அடியவருக்கு அளித்தவன் மாயவன் என்று பாஞ்சராத்திரிகள் பெருமிதத்தோடு கூறுவர் (சிசிபப 269)
அவ சித்தாந்தம் - தோல்வித் தானங்களுள் ஒன்று. சித் தாந்தம் அல்லாதவற்றைச் சித் தாந்தம் எனல். அதாவது, தன் கொள்கைக்கு மாறானதைத் தன்கொள்கையாகக்குறிப்பிடுதல்
அவதரம் - அவகாசம், கால நீட்டிப்பு.
அவதரித்தல் - பிறத்தல் அவத்திதன்- அவத்தையுற்றவன்.
அவத்தை - பொருள் நிலை அல்லது பாடு. நிகழ்மூலம் - உயிர், உள்ளம், ஆன்மா. நிகழிடம் - இலாடம், கண்டம், இதயம், நாபி, மூலாதாரம் செயற்கருவிகள் -
பாகுபாடு1.காரிய அவத்தை ஐந்து சாக் கிரம், சொப்பனம் சுழுத்தி, துரியம், துரியாதீதம்
2. காரண அவத்தை மூன்று: கேவலம், சகலம், சுத்தம்
3.முந்நோக்கு அவத்தை கீழ் நோக்கு அவத்தை மைய நோக்கு அவத்தைமேல்நோக்கு அவத்தை
4. முத்திற அவத்தை நிகழ்முறை, காரிய அவத்தை ஐந்தும் காரண அவத்தை கேவலம்,
நிகழ்வது.
நிகழ்நிலை1:
1.கேவலசாக்கிரம், 2. கேவல சொப்பனம், 3. கேவல சுழுத்தி, 4. கேவல துரியம், 5 கேவலதுரியாதீதம்.
நிகழ்நிலை 2 :
1. சகல சாக்கிரம், 2. சகல சொப்பனம், 3. சகல சுழுத்தி , 4. சகலதுரியம், 5 சகல துரியா தீதம்.
நிகழ்நிலை 3:
1, சுத்தசாக்கிரம் 2. சுத்த சொப்பனம் 3. சுத்த சுழுத்தி 4. சுத்த துரியம் 5. சுத்த துரியாதீதம்
நிகழ்நிலை 4: சாக்கிர மையம் இலாடம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளானவ
1. சாக்கிர சாக்கிரம் 2. சாக்கிர சொப்பனம் 3. சாக்கிரசுழுத்தி 4. சாக்கிர துரியம் 5. சாக்கிர துரியாதீதம் அல்லது சாக்கிர அதிதீதம்.
தத்துவங்கள் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என் னும் எண்ணிக்கையில் தொழிற் படுவதால், இவை ஏற்படுபவை. இவற்றை மூன்று காரண அவத்தைநிகழ்வதுபோல்,அவ் வளவு தெளிவாகக் குறித்துக் காட்ட இயலாது. ஒவ்வொரு வரும் தத்தம் அன்றாட பட் டறிவினால் மட்டுமே இதனை உணர வேண்டும் என்பது ஆசிரியர் கூற்று.
அவத்தை அட்டவணை
காரிய அவத்தை நிகழ்மையம் செயற்கருவிகள்
1.சாக்கிரம் இலாபம் ஐம்பொறி 5 தொழிற்பொறி 5 ஐம்புலன் 5 தொழிற்புலன் 5 அகக்கருவி 4 புருடன் 1 வளி 10 ஆக 35
2. கனவு கண்டம் ஐம்புலன் 5 தொழிற்புலன் 5 அகக்கருவி 4 புருடன் 1 வளி 10 ஆக 25
3.சுழுத்தி இதயம் பிராணன் 1 சித்தம் 1 புருடன் 1 ஆக 3
4.துரியம் நாபி பிராணன் 1 புருடன் 1 ஆக 2
5.துரியாதீதம் மூலாதாரம் புருடன் 1
அவத்தையில் ஆன்மா நிலை : சாக்கிரம் முதலிய ஐந்து காரிய அவத்தையில் ஆன்மா புருவ நடுவினின்று முறையே கண்டம் (மிடறு,இதயம்),நாபி (உந்தி), மூலாதாரம் என்னும் இடங்களில் இறங்கி நிற்கும். பின் அம்முறையே மேல் ஏறிப் புருவ நடுவை அடையும்.
அவத்தைக்குரிய கருவிகள் : இவை 96. இவற்றில் 35 மட்டுமே அவத்தைக்குரியவை. இவற்றில் 15 தத்துவமும் 20 தாத்துவிகமும் சார்ந்தவை.
தத்துவம் 15:1, அறிவுப்பொறி 52, தொழிற்பொறி 53, அகக் கருவி 44, புருடன் 1
தாத்துவிகம் 20 : 1. அறிவுப் பொறிப்புலன் 52. தொழிற் பொறிப்புலன் 53 வளி 10 ஆக 15 + 20 = 35.
அவத்தை வேறுபாடுகள் : கருவிகள் கூடியும் குறைந்தும் வினையாற்றுவதால், இவை ஏற்படுகின்றன. அகக்கருவிகள் 35. இவற்றில் தாத்துவிகம் 20
அவதாரம் - தெய்வப் பிறப்ப இறை வனுக்கே உரியது இறைவன் பல திருப்பிறப்புகள் எடுப்பவன்.
அவயவம்- உறுப்பு 2. தனித்தனிப் பிரிக்கும் தன்மை உடையது.
அவயவப் பகுப்பு - கூறு கூறாகப் பிரித்தல். எ-டு உலகம் அவயவப் பகுப்பு உடையது. அவன்,அவள்,அது.
அவயவி - உறுப்புடையது.
அவயோகம் -சிவயோகம் அல்லாதது பா.சிவயோகம்
அவர்கோன் - இந்திரன்.
அவற்று -ஐம்புலன்கள்.
அவன் -இறைவன், அடியார்.
அவன், அவள், அது -ஒருவன், ஒருத்தி, ஒன்று.
அவனி- உலகம்.
அவனி தத்துவம் -உலகக் கொள்கை எ-டு அவனி தத்துவம் ஒன்று (சிசிசுப 259)
அவ்யாப்தி -அழுக்காறு.
அவ்வவ் இந்திரியம் - பொறிகள்.
அவ்வளவின் மகிழ்தல் -பெற்றுள்ளது கொண்டு,பெற வேண்டியதை நினையாது மகிழ்தல், நியாயம் மூன்றில் ஒன்று.
அவ்பயத்தம் - வெளிப்படாமை. எ-டு மாயையின் அவ்வியத்தம் (சிசிசு 39) 2. பீடத் தோடு கூடிய சிவம் 3. ஆன்மா.
அவ்வியத்தலிங்கம் - அருவத் திருமேணி.
அவ்வினைஞர்-ஆன்மாக்கள்.
அவ்வுரை - புறச்சமயத்தார் கூறும் மொழி, எ-டு. அவ் வுரைகேளாதே உந்தீபற(திஉ3)
அவ்வெதிரேகம் - வைதன்மிய திட்டாந்த ஆபாசம் 5 இல் ஒன்று.சாத்தியதர்மம்இல்லாத விடத்துச் சாதனைத் தர்மம் இல்லை என்பது.
அவ்வேறு - ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றோடு கூடி நாழிகை, திங்கள், ஆண்டு முதலிய பாகுபாடுகளைச் செய்வது காலத் தத்துவம். அந்த ஞாயிறு, திங்கள், விண்மீன் முதலியவற்றிலிருந்து வேறுபட்டது போல் உயிரும் அந்தக் கரணங்களிலிருந்து வேறுபட்டதே.
“அவ்வேறாம் போதுபோல் ஆங்கு" (சிபோ பா 24)
அவந்திர சைவர் - சிவ தீக்கை பெற்றவர்.
அவா - குற்றம் 5 இல் ஒன்று. விரும்பியதை பற்றுவது. ஆசை.
அவாந்தரக் காரணம்-இடைப்பட்ட காரணம்.
அவாயம் அற - தீமை நீங்க. அஞ்செழுத்தே திருமேனி யாகக் கொண்டு ஆன்மாக்கள் பிறவிறத் தக்கதாகச் சிவன் ஆடுவான் (உ வி 32)
அவாய்நிலை-ஒரு சொல் தன் கருத்தை நிரப்புவதற்குப் பிறி தொரு சொல்லை அவாவி நிற்கும் நிலை, எ-டு தோற்றிய திதியே (சிபோ பா1) தோற்றிய என்னும் சொல் ஒருவனால் என்னும் சொல்லை அவாவி நிற்பது.
அவி - வேள்வி, உணவு. எ-டு திருநின்ற போகம்வளர் அவி சென்று மேவியது. (சிசி பப 203)
அவிகாரம் - திரிபின்மை, எ-டு குலவு சகமும் அவிகாரம் (சிசி பப 224).
அவிகாரி- திரிபில்லாத கடவுள். எ-டு அரு அவிகாரி ஆன்மா (சிசி சுப 213)
அவிகாரவாத சைவன் - பக்குவம் அடைந்த ஆன்மாவானது அறிவு பெற்றுத் திரிபின்றி இருக்கும் பதியைத்தானே சென்றடையும் என்று கூறும் சைவன்.
அவிச்சை - மயக்கம், ஆணவம் ஆஞ்ஞானத்தோடு கூடி நிற்பது ஐந்து குற்றங்களில் ஒன்று. நல்லது தீயது, தீயது நல்லது என்று தவறாக மதிப்பது.
அவிச்சைக்காலம் - அஞ்ஞானத்தை உடைய காலம். அவித்தை,
அவிஞ்சை - அஞ்ஞானம், அறியாமை. எ-டு காதலால் அவித்தை சிந்த (சிசிசுப 174)
அவித்தையினோன் - அறியாதவன். எ-டு மாயாவாதி அவித்தையினோன் உரை, நித்தன் அறிவன்.
அவிப்பாகம் - தேவர் உணவின் பங்கு
அவியாது - கெடாமல்,
அவிழ இருக்கும் அறிவு - சிவஅறிவு.
அவிழ்-சோறு,தவிட்டுக்கூழ், திற. அவிழ்ந்த - திறந்து நைந்த ஏடு அவிழ்ந்த துணி,அவிழ்ந்து அவிழ்.அவிழ்ந்த மனம்,அவிழ்ந்த சடை (திகப 53) அவிழ இருக்கும் அறிவு (தி.உ 27) சேந்தனார் சிறந்த மெய்யன்பர்.இவர் நைந்த துணியில் கட்டிய அருவருக்கத்தக்க சோற்றையும் அவிழ்சடை வேந்தனார் அமுதாக உண்டார்.
அவிழ்தம் - சோற்றுருண்டை
அவினயம் -நல்லறத்தினின்றும் நீங்கிய நிலைமை.
'அவினாசவாதி-:பொருள் அழியாது என்னும் கொள்கை கொண்டவன்.
அவினாபாவசத்தி - சிவத்தினின்றும் பிரியா ஆற்றல்.
அவினா பாவம்,அவினா விருத்தி -விட்டு நீங்காமை, அவினா விருத்தி அளவை சார்ந்தது. எடுகுடம்மண்ணை விட்டு நீங்காமை
அவுத்திராதி -அவுத்திரி தீக்கை முதலியவை எ-டு அலகில்லாத் திரமயோகம் அவுத்திராதி (சிசி பசு 255) பா. தீக்கை.
அவுத்திரி- அவுத்திரி தீக்கை எடு அநேகம் உள அவற்றின் அவுத்திரி இரண்டு திறனாம் (சிசிசுப 255)
அவை - 1. அவன்,அவள்,அது என்னும் உலகத்தொகுதி இம்முப்பகுப்பில் அடங்கும் 2. கூட்டம்.
அவையடக்கம் - நூல் செய்யும் ஒவ்வொரு ஆசிரியரும் மரபு கருதிக்கூறுவது.மெய்கண்ட நூல்களும் அவையடக்கம் கூறுபவை.
அவைதிகம் – வேதத்தை ஏற்கா மதங்கள். எ-டு உலகாயதம்,பெளத்தம்.அழகிற்சிறந்த கோயில்கள் -1. தேரழகு - திருவாரூர் 2 வீதி யழகு - திரு இடைமருதூர் 3, மதிலழகு - திருவிரிஞ்சை 4.விளக்கழகு - திருமறைக்காடு
அழகு -இது பத்துவகை 1. சுருங்கச் சொல்லுதல் 2விளங்க வைத்தல் 3.நவின்றோர்க் கினிமை 4.நன்மொழியுணர்த்தல் 5.ஓசை உடைமை 6.ஆழ முடைத்தாதல் 7.முறையின் வைப்பு 8.உலக மலையாமை 9.விழுமியது பயத்தல் 10.விளங்கு உதாரணத்தாகுதல்
அழல்-நெருப்பு
அழுந்துதல்-நன்றாய்ப்பதிதல்
அழிதன் மாலைய- அழியுந்தன்மை உடையன.
அழிப்பு- ஒடுக்கம்.
அளந்தறிந்து-புலன்களால் கண்டறிந்து.
அளவன் - அளந்தறிவதற்கு அப்பாற்பட்ட இறைவன்.எ-டு அளவில் அளவில் அளவன் (நெவிது 30)
அளவிலா ஆற்றல் -அளவிடப்படாத வலிமை.
அளவு -எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்.
அளவு இறந்து-அளவுக்கு அப்பாற்பட்டு அளவை:பொருள்:ஆராய்தல்,பிரமாணம் பாகுபாடு : மூவகை 1. காட்சி (பிரத்தியட்சம்) கருதல் (அனு மானம்), உரை (ஆகமம்) . நால்வகை : ஒழிபு, உண்மை, இயல்பு, ஐதிகம்.
அளவை விளக்கம்-மெய்யறிவு ஆராய்ச்சியில் பயனபடுங்கருவிகள் யாவும் அளவை எனப்படும். காட்சி: ஐயம் திரிபில்லாமலும் விகற்பம் இல்லாமலும் ஆசற அறிவது. இது வாயில் காட்சி, மானதக் காட்சி,தன்வேதனைக் காட்சி, யோகக்காட்சி என நால்வகை கருதல் : அவினாபாவம். பேசுறும் ஏது கொண்டு மறை பொருள் பெறுவது. அதாவது, உய்த்தறிவது. இது தன் பொருட்டு, பிறர் பொருட்டு என இருவகை உரை : கருதலிலும் காட்சியிலும் அடங்கிடாப் பொருளைக் காட்டுவது. இது தந்திரம், மந்திரம், உபதேசம் என மூவகை இம்மூன்றனுள் கருதல ளவையே ஆராய்ச்சி எனக் கொள்ளப்படுவது. சிவஞான போதத்திலும் இவ்வளவையே பிரமாணமாகக் கொள்ளப்படுவது. இவ்வளவை ஏது பற்றியே ஆராய்வது. இம்மூன்றளவைகளில் அறியப்படும் பொருள்களின் இயல்பு இருவகைப்படும் 1. பொது .இயல்பு : தடத்த இலக்கணம். நூல்நிலை 2. சிறப்பியல்பு : சொரூப இலக்கணம். சூக்கும நிலை. இவ்விரண்டிலும் மன்னிய பொருள்களும் காட்சி முதலிய அளவைகளும்அடங்கும் இவ்வாறு இலக்கணம் கூறும் பொழுது, அவ்யாப்தி, அதி வியாப்தி, அசம்பவம் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். பொது இயல்புக்குப் பசுவும் சிறப்பியல்புக்குக் கபிலைப் பசுவும் சான்று ஆகும். அறிவியலில் பசு என்பது பொது இனப்பெயர். கபிலைப் பசு என்பது சிறப்பினப் பெயர். மனிதனைக் குறிக்கும் அறிவியல் பெயரான ஓமியோ சேப்பியன்ஸ் என்னும் இரு பெயரில் ஓமியோ என்பது பொதுப் பெயர். சேப்பியன்ஸ் என்பது சிறப்புப் பெயர். உயிரியலில் சிறப்புப் பெயர் இருந்தாலே ஒர் உயிரினத்தை அதன் இனங்கண்டறிய இயலும்,
அளவை இயல்-தர்க்கம். அளவை நூல். முறைப்பட எண்ணுதலை ஆராயும் மெய்யறிவுத் துறை அறிவியலுக்கு அடிப்படையாக இருப்பது.
அளவை முறைகள்:பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது. அளவை விளக்கம் : அளவை பற்றிய தமிழ் நூல். மறைஞான தேசிகர் தம் கூற்றுகளுக்கு இதிலிருந்து மேற்கோள் காட்டுகின்றார். இதில் இடம் பெறுவன: 1. பிரமாணம் 2. சிற்சித்தி 3.பிரத்தியட்சம் 4 அனுமானம் 5.சப்தப்பிரமாணம் 6.அறிவின் ஏற்புடைமை 7 அன்யதாக்கியாதி 8. மெய்ம்மைக் கொள்கை அளவை பற்றிய விளக்கம் : சைவசித்தாந்த நூல்களில் சிவ ஞான சித்தியாரில்தான் முதன் முதலாக அளவை பேசப்படுகிறது. இதனையடுத்துத் தத்துவப் பிரகாசத்திலும் (14 ஆம் நூற்றாண்டு) பின்னர்ச் சிவாக் கிர யோகியர் இயற்றிய சிவநெறிப் பிரகாசத்திலும் (16 ஆம் நூற்றாண்டு) அளவை கூறப் பெறுகிறது. மறைஞான தேசிகளும் சிவாக்கிரயோகியாரும் அளவை என்னும் சொல்லுக்கு ஒரே வகையிலேயே விளக்கங் கூறுகின்றனர். சிவாக்கிரயோகியர் தரும் சற்றுக் கூடுதலான விளக்கம் பின்வருமாறு. “அளவை என்பது அளந்தறியப்படுவது. அஃது எவ்வாறாகும் எனின்? உலகத்துப் பதார்த்தங்களை எல்லாம் அளக்குமிடத்து எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போலப்பதி,பசு, பாசம் முதலிய பொருள்களைப் பக்குவான்மாக்களுக்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்கள் முதற்கண் கூறியது அறிக. அல்லாமலும் தர்க்க யுத்தியாயுள்ளவையும் இந்த அளவையினாலேயே சொல்லப்படுவது அறிந்து அர்த்தப்பிரயோகம் பண்ண வேணுமாகையால் முதற்கண் கூறியதெனவும் அறிக” சிவஞான சித்தியாருக்கு உரை செய்த அறுவருள் மறைஞான சம்பந்த தேசிகரும் சிவாக்கிர யோகியரும் அடங்குவர்.
அளி-அன்பு, கொடை, வண்டு. எ-டு அளியில் அளியல் அளியன் (நெவிதூ 30)
அளியன்-வித்துக்கு மேலாயுள்ள அருளுதல் தொழிலுடைய சதாசிவனுக்கு மேலாய் உள்ள பராசத்தி அப்பராசத்திக்குக் காரணமாகிய சிவன்.
அளியில்- பராசத்தி, பரமசிவம்
அற - நீங்க, எ-டு மாசற, மாசறு பொன்னே வலம்புரி முத்தே என்பது இளங்கோ அடிகள் மொழி.
அறத்துறை-அறநெறி
அறநிலைப்பொருள்-நெறிவழி நின்று தத்தம் நிலையில் முயன்று பொருள் ஈட்டுவது அறநிலைப் பொருள்.
அறம்- நல்லது செய்தல், மனமாசு இல்லாத அனைத்தும் அறன். அறம் சிறப்பும் செல்வமும் ஈனும் அதைவிட ஆக்கம் ஒன்றுமில்லை. “மனத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்" (குறள் 34)
அறப்பாகுபாடு- அறப்பகுதி, அறப்பயன், அறவகை என மூன்று.
அறப்பகுதி-இல்லறம், துறவற என இரண்டு
அறப்பயன்- அறம், பொருள், இன்பம், வீடு என நான்க
அறம் 32 - 1. அறவைச்சோறு 2. அறவைத் துரியம் 3. அறவைப் பிணஞ்சுடுதல் 4, அறுசமயத் தார்க்கு உண்டி 5ஆதுலர்க்குச் சாலை 6 ஆவூரிஞ்சுதறி 7, ஏறு விடுத்தல் 8 ஐயம் 9. ஒவார்க்குணவு 10. கண்ணாடி 11 கண் மருந்து 12. கன்னிகாதானம் 13. காதோலை 14, சிறைச் சோறு 15. சுண்ணம் 16. சோலை 17. தண்ணிர்ப்பந்தல் 18. தலைக்கெண்ணெய் 19. தடம் 20. தின்பண்டம் நல்கல் 21. நாவிதர் 22. நோய்க்கு மருந்து 23. பசுவுக்கு வாயுறை 24 பெண் போகம் 25. பிறர் துயர் காத்தல் 26. மடம் 27.மகப் பெறுவித்தல் 28. மகவு வளர்த்தல் 29. மகப்பால் வார்த்தல் 30. வண்ணார் 31. விலங்கிற்குணவு 32. விலைகொடுத்து உயிர்காத்தல்.
அறிவறியா மெய் -மெய்ப் பொருள்
அறவியல்-அறம்பற்றிக் கூறும் மெய்யறிவுத்துறை பா. அறிவியல் நல்லன செய்வதையும் அல்லன தவிர்ப்பதையும் எல்லைப் படுத்துவது. தமிழ் முதல் நூலாகிய சிவஞான போதத்தில் 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயலும் சமய இயலும் பற்றியதே. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிவு காட்டும் இவ் வன்பை அடிப்படையாகக் கொண்டது சைவநெறி கடந்த நிலை அறவியலும் சைவ சித்தாந்தத்திற்குரியதே. இதனைப் போது அறத்தின் மலர்ச்சி எனலாம்.
அற்புதம் - 1. அதிசயம். எ-டு இறைவன் திருவிளையாடல் 2.சுவை9இல் ஒன்று 3.சூனியம்
அற்ற - இல்லாத
அற்றம் -சோர்வு நிலை
அற்று-அவ்வியல்பு இல்லாதது.
அறிஞர் - கற்றறிவாளர். எ-டு அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம் (திஅப 5)
அறிஞர்பெயர்-ஆன்றோர், சான்றோர்,ஆய்ந்தோர் உயர்ந்தோர்.
அறிவற்றம் -அறிவின் சோர்வு
' அறிவன் - இறைவன்.
அனைத்தையும் அறிபவன் அறிவியல் -விஞ்ஞானம். அவ்வக்காலத்து அறிபவற்றை முறைப்படுத்திக்கூறும் அறிவுத் துறை. இக்காலத்து நன்கு வளர்ந்துள்ள துறை. உயிர்ப் பொருள் அறிவியல், இயற் பொருள் அறிவியல், சமூக அறிவியல் என மூவகை. இதற்குத் தந்தை மெய்யறிவியல் தாய் கணக்கு
அறி.அறிவு - ஆன்மா
அறிகருவி-கண் காது என்னும் ஐம்பொறிகளில் இரண்டு.
அறிதுயில் -யோக நித்திரை.(சிலப்பதிகாரம்)
அறிவின் ஏற்புடைமை -இன்னதை அறிவு என்று ஏற்றல், அளவை இயல் சார்ந்தது. தன்னைக் கொண்டு வருதல், பிறிதைக் கொண்டு வருதல் என்னும் இரு நிலையில் அறிவு அளவையில் செய்யப்படும் ஆய்வு. இந்தியத் தத்துவக் கொள்கைகள் பெரும்பாலும் இவ்விரண்டினுள் அடங்கும். இந்த ஏற்புடைமை சமயத்திற்குத் தகுந்தவாறு வேறுபடும். 1.தகுந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்ம்மை என்று ஏற்க இயலாது என்பர் பெளத்தர். பருப்பொருள் அறிவியலுக்கு (இயற்பியல், வேதிஇயல்) இது பொருந்தும் 2.மெய்ம்மை, பொய்ம்மை எனக் கண்டறிவதற்கு வேறுவகையில் செயல் முறையில் சரி பார்க்க வேண்டும். இதற்குச் சம்வாதி பிரவர்த்தி என்று பெயர். பயனில்லை எனில் பொய்யெனத்துணிவது பயன் உண்டு என்றால் மெய்யென ஏற்பது. இவ்வாறு பிறிதொன்றினைக் கொண்டு அறிவின் ஏற்புடைமையை நையாயிகர் உறுதி செய்வர். 3.தன்னிலேயே அறிவு மெய்ம்மை உடையது என்றும், பொய்ம்மை புறக் காரணத்தால் ஏற்படுவது என்றும் மீமாம்சகர் கூறுவர். கடவுளை ஏற்காமல் வேதத்தை ஏற்பதால், வேதத்தின் மெய்ம்மையை அறிவிலேயே இருப்பதாக இவர்கள் கருத வேண்டி இருக்கிறது. 4.தன்னால் கொண்டு வருதலைச் (ஸ்வதப் பிராமானியம்) சைவ சித்தாந்தம் ஏற்பது. சிவஞான முனிவர், சித்தியார் சுபக்க உரையில் இதனை நன்கு விளக்குகிறார். 5.மெய்யறிவு அதன் பயன்படும் செயலால் அறியப்படும். பொய்யறிவு அவ்வாறு இல்லை என்பதை ஏற்புடைமைக்கு உரை கல்லாகக் கொள்வது தவறாகும். இவ்வுரைகல் இறந்த காலம், வருங்காலம் ஆகியவை பற்றிய அறிவுக்கும் பொருந்தாது என்பது சைவ சித்தாந்தக் கொள்கையாகும்.
அறிவு -அறியப்படுவது. நல்லறிவு, அல்லறிவு என இரு வகை அறிவுப்பாகுபாடு 1. இருவகை நூலறிவு இயற்கையறிவு; சுட்டறிவு முற்றறிவு பொய்யறிவு மெய்யறிவு; அபர ஞானம்; பரஞானம். 2.மூவகை: பசுஅறிவு,பாசஅறிவு,பதியறிவு. இவ்வறிவுகளில் அழியாதது பதியறிவாகிய இறையறிவே, ஏனெனில், இறைவன் என்றுமிருப்பவன். இதை மெய்கண்டார் கூற்று உறுதி செய்யும்.
“இருதிறனல்லது சிவவத்தாம் என இரண்டு வகையின்இசைக்குமன் உலகே' (சிபோ நூபா 6)
அறிவு அறியா மெய் - சுட்டறிவினால் அறியப்படாத மெய்ப் பொருள்.
அறிவுப் பொறிகள் -ஐம் பொறிகள். ஒ: தொழிற் பொறிகள்.
அறிவு விளக்க இயல் - அறிவு அளவியல், அறிவுக் கொள்கை பற்றி ஆராயும் மெய்யறிவுத் துறை.
அறிவுறுத்தல் - நன்குணரச் செய்தல்.
அறு - ஆறு, அறுத்தல். எ-டு.அறுவகைத் தொழில்
அறுகாரியம் -பா.ஆறுகாரியம்.
அறுகுணம் - செல்வம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு.
அறுகோணம் -ஆறு மூலைகளைக் கொண்ட கோணம். காற்று அறுகோண வடிவம். அறுகோணம் கால் (உவி 5)
அறுசமயம் -ஆறு என்னும் எண்ணிக்கை யிலுள்ள நான்குவகைச் சமயங்கள் (4 X 6 = 24) அவை அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை. பொதுவாகக் கூறின் ஆறு. சைவம், வைணவம், சாத்தம், செளரம், காணபத்தியம், கெளமாரம். இவ்வாறில் தலை சிறந்தது சைவமே, அறு(வகை) அகச்சமயம் - பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவ சங்கிராந்த வாத சைவம், ஈசுர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம்.
அறு(வகை)அகப்புறச்சமயம்-பாசுபதம், மாவிரதம், காபாலிகம் (காளாமுகம்), வாமம், வைரவம், ஐக்கிய வாத சைவம் . அறு(வகை) உயிர் - மக்கள், தேவர், பிரமா, நரகர், விலங்கு, பேய்.
அறு(வகை) புறச்சமயம்-தருக்கம், மீ மாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம் யோகம்,பாஞ்சராத்திரம்
அறுவகைப்) புறப்புறச் சமயம் - மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், செளத்திராந்திகம் (இந்நான்கும் பெளத்தம்) உலகாயதம், ஆருகதம்,
அறுசுவை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு கார்ப்பு, கைப்பு.
அறுத்தவர் - சிறுத்தொண்ட நாயனார் 2 அரிவாட்டாய நாயனார்
அறுதொழில்கள் - கந்தம், ரசம், ரூபம், பரிசம், சத்தம், பரிணாமம்.
அறுநிலை - வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம்,ஆவிடம், பிரத்யாலிடம்,
அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என ஆறு.
அறுபடை வீடு - திருப்பரங்குன்றம், திருச்செந்துர் (திருச்சீரலைவாய்), பழநி (திருவாவினன் குடி), சுவாமி மலை (திருவேரகம்), திருத்தணி (குன்றுதோறாடல்) பழமுதிர் சோலை (அழகர் கோயில்)
அறுபத்து முவர் - பெரிய புராணத்தில் கூறப்பெற்ற 63 நாயன்மார்கள். இவர்களில் வேளாளர் 13 பேர், மறையவர்12 பேர், வணிகர் 5 பேர், ஆதி சைவர் 4 பேர், அரசர் 7 பேர், குறுநில மன்னர் 3 பேர்,யாதவர் 2 பேர், குலம் தெரியாதவர் 6 பேர், ஏனையோர் 11 பேர். ஒருவர் ஆதிதிராவிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபத்தைந்து-போலி 65.பா.போலி, -
அறுபுள்ளி-காற்று அறுபுள்ளி வடிவம். குன்றா அறுபுள்ளி கால் (உவி 7)
அறுபொருள் - சீவம், புற்கலம், தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் எனும் ஆறு தத்துவங்கள்
அறுவழக்கு - இவ்வாறு வகை வழக்கும் பெளத்த சமயத்தில் கூறப்படுபவை. இல்வழக்கு, உள்வழக்கு, உள்ளது சார்ந்த இல்வழக்கு, உள்ளது சார்ந்த உள்வழக்கு, இன்மை சார்ந்த இல்வழக்கு, இன்மை சார்ந்த உள்வழக்கு. -
அறுவை - ஆடை எ-டு: செழு நவை அறுவை சாணி (சிசிசுப 142) -
அறை - கூறு, இடம்
அறைகுவன் - கூறுவேன்.
அனந்ததேவர்-அட்டவித்தியே சுரருள்ளே தலைவர் அழிவில்லாத தேவர். அசுத்தமாயா காரியங்களைச் செய்பவர். அனல் - நெருப்பு வடிவம் முக்கோணம்.
அனவத்திதம் - நிலையற்றது.
அனன்யம் - இரண்டறல், எ-டு. அறிபவன் அருளினாலே அனன்யம் ஆகக் காண்பான் (சிசிசுப 245) ஒ. அன்னியம்
அன்பர் - அடியவர், ஞானிகள், எ-டு: அன்பரோடு மரீஇ (சிபோநூபா 12).
அன்பில் தொழு - அன்பு விளையும் மெய்யர்களை வழிபடுக. எ-டு அன்பேயென் அன்பே என்று அன்பால் அழுது அரற்றி (திகப 55)
அன்பு - விழைவு, காதல்.
அன்மை -இன்மை ஒஉடைமை,
அன்யதாக்கியாதி - அறிவு மாறாட்டம். எ-டு. பழுதைப் பாம்பெனக் கொள்ளுதல் பாம்பும் பழுதுபோல் கோணக் கிடப்பது. இங்கு ஒன்று மற்றொன்றாகக் கொள்ளப்படு வது தன்னுள் ஒரளவு ஒப்புமை உடையது. இது பழுது என்பது காட்சியில்தான் ஏற்படுவது. எனவே, உள்பொருள். பாம்பு இல்லை. இருப்பினும், வேறு எங்கோ இது உள்ளது. எனவே ஒப்புமைபற்றி வேறு எங்கோ நாம் பார்த்ததை இங்கே பார்த்ததாகப் பிழை பட உணர்வதே அறிவு மாறாட்டம் என்பது.
அன்வயம், கேவல - ஒன்றிய தொடர்பு. இது அனுமானத்தில் ஒருவகை மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உப நயம், நிகமனம் என்னும் ஐந்து உறுப்புகளைக் கொண்டது. புகையுள்ள இடத்தில் நெருப்புண்டு என்னும் கூற்று. ஓர் எடுத்துக்காட்டு இதனை நன்கு விளக்கும். இம்மலையில் தீயுண்டு மேற்கோள், புகை உடைமையால் ஏது எங்கே புகையுண்டோ அங்கே தீயுண்டு அடுக்களைபோல், எடுத்துக்காட்டு இங்கே புகையுண்டு உபநயம் ஆகவே, இங்கே தீயுண்டு நிகமனம் நிகமனம் முடிவு.
அன்றல் - மாறுபடுதல்.
அன்று - அநாதி,
அன்று அணைதல் - ஆன்மாவை அநாதியே மறைத்து நிற்றல்
அன்று கறியாக்க - சிறுத் தொண்ட நாயனார் தம் ஒரே மகனை வாளால் அரிந்து சமைத்துச் சிவனடியாருக்கு இட்டது (திப 18)
அன்னர் - அத்தன்மையினர்.
அன்றே - தொன்றுதொட்டே
அன்னமயம், அன்னமயகோசம் - பருவுடல். ஐவகை உடம்பில் ஒன்று. எ-டு மனோபிராணன் அன்னமயம் (சிசிசுப 213)
அன்னம்- சோறு, அன்னப்பறவை.
அன்னிய நாத்தி - பிரிக்க முடியாமை.
அன்னியம் - வேற்றுமை எ-டு அன்னியம் இன்மையின் அரன்கழல் செலு மே (சிபோ நூபா 8) -
அன்னியமின்மை - ஒன்றிப்பு. பிரிக்க இயலாமை.
அன்னுவயம் - தொடர்பு. காரண காரியத்தொடர்பு, ஒ. வெதிரேகம் அனாகதம் - ஆதாரம் 6 இல் ஒன்று அனாதி,
அநாதி- ஏகாந்தம் எடு அனாதி சிவனுடைமை (திப 43)
அனாதி சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
அனான்ம வாதம் - ஆன்மா இல்லை என்னுங்கொள்கை
அனிசுவரவாதி - நாத்திகன்.
அனுக்கிரகம்-இறைவன்அருள்.
அனுட்டயம் - செயல். எ-டு ஆன்மகன்ம அனுட்டயங்கள் (சிசிபட 232)
அனுபந்தம் - பட்டறிவின் வழியது. ஆணவம் கன்மம் வழி வருதல்.
அனுபவம் அனுபூதி - பட்டறிவு, நுகர் அறிவு, இறையறிவு, பட்டறிவால் உணரும் பொழுதே பொருளின் உண்மை இயல்பு விளங்கும். எ-டு பிறியா அனுபூதிகம் தனக்காய் (சிசி பப221).
அனுபவப் பிரமாணம் - பா.உரையால் அனுமானம். அனுபவித்தல் - நுகர்தல்.
அனுபோகம் - பயன், நுகர்ச்சி. எ-டு தானே தானாய் அனு போகம் (சிசி பட 233)
அனுமானம் - கருதல், உய்மானம் அளவை8 இல் ஒன்று.
அனுமான உறுப்புகள் மூன்று -மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, சிவஞான போதத்தில் ஒவ்வொரு நூற்பாவிற்குரிய அதிகரணத்தில் இது உள்ளது.
அனுமானப்பிரமாணம் - கருதல், அளவை உய்மான அளவை. பிரமாணங்களில் சிறந்தது. மெய்கண்டார் பயன் படுத்துவது.
அனுமானப்பிரமாண விளக்கம் - காரியத்தைக் கொண்டு காரணம் உண்டு என்று உறுதி செய்வது. காணப்படுகின்ற உடம்பின் போக்குவரத்தாகிய காரியத்தைக் கொண்டு இக்காரியங்களின் நிகழ்ச்சிக்கு உடல் என்றல்கூடாது. ஆகவே, காரணமாகிய உயிரை இவ்வுடம்பு கொண்டிருக்க வேண்டும் என உறுதி செய்யப்படுதல் எ-டு. மாயா இயந்திரதனுவில் ஆன்மா, இங்கு உயிர் காணப்படாத பொருள். அதை உண்டென்று சாதிக்கக் கருதல் அளவை பயன்படுதல்.
அனுமான் - சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவர்.
அனுமானனுமானம் - காட்சிக்குப் புலனாகாதது. கருத்துக்குப் புலனாகும் பொருள்களை அறிவது வேறு பெயர் வசன லிங்கப் பிரமாணம். மேலும், ஒருவன் பேசுவதைக் கொண் டும் அவன் அறிவு எத்தகையது என்று மதிப்பிட உதவுவது.
அனுமான வகை -1. இருவகை:
i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எதிர்மறை) மூவகை : சிவஞான சித்தியார் கூறுவது.
1. பூர்வக்காட்சி அனுமானம். நாற்றத்தால் போது அறிதல். 2. கருதல் அனுமானம்: ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல். 3.உரையால் அனுமானம் : நீதியால் முற்கன்ம பலன் நிகழ்வது.இப்போது இச்செய்தி ஆதியாக வரும் பயன் என்று அறிதல் (சிசிசுப 18) அனுமானம் விட்ட பொருளை ஆகமம் விளக்கும். அறிவியலிலும் இஃது இன்றியமையாத ஒன்று. பக்கங்கள் : அனுமானத்தின் மூன்று பக்கங் கள்.துணிபொருளுக்கு இடமாய் இருப்பது பக்கம். அதற்கு எடுத்துக் காட்டாய் இருப்பது சுபக்கம். பொருளில்லாத இடம் விபக்கம்.இவற்றுள் துணி பொருள் இருப்பது முன்னிரண்டு. இல்லாதது மூன்றாவது.
அனுபலப்தி -பொருள் விளங்காமை இன்மை பற்றிய அறிவு “இங்கே குடம் இல்லை என்று அறியும் பொழுது, இன்மை பார்க்கப் படுவதன்று. ஆகையால்,காட்சியளவைக்குவேறாக இன்மையை அளவையாகக் கொள்ள வேண்டும்” என்பார் பாட்டர்.குடம் இருக்கும்பொழுது,அதனைக் காண்பது போல,அது இல்லை என்பதும் பார்த் தறிவதேயாதலின்,அதனைக் காட்சியளவை யிலேயே அடக்கலாம் என்பது சைவசித் தாந்தாக் கொள்கை.இன்மையை நான்காக இந்திய மெய்யறிவியல் கொள்கிறது.மறைஞான சம்பந்த தேசிகர் அதனை ஐந்தாகக் கொள்வார்.
அனுபலப்தி ஏது - இன்மையறிவு பற்றிய ஏது. ஏதுக்கள் மூன்றில் ஒன்று.குளிர் இல்லாமை பணி இல்லாமையையும் பனி இன்மை குளிர் இல்லாமையையும் உணர்த்துபவை.இங்குப் பணி இன்மை காரணம் குளிர் இல்லாமை காரியம். பா. ஏது.
அனுவாதம்- இது ஒரு நியாயம்.முன் கூறியதைப் பிறிதொன்று கூறுவதற்காகப் பின்னும் எடுத்துக் கூறுதல் சிவஞானபோதம் நூற்பா 4 இல் 'ஆயினும்’ என்னும் சொல் இல்லை.இருப்பினும், வருவித்து அந்தக் கரணம் அவற்றில் ஒன்று அன்று ஆயினும் என்னும் ஒரு தொடர் வைத்துரைக்கப்பட்டது.அந்தக்கரணங்களாகிய அவற்றின் ஒன்று அன்றாயினும் என்றதனாலேயே ஆன்மா அவற்றின் ஒன்று அன்றாதலும் அனுவாதத்தால் இங்குப்பெறப்பட்டது. ஒன்று அன்று என்து முன்பு பெறப்படாதவிடத்து,ஒன்று ஆயினும் எனக் கூற இயலாது.ஆகவே,ஒன்றன்று ஆயினும் என்றதனாலேயே ஒன்று அன்று என்பது முன்னரே பெறப்பட்டது.
அனேகாந்த வாதம் -சமணமதம்.
அனேகாந்தவாதி - ஆருகதன்,சமணன். அனேகான்மவாதம்-ஆன்மா பலவுண்டு என்னுங் கொள்கை அனேகேசுர வாதம் - கடவுள் பலர் என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் அனேகேசுரவாதி.
அனைய - ஒத்தி
அஜாதத்துவம்-அநாதி ஆகையால் எல்லா வகையான பிறப்பும் அற்றிருத்தல்.
அஜாதன் -''பிறப்பிலி.ஆ-ஆன்மா,சிவஞானம்,தலைக்குறை.
ஆக-தற்பொருட்டு.
ஆகந்துகம்-பின்வந்தது.சகசத்திற்கு எதிரானது,ஆன்மாவிற்கு மாயை கன்மங்கள் ஆகந்துக மலமாகும்.
ஆகம்-உடல்.எ.டு.தொள்ளை கொள். ஆகம் (சிசி பப178) .
ஆகமம் -உரை.அளவை ஏட்டில் ஒன்று.
ஆகம அளவை - பா. ஆகமப் பிரமாணம்.
ஆகமங்கள் - 1. பொருள் :முதல்வன் திருவாய் மொழிகளான அற நூல்கள். இவை தந்திர நூல்கள். 2.வகை : சைவ ஆகமம்,வைணவ ஆகமம், சாத்தாகமம் உபாகமம் என நால்வகை சிவ வழிபாட்டைச் சிவாகமமும் திருமால் வழிபாட்டை வைணவமும் சத்தி வழிபாட்டைச் சாத்தாக மும் கூறும்.வைணவ ஆகமங்கள் பாஞ்சராத் திரம்,வைகானசம் என இருவகை சைவாகமும் 28 வகை. 3.தத்துவம் : ஆகமங்கள் சதா சிவ மூர்த்தியினது ஈசான முகத் தினின்று தோன்றின.தத்துவ வடிவ மாகிய மறைமொழிகள் (இரகசியம்),சிலைகள் (மூர்த்திகள்)ஆலயங்கள்,பூசை ஆகியவற்றின் உண்மைப்பொருள்கள் இவற்றால் உணர்த்தப் படுவன. 4.பெயர் : இவை மந்திரமெனவும் தந்திரமெனவும் சித்தாந்த மெனவும் பெயர் பெறும்.
5. பாதங்கள்:இவை ஞானபாதம்,யோக பாதம், கிரியா பாதம்,சரியா பாதம் என நான்கு "படிகளைக் கொண்டவை.
6.நுவல் பொருள்:ஞான பாதம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மை இயல்பை உணர்த்துவன.யோகபாதம் பிராணாயாமம் முதலிய உறுப்புகளையும் சிவ யோகத்தையும் உரைப்பது. கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரணம், சந்தியாவந்தனம்,பூசை வழிபடல், ஓமம், சமய விசேட நிருவான ஆசாரியா பிடேகங்களையும் உரைப்பது. சரியாபாதம் கழுவாய், சிராத் தம், சிவலிங்க இலக்கணம் முதலியவற்றை உரைப்பது. வைணவ ஆகமமான பாஞ்ச ராத்திரம் பூசா விதியையும் வைகானசம் துறவறம் முதலிய ஒழுக்கங்களையும், யோக ஞானசித்திகளையும் கூறுபவை. பா:வேதம். மூல நூலும் வழி நூலும் : மூலாகமங்கள் 28. இவை மூல நூல்கள். நாரசிங்கம் முதல் விசுவகன்மம் வரையுள்ள உபாகமங்கள் 207. இவை வழி நூல்கள். சைவர்க்கு இவை இரண்டும் மூல நூல்களே.
ஆகம ஞானம் -அபர ஞானம், பர ஞானம் என இருவகை.
ஆகமம் 28-1. காமிகம் 2 யோகஜம் 3. சிந்தியம் 4. காரணம் 5.அசிதம் 6. தீப்தம் 7 சூக்குமம் 8. சகச்சிரம் 9 அஞ்சுமான் 10. சுப்பிரபேதம் 11விசயம் 12.நிச்சு வாசம் 13. சுவாயம்புவம் 14. ஆக்கினேயம் 15.வீரம் 16 ரெளரவம் 17.மகுடம் 18, விமலம் 19. சந்திர ஞானம் 20. முகவிம்பம் 21, புரோற்கீதம் 22இலளிதம் 23,சித்தம் 24 சந்தானம் 25 சர்வோக்தம் 26.பாரமேசுரம் 27.கிரணம் 28. வாதுளம்.
ஆகமப்பிரமாணம் - உரையளவை. அளவை 8 இல் 1.நிலைபெற்ற முதல்வனுடைய திருமுன்,உயிர்கள் தத்தம் தொழிலைச் செய்யும் என்பது இப்பிரமாணம் எ-டு: மன்னு சிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்து (சிபோ பா 3:1).
ஆகமலிங்கப்பிரமாணம்-பா.உரையால் அனுமானம்.
ஆகமாந்தம் -ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படும் சித்தாந்தம்.
ஆக்கச் சொல் -உணர்த்தும் சொல்
ஆக்காது - படைக்காது.
ஆக்கில் - படைக்கில்.
ஆக்கினேயம் - 1.நெருப்பி லிடல் 2 ஆகமம் 28இல் ஒன்று.
ஆக்குதல்-1படைத்தல் 2சாக்கிர அவத்தையில் செலுத்துதல்.
ஆக்கினை - கட்டளை, தண்
ஆக்கை -யாக்கை,உடல் எ-டு.அவித்தை கொடு ஆக்கை
ஆகாச(ய)ம் - வான், வெளி. பூதங்கள் 5 இல் ஒன்று. தத்துவம் 6 இல் ஒன்று. ஓசையி லிருந்தும் சுத்தத்திலிருந்தும் தோன்றுவது.
ஆகாமியம்-வருவினை அல்லது பின்வினை. அதாவது, இப்பிறப்பில் செய்யும் புண்ணிய, பாவங்கள்,ஊழ்வினை மூன்றில் ஒன்று. புதிதாகச் செய்யும் செயல் ஆகாமியம்.அது பின் சஞ்சித மாகவும் பிராரத்தமாகவும் வரும்.
ஆகாமியக்கன்மம் - பின்செய் கன்மவினை.
ஆகாயக் கூத்தாட்டு -வானக்காற்றுடன் குடக்காற்று சேரும் நிகழ்ச்சி,எ-டு குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் (சிபோ LIIT 14)
ஆகாயப்பூ -இல் பொருள் வழக்கு.
ஆகுதி -1.நெருப்பில் மந்திர முழுமையாகச் செய்யப்படும் ஓமம் 2.தெய்வத்திற்கு இடும் பலி.
ஆங்கு -அவ்விடத்து,அது போல.
ஆங்காரம் - யான் என்னும் தன் முனைப்பு, காட்சியால் பட்டதை இன்னது என்று துணிவதற் குரிய எழுச்சியை உண்டுபண்ணுவது.புத்தியில் தோன்றுவது;அகந்தைக்கு வித்து.ஆங்கார வகை : 1.தைசத ஆங்காரம். இதில் மனமும் ஐம்பொறிகளும் உண்டாகும். 2.வைகாரிக ஆங்காரம்.இதில் ஐந்து தொழிற்பொறிகள் உண் டாகும். 3.பூதாதி ஆங்காரம். இதில் ஐம்புலன்கள் தோன்றும் ஐம்புலன்களிலிருந்து ஐம்பூதங்கள் தோன்றும் பிரகிருதியிலிருந்து அகக் கருவிகள் உண்டாகும் (சிசிசு பl49)
ஆச்சிரமம் -பொறிவழிச் சேரல், கன்மத்தொடர்ச்சி
ஆசமனம் -வழிபாட்டு முறைகளில் ஒன்று.வலக்கையால்மும் முறை மந்திரநீர் உட்கொள்ளல். ஆசனம்-1) யோகப் பயிற்சி 2) இருக்கை. இதில் அமர்ந்து வழிபடல்
ஆசனங்கள் 20 - 1.பத்மாசனம் 2. சித்தாசனம் 3 சுவஸ்திகாசனம்4. சுகாசனம் 5.சிரசாசனம் 6. சர்வாங்க ஆசனம் 7. மத்சா சனம் 8 புயங்காசனம் 9. தனுர் ஆசனம் 10, மயூரா ஆசனம் 1. திரிகோணாசனம் 12 சவா சனம் 13. அர்த்த மத்சியேந்தி ராசனம் 14 ஆலாசனம் 15 சல பாசனம் 16. பச்சி மோத்தான சனம் 17:யோகமுத்திரா 18.பாத அத்தாசனம் 19 உட்டியானா 20. நெளலி.
ஆசிரமம் - பிரமசரியம், கிரகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம் என நான்கு
ஆசாரம் - ஒழுக்கம், சீலம்,
ஆசாரியார் - ஒழுக்கமுள்ளவர், சீலர். தீட்சா குரு, வித்தியா குரு என இருவகை ஆசான் முர்த்தி - குருமூர்த்தி ஆசிரியர்-ஆசான், ஐங்குரவரில் ஒருவர். உரையாசிரியர், நூலா சிரியர், போதகா ஆசிரியர் என மூவர்.
ஆசினி - வான்
ஆசீவகன்-சமணத்துறவி.
ஆசீவகன் மதம்- சமண சமயம்
ஆசு - குற்றம், இருள், அஞ்ஞானம், ஆணவம்
ஆசை -அவா. 5 குற்றங்களில் ஒன்று
ஆஞ்சை-ஆதாரம் 6 இல் ஒன்று
ஆடகம் - பொன்.அணிகலன் தருவது ஆடகம்.
ஆடக அணிகலன்கள்- சூடகம், கடகம், மோதிரம், சவடி, தொடர், ஆரம், முடிதாடு, நாண் (சிசி பப 258)
ஆடலார்-ஆடுவோர்.அகன்பதி வதிவோரில் ஒருவர் (நெவிது 100)
ஆடவர்குணம் - 'அறிவு, நிறை,ஒர்ப்பு, கடைப்பிடி என நான்கு
ஆடுஉஅறிசொல்-ஆண் பாலை உணர்த்தும் சொல்.
ஆணவம்-வேறுபெயர்: பாசம்,மூலமலம், ஆணவமலம், சகசம். இயல்புகள்:1.அறிவை கேவல சகலநிலைகளில் மறைப்பது.அதாவது,அறியாமையை விளை விப்பது.இது இதன் தனிஇயல்பு 2. ஆற்றல் பல 3.அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் 4.இஃது ஒன்றே 5.இஃது உயிரின் பெற்றி அன்று: அதற்குப் பகையே 6.வீடுபேறு என்னும் நிலையில் மட்டும் நீங்குவது. 7 அனாதி அந்தம் அடையாது. இலக்கணம் - இது பொது, சிறப்பு என இருவகை முன்னதில் சகலத்தில் கருவிகளோடு கூடிய நிலையில் விபரீத உணர்வை உண்டாக்குவது பின்னதில் கேவலத்தால் உயிருக்கு அறியாமையை உண்டாக்குவது. உவமை - ஆணவம் உமி. மாயை தவிடு. கன்மம் முளை. வகை : மும்மலங்களில் முதல் I Dool)f D. ஆற்றல் ஆவாரகம், அதோ நியாமிகம் என்னும் இரு ஆற்றல்கள் உண்டு. முன்னது உயிர்களை மறைப்பது, இஃது ஆணவத்தின் தன்னியல்பு. பின்னது பிறவற்றோடு சேர்ந் துள்ள நிலை. முன்னது முழு இருள். பின்னது மங்கல் ஒளி. வன்மை மென்மை: ஆணவம் சகலரிடத்துப் பருமையாகவும் பிரளயாகலரிடத்து நுண் மையாகவும் விஞ்ஞானகலரிடத்து மிக நுண்மை யாகவும் இருக்கும். மல காரியங்கள் 7 : 1. மோகம் 2. மதம் 3, தாபம் 4 இராகம் 5. கவலை 6. வாட்டம் 7. விசித்திரம் மல காரியங்கள் 8:1 விகற்பம் 2. குரோதம் 3 மோகம் 4. கொலை 5 அஞர் 6, மதம் 7. நகை 8. விராய் (இஇ 4) கொள்கை ஆணவம் உண்டு என்பது உண்மை.அதற்குரிய பல வழக்குரைகளும் உள்ளன.ஆணவத்தோடு ஆன்மாஅத்து விதமாய் இருத்தல் பந்தம் எனப்படும்.அது நீங்கி இறைவனோடு அத்துவிதம் ஆதல் முத்தி எனப்படும். நீக்கம்:காரணகாரிய ஆராய்ச்சியாகிய நீரால் ஆணவமாகிய மலத்தைக் கழுவ வேண்டும். இதற்குத் திருவருள் துணை நாட வேண்டும்.
ஆணவ மலபரிபாகம் -தனு,கரணம் முதலிய மாயா மலத்தோடு ஆன்மா சேர்ந்தாலே பக்குவப் படும்.படைப்பு செய்வது அதன் பொருட்டே இதனைக் கழிக்க வேண்டும் என்பதே மெய்கண்டார்வாக்கு “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலம் கழிஇ அன்பரோடு மரீஇ' - (சிபோநூபா.12)
ஆண்டவன் - இறைவன்.
ஆண்டான் அடிமை - இறைவன் ஆண்டான். உயிர் அடிமை.இது சைவ சித்தாந்தத்தின் தலையாய கொள்கை.
ஆணை -இறைவன் ஆற்றல்
“ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் (சிபோநூபா 2) ஆணையும் முதல்வனும் இரு வினைப் பயனை முதல்வன் நேரே உயிருக்கு ஊட்டாது ஆணை யாகிய தன் சிற்சத்தி மூலம் ஊட்டுகின்றான். வினையோ அறிவில்லாதது.உயிரோ தான் செய்த வினைப் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளாதது. ஆதலால்,இவ்விரண்டினையும் சேர்த்து நுகர் விப்பது ஆணையேயாம்.ஆணை என்பது முதல்வனின் சிற்சத்தியே. முதல்வன்வேறு; சத்திவேறு என்பதல்ல. முதல்வனும் சத்தியும் பகலவனும் ஒளியும் போலத் திகழ்பவை.
ஆதல் -உண்டாதல்
ஆதவன் - கதிரவன்.
ஆதனம் - இருக்கை,ஊர்தி
ஆதனமும் ஆதனியும் -இருக்கையும் (ஆன்மா) இருக்கை மேல் (தானு) அமர்ந்த இறைவனும்,எ-டு ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச் (திப 66)
ஆதாரம் - பற்றுக்கோடு முலா தாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்சை என ஆறு.
ஆத்தன் -அருகன்,இறைவன். எ-டு இகலின் ஆத்தன் நாட வேசொலின் (சிசிபப 155).
ஆத்திகர் - கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஒ. நாத்திகர் ஆத்திகம் - கடவுள் (புலன் கடந்த பொருள்) உண்டு என்னும் கொள்கை ஒ. நாத்திகம்
ஆத்திக மதம் - கடவுள் உண்டு என்னும் கொள்கையுள்ள சமயம்,எ-டு சைவம்,
ஆத்திகர்- கடவுள் நம்பிக்கையுள்ளவர். ஒ. நாத்திகர்.
ஆத்மார்த்தம் - தன்பொருட்டு நடைபெறும் இல்ல வழிபாடு
ஆத்யத்வம் - முதலிலிருந்தே ஐசுவரியம் வாய்த்திருத்தல்.
ஆத்தியான்மிகம்- பிராரத்த கான்மியத்தில் ஒருவகை மாந்தர் விலங்கு முதலிய உயிர்கள் முன்னிலையாக வருபவை.
ஆதி - முதற்கடவுள்,பிரமன்.
ஆதி சத்தி - பராசத்தி
ஆதி அந்தம் - முதற்கடவுள்.
ஆதி ஆறு-1,பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை 2 அயன், அரி, அரன், அருகன், புத்தன், கடவுள்.
ஆதி இருமுன்று- ஆதிஆறு இவை அநாதியே தோன்றுபவை.
ஆதி எட்டு - முதல் எட்டு
ஆதிகுரு-மூலகுரு தெட்சிணாமூர்த்தி
ஆதிசங்கரர் - இவர் தம் பாடி யத்தில் விளக்கிய சமயமே ஏகான்மவாதம், பா, ஏகான்ம வாதம்
ஆதிசத்தி-மூல ஆற்றல் ஆற்றல் 5 இல் ஒன்று.வேறுபெயர் திரோதன ஆற்றல்,
ஆதிகுரு-மூலகுரு தெட்சிணாமூர்த்தி
ஆதிசிவன் - மூலகாரன சிவன்
ஆதிசேடன்பூசித்ததலங்கள்-1 திருக் குடந்தைக்கீழ்க்கோட்டம் 2 திருநாகேச்சுரம் 3. திருப்பாம்புரம் 4. திருநாகைக்காரோணம்
ஆதிசைவம் - சைவம் 16 இல் ஒன்று. கோயிலில் சிவலிங்கத்தைத் தொட்டுப் பரார்த்தப் பூசை செய்யும் உரிமையுள்ள பிரிவு.
ஆதிசைவர் - சிவாலயங்களில் பரார்த்தப் பூசைக்குரியவரான சிவாச்சாரியார் அல்லது குருக்கள்.ஆதித்தன்-கதிரவன்,வானோன்.
ஆதிதைவிகம் - தெய்வ முன்னிலையாக வருவது.
ஆதி நூல் இரண்டு - வேதம் (பொது), சிவாகமம் (சிறப்பு).
ஆதி பெளதிகம் - 1. பூதம் முன்னிலை யாக வருவது. பிராரத்த கன்மத்தில் ஒருவகை 2.கருடன் மூவகைகளில் ஒன்று.
ஆதிமலம்- ஆதியாகிய நகரமும் மலமாகிய மகரமும் முதல் மலமான ஆணவம்.
ஆதி மார்க்கம் - முதல் சமய நெறி, சைவமே.
ஆதிமார்க்கவினை - வினை 5 இல் ஒன்று.
ஆதிமுலம் - முதற்காரணம். முதற்கடவுள். எ-டு ஐயனே நாதா ஆதி மூலமே என்று அழைப்ப (சிசி பப 268)
ஆதிமொழி -பிரணவம்
ஆதியான்மிகம் - உயிர்கள் முன்னிலையாக வருவது.
ஆதிவைதிகம் - கருடன் 3இல் ஒன்ற ஆதீனங்கள்- மடங்கள்.இவை சைவம் வளர்ப்பவை.தமிழ் நாட்டில் 18 மடங்கள் உள்ளன. தருமை ஆதீனம்,திருப்பனந்தான் ஆதீனம்,துறை ஆதீனம் ஆகிய மூன்றும் முதன்மையானவை.
ஆதீனகர்த்தா-ஆதீனத்தலைவர், மடாதிபதி.
ஆபாச வாதம் - அளவுக்குள் அடங்கி வெளிவருதல்,முடிந்த முடிபான தத்துவமான பரம சிவன்தன்னை ஒரளவுகொஞ்சமாக வெளியிடல்.
ஆம்பு-தந்திரம்,எ-டு ஆம்பின் பித்துரைத்து (சிசி பப 101)
ஆம்பொழுது-ஆகின்றவேளை.
ஆமா - காட்டுப்பசு
ஆமையாரைத் தகர்த்து ஒடு தரித்தார் - பேரழிவுக்காலத்தில் பற்றுக் கோடாக இருந்த மேருமலை சரிந்தபொழுது,திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்கிப் பற்றுக் கோட்டுச் சிலையாய்க் கிடந்து உலகுக்குப் பற்றுக்கோடும் வினைமுதலும் தாமே என்று செருக்குக் கொண் டார்.இதை யறிந்த அயன் ஆமையைத் தகர் த்து,அந்த ஒட்டைஎலும்பு மாலையாக அணிந்தார். ஆகவே,அயனே வினைமுதல் (சிசிபப281)
ஆய-நிலைத்துள்ள எ-டு ஆயகலைகள்
ஆயகலைகள் 64
1.அக்கர இலக்கணம் 2.இலிகிதம் 3.கணிதம் 4.வேதம் 5.புராணம் 6.வியாகரணம் 7. நீதிசாத்திரம் 8.சோதிடநூல் 9.தரும சாத்திரம் 10.யோக நூல் 11.மந்திரநூல் 12.சகுன நூல் 13.சிற்பநூல் 14.மருத்துவநூல் 15.உருவ சாத்திரம் 16.இதிகாசம் 17.காவியம் 18.அலங்காரம் 19.மதுர பாடனம் 20.நாடகம் 21.நிருத்தம் 22.சத்தபிரமம் 23.வீணை 24.வேணு 25.முழவு 26தாளம் 27.ஆத்திர பரீட்சை 28.கனக பரீட்சை 29.இரதப் பரீட்சை 30.கசபரீட்சை 31.அசுவ பரீட்சை 32.இரத்தினப் பரீட்சை 33.பூப்பரீட்சை 34.சங்கிராம இலக்கணம் 35.மல்யுத்தம் 36.ஆகருடனம் 37.உச்சாடனம் 38.வித்து வேடணம் 39.மதன நூல் 40.மோகனம் 41.வசீகரண்ம் 42.இரசவாதம் 43.கர்ந்தருவ வாதம் 44.பைபீலவாதம் 45.கெளத்துக வாதம் 46.தாது வாதம் 47.காருடம் 48.நட்டம் 49.முட்டி 50.ஆகாயப் பிரவேசம் 51.பரகாயப் பிரவேசம் 52.அதிரிச்சயம் 53.இந்திரசாலம் 54.மகேந்திரசாலம் 55.அக்கினித்தம்பம் 56.ஆகாய சமனம் 57.சலத்தம்பம் 58.வாயுத்தம்பம் 59.திட்டித்தம்பம் 60.வாக்குத்தம்பம் 61.சிக்கிலத்தம்பம் 62.கன்னத்தம்பம் 63.கட்கத்தம்பம் 64.அவத்தைப் பிரயோகம்.
ஆயதத்துவம்- ஆன தத்துவம் எ-டு ஆய தத்துவம் சீவர்க்கு வந்திடும் பிரேர காண்டம் (சிசிசுப 160),
ஆயம் - கூட்டம், ஆதாயம், உலகம்
ஆயவர்- அத்தகையவர். அவர்களாவன, தாயர்,மனைவியர்,தாதியர்,தவ்வையர்,ஆக நால்வகை மாதர்.
ஆயவன்- இறைவன்,முதல்வன்.
ஆய் -ஆராய்க,போல,அழகு அழுக்கு, மலம்.
ஆய்ஆன்மா -ஆராய்கின்ற உயிர்
ஆய் இழை - நுணுகிய நூல்.வேதமும் ஆகமமும்
ஆய்தல்-துணிதல்,ஆராய்தல்
ஆய்ந்தார் முன் செய்வினை - இறைவன் தன்னைச் சார்ந்தோர் சாராதோர் ஆகிய இரு திறத் தார் மாட்டும் நுணுகிக் கூடுவதாகிய பிராரத்த வினையும் அவ்வாறே இருவேறு வகைப்படுமாறு செய்தருளுவான்.தன்னைச் சார்ந்தவர்களுக்குப் பிராரத்த வினை எறும்பு கடித்தால் போல உடலூழாய் கழியுமாறும் தன்னைச் சாராதவர்க்குக் கருந்தேள் கடித்தது போல உயிரூழாய்க் கழியுமாறும் இறைவன் செய்தருளுவான்
"ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு" (சிபோ பா64)
ஆய்பரம்-அழகிய கடவுள்
ஆயாது-அறியாது.
ஆயிட்டு-ஆகையால்
ஆயில்-1மலத்தில் எ.டு ஊன் திரள் திரள் போன்றது ஆயில் தோன்றி (இ4) 2. உண்டாகில்
ஆயுர் வேதம் - உபவேதம் 4இல் ஒன்று.
' ஆயுள் வேதம் - எல்லாம் கடைப் பிடிப்பதற்குச் சாதகமான உடலை நோயின்றி நிலை பெறச் செய்வது.
ஆரணம் - வேதம்
ஆரண நூல் - வேதநூல்.
ஆரணன் - 'பிரமன்.
ஆரம்பவாதம்- அசற்கரியவாதம் ஒ. சற்காரிய வாதம்
ஆரத்தி - தீப ஆராதனை
ஆரம் - பூமாலை.
ஆரவாரம் - வெற்றொலி.
ஆரழல் - மிகுவெப்பம் எடு தூமம் ஆரழல் ஆங்கி சீதம் (சிசி பப 62).
ஆரறிவு - நிறைந்த அறிவு. ஒ.
ஆறறிவு.
ஆர்ஆர் - யார் யார்.
ஆர் அறிவார் - யார் அறிவார்.
ஆர்கலி - இரையுங்கடல் எ-டு ஆசைதனில் பட்டு இன்ப ஆர்கலிக்குள் (நெவிது 105) 'ஆர்தல்-1தெவிட்டுதல்,நிரம்புதல் 2. கூடுதல் 3 கதிரவன் மையம் வருதல்.
ஆர்த்த கடல்-இரையுங்கடல்.
ஆர்த்த கரி - ஆர்ப்பரித்து வந்த பெருமலை என்னும் மும்மத யானையைத் தலைகீழாக மிதித்து,அதனைக் கொன்று கிழித்துப் போர்வை யாய் அணிந்து கொண்ட சிவன்.இந்த யானை தருகாவன முனிவர்களால் கங்காள வேடமாய் வந்த சிவனை விழுங்க அனுப்பப்பட்டது.
ஆர்த்த கிரி - இறைவன்.
ஆர்ப்பாய-இன்பமான, தளையுள்ள எ-டு ஆர்ப்பாய காயம் தன்னை (சிசிசுப 214) ஒ. பார்ப்பாய.
ஆர்ப்பு - 1 இன்பம் 2 இருப்பு. ஐங்கோச ஆர்ப்பு
ஆரா அமுது -அமிழ்தம்
ஆரா இன்பம் - தெவிட்டா இன்பம், பேரின்பம், முத்தி நிலையில் உயிர் அடையும் மகிழ்ச்சி.
ஆராத - ஓயாத எ-டு ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு (திப 47)
ஆராதகர் - அர்ச்சகர். ஆராதனை-கோயில் வழிபாடு.
ஆராய்ச்சி அறிவு - நூலறிவு. இறையறிவுக்குக் கீழானது. ஒ. பட்டறிவு. தெவிட்டா
ஆரிடதம் - முனிவர்களால் தோன்றியவை.
ஆரியம் - 1. வடமொழி 2. வேதம் ஒ. தென்மொழி.
ஆரியன்-1, புத்தன் 2அந்தணன் 3. மேம்பட்டவன்.
ஆருகதம் -சமணம், அருகக் கடவுள் வழிதோன்றிய சமயம் இதன் கொள்கை அநேகாந்த வாதம் பா. அநேகாந்தவாதம்.
ஆருகதன் - சமணன்.
ஆரும் - கூடும்.
ஆரை - 1. அச்சு, கடவுள், அது அருத்துவது ஆரை 2. யாரை ஆலமர் கடவுள் - சிவன். பா.
ஆல் - 'ஆலம் - நஞ்சு ஆலகால நஞ்சு என்பது வழக்கு.
ஆலம்பகம் - ஆதாரம்
ஆலயம் - கோவில். ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
'ஆலய விஞ்ஞானம் - இலயபரியந்தம் நிற்கும் ஒரு சிறப்புணர்ச்சி.
'ஆல் - ஆல மரம். எ-டு ஆலின்கீழ் இருந்து முனி கணத்திற்கு வேதம் அருளினான் இறைவன்.
ஆலியா உலகம் - நீர்சூழ் வையகம், எ-டு ஆலியா உலகம் எல்லாம். (சிசி பப 280)
ஆலின் கீழ் இருந்து- வேதநூல் ஒழுங்கும் உலக இயற்கையும் தெரியாததாகி உலகோர் தலை மயங்கிக் கிடந்தனர்.அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்து வேத நூலைப் பரம சிவன் அருளிச் செய்து,அதன் பொருள் தெரிய வேண்டி ஆகம நூலும் செய்தருளினான்.
ஆவரண சத்தி - மாயை.
ஆவரணம், ஆவிருதி - மறைப்பு.
ஆவரணி - காக்குமணி எ-டு
ஞான ஆவரணி (சிசிபப 144) ஆவாகனம்- எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல்
ஆவாரக சத்தி- ஆணவ ஆற்றல் 2 இல் ஒன்று அறிவை மறைக்கும் ஆற்றல்,பா. ஆணவம், ஒ. அதோ, நியமிகா சத்தி,
ஆவாரம் - மறைப்பு எ-டு ஆவாரமாய் அசித்தாய் அசலம் ஆகி (சிபி 22)
ஆவி -உயிர், நெட்டுயிர்ப்பு எடு ஆவி ஆறாதே என்று உந்தீஉற (திஉ 31)
ஆவிருதி -ஆணவமலம் எடு ஆவிருதி மறைத்தல். இது. அதற்குரிய இயல்பு.
ஆவேசம் -தன்னை மறந்து ஆவேசிக்கப்படும் பொருளாய் நிற்றல்.
ஆவேசவாதம்-சிவன் ஆவேசித்தலால் தனக்கு எல்லாம் கை கூடும் என்னுங்கொள்கை
ஆவேசவாதி-ஆவேசவாதம்புரிவோன். காபாலிக மதத்தவன்.
ஆழ்விக்கும் அஞ்சு - உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம்.
ஆழி -1. கடல், எ-டு ஆழிசூழ் உலகம் 2. சக்ராயுதம் ஆழிப்படை
ஆள் -அடிமை.எ-டு ஆள் ஆம் (அடிமைமைஆவோம்)
ஆளுதல் - ஆட்சி செய்தல்.
ஆளுமை - ஆளுகின்ற தன்மை, பல பண்புகளின் தொகுப்பு. எ-டு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஆளுமை உண்டு.இதனை உறுதி செய்வது இறைவனே.
ஆறல - வழியில்
ஆறங்கம் - வேதாங்கம்
ஆறத்துவா -ஆறுவழிகள்.
ஆற்றல் - வலிமை. இது பல வகை
ஆற்றாஎழுத்தினான்-வழிபடும் அடியார் விதியானவனான சிவன்,
ஆற்றா எழுத்து-ஒங்காரம் தன் உயர்வினால் உணர்தற்கரியது.
ஆற்றுதல்-வலியடைதல்
ஆறு-வழி முறைமை, ஒழுக்கம், சமயம், பருப்பு, கங்கை
ஆறு எழுத்து- ஓம் நமசிவாய.
ஆறு காரியங்கள் -1. மதம், அராசம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் 2.உழவு, தொழில், விரைவு, வாணிகம், சிட்டை, சிற்பம். ஆறு குணங்கள்- ஆறு பண்புகள் 1. வெண்மை, பொன்மை, செம்மை, நீலம், பச்சை, உண்மை, 2. ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், சிச்சிலி சிவப்பு என ஆறு நிறங்கள் அறிவியலில் உண்டு.
ஆறு அங்கம்-சிட்டை,கற்பம், வியாகரணம். நிருத்தம், சோதிடம்,சித்தம்
ஆறு எழுத்து - ஓம் நமசிவாய
ஆறு கோடி மயாசத்திகள் -இவை ஆறு பேதமானமியா சத்திகள்.அவையாவன: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம்
'ஆறு சென்ற வியர்வை- வழி நடத்தலால் உண்டாகும் வியர்வை.
ஆறுதாது -இரத்தம்,சுக்கிலம்,மூளை,தசை,எலும்பு,தோல், எ-டு ஆறுதாதுக்களும் கூடி (சிசிபட 227) ஆறு வகைப்படும் - 1. கார் - ஆவணி, புரட்டாசி, 2. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை 3. முன்பனி - மார்கழி, தை 4. பின்பனி - மாசி, பங்குனி 5. இளவேனில் - சித்திரை, வைகாசி 6. முதுவேனில் - ஆனி, ஆடி.
ஆனந்த சத்தி - பரம சிவன் ஆற்றல்.
ஆனந்தம் - இன்பம்.
ஆனந்தமயகோசம் - உடம்பு 5 இல் ஒன்று.
ஆனந்தநிருத்தனம் - பேரின்பக்கூத்து.
ஆனந்தரீயம் - இவை ஆய்ந்த பின், இது கேட்பதற்குரியது என்னும் யாப்பு.
ஆனந்த வாரிதி - இன்பக்கடல்
ஆனந்தான்மாவாதி - பா. ஆன்மக் கொள்கைகள்.
ஆன் - பசு
ஆன்ம அவத்தை - ஆன்மா அவத்தைக்கு உட்படுவது. அவ்வவத்தை இருவகை காரண அவத்தை - இது மூல அவத்தை அல்லது முத்திற அவத்தை. இதிலுள்ள மூன்று நிலைகள்
1. கேவல அவத்தை: ஆன்மா சர்வ சங்காரத்தில் சுத்த மாயா கரணத்தில் ஒடுங்கிப் படைப்புக்காலம் அளவும் ஆணவ மலத்தால் மறைப்புண்டு கிடக்கும். இப்பொழுது கலையாதி தத்துவங்களுடன் கூடாமல், அறிவும் செயலும் இழந்து ஆன்மா நிற்கும் நிலை இது.
2. சகல அவத்தை: படைப்பு தொடங்கிச் சர்வ சங்கார கால அளவும் ஆன்மா 36 தத்துவங்களுடன் கூடி, 84 இலட்சம் உயிர் இனங்களில் பிறந்து இறந்து உழலும் நிலை இது.
3. சுத்த அவத்தை: அவ்வாறு பிறந்து இறந்து உழலும் நிலையில் இருவினையொப்பு, மல பரிபாகம், சத்திநிபாதம் ஆகிய முந்நிகழ்ச்சிகளை அடைந்து ஆன்மா திருவருளுடன் கூடி இருக்கும் நிலை இது.
1. சகலத்தில் கேவலம்: கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூல அவத்தைகள் ஒவ்வொன்றிலும் சாக்கிரம், சொப்பனம் சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்து அவத்தைகளையும் ஆன்மா அடையும். இந்த முத்திற ஐந்து அவத்தைகளுள் புருவ நடுமுதல் மூலாதாரம் வரையிலும் ஆன்மா தங்கிச் சாக்கிரம் முதல் துரியாதீதம் வரையுள்ள ஐந்து அவத்தைகளைப் பொருந்தும் நிலையே சகலத்தில் கேவலம். இதற்குக் கீழாலவத்தை அல்லது கீழ் நோக்கு அவத்தை என்று பெயர்.
2. சகலத்திற் சகலம்: புருவ நடுவி லிருந்து சாக்கிரத்தில் சாக்கிரம் முதல் சாக்கிரத்தில் துரியா தீதம் வரை ஆன்மா அடையும் நிலை இது. இதற்கு மத்தியாலவத்தை அல்லது மைய நோக்கு அவத்தை என்று பெயர்.
3. சகலத்தில் சுத்தம்: நின்மல சாக்கிரம் முதல்நின்மலதுரியா தீதம் வரையிலுள்ள ஐந்து அவத்தைகளை ஆன்மா அடையும் நிலை இது. இது மேலாலவத்தை அல்லது மேல் நோக்கு அவத்தை எனப்படும்.
1.இதில் சாக்கிர சாக்கிரத்தில் சிவத்துவம் முதல் வித்யா தத்துவம் (சுத்தா) இறுதியாக ஐந்து கருவிகள் செயற்படும்.
2.சாக்கிர சொப்பனத்தில் சிவ தத்துவம் முதல் ஈசுவரதத்துவம் இறுதியாக நான்கு கருவிகள் செயற்படும்.
3.சாக்கிர கழுத்தியில் சிவ தத்துவம் முதல் சதாக்கிய தத்துவம் இறுதியாகிய மூன்று கருவிகள் செயற்படும்.
4. சாக்கிர துரியத்தில் சிவ தத்துவம் சத்திதத்துவம் என்னும் இரு கருவிகள் செயற்படும்.
5. சாக்கிர துரியா தீதத்தில் சிவ தத்துவம் என்னும் ஒரு கருவி மட்டும் செயற்படும்.
நின்மல வகை
1.நின்மலசாக்கிரம்: இதுநின்மல அவத்தைக் குரியது. ஆசிரியராலே ஞான தீக்கை பெற்று, முப்பொருள் உண்மையறிந்து, சிந்தித்துத் தெளிந்து கருவிகள் நீங்கும்படி ஆராய்ந்து நிற்கும் நிலை இது.
2.நின்மல சொப்பனம்: கருவிகள் நீங்கியும் நீங்காமலும் நடுவே சாற்றுப் பதைப்பு ஏற்படும் நிலை இது
3.நின்மல சுழுத்தி: தத்துவங்கள் நீங்கி மேலான கேவலத்தில் நிற்கும் நிலை இது.
4.நின்மல துரியம் : கேவலம் நீங்கி, அருளாலே தன்னையுங்கண்டு அருளையுங்கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை இது.
5.நின்மலதுரியாதீதம்: சிவத்தைக் கண்டு சிவப்பேரின் பத்தில் மூழ்கும் இறுதி நிலை இது. பா: அவத்தை
ஆன்மஇலக்கணம்-ஆன்மாவின் இயல்பு பொது, சிறப்பு என இருவகை. அஞ்சவத்தைப் படுதல் பொது இலக்கணம். சத்தை அடைவதற்குரிய உரிமை உண்டு என்னும் அறிவுடைமையே சிறப்பிலக்கணம்
ஆன்ம இலாபம் - ஆன்ம ஆதாயம் இது மாயப்பிறப்பை அறுத்து முத்தி பெறுதல்.
ஆன்மக்கொள்கைகள்- இவை ஒன்பதும் பின் வருமாறு.
1.மனமே ஆன்மா. இக்கொள்கை உடையவர் அந்தக்கரண ஆன்மவாதி.
2.ஆன்மா ஒன்றே. இக்கொள்கை உடையவர் ஏகான்மவாதி.
3.இந்திரியமே (பொறி) ஆன்மா. இக்கொள்கை உடையவர் இந்திரியான்மாவாதி.
4.ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.
5.சூனியமே (இன்மை) ஆன்மா. இக்கொள்கை உடையவர் சூனிய ஆன்மவாதி.
6.உயிர்வளியே ஆன்மா. இக்கொள்கை உடையவர் பிராணான்மாவாதி.
7.விஞ்ஞானமே ஆன்மா. இக்கொள்கை யோகசாரன் கொள்கை ஆகும்.
8.ஆன்மா சடப் பொருள். இக்கொள்கை வைசேடிகர் கொள்கை.
9.ஆன்மா ஆனந்தமடைவதே முத்தி. இக்கொள்கை உடையவர் ஆனந்த ஆன்மவாதி.
"மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (நூ பா 3)
சத்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது" (நூபா 4)
"இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா" (நூபா 7)
சிவஞான போதத்தில் மேற்குறித்த மூன்று பாக்களிலும் ஆன்மா என்னும் சொல் வருகின்றது. ஆன்மா உண்டு என்று மெய்கண்டார், வாதங்களில் தலை சிறந்ததான சற்காரிய வாதத்தினால் நிலை நாட்டுவது அவர்தம் பேரறிவினைக் காட்டுகிறது. அவர்தம் கொள்கை மறுப்புச் சுருக்கம் பின்வருமாறு: 1."இலது என்றலின் ஆன்மா உளது." இங்குப் பெளத்தரின் சூன்யவாதம் மறுக்கப்படுகிறது. 2."எனதுடல் என்றலின் ஆன்மா உளது." இங்குத் தேகான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 3."ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது." இங்கு இந்திரியான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 4."ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது." இங்கு உலகாயதரில் ஒருசாரரான சூக்குமதேகான்ம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 5."கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது.” இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 6."உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது." இங்குப் பிராணான்மா வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. 7.இவ்வாறு உண்டு என்று நிறுவப்பட்ட ஆன்மா உடம்பினுள் உள்ளது. அவ்வுடம்பின் இயல்பை 'மாயா இயந்திரதனு’ என்று மெய்கண்டார் குறிப் பிடுகிறார். இங்குச் சமூகான் மாவாதிகள் கொள்கை மறுக்கப்படுகிறது.
ஆன்ம சித்து- இது தூயது. இதனைத் துகள் உடல் மறைப்பது.
ஆன்மகத்தி-ஆன்மத்துய்மை பத்துச் செயல்களில் ஒன்று. உயிரை அருள் மேவுவதால், சகலமும் நிகழும். குறிப்பாகப் பாரம்அகலும். அறிவு ஆங்கி மன்னிட, வியாபியாய் வான் பயன் தோன்றும்.
ஆன்ம ஞானம்- பசு அறிவு.
ஆன்ம தத்துவம்- இது 24. உட்கருவி 4.அறிவுப்பொறிகள் 5. தொழிற்பொறிகள் 5, ஐம் புலன்கள் 5, பூதங்கள் 5.
1. உட்கருவி: புத்தி, மனம், அகங்காரம், சித்தம்,
2.அறிவுப் பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி,
3.தொழிற்பொறிகள் : மொழி, கால், கை, எருவாய், கருவாய்.
4.ஐம்புலன்கள் : ஒசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம்.
5. ஐம்பூதங்கள் : வான், வளி, அனல், புனல், மண்.
அனந்த தேவர் வழி நிற்கும் சீகண்ட உருத்திரர் சகலருக்கும் இறைவர். ஆகவே, அவர் தொழிற்படுத்தும் பிரகிருதி
ஆன்ம தரிசனம்- ஆன்மக் காட்சி. பத்துச் செயல்களுள் ஒன்று. பசு கரணமும் சுட்டறிவும் நீங்கித் தன்னை உள்ளவாறு காணல்.
ஆன்ம நிலை . இது மூன்று. அவை பின்வருமாறு:
1. கேவல நிலை : ஆணவத்தோடு மட்டும் ஆன்மா இருக்கும். இதில் ஆன்மா சிறிதும் அறிவின்றிப் பருப்பொருள்போல் இருக்கும்.
2.சகல நிலை : மும்மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை. இதில் ஆன்மா அறிவைச் சிறிது பெற்று உலகியலில் ஈடுபடும். வினைகளை அது ஈட்டுதலும் அவற்றின் பயனை நுகர்தலும் இந்நிலையிலேயே. இந்நிலையில் ஆன்மா ஒன்றையறிதலும் அறிந்ததை மறத்தலும் ஆகிய இரண்டினையும் உடையது. அந்நினைப்பு மறப்புகளையும் நூல்களில் சகலம், கேவலம் என்பர். இந்நிலையில் ஆன்மாவிற்கு வரும் உறக்கம், விழிப்பு ஆகிய இரண்டும் முறையே கேவலம் சகலம் எனப்படும். இவற்றுள். விழிப்பு நிலை மகா சகலம் அல்லது மாசகலம் எனப்படும். காரிய அவத்தை ஐந்தனுள் சாக்கிரம் எனப்படுவது இதுவே.
3.சுத்த நிலை : இது ஆன்மா தூய்மைபெறும் நிலை.
கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும் காரண அவத்தைகள். சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்தும் காரிய அவத்தைகள்.பா. ஆன்ம அவத்தை ,அவத்தை
ஆன்ம பயன்- 1. ஆன்மா தன் பொருட்டு ஐம்பொறிகளைச் செலுத்தும் ஆன்மாக்களைச் சிவன் அவற்றின் பொருட்டாகவே சங்கற்ப மாத்திரையால் செலுத்துவான்.
2.இயல்பாகவே பாசங்களோடு கூடித்தூய்மையின்றி நிற்பது ஆன்மா. சிவன் அவ்வாறின்றி, இயல்பாகவே பாசங்களின் நீங்கித் தூயவனாய் உள்ளவன்.
3.ஆன்மா சிற்றுணர்வினது. ஆகையால், அதன் முன் பாசங்கள் அரும்பெரும் பொருளாய்த் தோன்றும், சிவன் முன் அவை பொருளாகத் தோன்றா. ஆகவே,ஆன்மாக்கள் உணர்தலால் வரும் பயன் அவற்றிற் கேயன்றி இறைவனுக்கோ ஐம்பொறிகளுக்கோ ஆவது இல்லை.
ஆன்ம பிரகாசம் - உள்ளொளி.
ஆன்ம போதம் - உயிருணர்வு.
ஆன்ம ருபம் - ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல்
ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும்.
வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை
நிலை:கேவலநிலை, சகலநிலை, சுத்தநிலை என மூன்று பா. ஆன்ம நிலை
வாழுமிடம் : மாயாள்தன் வயிற்றில் அகக்கருவி உட்கருவியால் துடக்குண்டு வாழ்வது.
வடிவம் : அருவாயும் உருவாயுமுள்ளது.
இயல்புகள்: 1.அறிவுகள் அறிந்திட ஐந்தையும் அறிவது 2. அறிவாற்றல், விழைவாற்றலை, செயலாற்றல் ஆகிய மூன்றையுங் கொண்டது 3. ஐந்து அவத்தைக்கு உட்படுவது 4. வேண்டுவது பேரின்பமே 5. ஆன்மா ஒன்றே 6. தன்மையால் சத்தாகவும் சிதசித்தாகவும் நிற்பது.
தொழில்கள் : 1. உன்னுதல் 2. ஒடுங்கல் 3. ஒடல் 4.இருத்தல் 5. கிடத்தல் 6 நிற்றல்,
மலம் : ஆன்மாவிற்கு ஆணவம் சகசமலம் ஆகும். மாயையும் கன்மமும் ஆகந்துகமலம் ஆகும்.
கொள்கை : ஆன்மாபற்றி அமைந்துள்ள கொள்கைகள் 9. பா.ஆன்மக் கொள்கைகள், ஆன்மக்கொள்கை மறுப்பு.
ஆன்மாச் சிரய தோடம் - தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம்.
ஆன்மா புருடனாதல் - தொழில், அறிவு, விழைவு ஆகிய மூன்றும் வைச்சபோது, இச்சா ஞானக்கிரியை முன் மருவி, ஆன்மா நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்கும் என்பது சிவசித்தியார் உரைப்பது.
ஆன்மார்த்த பூசை- தன் பொருட்டுத்தானே செய்யும் பூசை'
ஆன்மாவின் அணுத்தன்மை - உயிர் எங்கும் பரவியுள்ளது என்று சைவ சித்தாந்தம் கருதுகிறது. ஆன்மா அணுவளவுள்ளது என்பது சீகண்டர் துணிவு. இதில் இவரும் இராமனுசரும் ஒரே கொள்கை உடையவர்களே.
ஆன்மாவின் சார்ந்த வண்ணம்-தன்மையால் சதசத்தாகவும் சிதசத்தாகவும் நிற்றலே ஆன்மாவின் சார்ந்த வண்ணம் ஆகும். இது உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம் ஆகும்.
ஆன்மாவுடன் சிவம் அல்லது பதியின் தொடர்பு - உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும்.
ஆன்றோர் - சான்றோர்.
ஆனா அறிவு - இறையறிவு, பேரறிவு.
ஆனாதஇராமர் -நீங்கா இராமர் மூவர். இராமன், பலராமன், பரசுராமன்
ஆனாமை-நீங்கானம். ஆனாய நாயனார் - யாதவர், திருமங்கலம். - மழநாடு இலிங்க வழிபாடு (63)
ஆனை - கணபதி
ஆனைந்து - பஞ்ச கவ்வியம், பசும்பால், வெண்ணெய், தயிர், கோமயம் (சாணம்), கோமூத்திரம் ஆகிய ஐந்து வழிபாட்டு முறைகளில் ஒன்று.
இ- பிரமன், மன்மதன்.
இகல் - போர், பகை, முரண் எ-டு பரமனார் இகலிடாமல் (சிசி பப 296).
இகலல் - பகைத்தல்.
இக்கிரமம் - இவ்வரிசை
இச்சா சத்தி - சிவனின் விருப்பாற்றல், ஐவகைச் சத்திகளில் ஒன்று.
இச்சை - விருப்பம், விழைவு, அன்பு
இச்சையால் உருவங் கொள்வான்-திருமால் தானாகவே உரு வெடுத்ததாக வரலாறு இல்லை. உமையவள் இகழப்பட்ட தக்கன் வேள்வியிலே எக்கியமூர்த்தியாக அவி கொள்ள இருந்தான். அப்பொழுது வீரபத்திர தேவர் அச்சமுண்டா கும்படித் திருமால் தலையை அறுத்தார். அவ்வாறு அறுக்கப்பட்ட தலையை மீண்டும் அவனால் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பின் தேவர்கள் வேண்ட, அயன் அரிக்குத்தலை, உண்டாக்கினான் (சிசி பப 273)
இசை-தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை.
இசைக்கருவி - தோற்கருவி, துணைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி.
இசைஞானியார் - ஆதிசைவர், திருவாரூர்-நடுநாடு சுந்தரரின் தாய். இலிங்க வழிபாடு மூவகைப் பெண்பால் அடியார்களில் ஒருவர். மற்ற இருவர் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசி (63).
இசைந்து - கூறி, சமனாக்கி
இடங்கழி நாயனார் - அரசர், கொடுப்பாளுர்-சேரநாடு. தன் நெற்பண்டாரத்தில் நெல்லைக்களவாடிய சிவனடியார் ஒருவரைக் கண்டு அவரை வணங்கி, நெற்பண்டாரத்தோடு மற்ற நிதிப்பண்டங்களையும் அவருக்கு அளித்தார் (63)
இடத்திரிபு -தானம்வேறுபடுதல்
இடந்து -பெயர்த்து.
இடபம் -எருது. 12 இராசிகளில் ஒன்று.
இடம் - 1. தாங்குபொருள். எ-டு பசுவின் இடமாய் நிறைந்த இறைவன் (நெவிதூ 5) 2. அதிகரணம் 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
இடர்ப்பாடு - 1. ஆற்றலைக் குறைத்தல் 2. துயர் உறுதல்
இடுதல் -வைத்தல், கொடுத்தல்
இடும்பை - துன்பம்
இடை - நாடி 3 இல் ஒன்று.
இடைக்காட்டுச் சித்தர்- சித்தர்கள் 18 பேரில் ஒருவர்.
இடைப்பிறவரல் - இடையே சொற்கள் வருதல்.
இடையார் - 1 மலம் நீங்கியவர் 2. இடையுள்ள பெண்கள்.
இடையீடு - இண்டவிடல்
இடையூறு - துன்பம்
இணங்குதல்- நட்புகொள்ளுதல்.
இணர் - பூக்கொத்து, மாலை எ-டு இணர் ஆர்.பூந்தொடையும் (சிசி சுப 243)
இணை - இரண்டு.
இணை அடிகள் - இருதிருவடிகள்.
இணைமலர் - ஞானம், சரியை ஆகிய இருதிருவடிகள். ஞானத்தால் உலகை நோக்குவதும், கிரியையால் அதனை நடத்துவதும் ஆகிய இரண்டும் நடைபெறும்.
இதஞ்செய்தல் - பற்றுதல்
இதம் - அறம், பற்று எ-டு இதம் அகி தங்கள் முன்னர் (சிசிசுப 101). ஒ. மறம், அகிதம்.
இதமித்தல் - பற்றுக்கொள்ளுதல்.
இதயம் - நெஞ்சு.
இதழ் - தளம்.
இதழி - கொன்றை மாலை.
இதனின் - இதில்.
இத்தை - 1. முத்தி இன்பத்தை எ-டு கடவுள் இத்தைத் தருதலால் (சிசிசுப36) 2. அவத்தை.
இதிகாசம் - பழங்கதை. எ-டு இராமாயணம், மகாபாரதம் பா. புராணம்.
இந்தனம் - விறகு,
இந்திர சாலம் - மாயவித்தை
இந்திரபுரோகிதன் - தேவகுருவாகிய வியாழன்.
இந்திரன் - தேவர்கோன்.
இந்திரியக் காட்சி - பொறிதரும் காட்சி.
இந்திரியஞானம் - பொறி அறிவு.
இந்திரியம் - 1. பொறி வாயில். எ-டு கண் முதலிய ஐம்பொறிகள் 2. சுக்கிலம்.
இந்திரியப் பிரத்தியட்சம் - வாயிற்காட்சி.
இந்திரியான்மாவாதி - புலன்களை அறியும் ஐம்பொறிகளே ஆன்மா என்னுங் கொள்கையினர்.
இந்தியத் தொகை - இந்தியம் + தொகை ஐம்பொறித்தொகுதி. எ-டு இந்தியத்தொகையின் வந்து அறிவு. இந்தியம் - இந்திரியம்.
இந்து - திங்கள்.
இந்து சமயம் - இந்துக்களுக்குரியது. உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்று. பொறுத்தல் இதன் தனிச்சிறப்பு சொர்க்கத்தில் புண்ணியத்தின் பயனான இன்பத்தை நுகர்வது. நரகத்தில் பாவத்தின் பலனான துன்பத்தை நுகர்வது இவ்வுலகில் இன்ப துன்பங்களை நுகர்வது இதன் பொது நோக்கமாகும். இக்கருத்தைச் சைவசித்தாந்தம் ஏற்கிறது.
இப்பி-சிப்பி.
இப்பூ - இவ்வுலகில்.
இமவான் - இமயமலை, மலையரசன். எ-டு எரிவிழித்து இமவான் பெற்ற (சிசிசுப73)
இம்மை - இவ்வுலகு, இப்பிறப்பு, இமைப்பளவு.
இயங்கல் - தொழிற்படுதல்.
இயந்திரம் - பொறி, சூத்திரப்பாவை.
இயமம் - பஞ்சமாபாதகம் நீக்கிப் புலனடக்கல். எ-டு இயம நியமாதி யோகம் இருநான்கு இயற்றுவதால் (சிசி பப 234).
இயமன் செய்தி - கூற்றுவன் செயல்.
இயமானன் - உயிர் வேள்வித் தலைவன் எ-டு இருநிலம் தீநீர் இயமானன் கால் எனும்(இஇ2).
இயம்புநூல் - 1. உலகாயதம் 2 மெய்கண்ட நூல்.
இயல்பாய் - கேட்டமுறையே.
இயல்பு - தன்மை பொருள்களை இருமுறைகளில் அறியலாம். ஒன்று ஆராய்ச்சி மற்றொன்று பட்டறிவு. ஆராய்ச்சியால் அறியும்பொழுது, பொருளின்
இயல்பு ஏது- மூன்று ஏதுக்களில் ஒன்று. சொல்லின் இயல்பான ஆற்றலால் பொருளை உணர்வது. எ-டு மா, மரம், விலங்கு
இயல்பு வழக்கு - இலக்கண முடையது, இலக்கணப்போலி, மரூஉ மொழி.
இயற்கை உணர்வு - இயற்கை அறிவு, தானாக அறியும் அறிவு, அதாவது, இறையறிவு.
இயற்பகை நாயனார் - வணிகர், பூம்புகார், சிவனடியார் விரும்பியதை இல்லை என்று கூறாது வழங்கியவர். சங்கம வழிபாடு (63) .
இயற்பட இற்பட - இயல்புகெட
இயற்பெயர் -இயல்பாக உள்ள பெயர். எ-டுநெடுஞ்செழியன்.
இயற்றல் - ஆள்வினை.
இயற்று - செய்
இயாகம் - வேள்வி, எ-டு பசுப் படுத்து இயாகம் பண்ண (சிசிபப 193)
இயைந்து - கூடி
இயைபின்மை நீக்குதல் - தொடர்பின்மையை விலக்குதல்,
இயைபுப்படுத்தல்- தொடர்புப்படுத்தல். ஒவ்வாத பலவற்றை இயைபுப் படுத்தல் இயைபுப் புறச்செய்வது சைவ சித்தாந்தம். இதற்குரிய விளக் கம்பின்வருமாறு:
1.சாங்கியர் போலச் சற்காரிய வாதத்தை ஏற்கிறது. ஆனால், அவர்கள் இறையிலிக் கொள்கையை விடுகிறது. 2.நையாயிகர்களைப்போல இறைவன் உண்டு எனக்கொள்கிறது ஆனால், அவர்களுடைய அசற்காரிய வாதத்தை விடுகிறது. 3. நையாயிகர்களைப் போல அன்யதாக்கியாதியை ஏற் கிறது.ஆனால்,அவர்களுடைய பரதப் பிராமானியக் கொள்கையை விடுகிறது. 4. மீமாம்சர்களைப்போலஸ்வதப் பிராமாண்யத்தை ஏற்கிறது. ஆனால், அவர்களின் இறை யிலிக்கொள்கையை விடுகிறது. 5. அத்துவைதிகளைப் போலச் சீவன் முத்தியை ஏற்கிறது. ஆனால், அவர்களின் நிர்க் குணப்பிரம-மாயாவாதத்தை விடுகிறது. 6. விசிட்டாத்துவைதிகளைப் போல், இறைவனை எண்ணில் பலகுணம் உடையவனாகக் கொள்கிறது. ஆனால், அவர் களின் சீவமுத்தி மறுப்பை விடுகிறது. - இவ்வாறு எல்லாக்கருத்துகளையும் கொள்கைகளையும் ஏதோ எவ்வாறு என்று குவித் துக்கலவையாக்காமல், சைவ சித்தாந்தம் தன்னுடைய அடிப் படைக்கோட்பாட்டிற்கேற்ப, அவற்றை இயைபுப்படுத்தி, வேண்டியவற்றை எடுத்துக் கொள்வது அதன் உலகளாவிய தன்மையையே காட்டுகிறது. இரசவாதம் - இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக்கல், சித்தர்கள் இதில்வல்லவர்கள். இதிலுள்ளகளிம்பை நீக்கினாலே அது பொன்னாகும். வேதி இயல் தோன்ற வழிவகுத்தது.
இரசவாதி - பொன்னாக்கும் கலையில் வல்லவர்.
இரடகலை - சுழுமுனை.
இரட்டுறக் காண்டல் - ஐயக்காட்சி.
இரட்டுற மொழிதல்- ஒரு சொல்லை இரு பொருள்படக் கூறுதல் எ-டு உலகம் பாச உலகையும் அதிலுள்ள உயிர்களையுங் குறிக்கும்.
இரண்டலா ஆன்மா - சிவமாகிய சத்துப் பொருளும் உலகமாகிய அசத்துப் பொருளும் ஆகிய இரண்டிலிருந்தும் வேறுபட்டது உயிர். - தொடர் இரண்டுமிலித் தனி யனேற்கே என்னும் திருவாசகத்தொடரை அடியொற்றி அமைந்துள்ளது. "இருதிறன் அறிவுளது . இரண்டலா ஆன்மா (சிபோ நூபா 7)
இரண்டு - வேறாய்.
இரண்டு - வேறு, இருபொருள்.
இரண்டு அல்லன் - முதல்வன் உயிர்களின் வேறு அல்லன்.
இரண்டு வகை - அறியப்படுவதும் அறியப்படாததும். எடு இரண்டு வகையின் இசைக்கு மன்னுலகே (சிபோ நூபா 6)
இரணிய கருப்பன் - பிரமா,
இரணிய கருப்பவாதம், மதம் - படைத்தல்தொழிலைச் செய்பவனே முதல்வன் (பிரமன்)என்னுங்கொள்கை. இக்கொள்கையினர் இரணிய கருப்பவாதி. இது தற்பொழுது இல்லை.
இரணியம் -பொன்.
இரணியன் - சூரபன்மன் மகன். 'பிரகலாதன் தந்தை திருமாலை இகழ்ந்து இறந்தவன்.
இரதம் -1. சுவை 2. தேர்
இரத்தம் - குருதி, தாது 6 இல் ஒனறு
இரந்திரம் - வழி, வெளி எ-டு எப்பொருட்கும் இரந்தரமாய் இடம் கொடுத்து நீங்காது (சிசிபப 127).
இரவி - ஞாயிறு.
இராகம் - 1. பண் 2. விருப்பம். அதாவது, கிடைக்காத பொருளிடத்து ஆசைப்படுதல். ஆன்ம விளைவுகளில் ஒன்று.
இராகு - ஒன்பது கோள்களில் ஒன்று. பா. நவக்கிரகம், கேது. இராகு, கேது என்னும் இரு கோள்கள் ஏனைய கோள் களைப் போல் தனித்தனியே காணப்படா.அவற்றைக்கோள் மறைவுக்காலங்களில்,திங்களி லும் பகலவனிலும் காணலாம். இவை இரண்டும் நேர் எதிர் எதிராய் நிற்பதால், அவை இரண்டும் உருவின் மறு உருவாய்த் தோன்றும். ஆகவே, அவை சாயாக்கோள்கள் எனப்படும்.
இராகுவின் தலை-9 கோள்களில் இராகுவிற்குத் தலை மட்டும் உண்டு, உடல் இல்லை. கேது விற்கு உடல் மட்டும் உண்டு, தலை இல்லை என்பது புராண வழக்கு
இராசதம் - முக்குணங்களில் ஒன்று.
இராம தேவர் - 18 சித்தரில் ஒருவர்.
இராமர் முவர் - இராமன், பலராமன், பரசுராமன். எ-டு ஆனாத இராமர். மூவர் (சிசிபப266),
இராமானுசர்-வைணவ ஆசாரியர். பிரம சூத்திரத்திற்கு இவர் செய்த பாடியத்தின்படி அமைந்ததே பாஞ்சரத்திரம். இப்பாடியக் கொள்கை விசிட் டாத்துவிதம். இக்கொள்கைச் சுருக்கமாவது உலகம் முழுதும் திருமால்மயம் உண்மையை உணரத் திருமாலைச் சரண் அடைவதே ஞானமாகும். அவ்வாறு அவன் பரமபதத்தில் வாழ்தலே முத்தி.
இராவணன்- அரக்கர் தலைவன், இலங்கை அரசன், இராம ரோடு போர் தொடுத்து மடிந்தவன்.
இராவணாதி-இராவணன் ஆதி. இராவணன் போல் நடித்தல்
இரிக்கல் - நீங்குதல், எ-டு இரு ளெலாம் இரிக்கல் ஆகும்.
இரித்து - களைத்து.
இருஇயல்-வழக்கு இரு இயல்பு. உள் வழக்கு, இல்வழக்கு. இயல்-இயல்பு. ஒ. மரு இயல், உருஇயல், அருஇயல்.
இருக்கு-இருக்குவேதம் நான்கு வேதங்களில் ஒன்று.தொன்மை யானது.
இருங்கிரி-மேருமலை, இதனைத் திருமால் தன் முதுகில் தாங் குதல் (சிசி பப 267)
இருட்கண் - பாச ஞானம் மலத் தில் உண்டாகும் அறியாமை. இருட்கண்ணே பாசத்தாற்கு ஈசன் (சிபோ பா 70).
இருண்மலம் - ஆணவ மலம்.
இருத்து - நிறுத்து.
இருதிறன் - உள்பொருளாகிய சத்தும் இல்பொருளாகிய அசத்தும். எ-டு இருதிறன் அல்லது சிவசத் தாமென (சிபோ நூபா 6).
இருதிறன் அறிவு-நல்லதையும் தீயதையும் அறியும் அறிவு. இதை மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். 1.இருதிறனையும் அறியும் அறிவு 2.இரு திறனிலும் அறியும் அறிவு. 3.இருதிறனாலும் அறியும் அறிவு.
இருநான்கு-4+4=8 அட்டாங்க யோகம்: இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.
இருநிதி - சங்கநிதி, பதுமநிதி.
இருபத்து நான்கு தத்துவம் - பூதம் 5, ஐம்பொறி 5, தொழிற் பொறி 5, ஐம்புலன் 5 அகக் கருவி 4.
இருபா இருபது-14 மெய்கண்ட நூல்களில் ஒன்று. 20 பாடல்களைக் கொண்டு, சைவ சித்தாந்த நுணுக்கங்களை நயத்துடன் விரித்துரைப்பது, ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார்.
இருபொழுது - இரவும் பகலும் .
இருமலம்-மும்மலங்களில் எவையேனும் இரண்டு.
இருமுச் சமயம் - 3+3 = 6 அகச் சமயம்: வாமம், வைரவம், மாவிரதம், காளாமுகம், பாசு பதம், சைவம்.
இருமை - இம்மையும் மறுமையும்.
இருவகை அஞ்சவத்தை-மேல், கீழ் என்னும் இருவகை அஞ்ச வத்தை.
இருவகை இயல்பு - இருவகை இலக்கணம்.
இருவினை - நல்வினை (அறம், புண்ணியம்) தீவினை (மறம், பாவம்) ஆகிய இரண்டு. இவற்றை இறைவன் உயிர்களுக்கு ஊட்டி, அவற்றை அறவளர்ச்சியிலும் ஆன்மிக வளர்ச்சியிலும் நிறைவு செய்து வளர்க்கின்றான் என்பது சைவ சித்தாந்தம் மற்றும் பதி இருவினை, பசு இருவினை, பாச இருவினை எ-டு அவையே தானேயாய் இருவினையின் (சிபோ நூபா 2).
இருவினை ஒப்பு - கன்ம ஒப்பு நல்வினை, தீவினை ஆகிய இரண்டையும் விருப்பு வெறுப்பின்றி ஒரே நிலையில் கருதுதல் அமுதைப் பிறர்க்களித்து, நஞ்சைத் தாமுண்டு விளங்கும் நல்ல மெய்ஞ்ஞானத்தோடு அத்துவிதமாகும் நிலைக்கு வளரக் கூடியது. இந்நிலை மலபரி பாகமான நிலையாதலால், சத்திநிபாதமும் குருவருளும் ஏற்பட வாய்ப்புண்டு. அதாவது, மெய்ஞ்ஞானத்தைப் பெற உதவும் முந்நிகழ்ச்சிகள் இருவினை ஒப்பு, மலபரி பாகம், சத்திநி பாதம் ஆகியவை ஆகும். சரியை முதலிய சிவ புண்ணியங்கள் செய்தலாலும் ஆன்மாவிற்கு இருவினை ஒப்பு உண்டாகும் பா. மலபரி பாகம், சத்திநிபாதம்.
இருள்- ஆணவம் ஒ.ஒளி.
இரிய - நீங்க எ-டு நிறை இருள் இரிய (சிபி 93).
இலகவே - நீங்க.
இலக்கணம், இலட்சணம் - இயல்பு 1. பொது இலக்கணம், உண்மை இலக்கணம் (சிறப்பிலக்கணம்) என இருவகை 2. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகை.
இலக்கணம்,உப-ஒன்று தனக்கு இனமான பிறவற்றையும் தெரிவிப்பது.
இலக்கணம், சாதாரண-பொது இயல்பு.
இலக்கணம்,சொருப-உண்மை இயல்பு.
இலக்கணம்,தடத்த - பொது இயல்பு.
இலக்கண நலங்கள்- சைவசித்தாந்த நூல்கள் எளிய கருத்து விளக்கத்திற்காக இனிய இலச்கண நலங்கள் நிரம்பியவை. அவை உத்திகளும் அணிகளும் ஆகும் எ-டு இரட்டுற மொழிதல் உத்தி ஏகதேச உருவகம் அணி.
இலக்கண வாக்கியம்-இயல்பாய் உள்ள தன்மையை எடுத்துக்காட்டும் வாக்கியம்.
இலக்கணவியல்- பொது இலக்கணம், உண்மை இலக்கணம் பற்றிக் கூறும் துறை.
இலகுபலகை - பொற்பலகையாகிய சங்கப் பலகை, இதனை இட்டு அருளியவன் சிவன்.
இலகி - எளிதாக, விளங்க எ-டு இலகி நடக்கும் எழில் ஆணையான் (நெவிது 75).
இலகுதை - நொய்மனம் எ-டு அலகில் குணம் பிரகாசம் லகுதை வியாபிருதி (சிபி42)
இலச்சினை-முத்திரை.
இலயம் -1. இரண்டறக்கலத்தல் 2. ஞானம் மட்டுமே திருமேனி யாகவுள்ள கடவுள் 3 ஒடுக்கல்.
இலயதத்துவம் - சிவதத்துவம், சத்தித் தத்துவம் என இருவகை. இலய முத்தி - முத்திகளில் ஒரு வகை இலய சிவத்தை அடைந்து மலமாய கன்மங்களிலிருந்து விடுபடுதல். சகல வகை ஆன்மாக்களுக்கும், தற்போதம் அடங்கிய இடத்தில் இலய சிவம் ஏகனாய்ப்பிரகாசிக்கும். வேறுபெயர் நின்மலதுரியம். இது சிவஞான போதத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. “ஏக னாகி இறைபணி நிற்க” (நூற்பா 10).
இலயாவத்தை- உலகை ஒடுக்கும் நிலை.
இலயித்தது- ஒடுங்தியது. எ-டு இலயித்த தன்னில் இலயத்தது ஆம் (சிபோ பா 2).
இலவணம் - உப்பு.
இலளிதம்- ஆகமம்28இல் 1.
இல் - இல்லம், இல்லை.
இல்லம் உடையார் - உயிர்கள்.
இல்லா அரு - புலப்படுதல் இல்லாத அரு.
இல்பொருள்-இல்லாதபொருள். எ-டு முயற்கோடு.
இல்லறம்-அறப்பகுதி இரண்டில் ஒன்று. எ-டு அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (குறள் 50).
இல்லென்று - அடங்கி நிற்கச்செய்து.
இல்லை - அமையாமை.
இலாடம் - புருவநடு.
இலாடத்தில் நிகழும் அவத்தை-இது ஐந்து அவத்தை இலாடம் சாக்கிரத்தானம். ஆகவே, இதில் நிகழும் ஐந்து அவத்தைகளாவன.
1. சாக்கிரம் சாக்கிரம் 2 சாக்கிர சொப்பனம் 3. சாக்கிர கழுத்தி 4. சாக்கிரதுரியம் 5. சாக்கிர துரியாதீதம். இவை முறையே அவ்வத் தத்துவங்கள் ஐந்து நான்கு மூன்று.இரண்டு.ஒன்று என்னும் எண்ணிக்கையில் நின்று தொழிற்படுவதால் உண்டாகுபவை.
வேறுபெயர் சகலசாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம்.
சகல சாக்கிரத்தில் யாதொரு கருவியும் குறையாது எல்லாக் கருவிகளும் நன்கு செயற்படும். அதனால் ஆன்மா இந்நிலை யில் உலகத்தை நன்றாக அறிந்து நுகரும். பிரேரகக் (செலுத்தும்) கருவிகள் என்று குறிப்பிடப்பட்ட சிவதத்துவம் ஐந்தும் குறைவின்றியே நிற்கும். கேவல சாக்கிரத்தில் தத்துவ தாத்துவிகங்களுள் 50 கருவிகள். செயற்படா. ஆகவே, ஆன்மா விழிப்புற்றுக் கண்டும்
சகல சொப்பனம், சகல சுழத்தி முதலியவையும் புருவ நடுவில் (இலாடத்தில்) நிகழும். இருப்பினும் இடையிடையே சிவ தத்துவம் ஐந்திலிருந்து நான்கு மூன்று, இரண்டு, ஒன்று என ஏற்ற பெற்றியால் குறைந்து போவதால், உலக அறிவு இடையறவின்றி நிகழாது.
கேவல அவத்தைகளிலும் ஆன்மா புற உலகத்தை அறியா தொழியினும், அந்நிலைகளில் ஆணவ இருள் மேலிட, அறியாமையில் அழுந்துவதாகும்.
சகல அவத்தைகளில் உலகத்தை அறியாவிட்டாலும், ஆணவம் மேலிடாமையால், குறிப்பிட்ட ஒரு பொருளிலே அழுந்தி இருக்கும்.
சுத்த சாக்கிரம் முதலியவை தத்துவ தாத்துவிகங்களாகிய மாயா கருவிகளால் நிகழாது. இறைவன் திருவருளாலேயே நிகழும். ஆகையால், அந்நிலையிலும் கருவிகள் இல்லாது ஒழியினும், ஆன்மா ஆணவ இருளிலோ உலகப் பொருளிலோ அழுந்தாது, இறைவன் திருவருளில் பதிந்து நிற்கும். (சிவஞானபோதம் பா29).
இலாபம் - ஈட்டம்.
இலி_இல்லாதவர்.ஒப்பார் இலி-ஒப்பில்லாதவர்.
இலிங்கம் - குறி. சிவனுரு உருமேனி, ஆன்மாக்கள் தம்மை வழிபட்டு உய்ய வேண்டிச் சிவபெருமான் கொண்ட நிர்குண வடிவமாகிய சகளவடிவம்.
இலிங்கத்தத்துவம் - இலிங்கம் ஒர் அடையாளம் அல்லது குறியை உணர்த்துவது. சைவ இலக்கியத்தில் எதனுள் யாவும் ஒடுங்குகின்றனவோ அது இலிங்கம் ஆகும்.
வேள்வி வழக்கில் யோனி என்பது யக்ஞ குண்டத்தையும் இலிங்கம் அதனின்று எழும் தீயையும் குறிக்கும்.
யோகப் பயிற்சியில் ஆறு ஆதார சக்கரங்கள் யோனி எனக் கொள்ளப் பெறும். அவற்றுள் எழும் ஒளி இலிங்கம் ஆகும்.
அளவை இயலில் கருதல், இலிங்க பராமரிசத்தை அடிப்படையாகக் கொண்டது. இலிங்க பராமரிசம் - குறி ஆராய்ச்சி (சிவஞான முனிவர்) இலிங்கம் ஓங்காரத்தைக் காணுவதற்குரிய அறிகுறி. அகர, உகர, மகரங்களின் சேர்க்கை.
இலிங்கத்தின் அடிப்புறத்தைப் பிரம்மாவாகவும் நடுப்புறத்தைத் திருமாலாகவும் மேற்புறத்தைச் சிவனாகவும் கூறுவது மரபு. இலிங்கம் உருவாயும் அருவாயும் அருஉருவாயும் உள்ளது. இலிங்கம் சைவ சமயத்திற்கு மட்டுமல்லாது அனைத்துச் சமயத்திற்கும் உரியது.
இலிங்க வகை - ஐந்து வகை. பா. அணு ஐந்து.
இலிங்க வழிபாடு - சிவபெருமானின் அருவுருவத் திருமேனி கொண்டது சிவலிங்கம். இதனைத் தொழுவதே இலிங்க வழிபாடு, பா. வழிபாடு.
இலிங்கி - குறிபால் உணர்த்தப்படும் பொருள்.
இலீலை - தெய்வம் முதலியவற்றின் விளையாடல் அல்லது திருக்கூத்து. எ-டு மன்மதலீலை.
இலேசாற்கொள்ளுதல் - ஏக தேச விதியாகக் கொள்ளுதல். ஒர் உத்தி.
இழவு - கேடு, வறுமை.
இழிசொல் - குறளை, பொய், கடுஞ் சொல், பயனில் சொல் என நான்கு.
இழிந்தார் - செருக்கொடு சிவ நிந்தனை செய்பவர்.
இழிவு-சாக்காடு.
இளங்கோயில்-பலாலயம் ஒரு பழங்கோயிலுக்குக் குடமுழுக்கு நிகழ்த்துங்கால், கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கப்படும் சிறிய கோயில்.
இளம் பெருமானடிகள்-11 ஆம் திருமுறையில் சிவபெருமான் திருமும்மணிக்கோவை பாடியவர்.
இளமை - இளந்தன்மை. ஒ. மூப்பு இளைப்பு சோர்வு, வருத்தம் எ-டு இளைப்பதும் ஒன்றில்லை இவர் (திப 76).
இளையான்குடிமாற நாயனார் வேளாளர். இளையான்குடி பாண்டிநாடு சங்கம வழிபாடு (63).
இவன் - இறைவன். எ-டு எல்லாமாய் நிற்கும் இவன் (தி ப45).
இவ்வான்மாக்கள் - இறப்பில்லாத தவமிகுதியால்,இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் வரப்பெற்ற ஆன்மாக்கள்.
இவுளி-குதிரை.
இவுளியார்-குதிரை வீரர்கள் எ-டு இவுளியார்க்கு முன்வரும் அவதாரங்கள் (சிசி பப 288).
இழுத்தல் - அறியச் செய்தல்.
இழை - நூல், பனுவல்.
இளி- ஏழு பண்களில் ஒன்று.
இறந்த- ஒடுங்கிய.
இறந்தோய் - கருவி அறிவுக்கு அப்பாற்பட்டவனே.
இறப்பில் தவம் - அழிவிலாப் புண்ணியம்.
இறப்பு-சாவு.இம்மை நிகழ்ச்சி பா. போக்கு.
இறவா இன்பம் - பேரின்பம் .
இற்பட - இல்லாதவாறு இற்படப் பிரிப்பின் மெய்ப்படும் (சநிரா 4).
இற்பு- இருள் தருவது.
இற்புக்கு - இல்புக்கு இல்லம் புகல்.
இறுதல் - அழிதல்.
இறுதி - சங்காரம், அழிப்பு.
இறும்பு - சிறு நூறு, புழு, எ-டு. வண்டு இறும்பு எடா உட்கொண்டு (சநிரா12).
இறுவாய்-இறுதி
இறை, இறைவன் - எல்லாங்கடந்த கடவுள், புருடனுக்கு மேலாகவுள்ள 24 தத்துவங்கள் (மெய்யங்கள்). அட்டாங்க யோகத்தால் இதைப்பெறலாம்.
இறைநெறி - மெய்ந்நெறி. அருள் நெறி. இது நீடுபுகழ் நிலைத்த நெறி. இறைவன் உயிர்களைப் புரத்தற்பொருட்டு, அவன்தானே ஆகிய நெறி, எ-டு அவனே
இறைபணி - திருவருட்பணி. இறைவனுக்கு நான்கு பாதங்களால் தொண்டு செய்தல். சமயக்குரவர் நால்வரும் இத னைச்செய்தவர்கள்.நாயன்மார்களும் இதைச் செய்தவர்களே.
இறைபணி மன்றம் - மன்றம் அமைத்து இறைவனுக்குப் பணி செய்தல், எ-டு கோயிலைப் புதுப்பித்தல், குட முழுக்கு செய்தல்
இறைபிரமேயம்-வினை முதல் ஆகிய பிரமம்.
இறைமொழி - இறைவன் அருளிய ஆகமம்.
இறைவழிபாடு-இறைவனைத் தொழுதல், சைவத்தின் தலையாய பகுதி. பா. வழிபாடு
இறைவன் இலக்கணம் - இறைவன் இயல்பு, சித்தா தலும் சத்தாதலும் தவிர, உடனாதல், ஒன்றாதல், வேறாதல் ஆகிய மூன்றும். எங்கும் எதிலும் நிறைந்து நிற்றல், எ-டு அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து (திஅப1)
இறைவன் குண்ங்கள் - பா.எண்குணம்.
இறைவன் தொழில்கள் - இவை மூன்றும் இரண்டுமாக ஐந்தாகும். மூன்று : படைத்தல், காத்தல், அழித்தல் இரண்டு : மறைத்தல், அருளல்.
இறைவன் நிலை - திருவருள் நிலை.சாரூபம், சாமீபம், சாலோகம், சாயுச்சியம்
இறைவன் பெயர்கள் - இவை எண்ணில், ஏகன், நிர்மலன், நிர்க்குணன், அநாதி, சச்சிதானந்தம், நித்தியானந்தன், சுத்தன், நித்தன், சர்வாதிகாரி அகண்டி தன் முதலியவை.
இறைவன் மாட்சி - வெளியில் வெளியன், ஒளியில் ஒளியன், அளியில் அளியன், அளவில் அளவன்.
இறைவன்வடிவங்கள்-இறைவன் உருவங்கள் 9: சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகே சுவரன், உருத்திரன், மால், அயன். இவை ஒன்றில் ஒன்று தோன்றுபவை.
இன்பஆர்கலி- சிற்றின்பக் கடல்.
இன்ப சுகவடிவு - இறைவன். எ-டு சூதான இன்பச் சுக வடிவை (திப 100-1)
இன்பம்-துய்ப்பதற்குரிய மகிழ்ச்சி பேரின்பமே நிலையான மகிழ்ச்சி. ஒ. துன்பம்.
இன்பு - இன்பம் ஒ. துன்பு.
இன்மை - விளங்காமை.
இன்றியமையாமை - இல்லாமல்முடியாமை
இன்று - 1 சூனியம், அசத்து, அதாவது இன்மை 2, இற்றைக்கு.
இன்னமுதம் - இனிய சோறு. எ-டு வேந்தனார்க்கு இன்ன முதம் ஆயிற்றே (திப 53)
இனமலர்-மலர்த்தொகுதி, எ-டு இனமலர் மருவிய அறுபதம் (தேவா 1227)
இனமலி சோத்திராதி-மேம்பட்ட இனமாகிய அறிவுப் பொறிகள்.
இனாது நிலை - இன்மையைப் பயக்கும் நிலை. இனைய - வருந்துவதற்குரிய, அஞ்சுவதற்குரிய, இத்தன்மையுள்ள, எ-டு: இனைய பல பிறவிகளில் இறந்து பிறந்து அருளால் (சிபி 48).
ஈ
ஈ-பார்வதி, சரசுவதி, இலக்குமி.
ஈசத்துவம் - ஈச தத்துவம் எண் வகைச் சித்திகளில் ஒன்று. எல்லாவற்றையும் தன் கட்டளைக்குள் கட்டுப்படுத்தல்.
ஈசன் - இறைவன்.
ஈசன் கழல்-இறைவன் திருவடி
ஈசர் சதாசிவமும் கலாரூபமும் சுத்தவித்தைக்குமேல் எண்ணப்பட்ட ஈசுரம், சாதாக்கியம் என்னும் இரு தத்துவங்களும் 64 என்னும் எண்ணிக்கையிலுள்ள கேசரமும் ஆகும்.
ஈச்சுரம் - பா. ஈசத்துவம்
ஈசுவர அவிகாரவாத சைவம் - முதல்வன் உதவியை உயிர் விரும்புமாயின், முதல்வனும் பிறிதொன்றின் உதவியை விரும்புவான் என்னும் கொள்கை. இக்கொள்கை உள்ளவர் ஈசுவர அவிகாரவாத சைவர் எனப்படுவர்.
ஈசுவரன் - இறைவன், ஈசனின் ஐந்து முகங்களில் ஒன்று.
ஈட்டம் - ஈட்டுதல். இன்ப நாட்டம்.
ஈட்டுதல் - கூட்டுதல், சம்பாதித்தல்.
ஈண்டிய - எல்லா நூல்களின் பொருளும் திரண்டமைந்த.
எ-டு ஈண்டிய பெரும்பெயர் (மகாவாக்கியம்) (சிபோ பாயிரம்)
ஈர்வாள் - அரம்.
ஈர் ஐந்து மாத்திரை- பத்து மாத்திரை. அறிவுப் பொறி புலன் 5, தொழில் பொறி புலன் 5
ஈரா - ஈரமிலா, பவமுள்ள.
ஈரேழ் நால் ஒன்று - 2X7+4= 18. சாக்கிரத்தில் 14 கருவி களும் சொப்பணத்தில் 4 கருவிகளும், சோத்திராதி 5, சத்தாதி 5, அகக்கருவி 4, ஆக 14, சொப்பனத்தில் 4. மொத்தம் 18 (சிசி பப230)
ஈரைந்துபிறப்பு-பத்துப் பிறப்பு. எ-டு ஈரைந்து பிறப்பில் வீழ்ந்து (சிசி பப301)
ஈறு - இறுதி, சங்காரக் கடவுள். எ-டு ஈறாகி அங்கே முதலொன் றில் ஈங்கு இரண்டாய் (திப 86)
ஈறாதல்-சங்காரப்படுதல்,அழிதல்
ஈனம்- குறை. எ-டு ஈனம் இல் சதாசிவன் பேர் (சிசி சுப 85).
உ
உகவும் - நீங்கவும்.
உகிர் - நகம்.
உகுத்த - உதிர்ந்த
உச்சரித்தல் - உச்சாரணம் செய்தல், உச்சரிப்பு அளவு
உடங்கு - ஒருங்கு, எ-டு உடங்கு இயைந்து.
உடங்கு இயைதல்- ஒன்றாதல்.
உடந்தை - உறுதுணை, எ-டு உடந்தை உடனே நின்று உந்தீபற (திஉ15)
உடம்பு, உடல்-பருவுடல், நுண்ணுடல் என இருவகை முன் னது தூலம் என்றும் பின்னது சூக்குமம் என்றும் கூறப்படும். பருவுடல் ஐம்பொறிகளாக அனைவராலும் காணப்படு வது. நுண்ணுடம்பு மனம் முத்லிய அகக்கருவிகளைக் கொண்டு
எவர் கண்ணுக்கும் புலப்படாது இருப்பது.காரண உடல் என்பதும் ஒன்று.
உடம்பு அமைப்பு - துவக்கு (தோல்), உதிரம் (குருதி),
இறைச்சி, மேதை (கொழுப்பு), என்புச்சோறு,சுக்கிலம்(வெண்ணியம்),
இந்திரியம் (பொறி) ஆகியவற்றால் ஆனது உடம்பு.
உடம்பும் உலகமும் - சொர்க்கலோகம் புகப் பூத உடலும்
நரகலோகம் புக யாதனா உடலும் பூவுலகை அடையப் பருவுடலும்
தேவை.
உடம்பொடு புணர்தல் - சிறப்புடைய ஒரு பொருளைத்
தனியாகக் கூறாமல், மற்றொரு பொருளுக்குத் தரும் அடைமொழியில்
குறிப்பால் தோன்ற வைத்துக் கூறுவர். இஃது ஒர் உத்தி அல்லது
நுணுக்கம். எ-டு ”அவன் அவள் அது”என்பது ஒருவன் ஒருத்தி எனக்
கூறப்பெறுவது.
உடலம் - உடம்பு.
உடல் ஊழ்-உடம்பின் நுகர்ச்சி.
உடல்வினை - ஊழ்வினை.
உடற்குறை - குறள், செவிடு, மூங்கை, கூன், குருடு, மருள், உறுப்பிலாப்பிண்டம் என ஏழு
உடற்றிரிவு - உடல் திரிவு.உடல் வேறுபடுதல்.
உடன்பாடு - உடன்படுதல். கொள்கை உடன்பாடு. நாத்திகத் தத்துவப் பிரிவுகளுள் சமணத் திற்கும் ஆத்திகத் தரிசனங் களுள் அத்வைதம் நீங்கலாகப் பிறவற்றிற்கும் உயிர்கள் பல என்பது கொள்கை உடன்பாடு.
உடனாதல்-இறைவன் இயல்புகளுள் ஒன்று. செயல்தன்மை யால் இறைவன் உயிர்களோடு உடனிருத்தல். பா. ஒன்றாதல், வேறாதல், அதாவது, அவையும் தானுமாய் நிற்றல்.
உடனிகழ்ச்சி - ஒன்று நிகழுங்காலத்தில் பிறிதொன்று உட னாக நிகழ்தல். இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்றும் உட னிகழ்ச்சிகள் ஆகும். முத்திக்குத் தேவைப்படுபவை.
உட்கருவி - அகக்கருவி. அந்தக்கரணம். மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு. சிறப்பாக, மனாதி, ஒயாத காயத்தை உண்டு பண்ணுவது.
உட்கருவி செயற்படுதல்-மனம் வழிவழியாக வருவனவற்றைப் பற்றுவது இது பற்றப் பட்ட பொருள் இன்னதாக லாம் என்னும் முதல் உணர்வோ சங்கற்பம், நிர் விகற்பக் காட்சி இதுவோ அதுவோ என்னும் ஐய உணர்வோ (விகற்பம்) எழும் நிலை இங் குண்டு காட்சிக்குப் பட்டதை இன்னதுதான் எனத்துணிய வேண்டும் என்னும் எழுச்சியை உண்டு பண்ணுவது.
2.அகங்காரம் - யான் என்னும் முனைப்பு .
3. புத்தி அறிவு. நுகர்வில் பட்டதை இன்னதெனத் துணிவது இது. இது மனச் சாட்சியாகும்.
உட்கோயில்
உத்தமர் அல்லர்
உட்கோயில் - கோயில் கருப்பக் கிரகம்.
உட்சமயம்-பா.அகச்சமயம்
உட்பேதம்- அகவேறுபாடு
உடைத்தாதல் செல்லாது - உடைத்தாகாறு செல்லல் ஒரு துணை வினை. செல்லாது நிகழாது.
உடைமை - உடையதாகிய தன்மை, பொருள்.
உடைமைப் பொருள் - இறைவனுக்கு உயிர் அடிமைப் பொருள். மாயையுங் கன்மமும் அவற்றின் காரியங்களுக்கு உடைமைப் பொருள்கள்.
உடையர் - செல்வர்.
உடையான் - ஒருபொருளைத் தனதாகக் கொண்டிருப்பவன்.
உணக்கியே - வருத்தமுற்று. பயனில்லாது. எ-டு. உணக் கியே உழல்வீர்.
உணங்கிடும் - ஒருங்கிடும்.
உணர்தல் - 1. அறிதல். உற்றுணர்தல், ஆராய்தல், தெளிதல் என இது மூவகைப்படும். (சி.சி.ப.ப 96) 2. பாவித்தல், அறிவுறுத்தல், துயிலெழல்.
உணவு வகை-கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், மெல்லல் என ஐந்து.
உணர்வு-பட்டறிவு, நுகர்வறிவு. சுட்டுணர்வும் முற்றுணர்வும். முன்னது நிலையற்றது. பின்னது நிலையானது.
உண்டல் - விளங்குதல்.
உண்டி - நுகர்ச்சி.
உண்டிவகை - உண்ணல், தின்னல், நக்கல்,பருகல்.
உண்டைக்கட்டி- கோயில் பட்டைச்சோறு.சிவன்கோயிலில் தயிர்ச் சோறும் பெருமாள் கோயிலில் புளிச்சோறும் சிறப்புள்ளவை.
உண்ணுதல் - அழுந்துதல்.
உண்மை-1 மெய்யானது 2ஆறு பகைகளுள் ஒன்று 3 நிகழ்ச்சி.
உண்மைச் சிவபுண்ணியம் - உலகப் பயன் கருதாதது, அன்பே காரணமாகச் செய்யப் படும் சிவ புண்ணியம் ஞானத்திற்கு நேர்ச்சாதனம்.
உண்டிவினை- இன்பதுன்ப நுகர்ச்சி. பா. இருவினை, மூவினை.
உண்மையால் சுட்டப்படுதல் - உள்பொருளாகச் சுட்டப் படுதல்.
உண்மைநெறி விளக்கம் - 14 மெய்கண்டநூல்களுள் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம். சிறந்த சித்தாந்த நூல். பத்துச் செயல்களையும் பாங்குற விளக்குவது.
உண்மைப்பொருள்- பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். உண்மை விளக்கம் - 14 மெய்கண்ட நூல்களுள் ஒன்று. ஆசிரியர் திருவதிகை மனவாசகம் கடந்தார். சித்தாந்த உண்மைகளை எளிதாகக் கற் றுணர்வதற்கு ஏற்ற நூல். இதனைச் சைவ சித்தாந்த பால பாடம் அல்லது அரிச்சுவடி எனலாம்.
உதகம்- புவி, நீர்.எ-டு உண்டாம் - உதகத்து ஆங்கே.
உதரம் - வயிறு.
உதவி - உபகாரம்.
உத்தமன்
உபத்தம்
கொண்டு மாபலி அரசனிடம் கொடை வேண்ட, அவன் மூவடி மண் கொடுக்கக் கொடை பெற்றபின், எல்லாவற்றையும் ஒரே அடியாலே அளந்து கொண்டு, ஏனைய இரண்டடிக்கு இடமில்லாமையால், அவ்வரசனைக் குற்றஞ்சாட்டிச் சிறையிட்டார். இதில் அவர் வினை முதல் என்று கூறுவதற்கில்லை (சிசி பப 284)
உத்தமன் - முதல்வன்.
உத்தமனே- முதல்வனே, மகனே.
உத்தரம் - மறுமொழி, எதிர்வாதம் ஒரு வாத உத்தி.
உத்தர சைவம்- சித்தாந்த சைவம்
உத்தர மீமாஞ்சை- ஒரு தத்துவ நூல். பாதராயண முனிவர் செய்தது. எல்லாம் பிரமமயம் என்று பிரமத்தைச் சிறப்பிப்பது. எனவே, பிரம சூத்திரம் எனப்படும்.
உத்தி - நுணுக்கம். சைவ சித்தாந்த நூல்களில் பல பயனுறு உத்திகள் பயன்படுகின்றன. எ-டு இரட்டுற மொழிதல். உடம்பொடு புணர்த்தல், உரையிற் கோடல்.
உத்தியுத்தர் - விந்துவின் காரியங்களில் முயன்றவர்.
உத்துங்க சிவர் - போஜராஜனின் சித்தாந்த சைவகுரு. குஜராத் மாநிலத்தவர்.
உத்தேசம் - பெயர் மாத்திரையால் எடுத்து ஒதுதல்.
உதான வாயு - உடலிலுள்ள 10 வளிகளில் ஒன்று. எ-டு மெய் தரும் உதான வாயு (சிசி சுப 40)
உந்தி - கொப்பூழ்.
உந்தீபற- உம்-தீ-பெற உம் குற்றங்களை எல்லாம் நீக்குக.
உந்துதல் - கடைதல்
உப்பளம்- உப்பங்கழி.
உபகரித்தல்- உதவுதல்
உபகாரம்- உதவி. காணும் உபகாரம், காட்டும் உபகாரம் என இருவகை. சத்தையும் அசத்தையும் அறிவது. சதசத்தாகிய ஆன்மா எனினும், அவ்வாறு காணுவதற்கு இறைவன் தானே கண்டும் காட்டவும் உதவுகிறான் என்பதைக் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் என மெய்கண்டார் கூறுகின்றார். உபசாரம் - உபசரிப்பு, வழிபாட்டு முறை, இது 16. 1.தவிசளித்தல் 2. கைகழுவ நீர்தருதல் 3.கால்கழுவ நீர்தருதல் 4.முக்குடி நீர்தருதல் 5.நீராட்டல் 6.ஆடை சாத்தல் 7.முப்புரி நூல்தரல் 8.தேய்வை பூசல் 9.மலர் சாத்தல் 10.மஞ்சளரிசி தூவுதல் 11.நறும்புகை 12.விளக்கிடல் 13.கற்பூரமேற்றல் 14.அமுதமேந்தல் 15.அடைகாய் தருதல் 16.மந்திர மலரால் அருச்சித்தல்.
இவை தொடர்பாகப் பயன்படுங்கருவிகளாவன:குடை, கொடி, விசிறி, கண்ணாடி, சுருட்டி, அப்தாகிரி, சாமரம், அர்க்கிய பாத்திரம்.
உபசார வழக்கு - ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மேல் ஏற்றிக் கூறுவது. எ-டு அருள் என்பதைத் தாள் என்று கூறுதல். இதே போலப் பாச ஞானத்தை வாக்கு என்றும் அறிவை மனம் என்றும் கூறுவது வழக்கு.
உபத்தம் - கருவாய், தொழிற்பொறிகள் 5 இல் 1. உபதேசம் - அருளுரை, அறிவுரை.
உபதேச மொழி - உபதேச வாக்கியம்.
உபதேசப் பஃறொடை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் தெட்சிணா மூர்த்தி தேசிகர்.
உபதேச வெண்பா - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்
உபதேசியாய் - அறிவிக்க, அறியுந்தன்மை உடையதாய்
உபநயனம்-1,மூக்குக்கண்ணாடி 2. பூணுாற்சடங்கு பா. தர்ப்பணம்
உபநிடதம் - சைவத்தைக் குறிப்பிடும் வேதத்தின் ஞான காண்டம்.
உபமன்யு தேவர்- சைவ முனிவர். கண்ணனுக்குச் சிவதீக்கை அளித்தவர். பக்தவிலாஸ் என்னும் வடமொழி நூலின் ஆசிரியர். இது 63 நாயன்மார்களின் வரலாறு கூறுவது வியாக்கிரபாத முனிவரின் மகன். வாசுதேவரைச் சிவனோடு சேர்க்க இறைஞ்சியவர் (சிசி பப 287).
உபயம்- கொடையளிப்பு, இக்கோயிலுக்கு இக்கதவு அல்லி உபயம்.
உபராகம் - கோள் மறைவு.
உபலம் - பளிங்கு எ-டு. ஒளிதரும் உபலம்.
உபலப்தி - உள்ளதென்று உணரும் உணர்வு.
உபவேதம்-இது 4 ஆயுர்வேதம் தனுர்வேதம், காந்தருவவேதம், அர்த்த வேதம், எ-டு மூன்று உபவேதம் தானும் (சி.சி.ப.ப 185) பாவேதம்.
உப்பு- ஆன்மா
உபாதாயம் -துணைப்பொருள். உருவப்பொருள் வேறு. உபாதாயப்பொருள் வேறு எ-டு உருவம் பூஉபா தாய சுத்தாட்டக உருவம் (சிசிபப 111)
உபாதானம்- விந்து, மோகினி, மான் ஆகிய மூன்றும் உலகினுக்கு உபாதானங்கள்.
உபாதி - பொருளின் குணமாகாது. (இயல்பாகாது) அதற்குக் குற்றமாய் அதனைப் பற்றி நிற்கின்ற அயற்பொருள்.
உபாங்கம்-1:வேதாகமங்களுக்கு உறுப்பாய் உள்ள சாத்திரம் உரபொறிவழி,
உபாயம்-கருவி. சாமம், பேதம், தானம், தண்டம் என நான்கு.
உபாயச் சிவ புண்ணியம் - உலகப் பொருளை நீக்கிச் செய்யும் புண்ணியம்.
உபாய நிட்டை - எளிதில் சித்தியடையும் வழியைப் பற்றுதல் பா. ஞான நிட்டை
உபாயநிட்டை வெண்பா 14 பண் டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.
உம்பர் - தேவர்.
உம்பர் பிரான் - இந்திரன்.
உமாபதி சிவம், சிவாச்சாரியார் - அந்தணர். கொற்றவன்குடி சிதம்பரம், வேறுபெயர் கொற்றங்குடி முதலியார், அடிகள், மறை ஞான சம்பந்தர்.
செய்த அற்புதங்கள் : 1. பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிச் செடிக்கும் முத்தியளித்தல். 2.சிதம்பரத்தில் ஏறாது நின்ற கொடியைக் கொடிக் கவிபாடி ஏறச்செய்தல் 3 கோயிற்புராணத்தை அரங்கேற்றல். சந்தான குரவர்களில் அதிக நூல்கள் இயற்றியவர் இவரே.
அந்நூல்களாவன : 1. சிவப்பிரகாசம் 2. திருவருட்பயன் 3. வினா வெண்பா 4 போற்றிப்பஃறொடை 5, கொடிக்கவி 6.நெஞ்சு விடுதூது 7. உண்மை நெறி விளக்கம் 8. சங்கற்ப நிராகரணம் 9.கோயிற்புராணம் 10. பெளட்காரகம விருத்தி 11. சேக்கிழார் புராணம் 12 திரு முறைகண்டபுராணம் 13.திருப்பதிக் கோவை 14 சிவநாமக்கலி வெண்பா இவர்மெய்கண்டார் மாணாக்கர்.
உமைகோன்-சிவன்
உயர் சிவஞான போதம் - 1 நாற்படிகளில் இறுதி நிலையான ஞானத்தைப் பற்றி ஐயந் திரிபறக் கூறுவது 2. இதனைக் கேட்பதற்கு முன் சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றையும் விளக்கும் பத்ததி என்னும் நூல்களை மாணவர் கற்க வேண்டும். 3. பத்ததிகளைக் கற்றதோடு அமையாது, அவற்றின்படி ஒழுகிச் சிவஞான வேட்கைஉள்ளவரே இதனைக் கேட்கத் தக்கவர்கள்.
உயர் ஞானம் - சரியை, கிரியை, யோகம் உடையவரை சாலோக, சாமீப சாருபங்கள் மருவுவது உயர் ஞானம். இது சிவ ஞானமே.
உயர்திணை-உயர்வுள்ள பொருள். எ-டு மக்கள் ஒ. அஃகிறிணை,
உயர்திணைப்பால்கள் - ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று.
உயர் பீசம் - உயர்ந்த மூலம், ஒதி உணர்ந்து ஒழுக்கநெறி இழுக்கா நல்ல உத்தமருக்குச் செய்வது உயர்பீசம்.
உய்த்துணர்தல் - ஒருபொருளை ஆராய்ந்தறிதல்.
உயிர்-அணு, ஆன்மா, உயிர்ப்பு இதன் குணங்கள் : 1. அறிவுடைமை 2. விருப்பமுடைமை 3. ஆற்றலுடைமை.இது மூலாதாரத்தில் செல்லாது. துரியத் தானமாகிய உந்தியோடு நிற்பது. ஒ. ஆன்மா. உயிர் ஊழ் உயிர் நுகர்ச்சி.
உயிர்த்தல் - தொழிற்படுதல்,மூச்சு விடுதல்.
உயிர்ப்ப- உயிர்ப்பதை.
உயிர்ப்பு - மூச்சுக்காற்று.
உயிர் அளவு - இதுபற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. 1. உயிர்கள் அணுவின் அளவினது என்பர். பாஞ்சராத்திரிகள். இதனைச் சித்தாந்தம் ஏற்பதில்லை. 2. உடம்பளவில் உயிர் நிறைந்து அறியும் என்பர் சமணர்கள். இதனையும் சித்தாந்தம் மறுக்கும். இறைவனைப் போல, உயிரும் எங்கும் பரவியது. ஆயினும், கட்டு நிலையில் அதன் பரவல் மீண்டும் நிரம்புகிறது என்பது சித்தாந்தம்.
உயிர் இயல்-மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்
உயிர் எண்ணிக்கை-ஊற்றமிகு தாவரங்கள் 19 இலட்சம். ஊர்வன 15 இலட்சம். அமரர் 11 இலட்சம், நீர் வாழ்வன 10 இலட்சம், பறப்பன 10 இலட்சம் நாற்காலிகள் 10 இலட்சம், மானிடர் 9 இலட்சம் ஆக 84 இலட்சம் (சிபி 47). உயிர்களின் கடமை - பெத்தம் (தளை), முத்தி ஆகிய இரண்டிலும் எப்பொழுதும் உயிர்களுடன் நின்று உதவுபவன் இறைவன். அவன் திருவருள் ஒருநாளும் மறவாது நினைந்து நினைந்து அவனிடம் ஆரா அன்பு காட்டுவதே உயிர்களின் தலையாய கடமையாகும்.
உயிர்க்காட்சி - திருவருனைக் கண்ட உயிர் தன் செயலற்று நிற்றல்,
உயிர்த்துய்மை - திருவருனைக்கண்ட நிலையில் உயிர் உலகியல் பொருள்கள் ஒவ்வொன்றிலும் அழுந்தியும் அறிந்தும் நின்ற நிலை நீங்கித் திருவருளால் சிவத்தைப் பெற்று, அதனுள் அடங்கித் தான் வெளிப்படாது இருக்கும் நிலை.
உயிர்த்தோற்றம் - கருப்பை,முட்டை, நிலம், வியர்வை என நான்கு.
உயிர் வகை - விஞ்ஞானகலர், பிரனயாகலர், சகலர் என மூன்று வகை. பா.அணுமூன்று
உயிர் வடிவு - உயிர் ஆணவ மலத்தினின்றும் நீங்கப்பெற்றுத் திருவருளைத் தன் அறிவின்கண் காண்பதாகும்.
உரகம் - பாம்பு.
உரமனார்- சிவன், எ-டு உரமனார் அழல் உரூபம் (சிசிபப 296)
உரா- அலைந்து ஓடுதல், எ-டு உரர்த்துனைத்தேர்த்து (சிபோ நூ பா9)
உராதுனைத்தேர் - கானலாகிய பேய்த்தேர், பாசம் பேய்த்தேரின் இயல்புடையது. கண்ணுக்குத்தொலைவில் நீர்நிலையாய் உள்ளதுபோலத்தோன்றி,நெருங்கியதும் இல்லா தொழிவது பேய்த்தேரின் இயல்பு. அது போல், வாழ்வார்க்கு உறுதிப்பொருள் போலத் தோன்றிப் பயன் நோக்குமிடத்து, உயிர் வாழ்க்கைக்குக் கருவியும் இடமுமாய்க் கழிந்து போவதால் உலகு, உடல் ஆகிய பாசமானது பேய்த்தேர் எனக் கூறப்பட்டது. உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் (சிபோ நூபா 9)
உராவுதல் - உலவுதல்
உரிமை - தொடர்பு.
உரியர்வகை -1.நான்கிற்குரியவர்: சரியை, கிரியை, யோகம், ஞானம் 2. மூன்றிற்குரியவர்: சரியை, கிரியை, யோகம் 3. இரண்டிற்குரியவர் : சரியை, கிரியை 4. ஒன்றிற்குரியவர் : சரியை
உரு - அசத்து, விக்ரகம், உருவம்.
உரு இயல் - உருவம், பூதமொடு இது உபாதான வடிவமாகும். ஒ.அரு இயல், மரு இயல், இரு இயல்.
உருஉடம்பு - பருவுடல்,
உருஉடையான் - உருவமுள்ள இறைவன்.
உருஉயிர் - சகலர். பா. விஞ்ஞானகலர்.
உருக்கு-நெகிழச்செய். ஒ. உறுக்கு
உருகு - அன்பு, ஒ. திருகு,
உருத்திரன் - சங்காரகர் ஐவரில் ஒருவர்.
உருத்திரபசுபதிநாயனார்-மறையவர். திருத்தலையூர் சோழ நாடு, தாமரைமடுவில் கழுத்தளவு நீரில் நின்று, திருவைந் தெழுத்தையும் திரு உருத்திரத்தையும் சேபித்தும் வந்தவர் . இலிங்க வழிபாடு (63)
உருத்திராக்கம் - உருத்திராக்க மணி அல்லது மாலை. சிவச்சின்னம்.
உருமேனி - இறைவன் மூன்று மேனிகளால் ஒன்று. உயிர்கள் தம் கண்ணால் காணும்படி இறைவன் எடுக்கும் சகள வடிவம். பா. திருமேனி,
உருவகம்-உவமானத்தை உவமேயமாகக் கூறுதல்.
உருவத்திருமேனி-மகேசுவரன், உருத்திரன், மால், அயன்.
உருவம் ஆதி ஐந்து - உருவக் கந்தம்,வேதனைக் கந்தம், செஞ் ஞானக் கந்தம், விஞ்ஞானக் கந்தம், வாசனைக் கந்தம்
உருவப் பிரபஞ்சம் - அசேதனப் பிரபஞ்சம்.
உருவன் - திருமேனியன்.
உருவாதிஐந்து- உரு ஐந்து எடு உருவாதி ஐந்தும் கூடி வருபவன் (சிசி பப70)
உருவாதி கந்தங்கள் - இவை ஐந்து. பா. கந்தங்கள்
உருவாதிசதுர்விதம்-உருவாதி நான்கு.
உரை - 1. ஆகமம் 2 கருத்துரை, பொழிப்புரைமுதலியன3.கூறுவது 4. அளவை 5. சத்தம் (பொருள்).
உரை - இது பிரமாணம் நான்கைக் குறிக்கும். அவை பிரமாணம், இறை பிரமேயம், நீபிரமாதா, நின் பிரமிதி.
உரை இலக்கணம் - பதம், பதப்பொருள், உதாரணம், வினா, விடை என்னும் ஐந்து.
உரைக்காணல்-விளங்க அறிதல்
உரைச்செய்யுள் - உரையாகிய செய்யுள்.
உரைப்பர் வேதம் - வேதம் உரைப்பவர். தேவர், முனிவர், சித்தர், முதலியவர்.
உரைபிரமாணம் - நூல் பிரமாணம் -
உரையளவை - ஆகமப்பிரமாணம்.இது மூன்று வகை 1. உபதேச உரையளவை: ஞான காண்டம் பற்றி ஒப்பிலா இறைவனின் இயல்புகளைத் தான் உணருமாறும் பிறர் உணருமாறும் அறிவுறுத்துவது. 2. மாத்திரை உரையளவை: உபாசனா காண்டம் பற்றி மனத்தை அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை மாத்திரம் ஆகும். 3. தந்திர உரையளவை: தரும காண்டம் பற்றிப் பின்னோடு முன் மாறுபாடுகளின்றுப் பேணுவது.
உரையா - தேயாது. எ-டு அருவம் உரையாது.
உரையால் அனுமானம் - வேறு பெயர். ஆகமலிங்கா அனுமானம், அனுபவப் பிரமாணம், இப்போது ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினைகளால் விளைவு என்று ஆகமங்களில் கூறுவதைக் கொண்டு, இப்பிறவியில் செய்யும் நல் வினைதீவினைகளும் வருகின்ற பிறவிகளில் இன்பதுன்பங்களை நிகழ்விக்கும் என்னும் கூற்று. இதனைச் சிவஞான முனிவர் உரையனுமானம் என்பர். உரையிற்கோடல்-மூலத்தில் இல்லாத இனமான சொல்லை உரையிற் கொள்ளுதல். எ-டு ஆக்காது ஆக்கி நோக்காது நோக்கி என்று கூறியமையால், அவ்வாறே நொடித்து என்பதற்குமுன் நொடியாத என்று இல்லாவிட்டாலும், உரையிற் கோடல் என்னும் உத்தியால் வருவிக்கப்பட்டது.
"நோக்காது நோக்கி (நொடியாது) நொடித்துஅன்றேகாலத்தில்" (சிபோ பா4)
உலக ஆனந்தம்-சிற்றின்பம்
உலகம் - 1. உயிர்த்தொகுதி 2. பொருள் தொகுதி. உலகம் அவையம் பருப்புடையது.
உலகம் -1. பிரபஞ்சம் 2 புவனம். இது 224 பொதுவாகத் தத்துவ வழக்கில் உலகம் நான்காகும். அவை பின்வருமாறு:
1. சொல்லுலகம் (சத்தப்பிரபஞ்சம், இதில் மந்திரம் (11), பதம் (81), வன்னம் (51) என மூன்று அடங்கும்.
2.பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்) இதில் புவனம் (224), தத்துவம் (36) என இரண்டு அடங்கும்.
3.பருப்பொருள் உலகம் (அசேதனப் பிரபஞ்சம்).
4.அறிவுடை உலகம் - (சேதனப் பிரபஞ்சம்) புராண வழக்குப்படி பூலோகம், பரலோகம் (சொர்க்கம்), கீழ்மேல் உலகம் என உலகம் நான்கு வகை. இவ்வகையில் விண் ஏழு, பார் ஏழு ஆகியவையும் அடங்கும்.
உலகம்,கீழ் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்,
உலகம், மேல்-பூலோகம், புவர் உலோகம், சுவர்லோகம்,சனலோகம், தபோலோகம், மகர லோதும், சத்திய லோகம்
உலகவினை-தண்ணிர்ப்பந்தல் முதலியவை அமைத்தல். நிவர்த்தி கலையில் அடங்கும். அசுத்தப் போகத்தைத் தரும்.
உலகாயதர் - நாத்திகர். கடவுள் இல்லை என்னும் கொள்கையினர்.
உலகாயதம் - நாத்திக மதம். கடவுள் இல்லை என்னும் கொள்கையுள்ள சமயம் இதன் மூலவர் பிருகஸ்பதி
உலகாயவாதி- உடம்பு வேறாய் ஒன்றும் இல்லை என்னும் கொள்கையினர்.மகளிர் வயப்பட்டு நின்று துய்க்கும் இன்பமே வீடுபேறு என்பர்.
உலகியல்வழக்குரை-உலகியல் வாதம்.
உலகு - உயர்ந்தோர்.
உலண்டு.- கோற்புழு,
உலவம் - காற்று எ-டு உலவத் துக்கு மருவும் அனலோடு நீர் (சிசிப ப 11)
உலவாக்கிழி-குறையாப் பொன்முடிப்பு. திருஞானசம்பந்தர் சிவனிடமிருந்து பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
உறுதை -சிலந்தி
உலோக தருமிணி - போக காமிகட்குச்செய்யப்படும் சபீச தீக்கைவகைபா.சிவதருமிணி
உலோகம் ஐந்து - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
உலோகம் ஏழு - செம்பொன், வெண்பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.
உலோகம் ஒன்பது - தமனியம், இரும்பு, தாமிரம், ஈயம், வெள்ளி, பதுகம், இரதி, நாகம், கஞ்சம்.
உலோசனம் - கண்.
உலோபம்- இவறல். பகை 6ல் ஒன்று.
உலைவு - கேடு. எ-டு உலைவு இல் அரன் பதத்தை (சிபோ பா 51)
உவப்பு - மகிழ்ச்சி, எ-டு ஒரு பொருள் இவ்வியல் உவப்பு என உணர்க.
உவமானம் - ஒப்பு அளவை 8 இல் ஒன்று. நையாயிகர்கள் உவமானத்தைத் தனி அளவையாகக்கொள்வர்.ஆமா(கவயம் காட்டுப் பசு) என்னும் விலங்கைத் தெரியாதவனுக்கு, அது பசுவை ஒத்திருக்கும் என்று கூறுவது பொதுவாகக் கூறப்பெறும் எடுத்துக்காட்டு
உவமேயம் - உவமானத்தால் விளக்கப்படுவது.
உவமைத்தொகை-எ-டு ஆகாயக் கூத்தாட்டு ஆகாயத்திலுள்ள காற்றுடன் சென்று (குடத்தி லுள்ள காற்று) கலத்தில் ஒரு கூத்தாட்டுப் போன்ற நிகழ்ச்சியாகும் என்று விரித்துக் கொள்ள இடம் தருவது.ஆகையால் இது உவமைத்தொகை
"குடகாய ஆகாயக் கூத்தாட்டாம் என்பது”
உவர்- உவர்மண்.
உவர்ப்பு - வெறுப்பு, துவர்ப்பு.
உவா- அமாவாசை, பெளர்ணமி என இரண்டு.
உழத்தல் - முயலுதல், எ-டு உழத்தல் உழந்தவர் சிவன்தன் உருவம் பெறுவார்.
உழப்பு - முயற்சி, எ-டு பழக்கம் தவிரப் பழகுவது அன்றி உழப்புவது எனபெனே உந்தீபற (திஉ 2)
உழவாது - முயற்சி இல்லாமல், எ-டு உழவாது உணர்கின்ற யோகிகள் (திஉ 16)
உழவு - உழுதொழில், உழைப்பு. எ-டு உழவும் தனிசும் (கடமையும்) ஒருமுகமேயானால் இழவுண்டோ (கேடு)?
உழுவை - புலி எ-டு கொல்லரி உழுவை நாகம் (சிசி பப 86).
உளகம்பம்-உளநெகிழ்ச்சி.எ-டு உளகம்பம் கொண்டு உள்உருகி (நெவிது 60)
உளதாய்-இருப்பதாய், தோன்றுதல்
உளதாகச் சுட்டப்படுதல் -- மெய்யாகச் சுட்டப்படுதல்.
உளதாதல் - தோன்றுதல்.
உளம்,உளன் - புருடத்துவம், உயிர், ஆன்மா, அகம்.
உள்கிற்றை - கருதியவற்றை.
உள்குவார் - கருதுவார்.
உள் நீர்மை -உள்ளொளி
உள்பொருள் - உள்ளபொருள். ஒ. இல்பொருள்,
உள்வழக்கு-வழக்கு 6இல் 1 பா. வழக்கு
உள்ளடைவு - நுகர்வதற்குரிய முறை.
உள்ளது - முன்னரே இருப்பது, வினை.
உள்ளந்தக் கரணம் - உள் அகக்கருவி. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து. இது சைவசித்தாந்தத்திற்கே உரியது. இக்கருவிகளால் அறிவு பொதுவாகவும்
மனம் முதலிய அகக் கருவிகளால் சிறப்பாகவும் ஆன்மாவிற்கு உண்டாகும். இவ்வைந்தும் ஐந்து கஞ்சுகங்கள் போல (சட்டைகள் போல), ஆன்மாவிற்கு அமைவதால், அவை பஞ்ச கஞ்சுகம் எனப்படும்.
உள்ளம்-பா.உளம்
உள்ளல் - நினைத்தல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என் பது வள்ளுவர் வாக்கு
உள்ளது சிறத்தல் - கூர்தலறம், பரிணாமம், உயிர்மலர்ச்சி, படிநிலை வளர்ச்சி.
உள்ளொளி - ஆன்மா.
உளி - இரு எ-டு இங்குள வாங்கும் கலம்
உளை-கட்டு எ-டு ஒன்று என்ற நீபாசத்தோடு உளை காண் (சி.போ. பா 7).
உற-உற்று.
உறக்கம்-துயில்
உறவு - தொடர்பு, சுற்றம், நட்பு.உற்கை, பொற்கை - விளக்கும் பொன்கையும், பொலிவான கையில் விளக்கைப் பிடித்துச் சென்று பார்க்க இருள் விலகிப் பொருள்கள் தெரியும். அது போல, ஆன்மா அருளை அணைய இறைவனோடுசேரும்
உற்சவம்.- கோயில் திருவிழா.
உற்பத்தி - உண்டாக்கல், தோற்றம்.
உற்பத்திவாதம்-ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு என்னும் கொள்கை. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.
உற்பவம்-உற்பத்தி, பிறவி,உடல்
உற்பீ(ச்)சம் - வித்து, வேர் முதலியவற்றினின்றும் தோன்றும் பொருள்கள்.
உற்று - உறுதல்.
உற்று இடமாக - ஐம்பூத இடமாக.
உற்றுழி-ஆபத்து வந்த இடத்து.
உறு - அட்ை எ-டு துயர்உறு
உறுக்கு - தண்டித்தல் எ-டு உறுக்கிவளாரினால் (சிசிசுப (106) ஒ. உருக்கு
உறுப்பு - பொறி.
உறுவிக்கும் - பொருத்தச் செய்யும்.
உன்மத்தர் - கிறுக்கர்,
உன்ன - கருத, எ-டு உன்ன. அரியவன் இறைவன்.
உன்னரிய - உன்னுதற்கு அரிய, அறிதற்குக் கடினமான
உன்னல்-கருதுதல், விரும்புதல்.
உன்னில் - ஆராயின், கருதின்.
உனாவிடிய - நினைக்காத
ஊ - சிவன்,
ஊங்கும் உளை- மிகுந்த துன்பம்.
ஊசல் - ஊஞ்சல்,
ஊடல் - கலவிப்பிணக்கம்
ஊட்டல் - நுகர்வித்தல்.
ஊடு - நூல். எ-டு ஊடு போனதொரு (சிசி பப 246)
ஊண் - உணவு.
ஊமர்(ன்) - ஊமையன்,
ஊமன் - கூகை
ஊர்தல் - செல்லுதல்,
ஊர்த்த சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
ஊாத்துவ மாயை - மேல்நோக்கிய மாயை.
ஊரா - ஊரப்படாத ஊழ் - விதி, ஊழிற்பெருவலியாவுள' என்பது வள்ளுவர் வாக்கு.
ஊழ்வகை - விதிவகை மூன்று : பிராரத்துவம் (நுகர்வினை), சஞ்சிதம் (கிடைவினை), ஆகாமியம் (செய்வினை). நான்கு : ஆகூழ் (ஆதல்), போகூழ் (போதல்), இழவூழ் (இழத்தல்), ஆகலூழ் (ஆக்கல்), பின்னது திருவள்ளுவர் வகைப்பாடு.
ஊறு - பரிசம், உறுத்துணர்ச்சி ஐம்புலன்களின் ஒன்று.
ஊனகம் - ஊடல், எ-டு ஊனகத்தே உன்னுமிது (திப 49)
ஊனக்கண் - பசு அறிவு, குறையறிவு, எ-டு, ஊனக்கண் பாசம் உணராப் பதியை (சிவோ நூபா 9)
ஊனக் கூத்து - பிறப்பியற்கூத்து -
ஊனம் -1. சுட்டறிவாகிய குறைபாடு பொது இயல்பு 2 வாதனை மலம்.
ஊனநடனம்-மறைப்பாற்றலால் உயிர் மறைக்கப்பட்டு மலத்துடன் இயைந்து நிற்கும் நிலை.
ஊன் - உடல், தசை
ஊனையார் - ஊனை + ஆர். உடல்காரிய எ-டு ஊனையார் தத்துவங்கள்.
எக்கிரமம் - எவ்வரிசை
எச்சன் - திருமால்.
எச்சாப் பொருண்மை - மிஞ்சாமை ஆகிய பொருள்.
எடா - உட்கொண்டு, எடுத்து.
எட்டா இயல்பின் - நான்முகன், திருமால் ஆகிய இருவரும் சூளுரைத்துச் சிவன் அடி முடி அறுதி இடுவோம் என்று தேடியும் காணாத சிவன்
எட்டு எழுத்து - ஓம் ஆம் அவ்வும் சிவாயநம.
எட்டுக் கொண்டார் - விண், மண், நீர், தீ, வளி, மதி, கதிரவன், உயிர் என்னும் எட்டினையும் திருமேனியாகக் கொண்டிருக்கும் இறைவன்.
எட்டுப்பண்புகள் - செழுமை, வலிமை, துன்பம், இன்பம், பிரிவிலாது இருக்கை, அயல் நாடு சேரல், மூப்பு, சாதல்.
எட்டுமவர்-தன்முனைப்பாலும் நூலறிவாலும் இறைவனைக் காணவிழைவோர்.
எட்டும் இரண்டும் உருவான இலிங்கம் - எட்டும் இரண்டும் உருவாய் இருக்கின்றயகாரமாகிய ஆன்மா.
எட்டுரு-எட்டு உருவங்கள். எடு எண்ணுறும் ஐம்பூதம் முதல் எட்டுருவாய் நின்றானும் (திப 3). -
எடுத்துக்காட்டு - உதாரணம், அனுமான உறுப்புகளில் ஒன்றுவாயில்நேரிதல் ஆதலை விளக்குவது. எடுத்துக்காட்டு உவமை அணி - உவமேயப் பொருளுக்குக் கூறும் அறத்தை உவமையிலும் எடுத்துக்காட்டுவது. எ-டு
இல்லா முலைப்பாலும் கண்ணிரும் ஏந்திழைபால். உற்று (சிபோ பா49)
இதில் உவமேயமாகிய முதல்வனுக்குவெளிப்பட்டுவிளங்காத தன்மையையும் குருவடிவாகத் தோன்றுவதையும் கூறி, உவமையாகிய அன்பிற்கு வெளிப் பட்டு விளங்காத தன்மையும் அது முலைப்பால் கண்ணீர் வடிவாகத் தோன்றுவதையும் எடுத்துக்காட்டப்பட்டதால் எடுத்துக்காட்டு உவமையணி யாகும்.
எண்,எண்ணம்-மானதக்காட்சி.
எண்எண் கலை - 8 X 8 = 64 ஆயகலைகள்.
எண்ணி- ஆராய்ந்து.
எண்ணிய ஈசர் சதாசிவம்- தத்துவங்களுக்கு மேலாகவுள்ள ஈசுரம், சதாசிவம் என்னும் இரு தத்துவங்கள்.
எண்குணம்-எட்டுக்குணங்கள். இவை நல்லவை தீயவை என இருவகை.
எண்குணம் தீயவை - இவை உயிரின் எட்டுக் குற்றங்கள். அநாதியே மலத்தைப் பற்றுபவை : 1. சுதந்திரமில்லாமை 2. தூய உடம்பில்லாமை 3, இயற்கை உணர்வில்லாமை 4. பேரருள் இல்லாமை 5.முடிவிலாற்றல் இல்லாமை 6. முற்றும் உணர்தல் இல்லாமை 7. வரம்பில் இன்பமில்லாமை 8. இயல்பாகவே பாசம் நீங்காமை
எண்குணம் நல்லவை - இவை இறைவனின் அருட்குணங்கள்: 1. தன்வயனாதல் 2. துய உடம்பினனாதல் 3.இயற்கை உணர்வினனாதல் 4.முற்று முணர்தல் 5. இயல்பாகவே பாசங்களை நீக்குதல் 6 பேரருள் உடைமை 7. முடிவிலா ஆற்றல் உடைமை 8. வரம்பில் இன்பமுடைமை (பேரின்பம்)
எண்ணான் - நுகரான்.
எண்ணியறிதல் - ஆராய்தல்.
எண்ணுறுப்பு வணக்கம் - அட்டாங்க நமக்காரம். எட்டுறுப்புகளைக் கொண்டு வணங்குதல். தலை, கை இரண்டு, இரு செவிகள்,இரு முழந்தாள், மார்பு இவை நிலத்தில் படும்படி வணங்குதல்.
எண் நிலவு-மானதக் காட்சி.
எண் பேராயம் - கரணத்து இயல்வோர், கருமவதிகாரர், சுற்றத்தார், கடைகாப்பாளர், நகர மாக்கள், படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர்.
எண் மணம் - பிரமம், தெய்வம், பிரசாபத்தியம், ஆரிடம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம்
எண்மை - எளிமை.
எண்வகை - எட்டு வகை
எதிரது-வருவது.
எதிர்மறை உரை-இது இரண்டு, வெறும் எதிர்மறை உரை, பொருளுடைஎதிர்மறை உரை. அளவை சார்ந்தது.
எதிர்மறைமுகம் - எதிர்மாறுதலாகிய வாயில்
எதிரேகம், வெதிரேகம் - வேறுபாடு, எதிர்மறை.
எந்தாய் - எம் தலைவனே.
எந்தை - எம் இறைவன், என் தந்தை,
எம்பெருமான் - இறைவன், பெரியவன், பெருமை உடையவன்.
எம்மை - எப்பிறப்பு.
எய்தல் - அடைதல்,
எயில் - மதில்
எரி - நெருப்பு.
எரிசேர்ந்தவித்து-வறுத்த வித்து.
எரு - உரம்.
எல்லை - வரம்பு, அளவு, எ-டு, சொல்லப்புகும் இடம் எல்லை சிவனுக்கு என்று உந்தீபற (திஉ 29)
எலும்பு, என்பு - தந்து 6 இல் ஒன்று, திசு.
எவ்வம்- குற்றம், துன்பம்.
எழில் ஞானபூசை - அழகிய ஞானபூசை, இறைவன் திருவடி சேர உதவும் பூசை
எழுகாரியம் - சாவு
எழுமுனிவர் - அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டேயன்.
எழுத்து வகை - பா. கொடி காட்டும் எழுத்து.
எழுத்து வகைப்பிறப்பு - தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நாற்காலிகள், மனிதர், தேவர் ஆகியவை.
எழுப்புதல் - விளக்கமடையச் செய்தல். சம்பந்தர் எலும்பை எழுப்புவித்தல், பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
எற்ற - உதைக்க
எறிபத்த நாயனார்- கருவூர் சோழநாடு. சிவனடியார் துன்பம் நீக்கக் கோடரி ஏந்தியவர். சங்கம வழிபாடு (63)
என்பு - உடம்பு, எலும்பு.
என்மனார் புலவர் - என்று அறிஞர் கூறுவர். எ-டு அந்தம் ஆதி என்மனார் புலவர் (சிபோ நூபா 1).
ஏ - சிவன், திருமால்.
ஏகம் - ஒற்றுமை.
ஏகதாளம் - எழுவகைத் தாளங்களில் ஒன்று.
ஏகதேச உணர்வு-சிற்றறிவு.
ஏகதேச உருவகம் - எடுத்துக்கொண்ட பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகம் செய்து, ஏனையவற்றை உருவகம் செய்யாதுவிடல்
"ஐம்புல வேடரின் அயர்ந் தனை வளர்ந்து எனத்” (சிபோ நூபா 8)
இதில் ஐம்பொறிகளை மட்டும் வேடனாக உருவகம் செய்து, முதல்வனை மன்னனாகவும் ஆன்மாவை மன்னன் மகனாகவும் உருவகஞ் செய்யாததால், இது ஏகதேச உருவகம்.
ஏகதேசப்பொருள் - ஒரு பகுதி யாகிய பொருள்.
ஏகன் - உலக முதல்வன், பரம்பொருள். எ-டு ஏகனும் ஆகி அநேகனும் ஆனவன் (திஉ 5).
ஏகனாகி - ஒற்றுமைப்பட்டு.
ஏகனாகி ஒற்றுமைப்படுதல் - இதுபற்றிப் பல்வேறு கருத்துகள் உள்ளன. அவற்றைப் பின்வருமாறு சிவஞான முனிவர் எடுத்துக் காட்டுகிறார்.
"ஈண்டு ஏகனாகி ஒற்றுமைப் படுதலாவது"
1. குடிமுடைந்த வழிக் குடகாய மும் மகா காயமும் ஒன்றாதல் போல ஒற்றுமைப்படுதலா? 2. அன்றி, இப்பியை வெள்ளியென்பது போலத் திரிபுக் காட்சியால் ஒற்றுமைப்படுதலா? 3.அன்றி, மண்ணே குடம் என்பது போல ஒன்று திரிந்து ஒன்றாய் ஒற்றுமைப்படுதலா?
4.அன்றி, வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப்படுதலா? 5.அன்றி, தீயும் இரும்பும் போல ஒன்றினொன்று விரவுதலால் ஒற்றுமைப்படுதலா? 6. அன்றி, பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத்தால் ஒற்றுமைப்படுதலா? 7.அன்றி, கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனை மாத்திரத்தால் ஒற்றுமைப்படுதலா? 8.அன்றி, காய்ச்சிய இரும்பின் நீர்போல ஒன்றினொன்று இலயமாகிய ஒற்றுமைப்படுதலா? 9.அன்றி, பேயும் பேய்ப்பிடியுண்டவனும் போல ஆவேசத்தால் ஒற்றுமைப்படுதலா? 10. அன்றி, காட்டத்தின் எரிபோல விளங்காமையால் ஒற்றுமைப்படுதலா? 11. அன்றி, தலைவனும் தலைவியும் போல இன்ப நுகர்ச்சி மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? 12. அன்றி, நட்டோர் இருவர் போல நட்பின் மிகுதியால் ஒற்றுமைப்படுதலா? 13.அன்றி,ஆவும் ஆமாவும்போல ஒப்புமை மாத்திரையால் ஒற்றுமைப்படுதலா? என அவ்வச் சமயவாதிகள் மதம் பற்றி நிகழும் இன்னோரன்ன ஆசங்கைகளை எல்லாம் நீக்குதற்பொருட்டு அவனே தானே ஆகிய அந்நெறி என உவமே எடுத்துக்காட்டி ஓதினார்.
ஏகனாதல் - இறைவனுள் ஒன்றாதல்.
ஏகாங்க நமக்காரம் - தலைமேல் இருகை கூப்பி வணங்குதல்.
ஏகான்ம வாதம் - ஆன்மா ஒன்று என்னுங் கொள்கை. இக்கொள்கை உடையவர் ஏகான்ம வாதி. இது நான்கு வகை 1 பரிணாம வாதம் 2 கிரீடாப்பிரம வாதம் 3 மாயா வாதம் 4 சத்தப்பிரமம்
ஏகோ ராமர் - வீரசைவ ஆசாரியார்
ஏடெதிர் - மதுரை வைகையில் தேவார ஏட்டை எதிர் கொள்ளுமாறு திருஞானசம்பந்தர் செய்தல் (திப70) பா. திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.
ஏண் - வலிமை. எ-டு ஏனும் ஒன்றுடையவாகி எங்கும் அணு. (சிசி பப 150)
ஏணது-ஏற்புடைய, நிலையுள்ள. எ-டு ஏனது ஒன்று புற்கலத்தின் எய்தும் என்னின் நாசமே (Զ& լյլ 160)
ஏனும் - ஏற்கும், நிலையுள்ள. எ-டு ஏனும் ஒன்றுடைய வாகி (சிசிபப 150)
ஏதம் - குற்றம்
ஏத்துதல் - அருள்வழி நிற்றல்
ஏது-1 காரணம் - கொள்கையை நிறுவும் வாயில், மூவகை : 1. இயல்பு ஏது 2. காரிய் ஏது 3. அனுலப்தி ஏது. மற்றொரு பொருள் எற்றுக்கு
ஏந்திழை - அணிகலம் தாங்கும் அணங்கு.
ஏந்திழ்ையார் முத்தி-வீடுபேறு வகையில் ஒன்று. உலகாயதர் இவ்வுலகில் சிற்றின்பம் நுகர்தலை முத்தி என்பர். பா. முத்தி
ஏர் ஆர் - அழகுள்ள. ஏர் கொள் - எழில்மாகு, எ-டு ஏர்கொள் பொன் எயிலிடத்து (சி.சி.ப.ப154)
ஏர்மலி - எழுச்சிமிகு எ-டு ஏர்மலிபடை படைத்திட்டு (சி.சி. լյւյ297)
ஏய்ந்தமுறை-பொருந்தியமுறை.
ஏய்ந்தமுறை அடக்கம்- மந்திரங்கள் 11, பதம் 81, எழுத்து 51, புவனம் 224, தத்துவம் 36 கலை 5.
ஏயர்கோன் கலிக்காம நாயனார் - வேளாளர், பெருமங்கலம் சோழநாடு, சிவனைப் பரவையார்பால் சுந்தரர் தூதுவிட்டதைக் கண்டு மனம் நொந்து அவரைப் பார்க்கவும் மறுத்துத் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டவர். இலிங்க வழிபாடு (63).
ஏயா - பொருந்தா.
ஏயாது - பொருந்தாது.
ஏயான் - பொருந்தான்.
ஏலா - ஏற்கமாட்டாத,
ஏலாமை - இயையாமை,
ஏவல் - கட்டளை. பணிவிடை எ-டு அழிப்பு அரி ஏவல் என்றாய் (சிசி பப 278)
ஏவுமுதியோன் - தொழிற்படுத்தும் முதியோன்
ஏழ் அதிகரணம் - சிவஞான போதம் மூன்றாம் வெண்பா ஏழு அதிகரணங்களைக் கொண்டது. இதுவே அதிக அதிகரணமுள்ள வெண்பா இவற்றால் ஆன்மா உளது என்று நிறுவப்பட்டுப் பிற சமயக் கொள்கைகள் மறுக்கப்படுகின்றன.
ஏழ்கடல் - ஏழுகடல்கள். எ-டு ஏழ்கடல் செலுவில் ஏற்றும் (சி.சி.ப.ப.267).
ஏழ்கடல் செலுவில்-திருமால் மீன் வடிவில் ஏழுகடல்களையும் ஒரே செலுவில் அடக்குதல் செலு-செவுள் பா.செலு.
ஏழ் பருவ மங்கை - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
ஏழு -1, சிவம், பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை 2. பார் ஏழு 3. விண் ஏழு 4. கடல் ஏழு.
ஏழு உலோகம் - பொன், வெள்ளி, செம்பு,இரும்பு, ஈயம், தரா, கஞ்சம் ஏழு திருமுறைகளிலும் பாடப் பெற்ற தலங்கள் : 1. திரு மறைக்காடு 2. காஞ்சிபுரம் 3. திருவாரூர்.
ஏழு பருவ மங்கையர்-பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
ஏழுவிடங்க தலங்கள் - 1. திரு ஆரூர் வீதிவிடங்கர் அசபா நடனம் 2. திருநள்ளாறு - நகரவிடங்கர்-உன்மத்தநடனம் 3. திருநாகைக் காரோணம் - சுந்தரவிடங்கர் - வீசி நடனம் 4. திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம் 5. திருக்கோளிலி - அவனிவிடங்கர்-பிருங்கநடனம் 6.திருவாய் மூர்-நீலவிடங்கர் கமலநடனம் 7. திருமறைக்காடு - புவனிலிடங்கர்- கம்சபாத நடனம்
ஏழுவகை இசைகள் - இனி, உழை,கைக்கிளை, குரல், துத்தம், தாரம், விளரி.
ஏழுவகை முனிவர்-கெளதமர், பரத்வாசர், விசுவாமித்திரர், சமதக்கனி, வசிட்டர், காசிபர், அந்திரி. ஏழுவகைத் தாளங்கள் - துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏகதாளம்.
ஏழுர் விழாத் தலங்கள் - 1. திருவையாறு 2 திருப்பழனம் 3. திருச்சோற்றுத்துறை 4 திருவேதி குடி 5, திருக்கண்டியூர் 6. திருப்பூந்துருத்தி 7. திரு நெய்த்தானம். -
ஏழை - அறிவிலி, எளியவன்.
ஏழையின் ஒன்று சொலி மன்றத்து நின்றவர் - ஏழை இரக்கம் வாய்ந்த பெண். யாழ்ப்பாணத்து மன்னனின் ஊமை மகள். அவன் புத்த குருவுடன் தில்லைக்கு வந்தபோது, தன் மகளையும் அழைத்து வந்தான். புத்தகுரு மாணிக்கவாசகருடன் முறைதவறி உரையாட, அவர் புத்த குருவை ஊமையாக்கினார். இது கண்ட மன்னவன் தன் மகள் ஊமையை நீக்கியருளுமாறு வேண்டினான். ஊமை நீங்கிய பின்,அவள் வாயிலாகவே திருச்சாழல் பாடுவித்தருளினார். திருமயிலாடுதுறை சிவனேசச் செட்டியார் திருமகள் பாம்பு கடித்து மாண்டாள். அவளை உரிய முறையில் நல்லடக்கம் செய்து எலும்பும் சாம்பலும் எடுத்துக் குடத்துள் வைத்துக் கன்னிகா மாடத்திலே வைத்துப் பூசை செய்து வந்தனர். திரு ஞானிசம்பந்தர் "மட்டிட்ட புன்னையம்” என்னும் திருப் பதிகம் பாடி அவளை எழுப்பி அருளினார். (திப 65)
ஏற்புழிக்கோடல் - பல பொருள்களுக்குரிய ஒரு சொல் வரு மிடத்தில், அவ்விடத்திற்கேற் றவாறு,பொருள்கொள்ளுதல். பராசத்தி, கிரியா சத்தி, இச்சா சத்தி, ஞான சத்தி, திரோதன சத்தி என்னும் 5 சத்திகளும் அருட்சத்தி என்றே கொள்ளப்படுதல், சிவஞானபோதம் நூற்பா 5 இல் அருள் என்றது வினைப் பயன்களை அனுபவிக்கச் செய்யும் என்ப்தற்கேற்ப ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால் திரோதன சத்தியைக் குறிப்பதாயிற்று.
ஏறு - நந்தி,
ஏனகம் - பாவம். எ-டு ஊன கத்தே உன்னுமது என் என்ற னையேல் ஏனகத்து (திப 49)
ஏனாதிநாதநாயனார்-சான்றார். எயினனுர் சோழநாடு, திருநீற்றுப்பேரன்பர். சங்கமவழிபாடு (63).
ஐ - சிவன், அழகு ஆகுபெயர்.
ஐக்கியம் - ஒன்றிப்பு.
ஐக்கிய வாதசைவம் - ஆகந்துக மலம் இருக்க, அறிவை மறைக்க வேறு ஒரு மலம் தேவை இல்லை என்னும் கொள்கை இதில் நம்பிக்கையுள்ளவர் ஐக்கியவாதசைவர். இவருக்கு வேறுபெயர் ஐக்கியவாதி.
ஐங்கரன்-5 கைகளைக் கொண்ட கணபதி.
ஐங்கணை - பஞ்சபாணம். தாமரை, மா, அசோகு,முல்லை, கருங்குவளை ஆகியவற்றின் பூக்கள்
ஐங்கலைகள் - சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அவை கலை எனப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அநீதை. இவை கீழிருந்து மேல் அடுக்காய்ப்பர்வியுள்ளன.ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூட, அழிப்பவனாகிய உருத்திரனும் உள்ளான். கீழ்க்கீழ் உள்ளவர் மேன்மேல் உள்ளவரால் படைக்கப்படுபவர். இக்கலைகளில் தத்துவங்களும் புவனங்களும் உள்ளன. இக்கலைகளிலுள்ள உலகங்கள் கீழிருந்து ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலே உள்ள சாந்திய தீத கலையிலுள்ள உலகங்கள் அழிவதே முற்றழிவு. அதாவது, சருவசங்காரம். அதுவே மகா சங்காரம் என்றும் சொல்லப்படும். ஆகவே, அந்த முற்றழிவைச் செய்பவன் மகாருத்திரன் எனப்படுவான். இவனையே சைவசித்தாந்தம் முதற்கடவுளாகிய சிவன் என்று கூறும். ஐந்து கலைகளுக்குரிய சஞ் ரிக்கும் கடவுள்கள் பின்வரு மாறு: 1. நிவிர்த்திகலை - பிரமன் 2. பிரதிட்டா கலை - விட்டுணு 3 வித்தியா கலை- உருத்திரன் 4. சாந்தி கலை - அனந்த தேவர் 5. சாந்திய தீத கலை - சதாசிவர்.
ஐதிகம் - மரபில் வரும் செவி வழிச் செய்தி அளவை, அளவை இல்லாதது என இருவகை, ஆலமரத்தில் பேயுண்டு என்பது காணாத வரையில் அளவை இல்லாதது. புற்றில் நாகம் என்பது அளவை. சான்றோர் வாக்கே மூலமாக அறிதலால், ஐதிகம் சப்தத்தில் அடங்கும்.
ஐந்து - பொருள், பொறி, புலன் முதலியவற்றை ஐந்து ஐந்தாகப் பாகுபடுத்திக் கூறுதல் எ-டு ஐம்பொறிகள்.
ஐந்து அக்கினி - வடவை, தீத்திரள், மடங்கல், வடவாமுகம், கடையனல்.
ஐந்து அவத்தை - ஐந்து பாடு பா. ஐந்து காரிய நிலைகள்.
ஐந்து உருவம்-வேதனை, குறிப்பு, பாவனை,விஞ்ஞானம், உருவம்
ஐந்து எழுத்து - அஞ்செழுத்து நமசிவாய,
ஐந்து உறுப்புவணக்கம்-பஞ்ச அங்கநமக்காரம் கை இரண்டு, முழந்தாள் இரண்டு, தலை ஆக ஐந்தும் நிலம் பொருந்த வணங்கல்
ஐந்து கந்தம் - உருவம், வேதனை, அறிவு, குறி, வாதனை என ஐந்தின் தொகுதி.
ஐந்து கந்தம் அறக்கெடுகை முத்தி-வீடுபேறு வகைகளில் ஒன்று. பெளத்தர்கள் உருவம், அறிவு, வேதனை, குறி, மணம் ஆகிய ஐந்து தந்தங்கள் அழி வதையே முத்தி என்பர்.
ஐந்து காரிய நிலைகள் - நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல். இவை காரிய அவத்தைகள், காரண அவத்தை மூன்றில் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்வது.
ஐந்து நான்கு முன்று இரண்டு ஒன்று - கன்மம் இல்லையாயின், பிறப்பு வேறுபாடும் இராது. அதனால், உடல் ஐம்பொறிகளும் ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்னும் அறிவுகளும் இரா.
ஐந்து சீலம் - ஐந்து ஒழுக்கம், இன்னா செய்யாமை, உண்மை, ஒதுநிலை, அத்தேயம், சங்கிரசம்
ஐந்து சுத்தி-சிவபூசைக்கு முன் செய்யப்படும் செயல். அதாவது, பூத சுத்தி, மந்திர சுத்தி, திரவிய சுத்தி, ஆன்ம சுத்தி, இலிங்க சுத்தி
ஐந்தொழில்-படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஒ. முத்தொழில்.
ஐந்து மலம் - ஆணவம்,கன்மம், மாயை, திரோதனம், மாமாயை.
'ஐம்புல வேடர் -ஐம்பொறிகள் வேடராகவும் ஆன்மா மன்னவன் மகனாகவும் உருவகம் செய்யப்படாமை.ஆகவே,இது ஏக தேச உருவகம் உணர்த்த, உணர்ந்து அரசகுமாரன்வேடர் சூழலை விட்டு நீங்கி அரசியல் சூழலை அடைந்து இன்புறுவது போல, உயிரும் ஐம்புலச் சூழலைவிட்டு நீங்கி முதல்வ னது திருவருட் சூழலை அடைந்து இன்புறும்.
"ஐம்புல வேடனின் அயர்ந் தனை வளர்ந்து எனத்” (சிபோநூபா8)
ஐம்புலன்கள் - ஒசை, ஊறு, உருவம் (ஒளி), சுவை, நாற்றம், அகங்காரத்தின் தாமதக் கூற்றிலிருந்து தோன்றுபவை. ஐம்புலனுக்கு வேறு பெயர் தன் மாத்திரை. -
ஐம்பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, விசும்பு.
ஐம்பெருங்காப்பியங்கள் - வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை.
ஐம்பெருங்குழு - அமைச்சர், அந்தணர், சேனாபதியர், தூதர், சாரணர். -
ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி வேறுபெயர் அறிவுப்பொறி, ஞனேந்திரியம், அகங்காரச் சத்துவக் கூற்றில் மனம் தோன்றியபின், இப்பொறிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும், பா. ஐம்புலன். -
ஐயம் - ஐயப்பாடு, துணிவு பிறாவாமை, பிச்சை,
ஐயக்காட்சி - காட்சி வகையில் ஒன்று. ஒரு பொருள் ஐயத்திற்குரிய நிலை. அது சிலையா மனிதனா என்று துணிய முடியாத நிலை.
ஐயடிகள் காடவர் கோன் நாயனார் - குறுநில மன்னர், காஞ்சிபுரம் - தொண்டை நாடு. சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபட்டு 11ஆம் திரு முறையில் சேத்திர வெண்பா பாடியவர், திருப்பணிகள் செய்தவர். இலிங்க வழிபாடு (63)
ஐயன் - கடவுள்.
ஐயா -ஐயனை, குருவே ஐயுறவுச் செயல் - அபேதம், பேதம், பேதா பேதம், பதம், பாழி.
ஐயைந்து-உயிரானதுமலவடிவில் மறைப்புறுவது. அப்பொழுது, நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்னும் ஐந்து அவத்தைகளும் அவ்வவற்றிற்குரிய கருவிகளோடு தனித்து இயங்கி ஏற்ற இறக்கம் பெறுதலே ஐயைந்து ஆகும். செயற்படுங் கருவிகள் 35 (25+10)பா.அட்டவணை
ஐயைந்து வேறு - வேறாக நிற்கும், 25 கருவிகள். கனவில் தொழிற்படுபவை. ஐவகை இசைக்கருவிகள் - தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, கண்டக்கருவி.
ஐவகைச் சங்காரம் - பிரமன், விட்டுணு, உருத்திரன், அனந்ததேவர், சதாசிவர்.
ஐவகைச் சத்தி - பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி,
ஐவகைச்சமயம்-அறுவகைச் சமயத்துள் பெளத்தம் தவிர்த்த உலகாயதம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஐந்து சமயங்கள்
ஐவகைச்சுத்தி- தான சுத்தி, பூதசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலங்கச்சுத்தி,
ஐவகைச்சுற்றம்- நட்பாளர், அந்தணர், மடைத்தொழிலாளர், மருத்துவ கலைஞர், நிமித்திகப் புலவர்.
ஐவகைப்பாசம் - பா. ஐந்து மலம்,
ஐவகை முத்தி - சீவன்முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பரமுத்தி, பா. முத்தி,
ஐவகை வினை - உலக வினை, வைதிக வினை, அத்தியான்மிகவினை, அதிமார்க்கவினை, மாந்திரவினை என நல்வினை ஐவகை இவை ஒன்றுக்கொன்று ஏற்ற முடையவை.
ஐவர் - ஐந்து பேர், ஐங்குரவர், பஞ்ச பாண்டவர், ஐம்பொறிகள்.
ஒசித்து - முறித்து எ-டு கொம்பை ஒசித்து நடுதல்
ஒட்டி - அணைந்து.
ஒட்டு - முதல்வன் உயிர் உணர்வு, புலன் உணர்வு ஆகிய இரண்டும் ஒப்பு விரவி நிற்பவன். இருப்பினும், உயிர் உணர்வு போலப் புலன் உணர்வு பரவுகை இன்றி, ஏகதேச விளக்கமாக உள்ளது. உயிர் உணர் விற்குரிய அம்மேம்பாடு, அப்பரவும் உணர்வை இழந்த பசுத்தத்துவம் உடையாரிடம் அறியப்படாதது. ஆயினும், அவர்தம் பசுத் தத்துவம் நீங்கிய சிவப்பேற்றின் கண் அறியப்படும் என்பது இங்குப் புலப்பட வைக்கப்பட்டதால், அது ஒட்டு என்னும் பிறிது மொழிதல் அணியாகும்.
'கண்போல் அவயவங்கள் காணாஅக் கண்ணிலார் கண்பேறே கண் அக் கழல்” (சிபோ வெ 52)
ஒடிவின்றி - முறிவின்றி.
ஒடுக்கம் - ஐம்பொறிகள் அடங்கல். சுழுத்தி. பொறிகளில் கனவு ஏற்படுதல்.
ஒடுக்க முறை - தத்துவங்கள் தோன்றும் பொழுது கீழிருந்து எண்ணும் முறை. ஒ. தோற்ற முறை.
ஒடுங்குதல் - மறைதல்.
ஒடுங்குமிடம் - இடம், காலம் என்பனநாம் வாழும் உலகுக்கே உரியவை. அதற்கு அப்பாற்பட்ட இடத்தில் அவை இல்லை. இக்காலத்தில் வானவெளி அறிவியலிலும் புவிக்கு அப்பால் காலம், இடம் என்பன இல்லை என்றே கூறப்படுகிறது. -
ஒண்கருட தியானம் -ஒளி, பொருத்தியகருடதியானம்
ஒண்குரு - சிவகுரு, சான்றோர்.
ஒண் சிலம்பு - ஒளிபொருந்திய சிலம்பு.
ஒண்புதல்வா-ஒளிபொருந்திய மகனே.
ஒத்தார் - உடன்படுவர். எ-டு ஒத்தாரே யோகபரர் ஆனார் (திப 47).
ஒத்து - உடன்படு
ஒப்பு - ஒருநிகர் எ-டு ஒப்பிலா மலடி பெற்ற மகன் (சிசி பப17).
ஒரால் - நீங்குதல். ஒ. விராய்.
ஒருசாரன் - ஒரு பகுதியன்.
ஒருங்கு - ஒருசேர.
ஒருதலை - உறுதி.
ஒருபுடை உவமை - கருத்தாவால் ஆகாய பொதுத்தன்மை பற்றி உவமையாதலன்றிச் செய்யும் வகை பற்றி உவமை ஆகாமையால் ஒரு புடை உவமையாகும். செய்யும் வகையாவன: முதல்வன் சங்கற்பத்தால் செய்தல்; குயவன் தண்டு சக்கர முதலிய கருவிகளால் செய்தல்.
ஒரு பொருட்கிளவி - ஒரு பொருள் உள்ள பல சொற்கள். எ-டு பிரகிருதி, புமான், மகான், புருடன், அவத்தை, அவ்வியத்தம்,மூலப்பிரகிருதி
ஒருமகள் கேள்வன் - ஒருத்தி கணவன், சிவன், எ-டு ஒருகேள் கேள்வன் என்று உந்தீபற(திஉ19)
ஒருமலத்தார் - ஒருமலங் கொண்டவர். அதாவது, ஆணவமலம் மட்டும் கொண்டவர். எ-டு விஞ்ஞானகலர்.
ஒருமைப்பாடு - மக்கள் ஒருமைப்பாடும் தனிமனித ஒருமைப்பாடும் வழிபாட்டால் ஏற்படுபவை. அதேபோல, இயற்கையும் ஒருமைப்பாடு அடைகிறது. இயற்கையின் விளைபொருள்கள் வழிபாட்டில் பயன்படுவதால், அவை தூய்மை பெறுகின்றன. தனிமனித வாழ்க்கை, இன வாழ்க்கை, இயற்கையின் தொழில்கள் ஆக அனைத்துமே சமய வழிபாட்டில் ஒருமைப்பாடு அடை கின்றன. இதுவே தலையாய ஒருமைப்பாடு. .
ஒருவு,ஒருவுதல்-ஒன்றைவிட்டு நீங்குதல் .
ஒரோ ஒன்று - ஒவ்வொன்று.
ஒல்லை அறிவு-விரைவு அறிவு. எ-டு இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையில் அகலும் (சிபி 89),
ஒல்லையில் - விரைவில் எ-டு ஒல்லையில் அகலும்
ஒவ்வா- உடன்படா, ஒவ்வாதது. எ-டு ஒவ்வாதது என்று உந்தீ பெற (திஉ 25)
ஒழிதல் செய்தல் - தங்கவைத்தல் காலம், திக்கு ஆசனம், கொள்கை, குலம், குணம், விரதம், சீலம், தலம், செபம், தியானம் ஆகியவை (சிபி 94)
ஒழிபொருள் - எஞ்சு பொருள். எ-டு நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாசிதர்க்கும் நிகழ்த்தியது நீள் மறையின் ஒழிபொருள் (சிசி ப 267) ஒழுக்கம் நற்செய்கை அறவகை மூன்றில் ஒன்று. எ-டு ஒழுக்கம் விழுப்பம் தரும், மேன்மை தரும், நன்றிக்கு வித்தாகும்.
ஒள்சிலம்பு - திருவருள் பொருந்திய சிலம்பு.
ஒளி- புகழ் பார்வை, ஐம்புலன்களில் ஒன்று.எ-டு ஒளியான திருமேனி
ஒளியன் - புகழ்மிக்க சிவன்.
ஒற்றித்து - ஒற்றுமைப்பட்டு நின்று.
ஒற்றுமை - இயைபு
ஒன்பதாம் திருமுறை -திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இவ்விரண்டையும் பாடியவர்கள்: 1. திருமாளிகைத் தேவர் 2.சேந்தனார் 3.கருவூர்த் தேவர் 4. பூந்துருத்தி நம்பி காடநம்பி 5. கண்டராதித்தர் 6.வேணாட்டடிகள் 7.திருவாலியமுதனார் 8.புருடோத்தம நம்பி 9.சேதிராயர்.
ஒன்பது கோள்கள் - பா. நவக்கிரகம். -
ஒன்பது தீர்த்தங்கள் - கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரசுவதி,காவிரி,குமரி,பாலாறு, சரயு.
ஒன்பான் சுவைகள் - இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம்.
ஒன்றாக - ஒருதலையாக
ஒன்றாதல் - இறைவனின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. உடலிலிருந்து உயிர் வேறுபட்டது. ஆனால், உடலோடு இரண்டறக் கலந்தது. அதுபோல், ஆன்மாவிலிருந்து கடவுள் வேறுபட்டாலும், அதனோடு கடவுள் ஒன்றுபட்டவரே. அதாவது, கலப்பினால் ஒன்று. அவையேயாய் நிற்றல் பா. உடனாதல், வேறாதல்.
ஒன்று - ஒவ்வொரு குறிப்பிட்ட காலம், அது, இறை.
ஒன்று அணையா முலத்து - இது சிவஞானபோதவெண்பா 28 இல் உள்ளது. இதில் கூறப்பட்டவை, கேவல சாக்கிரம், கேவல . செப்பனம், கேவல சுழுத்தி, கேவல துரியம், கேவல துரியாதீதம் ஆகிய ஐந்து காரண காரிய அவத்தைகள்,
ஒன்று அலா - உருவம் அருவம் என்று ஒன்று இல்லாத, எ-டு ஒன்று அலா ஒன்றால் உளது ஆகி நின்றவாறு (சிபோபா.5)
ஒன்று அன்று - வெற்றுப் பொருள் அன்று. எ-டு ஒன்றன்று இரண்டன்று உளதன்று இல தன்று (திப 58).
ஒன்று ஒளிக்கும் - அறிவு மேலிட்ட காலத்து ஆணவ ஒளியும் ஆணவம் மேலிட்ட காலத்து அறிவு ஒளியும் உண்டாகும்.
ஒன்றும் இரண்டும் மலத்தார் -ஒரு மலத்தைக்கொண்ட விஞ் ஞானகலரும், இருமலத்தைக் கொண்ட பிரளயாகலரும்.
ஓ - பிரமன்.
ஓக்கிய - உயர், நல்ல, எ-டு ஓக்கிய சத்தி.
ஓங்காரம்- ஓம் என்னும் மாந்திரம்
ஓங்கார உரு - சிவன்.
ஓங்குநுதல் ஒலக்கமண்டபம் - சாக்கிர வீடு என்னும் நெற்றியாகிய ஓலக்க மண்டபம்.
ஓசை - இசை, ஐம்புலன்களில் ஒன்று.
ஓடம்-தோணி,பாட்டு சம்பந்தர் ஆற்றில் கோலின்றிச் செல்லுதல்.
ஓட வகை - கரிமுக வம்பி, பரிமுக வம்பி, அரிமுகவம்பி, தோணி, கப்பல் என ஐந்து.
ஓட்டு - இயக்கு, இயக்கம். எ.டு.ஓட்டு அற்று நின்ற உணர்வு பதி முட்டித் (திஉ 13).
ஓட்டற்று - போக்குவரத்தற்று, அசைவற்று.
ஓடாப்பூட்கை - குலையா மன உறுதி
ஓடிய தேர்-திருவாரூர் வாழ்ந்த மனுநீதிச் சோழன் தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இறந்த பசுவின் கன்றுக்காகக் கொல்லுதல் எமன் தன் மகனைப் பிடித்து வருத்தாதபடி இருக்கவே பாவம் நீங்கும் இச்செயலை அவன் செய்தான், அறம் நிலை நாட்டினான் (போப50)
ஓதனம் - சோறு, எ-டு ஒழிவின்றி ஒதனமும் அறவுண்ண (சிசி பப 202).
ஓத்தல் - ஆராய்தல்,
ஓத்து- இயல், மறை எடு அகத்தியனுக்கு ஓத்து உரைக்கும். ஓதப் பட்ட விதி.
ஓதிய வாசுதேவர் - வாசுதேவராய்த் திருமால் துவாரகையிலே இருக்க, வியாக்கிர பாதமுனிவர் மகனாகிய உபமன்னியுமாமுனிவர் கயிலாயத்துக்குச் செல்ல இருந்தார்.அவரை வாசுதேவர் கண்டு அங்கே செல்லாமல் தன்னுடனேயே தங்கிக் காட்சியளிக்க வேண்டினார். உபமன்னயு முனிவர் குற்றமற்ற ஞானக்கண்ணாலே உரிய தீக்கை செய்து அவரைச் சிவ பக்தராக்கினார். வாசுதேவரும் ஞான நிறைவோடு அதனை ஏற்றுக் கொண்டார் (சிசி பப 287)
ஓதுவார் - கோயிலில் தேவாரம் முதலிய அருட்பாக்கள் பாடும் சைவ வேளாளர்.
ஓமம் - யாகம், வேள்வி, இதனைச் செய்ய நெருப்பு,நெய், சுருக்கு, சுருவம் ஆகியவை வேண்டும்.
ஓமக் கருவிகள் - நெருப்பு, நெய், சுருக்கு, சுருவம், குழி.
ஓமகுண்டம் - ஓமக்குழி
ஓமித்தல் - ஓமஞ்செய்தல்
ஓம்-ஓங்கார மந்திரம், பிரணவம்
ஓம் என்றான் உலகநாதன் -பிருகு முனிவர் சாபத்தாலே அஞ்சிப் பரமேசுவரனை நோக்கித் திருமால் தவஞ்செய்தார். பரமேசுவரனும் மனம் இரங்கி, “அஞ்சற்க உனக்கு வேண்டியது யாது” என்று கேட்டார். பிருகு முனிவர் சாபத்தைத் தீர்த்தருளத் திருமால் வேண்டினார். பரமேசுவரனும், "பிருகு என் அன்பர். நின் விருப்பம் நிறைவேறும்.” என்றார். அச்சாபத்தினாலே எடுக்கும் பிறப்பு தோறும் தன்னைக் காத்தருள வேண்டும் என்று இறைஞ்சினார். "அப்படியே நடக்கும்” என்றார் பரமேசுவரனும் (சிசி பப300).
ஓர்க்கும் - ஆராயும்.
ஓர்த்தல் - ஆராய்தல்
ஓர்ப்பான் - உணர்வான்.
ஓர்மையதாய் - ஒன்றாக நிற்பதாம்.
ஓரார் - உணரார். -
ஓரின்பத்து உள்ளான் - இறைவன்.
ஓருறுப்பு வணக்கம் - ஏகாங்க நமஸ்காரம் தலைமட்டும் குறைந்து வணங்கும் ஐவகை வணக்கங்களில் ஒன்று.
ஓலக்கம் - அவை,
ஓலக்க மண்டபம் - அவை மண்டபம், அரச மண்டபம். ஒவா - ஒழியா, எ-டு ஒவாத்தவமிக்கோர்.
ஒவாது - இடைவிடாது.
ஒவாமல்- ஒழியாமல்.
ஒவாமை - ஒழியாமை, எ-டு ஒவாமையன்றே உடல்(திப 44)
ஓவின போது - நீங்கும் காலை எ-டு ஓவினபோது சுத்தம்.
ஒளடதம்- மருந்து. அருவிடம் நீக்கும் மருந்து.
ஒளத்திரி தீக்கை - சிவதீக்கை 7 இல் 1 எ-டு பரவிவரும் ஒளத்திரியால் பாசநாசம்.
க - பிரமன், திருமால்,ஆன்மா.
கங்குள் - இருள். v
கங்கை - 1. தீர்த்தங்கள் 9 இல் ஒன்று 2. சிவன் முடியில் இருப்பது
கஞ்சுகம் - சட்டை, பா. பஞ்ச கஞ்சுகம்.
கஞ்சுக சரீரம் - சட்டை உடல்
கடகம் - 1. காப்பு 2. இராசி 12 இல் ஒன்று.
கடம் - குடம் ஒ. படம்
கடம் படம் - குடம், புடவை, சீலை.
கடந்த - வென்ற
கடந்த நிலை அறிவியல் - மெய் யறிவியலின் ஒருவகை பட்டறிவைச் சாரா நிலையை ஆராய் வது.சைவசித்தாந்தம் ஏற்பது.
கடந்தை-திருப்பெண்ணாகடம்.
கடல் - 1. ஆழி. பெருங்கல், சிறு கடல் என இருவகை 2. நீர்க்கு இடங்கொடுத்து நிற்கும் வான்.
கடல்படுபொருள்கள்-பவளம், முத்து, சங்கு, ஒர்க்கோலை, உப்பு என ஐந்து.
கடவுள் - சிவம்.
கடவுள் இயல்பு - எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி யாவற்றையும் கடந்திருப்பது. பா. இறைவன் இயல்புகள்.
கடவுள் இருவர் - சிவஞான போதம் மங்கல வாழ்த்தில் கூறப்பெற்ற மலைவில்லா ராகிய சிவன் என்னும் தென் முகக் கடவுளும் பொல்லா ராகிய பொல்லாத பிள்ளை யாரும்.
centerகடவுள் தொழில்கள்
பூதம் தெய்வம் தொழில்
1. மண் அயன் படைத்தல்
2. நீர் மாயன் அளித்தல்
3. தீ சிவன் அழித்தல்
4.கால் மகேசுரர் மறைத்தல்
5.வான் சதாசிவர் அருளல்
கடன் - கடமை. என் கடன் பணி செய்து கிடப்பதே.
கட்டி - வனப்பாற்றலாகிய பராசத்தி
கட்டு- தளை, பந்தம், தொடக்கு. பா. பெத்தம்
கட்டுரை - உறுதிமொழி.
கட்டுரைக்கல் - சொல்லுமிடத்து.
கடா - வினா.
கடாதி- குடல், கால் முதலியவை.
கடாவிடை - வினாவிடை புறச்சமயத்தார்க்கு வினா எழுப்பி, அதற்குச் சிவஞான சித்தியார் கூறும் விடை எ-டு துறை பலவும் கடாவிடையால் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலில் சொல்லகிற்பாம்(சி.சி.ப.ப 11) கடிய பிறப்பு- துன்பப் பிறப்பு.
கடிவின்றி- நீக்கமின்றி.
கடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு
என மூன்று.
கடுநரகக்கொடுமைகள்-1மையல் தரும் செக்கில் இடைத்திரித்தல் 2 தீவாய் இட்டு எரித்தல் 3. தக்க நெருப்புத்துண் தழுவுவித்தல் 4. நாராசம் காய்ச்சி செவிமடுத்தல் 5 நா அரிதல் 6. அவரவர் ஊனை அவரவரே தின்னுமாறு அடிக்கப்படுதல் இம்மை வாழ்வில் பாவம் செய்பவர்கள் இக்கொடுமைகளுக்கு உள்ளாவர். (போப45).
கடுநரகு - கொடிய நரகம்
கணக்கு - முறைமை, முறையீடு.
கணநாதநாயனார்-மறையவர். சீர்காழி-சோழநாடு திருக்கோணி யப்பருக்குச் சரியை கிரியை செய்தவர். குருவழிபாடு (63).
கண பங்கம் -கணந்தோறும் தோன்றி அழிதல்.
கணபங்க வாதம் - எல்லாப் பொருள்களும் கணத்தில் அல்லது நொடியில் அழியும் என்னுங் கொள்கை. இக்கொள்கை உடையவர் கணபங்கவாதி.
கணம் -கூட்டம் நொடி எடு தேவகணம்.
கணம்புல்லநாயனார்- இருக்கு வேளுர்-சோழநாடு கணம்புல் அறுத்து விற்று நெய்விளக்கிட்டவர். இலிங்க வழிபாடு (63).
கணவகை - இது 18, 1. அமரர் 2. சித்தர் 3 அசுரர் 4 தைத்தியர் 5. கருடர் 6 கின்னர்ர் 7 நிருதர் 8 கிம்புருடர் 9 காந்தருவர் 10, இயக்கர் 11 விஞ்சையர் 12 பூதர் 13. பைசாசர் 14அந்தரர் 15.முனி வர் 16.உரகர்17 ஆகாயவாசிகள் 18. போகபூமியர்.
கண்-1ஒளி 2ஓர் அறிவுப்பொறி ஐம்பொறிகளில் ஒன்று. ஊனக் கண், ஞானக்கண் என இரு வகை
3. கருதியுணர்தல் 4.துணை
கண் அகல் ஞாலம் - அகண்ட புவியாகிய உலகம்.
கண் இருள் - அக இருள்.
கண்டஉரு - காணப்பட்ட சிவ
லிங்கம்.
கண்கூடு - பிரத்தியட்சம்.
கண்டதை - சுட்டி உணரப்பட்ட உலகப் பொருள்.
கண்டத்தை - 1 எதையும் எ-டு கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்தவர் (திகப 8) 2. உடம்பையும் முப்பொருளையும் கொண்டு3. கண்ணில் காணும் ஆசிரியர்.
கண்நயப்பு - கண்நலம். எ-டு நாயகன் கண்நயப்பு.
கண்நுதல்-வெற்றித்திருநோக்கு.
கண்ட நூல் - பிரமாண நூல்.
கண்டம் - கழுத்து, மிடறு,குரல்வளை.
கண்டராதித்தர் - 9 ஆம் திரு முறை நூலாசிரியர் 9 பேரில் ஒருவர்.
கண்டவியன் கட்டில் - கனவு
வீடாகிய கண்டம்.
கண்டனம் - முடியும் எ-டு கண்டனம் தொழிலுக்கு என்னில் (சிசிசுப 30).
கண்ணப்பன் - கண்ணப்ப நாயனார்-வேடர்,உடுப்பூர்தொண் டைநாடு. சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வந்த போது, தம் கண்ணைப் பிடுங்கி அதில் அப்பியவர். இலிங்க வழிபாடு அன்பிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் கண்ணப்பர் (திப 52) கண்ணழித்தல் - கூறிடல்.
கண்ணாம் - அறிவாம்.
கண்ணி - கருதி.
கண்ணிய - அறிவதாகிய.
கண்ணன் - திருமால்.
கண்டு - 1. படைத்து 2 பட்டறிவிலிருந்து அறிந்து.
கண்டுணர்தல்-ஆராய்ந்தறிதல்.
கண்ணுதல் - கருதுதல்.
கண்படல் - உறங்கல்,கனவிலா-உறக்கம்.
கண்பேறு - கண்ணின் சிறப்பு, மெய், வாய், மூக்கு, செவி ஆகிய நான்கும் தம்மிடம் வந்த பொருள்களை மட்டும் பற்றும்.ஆனால் கண்ணோ பொருள்களைச் சென்றும் நின்றும் அறிவது. உயிர் உணர்வோடு விரவியும் நிற்பது. இதுவே அதன் பேறு.
கண் வாசகம் - திருநோக்கு, பரிசம், வாக்கு எனப்படும் தீக்கை.
கண்ணார் - குருடர்.
கண்வலை -கவர்ச்சி வலை.
கணிதம்-நாராயணியம், வாராகம் முதலியவை.
கணிதர் - கணிப்பவர். எ-டு கடி வின்றியே கணிதர் (சிசிபப 199)
கணித்தல்-மானதமாகச் செய்தல்
கணை - வில்.
கத்தும் சமயக்கணக்கு - புற சமயத்தவர் கூறும் புன்மைக் கோவை,
கதம் - சீற்றம்
கதம் என- 'சட்டென.
கதி - 1. நிலை, தேவகதி, மக்கள் க்தி, விலங்கின் கதி நரகதி என நான்கு வகை 2 பிறப்பு 3 ஞா னம் (வீடுபேறு)
கதிர் - ஞாயிறு, ஒளி,
கதிர்வாள் - கருக்கரிவாள்.
கந்தம் - 1 நாற்றம் : ஐம்புலன் களில் ஒன்று 2 கிழங்கு கந்தம் மூலம் புசித்தல் 3.கந்தம் பூசுதல்: வழிபாட்டு முறைகளில் ஒன்று. கந்தம் ஐந்து - பா. ஐந்து கந்தம்.
கந்த புராணம் - முருகன் புகழ் புகல்வது. அரும்பெரும் புராணம் 3 இல் ஒன்று. பொதுப் புராணம் 18 இல் ஒன்று.
கந்தழி-ஒரு பற்றுக்கோடுமின்றி அருவாகத்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள். தொல் காப்பியத்தில் கூறப்பெறுவது.
கந்தரம்-கழுத்து. எடுகந்தரத்து அமைந்த அந்த இல் கடவுள் (சநி 2).
கந்தித்தல் - நாறுதல்
கப்பு - கவர்ச்சி.
கபிலதேவ நாயனார் - 11 ஆம் திருமுறையில் பின்வரும் நூல்களை அருளியவர்: 1. மூத்த நாயனார் திரு இரட்டைமணி மாலை 2. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை 3. சிவ பெருமான் திருவந்தாதி இத்திருமுறை நூல்கள் 40 ஐ இயற் றியவர்கள் 12 பேர்.
கபிலர் - உருத்திரர்.
கபிலன் - சாங்கிய மதாச்சாரியன் எ-டு இவ்வுரை கபிலன் சொல் ஆகுமது (சிசி பட 195).
கமலம் - தாமரை
கமலன் தாள் - பிரமன் திருவடி கமல முனிவர் - 18 சித்தர்களில்ஒருவர்.
கமர் - வயல்வெடிப்பு. வயல் வெடிப்பில் சிந்திய செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு என் னும் மாறிப்போன கட்டளைப் பொருள்களை 'அமுதுசெய்க'என்று மனத்திலே பயமில்லாமல் தம்முடைய கழுத்தை அரிந்து அச்சிவபிரானுக்குப் படைத்துப் பிறவிவேர் அரிந்து மூன்று பாசத்தையும் விட்டவர் அரிவட்டாய நாயனார். இங்கு வல்வினை மெல்வினையே ஆயிற்று (திப 20 பா. செய்யில் உகுத்த.
கமனதான விசர்க்க ஆனந்தம் -மொழி, கால், கை, எருவாய், கருவாய்.
கமை ஒற்றி - புலனடக்கி
கமையாக்காதல் - நிறைவற்ற அன்பு, எ-டு கமையாக்காதல் அமை சாது பழிச்சும் (சிநி1)
கயம் - யானை,
கரசரணாகதி சாங்கம் - தரப் பட்ட திருக்கை, திருவடி முதலியவை.
கரணம் - கருவி, மூவகை 1.அகக்கருவி: 1. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 2. மனம், வாக்கு, காயம்
2.உள் அகக்கருவி : காலம், நியதி, கலை, வித்தை, அராகம் (பஞ்ச கஞ்சுகம்).
3.புறக்கருவி: மெய், வாய், கண்,மூக்கு, செவி. 4.மாயையின் காரியத்தைத்தனு, கரணம், புவனம்,போகம் என நான்காகக் குறிப்பிடுவது சித் தாந்த வழக்கு தத்துவங்களைக் காரியமாக உடம்புகளும் உலகங்களும் ஏனைய உலகப் பொருள்களும் உள்ளன.அவை முறையே தனு, கரணம்,புவனம், போகம் என நான்காகக் கூறப் பெறும் .
5.அங்கம் 5 இல் ஒன்று.
6.பசுகரணம், சிவகரணம். கரணமாறாட்டம்-அகக்கருவிப்பிரிவு.
கரப்பு - கரப்பான். கரம்மன் ஆள் திகிரி ஏற்றான்கையில் ஆழிகொண்டு ஆட்சி செய்யும் திருமால்.
கராம் - ஆண் முதலை. எ-டு காலனை அன்று ஏவிக் கராம் கொண்ட பாலன் (திப 12)
கரி - யானை அங்கம் 4 இல் ஒன்று.
கரிமா - உடலை அதிகக்கன மாக்கிக் கொள்ளுதல் 8 சித்திகளுள் ஒன்று.
கரியவை - தீயவை எடுகரியவை உண்டேல் காட்டீர் (சிசிபப32)
கரு ஒன்றி நில்லார் - பிறந்து இறவாதவர்
கருத்தா-காரணன், செய்வோன்,முதல்வன். ஒ. அகர்த்தா.
கரு - உயிர், கருப்பம்.
கருப்பம் - காரணம்.
கருமேனி - மாய உடம்பு
கருடன் - கருடப்பறவை. இது ஆதி பெளதிகம்,ஆதி தைவிகம்,ஆத்தியான்மிகம் என மூவகை முதலாவது உலகத்தில் காணப்படுவது. அதற்கு ஆதி தெய்வமாகிய மந்திரம் ஆதிதைவிகக் கருடன். அம்மந்திரத்தின இடமாக நின்று, மாந்திரிகனுக்குப் பயன் அளிப்பதாகிய சிவசத்தி, ஆத்தியான்மிகக்கருடன்ஆகும்.
கருட தியானம் - கருடனை நினைத்தல். பாசத்தோடு பிணைந்துள்ளது உயிர். அப் பாசத்தினின்றும் விடுபடச் சிவோகம் பாவனையை அது மேற்கொள்கிறது. நஞ்சு தீர்வதற்குக் கருட பாவனையைப் பயன்படுத்தலாம் எனச் சைவ சித்தாந்தம் அறிவுறுத்துகிறது. நாகம் தீண்டிய ஒருவன் அந்த நஞ்சினின்றும் உய்தற்பொருட்டு மாந்திரிகன் கருடனின் அதிதெய்வமாகத் தன்னைப் பாவித்து,அந்நஞ்சை எடுத்து விடுகிறான். பின்னர்த் தன் பழைய நிலைக்கு வருகிறான். இவ்வாறு பாசத்திலிருந்து விடுபடுவதற்காகச் சிவோகம் பாவனை செய்யப்படுகிறது. பா. சிவோகம்பாவனை.
கருதல் - அளவைகளில் ஒன்று. காட்சி அளவையுடன் கருதல் அளவையையும் புத்தர் ஏற்பர். இவ்விரண்டிற்கு மேலாக உரையளவை தேவை இல்லை என்பது அவர்கள் கருத்து.
கரும மீமாஞ்சை-இதை நிறுவியவர் சைமினி, வேறுபெயர் பூர்வமீமாஞ்சை,வேத கர்ம காண்டத் திற்கேற்பத் தருமத்தின் இயல்பை ஆராய்வது.
கருமேந்திரியம் - பா. கன்மேந்திரியம்.
கருமேனி - மனிதமேனி ஒ திருமேனி.
'கரூர் சித்தர் - 18 சித்தர்களில் ஒருவர்.
கருவறை - கருப்பக் கிருகம். ஆலயத்தின் மையப்பகுதி. நம் நெஞ்சத்தில் இறைவன் இருப் பதற்குரிய அடையாளம்.
கருவாதை - பிறவித்துன்பம் எடு மாயக்கருவாதை.
கருவூர்த்தேவர் - 9 ஆம் திரு முறை நூலாசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
கருவி - கரணம். மனம், புத்தி, அகங்காரம்,சித்தம் என நான்கு இவற்றை மருவி வருவது ஆன்மா. இவ்வகக் கருவிகள் தமக்கு கீழுள்ளவற்றை நோக்கி அசத்தாயும் நிற்கும். ஆன்மாவோ அவ்வாறல்லாமல்,எப்பொழுதும் சித்தாய் நிற்கும்.
கருவி ஈர் ஐந்து - 5 + 5 =10 கருவிகள், சத்தாதி 5, வசனாதி5.
கருவுளமைப்பு - பேறு, இழவு (வறுமை), இன்பம்,பிணி,மூப்பு,சாக்காடு என ஆறு.
கருவேடம் - மாயப் பிறப்பும் தோற்றமும்,
கலத்தல் - கள்வனுடைய கள்ளத்தனமான முறைகளை அறிந்து அவர்களைக் கண்டுபிடிப்பது போல்,இறைவனது திருவருள் ஞானத்தைப் பெற்று,அதுவழியாக அவனை அறிதல்.
கலக்குதல் - குழப்புதல்.
கலம் - பாண்டம் எ-டு இங்குளி வாங்குனம் கலம்போல (சிபோ பா 65).
கலவி - மெய்யுறு புணர்ச்சி.
கலவிகளரி - சிற்றின்பக் களரி.
கல் - 1. பளிங்கு 2 துவைக்கும் கல். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார் குறிப்பறிந்து,அவர்தம் ஆடையைத் துவைத்துக் கொடுத்தவர்.தோழமை நெறியில் பிறவித் துன்பம் நீக்கியவர். சாக்கிய நாயனார் கல்லால் எறிந்தே வழிப்பட்டார்.
கல் ஆல் - கல் ஆலமரம், எ-டு கல்லால் நிழன்மலை (சிபோ மவா)
கல்லாட தேவநாயனார் -1ஆம் திருமுறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் பாடியவர் இத்திருமுறை நூல்களை இயற்றிய 12 பேரில் ஒருவர். கல்லால்நிழற்கடவுள் வரலாறுஇவர் தென்முகக்கடவுள். சிவபெருமான் வடிவங்களுள் ஒன்று. ஞானம் விரும்புபவர்கட்குச் சிவன் குருவடிவிலிருந்து அதனை அருளும் வடிவம். ஒரு காலத்தில் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்னும் 4 முனிவர் சிவனிடம் ஞானம் பெற்றனர். பின்,சிவன் ஒரு காலத்தில் நந்தி தேவருக்குச் சைவாகமங்கள் பலவற்றைச் சொல்லி,அவை பற்றிய ஐயங்களை நீக்கி அருளி னார். அவ்வாறு ஐயம் நீக்கியது சிவஞான போதத்தின் வழியே. கல் ஆல் என்பது ஒரு வகை மரம். அதனடியில் தென் முகக்கடவுள் வீற்றிருக்கின்றார் என்பது மரபு.
கல்லே மிதப்பாய் - கல்லில் கட்டிக் கடலில் தள்ளினும் பிழைத்து வந்த திருநாவுக்கரசர் பா. திருநாவுக்கரசர் அற்புதங்கள்.
கல்வி - அறிவை வளர்க்குங்கருவி. கல்வி கரையில,
கலாதி - கலை, காலம், வித்தை,இராகம், புருடன் என ஐந்து
கலாருபம் - கலை வடிவம். 64 எனப்படும் கேசரவடிவம். இதில் நிலம் முதலிய 24 தத்து வங்களும் வித்யா தத்துவம் ஏழும் சுத்த தத்துவம் ஒன்றும் அடங்கும்.
கலி - செருக்கு, எ-டு கலிஆழ்வேனை நின் (இஇவ)
கலிக்கம்ப நாயனார் - வணிகர் பெண்ணாகடம்-நடுநாடு சிவனடியார்க்கு நாள்தோறும் திரு வமுது அளித்தவர். சங்கம வழிபாடு (63)
கலிய நாயனார் - 'செக்கார். ஒற்றியூர் - தொண்டை நாடு. திருவிளக்குப் பணி செய்தவர். இலிங்க வழிபாடு (63)
கலை - உலகப்பகுதிகள். சுத்த மாயையின் காரியம், அத்துவா 6 இல் ஒன்று.ஆயகலைகள் 64 என்பது ஒருவழக்கு, தத்துவ முறைப்படி அது ஆறு வித்தை, அராகம், காலம்,நியதி, புருடன், மாயை. பொதுவாகக் கலையில் அழ குணர்ச்சி முந்தி, அறிவு பிந்தி,கன்மத்திற்குப்பின் தோன்றி, ஆணவத்தை ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சத்தியைத் தெரிவிப்பது மந்திரம்,பதம்,வன்னம், புவனம்,தத்துவம் ஆகியவற்றைத் தன்னுன் அடக்கியது.
கலை அடக்கம் - ஒவ்வொரு கலையின் அடக்கம் பின்வருமாறு. 1.நிவர்த்தி கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 28, இறுதி எழுத்து 1, புவனம்108. பிருதிவி தத்துவம் 1. அதி தெய்வம் அயன் (பிரமன்)
2.பிரதிட்டா கலை அடக்கம் - மந்திரம் 2, பதம் 21, எழுத்து 24, புவனம் 56. தத்துவம் 23, அதிதெய்வம் மால்.
3.வித்தையின் அடக்கம்-மந்திரம் 2, பதம் 20, பொருந்திய எழுத்து 7, புவனம் 27, வித்தியா தத்து வம் 7, அதிதெய்வம் உருத்திரன்.
4.சாந்திகலை அடக்கம்-மந்திரம் 2, பதம் 11, எழுத்து 3, புவனம் 18. தத்துவம் 3, அதிதெய்வம் ஈசன்
5.சாந்தி அதீத கலை - மந்திரம் 3, பதம் 1, எழுத்து 16, புவனம் 15, தத்துவம் 2, அதிதெய்வம் ஈசன் சதாசிவர்.
கலை அடக்க அட்டவணை
கலை நிகலை பி.கலை வித்தை சா.கலை சா.அகலை ஏய்ந்த முறை
மந்திரம் 2 2 2 2 3 11
பதம் 28 21 20 11 1 81
எழுத்து 1 24 7 3 16 51
புவனம் 108 56 27 18 15 224 தத்துவம் 1 23 7 3 2 36
அதிதெய் அயன் மால் உருத்திரன் ஈசன் சதாசிவர்
(சிசிசு 259, 260, 261)
கலையறிவு -கலைகள் 64 சாத்திரகலைகள் 16,
கலை ஆதி - கலை முதல்
கவர்ச்சி - பிளவு படுதல்.
கவயம் - காட்டுப்பசு.
கவலை - ஆணவ விளைவுகள் 7 இல் ஒன்று. கிட்டிய பொருள் பிரிந்த பொழுது வருந்துதல், ஆணவ மல காரியம்
கவி- 1. ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என நான்கு 2.குரங்கு
கவி மாலவன் - கவி - குரங்கு. மாலவன் திருமால்.
கவுணியர்-கெளண்டினியகுலத் தவர்.
கவுணியர்கோன் - திருஞானசம்பந்தர்.
கவுள மதம் - உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்
கவுளர் - கவுள மதத்தினர்.
கழல் - 1. வெற்றியைக்குறிக்கும் மணிவடம் 2. திருவடி
கழல் வீரன் -வெற்றி மறவன்.
கறங்கோலை கழற்சிங்க நாயனார் - மன்னர்,தொண்டை நாடு. சிவ பத்தர்.இலிங்க வழிபாடு (63),
கழறிற்றறிவார் நாயனார்-அரசர், வேறு பெயர் பெருமாணாயனார். கொடுங்கோளுர் - சேர நாடு, கூத்தபெருமான் பத்தர், இலிங்க வழிபாடு (63)
கழிப்பன் - வண்ணார்
கழிபேருவகை-பெருமகிழ்ச்சி.
கழிப்பித்த காரணம் - நீங்கிய ஏது. எ-டு காட்டிய உள்ளம்.
கழிஇ- கழுவுக, நீக்குக, எ-டுஅம்மலங் கழிஇ (சிபோநூபா.12)
களபம் - சந்தனம், நறுஞ்சாந்து. எ-டு களபம் மலி குறமகள் தன் மணிமுலைகள் கலந்த கந்தன் மலர் (சிபி 4)
களங்கம் - குற்றம்
களவு - திருட்டு. ஐந்து பெரிய பாவங்களில் ஒன்று.
கள் - மது ஐந்து தீய செயல்களில் ஒன்று. எ-டு கள் கொலை வெ ருனி காமம் கனவுகள் (சநி 18)
கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற்காண் (சிபோ பா 55) இறைவனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு.
கள்ளர் புகுந்த இல்லம் -ஆன்மாவின் அறிவு.
களியார - மகிழ.
களை - அசத்து. எ-டு வானே முதல்களையின் வந்து (சிபோ பா 56).
களைகண் - பற்றுக்கோடு.
கறங்கு - காற்றாடி
கறங்கோலை - காற்றாடி ஒலை. இது காற்றால் சுழலும் பொழுது, அதிலுள்ள ஒலைகள் வலம், இடம்,மேல்,கீழ் என மிக விரைவாகச் சுழலும். அதுபோல,அகக்கருவிகள் தொழிற்பாடும் அகரம் முதலிய அக்கரங்களால் மாறிமாறி நிகழும். ஆதலால்,மறதிக்குப்பின் தோன்றும் உணர்வு புதிய உணர்வேயாதலின்,உணர்வு கடல் அலை போல் புதிது புதிதாகத் தோன்றும்.
கற்றா - இளகிய, எ-டு கற்றா மனம்.
கறியாக்க - கறிசெய்ய, பா.அறுத்தவர்.
கறை - நஞ்சாகிய கறுப்பு.
கறை மிடறு - காளகண்டம்.
கனகம் - பொன்.
கனக வரை - மகாமேரு எ-டு கனக வரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வார் (சிசி பப9).
கனல் - நெருப்பு.
கனவு - சொப்பனம்.
கன்மம்- பொருள் வினை அகங்கார மமகாரங்கள் காரணமாகச் செய்யப்படுவது. பாசம் 5 இல் ஒன்று.
வகை : மூவகை
1.ஆகாமிய கன்மம்:வேறுபெயர் துல கன்மம், மந்திரம்,பதம்,வன்னம், தத்துவம் புவனம்,கலை என்னும் 6 தத்துவங்களின் இடம்,மனம்,வாக்கு, காயம் என்னும் மூன்றாலும் செய்யப்படும் நல் வினை,தீவினை என்னும் இருவினைகளாம் இது. தமிழில் செய்வினை,எதிர்வினை என இது கூறப்படும்.
2.சஞ்சிதக்கன்மம். வேறுபெயர் சூக்கு கன்மம், அபூர்வம், புண்ணியம்,பாவம் என்னும் பாரியாயப் பெயர் பெறும். இரு வினைகள் பக்குவமடையும் வரை புத்தி, தத்துவம் பற்றுக் கோடாக மாயையில் கட்டுப் பட்டுக் கிடக்கும். தமிழில் இது பழவினை, கிடைவினை, முன்வினை என்று கூறப்படும்.
3.பிராரத்தகன்மம் : கட்டுப்பட் டிருந்த சஞ்சித கன்மம். இன்ப துன்பமாகிய பயனைத்தரநுகர் வதாகும் இது. நுகருங்கால் ஆதிதை வசம், ஆத்தியான் மிகம், ஆதிபெளதிகம் என மூவகை.
ஆதிதை வசம்: இறப்பு, பிறப்பு, நரை, திரை, நோய் முதலிய வாய் உயிர்கள் முன்னிலை யின்றித் தெய்வ முன்னிலையாக வருவது.
ஆத்தியான்மிகம் - மாந்தர், விலங்கு முதலிய ஆன்மாக்கள் முன்னிலையாக வருவது.
ஆதிபெளதிகம் : மின்னல், இடி, காற்று, மழை, தீ முதலிய பூத முன்னிலையாக வரும் இன்ப துன்பங்கள். பிராரத்துவம் தமிழில் நுகர்வினை, ஊழ்வினை என்று கூறப் பெறும்.
கன்ம உறுதுணை - உலகு, உடல், கரணம், காலம், உறுபலம், நியதி, செய்தி.
கன்ம ஒப்பு - இருவினை ஒப்பு. முந்நிகழ்ச்சிகளில் ஒன்று. முந்நிகழ்ச்சி என்பது இருவினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநி பாதம் ஆகிய மூன்றும்.
கன்மேந்திரியங்கள் - வேறு பெயர் கருமேந்திரியங்கள், தொழிற்பொறிகள், வினைப் பொறிகள் இவை 5 வாக்கு (மொழி), பாதம் (கால்), பாணி (கை), பாயு (எருவாய்), உபத்தம் (கருவாய்). இவை அகங்கா ரத்தின் இராசகுணத்தில் ஒன் றன்பின் ஒன்றாகத் தோன்றுபவை.
கன்னல் - கரும்பு.
கன்னி - 12 இராசிகளில் ஒன்று. சோதிடம் சார்ந்தது.
காசம் - 1, ஈளைநோய் எ-டு காசம் மருவும் கடந்தோறும் (சிசிபப 2282) விண்
காசறு - குற்றமற்ற எ-டு காசறும் உரை (சிசிசுப 7) பா. மாசறு
காசிக்கு நேர்த்தலங்கள்- இவை 61. திருவெண்காடு 2 திருவையாறு 3 மயிலாடுதுறை 4 திருவிடை மருதூர் 5, திருச்செங்கோடு 6. திருவாஞ்சியம்.
காசியர் - ஏழுமுனிவர்களில் ஒருவர்.
காசினி - உலகம்.
காஞ்சனம்-பொன் பா. கனகம், தமனியம்.
காஞ்சித்திணை-நிலையா ஒழுக்கம்.
காட்டும் உபகாரம்,காணும் உபகாரம் - இவ்விரு உதவிகளையும் செய்பவன் இறைவன்.
காட்சி - பொருள்: கண்ணால் காணுதல். வகை: 1. வாயில்,மானதம்,தன்வேதனை,யோகம் என நான்கு 2. பொதுக்காட்சி (ரூபம்) அல்லது நிருவிகற்பம், ஐயக்காட்சி (தரிசனம்) 3.தெளி வுக்காட்சி (சுத்தி) என மூன்று வகை. இம்மூன்றும் முறையே குரு அறிவுரையைக் கேட்டல் சிந்தித்தல், தெளிதல் என்பவற்றால் நிகழ்பவை.
விளக்கம் : 1. வாயிற் காட்சி: புறத்தே உள்ள சுவை,ஒளி,ஊறு,ஓசை நாற்றம் ஆகியவை ஐம்பொறிகளால் அறியப்படுபவை. 2.மானதக் காட்சி: ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை மனம் முதலிய அகக்கருவிகளால் அறியப்படுதல். 3.தன்வேதனைக்காட்சி ; அகக்கருவிகளுள் மனத்துக்குமேலாய்ப் புத்தியில் தோன்றியவைகள் ஆன்மாவினால் உணரப்படுதல் 4.யோகக்காட்சி: யோக முறைகளால் அறிவைத் தடைசெய்யும் மல ஆற்றல்களை ஒருவாறு , நீக்கி, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக் காலப் பொருள்களையும் காண்கின்ற காட்சி. 5.நிருவிகற்பக்காட்சி: தத்துவங் களிலிருந்து தான் வேறு எனக் காணல், தன் உண்மை நிலை அறியாமை. 6.ஐயக்காட்சி : தன் உண்மை நிலை அருளொடு பிரிப்பின்றி நிற்பதை அறிந்தும் அவ்விரு ளில் அடங்காமல் அருளிலும் கருவியிலும் மாறிமாறிப் போக்குவரத்தால் நிற்றல். 7.தெளிவுக்காட்சி : அருளில் அடங்கி அடிமையாய் நிற்றல்.
காட்சித்திட்டம் - பொருள் காட்சியில் ஒரு பொருளைத் திட்ட வட்டமாக அறியும் முறை. ஐயந்திரிபற்ற காட்சி இது. நிலை: இரு நிலைகள் 1.நிருவி கற்பம் (பொதுக்காட்சி) உண்மை மட்டும் அறிவது 2. சவி கற்பம் (சிறப்புக்காட்சி) பொருளின் பெயர், சாதி, குணம், கர்மம், பொருள் என்னும் ஐந்தையும் சேர்த்தறிவிப்பது இது. இதற்குச் சிவாக்கிர யோகியர் தரும் எடுத்துக் காட்டு. 1. பெயர்: மா 2, சாதி மரம் 3 குணம்: வண்ணம், வடிவு, பூ காய், பழம் முதலியன 4. கர்மம் (வினை): அசைதல், நிற்றல், பூத்தல், காய்தருதல் 5. பொருள்: இன்னது பெறும் விலை, இன்னதுக்கு ஆன பொருள் என இவ்வாறு வேறுபடுத்தி அறிவது சவிகற்பக் காட்சியாகும்.
காட்சிப்பொருள்-காணப்படும் பொருள்.
காட்சி, மாசறு - குற்றமில்லாக் காட்சி.
காட்சியளவை - அளவைகளில் ஒன்று. இது ஒன்றே போதும் என்பது உலகாயதர் கருத்து. இதைக் கொண்டு அவர்கள் ஆன்மவாதத்தைப் பெற இயலாது. வானம் ஒழிந்த ஏனைய 4. பூதங்களின் சேர்க்கையே ஆன்மா என்பது ஆன்மவாதம் அமாவாசை, கோள் மறைவு முதலியவை உரையனவாலேயே அறியப்படுபவை. காட்சியளவையாலன்று. ஆகவே, இவர்கள் கூற்றுபொருந்தாக் கூற்றே.
காட்சிவாதி-உலகயாதன். பிரத்தியட்சமே பிரமாணம் என்பவன்.
காட்டம் - விறகு,
காட்டாக்கின் - காட்டத்தி லிருந்து (விறகிலிருந்து)நெருப்பு தோன்றுதல்.
காட்டாக்கினி-விறகு நெருப்பு.
காட்டாகிநின்றான்-உயிருக்குள் இறைவன் இருப்பதால், உயிர் இறைவனை அறிய முடிய வில்லை. தன்னை அறியாவிடினும் இறைவன் உயிர்கள்பால் கலந்துநின்று அவைகளுக்குப் பொருள்களை உணர்த்துவது இயல்பு.
காட்டிற்றை-காட்டியதை
காட்டு-காண்பித்து,துணை.
காடுபடுபொருள் - அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி என ஐந்து
காண்க - அறிக.
காண்டம் - தத்துவத்தொகுதி. இது மூவகை 1.பிரேரக காண்டம்: சிவம் முதலிய தத்துவங்கள் ஐந்தும் தமக்குக் கீழுள்ள தத்துவங்களைச் செலுத்துபவை. ஆகவே, அவை பிரேரக காண்டம் எனப்படும். 2. பாசயித்திரு காண்டம்: வேறு பெயர் நுகரி காண்டம் போச யித்திரு நுகரி, காலம் முதலிய 7 தத்துவங்கள் உயிருக்கு ஆண வத்தால் உண்டான சடத்தன்மை நீங்கி, அறிவு இச்சைச் செயல்கள் சிறிதே விளங்கப் பெற்று வினையை ஈட்டவும் நுகரவும் காரணமாக இருப்பதால், இவற்றிற்கு இப்பெயர். 3.போக்கிய காண்டம் ஆன்ம தத்துவங்களைக் கொண்ட உயிர் முக்குண வடிவமான இன்பம், துன்பம், மயக்கம் என்பவற்றை அடைவதால், இவற்றிற்கு இப்பெயர்.
காண்டல் - ஐயுறவின்றித் தெளிதல்.
காணார் - உணர்த்தார்.
காதல்-இறைவன்பால் அடியார் கொள்ளும் அன்பு, எ-டு கண்ணப்பர் அன்பு.
காதலிப்பவர்-முத்தி பெற விரும்பும் வைநாயிகராயினார். காத்தல் - இறைவன் செய்யும் முத்தொழில்களில் ஒன்று.
காந்தம்-ஈர்க்கும் இரும்பு.
காந்தருவ வேதம் - நான்கு உப வேதங்களுள் ஒன்று. பா. உபவேதம்
காதி - சினம். எ-டு களவுபயம் காமம் கொலைகோபம் காதி (நெதூ 40).
காப்பியம் -காவியம். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என ஐந்து
காப்பியவகை-பெருங்காப்பியம் சிலப்பதிகாரம் சிறுகாப்பியம் - யசோதர காவியம்.
காப்பு-தெய்வ வணக்கம் இலக்கணப்படி நூலின் ஒர் உறுப்பு,மெய்கண்ட நூல்களான உண் மை விளக்கம், சிவப்பிரகாசம் ஆகியவற்றில் காப்பு கூறப்பட்டுள்ளது.
காபாலிகம் -' காபாலமதம்.
காமம் - 1. சிற்றின்பம். அவா ஆசை இரண்டும் கொண்டது. இம்மை இன்பம் 2. பகை 6இல் ஒன்று ஒ. பேரின்பம், காதல்.
காமமாதி - காம இன்பம் சாங்கம், உபாங்கம் என இருவகை. சாங்கம் என்பது தழுவுதல், முத்தம் கொடுத்தல் முதலியன. உபாங்கம் என்பது அன்னம், ஆடை, பூடணம், சாதனம் ஆகியவற்றைப் பயன்படுத்துதல்.
காமக்கிழத்தியர் - விலைமகளிர். இன்பத்திற்கு உரிமை உட யோர்.
காமநூல் - இன்பநூல்.
காமன் - மன்மதன். காமவேட்கையைத் துண்டுபவன்.
காரணக்குறி காமிகம் - 28 சிவ ஆகமங்களுள் ஒன்று.
காமியப்பயன்-விரும்பிய பேறு.
காமிய மலம் - மும்மலத்துள் ஒன்று. எ-டு கன்மமும் மூலம் காட்டிக் காமிய மலமாய் நிற்கும் (சிசி ப 129).
காமுகர் - காமம் மிகுந்தவர்.
காயம் - உடம்பு எ-டு ஆர்ப்பாய காயம் தன்னை (சிசிசுப 14)
காயக்குழி - நரகம்
காய் - பாக்கு.
காரணம் - ஏது. முதற்காரணம், துணைக் காரணம், நிமித்த காரணம் எண்மூவகை. முதற் காரணம் மண். துணைக் காரணம்குடம் செய்வதற்குரிய தண்டும் சக்கரமும் நிமித்த காரணம். காரணம் அழியாதது. அதாவது, குடம் செய்வதற்குரிய மண் அழியாதது. காரியம் அழியும் மண்ணால் செய்யப்பட்ட குடம் அழியும். அது போல, உலகிற்கு முதற்காரணம் மாயை, துணைக்காரணம் இறைவன் ஆற்றலும் உயிர் களின் கன்மமும், நிமித்த காரணம் இறைவனே.
'காரண அவத்தை -காரிய அவத்தை நிகழக் காரணமாவது. மூவகை கேவலம், சகலம், சுத்தம். பா. காரிய அவத்தை.
காரண காரிய இலக்கணம் - காரண காரியத்தை ஆராயும் இயல்பு.
காரண காரியம் - ஏதுவும் விளைவும்.
காரணகாரியத் தொடர்பு-ஏது விளைவுத் தொடர்பு
காரணக்குறி-காரணப்பெயர். காரண கேவலம் - காரண அவத்தை 3 இல் ஒன்று. சர்வ சங்கார காலத்தில் அசுத்த மாயா காரணத்திலே ஒடுங்கி, ஆணவ மலத்தால் மறைப்புண்டு படைப்புக் காலமளவும் ஒன்றும் அறியாமல் கிடப்பது.
காரண சகலம் - காரண அவத்தை 3இல் ஒன்று. ஆன்மாக்கள் உடலெடுத்து இறப்பு பிறப்புக்கு உட்படுதல்.
காரண சரீரம்- தூல உடலுக்குக் காரணமாயுள்ள நுண்ணுடல்.
காரண சுத்தம்- காரண அவத்தை 3 இல் ஒன்று மல நீக்கம். பெற்ற ஆன்மா, பதியின் திரு வடிகளில் ஒன்றுதல்.
காரண பஞ்சாமக்கரம்- பஞ்சாக்கரம் 5இல் 7.
காரணமாதல் பொதுமை - பிறவற்றால் வேறுபடினும், காரணமாதல் மாத்திரையாகிய பொதுமை.
காரண மாயை - தனு கரண புவன போகங்களுக்கு முதல் காரணமாய் உள்ள மாயை.
காரண வாக்கியம் - விண்டு முதலியோரை நிமித்த காரணர் என்று சொல்லும் வசனம்.
காராக்கிருகக்கலி- அஞ்ஞானச் சிறைத் துன்பம்.
காரி நாயனார் - திருக்கடவூர் சோழநாடு. சிவத்தொண்டர். இலிங்க வழிபாடு (63).
காரியம் - காரணத்தால் ஆவது. காரியம் பொருள். எ-டு மண்ணால் செய்யப்படுங்குடம். காரியம் அழிவதால் இதற்கு ஏதுவாகிய குடமும் அழியும்.
காரிய அவத்தை- இவை5:நனவு, கனவு, சுழுத்தி, உறக்கம், பேருறக்கம். பா. காரண அவத்தை.
காரிய ஏது- மூன்று ஏதுக்களில் ஒன்று. புகையாகிய காரியம் நெருப்பாகிய காரணத்தை உணர்த்துவது.
காரிய கேவலம் - உடலைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி, இளைப்பாறும் பொருட்டு, மூலாதாரத்துள் ஒடுங்கும் நிலை.
காரிய சகலம் - உடலைப்பெற்ற ஆன்மா ஒடுக்கத்தின் மூலம் பரவலுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை.
காரிய சுத்தம்- உடலைப்பெற்ற ஆன்மா.
காரிய நிகழ்ச்சி - காரணத்தைக் கொண்டு நடைபெறும் செயல் இதற்கு முதல், துணை நிமித்தம் என மூன்று காரணங்கள் தேவை.
காரிய மாயை- மூலப்பிரகிருதி.
காரியரூபப் பிரபஞ்சம் - காரிய வடிவ உலகம்.
காரைக்கால் அம்மையார் - வணிகர், காரைக்கால் சோழ நாடு, சிவபத்தர். இறையருளால் மாங்கனி பெற்றவர். 10 ஆம் திருமுறையில் மூன்று நூல்கள் செய்து அருளியவர். அவையாவன: திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் (2) திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. சங்கம வழிபாடு (63).
காலதத்துவம் - கால தத்துவம் ஆன்மபோகங்களை அளக்கும் காலம் என்னும் சுத்தா சுத்த தத்துவம்.
காலம் - கால தத்துவம் கழியுந்தன்மை உடையது. நாள், கிழமை முதலியவற்றை உண்
92
கால் - காற்று, புறத்துறுப்பு.
காலன் - கூற்றுவன், எமன்.
காலாள் - அங்கம் 4 இல் ஒன்று
காவலன் - நம்மைக் காக்கும் இறைவன்.
காவிரி - தீர்த்தங்கள் 9 இல் ஒன்று.
காளத்தியார் - காளத்தி நாதர், காளத்தியிலுள்ள சிவன்,
காளாமுகம் - மாவிரதத்தை ஒத்த சைவ உட்பிரிவு.
காளாமுகர் - சைவரில் ஒரு சாரரான காளாமுக வகுப்பினர்.
காளிதம் - களிம்பு, எ-டு நீடு செம்பில் காளிதம்.
காளை - வீரன்.
கான்மியம் - புண்ணியம், பாவம் என்னும் நிலையினவாய்த் தோன்றும் காரிய கன்மம் மூல கன்மத்தினின்றும் தோன்றுவது.
கி
கிடந்த கிழவி - வினையற்றுக் கிடந்த ஆன்மா. அல்லது திருவருள் சிவன் அருளால் குரு ஒளிபெறச் செய்தல்,
கியாதி - அறிவு.
கிரகத்தம் - ஆச்சிரமம் 4 இல் ஒன்று.
கிரகம் - கோள் பா. ஒன்பது கோள்கள்.
கிரக சமித்து - எருக்கு முருக்கு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி,வன்னி, அறுகுதருப்பை என ஒன்பது.
கிரகதானியம் - கோதுமை, பச்சரிசி,துவரை, பச்சைப்பயறு, கடலை,மொச்சை, எள், உளுந்து, கொள்ளு என ஒன்பது.
கிரணம் - 1. கதிர் 2 ஆகமம் 28இல் ஒன்று.
கிரமம் - நிரல், ஒழுங்கு முறைமை. எ-டு இக்கிரமம். இம் முறை அக்கிரமம் - அம்முறை, எக்கிரமம் - எம்முறை.
கிரியா சத்தி - செயலாற்றல். 5வகைச் சத்தியில் ஒன்று.
கிரியா குரு - செயற்குரு.
கிரியாபாதம் - சிவாகமத்தில் பராபரக் கிரியையின் வகையைக் கூறும் பகுதி.
கிரியா பூசை - கிரியா பாதத்தால் செய்யும் பூசை
கிரியா மார்க்கம் - முத்திக்குரிய கிரியை என்னும் நெறி.
கிரியாவாதி கிரியாவுத்திரி - குண்ட மண்டலாதிகளையும் வேதிகளையும் புறத்தே அமைத்து, ஆகமத்தில் கூறியபடி செய்யும் ஒளத்திரி தீக்கை.
கிரியை - செயல் அல்லது வினை, நோன்பு நாற்படிகளில் ஒன்று. வழிபாட்டின் உறுப்புகளாக அமைந்து பல செயல்களைக் குறிக்கும். அவையாவன: இலிங்க மூர்த்தியைக் கணிகமாகவும் உடையவராகவும் எழுந்தருள்வித்துப் பூசனைப் பொருள் களைத் திரட்டி, ஒரிடத்தில் அமர்ந்து பூதசுத்தி முதலிய 5 சுத்திகளைச் செய்து அகத்தும் புறத்தும் சிவனை வழிபடுதல். கிரியை வகை - 1. கிரியையில் சரியை: சிவபூசைக்கு வேண்டியவற்றைத்திரட்டுதல், 2. கிரியையில் கிரியை: பூதகத்தி முதலிய 5 வகைச் சுத்திகள் செய்து, சிவலிங்க வடிவல் பூசனை செய்தல், 3.கிரியையில் யோகம்: அகத்தே பூசை, ஓமம், தியானம் என்னும் மூன்றிற்கும் முறையே இதயம், நாபி, புருவநடு என்னும் மூவிடங்கள் வகுத்துக் கொண்டு செய்யும் அந்தரியா கப்பூசை 4 கிரியையில்ஞானம்: அவ்வந்தரியாகப் பூசையின் உறைப்பால், ஒரு பட்டறிவு ஏற்படுதல்.
கிரீடாப் பிரமம் - விளையாட விழையுங் கடவுள்.
கிரீடாப் பிரம வாதம் - பரப்பிரமம் சில விளையாடல் களை விளையாட விரும்பி உயிராகவும் உலகமாகவும் உருவெடுத்து விளையாடல் என்னும் கூற்றுநிகழ்த்தியது. கிரீடா, கிரீடை விளையாட்டு, எ-டு ஜலக்கிரீடை இவ்வாதம் செய்பவர்கிரீடாப்பிரமவாதி.
கிருகரன் - 10வளிகளில் ஒன்று.
கிருபாகாரி - 8 சித்திகளில் ஒன்று.
கிழவி - குண்டலி ஆற்றல். இது பலரிடத்தும் பாம்பு வடிவாய் வால் மேலாகத் தலையை மூலா தாரத்தில் வைத்து உறங்கும். ஆதலால், அது கிடந்த கிழவி எனக்கூறப்படுகிறது. அதனை யோகிகள் தம் ஆற்றலால் எழுப்பித் தலை மேலாகச் சுழலச் செய்வர். அவ்வாறு செய்யும் பொழுதே மயக்க உணர்வு நீங்கிச் சிவஞானம் விளங்கும். அதை அவ்வாறு எழுப்பி அதனோடு ஒன்றித்து நிற்பதே உயிர் இயல்பை உள்ளவாறு உணர்வதற்குரிய வழியாகும். (அருணை வடிவேலு முதலியார்).
கிளந்தெடுத்து உரைத்தல் - விதந்து கூறுதல்.
கிள்ளிஎழுப்பு - ஆசிரியன்தன் தீக் கையால் திருவருளை வெளிப்படுத்தி உணரச் செய்வது.
கிளைக்கில் ஞானம் - விளங்கும் ஞானம் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கிளத்தல்,
கீடம் - வண்டு.
கீண்டு - கிழி, எ-டு சலந்தரன் உடல் கீண்டு (சிசிபப 292).
கீழ் ஏழுலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம் இவை எழும் புவியின் கீழ் உள்ளவை.
கீழ் நாடல் - வியாப்பியமாகக் கருதல்.
கீழன - பின்னர்த் தோன்றும் தத்துவங்கள். ஒ. மேலன.
கீழாலவத்தை - கீழ்நோக்கு அவத்தை. கீழ்நோக்கி நடைபெறும் பாடு. சாக்கிரத்திலிருந்து துரியாதீதம் வரையிலுள்ள 5 நிலையிலும் ஆன்மா கீழ்நோக்கி நெற்றியிலிருந்து மூலாதாரத்திற்குச் செல்லும் நிலை. ஒ. மேலாலவத்தை.
கு
குங்கிலிய கலய நாயனார் - மறையவர். திருக்கடவூர் சோழ நாடு, தில்லை கூத்த பெருமானால் அவர்தம் திருவடிகளையே திரு முடியாகச் சூட்டப்பட்டவர். இலிங்க வழிபாடு(63).
குஞ்சம் - யானை
குஞ்சி - குஞ்சு காகத்தின் குஞ்சு குஞ்சிதநடம் - ஒருகாலைத்துக்கி வளைத்து ஆடும் நடராச கூத்து.
குஞ்சித்த சேவடி - கால்துக்கி வளைத்த திருவடி, எ-டு குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர். (சிசிசுப308)
குடகாயம் - குடக்காற்று. குடத்தால் அளவு படுத்தப்பட்ட ஆகாயம்.
குட்டம் - மடு
குட்டியம் - சுவர். எ-டு குட்டியம் இன்றிநற் கோலம் எழுதுதல் (சநி 18).
குடிபழி - பிறன் இல்விழைதல்,
குடில் - குடிசை
குடிலை - சுத்த மாயை.
குணம் - பண்புநலன். சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய மூன்றும் பா. எண்குணம்.
குணகுணிபாவம் - குணமும் குணமுடைய பொருளும்.
குணக்கூறு - சாத்துவிகம், இரா சதம், தாமதம் என்னும் மூன்று.
குணத்துவம் - முக்குணமும் வெளிப்பட்டுச் சமமாய் இருத்தல். இதுவே சித்தமாகிய அகக்கருவி.
குண சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
குணருத்திரன் - குணதத்துவ உருத்திரன்.
குண்டம் - குழி, ஒமகுண்டம்.
குண்டலி - குண்டலமாகிய உந்தி கொப்பூழ் உள்ள இடம், மூலாதாரமாகும்.
குண்டலித்தானம் - மூலாதாரம்.
குண்டலினி - மாமாயை.
குணி - குணமுடைய பொருள்.
குணிப்பொருள் - குணியாகிய பொருள்
குதம் - கழிவாய்.
குமரி - 9 தீர்த்தங்களில் ஒன்று. முக்கடல் கூடுமிடம்.
கும்ப முனிவர் - 18 சித்தர்களில் ஒருவர்.
கும்பிடு - வணங்கு.
கும்பாபிடேகம் - திருமுழுக்கு.
குமுதச் செவ்வாய் - ஆம்பல் போன்ற சிவந்த வாய், எ-டு நேசமார் குமுதச் செவ்வாய் (சிசிபப 29).
குரக்கு - குரங்கு.
குரம்பை - குடிலாகிய உடம்பு. முடைக் குரம்பை - நாற்ற உடல்.
குரல் - 7 பண்களில் ஒன்று.
குரவர் - நன்னெறியுள்ளவர். அறிவுறுத்துவோர். வகை 1. மூவர்: அரசன், ஆசிரியர் (குரு), தந்தை (பிதா) 2. நால்வர். 1) அன்னை, தந்தை, ஆசிரியர், தெய்வம். 2) அப்பர், சுந்தரர், திருநாவுக் கரசர், சம்பந்தர் 3) மெய் கண்டார், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார். 4) ஐவர்அரசன், ஆசிரியர், தந்தை, தேசி கன், மூத்தோன் 5. எழுவர்: அரசன், ஆசிரியர், தந்தை, தாய், தேசிகன், மூத்தோன், தெய்வம்.
குருக்கள் - சிவ ஆசிரியர்.
குருலிங்க சங்கமம் - குருவும் சிவமுமான திருக்கூட்டம் ஒ. தாபர சங்கமம்.
குரிசில் - தலைவன், இறைவன். குரு - இறையுணர்வை உணர்த்தவல்ல சான்றோர். ஞானகுரு, கிரியாகுரு என இருவகையினர். முன்னவர் இறை அறிவையும் பின்னவர் இறை கிரியையும் உணர்த்துபவர்.
குரு சந்தானம் - குரு பரம்பரை. பா.சந்தானம்.
குருநாதன் - 1.இறைவன். 2.மெய்கண்டார்.
குருவழிபாடு - குருவை வணங்கும் முறை. மன,மொழி, மெய்களால் வணங்குவதற்குரிய சிவ வடிவமாக இருப்பவர் குரு. ஆன்மீகத் தெளிவு அளிப்பவர். நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி. ஆகவே, அவரை வழிபடல் சிவனை வழிபடுவதாகவே அமையும்.
குருளை - முருகன், மகன்.
குலச்சிறை நாயனார் - மணமேற்குடி - பாண்டிய நாடு. சிவ பத்தர். குருவழிபாடு (63).
குலாலன் - 1.குயவன். எ-டு 1.மண்ணினில் கடாதி எல்லாம் வருவது குலாலனாலே (சிசிபப.49) 2. குலாலன் தண்ட சக்கரம் நிமித்த காரணன்.
குலிசம்-இடியேறு, வச்சிராயுதம். எ-டு குறிகுலிசம்.
குவலயம் - உலகம்.
குவை - நிதி, கூட்டம், தொகுதி, பொற்குவை, எ-டு குவைதரு நவமணி.
குழப்பு - குழப்பம் செய்.
குழப்பு நூல்- வேதாகமங்களுக்குப் புறம்பான பாஞ்ச ராத்திரிகள் நூல். திருமால் அஞ்ஞானமயமாய் அஞ்ஞானத்தோடு கூடிய ஆன்மாவுமாய் நிற்பான் என்னும் பாஞ்சராத்திரிகள் கூற்று. இதனை நூல் என்று உயர்ந்தோர் கொள்ளார். (சி.சி.ப.ப.295).
குழலினார் - கூந்தல் அழகிகள். எ-டு வாசமர் குழலினார்கள். (சிசிபப 29)
குழு - தொகுதி, கூட்டம். எ-டு செறியப் பெற்றேன் குழுவில் சென்று (திப99) பா.ஐம்பெருங்குழு.
குளிகை - மாத்திரை.
குற்றம்-ஆக இருவகை 1.காமம், வெகுளி, மயக்கம்
2. காமம், குரோதம், உலோகம், போகம், மதம்.
குற்றவீடு - குற்றத்திலிருந்தும் நீங்குதல், அராகம் ஆதி குணங்களைக் குறைத்தலாகும்.
குறி - 1.இலிங்கம் 2.கருதுதல் 3.மதங்களின் குறிகளும் குணங்களும் 4.அருவம், உருவம், அருஉருவம் என்னும் தடத்தக்குறி.
குறி இறந்த- குறிகடந்து அறிகுறி இல்லாத,
குறிகள்- அடையாளங்கள். எ-டு இலிங்கம், திருநீறு, உருத்திராக்கம், இராமம்.
குறிகுலிசம் - குறியான வச்சிராயுதம் எ-டு குறிகுலிசம் கோகனதம் கொள் சுவத்தி (உவி.7) பா. பூத வடிவம்.
குறிப்பு - பஞ்ச கந்தங்களும் ஐம்பொறிகளும் மணமுமாகிய ஆறன் தொழில்.
குறிப்பு ஏது - வெளிப்படாமல் குறிப்பாக ஏதுப்பொருள் பட நிற்பது.
குறிப்பு மொழி - குறிப்பினால் பொருள் உணர்த்தும் மொழி.
குறை - 1.குற்றம் 2.இன்றியமையாமை குறைவு- தாழ்வு. ஒ.அதிகம்.
குன்றா - குறையா எ-டு குன்றா
அறுபுள்ளி.
கூ
கூசிப்பு - நாணுதல்.
கூசுதல் - அவருயர்வும் தன் இழிவும் நோக்கி நிகழ்வது.
கூத்தன் - நடராசன், சீவான்மா.
கூடத்தகாதவர் - இகல் பேசும் உலகாயதர். மருள் உள்ள மாயாவாதி, பொறை பேசும் புத்தன், வஞ்ச அமணர், வேதம் அறியா வேதியர், செற்றபுலையர், மெய்ஞ்ஞானம் இல்லா மூடர், அரன் பழிப்போர்.
கூடல் - புணர்ச்சி.
கூடலார் - கூடுவோர்.அகன்பதியால் ஒரு வகையினர்.
கூட்டரவு - கூட்டம்.
கூட்டில் - ஆன்மாவில்.
கூடு - உடம்பு, ஆன்மா,எ-டு கூட்டில் வாள் சாத்தி நின்று உந்தி பெற. (திஉ30)
கூத்தாட்டு - நடிப்பு, திருவிளையாடல்.
கூர்மன் - 10 வளிகளில் ஒன்று.
கூரியர் - குசலராய் உள்ள பிரமா திகள் எ-டு கூரியவராய் உள்ள வர்கள் ஒத ஒதித் (சிசிபப 128).
கூலம் எட்டு - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்.
கூலம் பதினாறு - நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி, எள்ளு, கொள்ளு,பயறு, உழுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை
கூவல் - கிணறு, நீர்நிலைகளில் ஒன்று. எ-டு கூவல் ஆழி குளம் சிறு குழிகால் (சநி3).
கூவல் நீர் - கிணற்றுநீர், எடு கூவல் நீர் என்னில் கொள்ளோம் (சி சிபப 184).
கூற்றம் - எமன்.
கூற்றுவ நாயனார் - குறுநில மன்னர் களந்தை - சோழநாடு. தில்லை கூத்த பெருமானால் அவர்தம் திருவடிகளையே திருமுடியாகச் சூட்டப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
கெ
கெட்டார் - இறப்பு பிறப்பு இல்லாதவர்.
கே
கேசரம் - பூத்தாது, நாக்கு, உளை.
கேடு - குற்றம் எ-டு கேடில் புகழ்தரும் சரியை கிரியா யோகம் ( சிபி 49)
கேட்டல் - உண்மைஞானம் நான்கில் ஒன்று. குருமூலமாக ஆகமப் பொருளைச் செவிமடுத்தல்.
கேண்மதி - கேட்பாயாக.
கேண்மை - நட்பு. எ-டு.கேண்மையரேல் இவை உணர்த்தக் கிளக்கும் நூலே (சிபி 49)கேண்மைப் பதிப்பாசிரியர்.
கேதம் - துக்கம்.
கேத்திரிகன் - ஆன்மா.
கேது - 9 கோள்களில் ஒன்று.
கேவலம் - தனிமை. அதாவது, கருவிகளோடு ஆன்மா கூடாத நிலை. இது ஆணவம் மட்டும் இருக்கும் நிலை, காரண அவத்தை 3 இல் ஒன்று. தன்னியல்பு உடையது. 2) அருள் நிலை.
97
ஆன்மா அறியாவிட்டாலும், அந்நிலையில் ஆணவ இருள் மேலிட, அது அறியாமையில் அழுந்தும், பா. காரண அவத்தை, காரிய அவத்தை, மேலாலவத்தை, கீழாலவத்தை.
கேவல அன்வயம்-புகையுள்ள இடத்தில் நெருப்புண்டு என்று உடன்பாடுபற்றிச் சமையற் கட்டினை உவமை கூறுவது. அன்வய அனுமானம் 5 உறுப்புகளைக் கொண்டது. 1) மேற் கோள் 2) ஏது 3) எடுத்துக் காட்டு 4) உபநயம் 5) முடிவு.
விளக்கம்
1) இம்மலையில் தீயுண்டு - மேற்கோள். 2) புகை உடைமையால் ஏது. 3) அங்கே தீ உண்டு அடுக்களை போல் எடுத்துக்காட்டு. 4) இங்கே புகை உண்டு. உபநயம் 5) எனவே, இங்கே தீ உண்டு - முடிவு. ஒ. கேவல வயதிரேகம்
கேவல ஞானம் - சிறப்பறிவு.
கேவல சாக்கிரம்- இதில் தத்துவதாத்துவிகங்கள் (50) செயற் படா. ஆகவே, ஆன்மா விழித் திருக்கும். இருப்பினும், அது கண்டும் காணாததுபோல் இருக்கும். வேறுபெயர் அறிவிலாச்சாக்கிரம்.
கேவல சுழுத்தி} - சித்தம், உயிர் வளி ஆகிய இரண்டும் ஆன்மாவுடன் கூடி, இதயத்தானத்திலே நின்று இன்பமாய்த் தூங்கும் நிலை.
கேவல சொப்பனம் - முன் நுகர்ந்த போகத்தை நினைப்பதும் தற்காலத்திலே வரும் நுண்ணுடம்பு,போகம் ஆகியவை ஆணை ஏறி, மாலை சூடுதல் முதலியவற்றை நுகர்தல்.
கேவல சைதன்யம் - ஆன்ம ஞான வடிவமாகவுள்ள நிலை கேவல துரியம்-சித்தம் நீங்கும். உயிர் வளியுடன் ஆன்மா கூடி நாபியில் நின்று, ஒன்றும் தெரியாது தூங்கும் நிலை.
கேவல துரிய அதீதம் - உயிர்வளி நீங்கும். ஆன்மா தனித்து மூலா தாரத்தில் ஆணவமலத்துடன் கூடி, ஒர் அறிவும் அறிந்திருக்கும் நிலை.வேறு பெயர் நித்திய கேவல அவத்தை,கீழாலவத்தை
கேவல வகை- இதன் வகைகளாவன.
1.அருட்கேவலம் : தத்துவங்கள் எல்லாம் நீங்கி, அருளோடு கூடும் நிலை. இந்நிலையில் பாச ஞானமும் பசு ஞானமும் நீங்கி அருளாய் நிற்கும். அருள் மேவிநிற்பதால், அருள் கேவ லம் எனப்படும். 2.சகல கேவலம் : அனாதி கேவ லத்தில் நிற்பது. பின், அதிலி ருந்து நீங்கி உடம்பு பெற்றுச் சங்கரிக்கப்பட்ட (அழிக்கப் பட்ட பின்னர்ப் புதுப்படைப் புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக் கும். அப்பொழுது, அவ்விடத் தில் மும்மலங்களோடும் கூடிப் படும் சகலருக்குரிய கேவலம். 3.பிரளய கேவலம் அனாதி கேவ லத்தினின்றும் நீங்குவது பின், உடம்பு பெற்றுச் சங்கரிக்கப் பட்ட பின்னர்ப் புதுப்படைப் புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக் கும். அப்பொழுது, அவ்விடத் தில் மாயையோடு பொருந்தாது. ஆணவம், கன்மம் என்னும் இரண்டோடும் கூடிப் படும் பிரளயாகலருக்குக்குரிய கேவலம். 4) மருட் கேவலம்: அறிவை மறைத்து மயக்கத்தைச் செய்வது. ஆணவத்தோடு கூடி அறிவின்றிக் கிடக்கும் அனாதி கேவலம்.
5) விஞ்ஞான கேவலம் : விஞ்ஞான கலருக்குரியது. அனாதி கேவ லத்திலிருந்து நீங்கி, உடம்பு பெற்றுச் சங்கரிக்கப்பட்ட பின்னர்ப் புதுப்படைப்புக்கு ஏதுவாய் ஒடுங்கி இருக்கும். அப்பொழுது, அவ்விடத்தில் மாயை கன்மங்களோடு பொருந்தாது, ஆணவத்தோடு மட்டும் கூடிப்படுவது.
கேவல வயதிரேகம் (கி) - தனி எதிர்மறை. இதிலுள்ள 5 உறுப்புகளாவன. 1) மேற்கோள் 2) ஏது 3) எடுத்துக்காட்டு 4) உபநயம் 5) முடிவு.
விளக்கம்
1) இம்மலையில் புகை இல்லை - மேற்கோள்.
2) தீ இன்மையால் ஏது.
3) எங்கே தீ இல்லையோ அங்கே புகை இல்லை நீரோடையைப் போல் எடுத்துக்காட்டு.
4) இங்கே தீ இல்லை - உபநயம்
5) எனவே, இங்கே புகையுண்டு - முடிவு. ஒ. கேவல அன்வயம்.
கேழல் - பன்றி.
கை
கைக்கிளை - அகத்தினை ஏழிலும், ஏழுவகைப் பண்களிலும்
கைம்மழுவன்-போரில் தருகாவன முனிவர்கள் சினமடைந்து தன்னை அழிக்கவிட்ட பரசைத் தானே கருவியாக எப்பொழுதும் கொண்ட சிவன். எ-டு மெய்ம்மையாய் நின்று விளங்கினான். கைம்மழுவன் (நெவிது 105)
கைமுதிக நியாயம் - பூனைக்கு அஞ்சுபவன் புலிக்கு அஞ்சான் என்று சொல்லத்தேவை இல்லை. இது ஒரு நெறி. "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல்"என்னும்திருக் குறள் சிறந்த எடுத்துக்காட்டு.
கைவரை - கையளவு, சிறிய அளவு.
கொ
கொங்கணவர் - 18 சித்தர்களில் ஒருவர்.
கொச்சமை - அறியாமை, எ-டு அச்சமும் அணுகாகக் கொச்சமை என்னோ (சநி 6).
கொட்ட-1) வாத்தியங்கள் முழங்க, ஊற்ற,
கொடிக்கவி-14மெய்கண்டநூல் களில் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம் கொடிப் பெருமை கூறுவது.
கொடி காட்டும் எழுத்து-1) அஞ்செழுத்து நமசிவாய 2) ஆறு எழுத்து ஒம் நமசிவாய3) எட்டு எழுத்து ஒம் ஆம் அவ்வும் சிவாய நம 4) நால் எழுத்து - ஒம் சிவாய 5) பிஞ்சு எழுத்து வகாரம் ஆகிய பராசத்தி 6) பெரு வெழுத்து சிகாரம் ஆகிய சிவம்7) பேசா எழுத்து - சிகாரம் சிவம் 8) பேசும் எழுத்து வகாரம் ஆகிய சத்தி.
கொடி மரம் - அசுரர்களை அகற்றவும் தேவர்களைப் பாது காக்கவும் கோயிலில் அமைந் துள்ளமரம்.
99
கொண்மு - முகில்,
கொத்தை மாந்தர் - புல்லறிவுள்ள மனிதர்.
கொப்புள்-கொப்புளம்,குமிழி.
கொல்லரி உழுவை - கொல்லும் சிங்கம்,புலி,யானை (சிசிப ப. 86)
கொலை-ஐந்துபெரியதீச்செயல்களில் ஒன்று.
கொழு - மழு,
கொள்கை - கோட்பாடு, எ-டு கொள்கையினால் அரன் ஆவர் (சிசிசுப 324),
கொள்ளி வட்டம் - கையில் பிடித்து வீசும் கொள்ளி.
கோகழி தூர்த்தர் - கொடிய காமுகர், தாயர், மனைவியர், தாதியர், தங்கையர், அயவர் ஆகியோரை ஓர்மையில் காணும் கொடுந்தொழில் இயல்பினர் (சிதி 18) கோகனதம்-தாமரை.எ-டு குறிகள் வச்சிரத்தினோடு
கோகனதம் சுவத்தி (சிசிசுப 158),
கோச்செங்கட் சோழநாயனார்:அரசர் சோழநாடு சிவபத்தர். சிவனுக்குச் சோழ நாட்டில் பல கோயில்கள் கட்டியவர். இலிங்க வழிபாடு (63)
கோசம் - 1) சூல்பை 2) உடம்பு எ-டு அன்னமயகோசம்.
கோசரம்-பொறி, உணர்வு, அகப்படுவது, கோசரித்தல்,
கோசரமாதல் - விடயமாதல். கோடல் - கொள்ளுதல்
கோட்டன் - கணபதி.
கோட்பாடு - கொள்கை
கோப்புலிநாயனார்-வேளாளர். திருநாட்டியத்தான்குடி சோழ நாடு. திருக்கோயில்களின் திருவமுதுக்காக நெல்லைச் சேமித்து நாள்தோறும் வழங்கி யவர். இலிங்கவழிபாடு (63)
கோடி- கூறு, தொகுதி, எ-டு கொண்டது ஒரு பொருளைக் கோடி படக்கூறு. கோடும் கொள்ளுதும்.
கோணை - ஆணவம் பா.திருகு,
கோதண்டம் - புருவ நடு. எ-டு தீதிலாக் கோதண்டத்தை (சிசி LIL | 272).
கோதாட்டுதல் -செம்மை செய்தல், சிறப்பித்தல்,
கோதாவரி - 9 தீர்த்தங்களில் ஒன்று.
கோது - குற்றம்
கோதில் - குற்றமிலா. கோதில் குரு.
கோபன் - சிவன். கோமன் -9கோள்களில் ஒன்று.
கோமான் - இறைவன்.
கோரக்கர் - 18 சித்தர்களில் ஒருவர். -
கோரல் - கேட்டல் ஒ. கோறல்
கோல் எரி- நெருப்புக்குழி,
கோவந்து - அரசன், இறைவன் எடுவேதக்கோவந்துமுகத்தில் தோன்றிச் (சிசிபப 276)
கோழை - சிலேத்துமம்
கோள் - கிரகம் கோறல்-கொல்லுதல்.ஒ.கோரல்
கௌரவம் - மதிப்பு, குணங்களில் ஒன்று. எ-டு அடர்ச்சி மிகும் கெளரவர். கெளதமர்-கெளதம புத்தர் ஏழு முனிவர்களில் ஒருவர்.
கெளமாரம் - முருகக்கடவுளே பழம் பொருள் என்று வழி படும் சமயம்.
ச
சகசம் - இயல்பு. அனாதியுடன் கூடியது. முன்பே உடன் தோன்றிப் பொருந்தியது.
சகசமலம்- உடனிருக்கும் ஆணவ மலம் உயிருக்கு இயற்கைக் குற்றமாதல் பற்றி இப்பெயர். ஆன்மாவை மறைப்பது ஆன் மாவிற்கு ஆணவம் சகசமலம். சி.மலம்.
சகச்சிரம் - 28 ஆகமங்களில் ஒன்று.
சகம் - வையகம்.
சகமார்க்கம் - நான்கு சமய நெறிகளில் ஒன்று. தோழமை நெறி பா. மார்க்கம்.
சகயோகம்-தோழமை யோகம் சாயுச்சியமாகும்.
சகலர் - முத்திற உயிர்களில் கலையுள்ள ஒருவர்.மும்முலம் உடையவர். இவர்களுக்கு இறைவன் சீவன்முத்தர் வழியாகத் தான் நின்று மெய்யுணர்வு அளிப் பான். பா. விஞ்ஞானகலர், பிரளயாகலர் ஒ. அகலர்.
சகலம் - சாக்கிரமும் கலாதியும் சேர்ந்தது. காரணமூன்றவத்தைகளில் ஒன்று. ஆணவத்தோடு மாயை, கன்மம் ஆகிய இரு மலங்களும் சேர்ந்திருக்கும் நிலை, ஆன்மா தான் சிறிதே அறிவு பெற்று, உலகியலில் காணப்படும். அந்த ஈடுபாடே இறப்பு, பிறப்பு ஆகியவற்றை ஆன்மா அடையக் காரணம். சக்தி, சத்தி சுருங்கக் கூறின், சகலம் மருள் நிலையாகும்.
சகல அவத்தை - காரண மூன்ற வத்தையில் ஒரு வகை. இதில் ஆன்மா உலகத்தை அறியாது. ஆணவ மேலீட்டால், அது குறிப்பிட்ட பொருளிலேயே இருக்கும்.
சகல கேவலம் - சகலர்க்குரியது. சகலர் என்பவர் மும்மலத்தினர்.
சகல சாக்கிரம் -இதில் எல்லாக் கருவிகளும் நன்கு இயங்கும். ஆகவே, ஆன்மா இந்நிலையில் உலகத்தை நன்றாக அறிந்து நுகரும். சிவதத்துவம் ஐந்தும் குறைவின்றி நிற்கும்.
சகல சொப்பனம் முதலியவைபுருவ நடுவில் நிற்கும். இருப்பினும் இடையிடையே சிவ தத்துவம் ஐந்திலிருந்து நான்கு, மூன்று, இரண்டு.ஒன்று என்று குறைவதால், உலக அறிவு இடையறவின்றி நிகழும்.
சகலன் - சகலான்மா.
சகளம் - உருவத்திருமேனி எ-டு சகளமாய் வந்து என்று உந்தீபற (தி உ1).
சகளத் திருமேனி - சிவன் உருவடிவம். -
சகளத்துவம் - கிரியை மிகுந்து ஞானம் குறைந்துள்ள ஈசுவரத் தத்துவம்.
சகளநிட்களம்- இலிங்கமாகிய சிவன் அரு உருவத்திருமேனி,
சகளப்பெற்றி - உருவத்திருமேனி பெருமை எ-டு பிறங்கிய நிட்கள சகளப்பெற்றி (சிபி 14).
சகன்-முழுமுதற் கடவுள்.
சக்தி. சத்தி, சத்தி - தெய்வ வல்லமை, ஆற்றல் அல்லது அருள். அறிவு முதலிய பண்புகள் சத்தி எனப் படும். சத்தியே சிவம், சிவமே சத்தி. சத்தியே விந்து, சத்தியே மனோன்மணி அறிவில்லாத பொருள்கள் சடம் ஆதலால், அவற்றின் ஆற்றலே சடசத்தி எனப்படும். அறிவுடைய பொருள்கள் சித்து எனப்படுவ தால்,அவற்றின்ஆற்றல்சிற்சத்தி எனப்படும். முப்பொருள் களில் பதியும் பசுவும் சித்தாதலால், அவற்றின் ஆற்றல் சிற் சத்தி என்றும், பாசங்கள் சடங்கள் ஆதலால் அவற்றின் ஆற்றல் சடசத்தி என்றும் கூறப்பெறும்.
சக்திகலைஉரு-சத்திதத்துவம்64 கேசரங்களுக்கு உள்ளிருக் கும் பொகுட்டு வடிவமாகும். சாதாக்கியத்திற்கு மேலுள் ளது. (சிபோ பா 61)
சங்க இலக்கியங்கள் - எட்டுத் தொகை, பத்துப்பாட்டு முத லிய நூல்கள். இவற்றில் சிவ னுக்குரிய பண்புகளும் செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
சங்கதி - இயைபு.
சங்கரி - துடைப்பு, அழிப்பு.
சங்கமம் - 1) இயங்கும் சிவனடியார் திருக்கூட்டம் 2) வீர சைவ சீவன் முத்தர்கள், வீரசைவர் களை வழிநடத்துபவர். வேறு பெயர் சரலிங்கம்.
சங்கம தாபங்கள்- 1) சிவனும் சிவனடியாரும் நிலைத்திருப் பவர் சிவன். எ-டு சங்கமதா பரங்கள் தத்தம் கன்மத்துக்கு ஈடா (சிசிசிப131) 2) சராசர மாகிய உயிர்கள்.
சங்கமத் திருமேனி - இயங்கும் சிவனடியார். பா. திருமேனி, தாபரம்.
சங்கமர் - சிவபத்தர்.
சங்கம வடிவம் - சிவபத்தர் வடிவம்.
சங்கம வழிபாடு வழிபாடு - மூவகை வழிபாடுகளில் ஒன்று. சிவனடியாரை வணங்குதல், சிவனடியார் சிவனுக்குத் தொண்டு செய்பவர். ஆகவே, அவரை வணங்குதல் சிறப்புடையது.
சங்கம வேடம் - சிவ பத்தர் திருவேடம்.
சங்கரர்-எல்லாச்சுருதிவாக்கியங்களுக்கும் அபேதக் கொள்கையின் அடிப்படையில் உரை கண்டு, அக்கொள்கையை நிலை நாட்டியவர். அபேதக் கொள்கையை நிலைநாட்டி யவர். அபேதக் கொள்கையை ஏற்பின், அதைச் சுருதி வாக்கிய மாகக் கொள்வதில்,சங்கரருக்கு உடன்பாடே ஆகமங்கள் பேதக்கொள்கையையோ பேதாபேதக் கொள்கையையோ கொண்டிருக்குமாயின், அவை சுருதியுடன் பொருந்துவன அல்ல என்பது சங்கரர் கருத்து. சங்கரன் - சிவன், சங்கற்பம் - 1) முதலுணர்வு 2) கொள்கை எ-டு சங்கற்ப சதாகதியும் தந்து (சிபி 43).
சங்கற்ப நிராகரணம் - 14 மெய் கண்ட நூல்களுள் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம் மாயா வாதமும் மற்றும் அகச்சமயங்கள் பலவும் கூறுங்கொள்கைகளை எடுத்துக் கூறிச் சித்தாந்த நோக்கில் அவற்றை மறுப்பது. அவ்வாறு மறுக்கப்படும் சம யங்களாவன: 1) மாயா வாதம் 2) ஐக்கிய வாதம் 3) பாடாண வாதம் 4) பேதா வாதம் 5) சிவ சம வாதம் 6) ஈசுர அவிகார வாதம் 7) நிமித்தி காரண பரி ணாம வாதம் 8) சைவ வாதம் 9) சங்கிராந்த வாதம்.
சங்கற்பித்தல்-எண்ணுதல்
சங்காரம் -அழித்தல், ஒடுக்கல்.
சங்காரக் காரணன் - அழித்தலுக்குக் காரணமான சிவன்.
சங்கியை - எண்ணிக்கை
சங்கிரமித்தல் - கலத்தல்,
சங்கிராந்த சமவாதம்-பாசுபதம்
சங்கிராந்தவாதம்- மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் மேவி, அதனை அருள் வடிவம் ஆக்கும் என்னும் கொள்கை
சங்கு - இடம்புரி, வலம் புரி, சலஞ்சலம், பாஞ்ச சன்னியம் என நான்கு.
சங்கேதம்-சொல்லுக்கும்பொருளுக்கும் உள்ளதாகிய நியம ஆற்றல்.
சங்கை - 1) கருத்து எ-டு கால சங்கையினைப் பண்ணி (சிசி சுப 144) 2) ஐயம்.
சச்சிதானந்தமயன் - சத்தாயும் சித்தாயும் உள்ளது ஆனந்த மயமாக இருக்கும். ஆகவே, இறை வனைச் சச்சிதானந்தமயன் என்று நூல்கள் கூறும்.
சச்சிதானந்தம் - ஆனந்தம் என்னும் இறைவனுக்குரிய குணம். உண்மையறிவு.
சஞ்சிதம்-ஒருவகைக்கன்மத்துள் ஒன்று. மாயையில் கட்டுப்பட்டிருப்பது இறைவன் குருவாகி வந்து ஞானத்தை உணர்த்தும் பொழுதே, அவன் அருளால் நீங்குவது. தமிழில் பழவினை, கிடைவினை, முன்வினை என்று கூறப்பெறும், உடம்பு உள்ளவரை இருப்பது சஞ்சித கன்மம் என்றும் கூறப்பெறும். தூல கன்மம் தூலநிலை நீங்கிச்கசூக்குமமாய் நிலைத்திருக்கும் பொழுது, சஞ்சிதம் எனப்படும். சஞ்சிதம்- நன்கு பெறப் பட்டது.
சடங்கு - வைதிகச் செயல்.
சடசத்தி- பாசம் சமம்.ஆதலால், அதன் சத்தி சடசத்தி
சடத்துவம் - பருப்பொருள் தன்மை
சடப்பொருள் - பருப்பொருள்.
சடம் - பருமை, அறிவற்றது.
சட்ட-செம்மையாகஇச்சொல்லே சட்டம் என மருவிற்று. எ-டு 1) சட்ட இனியுளது சத்தே காண் (சிபோபா.57) 2) தாங்களே சட்ட உறங்குவார்கள் (திப 13)
சடிதி - விரைவாக
சடைய நாயனார் - ஆதிசைவர். திருநாவலூர் - நடுநாடு. சுந்தரர் தந்தை. இலிங்க வழிபாடு (63).
சண்டேசுர நாயனார் - மறையவர். திருச்சேய்ஞலூர் சோழநாடு. பசு மேய்த்துப் பசும்பால் கறந்து மணலான இலிங்கத் திற்குத்திருமஞ்சனம் செய்தவர். இலிங்க வழிபாடு (63),
சண்மதம்-1) சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கெளமாரம், செளரம் என ஆறு. 2) கபில மதம், கணாத மதம், பதஞ்சலி மதம், அட்சபாத மதம், வியாச மதம், சைமினி மதம் என்னும் ஆறுதரிசனங்கள்.
சதசத்து - ஆன்மா என்பது பசுசத்தும் (உள்பொருள்), அசத்துமாய் (இல் பொருள்) இருப்பது. இதனால் அதுசார்ந்ததன் வண்ணம் உடையதாதல். பசு சத்தைச் சார்ந்த வழி சத்தாயும் அசத்தைச் சார்ந்தவழி அசத் தாயும் நிற்றல் பசு சத சத்து. சத்தம் - ஒசை, சொல். ஐம்புலன் களில் ஒன்று. எ-டு சத்தம் பொருள்தான் அறிதற்கு உளதாம் (சிசிபப 219).
சத்தப்பிரபஞ்சம்-சொல்லுலகம் மாயையினின்று தோன்றுவது. பா.அர்த்தப் பிரபஞ்சம்
சத்தப் பிரம வாதம் - ஏகான்ம வாதத்தில் ஒருவகை நாதமே பிரமம் என்னும் கொள்கை. இக்கொள்கையர் சத்தப்பிரமவாதி.
சத்தர் - சிவன்.
சத்தாதிகள் - ஐம்புலன்கள்.
சத்ததாது-பா.ஏழுதாது.
சத்தி-பாசக்தி,
சத்தி சங்கற்பம்-சத்தியாய் இஃது இங்ங்னமாகுக என்று எண் ணுதல்.
சத்தி தத்துவம் - சத்தியாகிய தன்மை, அல்லது ஆற்றல், சுத்ததத்துவங்களில் ஒன்று.
சத்தி நாயனார்-வேளாளர்.வரிஞ்சையூர் - சோழநாடு. திருவைந் தெழுத்தை ஓதி வந்தவர். சிவனடியாரை இகழ்பவன் நாவை அறுக்கச் சத்தி என்னும் கருவி ஏந்தியவர். சங்கம வழிபாடு(63)
சத்திநி பாதம்- ஆற்றல் வீழ்ச்சி. திருவருள்பதியப்பெற்றவினை. அதாவது,உயிர்களின் பக்குவம் சிறிதுசிறிதாகமுதிர,இறைவன் திருவருளும் அவற்றில் சிறிது சிறிதாகப் படிதல் முந்நிகழ்ச்சி களில் ஒன்று இதிலுள்ள படி நிலைகள் நான்கு மந்ததரம் மந்தம், தீவிரம்,தீவிரதரம்.இவற்றில் முதல் மூன்றில் சரியை, கிரியை, யோகம் ஆகியவையும் இறுதி ஒன்றில் ஞானமும் நிகழ்வதால், இறைவன் குரு சதுர்ப்பாதம் வாகிவந்து ஞானத்தை உணர்த்துவான். ஆன்மா உய்வதற்குரிய வழி, சரியை, கிரியை யோகம், ஞானம் ஆகிய நான்கு சாதனங்களைச் செய்தலாகும். ஆன்மா பரிபக்குவ நிலையில் இருவிணை ஒப்பு, மலபரிபாகம்,
சத்தி நிபாதன்-ஆகிய முந்நிகழ்ச்சிகளும் ஒருங்கே நிகழும் உடனிகழ்ச்சிகளாகும். சத்திநியாதன் - திருவருள் பதியப் பெற்றவன்.
சத்திபேதம் - மகேசை மனோன்மணி, உமை, திரு, வாணி என ஐவகை ஒ. சிவபேதம்.
சத்தி மடங்கல்- வலி குன்றல்,
சத்தியம் - வாய்மை,
சத்திய நிர்வாணம் - மெய்ம்முத்தி, பிறவியறுத்தல்,
சத்தியப் பொருள்- உண்மைப்பொருள்
சத்து - மெய், முழுமுதல், எக்காலத்தும் நிலைத்திருப்பது. தோன்றியும் நின்றும் அழிதலும் வருதலுமாகிய மாற்றம் இல்லாதது. சத்து என்பதே சைவசித்தாந்தம் கொள்ளும் பொருள். எ-டுசத்தாம்சகத்தின் அமைவு எல்லாம் (சிசிபப 225) ஒ. அசத்து.
சத்ரம் - குடைபிடித்தல் வழிபாட்டு முறைகளுள் ஒன்று.
சதுர்த்தா சத்திநிபாதம்-சத்திதி பாதமி நானகு. மந்த, மந்ததரம, தீவிர தரம் என நான்கு.
சதுர்ப்பதவி சதுர்விதம்-சாமீப் பியம், சாலோகம், சாரூபம், சாயுச்சியம் என நான்கு
சதுர்ப்பாதம் - நான்கு பாதம் அல்லது அடி கிரியை, சரியை, யோகம், ஞானம் என நான்கு. சதுர்முகன்- நான்முகன்.
சதுர்விதம் - சன்மார்க்க முத்திகள் 4.
சந்தணை - சந்தனம் சேர்ந்த
சந்தானம்-1) குருபரம்பரை 2) 28 ஆகமங்களுள் ஒன்று.
சந்தான அமைப்பு-பா. சந்தானகுரவர்.
சந்தான குரவர்- சந்தானா சாரியார். இறையறிவுபெற்றவர். அகச்சந்தான குரவர், புறச் சந்தான குரவர் என இருவகை யினர்.
சந்தான குரவர், அகச்- நால்வர். நந்திதேவர்,சனற்குமாரர்,சத்திய ஞான தரிசினிகள், பரஞ்சோதி முனிவர். இவர்கள் எப்பொழுதும் திருக்கயிலையே நோக்கி இருப்பவர்கள்.
சந்தான குரவர், புறச்- நால்வர். மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார். திருக்கயிலையில் உபதே சிக்கப்பட்ட உபதேசத்தைப் புவியில் பரவச் செய்தவர்கள். இவர்கள் நந்தி பெருமானிடத்தில் உபதேசம் பெற்ற சனற் குமாரமுனிவர் வழிவந்தவர் கள். இவ்வழியினரே இப்பொழுது குருமகாசந்நிதானங்களாகச் சைவ ஆதீனங்களை அருள்பாலித்து ஆண்டு வருடவர்கள். இவர்கள் மெய்கண். பார்வழிவந்தவரே.பா.ஆதீனங்கள்.
சந்தான வழி - குருபரம்பரை வழி. இவ்வழி வந்தவரே தற் பொழுது ஆதீனத்தலைவர்க ளாகவுள்ள பண்டார சந்நிதிகள்.
சந்திர ஞானம் - 28 ஆகமங்களுள் ஒன்று.
சந்தேகம் - ஐயம்.
சந்நிதி-திருமுன், சங்கற்பம்
சந்நியாசம் - ஆச்சிரமம் 4 இல் ஒன்று.
சப்தம் - உரை, ஆகமம்
சப்ததானம் - ஏழுர்த் திருவிழா. திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திரு நெய்த்தானம் ஆகிய ஆறு இடங்களுக்கும் திருவையாற்றி லுள்ள சிவபெருமானும் நந்தியும் எழுந்தருளும் விழா.
சப்தநரகம்-ஏழுநரகம்பொய்யர் வாழும் உலகம். அவையாவன. அள்ளல், இரெளரவம், கும்பிபாகம், கூடசாலம், செத்துத் தானம், பூதி, மாபூதி
சப்த பிரபஞ்சம் - சொல்லுலகம்.
சப்த பிரமாணம் - உரையளவை. ஆகமம் அல்லது வேதம். இது தந்திரம், மந்திரம், உபதேசம் ஆகிய மூன்றையுங் கொண்டது.
சபீசை-சபீசதீக்கை அறிவொழுக் கங்களில் சிறந்துள்ள உத்தம சீடர்களுக்குச் சைவ சமய ஆசார கருமங்களைச் செய்து வரும்படி உபதேசிக்கும் கிரியாவதி தீக்கை வகை.
சபை - அவை. ஆறு:1) இரத்தின சபை - திருவாலங்காடு 2) கனக சபை - சிதம்பரம் 3) வெள்ளி சபை - மதுரை 4) தாமிர சபை - திருநல்வேலி 5) சித்திர சபைதிருக்குற்றாலம் 6) ஞான சபை - வடலூர்.
சமட்டி,சமஷ்டி,-தொகுதி கூட்டம், கூட்டு. சமட்டிப்பிரணவம்- ஒம் என்பது அகாரம் முதலிய ஐந்தின் தொகுதியாய் நிற்பதால், அது சமட்டிப் பிரணவம் ஆகும்.
சமணம் - சைனமதம், ஆருகதம். பற்றும் உடம்பில் உயிர் பரவி நிற்பது என்னுங்கொள்கை
சமணர்-சைனர்,ஆசீவகர்,சாவகர் அருகர், ஆருகதர், சாரணர், யோகர். அருகனை வழிபடு வோர். அருகன் சமணருக்கு ஆதி குருமூர்த்தி ஆன்மாவும் உலகமும் அநாதிநித்தியமாகும். உலகத்துக்குக் காரணமாகிய ஒரு கடவுள் இல்லை என்பது இவர்கள் கொள்கை அட்ட குணம் முத்தியில் நம்பிக்கை உள்ளவர்கள். தீர்த்தங்கரர் களில் புகழ்பெற்றவர்மகாவீரர். இவர் புத்தர் காலத்தவர். இச்சமயம் திருஞான சம்பந்தர் காலத்து மிக்க ஏற்றம் பெற் றிருந்தது.
சமணர் கூற்று- அனேகாந்தவாதம்.
சமயம் - சமைக்கப்பட்டது சமயம் வகுக்கப்பட்ட கொள் கைப்படி வாழ நன்னெறிகள் அளிப்பது. இறைவனோடு ஒன்றச் செய்வது. மக்கள் தொண்டும் இறைத்தொண்டும் செய்ய வற்புறுத்துவது.இதன் இரு கண்கள் சாத்திரமும் கோத்திரமும் ஆகும். சைவ சமயம் சிறந்த சமயம்,
சமயம் சாதிக்கும் கருவிகள்-பா. மறுப்பு உத்திகள்.
சமயக் கணக்கர் - மதவாதிகள்.
சமயக் கணக்கு- மதவாதம் எடு கத்தும் சமயக்கணக்கில் படுவரோ (நெவிது 120)
சமயக் குரவர் க
- சமயாசாரியர் நால்வர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர், மூவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர்.
சமய தீக்கை - ஒருவனை ஒரு சமயத்திற்குரியவனாக்கும் செயல் சமயம் என்பது இங்குச் சைவத்தைக் குறிக்கும்.
சமய பதார்த்தம் - பதி, பசு, பாசம், பதி கிருத்தியம், பசு கருமம், பசுபோகம், முத்தி சாதனம், முத்தி என எட்டு. சைவ சமயத்திற்குரியது.
சமய வகை- சைவசித்தாந்தத் தைப் பொறுத்தவரை சமயம் நான்கு வகை: 1) அகச்சமயம் 6 2) அகப்புறச் சமயம் 6 3) புறச் சமயம் 6 4) புறப்புறச்சமயம் 6
சமய வாதம் - சமயக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தம் சமயமே உயர்ந்தது என்று கூறி அதைச் சான்றுகள் மூலம் நிலைநாட்ட முயலுதல். இங்குச் சைவத்திற்கு மாறான சமய வாதங்கள் எல்லாம் சற்காரிய வாதத்தின் மூலம் மெய்கண்டாரால் திறம்பட மறுக்கப்படு கின்றன.அவர்42 சமயங்களைத் தம் நூலாகிய சிவஞானபோதத் தில் மறுக்கின்றார். இவரைப் பின்பற்றி அருணந்தி சிவாசாரியார் தம் சிவஞான சித்தியார் பரபக்கத்தில் 14 மதங்களையும் உமாபதி சிவாசாரியார் தம் சங்கற்ப நிராகரணத்தில் 9 மதங் களையும் மறுக்கின்றனர்.
சமயவாதி - தன் சமயமே உண்மைச்சமயம் என்று கூறுபவர். சமய விசேடம் - திரோதிகாரம், அர்ச்சனாதிகாரம், யோகாதிகாரம், சமய தீக்கை, சிறப்புத் தீக்கை என ஐந்து. சமயவிளைவுகள்-:சமயம் உண்டாக்குபவை.
- அவையாவன:1) தன்னையறிதல் 2) தலைவனையறிதல் 3) தடையை அறுத்தல் 4) நன்மை தலைப்படல் 5) பொது நோக்கு என ஐந்து.
சமயி - சமய தீக்கை பெற்றவர்.
சமவாதிபிரவர்த்தி-செயல்முறையில் சரிபார்த்தல்.
சமவாயம், சமவேதம் - நீக்கமின்றி நிற்றல், சைவ சித்தாந்தத்தில் இது
- தாதான்மியம் சம்பந்தமாகும். இது இருவகை 1) குணத்திற்கும் குணிக்கும் உண்டாகும் ஒற்றுமைத்தொடர்பு 2) இருபொருள் ஒற்றுமைத் தொடர்பு. இவ்விரண்டில் முன்னது தாதான்மியம் என்றும் பின்னது அத்துவிதம் என்றும் கூறப்பெறும். சிவம் குணி, சத்தி குணம். சீவமும் சிவமும் கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவிதம் எனப்படும். சமவேதம் சமவாயம் என்றே பொருள்படும்.
சமவியாபகம் - ஒத்த பரவுகை.
சமனம் - திரோபவம்.
சமனன்-1) பத்து வளிகளில் ஒன்று 2) பெத்த நிலையில் ஆன்மா
- அடையக்கூடிய உத்தம பதவி. சிவசத்தி.
சமாதி- 1)முத்திநிலை எண் சித்திகளில் ஒன்று. உள்ளத்தைப்
- பரம்பொருளோடு ஒன்றுபடுத்தி நிறுத்தி, உயிர்பெறும் இறுதிநிலை. எ-டு சார்பு கெடாவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப்பட வருவது.
- 2)கல்லறை-திருமுருக கிருபானந்தவாரியார் கல்லறையில் வைக்கப்பட்டார்.
சம்சமயம் - ஐயப்பாடு
சமையா - அமைதியிலா. எ-டு சமையாப் பொறுமை
சம்பந்தம்- பொருள் : கன்மத்தில் தொடர்பட்டு நிற்பதால், மாயை சம்பந்தம்
- எனப்படும். வகை: 1)அத்துவிதம் - இருமையில் ஒருமை 2)தாதான்மியம். ஒருமையில் இருமை.
- தற்கிழமையே தமிழில் தாதான்மியம், சமவேதம், சமவாயம் எனப்படும். இருமையில் ஒருமை என்பது இறைவனுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பு. ஒருமையில் இருமை என்பது இறைவனுக்கும் சத்திக்கும் :இடையே உள்ள தொடர்பு.
சம்பந்தப் படுத்தல் - தொடர்புண்டாக்கல்.
சம்பந்த விசேடம் - ஒருவகைத் தொடர்பு.
சம்பந்தர்-பா. திருஞானசம்பந்தர்.
சம்பவம் - உண்மை, நிகழ்ச்சி. அளவை 8 இல் ஒன்று, ஒ.அசம்பாவிதம்.
சம்பை - எழுவகைத் தானியங்களில் ஒன்று.
சமுவரம் - பொறி வழிச்செல்லாது தடுத்து முத்திக்குக் காரணமாவது.
சமூகம் - கூட்டம்.
சமூகான்ம வாதம் - சவுத்திராந்திகம்.
- உடல், பொறி, சூக்கும உடல்,உயிர்வளி ஆகியவற்றுள் ஒன்று குறைந்தாலும் அறிவு நிகழாது. அவை எல்லாம் கூடிய சமுதாயமே உயிர் என்னுங்கொள்கை. இக்கொள்கை உடையவர் சமூகான்மவாதி எனப்படுவர். இவர்கள் பெளத்தருள் ஒரு சாரர்.
சயம் - வெற்றி.
107
சயம் உறு- வலி பொருந்திய.
சயனம் - உறக்கம்.
சயித்திரம் - சித்திரை மாதம்.
சரசுவதி- 1)நாமகள் கலைத் தெய்வம். 2) 9 தீர்த்தங்களில் ஒன்று.
சரடு - முறுக்கு நூல். எ-டு தடமணி சரடு.
சரணம் - அடிதொழில்.
சரயு - 9 தீர்த்தங்களில் ஒன்று.
சராயு - கருப்பை.
சராயுசம் - கருப்பையில் தோன்றுவது; மனிதன்.
சர்வேதர்ம - எல்லாக் குணங்களையும் உடையது. அஃதாவது சார்ந்ததன் தன்மையாய் நிற்றல்.
சர்வோக்தம்- 28 ஆகமங்களுள் ஒன்று.
சரியை- ஒழுக்கம். நாற்படிகளில் ஒன்று. இறைவனுக்காகச் செய்யப்படும் :செயல். சிவாலயங்களில் சென்று திருவலகிடுதல், திருமெழுகிடுதல், பூந்தோட்டம் அமைத்தல், பூப்பறித்து மாலை தொடுத்துக் கொடுத்தல், உருவத் திருமேனிகளாகிய மூர்த்தங்களில் ஒன்றை நியமமாக வழிபடுதல்.
சரியை வகை - 1)சரியையில் சரியை; திருக்கோவிலில் அலகிடல், மெழுகுதல். 2)சரியையில் கிரியை பரிவார மூர்த்திகளில் ஒரு மூர்த்தியை வழிபடுதல். 3)சரியையில் யோகம்: நெஞ்சில் சிவபெருமான் உருவத்திருமேனியைத் தியானஞ் செய்தல். 4) கிரியையில் ஞானம்; அத்தியான பாவனையின் உறைப்பினால் ஒரு பட்டறிவு உணர்வு உண்டாதல்.
சரீரம் - உடல் மூவகை பூதனா சரீரம் பருஉடல், புரியட்ட சரீரம் - நுண் உடல் யாதனா சரீரம்- வேற்று உடல்.ஒ.சாரீரம்
சரீர சரீரி பாவம் - உடலும் உடலும் உடைய தன்மை.
சருவஞ்ஞன்- முற்றுணர்வினன்.
சருவ வியாபி - எங்கும் நிறைந்தவன்; இறைவன்.
சலந்தரன் - சிவனால் மடிந்த அசுரன்.
சலந்தரவத மூர்த்தி- சலந்தரனை வதைக்க எடுத்த
- சிவமூர்த்தியின் வடிவம்.
சலம்-தத்துவ அசைவு.நீர் துயர், நடுக்கம், வஞ்சனை, எ-டு சாம் பொழுதும் ஏதும் சலமில்லை செத்தாற்போல் (திப 39)
சலமிலன்-விருப்பு வெறுப்பற்ற இறைவன்.
சலனம்- சஞ்சலம், இயக்கம் எடு 1) இனிச் சலனப்பட்டுப் பயனில்லை 2) இக்கதையில் சலனம் குறைவு.
சலித்தல் - சோர்வு.
சலியாது நிலைபெறுதல்-அசையாது நிற்றல்.
சவடி - காதணி அணிவகையில் ஒன்று. எ-டு சூடகம் கடகம் மோதிரம்சவடி (சிசிபப 258)
சவம்- பிணம்.எடுசவ ஊர்வலம்.
சவிகற்பம் - சிறப்பு வேறுபாட்டுடன் கூடியது. ஒரு பொருளைத் திட்டவட்டமாக உணர்வது ஒ. நிருவிகற்பம்.
சற்காரியம் - சத்காரியம். சத் உள்ளது. காரியம்- பொருள். உள்பொருள்.
சற்காரிய வாதம் - உள்ளது தோன்றும் இல்லது தோன்றாது என் னும் சைவ சித்தாந்தக் கொள்கை உள்பொருள் வழக்குரை.
சற்காரிய வாதச் சிறப்புகள் -
1) தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்வதால் உளவியல் திட்பம் உடையது.
2) மறுப்புக்குச் சிறந்த கருவி, எனவே,இதனை மெய்கண்டார் சிறப்பாகக்கையாள்கின்றார்.
3) காரியம் ஒடுங்குங்கால், அதன் முதற் காரணத்தில் ஒடுங்கும்.
4) இலயித்தது என்றதனாலேயே அழியாமல் ஒடுங்கியது ஒன்றாகி, ஒடுங்கிய உலகம் மீண்டும் தோன்றும் என்பதாகிறது.
5) நிலத்தின்கண் உள்ள வித்தில் நின்று முளை தோன்றுமாறு போல, ஒடுங்கிய அவத்தையிலுள்ள மாயையினின்று உலகம் தோன்றும்.
6) இருவினை, ஆதி என்று கூறின், முன்பு இல்லாதது பின்னர்த் தோன்றும் எனப்பட்டு வழுவாகும்.
7) தூல உடல் புதிதாய்த் தோன்றினும், அவ்வாறு தோன்றுவதற்குச் சூக்கும உடல் உள்ள தாய் இருத்தல் பற்றி இல்லது தோன்றுவதில்லை.
8) மாறிப்பிறத்தல் உயிருக்குண்டு.
9) சகச மலத்தினால் ஆன்மாவிற்கு உணர்வு இல்லாமல் போகுமாயின், இல்லாத உணர்வு பின் உண்டாதல் கூடாது. ஆகவே, அம்மலம் ஞானத்தின் தொழில் நிகழவொட்டாது மறைத்துக் கொண்டு நிற்கும் இவ்வாதம் சைவசித்தாந்தத்திற்கே உரியது.
சற்குரு - நல்லாசான். எ-டு சாத்திரத்தை ஒதினார்க்குச் சற்குருவின் தன் வசன மாத்திரத்தே வாய்க்கு நலம் (திப 6)
சற்புத்திர மார்க்கம் - மகன்மை நெறி. நான்கு சமய நெறிகளுள் ஒன்று. பா. மார்க்கம்.
சனகர் - சிவபெருமானிடம் ஞானம் பெற்ற நான்கு முனிவர்களில் ஒருவர்.
சனந்தனர் - பாசனகர்
சனற்குமாரர் - பாசனகர்,
சனனம் - பிறப்பு.
சனனம் சார்தல் - ஏறுதல்.
சன்மார்க்கம் - மெய்ந்நெறி, நன்னெறி, ஞானநெறி.நான்கு சமய நெறிகளில் ஒன்று. இந்நெறியை மாணிக்கவாசகரும் இராமலிங்க அடிகளும் பரப்பியவர்கள் பா. மார்க்கம்.
சன்மார்க்க சித்தியார் -14 பண்டார சாத்திரங்களில் ஒன்று ஆசிரி யர் அம்பலவாண தேசிகர்.
சன்மார்க்க முத்திகள் - நான்கு சாலோக்கியம், சாமீப்பியம், சாரரூப்பியம், சாயுச்சியம்.
சன்னிதானம் - 1) திருமுன் 2) மடாதிபதி 3) சிவ ஆவேசம்
சனாதனர் - பா. சனகர்,
சனி - 9 கோள்களில் ஒன்று.
சாக்கியம்-சாக்கிய மதம் பெளத்த மதம். சாக்கிய இனத்தில் தோன்றியதால் இப்பெயர்.
சாக்கியன்-சாக்கிய முனி, புத்தர்.
சாக்கிய நாயனார் - வேளாளர். திருச்சங்கமங்கை சோழநாடு, பெளத்த மதத்தைச் சார்ந்து, அக்கோலத்தில் இருந்தபடியே சிவபெருமான்மீது அன்பு பூண்டு கல்லால் எறிந்து வழி பட்டு, உணவு உண்ணும் நியமம் பூண்டவர். இலிங்க வழிபாடு (63).
சாக்கிரம் - நனவு, ஆன்மாவின் விழிப்பு நிலை. அவத்தை ஐந்தில் ஒன்று. அதில் முதல் நிலை. ஆன்மா புருவ நடுவில் நிற்கும். கலாதி சேர்ந்த சகலம். எ-டு இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் (சிபோபா 29).
சாக்கிரக்கருவி - நனவுக்கருவி. சாக்கிர அவத்தைக்குரிய கருவி. அவையாவன: ஐம்பொறி 5, ஐம்புலன் 5, அகக்கருவி 4, வளி 10, ஆன்மா 1 ஆக 25.
சாக்கிரத்தில் அதீதம் - நனவில் உயிர்ப் படங்கல், சாக்கிராதீதம் பொருள்களை ஆன்மா நுகர்கின்ற வேளையில், உயிர் வளி இயங்காது. ஒன்றை அறியாமல் ஆன்மா மயங்கி நிற்கும். ஐந்தவத்தையில் இறுதி நிலை அதாவதுதற்பரம்ஆகும்நிலை.
சாக்கிரத்தில் சாக்கிரம் -நனவில் நனவு, தத்துவ தாத்துவிகங்களோடு கூடிப் பொருள்களை ஆன்மா நுகரும் நிலை. ஐந்து அவத்தையில் முதல் நிலை.
சாக்கிரத்தில் சுழுத்தி - நனவில் சுழுத்தி. ஐந்தவத்தையில் இது இரண்டாம் நிலை, ஆன்மா சித்தத்துடனும் உயிர்வளியுடனும் கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் நிலை.
சாக்கிரத்தில் செயல் ஒழியுங்கருவிகள் - தன்மாத்திரை 5, பூதம் 5, தாத்துவிகம் 40 ஆக 40+10=50 தாத்துவிகத்தில் அகத் தத்துவம் 10 அடங்கும்.
சாக்கிரத்தில் சொப்பனம் - நனவில் கனவு, சித்தத்துடனும் உயிர் வளியுடனும் ஆன்மா கூடி, அறிவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிற்கும் நிலை. ஐந்தவத்தையில் இது மூன்றாம் நிலை.
சாக்கிரத்தில் துரியம் - நனவில் பேரூறக்கம். ஐந்தவத்தையில் இது நான்காம் நிலை ஆன்மா சித்தம் இழக்கும். சிறிதே இயங்கும்.
சாக்கிரத்தில் துரியாதீதம் - நனவில் உயிர்ப்படங்கல், நாபி யில் ஆன்மா நின்ற பின்னர். அங்கு நின்று கீழ் இறங்கி மூலாதாரத்தை அடையும். இப்பொழுது முன்பு இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்வளி இயங்காது. இது இறுதி நிலையாகிய அதீதநிலை
சாக்கிர வகை - 1) சாக்கிர சாக் கிரம் 2) சாக்கிராதி 3) சகல சாக்கிரம் 4) கேவல சாக்கிரம் 5) சுத்த சாக்கிரம்.
சாக்கிராதி - நனவாதி சாக்கிரம் முதலிய 5. இது மூன்றுவகை
1) கீழாலவத்தை : கீழ் நோக்கு அவத்தை. கீழ்நோக்கிய சாக்கிரம் ஆன்மா புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரை செல்வது உற்பவம் காட்டும் சொப்பனம் முதலிய அவத்தைக்குரியது. 35கருவிகள் தொழிற்படும்.
2) மத்திய அவத்தை மையநோக்கு அவத்தை மையநோக்கு சாக்கிரம். எல்லாக்கருவிகளும் செயற்படும். புறத்து விடயங்களை நுகர்வதற்குரியதாய் இலாடத்தில் நிகழ்வது. இதிலும் ஐந்து அவத்தை உண்டு.
3) மேலாலவத்தை மேல்நோக்கு அவத்தை மேல் நோக்கு சாக்கிரம். மூலாதாரத்திலிருந்து ஆன்மா.புருவ நடுவிற்குச் செல்லுதல், தீய பிறப்பு அறும் பொழுது உண்டாகும் சமாதி நிலை. -
சாங்கியம்- சாங்கிய மதம். தத்துவங்களைச் சங்கியையில் (எண்ணிக்கையில்) கூறுவதால் இப்பெயர். கடவுளை மறுப்பதால், நிரீச்சுர சாங்கியம் என்னும் பெயரும் உண்டு. ஈசுவரன் இல்லை என்பது நிரீச் சுரவாதம்,பொறிகள் வழியாகப் புலன்களால் விளைவதே புத்தி அல்லது அறிவு. ஆன்மா செலுத்துவதை ஐம்பொறிகள் தம் புலன்களால் அறியும் என்பது பொருந்தாது என்று இது கூறும் அளவை அறிவால் அறியப்படும் உலகு சத்தே என்றும் இம்மதம் கூறும். கபிலரால் வெளிப்படுத்தப்பட்டது சாங்கியம். இது தத்துவங்கள் 25 என்றும் வரையறுக்கும்.
சாங்கிய நூல் - சாங்கிய சமயநூல்.
சாங்கிய யோகம் - பிரமமே சிவன், சிவனே பிரமம் என்னும் கொள்கையுள்ள சமயம்,
சாங்கியர் - சாங்கிய சமயத்தினர்.
சாட்சி-சைதன்யம், நுண்ணறிவு,
தூய ஆவி.
சாட்சு தீக்கை - நயன தீக்கை சாட்டாங்க நமக்காரம் - வணக்கத்தில் ஒருவகை. இருகை, இரு முழங்கால், இருதோள், மார்பு, நெற்றி ஆகிய எட்டுறுப்புகள் நிலத்தில் தோயச் செய்யும் வணக்கம்.
சாணம் - சாணி. பசுஞ்சாணத் தைச் சுட்டுத் திருநீறு செய்வது வழக்கம்.
சாண முத்திரை - முத்திரையில் ஒரு வகை. பா. முத்திரை
சாணை - சந்தனக்கல். மூர்த்தி நாயனார் திரு ஆலவாய் இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்து அளித்தவர் (திப50)
சாதகம் - நன்மை.ஒ. பாதகம்.
சாதனம் - கருவி.
சாதனமும் பயனும் - சிவஞான போதம் முதல் நூல். பிரமாணம், இலக்கணம் என்னும் இரு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 நூற்பாக்களில் ஆக 6 இல் முப்பொருள்களின் பொது இயல்பு உணர்த்தப்படுகின்றது. சாதனம், பயன் என்னும் இரு பகுதிகளில் ஒவ்வொன்றிலும் 3 நூற்பாக்களில் ஆக 6-இல் முப்பொருள்களின் சிறப்பியல்பு கூறப்படுகின்றது. குறிப்பாக, 8-12 நூற்பாக்களின் உட்பொருள் அற இயல், சமய இயல்பற்றியதாகும்.
சாதனன் - பிறந்தோன்.
சாத்தர் - சாத்திப் பூசை செய்பவர்.
சாத்தி - சாத்திரத்திக்கை தீக்கை 7 இல் ஒன்று. சிவாகமத்தத் துவங்களை ஆசிரியர் மாணவனுக்கு அறிவுறுத்தும் முறை.
சாத்திரம் - அருளறிவு நூல். சமயத்தின் ஒருகண், எ-டு சிவஞானபோதம்.சாத்திரத்தை ஒதச் சற்குருவின் அருள் கிடைக்கும். வகை : 1) வைதிகம் - சிவஞான போதம் 2) அவைதிகம் உலகா யதம். வைதிகம் : 1) இலெளகிகம், ஆயுள் வேதம், தண்ட நீதி 2) மீமாஞ்சை (சைமினி),நியாயம் (அக்கபாதர்), வைசேடிகம் (கணாதமுனிவர்) 3அத்தியான் மிகம்-சாங்கியம், பாதஞ்சலம் (பதஞ்சலி), வேதாந்தம4) அதி மார்க்கம் (கபிலமுனி) பாசு பதம், காபாலிகம், மாவிரதம் 5) மாந்திரம் - சிவன் அருளிய சித்தாந்தம.
சுருங்கக்கூறின், மீமாஞ்சை,வைசேடிகம் நியாயம், சாங்கியம்,பாதஞ்சலம், வேதாந்தம் ஆகிய ஆறுமாகும். இவற்றில் வேதாந் தம் ஒன்றுமட்டுமே அத்து விதம் - ஏனைய ஐந்தும் பேத நூல்கள். அவைதிகம் : உலகாயதம், பெளதிகம், ஆருகதம்.
சாத்தியர் -தேவருள் ஒரு சாரர்.
சாத்துக்கூறை-விக்கிரகங்களுக்கு அணியும் ஆடை
சாத்துப்படி-கோயில் விக்கிரகங்களுக்குச் செய்யும் அழகு.
சாதாக்கியம் - சதாசிவ தத்துவம் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல்.
சாதாகா சாரியார் - நன்மைசெய்பவர்.
சாதாரண இலக்கணம் - பா.இலக்கணம்
சாதாரம்-ஆதாரத்தோடுகூடியது.
சாதார தீக்கை - படர்க்கையில் சுத்தானம், சைதன்யத்தில் ஆவேசித்து உணர்த்தும் தீக்கை
சாதி- ஒரு கூட்டத்துக்குப் பொதுவாக உள்ள தன்மை, குலம்.
சாதி ஞானம் - ஒரு சொல் ஒருமை ஈறு தோன்றியாவது தோன்றாமலாவது நின்று பன் மைப் பொருளை உணர்த்துவது.
சாதித்தல்-சாதனத்தால் நிறுவுதல்
சாதிநெறி-சாதி கோட்பாடு
சாந்தம் - அமைதி சுவை 9 இல் ஒன்று.
சாந்த ரூபம் - பொறுமையாய் இருக்கும் தன்மை,
சாந்தி அதீதை - கலை 5 இல் ஒன்று.
சாமரம் - விசிறி கொண்டு விசுறுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று
சாமீபம், சாமீப்பியம் - இறை நிலை 4 இல் ஒன்று. கடவுள் அருகில் இருத்தல். பா. சன்மார்க்க முத்தி,
சாம்பொழுது-அறிவு ஒடுங்கும் பொழுது
சாம வேதம் - வேதம் 4 இல் ஒன்று.
சாமுசித்தராவார் - சிவபாவனை பண்ணும் சீலர்,
சாயாக்கோள் - இராகு, கேது.
சாயுச்சியம் - இறைநிலை 4இல் ஒன்று. ஆன்மா கடவுளுடண் ஒன்றும் நிலை.
சாயை காட்டுதல் - கண்ணாடி காட்டுதல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
சாரணர் - சமணரிலும் புத்தரிலும் சித்தி பெற்றவர்.
சாரவம், சார்வம் - சட்டி
சார்தல் - அடைதல்.
சார்ந்ததன் வண்ணம் - தற்றரும தருமி என்பது வடமொழி வழக்கு படிகம் தான் சார்ந்த பொருளின் வண்ணமாதல் போல், சத்து, அசத்து என்பவற்றுள் எதனோடு சார்கின்றதோ அதன் தன்மைத்தாய் நிற்பது ஆன்மா. இதுவே ஆன்மாவின் சொரூப அல்லது உண்மை இலக்கணம் பொதுவாக, ஒருபொருள் தான் சார்கின்ற பொருளின் வண்ணமாகும். பசு என்னும் உயிர் சிற்றறிவு உடையது. ஆதலால், அது தன் சார்ந்த பொருளின் வண்ணமாவது.
சார்ந்தோர் - அடைந்தோர்.
சார்ச்சி - சார்தலின்,
சார் நித்தியம் - கூட்டம்.
சார்பு - 1) பற்று, சமயச்சார்பு, 2) திருவருள்.
சார்புகெட - திருவருளினால் அத்திருவருளுக்கு மேல் செலல்.
சார்புணர்தல் - பற்றை உணர்தல். சார்புணர்தலே தியானமாகும்.
சார்புநூல் - நூல் 3 இல் ஒன்று. எ-டு சங்கற்ப நிராகரணம் என்னும் மெய்கண்ட நூல் பா. முதல் நூல், வழி நூல்
சார் வாகன் - 1) சார்வாக மதத்தினன் 2) உலகாயதத்தை நிறுவியவர்.
சாரீரம் - குரல். எ-டு இசைக்கு நல்ல சாரீரம் வேண்டும் ஒ. சரீரம்.
சா(ர்) வாகம் - நாத்திக மதம். வேறு பெயர் உலகாயதம்.
சாரூப்பியம் - இறை பதவி 4இல் ஒன்று. கடவுள் போல் வடிவம் பெறுதல்.
சாலம்பயோகம் - ஆதாரத்தோடு கூடிய யோகம்.
சாலார் - சால்பு இல்லாதவர். எ-டு சாலார் செயல் மால் ஆகுவதே (இஇ 16).
சாறுதல் - அமைதல்,
சாலோகம், சாலோக்கியம் - இறை பதவி 4 இல் ஒன்று. கடவுளுடன் ஓரிடத்தில் உறைதல்.
சாவி - பதர் எ-டு சாவிபோம்.
சாற்று - கூறு.
சானம் - தியானம். இச்சொல்லே சானம் என மருவிற்று. கடவுளை நினைந்து பற்றுதல்.
சானத்தின் தீர்விடம், தீர்விடம் - தீருகின்ற நஞ்சு. வினைத் தொகை. அசத்துப்பொருள்களை அசத்தென்று உணர்ந்து நீக்கி, ஆன்ம அறிவில் இறைவனை உணர்ந்து, சோகம் பாவனை செய்தால், கருட தியானத்தினால் விடம் தீரும். அது போல, ஆன்மாவை அநாதியே கூடி நின்ற கூட்டுணர்வு ஆகிய குறைபாடு நீங்கும். "ஒண்கருடசானத்தின் தீர்விடம் போல் தான்” (சிபோபா 58)
சான்று - சாட்சி, பிரமாணம்.
சான்றோர் - சான்றாண்மை மிக்கவர், நல்லோர், எ-டு சான்றோர் பேரவை.
சிங்க நோக்கு - அரிமாபார்வை சிவஞான போதம் நூற்பா 2 இல் ஆணையின் என்னும் சொல் சிங்கநோக்காய் அமைந்துள்ளது.
சிட்டர் - நல்லார்.
சிட்டன் - அம்பலவாணன்.எ-டு சிட்டன் சிவாயநம.
சித்த சத்து - தமிழ் நூலின் முடிவு
சித்த சாதனம் - சித்தித்ததைச் சாதிப்பது.
சித்தம் - 1) உள்ளம் மனம் சிந்தனை செய்யும் பொழுது சித்த
மாகும். மனம் என்பது ஒரு செயலே. மூளையின் விளைவு. இதயத்தில் சென்று பொருந்துவது. 2) 28 ஆகமங்களுள் ஒன்று.
சித்த புருடர் - சித்தியுடையவர்.
சித்தர்கள் - சித்து செய்பவர்கள். சிந்திப்பதைச் செய்பவர்கள். இவர்கள் பாடல்கள் ஞானப் பொருள் உடையவை. இவர்கள் சித்த வைத்தியத்தில் கை தேர்ந்தவர்கள்.வேதிநூல்களும் மருந்துகளும் செய்பவர்கள். இவர்களில் ஒருவரே திருமூலர்.
சித்தர்கள் 18 பேர் - 1) நந்தீசர் 2)போர் 3) திருமூலர் 4) பதஞ்சலி 5) தன்வந்தரி 6) கரூர் சித்தர் 7) சுந்தரானந்தர் 8) மச்ச முனிவர் 9) இராம தேவர் 10) சட்ட முனிவர் 11) கமலமுனிவர் 12) வான்மீகர் 13) குதம்பைச் சித்தர் 14) பாம்பாட்டிச் சித்தர் 15) இடைக்காட்டுச் சித்தர் 16) கோரக்கர் 17) கொங்கணவர் 18) கும்பமுனிவர்
சித்தாந்தம் - பொருள்: சித்தம்-சிந்தனை, அந்தம்-முடிவு. சித்தம் + அந்தம் உள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிப் பட்டறிவுடன் மேற்கொண்டு முடிந்த முடிபு. அல்லது மேற்கொள்ளப்படும் நெறிமுறை நெறியம் எனலாம். ஆகையால் இதனை மறுப்பதற்கு ஏதுமிலை. - வகை: இது துவைதம், அத்துவைதம் என இருவகை. துவைதம் என்றால் கடவுளும் உயிரும் வேறு என்பது. அத்துவைதம் என்றால் கடவுளும் உயிரும் ஒன்று என்பது. அத்துவித வகை 1) கேவல அத்துவிதம்: வேறுபெயர் சங்கர சித்தாந்தம் 2) விசிட்டாத் துவைதம்: வேறு பெயர் இராமனுசர் சித்தாந்தம் 3) சுத்த அத்துவைதம். வேறு பெயர் மெய்கண்டார் சித்தாந்தம் இதன் வேறு பெயர்கள் : சைவ சித்தாந்தம், முதல் சைவ நெறி, ஆகம சித்தாந்தம், புனித அத்துவைதம், சுத்த அத்துவைதம். கருத்துகள் : 1) பரமாணுக்கள் தாமுங்காரணமாக அவை காரியமே 2) காரியம் என்னும் நிலையில் தோன்றி நின்று மறைவதாயினும், அது மறையும் போது காரண நிலையில் நுண் உருவில் இருப்பதால் உலகம் என்றும் உள்பொருளே. 3) காரணமாகிய மாயையும் என்றும் உள்பொருளே. பா. சைவசித்தாந்த அடிப்படைகள்.
சித்தாந்த அட்டகம் - மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது 7) சங்கற்ப நிராகரண்ம 8) உண்மை நெறி விளக்கம் இது சீர்காழி தத்துவநாதர் அருளிச் செய்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
சித்தாந்த சாத்திரங்கள் - மெய் கண்ட நூல்கள் 14. அவையாவன: 1) திருஉந்தியார் 2) திருக்களிற்றுப் படியார் 3) சிவ ஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம், சுபக்கம்) 5) இருபா இருபது 6) உண்மை விளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட் பயன் 9) வினா வெண்பா 10) போற்றிப் பஃறொடை 11) கொடிக்கவி 12)
நெஞ்சுவிடு தூது 13) உண்மை நெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம் பா. பண்டார சாத்திரங்கள்.
சித்தாந்த சைவம் - சைவ சமயங்களில் சிறந்தது. இதை உரைப்பவை வேதாகமங்கள், 12 திருமுறைகள், 28(14+14)மெய்கண்ட நூல்கள் ஆகியவை. இதன் சாறம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளின் உண்மையை உணர்ந்து மும்மலங்களும் கெட ஆன்மா சத்திநிபாதம் அடைந்து திருவருளால் முத்தி பெறும் என்னும் கொள்கை.
சித்தாந்த சைவாசாரியார் - சித்தாந்த சைவ வல்லுநர்கள்.
சித்தாந்த துணிவு - சித்தாந்த முடிவு. 1) சிவபேதம் 7 : சிவம், நாதம், சதாசிவம், ஈசன், அரன், அரி 2) சத்திபேதம் 7 : சத்தி, விந்து, மனோன்மணி, மகேசை, உமை, திருவாணி. இவை ஒன்று மற்றொன்றாகத் தோன்றுபவை. எனவே 9 என வைக்கப்பட்டன. ஏனைய சதாசிவம், ஈசன், அரி, அயன், அரன் என்னும் 5 சிவ பேதங்களுக்குரிய சத்திபேதங்களாவன மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி.
சித்தாந்த தொகை - தமிழ் மொழியில் செய்யப்பட்ட ஒரு பெளத்த நூல்.
சித்தாந்த நெறி - சைவநெறி.
சித்தாந்த பஃறொடை - 14 பண்டார சாத்திரங்களில் ஒன்று. ஆசிரியர் அம்பலவாண தேசிகர்.
சித்தாந்த பிரகாசிகை - சைவ சித்தாந்த நூல், ஆசிரியர் சர்வான்ம சம்பு சிவாசாரியார்.
சித்தாந்த மரபு - தன்னிலையில் சிவன் என்பதும் உலகுடன் தொடர்பு கொண்ட நிலையில் சத்தியுடன் கூடிய ஒருவன் என்பதும் ஆன்மாவைச் சத சத்து என்பதும் சைவ சித்தாந்த மரபு. பா. சைவ சித்தாந்த முறை.
சித்தாந்த மகாவாக்கியம் - திருவைந்தெழுந்து, எ-டு சிவாய நம, நமசிவாய
சித்தார்த்தன் - 1) புத்தன் 2) வாழ்வின் பயனாகிய பிறவா நெறியை அடைந்தவன்.
சித்தான்மவாதி - சித்தமே ஆன்மா என்னும் கொள்கையினர்.
சித்தாந்த முத்தி - வேற்றுமையும் முனைப்பும் அற்று நிற்றல்.
சித்தாந்த முடிவு - ஆகம முடிவுப்பொருள்.
சித்தி - கைகூடல், வீடுபேறு. சித்தர் சித்தி உடையவர். இது எட்டு வகைப்படும். பா. அட்ட மாசித்தி.
சித்தின்பம் - ஞான ஆனந்தம்.
சித்தியார் - சிவஞான போதத்திற்கு அடுத்ததாகக் கருதப்படும் சிறந்த வழிநூல். பரபக்கம், சுபக்கம் என்னும்,இரு நூல்கள். ஆசிரியர் அருணந்தி சிவாசாரியார்.
சித்து, சிந்தை - அறிவு, உள்ளம், மாயம். சித்தர் சித்து செய்வதில் வல்லவர்.
சிந்தனை - சிந்திக்கும் உணர்வு.
சிந்தித்தல் - உண்மை ஞானம் 4இல் ஒன்று. குரு முகமாகக் கேட்ட பொருளை மனப்பாடம் செய்து குற்றம் நீங்குமாறு ஆராய்தல்.
சிந்தியம் - 28 சிவாகமங்களுள் ஒன்று.
சிந்தை - அறிவு, இதயத்தாமரை,அன்பு.
சிம்பு - சிவன்.
சிம்புள் - சரபம் என்னும் ஒரு வகை விலங்கு நரசிங்கத்தைக் கொல்லச் சிம்புள் வடிவம் கொண்டார் சிவன்.
சிரஞ்சீயவர் - இவர் எழுவர். அசுவத்தாமன், மாபலி, வியா சன், அனுமான், விபீடணன், கிருபாசாரி, பரசுராமர்.
சிருட்டி - படைப்பு, இறைவன் ஆக்கல் தொழில்
சிலப்பதிகாரம் - ஐம்பெருங்காப் பியங்களில் ஒன்று. ஆசிரியர் இளங்கோவடிகள். சமயப் பொறை உடையது. இதில் வரும் பிறவா யாக்கைப் பெரியோன்' என்னுந்தொடர் இறைவனைக் குறிப்பது.
சிலம்பி - சிலந்தி.
சிவக்குறி - சிவலிங்கம்
சிவகணம் - சிவ பரிவாரம்.
சிவகணமுதல் - நந்திதேவர்.
சிவகதி - சிவபுண்ணியம்.
சிவகந்தம் - இறை மணம் எ-டு.சிவகந்தம் பரந்து நாற.
சிவப்கலப்பு - உயிர் உடலோடு சேர்ந்து வாழும்பொழுது, எத்தகைய பொருள் எதிர்ப்படினும் அவற்றை அவ்வளவில் உணராது, அவற்றின் மெய்மையை உணர்ந்து அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் அவ்வுயிர்க்கு மேலாகிய் அருளையும் அதற்கும் மேலாக விளங்கும் சிவத்தையும் உணர்ந்து அச்சிவத்தையே பற்றி நின்று நினைவு, மறப்பு, உணர்வு, துய்ப்பு ஆகிய அனைத்திற்கும் அப்பரம்பொருளே காரணம் என்பதை நன்கு உணர்ந்து, அதனோடு கலந்து நிற்பதாகும்.
சிவக்காட்சி - யான் எனது என்னும் செருக்கறுமாறு திருவருள் உயிர்களிடத்துப் பொருந்தி இருப்பதே இறைவனின் திருவடியாகும். பார்க்குமிடத்தில் எல்லாம் சிவமாகவே தோன்று வது இறைவனின் திருமுகமாகும். இறைவனிடத்து விளங்கி நிற்கும் பேரின்பமே இறைவனின் திருமுடியாகும். இவ்வுண்மைகளை உணர்ந்த உயிர் எப்பொழுதும் நீக்கமற நிற்கும் அப்பரம் பொருளைத் தம் பட்டறிவால் கண்டு உடல், கருவி, உலகு முதலிய கட்டுகளிலிருந்து நீங்கித் திருவருள் இன்பத்தைப் பெறுவது.
சிவ குருபத்ததி - ஆகம பிழிவு. சிவாச்சாரியார்கள் இயற்றியது.13 ஆம் நூற்றாண்டு.
சிவகுமாரர்கள் - விநாயகர், வைரவர்,வீரபத்திரர், முருகன் ஆகிய நால்வர்.
சிவகோணம் - சிவனைக்குறிப்பதாகத் தாமிரம் முதலியவற்றில் வரையும் கோணம். சிவசங் கிராந்த சைவர் - ஐம்பொறி களே, சிவஞானத்தை ஆன்மா விற்கு உணர்த்துபவை என்னுங் கொள்கையினர்.
சிவசங்கிராந்த வாத சைவம் - அகச்சமயம் 6 இல் ஒன்று. முத்தியில் உயிர் சிவத்துடன் ஒன்றாய்ப் போதலேயன்றி, அடிமை ஆவதில்லை என்னுங் கொள்கை.
சிவசத்தர் - சைவ சமயத்தில் கூறிய பரமுத்தி அடைந்தவர்.
சிவசத்தி - சத்தி 5 இல் ஒன்று. சிவனை விட்டு நீங்காதது.
116 சிவசத்து
சிவஞானபோதம்
சிவசத்து - உணரப்பட்ட உலகப்பொருள் போன்று அசத்தும் அன்று. அவன் இவ் விருதிறனுமில்லாத சிவசத்து ஆகும். மனம் முதலிய கருவிகளால் அறியப்படாமையால், சிவம் என்னும் உண்மை மெய்யர்களால் உணரப்படுவதால் சத்து என்றும் கூறப்படுவது.
சிவ சமயம் - சைவ சமயம்
சிவசமவாதி - முத்தியிலே சிவமும் ஆன்மாவும் ஒன்று என்று வாதிடுபவன். வேறு பெயர் சிவ சமவாத சைவர்.
சிவ சாதாக்கியம் - அருள் ஆற்றலால் தியான மூர்த்தியாய் நின்ற வடிவம்.
சிவ சாதனம் - சிவ சின்னம் உடுத்திராகம், திருநீறு, இலிங்கம்.
சிவ சிற்சத்தி - இச்சத்தியே இறுதிப் பிரமாணம் என்பது சிவ ஞான முனிவர் துணிபு. இது தொடர்பாக அவர் பிரத்தி யட்சம், அனுமானம், ஆகமம் ஆகிய மூன்றின் இயல்புகளை விளக்குவது கருத்தில் கொள்ள வேண்டியது.
சிவசின்னம் - சிவ சாதனம்.
சிவஞானச் செய்தி - திங்கள் முடியார் அடியார் செயல்.
சிவஞானம் - சிவ அறிவு, அருளறிவு, ஆகம உணர்வு.
சிவஞானசித்தியார் - சிவஞானம் சிந்தித்தற் பொருட்டுச் செய்யப்பட்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். இது இருவகை
1) சிவஞானசித்தியார் பரபக்கம் : சைவத்திற்குப் புறம்பான பின் வரும் மதங்கள் இதில் விரி வாகப் பேசப்பட்டு மறுக்கப் படுகின்றன. 1) உலகாயதம் 2) செளத்திராந்திகம் 3) யோக 2)சாரம் 4) மாத்தியாமிகம் 5)வைபாடிகம் 6) நிகண்ட வாதம் 7)ஆசீவகன் மதம் 8) பட்டா சாரியன் மதம் 9) பிரபாகரன் மதம் 10) சுத்தப் பிரமவாதம் 11) கிரீடாப்பிரம வாதம் 12) பாற்காரிய வாதம் 13) மாயா வாதம் 14)சாங்கியம்15) பாஞ்சத் ராந்திரம்
சிவஞான சித்தியார் சுபக்கம் - சைவசித்தாந்த அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குவது. சிவஞான போதத்திலுள்ள 12 நூற்பாக்களின் கருத்துகளை யும் 12 அதிகாரங்களில் விளக்கு வது.அளவை பற்றியும்கூறுவது.
சிவஞானபாடியத்திறவு - சிவஞான விளக்க நூல். வச்சிர வேல் முலியார் எழுதியது.
சிவஞானபோதம் - 1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது.
2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்களிலுள்ள எழுத்துகள் 624 சொற்கள் 216 அதிகரணங்கள் 39. அரிய பெரிய சமய உண்மைகளை விளக்கும் இத்துணைச்சிறிய நூலை எம்மொழியிலும் காண்பது முயற்கொம்பே. திருமுறைகளில் பரக்கக் காணப்படும் உண்மைகளை நிரல்படுத்திச் சுருக்கமாகவும் செறிவாகவும் தெள்ளிதின் விளக்கிய பெருமை இந்நூலாசிரியர் மெய்கண்டாரையே சாரும்.
3)அமைப்பு: பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என இரு அதிகாரங்களைக்கொண்டது. இந்நூல். ஒவ்வொரு அதிகாரமும் இரண்டு இயல்களைக் கொண்டது. ஒவ்வொரு இயலும் மூன்று நூற்பாக்களை கொண்டது. பொது அதிகாரம் பிரமாண இயல், இலக்கண இயல் என்னும் இரண்டையும் உண்மை அதிகாரம் சாதன இயல், பயனியல் என்னும் இரண்டையும் உடையது. ஒவ்வொரு இயலுக்கும் 3 நூற்பாக்கள் உண்டு. பொது அதிகாரம் 6 பாக்களையும் உண்மை அதிகாரம் 6 பாக்களையுங் கொண்டது.
4) நுவல்பொருள்: பொதுவாக, முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் பற்றி உரைப்பது, சிறப்பாக நூற்பா. வரிசைப்படி உரைக்கப்படும் பொருளாவது, 1) காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத முதல்வனின் உண்மை நிறுவப்படுகிறது. இது வள்ளுவர் காட்டிய நெறி 2) இருவினை உண்மை பறைசாற்றப்படுகின்றது. 3) ஆன்மா உண்டு. 4) உயிர் இயல்பு கூறப்படுகிறது 5) அவ்வுயிர் முதல்வனால் அறியப்படுகின்றது. 6) முதல்வன் வாக்கு, மனம் முதலியவற்றால் அறியப்படாதவன், அருட்கண்ணினாலேயே அறியப்படுவன். 7) முதல்வனை அறிவித்தற்குரிய தகுதி உயிருக்கே உண்டு. 8) முதல்வனே குருவாக வந்து உயிருக்குத் தன்னை உணரும் திறத்தை உணர்த்துவான். 9) அருளுரைப் பொருளை உன்னும் நெறி உணர்த்தப்படுகிறது. 10) திருவருள் வழி நின்றால், வினையும் வினையால் வரும் துன்பமும் நீங்கும் 11) முதல்வனிடத்து அன்புசெலுத்தினால், வீடுபேறு எய்தலாம். 12)இறையறிவு எய்திய போதும், இன்றியமையாதவை அடியார் வழிபாடும் ஆலய வழிபாடுமாகும். - உணர்தல், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், ஒன்றி ஒழுகுதல் என்னும் நான்கு வகை நெறிகளால் உணரல். இருப்பினும், குரு மூலம் பயிலுதலே நன்று. உரை:பாண்டிப் பெருமாள் விருத்தியுரை உண்டு. சிவஞான முனிவர் அருளிய சிற்றுரை, பேருரை என்னும் உரைகளும் உண்டு. உமாபதி சிவம் முதலியோரும் உரை எழுதியுள்ளனர். இவற்றில் சிறந்தவை சிற்றுரையும் பேருரையுமே ஆகும்.
சிறப்புகள்:
1) குறள் போன்று மிகச் சுருக்கமாக அமைந்து முப்பொருள் உண்மையை விளக்குவது. 2) சைவம் சாராப் பிற மதங்களை அளவை இயல் முறையில் அருந்திறத்தோடு சற்காரிய வாதத்தைக் கொண்டு மறுப்பது தனிச் சிறப்பு. 3) தத்துவத்தையும் தமிழால் தெள்ளிதின் விளக்க இயலும் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. 4) அத்துவிதம் அதன் உண்மைப் பொருளால் விளக்கப்படுகிறது. 5) நாற்படிகளில் ஞானபாதத்தை உயரிய முறையில் விளக்குவதால் உயர் சிவஞான போதமாகும். 6) மெய் கண்ட முதல் தமிழ் நூல். 7) சைவ சித்தாந்தம் என்பது தமிழர் பேரறிவின் பெரு விளைவு. இதனை விரிவாக விளக்குவது. 8) மங்கல வாழ்த்து முதன் முதலில் பாடப்பட்ட நூல்.
சிவஞானபோதமொழிபெயர்ப்புகள்-1) திரு ஜே.நல்லசாமிப் பிள்ளை, டாக்டர் பென்னட் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். 2) டாக்டர் சாமரஸ் என்பார் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் 3) சிவாக்கிர யோகிகள் வடமொழியில் இதற்குச் சிற்றுரையும் பேருரை யும் செய்துள்ளார்.
சிவஞான போதம் முதல் நூல்-இது வட மொழியிலுள்ள சிவ ஞானபோத மொழிபெயர்ப்பு என்னும் தவறான கருத்துள்ளது. இதற்கு இந்நூலிலோ இதன் வழிநூல் சார்பு நூல்களிலோ மெய்ப்பிக்க கூடிய சான்றுகள் இல்லை. இது முதன் முதலில் தமிழிலே மெய்கண்டார் அருளியது என்பது ஆராய்ச்சி அறிஞர்கள் முடிவான கருத்து.சிவஞானபோதம் தமிழ் முதல் நூலே மொழி பெயர்ப்பல்ல 120 காரணங்கள் என்று ஒரு சிறு நூலை சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
சிவஞான முனிவர்- சிவஞான போத உரையாசிரியர்.சிற்றுரை, பேருரை என்னும் இரு உரைகள் அருளியவர். இவ்விரண்டில் பேருரை பாடியம், திராவிடமாபாடியம், சிவஞானமாபாடியம் என்று புகழ்ப் பெறுவது. இவர் தென்மொழி,வடமொழிகளில் வல்லவர். இவர்தம் உரைகள் இலக்கியம் இலக்கணம், அளவை இயல், முதலிய பலவும் நிறைந்து மிகவும் திட்ப நுட்பங்களைக் கொண்டவை. தமிழில் தொல்காப்பிய பாயிர விருத்தி, முதல் சூத்திர விருத்தி, தருக்க சங்கிரக மொழி பெயர்ப்பு, நன்னூல் விருத்தி என்பவைகள் இவர் எழுதியவை. இவர் இயற்றிய செய்யுள் நூல் காஞ்சிபுராணம்.
சிவம், சிவன் - சித்து, சிகாரம். சிவதத்துவம் 5 இல் ஒன்று. சிவமே சிவ சமயம். முதற் கடவுள். பல வடிவங்களில் பேசப்படுபவன்.சிவமே சத்தி, சத்தியேசிவம், ஆக்குபவனும் அழிப்பவனும் சிவனே. பக்குவப்பட்ட உயிருக்கு அருள் புரிந்து உணர்த்துபவன், இரக்கமே வடிவானவனும் முதல்வனுமானவனும் சிவமே இயற்கைப் பொருள்களில் உள் நின்று உணர்த்துபவன். குருவாகப் புறத்தே வந்து அருள்புரிபவன். மனித வடிவவில் தோன்றி அருளுவது சிவத்தின் எளிமைப் பண்பு. முக்கடவுளர்களில் முதன்மையானவன்.
சிவதத்துவம் - சிவநெறிமுறை, சுத்த வித்தை, ஈசுவரம், சாதாக்கியம், விந்து, நாதம், தோற்ற முறையில் முதலில் நிற்பது சித்த மாயையில் தோன்றுவது.
சிவத்துவிசர் -ஆதிசைவர் சிவ தரிசனம் - சிவகாட்சி சிவனருள் விளங்கல். செயல் 10இல் ஒன்று.
சிவதருமம் -சிவ புண்ணியம்.
சிவதருமிணி-முந்தி காமிகட்குச் சத்தி வடிவமாகிய சிகாச்சேதத்தோடு செய்யும் சபீக தீக்கை ஒ. உலோக தருமிணி.
சிவதலங்கள் - பொதுவாக உள்ளவை 274. இவற்றில் 265 தமிழ்நாட்டிலும் 1 சேர நாட்டிலும்(கேரளா) 6 வட நாட்டிலும் 2ஈழ நாட்டிலும் உள்ளவை.தமிழ்நாட்டில் உள்ளவை; சோழ நாடு 190. நடு நாடு 22. பாண்டிய நாடு 14 தொண்டை நாடு 32 கொங்கு நாடு 7ஆ 265.
சிவதீக்கை-சிவபூசையினையும் சமய ஆசார்ங்களையும் மேற் கொள்ளும் முன்பு, சைவர் ஆகுபவருக்குக்குருவினால் செய்யப்படும் சமயச் சடங்கு.
சிவ தூய சரீரம் - சிவனின் புற உரு 5 ஆற்றல்கள் கொண்டது; ஈசாதி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி
சிவ நுகர்வு- சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் முதலிய நிலைமைகளைப் பெற்றாலும், அவர்கள் தம் வயத்தராக அன்றி இறைவயத்த ராகித் தம் செயலற்று நிற்பதால், இறைவனும் அவர்களோடு கலந்து அவர்கள் உண்டல், உறங்கல்,நடத்தல் முதலிய பலவகைச் செயல் களைச் செய்யினும், அவற்றைத் தம் செயலாக ஏற்றுத் தன்வயமாக்கி விடுவன். இந்நிலையில் உயிர் பெறும் இன்பமே சிவ நுகர்வாகும்.
சிவ நிலை - இதயத் தாமரையாகிய இருக்கையின் மேல் 36 தத்துவத்தையும் கடந்த சிவ சக்தி நிலை கொண்டிருப்பது.
சிவநெறிப் பிரகாசம்- ஓர் அருளறிவு நூல் ஆசிரியர் சிவாக்கிர யோகிகள். அளவை பற்றிக் கூறுவது. உயிர்கள் பல என்பதற்கு வழக்குரை களும் கூறப்படுகின்றன. சித்தியார், தத்துவ பிரகாசம்ஆகியவற்றிற்குப்பின் தோன்றியது.
சிவபதம், பதவி- சிவபத்தர்கள் பக்குவத்திற்குரிய நால்வகைச் சிவ பதவி. 1) தான் ஆளும் உலகத்திலிருத்தல் 2) தன்பால் இருத்தல் 3) தானேபதம் பெறல் 4) தான் ஆகுதல்.
சிவபதி - சிவன்.
சிவப்பிரகாசம் - சிவனுக்குப் படைக்கப்பட்ட திருவமுது.
சிவப்பிராமணர் - ஆதிசைவர். கோயில் குருக்கள்.
சிவபுண்ணியம்- பதி புண்ணியம். சிவனே முழுமுதற் கடவுள் எனக்கொண்டு அக் கடவு ளுக்குச் செய்யும் நல்வினை.
சிவ புராணம் -1) சைவ புராணம் 2) கந்த புராணம் 3) இலிங்க புராணம் 4) கூர்ம புராணம் 5) வாமன புராணம் 6) வராக புராணம்7) பெளடியபுராணம் 8) மச்ச புராணம் 9) மார்க்கண் டேய புராணம் 10) பிரமாண்ட புராணம். சிவபூசை - விதிமுறைப்படி செய்யும் சிவவழிபாடு.
சிவபூசை இயல்பு - கிரியை, சரியை, யோகம், ஞானம் ஆகிய நான்குபடிகளைக்கொண்டது.
சிவ பூரணம் - சிவ நிறைவு.
சிவவேதம்- இது ஏழு சதாசிவம், ஈசன், அரன்,அயன்,அரி.ஒ. சத்திபேதம்.
சிவப்பேறு- சிவனை அடைதல்.
சிவமயம் - சிவதன்மை,
சிவமுனி-ததிசியோடேததிசி என்பவர் சைவ முனிவர். திருமால் அவரிடம் போரிட்டுத் தோல்வி யுற்றவர். இவர் உள்ளே புகுந்து திருமாலைப் பிடித்து மார்பிலே உதைத்து ஆழியைப் பறித்து முறித்து அதனைத் திருமால் வயிற்றிலே வைத்தார். அழகு பொருந்திய ஓர் உருவைத் தாமே தர்ப்பையால் உண்டாக்கித் திருமாலை அதைக் கொண்டு மயங்கி விழுமாறு எரித்தார். ஆகவே, திருமால் வினைமுதல் என்று கூறுவதற்கில்லை (சிசிபவ.297)
சிவமூர்த்தங்கள் - இவை 25 1) சந்திர சேகரர் 2) உமாமகேசர் 3)ருடபாருடர்4)சபாபதி5) கலி யாண சுந்தரர் 6) பிட்சாடனர் 7) காமாரி 8) அந்தகாரி 9) திரி புராரி 10) சலந்தராரி 11) விதித் வம்சர் 12) வீரபத்திரர் 13) நரசிங்கர் 14) அர்த்தராரீசுரர் 15) கிராதர் 16) கங்காளர் 17) சண் டேசு அனுக்கிரர் 18) சக்கிர பாதர் 19) கசமுக அனுக்கிரர் 20) ஏகபாதர் 21) சோமாச கந்தர் 22) அனங்க சுகபிருது 23) தெட்சிணாமூர்த்தி 24) இலிங்கோற்பவர் 25) நிபாதனர்.
பொது:1) விநாயகர் 2) வைரவர் 3) முருகன் சிறப்பு:1)நடராசர்2)உமாதேவி 3) சந்திரசேகர் 4) கோமேச கந்தர் 5)தெட்சிணாமூர்த்தி 6) பிட்சாட்னர்.
சிவபோகம்-1) சிவானந்தம் 2)தம் செயலுள் ஒன்றாய்த் தன்னை இழந்து, இறைவன் மயமான ஆன்மாவின் ஆனந்த அனுபவ நிலை பெறுதல் 3) குற்றம் செய்பவரையும் திருத்தித் தனதாக்கும் நெறி.
சிவராத்திரி சிறப்புத் தலங்கள் இவை 1) கச்சி ஏகம்பம் 2) திருக்காளத்தி 3) கோகர்ணம் 4) திருப்பருப்பதம் (சீசைலம்) 5) திருவைகாவூர்.
சிவருபம் - சிவவடிவம் செயல் 10இல் ஒன்று. இறைவன் முத்தி அளிப்பான் என்னும் உணரும் நிலை.
சிவலிங்கம் - சிவ உருவம். சைவர் வழிபடுவது.
சிவ வடிவு - மன்னுயிர்தோறும் நிலை பெற்றிருக்கும் பரம் பொருள் கருணையே திருவடி வாகக் கொண்டு உயிர் வினை மாசு கெட்டு, இன்புறுவதற்காகப் படைத்தல் முதலிய ஐந் தொழில்களையும் செய்கின்றது. இவ்வாறு காத்தருளுவோன் சிவபெருமான் ஒருவனே என உயிர் தன் அறிவில் காண்பது.
சிவ வழிபாடு - ஆகம அடிப்படையில் நடைபெறும் தொழு முறை.
சிவவேடம் - உருத்திராக்கமும் திருநீறும் அணிந்த கோலம் சிவனடியைச் சேரும் முத்தி - மும்மலங்களும் நீங்கப் பெற்றுச் சிவனடி சேர்வதைச் சித்தாந்திகள் முத்தி என்பர்.
சிவன் - சிவம்.
சிவன் ஐமுகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தி யோசாதம் என்னும் 5 முகங்கள்.
சிவன் எண்குணம் - பா. எண் குணம்.
சிவன் கண்ணா - இறைவன் ஆன்மாக்களின் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்தல், ஆகவே, இறைவன் முற்றுணர்வினன்.
சிவன்தாள் - சிவன் அருள்.
சிவன் மூன்று - மன்னு சிவன்; பேரின்பக் காரணன், சொன்ன சிவன் முற்றுணர்வினன். எண்ணான் சிவன் துய தன்மையன்.
சிவர்கமம் - சைவாகமம். சிவனைச் சிறப்பித்துக் கூறும் அருள் நூல். இது 28 வகை. இதன் வழிப்பட்டது சைவ சமயம். பா. ஆகமம் 28
சிவாகமக் கொள்கை - சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் குருவால் தீக்கை செய்யப் பெற்று, அவர் காட்டிய வழியில்செல்வம் சிறப்பு என்பது.
சிவாக்கிரயோகியர் - வேத விற்பன்னர் இவர் சிவஞானபோத பாடியம், சித்தாந்ததீவிகை தத்துவ தரிசனம், பாஞ்சராத் திரசபடிகை என்னும் நூல்களைச் செய்தவர். இவர் தஞ்சாவூர் சரபோசி மன்னரின் அவையில் 17 நாள் தங்கி மணவாள மாமுனி என்னும் வைணவ சிரேட்டருடன் வாதிட்டுச் சிவபரத்துவம் நிலைநாட்டியவர். மெய்ப்பிக்கப்படாத சான்றால் இவர் சிவஞான போதம் வடமொழியிலிருந்து வந்தது என்று கூறியவர்.
சிவாசாரியார் - பட்டப்பெயர் ஆதிசைவர்.
சிவாத்துவித சைவம் - இதனைத் தோற்றுவித்தவர் நீலகண்ட சிவாசாரியார். இவர் பிரம சூத்திரத்திற்குச் செய்த பாடியத்தில் கூறப்பட்ட கொள்கையே சிவாத்துவித சைவம். சிவமே உலக முதற் காரணம் என்னுங்கொள்கை. இக்கொள் கையினர் சிவாத்துவித சைவர்.
சிவாபதி - சிவன்.
சிவாய நம- இவற்றின் நுண் பொருளாவது நமசிவாய. அஞ்செழுத்து. சிவம் வ.அருள். ய. உயிர் ந. மறைப்பாற்றல். ம.ஆணவம்.
சிவார்ச்சனை - சிவபூசை.
சிவார்ப்பணம் - சிவனிடத்து ஒப்பித்தல்.
சிவாலயம் - சிவன் கோவில்.
சிவானுபவம் - சிவ அறிவு, சிவ அனுபவம்.
சிவானுபூதி- சிவனோடு இரண்டறக் கலத்தல்.
சிவிகை - பல்லக்கு சம்பந்தர் ஏறிச் செல்ல சிவனிடமிருந்து இதனைத் திரு அரத் துறையில் பெறுதல். பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
சிவோசம்பாவனை- சிகவாகம் (சிவன்) என்று நினைத்தல். இதனைக் கருட தியானத்திற்கு ஒப்பிடுவது மரபு. கருட பாவனையில் மாந்திரிகன் தன்னைக் கருட பாம்பினுக்கு அதி தெய்வமாகப் பாவித்தலால், பாம்பின் நஞ்சைக் கடியுண்டவனிடமிருந்து நீக்க இயலுகிறது. அதுபோலச் சிவமாகத் தன்னைப் பாவிக்கும் உயிர், தளையினின்று விடுபட இயலும் நஞ்சு நீங்குவதற்காகக் கருட பாவனை செய்யப்பட்டு அது நீங்கியவுடன் மாந்திரிகன் தன் நிலைக்கு மீள்கிறான். அது போல, உயிர் பாசத்தினின்றும் நீங்குவதற்காகச் சிவோகம்பாவனை செய்யப்படுகிறது. இதனால் உயிர் பாசத்தினின்றும் நீங்கியவுடன் களிம்பு நீக்கப் பெற்ற செம்பைப்போலாகும். இப்பாவனை பாச நீக்கத்திற்குரிய பயிற்சியாகும். ஒ. கருட தியானம்.
சிறந்து விளங்குவன- தத்துவங்கள் நோக்கிய சமயங்கள் உண்டாயின. ஆகவே சமயம், ஆசாரியர், சாத்திரம் ஆகியவை சைவ சமயத்தில் சிறந்து விளங்குவன.
சிறப்படையாளம் - சிறப்புச் சின்னம், குறி
சிறப்பு - 1) அன்பு 2) முத்தி; சிவயசிவ.
சிறந்தோர் பெயர்- அண்ணல், குரிசில், ஏந்தல், தோன்றல், செம்மல்.
சிறப்புத் திருநாமம் - சிறப்புப் பெயர்.
சிறப்பிலார் - அன்பிலார்.
சிறப்புலிநாயனார்- மறையவர், ஆக்கூர் சோழ நாடு. வெண்ணீறு அணிந்து வேதம் ஒதி யாகம் செய்து சிவனடியார்க்கு உணவு அளித்தவர். இலிங்க வழிபாடு (63)
சிறப்புப் பாயிரம் - சிறப்பு முகவுரை. நூல் உறுப்புகளில் ஒன்று. இங்குச் சிவஞான போதச் சிறப்புப்பாயிரத்தைக் குறிப்பது. இதனை வழங்கியவர் பெயர் தெரியவில்லை.
சிறப்புப் பாயிரப் பொருட்கள் - பா. பாயிரப் பொருட்கள்.
சிறப்புவிதி- ஊழைவிடமுயற்சியே வலிது. இது ஒரு சிலருக்கே பொருந்தும். ஒ. பொது விதி.
சிற்சத்தி - அறிவாற்றல். இது அளவையாகு அறுவர். உரையில் மறைஞான தேசிகர் ஒரே ஓரிடத்தில் சிற்சத்தியைக் குறிப்பிடுகிறார். சிவஞான முனிவர் உரையில் இச் சொல்லாட்சி அருகிக் காணப்படுகிறது. இருப்பினும், சிற்சத்தி பற்றி வலியுறுத்தப்படுகிறது. சிவ ஞானபோதத்தில் இச் சொல் இடம்பெறவில்லை. பதி பசு ஆகிய இரண்டும் சித்தாதலால், அவற்றின் சத்தி சிற்சத்தியாகும்.
சிறியான்- சிறுமை உடையவன்.
சிற்பரம் - அறிவுக்கு எட்டாத கடவுள்.
சிற்பரச்செல்வர் - இறைவன் அடியவர்.
சிற்றம்பலநாடிகள்- மெய்கண்டார் மாணவர்களில் ஒருவர். துகளறுபோத ஆசிரியர்.
சிற்றறிவு - வரையறைக்கு உட்பட்ட அறிவு. உலக அறிவு. மெய்யறிவுக்குக் கீழ்ப் பட்ட அறிவு. ஒ. பேரறிவு.
சிற்றின்பம் - ஐம்புல இன்பம், காமம். ஒ. பேரின்பம்.
சிறுத்தொண்ட நாயனார் - மகாமாத்திரர். திருச்செங் காட்ட்ங்குடி - சோழநாடு தன் ஒரே மகனை வாளால் அரிந்து சமைத்துச் சிவனடியார்க்குக் கறியமுது இட்டவர். சங்கம் வழிபாடு (63). சிறுபான்மை - ஏகதேசம்
சிறுமைப்படுத்துதல், சிறுமையுறுத்தல்- கீழ்மைப்படுத்துதல்.
சிறை - தடை.
சிறைசெய்- தடை செய்.
சின்முத்திரை - ஞான முத்திரை.
சீ
சீ- சீழ், குருதி.
சீ கண்ட ருத்திரன் - சைவாகமங்களை அறிவுறுத்தும் குரவன்.
சீகளாத்தி- சிவன் கண்ணப்ப நாயனாருக்கு முத்தியளித்த தலம்.
சீதம் - குளிர்ச்சி, புளகம்.
சீதம் புளகம் அரும்ப - தட்பம் உள்ள பேரின்பம் விளைய.
சீரகர் - பெளத்தர்.
சீரணேத்தாரணம் - பழுதுபட்ட கோயிலைப் புதுப்பித்தல்.
சீபாதம் - திருவடி.
சீலம் - நல்லொழுக்கம், நன்னெறி. எ-டு ஞானசீலம்.
சீவகர் - பெளத்த பிட்சுகள்.
சீவகன் - ஆவிவகன்.
சீவகாட்சி - உயிர்கள் அனைத்துக்கும் காட்சியான பரபிரமம்.
சீவர்- 1) சீவன் முத்தர், சிவமுத்தர் சிவனையே காண்பவர். எ-டு சீவர்கள் சனனம் போல (சிசிப 276) 2)ஆன்மாவகை; 1) பிரம வித்துகள் 2) பிரமவரர் 3) பிரமவரியர் 4) பிரமவரிட்டர். இயல்புகள்; இம்மையில் முத்தராவர். பூதலத்தில் புகழ்மிக்கவர். மிக்கதொரு பக்குவத்தில் மிகுசத்திநிபாதம் மேவப்பட்டவர். ஞானம் வளர்ந்து ஒரு குருவின் அருளால் நிட்டை புரிபவர்.
சீவனம் - தொழிற்படுதல்.
சீவன் - உயிர், சீவான்மா.
சீவன் முத்தி- சிவப்பேறு வேறு பெயர் நின்மலசாக்கிரம். இது சிவஞான போதம் நூற்பா 712இல் கூறப்படுவது. ஆன்மா இம்மையிலேயே முத்தியடைதல். ஆன்மாவோடு உடம்பு கூடி இருப்பினும், அது நீங்கி நுகரும் இறை நுகர்வை உடையதால், சீவன் முத்தி எனப்படும். பா. சீவன் முத்தர்.
சீவான்மா - உயிர்.
சீறி - சீற்றமடைந்து.
சீறடி - சிறிய காலடி.
சீற்றமிக்கெரிதல் - சுடர் விட்டெறிதல்.
சீறாக்க துவிய புனல் - ஆரவாரித்துச் செல்லும் நீர்.
சீனர், சாவகர் - சமணர் எ-டு தீய கருமச் சீனர் சாவகர் பிறர் (சநி18).
சு
சுகப்பிரிவை - இன்ப விளக்கம்.
சுகருபம் - இன்ப வடிவம்.
சுக்கிரன் - வெள்ளி.
சுக்கிலம் - வெண்மை, இந்திரியம்.
சுக்கிலத் தியானம் - தன்னைப் பரமனாக பாவித்துக் கொள்ளுதல்.
சுடர் - 1) சூரியன், சந்திரன், அக்கினி என மூன்று 2)விளக்கு.
சுட்டறிவு- சுட்டியறியும் அறிவு.
சுட்டு - பிணிப்பு.
சுட்டுணர்வு - சுட்டியறியும் உணர்வு. இடையே தோன்றி நீங்குவது ஒ. முற்றுணர்வு.
சுட்டியறிதல் - ஒருவந்தமாக அறிதல். சுட்டியறியப்படுவது - இது பொன், இது மண் என்றாற் போல் ஆன்ம அறிவால் ஒவ்வொன்றாகக குறித்து அறியப்படுவது.
சுட்டிறந்து நின்றறியப்படுதல் - அத்துவிதமாய் நின்று அறியப்படுதல்.
சுடிகை - நெற்றிச்சுட்டி. ஒரு வகை அணிகலன்.
சுதந்திரம்- உரிமைப்பேறு, தன்வயம்.
சுதந்திரத் தாள் - உமை.
சுதந்திர வடிவம் - தன்வய வடிவம் இறைவனுக்குரிய தனி இயல்பு.
சுத்த சாக்கிரம் முதலியவை - இவை தத்துவ-தாத்துவிகக் கருவிகள் நிகழா நிலை. இறை வன் திருவருளால் நிகழ்வது. இறைவன் திருவருளிலே ஆன்மா அழுந்தி நிற்கும்.
சுதம் - பரமாகமம்.
சுத்த சித்து - சிறப்பிக்கப்படாத சத்து.
சுத்த விவபதம் - பரமுத்தி.
சுத்த சிவம் - நிட்கள பரமசிவம்.
சுத்த சைவம் - சைவம் 16இல் ஒன்று. அகச்சமயம் சார்ந்தது. இதற்கும் சைவ சித்தாந்தத்திற்கும் வேறுபாடு மிக நுட்பமானது. ஆகவே, அதை வேறாகப் பிரித்துக் கூறுவதில்லை.
சுத்த சைவர் - எம் பெருமானோடு கூடிய நிலையில், உயிர் ஒன்றிப் போகும். சிவ இன்பத்தை அது நுகர்வதில்லை என்னும் கொள்கையினர்.
சுத்தம் - அருள் நிலை; தூய்மை மும்மலங்கள் நீங்கும். ஆன்மா தூய்மை எய்தும், சிற்றறிவு ஒழியும். ஞானம் பெருகிய நாயகன் தன் பாதம் அடைய ஏதுவாகும் நிலை. இதில் சாக்கிரம் முதலிய 5 காரிய அவத்தைகள் நிகழும்.
சுத்த இச்சை - இச்சைஞானம், கிரியை.
சுத்த தத்துவம்- தோற்றம் சுத்த மாயையிலிருந்து சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை என ஐந்து தத்துவங்கள் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாய்த் தோன்றும். இவற்றின் காரியமே சுத்த பிரபஞ்சம் வேறுபெயர் சிவதத்துவம் ஆற்றல்; மறைப்பாற்றல் உலகத்தைச் செயற்படுத்தும் பொழுது விழைவாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் எனப் பெரும்பான்மை மூன்றாக நிற்கும் அவற்றுள் விழைவாற்றல் ஒரு நிலையிலேயே இருக்கும். ஏனைய இரண்டான அறிவாற்றல், வினையாற்றல் ஆகியவை தனித் தனியேயும் மிக்கும் குறைந்தும் செயற்படும். இது இயல்பே இந்நிலையில் செயற்படும் தத்துவங்கள் பின்வருமாறு. வகை; 1) சத்தி; ஆற்றல். வினையாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால் இறைவனே சத்தி எனப் பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சத்தி தத்துவம் எனப்படும். இதனையே விந்து தத்துவம் என்றுங்கூறுவர். 2) சாதாக்கியம் அறிவும் வினையும் சமமாகச் செயற்பட்டு நிற்குங்கால் இறைவன் சதாசிவன் எனப் பெயர் பெறுகிறான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவம் என்று பெயர் பெறும். 3) ஈசுவரன்; அறிவு குறைந்து வினைமிகுந்து செயற்பட நிற்குங்கால், இறைவன் மமீசுரன் எனப் பெயர் பெறுவான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் ஈசுரத் தத்துவம் எனப்படும்.
4) சுத்த வித்தை; வினை குறைந்து அறிவு மிகுந்து செயற்பட்டு நிற்குங்கால், இறைவன் வித்தியேசுரன் எனப்பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு, இடமாகின்ற தத்துவமும் வித்தை எனப்பெயர் பெறும். அசுத்தி மாயா தத்துவத்திலும் ஒரு தத்துவம் வித்தை எனப்படுவதால் இது சுத்த வித்தை என்றே கூறப்பெறும்.
5) சிவம்; அறிவாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால், இறைவன் சிவன் எனப்படுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சிவதத்துவம் எனப்படும். இதனையே நாத தத்துவம் என்றுங்கூறுவர்.
சுத்ததத்துவப் புவனம் - சுத்த தத்துவத்தில் இருக்கும் உலகம்.
சுத்த தத்துவா- ஆறு தத்துவாக்கள்.
சுத்த நிலை - பா. ஆன்ம நிலை.
சுத்த பிரபஞ்சம் - சுத்த மாயையிலிருந்து தோன்றிய உலகம்.
சுத்தபூசை- சிவலிங்கம் ஒன்றை மட்டும் பூசனை செய்வது.
சுத்த மார்க்கம்- துய சமயநெறி.
சுத்த மாயா- விரிபுலன்கள்; சத்தம், பரிசம், ரூபம், கந்தம், ரசம்.
சுத்த மாயை- சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துகளில் ஒன்று. வேறுபெயர்கள் விந்து, குண்டலினி, மாமாயை.
காரியம்; இதன் காரியங்கள் சொல்,பொருள் என இருவகை உயிரின் அளவில் சொல் நின்று தனக்குரிய பொருளின் கருத்துப் பிழம்பைத் தோற்றுவிக்கும். இப்பிழம்பு தோற்றுவிக்கும் 4 ஆற்றல்களாவன;
1) செப்பல்; மொழியானது தன் செவிக்கும் பிறர் செவிக்கும் கேட்கும். சொல்பவனுக்கும் கேட்பானுக்கும் நினைத்த பொருளைச் சொல்லும். சிவி கற்ப உணர்வு தோன்றுவதற்கு ஏதுவாகும். இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிக் கிளம்புவது. பல், இதழ், நா, அண்ணங்கள் ஆகியவற்றில் பட்டுச் சிதறுவது.
2) உன்னல்; இது உயிர்வளியால் உந்தப்பட்டு வெளிச் சிதறாமல், பிறர் செவியில் கேளாமல் தன் உள் உணர்வுக்கு மட்டும் ஒசையாய் இருப்பது.
3) பொதுமை; மயில் முட்டையிலுள்ள நீர் மயிலின் நிறங்களைத் தனிதனியாகக் காட்டாமல், தன்னுன் அடக்கியுள்ளதைப்போல், எழுத்துகளை வேறு வேறாக்காமல் தன்னுள்ளே அடக்கி நிற்பது.
4) நுண்மை; நுண்மொழி. பர உடலில் ஒர்ஒளியாகப் பிற மொழிகளைப் போல் மதி ஒன்றி ஒடுங்காமல், மிகவும் நுட்பமான நிர்விகற்ப உணர்விற்கு ஏதுவாய் இருக்கும். இவ்வாறு மொழி அல்லது வாக்கு நான்கு வகையாகும்.
பயன்கள்
1) சகலர், பிரளயாகலர், விஞ்ஞான கலர் ஆகிய மூவருக்கும் இந் நான்கு மொழிகளும் பொருளறிவை ஏற்படுத்துபவை. 2) இம்மொழிகட்கு வாக்குகள் நான்கினுக்கு வேறாக உயிர் தன்மைகண்டால்,அது நீங்காத அறிவு, இன்பம், தலைமை, அழியா இயல்பு ஆகியவற்றைக் கொண்டதாகி, இறப்பு, பிறப்பு என்னும் மாறுதல்கள் இல்லாமல் இருக்கும்.
3) இந் நான்கு மொழிகளும் நிவர்த்தி ஆகிய ஐந்து கலை களையும் பற்றி விளங்கும்.
4) மலர்ச்சி; நான்கு மொழிகள் வினைப்படுவது வளர்ச்சி அல்ல பெருக்கமே. பெருக்கம் என்பது புடவை கூடாரமாவது போன்றது. மலர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே மாறுபடுவது; முழுதும் மாறுபாடுவது என இரு வகையுண்டு இடம், மொழி விந்துவின் மலர்ச்சியன்று. மலர்ச்சியாகிய தயிர், மோர் ஆனால் போன்று விந்துவிற்கு நித்யதை இல்லாமல் போய்விடும். அவ்வாறு போகில் புதுப்படைப்பு உண்டாகாது. ஆகையால், புடவையே கூடார மானது போன்று இந்த மொழி கள் (4) விந்துப் பெருக்க வடிவ மென்பது சிவாக்கிரயோகி கருத்து.
5) பொருள் வடிவான சுத்த மாயையின் காரியங்கள் கலையும் தத்துவமும் ஆகும். கலை ஐந்தும் சொல் பொருள் ஆகிய வற்றை ஊடுருவி நிற்பன. சுத்த தத்துவம் ஐந்தும் உயிர்களின் அறிவு, செயல், விழைவு ஆற்றல்கள் ஆகியவை மலத்தடையி னின்று நீங்க, இறைவனது அறிவு, வினையாற்றல்களுக்கு அடிப்படையாக நின்று ஏனைய 31 தத்துவங்களைச் செலுத்துவது. 6 சுத்த தத்துவம் ஐந்தும் காலத் தத்துவத்திற்கு முன் தோன்றுவதால், இவற்றிற்கு முற்பாடு கூறுவதற்கில்லை. அறிவாற்றல், வினையாற்றல் ஆகிய இரண்டின் தொழிற்பாடு பற்றியே முற்பாடு கூறப்படுவது இவை சிவனின் தனிநிலை வடிவம் எனப் பெறும் சிவனே தொழிற்படுத்துவதால் சத்திமாயையின் காரியங்கள் சிவதத்துவம் எனப்படும்.
7) வித்யா தத்துவங்கள் எழில், சிவதத்துவம் மாயையினையும் சத்தி கலாநியதி கலைகளையும், சதாசிவம் புருடனையும் ஈசுவரம் அராகத்தையும் சுத்த வித்தை வித்தையினையும் செலுத்துவதால், உயிர்கள் உலக நுகர்ச்சியில் ஈடுபட முடிகிறது.
சுத்த வகை- 1) சிவன் முத்தி - நின் மலசாக்கிரம் 2) அதிகாரமுத்தி நின்மலர் சொப்பனம் 3) யோக முத்தி நின்மலச் சுழுத்தி 4) இலய முத்தி நின்மலதுரியம் 5) பர முத்தி-நின்மலதுரியாதீதம்.
சுத்த வித்தை - சிவ தத்துவம் 5இல் ஒன்று. வினைமிருந்து அறிவு குறைந்திருக்கும். இதற்குக் காரணர் வித்யேசுவரர்.
சுத்த வித்யாதத்துவம் - சுத்த தத்துவம் 5இல் ஒன்று. வினை குறைந்து அறிவு ஏறி ஈசன் அதிட்டித்து நிற்கும் நிலை.
சுத்தன் - அயன், அரி, அரன்.
சுத்தி - 1) தெளிவுக் காட்சி. அருளால் நீங்கல் 2) புற மதத் தாரை இந்து சமயத்தில் சேர்க்கும் பொழுது செய்யும் சடங்கு.
சுத்தாசுத்த தத்துவம்- இது ஏழு சுத்தமும் அசுத்தமும் கலந்தது. காலம், நியதி,கலை, வித்தை, அராகம், புருடன், மூலப் பகுதி சுத்தாட்டகம்- நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு முர்த்த மான பூதங்களும் அவற்றிற் குரிய நாற்றம், சுவை, உருவம், ஊறு என்னும் நான்கு உபாதானங்களும் கூடிய எட்டின் கூட்டம் (4+4=8,.
சுத்தாத்துவா - விந்து வில் உண்டாகும் பிரபஞ்சம்.
சுத்தாத்துவைதம்- சீவான்மா, பரிமான்மாவுடன் கூடிய எட்டின் கூட்டம்.
சுத்தாவத்தை- நின்மலசாக்கிரம், நின்மல சொப்பனம் நின்மல சுழுத்தி, நின்மலதுரியம், நின்மல துரியாதீதம் என ஐவகை இது மலம் நீங்கிப் பிறவியற்று ஆன்மா சுத்தமாயிருக்கும் நிலை.
விளக்கம்
1) நின்மல சாக்கிரம்; சுத்த சாக்கிரம், சத்தாதிப பொருள்கள் சிவா காரமாகவும் பொருள் நுகர்வுகளைச் சிவ இன்பமாகவும் நுகர்தல்
2) நின்மல சொப்பனம்; சுத்த சொப்பனம். இது சிவோகம் பாவனையே.
3) நின்மல சுழுத்தி; சுத்த சுழுத்தி ஞாதுரு ஞானம், ஞேயம் ஆகிய மூன்று இன்பம் நுகர்தல்.
4) நின்மல துரியம்; கேவல ஞான மாத்திரமாய் இருத்தல்.
5) நின்மல அதீதம்; சுத்த அதீதம். நிறைசிவ இன்பத்தை இரண்டறப் பெற்றிருக்கும் நிலை.
சுந்தரத்தாள் - உமை.
சுந்தரர் - ஆதிசைவர். சிறப்புப் பெயர்கள்; அருளுடை நம்பி, வண்தொண்டன் தம்பிரா தோழர், சேரமான் தோழர் திரு நாவலுர் நடுநாடு. சிவனுடன் தோழமை பூண்டு தலந்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி சைவநெறி தழைக்கப் பாடுபட்டவர். திருவாரூர் மதவாகிரி தேவாசிரியா மண்டபத்தில் திருத்தொண்டர் தொகைபாடி அடியார் வரலாற்றை உலகறியச் செய்தவர். இது பெரிய புராணம் தோன்ற வழிவகுத்தது குருவழிபாடு. நால்வரில் ஒருவர். வேறுபெயர் சுந்தர மூர்த்தி நாயனார். இவர் வாழ்க்கை தோழமை நெறிக்கு எடுத்துக் காட்டு, முத்தியடைந்த வயது 18. காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. முதலில் பாடியபதிகம் "பித்தா பிறை" இறுதியாகப் பாடியது 'தானெனைமுன்’ சூடி பாடிய பதிகத் தொகை 38,000. இன்றுள்ள பாடல்கள் 1038. திருமுறை7. சுந்தரர் செய்த அற்புதங்கள்; 1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது. 2) சிவ பெருமான் கொடுத்தருளிய 12,000 பொன்னை விருத்தாசலத்திலுள்ள ஆற்றிலே போட்டுத் திருவாரூர் திருக்குளத்தில் எடுத்தது. 4)காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. 5) முதலை உண்ட பாலனை அம்முதலை வாயினின்று மீட்டுக் கொடுத்தது. 6)பரவைக்காகதச் சிவபெருமானைத் தூதுராக அனுப்பியது. 7) வெள்ளையானையில் ஏறிக் கொண்டு திருக்கயிலை சென்றது.
சுபக்கம்- தன்பக்கம்.ஒ.பரபக்கம் எ.டு.சிவஞான சித்தியார் சுபக்கம்.
சுபம் - மங்கலம். இன்ப முடிவு. எ-டு நீதியால் நித்த கன்மம் நிகழ்ந்திடச் சுபத்தை நீங்கார் (சி.சி.ப.ப. 191). சுப்பிரபேதம் - சதாசிவமூர்த்தியின் வாமதேவ முகத்தினின்று உற்பவித்த 5 ஆகமங்களுள் ஒன்று.
சுமார்த்தம்- மிருதி நூல்களில் கூறிய விதிகள்.
சுயம்பு - தானே தோன்றியது. எ-டு சுயம்புலிங்கம்
சுயம்புமூர்த்தி- தானே தோன்றிய திருமேனி உடையான்.
சுரா - தேவர். ஒ. அசுரர்.
சுராபானம் - வேதத்தில் கூறப்படுங்கள்
சுருக்கு- வேள்வி நெய்த்துடுப்பு
சுருதி - வேறு ஒன்றினை அவா வாது, தான் கருதிய பொருளைத் தானே தெரிவிப்பது.
சுருவம் - அகப்பை மூடி
சுருதிகள் - வேதங்கள்.
சுவத்தி - ஸ்வத்திகக்குறி எ.டு கோகணதம் சுவத்தி.
சுவர்க்கம், சொர்க்கம்- மெய்யர் வாழும் இடம். வானுலகம் ஒ. நரகம்,
சுவர்க்க முத்தி- முத்தியில் ஒரு வகை, மீமாஞ்சகர் மறு உலகில் இன்பம் நுகர்தலை முத்தி என்பர். பா. முத்தி,
சுவதப்பிரமாணம் - தன்னால் உணரப்பாலது. பா. அறிவின் ஏற்புடைமை.
சுவயம்பு - தானாகத் தோன்றுவது.
சுவாபலிங்கம் - இயல்புக்குறி. எ-டு பேதமா விருட்சம்
சுவார்த்தம் - தன் பொருட்டு.
சுவேச்சை - தானாகவே எ-டு சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு
சுவேதசங்கள் - சவேதசம் வியர்வை. வியர்வையில் தோன்றும் புழு, விட்டில் முதலிய உயிர்கள் நால்வகைத் தோற்றத்திலும் எழுவகைப்பிறப்பிலும் ஒன்று.
சுவேதனம்- திருவெண்காடு.
சுவேதனாப் பிரத்தியட்சம் - தண் வேதனைக் காட்சி
சுவேதனன்- சுவேதனப் பெருமான். சிவஞானபோத ஆசிரியர் மெய்கண்டாரின் இயற்பெயர்.
சுவை ஆறு - கைப்பு, தித்திப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.
சுழுத்தி - உறக்கம். ஐந்தவத்தையில் மூன்றாம் நிலை.
சூ
சூக்கும ஐந்தொழில்- அனுக் கிரகம், திரோபவம், சங்காரம், திதி, படைப்பு.
சூக்குமம் - நுண்மை, அருவம்.
சூக்கும தேகம்- நுண்ணுடல், அருவ உடல் வேறு பெயர் புரியட்டக தேகம். சத்தம், பரிசம, ருபம், ரசம், கந்தம் என்னும் தன் மாத்திரைகள் ஐந்தும் மணம், புத்தி அகங்காரம் என்னும் அகக்கருவிகள் மூன்றும் ஆகிய எட்டும் சேர்ந்து உண்டாகும் உடல் (5+3=8)
சூக்கும தேகான்ம வாதம்- குக்கும தேகமே ஆன்மா என்னுங் கொள்கை. இக் கொள்கையினர் சூக்கும தேகான்மவாதி உலகாயதரில் ஒரு சாரர் (மாத்துமிகர்).
சூக்கும பஞ்சாக்கரம்-அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என ஐந்து பிரணவத்தின் கூறு களாய் நிற்பதால் அகாரம் முதலிய ஐந்தும் வியட்டிப் பிரணவம் ஆகும். ஓம் என்பது அகாரம் முதலிய ஐந்தின் தொகுதியில் நிற்பதால், அது சமட்டிப் பிரணவமாகும். வியட்டிபகுதி. சமட்டி தொகுதி. அகரம் முதலிய ஐந்தின் தொகுதியே ஓங்காரம் என்பது. இவற்றை பகாது நாடின், அது பிரணவம் ஆகும்.
சூக்கும பூதம் - தன் மாத்திரை
சூக்குமம் - 28 சிவாகமங்களுள் ஒன்று
சூடகம் - கைவளை. இறைவன். அணிகலன்களில் ஒன்று. பா, சவடி
சூத்திரப்பாவை - கயிற்றில் கட்டி ஆட்டப்படும் பாவை.
சூத்திரம் - விதி, நூற்பா . '
சூர்ணிகை, சூர்ணிக்கொத்து - கருத்து முத்தாய்ப்பு. ஒவ்வொரு அதி கரணக் கருத்தைச் சுருக்கி உரைத்தல். காட்டாக சிவஞான போதம் 12 வெண்பாக்களும் 39 சூர்ணிக்கொத்துகளும் கொண்டவை. ஒ. அதிகரணம், வாய்பாடு, மகாவாத்தியம்
சூரிய காந்தக்கல் - ஒரு வகை ஈர்ப்புக் கல், செம்மையான ஞாயிற்றின் ஒளி இக்கல்லில் படுவதால் தீ தோன்றும்.
சூரியபுராணம் - பிரமகைவர்த்த புராணம்.
சூலி -- 1) சிவன் 2) துர்க்கை .
சூலிகாண் குறை, மால் அல்லன் - சூல பாணியே (சிவனே) வினை முதல் திருமால் அல்லன், சூலபாணியை வழிபாடு செய் தவர் துருவாசக முனிவர், அவர் திருமாலைச்சினந்து மார்பிலே மிதித்தார். அவர் பாதம் பட்டதனால் ஏற்பட்ட தழும்பு கொண்டே திருமாலுக்குத் திருமறுமார்பன் என்னும் பெயர் வரலாயிற்று. திருப்பாற் கடலிலே பள்ளி கொள்ளு மவன் பிரம வருடியின் பாதம் பட்ட இடம் தூயதென விருப் பத்துடன் திருமகளை அந்த மார்பிலே வைத்தான். ஆகவே, அவன் மல சம்பந்தி ஆவான். (சிசிப 298).
சூலினி- பார்வதி.
சூலியார் - திரிசூலம். எ-டு சூலி யார் மேல் அணிந்தான். பேரழி வுக் காலத்திலே உலகைக் காக்க வேண்டி மீன் வடிவு கொண்டு ஏழுகடல்களையும் ஒரு செலு விலே அடக்கிய அன்று, செருக் குக் கொண்டு தானே உலக அழிப்பு முதல்வன் என்றார் திருமால். அவர்தம் செருக்கை அடக்க வேண்டி அந்தி மீனை யே பிடித்து செலுவினையம் (செவுளையம்) கண்ணையும் இடந்து கூரிய திருசூலத்தின் மேல் அணியாக அணிந்தார் சூலபாணியாகிய சிவன் (சிசிபவ. 280).
சூழ் - அருள்மொழி, சூழ்ச்சி, நுண்ணறிவு.
சூழ்ச்சி - திறம்.
சூழ்ச்சித் துணைவர்- ஆலோ சனைக்குத் துணையாய் உள்ளவர்.
சூறைத்தேங்காய் - சிதறுகாய்
சூனியம் - பாழ், இன்மை .
சூன்ய ஆன்ம வாதம் - சூன்யமே ஆன்மா என்னும் கொள்கை. இக் கொள்கையினர் சூன்ய ஆன்மவாதி. புத்தருள் ஒரு சாரர். சூனிய வாதம்- சூனியம் என்னும் பொருள் தோன்றும் என்னுங் கொள்கை நாத்திக வாதம். இச் கொள்கையினர் சூனியவாதி.
செ
செக்கர் - சிவப்பு, எ-டு செக்கர் வானம்.
செடியேன் - முடலை உடல் கொண்ட பாவி
செத்தார் - நுகாவு நீங்கியவர்.
செந்தழல் - செந்தி
செந்தழலின் மூழ்கி சிரித்த பிரான் - தம்மை மதியாத தேவர் முதலியோரின் கோட்டை யைத் தன் சிவந்த அனலால் அழித்துச் சிறுநகை செய்த சிவன்.
செந்நெறி -- செம்மையான நெறி. சிவநெறி,
செபம் - பிரார்த்தனை.
செப்பல் - பா. சுத்த மாயை.
செப்பு - கூறு.
செம்மலர் - செந்தாமரை. முதல் வன் திருவடி தாமரைபோல் குவிதலும் விரிதலும் இல்லாதது இத்தன்மையே. செம்மை. அது பற்றியே செம்மலர் என்பது,
செம்மை - நேர்மை.
செம்மைத்து - நேர்மை உடைத்து.
செம்பிறப்பு - 6 பிறப்பு வசையில் ஒன்று.
செம்பொருள் - வெளிப்படைப் பொருள்.
செம்போக்கு - உயர்பிறவிகளில் உயிர் செல்லுதல்.
செம்போதகர் - இருபான்மை யரில் ஒருவர், மற்றொருவர் மண்டலர்.
செயல் - வினை. பா, செய்தி.
செயற்கரிய செயல் - திருநீல கண்ட நாயனார், சிறுத்தொண்ட நாயனார் முதலியோர் செயற் கரிய செயல்களைச் செய்து பெறுதற்கரிய பயனைப் பெற்றனர்.
செயற்கை உணர்வு - கருவியால் அறியும் அறிவு.
செய் - 1) செயல் 2) வயல்
செய்யில் உகுத்த திருப்படி மாற்று - வயலில் உதிர்ந்த கட்டனைப் பொருள்கள் பா', கமர்.
செய்தி - 1) செயல் 2) உழைப்பு 3) கூறும் பொருள். எ-டுஞானச்செய்தி.
செய்பவர் - உழுபவர், உழைப் பவர். எ-டு செய்பவர் செய்திப் பயன் வினைக்கும் செய்யேபோல் (சிபோ பா 10)
செய்வது -செய்யும் இடமாகிய உடல்.
செய்வினை - ஆகாமியம்
செயிமினி - பா. சைமினி. செயிர் - குற்றம் எ-டு செயிர் உறுந்துன்பம்.
செருக்கு - அகந்தை,
செருத்துணை நாயனார் - வேளாளர். தஞ்சாவூர்-சோழநாடு, சிவ பத்தர். இலிங்கவழிபாடு (63) செல்லாது- சிந்தியாது.
செல்லும் - அணையும்.
செலு - சேரி வழக்கு செவுள். எ-டு ஏழ்க்கடல் செலுவில் (சிசிய 267)
செலவுகள் எழுதுக - பொருந்தாது என்று நீக்குக.
செவ்விதின் - வருத்தமில்லாமல்,
செவி அறிவுறுத்தல் - உபதேசித்தல். செழும்புனல் - ஆற்று வெள்ளநீர்,
செழுகிரி - மலை.
செழுநவை அறுவை -மெல்லிய அழுக்குடை ஆடை. .
சௌபல்யம் - எளிமை.
செற்பை - வாத உத்திகளில் ஒன்று, மற்ற மூன்று வாதம், விதண்டை ஏது. பிறர் விருப்பம் நீக்கித் தன் நோக்கம் தோன் றாமல் வாதிடல்,
செற்ற - வெறுத்தற்குரிய
செறிந்தறிதல் - அழுத்தியறிதல்
சென்ற நெறி - ஐம்பொறி வழிச்செல்லுதல்,
சென்னி - 1) மண்டை முனை 2} தலைமேல். எ-டு சென்னி வைப்பாம்.
செனிப்பு - உண்டாதல்.
சே
சேகரம் - அழகு. ஈசுவரனோடு கூடியது.
சேகர சாங்கியம் - யோக மதம். கடவுள் உண்டு என்னுங் கொள்கை.
சேக்கிழார் --முப்புராணங்களில் சிறப்புப் புராணமான பெரிய புராண ஆசிரியர், உரிய பெயர் திருத்தொண்டர் புராணம், 12ஆம் திருமுறை
சேசுவர சாங்கியன் - கடவுள் உண்மையை ஒப்புக்கொள்ளும் சாங்கியமதவாதி.
சேடம் சேடியா பாவகம்- அடிமையும் முதல்வனும் என்று எண்ணும் பாவனை, அதாவது, ஆண்டான் அடிமைத் திறம்
சேடம் - அடிமை, குறை
சேடன் - அடிமை, தோழன், பாங்கன், சிவனுக்கு ஆன்மா சேடன் ஆகும்.
சேடாசேடிய பாவகம் - அடிமை யும் முதல்வனும் என்னும் பாவனை.
சேட்டிதன் - காரணன், சிவன், எ-டு சித்துடன் அசத்திற்கு எல்லாம் சேட்டிதன் ஆதலால் (சிசிசுப 76)
சேட்டித்தல் - தொழிற்படுதல்
சேட்டை - தொழில், குறும்பு. எ-டு உலகின்தன் சேட்டை (சிசிசுப 236).
சேடி- தோழி, பாங்கி.
சேணில் - அந்தி வானில்
சேதனன் - அழிப்பவன்.
சேதனம் - அறிவுடைப்பொருள். நுண்பொருள் ஒ. அசேதனம்.
சேதனப்பிரபஞ்சம்-- அறிவுலகம். அறிவுடை உலகம். ஒ. அசே தனப் பிரபஞ்சம்.
சேதிப்ப - வெட்ட. எ-டு தாளிரண்டும் சேதிப்ப
சேதிராயர் - 9 ஆம் திருமுறை பாடிய 9 பேர்களில் ஒருவர்.
சேந்தனார் -1) இறைவன் 219 ஆம் திருமுறை பாடிய 9 பேரில் ஒருவர்,
சேந்தினார் செயல் - பா அவிழ
சேய்மை - தொலைவு,
சேரல் - அடைதல்
சேரமான் பெருமாள் நாயனார் - 11ஆம் திருமுறையில் பொன் வண்ணத்து அந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கை லாய ஞான உலா ஆகிய மூன்றையும் பாடியவர், பா, கழறிற்றறிவார் நாயனார். சேர்த்தி - கலந்து. எ-டு அரக்கொடு சோத்தி.
சேர்வை -சேர்க்கை எ-டுசிறப்பில்லார் தம் திறத்துச் சோவை.
சேலினார் - மீன்கள். எடு சேலினார் தமைப் பிடித்து (சிசிப்ப 280)
சேவடி - சிவந்த அடி. எ-டு சேவடி, சேரல்.
சேவுயர் கொடியோன்- இடபக் கொடியுள்ள சிவன்.
சேவை - தரிசனம், தொண்டு, எ-டு கருட சேவை. சேறல் - செல்லுதல்,
சைகதிகன் - சமணன்.
சைதன்யம் - மலம் நீங்கிய சுத் தான்மாவின் அறிவு ஐந்து. தத்துவத்தில் ஒரு வகை
சைதன்ய சொரூபி - மலம் நீங்கிய சுத்த ஆன்மாக்களின் அறிவையே தனது வடிவமாகக் கொண்டிருக்கும் இறைவன்.
சையுத்த சமவாயம் - சையோகத் தொடர்பு உடையதில் ஒற்றுமை கொண்டது. இத்தொடர்புடையது குடம். இதில் ஒற்றுமை உடையது குட உருவம்.
சையுத்த சமவேத சமவாயம் - சையோகத் தொடர்புடைய தோடு கூடியதன் கண் ஒற்றுமை உடையது. இத் தொடர்பு உடை யது குடம். இதனோடு தொடர் புடையது குடஉருவம். அதன் கண் ஒற்றுமை உடையது அதன் தன்மை .
சையோகம் - மானதக் காட்சி யில் ஒரு நிலை). எ-டு கண்ணால் குடத்தைக் காணல்..
சைமினி - மீமாஞ்சக மதா சாரி யன் வைசேடிக சமயத்தைத் தோற்றுவித்தவன்.
சைவத்திறம்- சைவ சித்தாந்தம்.
சைவம், சைவ சமயம் - பொருள்; சிவனை முழுமுதற் கடவு ளாகக் கொண்ட சமயம் , நுவல் பொருள் முப்பொருள் பற்றி விரிவாக பேசுவது. தொன் மை; நெடிய தொன்மை வாய்ந் தது. இருக்குவேதத்திற்கு முற் பட்டது. தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களில் சைவ சமயம் இடம் பெறுகின்றது. சிவன் நிலை; வேத காலந்தொட்டுச் சைவ நாயன்மார்கள் காலம் வரை முழுமுதற் பொருள் நீக்கமற நன்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. அழித்தலோடு ஆக்குதலும் துன்ப நீக்கத்தோடு இன்ப ஆக்கமும் இணைந்த ஒன்றாகவும் !, ரம் பொருளுக் குரியதாகவும் காலந்தோறும் கருதப்பட்டு வந்துள்ளன. சைவம் 16; வேறு பெயர் சோடச சைவம், 1) ஊர்த்த சைவம் 2) அநாதி சைவம் 3) ஆதி சைவம் 4) மகா சைவம் 5) பேத சைவம் 6) அந்தர சைவம் 7) குணசைவம் 8) நிர்குணசைவம் 9) அத்துவா சைவம்10) யோகசைவும் 17) ஞான சைவம் 12} அனு சைவம் 13) கிரியா சைவம் 14) நாலுபாத சைவம் 15) சுத்த சைவம் 16) அபேத சைவம்,
சைவ அறநெறி- உயிர்களைக் காப்பாற்ற இறைவன் நஞ்சுண் டதும், சைவர் திருநீறு உருத்தி ராக்கம் அணிவதும், அவன் காட்டும் அன்பு ஆகியவை சைவ அறநெறி சார்ந்தவை. சைவ இலக்கியங்கள்- சிவம்' பற்றி விரிவாக இயம்பும். சாத்திரங்களான மெய் கண்ட நூல்களும் 12 திருமுறைகளும் சைவ இலக்கியங்களே. இவை தவிரச் சைவ நூல்களை அருளிச் செய்தபின் வருவோரும் இவற் றில் அடங்குவர். 1) தமிழ்ப் பாட்டி ஔவையார் 2) திருஞான சம்பந்தர் 3} சிவப் பிரகாச சாமிகள் 4) தாயுமான சாமிகள் 5) குமரகுருபர சாமி கள் 6) கச்சியப் சிவாசாரியார் 7) கச்சியப்ப முனிவர்.8) மாதவச் சிவஞான முனிவர் 9) சாந்த லிங்க சாமிகள் 10) பரஞ்சோதி முனிவர் 11) சிதம்பர சாமிகள் 12) சிற்றம்பல அடிகள் 13)வாகீச முனிவர் 14) சம்பந்த முனிவர் 15) அருணகிரிநாதர் 16) அருட் பிரகாசவள்ளலார் 17) அபிராமி பட்டர். 18) ஆறுமுக நாவலர் 19) பாம்பன் சுவாமிகள் 201 தண்டபாணி சுவாமிகள், சைவ சமய ஆசாரியர்கள், இவர்கள் சமயக் குரவரும் சந்தானாசாரியாரும் ஆவர். இவர்களில் முன்னவர் சம்பந்தர் அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வருமாவர். இவர் கள் தத்தம் வழியில் தனியாக நின்று அருள் வாழ்க்கை நடத் தியவர்கள். பின்னவர் ஒருவர் மற்றொருவருக்கு மாணாக்க ராய் இருந்து, தம் அருள் உரையாலும் நூல் வழியாலும் தாம் பெற்ற திருவருள் நெறி விளக்கங்களை அவ்வாறே அருள் உரை முறையாலும் நூல் வழியாலும் உலகிற்கு வழங்கினா, வழங்கி வருகின் 'றனர். எனவே, ஞானநெறியில் இங்ஙனம் இடையறாது வழி சைவ சித்தாந்தம் வழி வந்து விளங்கியதற்காக இவர்களுக்குச் சந்தான குரவர் என்பது பெயராயிற்று. சமயக் குரவர்களில் திருமூலர், சேக் கிழார் ஆகிய இருவரும் அடங்குவர்.
சைவ சமயம் - பா.சைவம்.
சைவமும் வைணவமும் - இவை இரண்டும் ஆகமத்தின் வழியே தோன்றிய பழஞ்சமயங்கள், முன் வேதத்தில் ஒன்றி நின்று, பின் வேறுபட்டவை.
சைவச் சாதனங்கள் - இவைமூன்று; திருநீறு, உருத்தி ராக்கம், அஞ்செழுத்து.
சைவத்தின் சாரம்- பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்.
சைவ சிகாமணி - மெய்கண்டாரும் திருஞான சம்பந்தரும்.
சைவ சித்தாந்தம் - இது ஒரு தத்துவம். தமிழர் பேரறிவின் பெருவினைவு. அறிவு நூல்கள் முடிபெல்லாம் தன்னுள் அடக்கியது. இதனை அளவை இயல் நெறி முறைகளுக்கும் அறிவி யல் உண்மைகளுக்கும் அருள் நெறி நுகர் நலங்களுக்கும் உல சியல் நடைமுறைகளுக்கும் சிறிதும் முரண்படாதவாறு சிவஞானபோதம் அழகுறவும் திறம்படவும் விளங்குகிறது. தமிழிலுள்ள பிற சித்தாந்த சாத்திரங்களிலும் அது விளங்கி வருகிறது. சைவ சித்தாந்தம் 36 தத்துவங் களை ஏற்கிறது. அவையாவன; சிவ தத்துவம் 5. வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24. அது ஏற்கும் முப்பொருள் களில் முதன்மையானது பதி ஏனைய இரண்டு பசு, பாசம். பதி என்னும் சைவசித்தாந்த சொல் சிவனுக்கே உரியது. சைவசித்தாந்த அடிப்படைகள் - இவை பின்வருமாறு. 1) இப் பருவுலகம் ஓர் உள்பொருள் 2) தோற்றம், மறைவு, நிலை பேறு ஆகிய முத்தொழிலுக்கும் அது உட்பட்டது.3) இத்தொழி லுக்குரியான் ஒருவனுள்ளான். 4) இத் தொழில்கள் தாமாக நிகழ்வன அல்ல 5) இப்பரு வுலகம் மாயையினின்றும் தோன்றி ஒடுங்குவது மர!! ஆகவே, அதற்குப் பிரக்ருதி முதற்காரணமன்று 7) பரமா ணுக்கள் முதற் காரணம் அல்ல 8) முதல்வனும் (பிரமம்) முதற் காரணன் அல்லன் 9) முத் தொழிலைச் செய்வோர் அயன் மால் அல்லா பல கடவுளரும் அல்லர் 10) இம் முத்தொழில் களை முதல்வன் செய்வது உயிர்கள் மலத்தின் நீங்கி உய்வ தற்காக. 11) இவை அவனால் எளிதில் செய்யப்பெறுகின்றன என்பதை உணர்த்தவே விளை யாட்டு என்னும் சொல் பயன் படுகிறது.
சைவசித்தாந்த அமைப்புகள் - ஆதீனங்கள், மன்றங்கள், பதிப் பகம் ஆகியவை இவற்றில் அடங்கும். தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம் திரு வாவடுதுறை ஆதீனம் முதலி யவை குறிப்பிடத்தக்கவை. மன்றங்களில் சென்னையில் செயற்படும் சைவசித்தாந்தப் பெருமன்றம் குறிப்பிடத் தக் கது. பதிப்பகத்தைப் பொறுக்க வரை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஒன்று மட் டுமே சிறப்பாகச் சைவத்திற்குச் சிறந்த பணி செய்து வருகிறது. மற்றும் பல அமைப்புகளும் ஆங்காங்கு பல ஊர்களிலும் சைவசித்தாந்தைப் பரப்பி வருகின்றன.
சைவ சித்தாந்த அறவியல் - பொது அறத்துடன் சிறப்பு அறம் (சிவ புண்ணியம்) புற வழிபாடு, அகவழிபாடு (உருவம்) அருஉருவம், அருவம் என்னும் நிலைகளில் முழு முதலை உணர்ந்து இறைவனுடன் இரண் டறக் கலந்து நிற்றல் ஆகிய மூன்றுமே சைவ சித்தாந்தத் தின் அறஇயலும் சமய இயலும் ஆகும்.
சைவசித்தாந்த அறிஞர்கள் - பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியார், பேரா. கா. சுப்பிர மணியபிள்ளை , திரு. சி. அருணை வடிவேல் முதலியார், திரு நரா. முருகவேள், முனை வர் சுந்தரமூர்த்தி, சேக்கிழார் அடிப்பொடி டி.என் இராமச் சந்திரன் திரு. சி.என் சிங்கார வேலு, குருசாமி தேசிகா முதலி யோர் ஆவர். மெய்கண்ட நூல் களுக்கு உரை எழுதியவர்களும் இதில் அடங்குவர்.
சைவசித்தாந்த இதழ்கள் - சித்தாந்தம் (சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை , ஞான சம்பந்தன் (தருமை ஆதீனம்), மெய் கண்டார், (திருவாவடு துறை ஆதீனம்), செந்தமிழ்ச் செல்வி, (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை ), இராம கிருஷ்ண விஜயம் (இராம கிருஷ்ண மடம், சென்னை ), தர்ம சக்கரம், ( திருப்பராய்த் துறை, ஆங்கில முத்திங்கள் இதழ் Saiva siddhanta சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை.
சைவசித்தாந்த பரிபாடை - ஆசிரியர் சூரிய சிவாசாரியார்.
சைவசித்தாந்த முறை - உலகப் பொருள்களைப் பதி, பசு, பாசம் என்னும் மூன்றாகப் பகுப்பதும், தனு, சுரணம், புவனம், போகம் என்று உலகை நான்காகப் பிரிப்பதும் சைவத் திற்குப் புறம்பான சமயங் களைச் சற்காரிய வாதத்தினால் மறுப்பதும், மாயையை முதற் காரணமாகக் கொள்வதும் தத்துவங்களை 36 ஆக ஏற்ப தும், உயிர் மூவகை என்பதும் வேதத்தையும் (பொது) சிவாக மத்தையும் (சிறப்பு) தனக்கு முதல் நூல்களாகக் கொள்வ தும்சைவசித்தாந்த முறை.
சைவசித்தாந்த வரலாறு - சைவ வரலாறே சைவ சித்தாந்த வரலாறு. அது நீண்டது. நெடியது. வேதகாலத்திற்கு முற்பட்டது அதன் வரலாறு, வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவை திகமதங்கள் எனப்படும். அவை பௌத்தம், சமணம் முதலியவை. சிவனைச் சிறப் பிக்க எழுந்த ஆகமங்களே சிவா கமங்கள் அல்லது சைவ ஆக மங்கள், அவற்றின் வழிப்பட்ட சமயம் சைவம், சைவ சமயத்தில் தோத்திரங்களும் சாத்திரங் களும் உண்டு. தோத்திரங்கள் திருமுறை12.சாத்திரங்கள் மெய் கண்ட் நூல்கள் 14, பண்டார சாத்திரங்கள் 14. சாத்திரங் களில் தலைமையானது சிவ ஞான போதம். சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவத்தின் ஆணி வேர்கள். பாடியங்கள் வழி வளர்ந்த தத் துவ ஆராய்ச்சி தமிழ் நாட்டில் பரவிய நிலையில், சைவசித் தாந்த சாத்திரங்கள் தமிழில் தோன்றின. சைவசித்தாந்தம் வடமொழியிலுள்ள சைவாக மங்களையே மூலமாக உடை யது என்பது மரபு. உண்மையில் தமிழில் தோன்றிச் சிறப் புற்ற சித்தாந்த சாத்திரங்களால் தான் அது விளங்கி வருகிறது. ஆசிரியர்க்கு மாணாக்கர், மாணாக்காக்கு மாணக்கர் என இவ்வாறு வழிவழி வந்த அருளாளர்களது மரபினைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கொண்டவை.
சைவ தீக்கை - சைவத்திற்குரிய மூவகைத் தீக்கை 1) சமய தீக்கை 2) சிறப்புத் தீக்கை 3) நிர்வாணத் தீக்கை பா, தீக்கை. சைவ நாதன் - மெய்கண்டார்.
சைவநூல் - சைவாகமம்.
சைவநெறி - இது வித்தகம் உடையது. மேம்பட்ட மெய் கண்ட சந்தான வழி வந்தது. சைவர் அனைவரும் மேற் கொள்ளும் நன்னெறி.
சைவ பஞ்சதபனம் - சைவத் திற்குரிய 5 உபநிடதங்கள் 1) காலாக்கினி ருத்திரம் 2) சுவே தாச்சுவதரம் 3) கைவல்லியம் 4) அதர்வசிகை 5) அதர்வசிரசு
சைவர் - சைவ சமயத்தவர் சைவர் எழுவர். 1) அனாதி சைவர் 2) ஆதிசைவர் 3) மகாசைவர் 4) அணுசைவர் 5) அவாந்தர சைவர் 6) பிரவர சைவர் 7) அந்நிய சைவர்.
சைவ வழிபாடு - சிவ வழிபாடு நோக்கம்; மெய்யுணர்வு பெறு வது மட்டுமன்றி, மெய்யுணர்வு பெற்றோரும் மேற்கொள்ளும் ஒழுக்கம். நாற்படிகள், 'இதில் சைவ சித்தாந்திற்கே உரிய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் அடங்கும். விளக்கம்; கோயிலை வலம் வருதல். சரியை அருச்சனை புரிதல். கிரியை கொடி மரத்தின் கீழி ருந்து தியானஞ் செய்தல் யோகம். பரம்பொருளோடும் ஒன்று நிலை ஞானம். ஆலயத்தைச் சிவன் என்று வழிபட வேண்டும். கோபுர வாயில் வழியாக உள்ளே சென்று வலம் வந்து கொடி மரத்தின் வழியாகக் கோயிலி னுள் புகுந்து திருமூலப் பெரு மானைப் பூசனை செய்து வழிபட வேண்டும். சைவ வழிபாட்டில் திருநீறுப் பூசுதலும் உருத்திராக்கம் அணி தலும் திருவைந்தெழுத்து ஒது தலும் குருவிடம் தீக்கை பெறு தலும் நீராடுதலும் இன்றியமை யாதவை. வழிபாட்டில் பயன் படுத்தும் பொருள்களையும் நம் உறுப்புகளையும் உரிய முறையில் தூய்மை செய்ய வேண்டும். வழிபாட்டிற்குத் தேவையான தெய்வத் தன்மை பெற வேண்டும். மனத்தை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வழிபட வேண்டும். திருஞான சம்பந்தர் முதலிய அருளாளர்கள் தாம் ஞானம் பெற்ற போதிலும், அடியார் கூட்டத்தோடு தலங்கள் தோறும் சென்று வழிபட்டது. இங்கு நினைவு கூரத்தக்கது. ஆலய வழிபாட்டில் வலம் வருவதால், மல மறைப்பு நீக்கு வதற்கேற்ற மந்ததர அறிவுப்பக் குவம் உண்டாகும். கிரியை யால் மந்த பக்குவமும் யோகத் தால் தீவிரப் பக்குவமும் உண் டாக்கிச் சிவஞானம் விளங்கத் துணை செய்யும் என்பது வெளிப்படை...
"அம்மலம் கழீஇ அன்ப ரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே"
(சிபோநுபா 12)
சைவ விழாக்கள் - 1) மாமகம் . குடந்தை 2) சித்திரைத்திரு விழாமதுரை 3) தேர்த்திரு விழா - திருவாவரூர் 4) திருக் கார்த்திகைத் தீபம் திருவண் ணாமலை 5) ஏமூர்த் திருவிழா திருவையாறு 6) அறுபத்து மூவர் திருவிழா - மயிலை, சென்னை .7)ஆருத்திராதரிசனம் சிதம்பரம் 8) பங்குனி உத்திர விழா -பழநி 9) படித்திருவிழா - திருத்தணிகை 10) தைப்பூசம் வடலூர் 11) வைகாசி விசாகத் திருவிழா - திருச்செந்தூர்.
சைவாகமம் - சிவாகமம்.
சைனம், சைன மதம்- வேத நெறியை ஏற்காத சமயம். இதன் முதல்வர் மகாவீரர் - வேறு பெயர். ஆருகதம், சமணம் அவைதிக மதம்
சைனன் - சமணன், புத்தன்.
சைனாகமம் - மூன்று 1) அங்க ஆகமம் 2) பூர்வ ஆகமம் 3) பகுசுருதி ஆகமம் என முப்பகுதிகளைக் கொண்டது சைன சமய நூல்.
சொப்பனம் - கனவு. ஐந்து காரிய அவத்தைகளில் மூன்றாவது நிலை.
சொப்பனத் தானம் - கண்டம்.
சொர்க்கம் - பா. சுவர்க்கம்.
சொரூபம் -1) உண்மை 2) பதி, சொருபதி அனுபூதி - பதியுடன் உயிர் ஒன்றித்து நிற்கும் நிலை.
சொருப இலக்கணம் - உண்மை இயல்பு, கன்மங்களோடு மாயை கூடும் பொழுது ஆனமாக களின் அறிவை ஆணவம் முழு மையாக மறைத்து, அறியாமை யில் மூழ்கச் செய்யும். அதுவே, அதன் உண்மை இயல்பு என்னும் சொரூப இலக்கணம்
சொல் இறந்தோய் - மெய்கண் டார் சொல்லைச் செறிவாக மாற்றுச் சொல் இல்லாத வாறு பயன்படுத்தியவர். எ-டு சொல்லே சொல்லுக சொல் இறந்தாயே (இஇ12).
சொல் தொழும்பு - சொல் தொகுதி..
சொல்லின் அண்மை - சொற்கள் அடுத்து நிற்றல்
சொல்லுலகம் - சப்த பிரபஞ்சம். இது மந்திரம் (11) பதம் (81), வன்னம் (51) என மூன்றாய்' இருப்பது. வன்னம் - எழுத்து பா. உலகம்.
சொற்கோ - திருநாவுக்கரசர்
சொற்பொருள் பின்வருநிலையணி- முன்னர் வந்த சொல் லும் பொருளும் பின்னர் வரு தல், சிவஞானபோத வெண்பா 5. இதில் ஒன்று அலா என்னும் தொடர் உருவம் அருவம் என்னும் பொருளில் திரும்பத் திரும்ப மூன்று தடவைகள் வருதல்.
சொன்மடந்தை - நாமகள்.
சோகம் - கூம்புதல், வாடுதல், சோகம் = பாவனை-சோகம் நீங்கியோர். 'அவனே நான்.' என்று பாவிப்பது.
சோடச சைவம் - பா சைவம்
சோடச் உபசாரம் - பா உபசாரம்.
சோதகம் - ஏவுவது
சோத்திரம் - செவி
சோத்திராதி - ஐம்பொறிகள்
சோதி - சுடர், செம்பற்சோதி
சோதி ஒரு முன்று - அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய முச்சுடர்கள்.
சோதிட்டோமம் - ஒரு யாகம்,
சோதிடம் - கோள்கள் மனித வாழ்வின் நன்மைக்கும் தீமைக்கும் எவ்வாறு காரணமாக உள்ளன என்பதை ஆராயும் நூல். வான நூலுக்கு வித்திட்ட துறை.
சோபான முறை - படிமுறை.
சோம சித்தாந்தம் - சைவ சமய உட்பிரிவுகளில் ஒன்று.
சோம்பு - விருப்பு வெறுப்பற்ற.
சோமாசிமாற நாயனார் - மறையவர் திரு அம்பர் - சோழ நாடு. சுந்தரரின் நண்பர். சிவனடியா ருக்குத் தன் அன்பை அமுதாக் கியவர். திருவைந்தெழுத்தைத் தவறாது ஓதியவர். குரு வழிபாடு (63)
சோம பானம் - சோம வேள்வியில் சோமச் சாறு பருகுதல்,
சோமயாகம் - ஒருவகை யாகம். தேவர் பொருட்டுச் கோமச் சாறு அளிக்கும் வேள்வி.
சோம்புதல் - சோம்பல் கொள் ளல்,
சோறு - வீடுபேறு. எ-டு பாதகமே சோறுபற்றினவா தோணோக் கம் (திருவாசகம் 15-7)சௌபல்யம் - எளிமை
சௌத்திராந்திரகன் - சமயவாதி புத்த சமயத்தில் சௌத்திராந் திரிகப் பிரிவைச் சார்ந்தவன்.
சௌத்திராந்திகன் மதம் - புத்தரில் பேதிவாதி.
ஞான ஆணையன் -வேதங்கள் பலவற்றையும் தனக்கு நான்கு கொம்பாகவும் பொருந்தி விளங்காநின்ற இச்சை, கிரியை, ஞானமே தனக்கு அங்கமான கொலு பானையை உடையவன்.
ஞான ஞேயங்கள்- அறியப்படும் அறிவுப் பொருள்கள்,
ஞாதிரு - உயிர், அறிபவன் (இறைவன்) ப. திரிபுடி
ஞாயிறு- கதிரவன்,
ஞாலம் - உலகம். இது கீழ் ஏழு மேல் ஏழு என இருவகை பா, உலகம்.
ஞான மதலை - இளமுருகன் அறிவிற் சிறந்தவன்,
ஞானம் - அறிவு, சத்திக்குப் பாரி யாய பெயர் பதி ஞானம், பசு ஞானம், பாசஞானம் என மூவகை திரிகாலஞானம், அடி சேர் ஞானம், அணிமொழி ஞானம் ஆகிய மூன்றும் பதி ஞானத்தில் அடங்குபவை. ஞானமே சமயம் சமயமே ஞானம் ஞானத்தால் கிட்டுவது வீடு, எல்லாவற்றிற்கும் மேலான ஞானம் சிவஞானம் அல்லது பதிஞானம் பா. திரிபுடி.
ஞான எரி - செருக்கை அழிக்கும் தீ
ஞானக்கண்- பதியறிவு, திருவடி, ஓ. ஊனக் கண்.
ஞானக் காட்சி - பதியறிவு.
ஞான காண்டம் - வேதத்தின் பாகம் ஞானத்தைக் கூறுவது
ஞானகுரு - குருவில் ஒரு வகை யினர். திருவெருளை உணர்த் துபவர்.
ஞானசத்தி - ஆற்றல் இல் ஒன்று. பேரறிவு ஆற்றல் ஆன் மாக்கள் இருவிசப் பயன்களை உணர்ந்து. ஒழித்து முத்தி எய்த உதவும் சிவனாற்றல். .
ஞான சரியை - பா. ஞானச் செய்திகள்.
ஞான சம்பந்தர் - பா. திருஞான சம்பந்தர்.
ஞான சாதனம் - பிறவா நெறி முறையில் ஞான நெறி அடை வதற்கு வேண்டிய பயிற்சி, ஞான சாத்திரம் - சமய அறிவு நூல்.
ஞானசித்தன் - மோட்ச சாதனத்தில் ஞானம் நிறைந்தவர்.
ஞானசீலம் - ஞான ஒழுக்கம். இது சமாதியின் உறுதி.
ஞானச் செய்திகள் - இவை நான்கு 1) ஞானத்தில் கிரியை - ஞான நூற் பொருளைக் கேட்டல். அண் ணலை வணங்கி, அவர் மெய்யே கண்டு பேரின்பமடைதல், ஞானத்தில் சிரியை - கேட்ட ஞான நூல் பொருளைச் சிந்தித்தல். 3) ஞானத்தில் யோகம் - ஞானத்தில் சித்தித்ததைத் தெளிதல் 4) ஞானத்தில் ஞானம் ; ஞான நிட்டை கூடுதல் பாஞானவகை.
ஞான சைவம் - சைவம் 16இல் ஒன்று . ஞானதிரோதகம் - அறிவு மறைப்பைச் செய்யும் பொருள்
ஞானத்திற்குக் காரணம் - சரியை கிரியை யோகங்கள் ஆகியவை முற்றுதல்,
ஞான தீக்கை - ஞானத்தை ஞான குரு உணர்த்தும் முறை, வேறு பெயர் நிருவாணத்தீக்கை தீக்கை ஞானம் தரும். ஞானம் வீடு தரும்.
ஞானத்தொழில் பிரகாசம் - காயம் அகலத் தோன்றும் அருள் ஒளி.
ஞான நடனம் - திருவருளால் சிவத்துடன் இயைந்து நிற்கும் நிலை.
ஞான நிட்டை -சிற்றறிவு ஒழிந்து நேசமோடு சேர்ந்து உயர்பரத்து நிற்பது ஞான நிட்டை என்பது • சிவப்பிரகாசம் கூறும் உண்மை
ஞான நிலை - ஞானம் மேவும் நிலை,
ஞானநூல் - மெய்யறிவு நூல்
ஞான பாதம் - சிவாகமம் நாற் பாதங்களுள் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் பற்றிக் கூறும் முதற்பகுதி.
ஞானபாவம் -ஞானமும் புண்ணி யமும். உண்மைச் சிவ புண்ணி யம், உபாயச் சிவ புண்ணியம் என ஞானம் இருவகை. முன்னது முத்திக்காகவும் பின்னது உலகப் பொருள் காரணமாக வும் செய்யப்படுவன. ஞானத் தால் ஞானம் நீங்கிய உண்மைச் சிவ புண்ணியத்திற்குப் பயன் சாலோக சாமீப சாரூபம் என்னும் பரமுத்தி, ஞானத்தில் ஞானத்துக்குப் பயன் சாயுச்சியம். உபாயச் சிவ புண்ணியத் திற்குப் பயன் இப்புவன முதல் சுத்தமாய் புவனம் வரையுள்ள புவனங்களில் போகங்கள் நுகர்தல்.
ஞானபூசை - இதிலுள்ள ஐந்து நிலைகள். ஞான நூல்களைத் தான் ஓதுதல். அவற்றைப் பிறர்க்கு ஓதுவித்தல், அவற்றின் பொருளைத் தக்க ஆசானிடம் கேட்டல், தக்கவர்களுக்குத் தான் உரைத்தல், அவற்றின் பொருளைத் தான் சிந்தித்தல்.
ஞான மார்க்கம் - ஞான நெறி, நான்கு சமய நெறிகளில் சிறந்த நன்னெறி.
ஞானாமிர்தம் - சைவ சித்தாந்த நூல், திரு உந்தியாருக்கு முன் தோன்றியது.
ஞான யாகம் - நிறை ஞானத்தினால் கண்டதோர் பொருளைக் காணல்.
ஞான வகை - முதல் வகை; 1) கேட்டல் 2), சிந்தித்தல் 3) தெளிதல் 4) நிட்டை கூடுதல், சிவஞானபோதம் நூற்பா 8இல் கேட்டலும் 9இல் தெளிதலும் சிந்தித்தலும் இல் நிட்டையும் கூறப்படுதல். இரண்டாம் வகை; 1) மதி ஞானம் 2) சுருதஞானம் 3) அவதிஞானம் 4) மனப்பரிய ஞானம் 5) கேவல ஞானம் மூன்றாம் வகை; 1) பதிஞானம் 2) பசுஞானம் 3) பாச ஞானம்
ஞான வாய்மைப்பயன் - நன் னலம் வாய்ந்த அறிவே ஞான வாய்மை. பயன் மூன்று; 1) ஆன்ம தரிசனம் 2) ஆனம் சுத்தி 3) ஆன்ம இலாபம்.
ஞான விரி -இது பலவகை, வரு ஞானம், பாச ஞானம், பசு ஞா னம், பதிஞானம் பல ஞானம், அஞ்ஞானம், வாசக ஞானம், வாச்சிய ஞானம், திருஞானம் தங்கிய ஞானம், சங்கற்பனை ஞானம், கடந்த ஞானம், அணி மாதி ஞானம், அடிசேர் ஞானம், திரு (சிவ) ஞானம், எல்லாவற் றையும் கடந்த ஞானம். திரு ஞானம் ஆகவே, சீவன் முத்தர் சிவமே கண்டிருப்பர்.
ஞான விளைவு - உயிரின் இளைப்பு நீங்க இ.தவுவது. மக்கள் நல்வாழ்வுக்கு உதவுவது. துன்பத்தை நீக்குவது.
ஞானி, ஞானியர் - ஞான வாழ்வினர். முக்காலம் உணரும் வித்தகர்கள்.
ஞானேந்திரியங்கள் -ஞான இந்திரியங்கள். அறிவுப் பொறி களாகிய ஐம்பொறிகள்.
ஞே
ஞேயம் - அறியப்படும் பொருள் (கடவுள்). பா.ஞானம் ஞேயம் திரிபுடி.
த
தகவு -வலிமை.
தக்கன் - பிரமன் மானசபுத்திரர்களில் ஒருவன்.
தக்கன் வேள்வி -தக்கன் யோக புண்ணியம் தீமையில் முடிந்தது. அன்பிலார் புண்ணியம் பாவமாகும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.ஒ. பாலன் செய்த பாதகம்.
தகுதி வழக்கு - இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூன்று
தங்கும் - அடங்கும்
தசம் - பத்து.
தச அவதாரம் - இறைவனின் பத்துப் பிறப்புகள், 1) மத்சயம் தடக்கை 2) கூர்மம் 3) வராகம் 4) நரசிங்கம் 5) வாமனன் 6) பரசு ராமன் 7) இராமன் 8) பலராமன் 9) கிருட்டிணன் 10)) கல்கி.
தசகாரியம் - சிதம்பரநாத தேசிகர் இயற்றிய சைவ சித்தாந்த நூல்.
தசி காரியம் - பத்துச் செயல்கள் அல்லது முயற்சிகள். 1) தத்துவ ரூபம் 2) தத்துவ தரிசனம் 3} தத்துவசுத்தி 4) ஆன்மரூபம் 5) ஆன்ம தரிசனம் 6) சிவயோகம் 7) சிவபாசம் 8) ஆன்ம சுத்தி 9)சிவரூபம் 10) சிவதரிசனம் உண்மை நெறி விளக்கம் இவற்றை நன்கு விளக்குகிறது.
தசவாயுக்கள் - பத்து வளிகள். 1) பிராணன் - இதயத்தில் இயங்குவது. 2) அபானன் -உச்சலத்தில் நிற்பது. 3) உதானன் - நாபியில் நிலைபெற்று நிற்பது. 4) வியானன் -உடல் முழுவதும்பரவி இருப்பது. 5) நாகன் - முடக்கல், நீட்டல், கிளக்கல் 6) கூர்மன் - மயிர் கூச்செரிவது 7) சமானன்-கந்தரக்குழியடைச்சாதுவின் பால் நிற்பது. 8) கிருகரன் தும்மல் சினம், செம்மை. 9) தேவதத்தன் - ஒட்டம், இளைப்பு, வியர்த்தல், 10) தனஞ்செயன் உயிர்போகினும் வேகாது உடலினை விக்கித் தலைகிழித் தகல்வது.
தஞ்சம் - அடைக்கலம்.
தடக்கை - வளைந்தகை, பெரிய கை, தடத்தம் - 1) பொது 2) பஞ்ச கிருத்தியங்களைப் பண்ணும் பதிநிலை.
தடத்த இலக்கணம் - பொது இயல்பு. எ-டு மாயா கருவிகளுடன் கூடி, அக்கருவிகளின் கூடுதல் குறைதல்களால் அஞ்சவத்தைப் பட்டுநிற்றலே ஆன்மாவின் பொது இலக்கணம் என்னும் தடத்த இலக்கணம்.
தட்டம் - கைகொட்டல், எ-டு கும்பிட்டுத் தட்டம் இட்டுக் கூத்தாடித்திரியே.(சிசிசுப323).
தடையும் விடையும் - சைவ சித்தாந்தக் கருத்துகளுக்குப்பிறர் முரணாகக் கூறுவது தடையாகும். அதற்கு மறுப்பாகச் சிவஞானபோதம் கூறுவது விடை.
தணவாத - நீங்காத.
தண்டம் - ஒறுத்தல்.
தண்டாத - நீங்காத.
தண்டியடிகள், தண்டி - பிறவிக்குருடர் திருவாரூர் சோழநாடு. திருவாரூர் குளத்தில் மூழ்கிக் கண் பெற்றவர். இலிங்க வழிபாடு (63).
தண்ணார் - இறைவன். எ-டு தண்ணார் அருள்.(தண்+ஆர்).
தண்டீசர் - சண்டேசுவர நாயனார். பாதகம் பழி என்று பாராமல் தன் தந்தையாகிய வேதியனைத் திருமஞ்சனக் குடத்தை ஏற்றியதற்காக அவர் பாதங்களைத் துண்டித்தவர். இவ்வல்வினை மெல்வினை ஆயிற்று திகப.99) மேலும், சிவபூசைக்குரிய நெல்லைத் தம் சுற்றத்தார் உண்டதற்காகக் கோட்டிலி நாயனார் அவர்களைத் துணித்தார். தன்னிடம் வேலை செய்த பணியாள் சிவனடியாராக வந்த போது தன் மனைவியார் நீர்வார்க்கத் தாமதித்ததால், அவர் கைகளைக் கலிக்கம்ப நாயனார் வெட்டினார்.
தத்துவம் - பொருள்; முதல் கருவி, உள்ளது. உண்மை, மற்றும் கொள்கை, மெய்ம்மை, முதன்மை, மெய்மம், நெறிமுறை எனலாம்.நிறுவப்படாத உண்மை கொள்கை, எ-டு ஐன்ஸ்டின் கொள்கை நிறுவப்பட்ட உண்மை நெறிமுறை. எ-டு ஆர்க்கிஸ்மடிஸ் நெறிமுறை இறைவன் மெய்ப்பிக்க முடியாத உண்மையாகும். தோற்றம் மாயையிலிருந்து தோன்றுவது. பின்,இதிலிருந்து உலகம் தோன்றுவது சகலமும் தத்துவம் என்றுங் கூறும் சிவஞான சித்தியார் (16 சுவ) வகை: சைவ சித்தாந்தம் ஏற்கும் தத்துவங்கள் 36 அவையாவன. 1) ஆன்ம தத்துவம் 24. 2) வித்யா தத்துவம் 7. 3) சிவதத்துவம் 5. விளக்கம் அவ்வத் தலைப்பில் காண்க.
வேறுபடும் வகை.
1) தத்துவம் 31, சிவ தத்துவம் நீங்கலாக.
2) தத்துவ தாத்துவிகம் 36+60=96
3) பிற சமயங்கள் ஏற்கும் ஆன்மதத்துவம் 24
4) பிரகிருதியில் ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும்
5) தத்துவம் 25; ஆன்ம தத்துவம் 24+1 புருடன் = 25
6) தத்துவம் 26; ஆன்ம தத்துவம் 24+ புருடன் 1+ இறைவன் 1=26
7) தத்துவம் 31; வித்தியா தத்துவம்
8) ஐம்பொறி 5, தொழிற்பொறி 5) தன்மாத்திரை 5, அந்தக் கரணம் 4 பூதம் 5 = 31
அசுத்த மாயையிலிருந்து அசுத்த காலமும் அசுத்த நிலம் முடிவாக 31 தத்துவங்கள் தோன்றுபவை.
பெயர்
எண்ணிக்கை
தொகுதி
தோன்றுமூலம்
1)சிவதத்துவம்
5
செலுத்து காண்டம்
சுத்தமாயை
2)வித்தியா தத்துவம்
7
நுகர் காண்டம்
அசுத்த மாயை
3)ஆன்ம தத்துவம்
24
நுகரப் படுங்காண்டம்
பிரகிருதி மாயை
தத்துவக் கருவிகள் - இவை 15 ஐம்பொறிகள் 5, தொழிற் பொறிகள் 5, அகக்கருவி 4, புருடன் 1.
தத்துவக் காட்சி - 36 தத்துவங்களையும் தூயதும் தூய்மை அல்லாததும் ஆன சுத்தா சுத்த மாயையின் விளைவு என்றும், அவை அறிவற்றன என்றும் அறிவதாகும்.
தத்துவ சுத்தி - 10 செயல்களில் ஒன்று. 36 தத்துவங்களுக்கு ஆன்ம அதீதமாய் நிற்கும் நிலை தெளிவுக் காட்சி மூன்றில் ஒன்று.
தத்துவ ஞானம் -மெய்யறி, பேரறிவு.
தத்துவ ஞானி - மெய்ஞ்ஞானி, மெய்யறிவாளர். எ-டு உணர்ந்தோன் தத்துவ ஞானி.
தத்துவ தரிசனம் - 10 செயல்களில் ஒன்று. ஆன்மா தன்னறிவிலே விளங்கக் காணும் நுகர் நிலை.
தத்துவத்திற்கு உரியோர் - 31 சுத்த தத்துவம் சுத்த புவன வாசிகளாகிய விஞ்ஞானகலர் பிரளயகலர் என்னும் இரு வகையினருக்கும்; 31 அசுத்த தத்துவம் அசுத்த மாயா புவன வாசிகளாகிய அனைத்து உயிர்கட்கும் உரியவை.
தத்துவ தூய்மை - அதாவது தத்துவ நீக்கம், 36 தத்துவங்களில் எதனையும் தான் பற்றி நில்லாமல் அவற்றை விட்டு நீங்குவதாகும்.
தத்துவ பிரகாசம் - தத்துவப் பிரகாசர் இயற்றிய தத்துவ நூல் இவர் மெய்கண்டார் மரபில் தோன்றியவர். சித்தியாரைப் போல் சைவ சித்தாந்தத்தை நன்கு விளக்குவதும் அளவையை 9 பாடல்களில் கூறுவது, மேலும், சரியை, கிரியை,யோகம் என்னும் முதல் மூன்று பாதங்களை விரித்துரைக்கும் தமிழ் நூல் இது ஒன்றே.
தத்துவமசி - "அது நீ" என்னும் பொருளை உடைய வேதாந்த மகாவாக்கியம்.
தத்துவரூபம் -10 செயல்களில் ஒன்று. தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலை.
தத்துவதிரயம் -1) சித்து, அசித்து ஈசுவரன் என்னும் மூவகை உண்மைகள். 2) ஆன்ம தத்துவம், விந்தியா தத்துவம், சிவ தத்துவம் என்னும் மூவகைத் தத்துவங்கள்.
தத்துவ வடிவு - நிலம் முதல் சிவம் ஈறான 36 தத்துவங்களால் கூட்டப்பெற்ற உடல், கருவி, உலகு, நுகர்வு, செய்தி ஆகியவற்றை உயிர் தன்னின் வேறாகக் காண்பது.
தத்துவ வாதம் - இயற்கையே கடவுள் என்னும் சமயம் அல்லது கொள்கை.
தத்துவாத்துவா - தத்துவ வழி அத்துவா 6ல் ஒன்று.
தந்தி - கணபதி.
தந்தையர் - பிறப்பித்தோன், கற்பித்தோன், மணம் முடிப்பித்தோன், அன்னம் தந்தோன், ஆபத்துக்கு உதவினோன் என ஐவர்.
தந்திரம் - ஆகமம்
ததி - தயிர்
ததிநெய் - தயிர்நெய்,பரம்பொருள் தன்னை உணரும் அன்பர்கள் இடத்தில் தயிரின் கண் நெய் போல் விளங்கித்தோன்றுவான். பாசக் கட்டுடையவர்களுக்குப் பாலின் கண் நெய்போல் விளங்காமல் நிற்பான்.
ததீசி- பா.சிவமுனி.
தபனியம், தமனியம் - செம்பொன்.
தபனியன் - இரணியன், நரசிங்க மூர்த்தியால் இவன் கொல்லப்பட்டான்.
தபோதனர்கள் - சாக்கிரத்தில் அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகில் சர்வ சங்க நிவர்த்தி வந்தவர்கள். (சிசிசுப 287)
தம்மை உணரார் - தம்முடைய இயல்பை உணராத பிற சமயத்தவர். அவர்கள் பின்வருமாறு: உலகாயதர், புத்தர், சாங்கியர், மாயாவாதி, பாஞ்சராத்திரிகள், சிவவாத்துவித சைவர்.
தம்முதல் - இறைவன்.
தமி - தம்மை எல்லாம் உடைய முதல்வன் எ-டு தாம்தம் உணர்வின் தமிஅருள்(சிபோதுபா 5)
தமியோன் - பாசக் கூட்டத்தினின்றும் நீங்கீத் தனியே நிற்கும் நான்.
தமிழ் - 1) இயல், இசை, நாடகம் என மூன்று 2) இயல், இசை, நாடகம்,அறிவியல் என நான்கு தமிழ் நான்மறை - மூவர் தேவாரமும் திருவாசகமும்
தமிழ் முனிவர் -அகத்தியர்
தரணம் - கடத்தல்,
தரணி - உலகம், மருத்துவன்.
தரளங்கள் - முத்துகள்.
தர்ப்பணம் - கண்ணாடி காட்டல், வழிபாட்டுமுறைகளில் ஒன்று.
தராபதி-இறைவன், அரசன்.
தரா வலயம் - தரை+வட்டம் நிலவுலகு.
தரிசனம் - காட்சி. இறைவன் காட்சி.
தரிப்பது - தாங்குவது.
தரு - அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என 5.
தருக்கம்- அளவை, நியாயவாதம் அறிவினால் சாதிக்கப்படும் ஆராய்ச்சி.
தருக்க இயல் - அளவை இயல். சிந்திப்பதை முறைப்படுத்தும் நூல் எண்ணக் கோவை நூல்.
தருக்க மதம் - அளவையைச் சிறப்பாகக் கொள்வதால், அளவை மதம் ஆகும். பொருள்களின் இயல்பை நுட்பமாக ஆராய்வது. நியாயம், வைசேடிகம் என இரு பிரிவுண்டு. நியாய மதம் நையாயிகம்எனப்படும். நியாயம் பொருள்களை 16 வகையாகவும், வைசேடிகம் 7 வகையாகவும் பிரித்து ஆராயும் 'இறைவன் அளவையால் அறியப்படுவனே” என்பர் தருக்க மதத்தவர். இறைவன் அளவை
யால் அறியப்படான் என்று பகரும் சைவ சித்தாந்தம். உள்ளது என்னும் உணர்வை உபலப்தி என்றும் இல்லது என்னும் உணர்வை அனுலப்தி என்றும் தருக்க மதத்தவர் கூறுவர்.
தருக்க மதத்தவர் -அளவை அறிவால் அறியப்படுபவனே இறைவன் என்னுங் கொள்கையினர்.
தருணம் - தக்க சமயம்
தருணன் - தக்க சமயத்தவன் இறையோன்.
தருதல் - விளக்குதல்.
தருமம் - நல்லவை செய்தல் ஒ.அதர்மம்.
தருமி - தருமம் உடையது.
தருமிவாசகம் - பண்பியாகிய சொல்.
தலம் - திருத்தலம். இறைவன் உருவுள்ள கோயில் சிவத்தலம். சிவத்தலம் பல திருமுறைகளில் பாடப்பெற்றுள்ளது.
தலமரம் -தல விருட்சம். ஆகமப்படி ஒவ்வொரு கோயிலிலும் இருப்பது.
தலை - இடம்.
தலைப்படுதல் - சேர்தல்.
தலை பறிஉற்று - எண்ணற்ற சாத்திரங்கள் எல்லாம் கற்று, அதனால் எல்லோரும் தர்க்கம் பேசித் தலை பறிகொடுக்கத் தேவை இல்லை என்று உமாபதி சிவம் சங்கற்ப நிராகரணத்தில் மாயாவாதிகளுக்குக் கூறுகின்றார்.
தலைமைப்பாடு - மேம்பாடு
தலைமையோன் - தலைமைச் சிறப்புள்ள மெய்கண்டார்.
தலைவன் - நேர்மையாளர்.
தவர் - தவத்தோர்.
தவரடி - தவமுடையோர் திருவடி
தவம் - உயர்ந்த குறிக்கோளை அடைய ஒருவர் செய்யும் முயற்சி. அவ்வகையில் இறைவன் அருளைப் பெறச் செய்யும் பெரு முயற்சி தவமாகும். இறைவனை அறிய, மெய்யுணர்வோடு தவமும் உயிர்க்கு வேண்டும் தவசிகள் தமக்குற்ற துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு பிறர்க்குத் துன்பம் ஒருபோதும்செய்யார்.கருமமே கண்ணாயினாரும் தவத்தைக் குறிக்கோளாகக் கொள்வர். இது தவத்தின் பொது இயல்பு. இனித்தவத்தின் சிறப்பியல்பாவது சரியை, கிரியை, யோகம் எனச் சாத்திரங்கள் ஓதுஞ் செயல்முறைகளும் தவமே, தவத்தை அறம் பிறழாச் செயலாகவும் கொள்ளலாம்;
தவலோகம் - தவர் வாழுமிடம்.
தவ்வையார் -தமக்கையார்.
தவிர்த்துதறில் - அடக்கிச் செய்தல்.
தவிசு - இருக்கை, அடி எ-டு தேன் அமர் தவிசு
தளை - கட்டு
தற்கிழமை - இரண்டற இருத்தல். தாதன்மியம்.
தற்கிழமைப் பொருள் - ஒரு பொருளை எனது என்று கூறுமிடத்து அதனைத் தானாகக் கருதிக் கூறுதல் ஒ, பிறிதின் கிழமை,
தற்கேடர் - தம்மையே தேடும் அறிவிலார்.
தற்பதம் - பிரம வடிவம்.
தற்பரம் - இறை தனக்கு அதீதமாகிய சிவம்.
தற்பரன் - இறைவன்.
தற்பொருட்டுப்பொருள் - தனக்காக என்னும் பொருள்.
தற்போதம் - தன்னைத் தானே அறிதல்.
தறுகண் - அஞ்சுவது அஞ்சாமை.
தன்துரு - திருநீறு, கண்டிகை முதலியவற்றின் வடிவம்.
தன் - சிவனருள், சிவன், உயிர், தலைவன்.
தன் இயல்பு - சிறப்பிலக்கணம்.
தன் நிறம் - வெண்மை நிறம்
தன்மம் - தருமம் எ-டு நல்ல சிவதன்மம்
தன்மாத்திரைகள் - ஐம்புலன்கள். தாமதக் குணக்கூறில் தோன்றுபவை
தன் மெய்வடிவளம் - சிவத்தைச் செம்மையே பெறுகை முத்திசிவ சமவாதிகள் மும்மலங்களும் நீங்கப் பெற்றுச் சிவ சமமாயிருப்பதேமுத்தி எனக் கூறுவர். பா. முத்தி.
தன்மை - வடிவம்.
தன்மையின் வைத்தோதல் - பொருளால் கூறாது அதன் தன்மையில் ஏற்றி கூறுதல். எ-டு அது மூவினை என்னாது மூவினம் என்று கூறியது.
தன்வயத்தன் ஆதல் - பதி இயல்புகளுள் ஒன்று. ஏகனாய் இருத்தல்.
தன்வயம் - பிற துணை வேண்டாதுதானாகஎல்லாஞ்செய்தல்.
தன்வாள் - தன் ஒளி.
தன்மை - வடிவம்
தன்வேதனைக் காட்சி - நிர் விகற்பமாகவும் பின்னர்ச்சிவி கற்பமாகவும் அறிந்த பொருளிலேயே அராகம் முதலிய ஐந்து தத்துவங்களின் உதவியால் இன்பதுன்பங்களைப்பட்டறிந்து ஆன்ம அறிவு பெறுதல் பா. காட்சி.
தன்னியல்பு - சிறப்பிலக்கணம்.
தன்னை - ஆன்மாவை, இறைவன்.
தன்னைப் பற்றுதல் - ஒரு குற்றம். அளவை நூலில் கூறப்படுவது.
தனம் - செல்வம்.
தனி - வேறு தனித்த, முழு எ-டு தனி முதல்வன்.
தனியறிவு - சிவ அறிவு.
தனிசு - வரி, எ-டு உழவும் தனிசும் ஒருமுகமேயானால் (திவ 21)
தனி முதல் - ஒப்பற்ற இறைவன்.
தனு - உடம்பு, உலக நாற்பகுப்பில் ஒன்று. எ-டு மாயா இயந்திரதனுவினுன் ஆன்மா (சிபோநூற்பா 3)
தனுகரணம், தன கரணாதி - உடல் கருவி. தனுகரணம் உயிருக்காக உள்ளது.
தா
தக்காது - திரிபின்றி.
தாக்குதல் - உறுத்துதல்,எய்துதல்.
தாசிமார்க்கம் - தாசமார்க்கம் - அடிமை நெறி,தொண்டு நெறி.
தாடலை - தாள் தலை, இறைவனோடு ஒன்றியிருத்தல்.
தாண்டேகர் ரா.நா. - பேராசிரியர் வேதக்கருவி நூல் தொகுத்தவர்.
- தாண்டவர் சிறப்புத் தலங்கள்.
1) தில்லை, பேரூர் - ஆனந்தத் தாண்டவம்
2) திருஆருர் - அ.சபா தாண்டவம்
3) மதுரை - ஞான சுந்தரத் தாண்டவம்
4) புக்கொளியூர் - ஊர்த்துவத் - தாண்டவம்
5) திருமுருகன் பூண்டி - பிரமதாண்டவம்
தாண்டவம் - கூத்து
தானு - நிலைபேறுடைய இறைவன். எடுதாணுவின் தண்கழல்
தாத்துவிகம் - தத்துவங்களின் காரியம். இது 60. 1) பிருதிவிக் கூறு நிலம் (5) 2) அப்புவின் கூறு-நீர் (5) 3)தேயுவின் கூறு:தீ (5) 4) வாயுவின் கூறு- வளி (10) 5)ஆகாயக்கூறு-வான் அல்லது நாடிகள் (10) 6) தொழிற் பொறி புலன்கள் (5) 7) அகங் காரக் கூறு 3 8) குற்றம் (5) 9) குணம் (3) 10) வாக்கு (4) (11) சுத்த மாயா விரி புலன்கள் 5. பா. தத்துவம்.
தாதான்மியம் - ஒன்றுபட்டிருத்தல். ஒருமையில் இருமை. வேறுபெயர் தற்கிழமை, சம வேதம், சமவாயம்.
தாதான்மிய சத்தி - சிவனை விட்டு ஒருபோதும்.நீங்காத ஆற்றல்
தாதான்மிய சம்பந்தம் - குணத்திற்கும் குணிக்குமுண்டான ஒற்றுமைச்சம்பந்தம் சமவாயம் எனவும் இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை சம்பந்தம் எனவும். இருவகை. இவற்றுள் குணகுணிக்குமுள்ள ஒற்றுமை தாதன்மியமாகும். இரு பொருள்களுக்குள்ள ஒற்றுமை அத்துவிதமாகும். சிவம் குணரி, சத்தி குணம். சிவமும் சீவனுங்கலந்திருக்கும் தாதான்மாயம் அத்துவித சம்பந்தம்.
தாந்திரிகம் - தந்திரத்தின் வழி தோன்றிய புதிய மதம். தாழ் வாகக் கருதப்படுவது.
தாதியர் - 1) வெள்ளாட்டியர். 2)வினையடி
தாது - பூத்தாது.
தாது ஏழு - இரதம், இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்டி, தோல், இரத்தத்தை நீக்க ஆகும்.
தாதுப் பிரத்தியம் - பகுதிவிகுதி.
தாதுவும் பரமேசுவரனும் - அரியின் அகந்தையை அழிக்கும் முகத்தான் அயன் பிச்சைக் கலம் ஏந்தி ஐயம் கேட்கப் பல பலிகளாலும் கலம் நிறையவில்லை. அப்பொழுது திருமால் செருக்காலே யான் இதனை நிறைப்பேன் என்று நெற்றி யின் நரம்பினைத் திறந்து விடப்பீறிட்டது குருதி அக்குருதி போதவில்லை. திருமாலும் மயக்கமுற்று வீழ்ந்தார். தேவர்கள் இரந்து வேண்டப் பரனும் அருள்கொண்டு எழுப்ப எழுந்த திருமால் பரமன்பின் நடந்து சென்றார். தாது இரத்தம்.
தாதை - தந்தை, பிரமன்.
தாபதர் - முனிவர்.
தாபம் - உள்வெதும்பித்தல். சுற்றத்தை விட்டுப் பிரிவதற்கு ஆற்றாமை.
தாபரம், தாவரம் - நிற்பன,திணை, எ-டு தாவரம் இலிங்கம். இறை வன்மேனி தாபர மேனி.
தாபரசங்கமம் - இறைவன் திரு மேனியும் அடியார் திருமேனியும் அல்லது இறைவனும் சிவனடியாரும் எ-டு தாபர சங்கபமங்கள் என்று இரண்டு உருவில் நின்று (சிசிசுப 118).
தாபனம் - நிலை நிறுத்தல். வழி படப்பெறும் உருவத்தில் எழுந்தருளும் இறைவனைத் தகுந்த மந்திரங்களாலும் முத்திரைக ளாலும்நிலைப்பெறச்செய்வது. வழிபாடு நிறைவுறும் வரையில் இறைவன் இருப்பை இடை விடாது உளங்கொள்ளுதற்கு நிலை நிறுத்த உதவுவது.
தாபனமுத்திரை - சமயமுத்திரையில் ஒரு வகை
தாமதம் - முக்குணங்களில் ஒன்று.
தாம் - உயிர்கள்.
தாம் அடங்க - சிவனிடம் ஒடுங்க.
தாம்பிராதிபதிகம் - பெயரும் பகாப்பதமும் ஒப்பிலா தாம் பிராதி பதிகமாம்.
தாம்பூலம் - வெற்றிலைப் பாக்கு வைத்தல். வழிபாட்டு முறைகளில் ஒன்று.
தாமோதரன் - திருமால்
தாய் - தாங்குபொருள். எ-டு ஊசல் கயிறு அற்றால் தாய் தரையே யாம் துணையால் (சிபோ பா 8) நான்காம் அதிகரண ஏது).
தாயார் - 1) திருமகள் 2) பாராட்டுத்தாய். ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய் என ஐவர். 3) அரசன் தேவி, குருவின்தேவி அண்ணன் தேவி மனைவியை ஈன்றாள் தன்னை ஈன்றாள் என ஐவர்.
தாரகம் - நிலைக்களம், பிரணவம் எ-டு தாரக மந்திரம்
தாரகப் பிரமம் - பிரணவம், எ-டு தாரக மந்திரம்.
தாரகப் பிரமம் - பிரணவ வடிவமான பரபிரமம்.
தாரகன் - பற்றுக் கோடாகவுள்ள இறைவன்.
தாரணி - உலகம், யமன்.
தாரணியோர் - உலகத்தோர்.
தார்ம் - 1) பிரணவம் 2) ஏழுவகைப் பண்களுள் ஒன்று 3) சத்தி
தார் - மாலை.
தார்க்கிகர் - அளவை நூல் கொள்கையர்.
தாவர வடிவு, உரு - நிலைத்த உருவம். சிவலிங்கம்.
தாவில் - முடிவில்லாத.
தாவு - வலி, வளம் எ-டு செல்வத்தாவு.
தாழ்தல் - இழிதல்.
தாழ்ந்த மனம் - பணிவுள்ளம்.
தாழ்ந்தமனம் உடையாள் - உமை.
தாழ்மணி நா - தாழ்ந்துள்ள நா.
தாள் - ஆற்றல், முயற்சி, திருவடி
தாள் முத்திரை - சமயதீக்கை முத்திரைகளில் ஒன்று.
தாற்பரியம் - உட்கருத்து நோக்கம்
தான் - உயிர், முதல்வன்.
தான் உரைத்தான் மெய்கண்டான் - இதில் பொதிந்துள்ள வரலாறு. சிவபெருமான் நந்திதேவருக்கும் நந்திதேவர் சனற் குமார முனிவருக்கும், சனற் குமார முனிவர் சத்திய ஞான தரிசினிகளுக்கும் சத்திய ஞான தரிசினிகள் பரஞ்சோதி முனிவ ருக்கும் பரஞ்சோதி முனிவர் மய்கண்ட தேவருக்கும் சிவ ஞானபோத நூலினை வழிவழி உபதேசித்து அருளினர். மெய் கண்டார் அதனைப் பிரதிக்ஞை, ஏது, எடுத்துக்காட்டு என்னும் அளவை உறுப்புகளுடன் முதல் தமிழ் நூல்வடிவமாக அருளிச் செய்தார்.
தான் பணியை நீக்குதல் - எல்லாம் சிவன் செயல் எனக் கொள்ளுதல்.
தானாகுதல் - சிவபதங்களுள் ஒன்றான சாயுச்சியம்.
தானம் - பெருங்கொடை. பிறர் பொருட்டுச் செய்வது. ஒ. தவம்.
தானசுத்தி - சுத்தி 5இல் ஒன்று. பூசை இடத்தை மந்திரத்தால் தூய்மைப்படுத்தல்.
தான வகை - இது 4. 1) அன்ன தானம் 2) அபயதானம் 3) சாத்திர தானம் 4) ஒளடத தானம். சிறந்தது அன்ன தானம்.
தானேயாம் - வேறு நிற்றல்.
தாஸ் எஸ்.கே. - முனைவர். சத்தி அல்லது தெய்வ ஆற்றல் என்னும் நூலாசிரியர்.
தி
திகிரி - ஆழி, சக்கரம்.
திக்கு - திச்சை. கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடக்கிழக்கு
திக்குபாலகர் - கிழக்குநோக்கி இருப்பவர். இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
திங்கள் முடியார் - திங்களைத் தன் முடியில் கொண்ட சிவன்.
திசை - திக்கு இது 10.
திடம் - வலிமை, உடல்.
திடம் வருத்தல் - உடல் வருத்தல்.
திடப்பெற - உறுதியாக, திண்டிறல்-வலிமையுள்ள உயிர்
திண்மதம் - திண்ணிய மதம்.
திண்மை - மனச் செருக்கு.
திணை - ஒழுக்கம், பிரிவு, 1) உயர் திணை அஃகிறிணை 2) குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் திதி - 1) உலகமாகிய உன்பொருள் 2) விட்டுணு.
திதி - இது 15. 1) பிரதமை 2) துவி தியை 3) திருதியை 4) சதுர்த்தி 5) பஞ்சாமி 6) சட்டி 7) சத்தமி 8) அட்டமி 9) நவமி 10) தசமி 11) ஏகாதேசி 12) துவாதசி 13) திர யோதசி 14) சதுர்த்தி 15) பெளர்ணமி அல்லது அமாவாசை.
திதிகர்த்தா - விட்டுணு.
திப்பியம் - திருவருள் எ-டு திப்பி யம். அந்தோ பொய்ப்பகை ஆகாய் (இஇ2)
தியான யாகம் - தியான வேள்வியாகம் 5இல் ஒன்று.
திரயம் - மூன்று.
திரவியம் - செல்வம் நறுமணப் பொருள் எ-டு வாசனை திரவியம் திரைகடல் ஒடியும் திரவியம் தேடு.
திராவிடாசாரியார் - தமிழ் நாட்டவர். வடமொழியில் வேதாந்தத்திரத்திற்கு ஒரு பாடியம் செய்தவர். இராமானுச்சாரியார் செய்த பாடியத்துள் இவர் தம் மதம் கூறப்பெறுகிறது. இவர் 2000 ஆண்டுகளுக்குமுற்பட்டவர்.
திரி - மூன்று.
திரிகம் - பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் சேர்ந்தது.
திரிகரணம் - மனம், மொழி, மெய்.
திரிகாலம் - முக்காலம்; நிகழ்காலம், இறந்த காலம் (கழிகாலம்) எதிர் காலம். முனிவர்கள் முக்கால முணர்ந்தவர்.
திரிசூலமுத்திரை - கைமுத்திரை வகை
திரிசூலி - காளி.
திரித்துவம் - சைவதீக்கை வகை. திரிபதார்த்தம் - பா. திரிகம்.
திரிபுடி - காணபான், காட்சி, காட்சிப்பொருள் ஆகிய மூன்றும் அறிபவன் (ஞாதிரு) அறிவு (ஞானம்) அறியப்படும்பொருள் (ஞேயம்)என்றும் கூறப்படும்.
திரிபுடை - 7வகைத் தாளங்களில் ஒன்று.
திரிமலம் - மும்மலம்.
திரிமுர்த்தி - பா.மும்மூர்த்தி.
திரியக் காண்டல், திரிவுபலன் - திரிவுக் காட்சி.
திரிவிதம் - மூன்று வகை
திரிவு - வேறுபடுதல்.
திருஅருள் - திரோதன ஆற்றல்.
திருஇடை மருதூர் தலங்கள் - இவை 10. 1) திரு இடைமருதூர் மகாலிங்கம் 2)திருவாவடுதுறை நந்தியம் பெருமாள் தலம் 3) திரு வலஞ்சுழி - விநாயகர் தலம் 4) திருவேரகம் (சுவாமி மலை) முருகன் தலம் 5) திருவாப்பாடி - சண்டேசுவரர் தலம் 6) சூரியனார்கோவில் நவக்கிரகத்தலம் 7) சிதம்பரம் - நடராசர் தலம் 8) சீர்காழி வைரவர் தலம் 9) திருஆருர் - தியாகராயர் தலம் 10) திரு இரும்பூளை தட்சிணா மூர்த்தி தலம்
திருக்கண் - அருட்பார்வை.
திருக்கல்முடித்தல் - குடமுழுக்கு செய்தல்
திருக்களிற்றுப்படியார் - தான் செய்தபின் இதனைத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தில்லையில் கூத்த பெருமான் திருவடி முன்வைத்தார். அப்பொழுது யாவரும் எதிர்பாராத அதிசயம் ஒன்று நடந்தது. அங்குள்ள அனைவரும் வியந்து நோக்கக்களிற்றுக்கை நிமிர்ந்து அதனைக் கூத்த பெருமான் திருவடியில் சேர்த்தது. அன்று முதல் இதற்குத் திருக்களிற்றுப்படியார் என்னும் பெயர் வழங்குவதாயிற்று. 100 வெண்பாக்கள் கொண்டதும் சைவ சமயக் குரவர் நால்வரின் பெருமையையும் ஏனைய திருத்தொண்டரின் மாண்பையும்.இது சிறப்புறக்கூறுகின்றது. சைவ சித்தாந்த உண்மைகளையும் விளக்குவது இது தில்லைச் சிற்றம்பலவர் என்னும் சிவப் பிரகாசனார் இதற்கு உரை செய்துள்ளார். கி.பி.12.
திருக்குளம் - தலப்பெருமைக்கேற்ப, இது அமையும். திரு விழாக் காலங்களில் இறைவன் திருஉருவம் புனித நீராடுவதற்கும் பத்தர்கள் நீராடுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டில் ஒருமுறை தெப்பத் திரு விழா நடைபெறும்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் - ஏகாலியார். காஞ்சிபுரம்தொண்டை நாடு சிவனடியார் குறிப்பு அறிந்து ஆடை ஒலித்துக் கொடுத்தவர் சங்கம் வழிபாடு (63)
திருகு - மலக்கோணை.
திருக்கூட்டம் - அடியவர் குழாம்.
திருக்கோலம் - கடவுளுக்குச் செய்யும் அழகு.
திருச்சிலம்பு - தெய்வச் சிலம்பு.
திருஞான சம்பந்தர் - அந்தணர் சீர்காழி. முதலில் பாடிய பதிகம் "தோடுடைய செவியன் "படி, ஞானத்தில் கிரியை நெறி, மகன்மை நெறி, முத்தி சாமீபம் பாடிய பதிகம் 16,000. இன்றுள்ள பாடல்கள் 4137.
இறுதியாகப் பாடியது "காதலாகி" காலம் கி.பி. 7ம் திரு முறை. 1-3. முத்தியடைந்த அகவை.16. சிறப்புப்பெயர்கள் காழிவேந்தர், சைவ சிகாமணி, நான்மறையின் தனித்துணை. வேறுபெயர் சம்பந்தர். இவர் தம் பதிகங்களில் மொழி மாற்று, மாலை மாற்று போன் றவை தமிழ் மொழிக்கு மூல இலக்கியங்களாக உள்ளன. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள் : 1) 3 வயதில் சீர்காழியில் உமாதேவியிடம் முலைப்பால் உண்டு பதிகம் பாடியவர்.
2) சிவபெருமானிடத்தில் திருக் கோலக்காவில் பொற்றாளமும் திருப்பட்டீச்சுரத்தில் முத்துப் பல்லக்கும் முத்துக்கிண்ணமும் முத்துக் குடையும் முத்துப் பந்தரும் திருவாவடுதுறையில் உலவாக்கிழியும் பெற்றார்.
3) திருமறைக் காட்டில் திருக்கதவு அடைக்கப் பாடியது.
4) பாலையை நெய்தல் ஆகும்படி பாடியது.
5) ஆண் பனைகளைப் பெண்பனைகளாக்கியது.
6) பாண்டியனுக்குக் கூனையம் காய்ச்சலையும் போக்கியது.
7) சமணரோடு அனல்வாதம், புனல் வாதம் புரிந்து, தேவாரத் திருவேட்டை நெருப்பிலிட்டுப் பச்சையாய் எடுத்தது.
8) மதுரையில் வைகையிலே தேவாரத்திருவேட்டை இட்டு எதிரேறும்படிச் செய்தது.
9) பத்த நந்தியின் தலையிலே இடிக்கச் செய்தது.
10) முள்ளிவாய்க்கரை நின்று வெள்ளப் பெருக்கிலே ஆற்றிலே தாமும் அடியாரும் ஏறிய ஒடத்தைத் திருப்பதிகத்தினாலே செலுத்தித் திருக்கொள்ளம்பூதூர் சேர்தல்.
11) திருமயிலையில் இறந்த பெண்னினது எலும்பைப் பெண்ணுருவாக்கியது.
12)நஞ்சினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
13)சிவபெருமானிடத்தில் படிக்காசு பெற்றது.
14)தம் திருமணத்தைக் காண வந்தவர் எல்லோரையும் தம் மோடு நெருப்பிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
திருஞான சம்பந்தரும் மெய்கண்டாரும் - சம்பந்தர் குழந்தைப்பருவத்திலேயே தேவாரம் பாடி அருளினார். மெய்கண்டாரும் தம் குழந்தைப் பருவத்திலேயே தத்துவ ஞானியாக விளங்கிச் சிவஞானபோதம் அருளினார்.இருவருக்கும் சிறப்புப்பெயர் சைவ சிகாமணி,
திருஞானம் - 1) திரு அறிவு 2) கோயில் சந்நிதியில் ஒதும் தேவாரம் போன்ற பாடல்.
திருட்டாந்தம் - உவமை, எடுத்துக்காட்டு.
திருத்தொழில் - திருத்தாண்டவம்.
திருநாவுக்கரசர் - வேளாளர். திருவாமூர் - திருநாடு சிறப்புப் பெயர்கள்; தாண்டக வேந்தர், உழவாரப் படையாளி-வேறு பெயர் அப்பர். முதலில் பாடிய பதிகம் "கூற்றர்யினவாறு”. படி, ஞானத்தில் சரியை நெறி, அடிமை நெறி. முத்தி நிலை, சாலோகம் பாடிய பதிகம் 49,000 இன்றுள்ள பாடல்கள் 3066. திருமுறை 4-6, இறுதியாகப் பாடிய பதிகம் எண்ணு
மேகன் என் சொல்லி' முத்தியடைந்த அகவை 81. கி.பி. 7. சமயக்குரவர் மூவரில் ஒருவர்.
திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள் - 1) சமணர்களால் 7 நாள் சுண்ணாம்பு அறையில் பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது. 2) சமணர்கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்ன்ற உண்டும் சாகாது பிழைத்தது. 3) சமணர் விடுத்த கொலை யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது. 4) சமணர் கல்லில் சேர்த்துக் கட்டிக் கடலில் இடவும் அக்கல்லே தோணியாகக் கொண்டு கரை யேறியது. 6)திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது. 7) நஞ்சினால் இறந்த அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்தது 8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தினுள் மூழ்கித் திருவையாற்றிலே வாவியின் மேலே தோன்றிக் கரையேறி யாதும் சுவடுபடாமல் ஐயாற்றரசின் கண்டறியாததிருப்பாதத்தைக் கண்டது.
திருநாளைப் போவார் நாயனார் - ஆதித் திராவிடர். ஆதனூர் -சோழ நாடு சிதம்பரத்திற்கு நாளைப் போவேன் நாளைப் போவேன் என்று உரைத்தவர். திருப்புன்கூரில்திருக்குளம் அமைத்தவர். இலிங்க வழிபாடு (63).
திரு நீண்ட யாழ்ப்பாண நாயனார் - பாணர் திருஎருக்கம் புலியூர் நடுநாடு. மதுரையில் யாழ் இசைத்து ஆலவாயனிடம் பொற்பலகை பெற்றவர். திருஞான சம்பந்தரோடு தலம் தோறும் சென்று சம்பந்தரது தேவாரப் பதிகங்களை யாழி லிட்டு வாசித்து வந்தார். குரு வழிபாடு (63).
திருநீலகண்டநாயனார் - குயவர். சிதம்பரம் - சோழநாடு. சிவனடியார்க்குத் திருவோடு அளித்து வந்தவர். சங்க வழிபாடு (63).
திருநீலநக்கநாயனார் - மறையவர். சாத்த மங்கை - சோழ நாடு. குருட்டுச் சிவபத்தர். இலிங்க வழிபாடு (63).
திருநீறு - விபூதி, சிவசாதனங்களில் ஒன்று.
திருநெறித் தமிழ் - தேவாரம்
திருப்படிமாற்று - இறைவனுக்குப் படைக்கும் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய கட்டளைப் பொருள்கள். எ-டு செய்யில் உகுத்த திருப்படி மாற்று (திப 20).
திருப்பதிகம் - தேவாரம் போல் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடல் தொகை.
திருப்பள்ளியறை - கோயில் மூர்த்தி இரவில் பள்ளிக்கு எழுந்தருளும் அறை.
திருப்பாட்டு - கடவுள் பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம்.
திருப்பாவாடை - ஆடைமேல் கோயில் மூர்த்திக்குப் படைக் கப்படும் பெரிய நிவேதனம்.
திருமஞ்சனம் - திரு முழுக்கிற்குரிய நீர்.
திருமஞ்சனக் கவி - கோயில் மூர்த்திகளின் திரு முழுக்கின் பொழுது சொல்லும் பாடல்.
திருமடந்தை - புகழ் மகள்.
திருமடைப் பள்ளி - கோயில் சமயலறை.
திருமதலை - முருகன். பா.மதலை
திருமந்திரம் - திருமூலர் செய்தருளியது. 3000மந்திரங்களைக் கொண்டது. சிறந்த ஞான நூல்
திருமறுமார்பன் - திருமால்
திருமால் - விட்டுனு.
திருமால் ஆயுதம் - சக்கரம், தனுசு, வாள், தண்டு, சங்கம் என 5.
திருமாலுக்கு எட்டான் - புவி முதல் வான் வரை வளர்ந்த திருமாலுக்கும்மேலாக உயர்ந்த சிவன்.
திருமாளிகைத் தேவர் - 9ஆம் திருமுறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
திருமுகம் - தெய்வச் சந்நிதி.
திருமுலை - அருட்பால் சுரக்கும் உறுப்பு. எ-டு சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம் (திப. 54).
திருமுறைகள் - நாயன்மார்கள் பாடிய திருப்பாடல்கள் (12)
1) முதல் ஏழு திருமுறைகள் - தேவாரம் 2) முதல் மூன்று திருஞானசம்பந்தர் பாடியது. 3) அடுத்த மூன்று திருநாவுக்கரசர் பாடியது. 4) 7ஆம் திருமுறை சுந்தரமூர்த்தி பாடியது 5) 8 ஆம் திருமுறை மணி வாசகர் அருளியது. 6) 9ஆம் திருமுறை திருவிசைப்பா, திருப் பல்லாண்டு 9 பேர் செய்தருளியது. 7) 10ஆம் திருமுறை திருமந்திரம் திருமூலர். 8)1ஆம் திருமுறை 40 நூல்கள் கொண்டது. 12 பேர் செய்தவை. 9) 12ஆம் திருமுறை திருத்தொண்டர் புராணம். சேக்கிழார் செய்தருளியது. திருமுறைகள் தோத்திரப் பாடல்கள். சமயக் கண்கள். சிவஞானபோதம் எழ அடிப்படையாய் இருந்தவை. இவை பத்தி நெறிபரப்புபவை.
திருமுறை பாடியவர்கள் - 1) நாயனார்கள்; அப்பர், சம்பந்தர், மணிவாசகர், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார். ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் 2) ஏனையோர்; திரு மாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், புருடோத்தம நம்பி, சேதிராயர் திருவாலவுடையார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரர் தேவ நாயனார்.
திருமுலர் - இடையர், ஊர் சாத்தனூர், சோழ நாடு. பசுக்களை மேய்த்து வந்த மூலன் இறந்ததும் அவன் உடலில் சென்று பசுக்களின் துயரை நீக்கியவர். மூலன் உடலிலேயே திருவாவடுதுறை திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடல் வீதம் 3000 திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்த சித்தர், கோயில் வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தசைவசமயம்,சமணர்கள் காலத்தில் தன் சிறப்பையும் முதன்மையையும் இழந்தது. இதனை மீண்டும் பெறத் திருமநதிரம்பெரிதும் உதவியது. கிரியை, சரியை, யோகம், ஞானம் என்னும் 4 பாதங்களையும் கூறுவது.இதுமுப்பொருள் பற்றியும்பேசுவது குருவழிபாடு (63).
திருமேனி - இறைவன்திருவுருவம் கோயிலில் எழுந்தருளியுள்ளது. அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வகைப்படும் இவற்றுள் அருவுருவம் கண்ணிற்குப் புலப்படாது.
அருவுருவம் கண்ணிற்குப் புலப்படும்.அப்பொழுது முகம் முதலிய உறுப்புகளின்றிப் பிழம்பு மட்டுமே தெரியும். இதுவே திருக்கோயில்களில்,காணப்படும் சிவலிங்கத் திரு மேனி. இது சதாசிவ மூர்த்தமாகும். உருவம், முகம், கை, கால் முதலிய உறுப்புகளுடன் காணப்படும். இந்நிலையி லுள்ள எல்லாம் மகேசுர மூர்த்தங்கள். இவற்றில் உருவத் திருமேனியை வழிபடுதல் சரியை. இலிங் கத்தை வழிபடுவது கிரியை. இதில் மனம் மொழி மெய் என்னும் மூன்றும் செயற்படும். சிவபெருமானது அருவத் திரு மேனியைதியானித்தல்யோகம் ஆகும். அகத்தே பாவிக்கப்படு வதால் அருவமாகும். திருக் கோயில் திருவுருவங்கள் நிலைத்திருப்பதால் அவை தாபரத்திருமேனிகள். அடியார்கள் எங்கும் இயங்குவதால் அவர்கள் மேனி சங்கமத் திருமேனி எனப்படும். இறைவன் திரு மேனி அத்துவாக்களாலும் பஞ்சமந்திரங்களாலும்ஆனது.
திருமேனி வழிபாடு - இறைவன் திருவுருவத்தை வணங்குதல் தில்லைக்கூத்தன் திருமேனியைக் கண்டு வணங்கிய சுந்தரர் நிலையைச் சேக்கிழார் கூறுவது திருமேனி வழிபாடே
திருவடி - இறைவன் தாள். திருவடி அடைதல்- பிரிப்பின்றி நிற்றலை அறிதல்.
திருவடித் தீக்கை - சீடன் தலையில் குருதம் காலடியை வைத்து அருள் புரிதல்.
திருவருட்பயன் - 14 மெய்கண்ட நூல்களுள் ஒன்று. இறைவன் இயல்புகளைக் குறள் வெண்பாக்களால் 10 அதிகாரங்களில் 100 பாடல்களில் கூறும் நூல். ஆசிரியர் உமாபதி சிவாச் சாரியார்
திருவருட்யா - இராமலிங்க அடிகள் இயற்றிய தோத்திரப் பாடல்கள். ஞான நெறி பரப்புவது. திருவமுது படையல் உணவு.
திருவள்ளுவர் - எக்காலத்துக் குரிய திருக்குறள் செய்தருளிய பேராசான். இது மெய்ப் பொருள் பற்றியும் நுணுக்கமாகப் பேசுவது. முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்து, மெய்யுணர்வு, துறவு, நிலையாமை, வினை, ஆணவம் (யான் எனது என்னும் செருக்கறுப்பான்) கன்மம், ஊழ், மாயை, உயிர் முதலியவை பற்றி நுட்பமாக உரைப்பது படித்து மகிழவதற்கும் பின்பற்றுவதற்குமுரியன அவை.
திருவாசகம் - மணிவாசகர் செய் தருளிய தோத்திர நூல் திருவா சகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது பொது மொழி. 49 ஒத்தினைக் கொண்டது.
திருவாதவூர் ஆளும்தேன் - மணிவாசகர். திருவாதவூரை ஆண்டருளிய தேன்போல மனத்தில் இனித்தலை உடையவர். சிவபேரின்பத்தைத் திருவாசகமாகப் பாடி மாயப் பிறப்பறுத்தவர். (திப. 73)
திருவாமுராளி - திருநாவுக்கரசர்
திருவாமுராளி செயல் - பா. திரு நாவுக்கரசர்செய்தஅற்புதங்கள்.
திருவாலவாயுடையார் - 11ஆம் திருமுறையில் திருமுகப் பாசுரம் பாடியவர்; 12 நூலாசிரியர்களில் ஒருவர்.
திருவாலியமுதனார் - 9ஆம் திருமுறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
திருவெழுத்து - திருவைந்தெழுத்து - நமசிவாய.
திருவேடம் - செறிதலினால் திரு வேடமும் சிவ உருவமே ஆகும்.
திரை - அலை, எ-டு. திரைகடல்
திரோதகம் - மறைத்தலைச் செய்வது மறைப்பி.
திரோதகம், ஞான - அறிவை மறைத்தல். இதனால் விளைவது அறியாமை.
திரோதனம் - 1) மூன்று பாசங்களில் ஒன்று. துணைக் காரணமாக இருப்பது 2) மறைத்தல்.
திரோதன சத்தி - சிவனின் 5 சத்திகளில் ஒன்று. ஆன்மாக்களுக்கு உலக பட்டறிவினைக் கொடுத்து உண்மையை மறைக்கும் ஆற்றல் உலகை வினைப் படுத்தும்பொழுது மூன்றாகும்; 1) விழைவாற்றல் 2) அறிவாற்றல் 3) வினையாற்றல் முதலாவது ஒரே நிலையாக இருப்பது. இரண்டாவதும் மூன்றாவதும் தனித்தும் மிக்கும் குறைந்தும் செயற்படுபவை.
திரோதாயி - மறைக்கும் பொருள்.
திரோபிப்பவர் - திரோபவம் பண்ணுபவர்.
தியானம் - தியானித்தல். ஞானநிலைக்கு வழி வகுப்பது.
திலம் - எள், எ-டு திலம் அளவே செய்திடினும்.
தில்லையான் - தில்லைவாழ் கூத்தன்.
திவ்வியம் - தெய்வத்தன்மை.
திவ்விய பிரபந்தம் - ஆழ்வார்களின் திருப்பாடல்கள். பக்தி நெறியை விளக்குபவை.
திறல் - வெற்றி,
திறம் - கொள்கை
தினைத்துணை - தினையளவு இது மிகச்சிறுமைக்குக் காட்டப்படும் பிரமாணம். இச்சொல்லாட்சி திருக்குறளில் அதிகமுள்ளது.
தீ.
தீக்கூறு - இதய வெப்பம், பசித்தீ, கண்வெப்பம், உடல்வெப்பம் பைத்தியம் என ஐந்து
தீக்கை,தீட்சை - பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது.
நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) முன்னிலையில் நின்று அருளுதல் - பிரளயாகலர் 3) படர்க்கையில் நின்று அருளுதல் - சகலர். முதல் இரண்டும் நேரே செய்யப்படுபவை.
நிராதர தீக்கை என்று பெயர் பெறும் மூன்றாவது மறைமுகமாகச்செய்வது. இதற்குச்சாதார தீக்கை என்று பெயர்.
- வகை - மூன்று
1) சமயத் தீக்கை; சரியை பொருட்டுச் செய்யப்படுவது. மந்திரங்களுக்குரியது கிடைப்பது உருத்திரபாதம்.
2) சிறப்புத் தீக்கை, கீரியை, யோகம், பூசை ஆகியவை பற்றிச் செய்யப்படுவது.
3) ஞான
தீக்கை வேறு பெயர் நிருவாண தீக்கை. கிடைப்பது மகேசுர பாதம். ஞானகுரு ஞானத்தை உணர்த்தும் முறை. இரண்டு; 1) தன்வயமாய்ச் செய்வது 2) தன்வயமில் லாமல் செய்வது.
தீக்கை ஏழு; - 1) திருநோக்கத் (அருள்) தீக்கை. 2) தொடு (பரிச) தீக்கை 3) மொழித்தட வாக்கு தீக்கை 4) பாவனைத் மாணத தீக்கை 5) நூல் வழிச் சாத்திர தீக்கை 6) யோக தீக்கை 7)அவுத்திரி தீக்கை சிறந்தது அவுத்திரி தீக்கையே. இது ஒமத்தால் செய்யப்படுவது. இது ஞானாவதி கிரியாவதி, நிர்ப்பீசம், சுபீசம் என 4 வகை
- விளக்கம்
1) ஞானாவதி; குண்டலம் முதலியவற்றை உள்ளத்தில் கற்பித்துச் செய்வது.
2) கிரியாவதி; புறத்தே குண்டலம் முதலியவற்றைக் கொண்டு செய்வது.
3) நிர்ப்பீசம்; சிவனோடு சாமியமான முத்தி கிடைக்கும். பாலர், வாலீசர், விருத்தர் பணிமொழியார், பல போகத்தவர், நோயுற்றோர் முதலியோருக்குச் செய்யப்படுவது. நைமிகத்தும் காமிகத்தும் அதிகாரம் கெடாது. வேறு பெயர் நிராதர தீக்கை, நிருவாண தீக்கை. நிருவாண தீக்கையம் அசத்திய நிருவாணம் (தேகமுத்தியைப் பயக்குவது) சத்திய திருவாணம் (உடன் முத்தியைப் பயக்குவது ) என இருவகை
4) சபீச தீக்கை; மலபரிபாகம், கற்றறிவு ஆகிய இரண்டும் உடைய சாதாகசாரியார்க்குச் செய்யப்படுவது. நித்திய நைமித்திக் காமியத்தில் நிரம்ப அதிகாரம் தருவது. வேறுபெயர் சாதார தீக்கை. இத்தீக்கை உடையோர் அதன் வேறு பாட்டால் சாதகர், ஆசாரியர் என இருவகைப் படுவர். கிடைப்பது சிவபதம்.
- கபீச தீக்கையின் வகை
1) உலோக தருமிணி; இல்லற முடையவருக்குச் செய்யப்படுவது. வேறு பெயர் பெளதிகத் தீக்கை.
2) சிவதருமிணி; துறவுடையோருக்குச் செய்யப்படுவது. வேறு நைட்டிகத்தீக்கை சமய விசேடம் நிருவாணம் பெயர் அபிடேகம் ஆகிய மூன்றும் நிர்ப்பீசம் சபீசம் ஆகிய இரண்டில் அடங்கும்.
சாம்பவதி தீக்கை; இது மற்றுமொரு தீக்கை. சிவசீவகர் களுக்குச் செய்யப்படுவது. இதில்கொள்ளவேண்டியவை; 1) இயம நியமங்கள் 2) சந்தியா வந்தனம் 3) சிவலிங்கபூசை 4) அக்கினி காரியங்கள் 3) குரு வசன பரிபாலனம் 6) மகேசுர பூசை தள்ள வேண்டியவை; சிவநிந்தை, சிவ சாத்திர நிந்தை, உயிர்க்கொலை முதலியவை.
பொதுப் பயன்; உயிர்கள் மலம் நீங்கிச் சிவதத்துவம் பெற உதவுவது. அல்லது அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானம் தருவது.
தீட்சதர் - சமயதிக்கை பெற்றவர். தில்லை மூவாயிரவர்.
தீதில் - தீமையிலா, எ-டு தீதில் திறம் பலவும்.
தீபம் - 1) திரி 2) விளக்கு, கோயில்களில் அலங்கார தீபாராதனை
யின் பொழுது காட்டப்படும் விளக்குகள் 17.
1)ஐந்தடுக்கு அலங்கார தீபம் 2)துபம் 3)மூன்றடுக்கு அலங் கார தீபம் 4)நாக தீபம் 5)இரிடப தீபம் 6)புருட தீபம் 7)நட்சத்திர தீபம் 8)யானை தீபம் 9)அன்ன தீபம் 10)குதிரை தீபம் 11)மயில் தீபம் 12)ஐந்து தட்டு பூர்ண கும்ப தீபம் 13)கோழி தீபம் 14)சிங்க தீபம் 15)கற்பூர ஆரத்தி 16)மேரு தீபம். 17 ஏழு கிளை கற்பூர ஆரத்தி.
இவை தொடர்பாகச் செய்யப்படும் உபசாரங்கள் ; குடை, கொடி, விசிறி, கண்ணாடி, சுருட்டி, அப்தாகிரி சாமரம், அர்க்கிய பாத்திரம் முதலியன.
தீய கருமச் சீனர் சாவகர் - தீவினையுள்ள சமணர்.
தீர்த்தம் - திருநீர், ஆகமம் தீர்த்தங்கள் 9 பா. 9தீர்த்தங்கள்.
தீர்விடம் - நீங்கும் நஞ்சு. எ-டு சானத்தின் தீர்விடம் போல் (சிபோ பா. 58)
தீர்வு - சிக்கலுக்குரிய முடிவு
தீவகம் - திரு விளக்கு. எ-டு தீவகமாம் எனஉருவாய் வந்த நாதன் (சி.பி. 8)
தீவி - பிருகுமா முனிவர் சிவ பத்தர். அவர் மனைவி தீவி. பிருகு இல்லாத சமயத்தில் அவளைப் புணர்ந்து மகிழத் திருமால் சென்றார். அவள் உடன்படவில்லை. அதற்காக அவள் உடம்பில் அழியாத் தீக்குறிகளைத் திருமால் இட்டுச் சென்றார். பிறகு அவள் உடம்பைப் பார்த்து "யான் சிவனல்லது வேறு ஒரு கடவுள் இல்லை என்னும் சிவபத்தன் என்பது மெய்யே ஆகில், இது செய்தவன் பத்துப் பிறப்புகளைப் பிறக்கக் கடவன்" என்று சாபமிட்டார். இது கண்டு திருமால் அஞ்சித் துயருற்று வீழ்ந்தார் (சிசிபப 299)
தீவிரம் - விரைவு.
தீவிர திரம் - மிக விரைவு.
து
துகள் - குற்றம்,ஆசு.
துகள் ஆறு - குற்ற நீக்கம்.
துகளறுபோதம் - சில ஒலைச் சுவடிகளில் உண்மை நெறி விளக்கம் காணப்படாது, துகளுபோதம் என்னும் நூல் காணப்படுவதால், அதனையும் மெய்கண்ட சாத்திரங்களுடன் சேர்த்துக் கொள்ளுதல் ஒழுங்காம் எனச் சைவசித் தாந்தமகாசமாஜபதிப்பில் அது சேர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆசிரியர் சிற்றம்பல அடிகள். சங்கற்ப நிராகணத்திற்குமுன் தோன்றியது.
துங்க விழி - துயகண் எ-டு துங்க விழிச்சோதி.
துஞ்சாது - துங்காது, விழிப்போடு.
துடக்குண்டு - கட்டுண்டு.
துட்டர் - பொல்லாதவர்.
துடி - 1) பாலை நிலப்பறை 2) கால தசப் பிரமாணத்தில் ஒன்று.
துணிதல் - அறிதற்பொருட்டு, துணிபு.
துணை - 1) துணைக் காரணம். பற்றுக்கோடு, மூன்று காரணங்களில் ஒன்று. பா. காரணம் 2) அளவு.
துத்தம் - 1) ஏழு வகைப் பண்களில் ஒன்று. வேதிப் பொருள். மயில் துத்தம்.
துத்தி - திருமண் காப்பு.
துதையினும் - கிடப்பினும், செறிந்திருப்பினும் எ-டு நவமணி ஒரு பால் துதையினும் (சநி6).
துமிதல் - கெடுதல்.
துமிய - கெட எ-டு மா இருள் துமிய.
துய்ய சிவஞானம் - துய சிவ அறிவு.
துயில் - கனவு.
துரந்து - ஒட்டு, எ-டு மன்னும் அரனே மலம் துரந்து (சிபோ பா 71)
துரியம் - பேருறக்கம். எ-டு துரியம் கடந்த சுடர்த் தோகையுடன் என்றும் (திப 69) காரிய அவத்தையில் 5இல் 4ஆம் நிலை.
துரியாதீதம் - உயிர்ப்படங்கல் - காரிய அவத்தை 5இல் இறுதி நிலை.
துருவம் - 7 வகைத் தாளங்களில் ஒன்று.
துலை - தராசு.
துவக்கு - மெய், தோல் ஐம்பொறிகளில் பரப்பால் பெரியது.
துவசம் - கொடி.
துவசன் - கொடியோன்.
துவம்பதம் - தீ என்னும் பொருளை உணர்த்தும் சொல்.
துவ்வாமை - நுகரமாட்டாமை.
துவிதம், துதைவம் - ஒன்றன்மை அல்லது வேற்றுமை. கடவுளும் உயிரும் வேறு என்பது.
துவித பாவனை - இரண்டாகப் பாவித்தல்.
துவிதாசத்திநிபாதம் - தீவிரம், தீவிந்திரம் என்னும் இருவகைச் சத்திநிதிநிபாதம். துளக்கம் - விளக்கம், எ-டு பளிங்கின் துளக்கம்.
துளக்கு - அசைவு.
துளக்கு அற - அசைவு நீங்க.
துளை 9 - கண்2 செவி 2 மூக்கு 2, வாய் 1, எருவாய்1, கருவாய்1.
துவர்ப்பு - பண்பு வேறுபாடு ஆறு, ஆயிம் இரதி, அரதி, சோகம், பயம், சுருச்சை.
துவளில் - துவளுதல்.
துழனி - ஆரவாரம்.
துறக்கம் - வீடுபேறு எ-டு அரும் துறக்கம்.
துறந்தார் - விட்டார். எ-டு துறந்தார் அவர்கள் என்று உந்தீ பற (திஉ 32)
துறவறம் - உலகப்பற்றைத் துறத்தல்.
துறவு - நீத்தல்.
துன்பு - துன்பம் ஒ. இன்பு.
துன்னும் - நெருங்கிய.
துன்றுதல் - பொருந்துதல்.
துன்று இரும்தார் - நெருங்கிய பெரிய மலை.
துன்னல் - செறிதல்.
துன்னிய - பொருந்திய, எ-டு துன்னிய மலங்கள் எல்லாம்.
துன்னுதோல் - உரிதோல்.
துனை - மிகுவிரைவு.
தூ
தூ - தூய தூரநிழல்.
தூக்கற்ற - நிலைபேறுள்ள எ-டு தூக்கற்ற சோதி.
தூங்குகை - துதித்தல்
தூது - 1) செய்தி, செல்லுகை எ-டு சித்தமெனும் தூதுனைப் போக்கி (திப38)2) ஒருவகைப்பிரபந்தம்
தூபம் - நறும்புகையும் விளக் கொளியுங் காட்டல். வழிபாட்டு முறைகளில் ஒன்று.
தூமம் - புகைஎடுதுமம் ஆரழல் அங்கிசீதம்
தூர் - வேர். எ-டு தூரும் தலையம் இலாத தோன்றலான்.
தூர்த்தர் - காமுகர், கொடியவர். துரியம் பா. துரியம்.
தூரும் தலையும் - அடியும் முடியும்.
தூலம் - பரு, பெரியது ஒ. சூக்குமம்.
தூல உடம்பு - பருவுடல், ஒ. ஒக்கும் உடம்பு.
தூல சகளத்துவம் - வித்தியா தத்துவம்.
தூல சித்து - பரு அறிவு.
தூல தேகான்மாவாதி - பரு உடம்பே ஆன்மா என்னும் கொள்கையினர்.
துலநிலை - பருநிலை.
துால பூதம் - பிருதிவி முதலிய ஐம்பூதம்.
துலாருந்ததி நியாயம் - மூன்று நியாயங்களில் ஒன்று. தூலமான பெரிய விண்மீனைக் காட்டிலும் சூக்குமமான அருந்ததி விண்மீனைக் காட்டுதல். இவ்வாறு கைப்பொருளை வீழ்த்தித் தெளிதலாகிய துலத்தில் ஐந்தவத்தை உண்டென்பது பறு காட்டிச் சாக்கிரத்தில் சாக்கிரமுதலிய ஐந்தவத்தையும் உண்டென்றுஉணர்த்துதல்.
தூளனம் - திருநீற்றை நீரிற் குழைக்காது நெற்றியில் பூசுதல்.
துளிதம் - திருநீறு.
தெ
தெண்டங்கி - சிவபூசையில் பது மத்து எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அக்கினித் தம்பமாகத்தியானித்து மந்திரத்தால் பூசித்தல்.
தெய்வம் - இறை. தெய்வம் தொழாள். (குறள் 55).
தெய்விகம் - ஆன்மிகம், தெய்வச்செயல்.
தெய்விக அதிசயம் - அதிசயம் 3இல் ஒன்று.
தெரிக்கல் - சொல்லுதல், எ-டு சைவத் திறத்தினைத் தெரிக்கல் உற்றாம்.
தெரிய அருவன் - அருவத் திருமேனியன்.
தெரிசனம் - தரிசனம், காட்சி.
தெரிதல் - உறுதி செய்தல்
தெரித்தல், தெரிப்பு, தெரித்து - சொல்லுகை ஆராய்வு எ-டு தெரித்த இது. (சிபி. 26)
தெரிபொருள் - ஆன்மா தெரிவு.
தெரியதெரியாதான் - ஆன்ம போதத்தால் அறியப்படாத சிவன்.
தெரிவு - ஆன்மா, எ-டு தெரிவைத் தெரியாமல்.
தெரிவு அரிய - தெரிதற்கு அரிய.
தெரிவை - பெண், திருவருள்.
தெருமரல் - அச்சம், குழப்பம்.
தெருமரல் உள்ளம் - குழம்பிய உள்ளம்.
தெருள் - தெளிவு எ-டு அறிவுத் தெருள்.
தெருளல் - தெளிதல்.
தெழித்திடல் - நீத்குதல், முதிர் வித்தல். எ-டு தெழித்திடல் மலங்கள் எல்லாம்.
தெளிதல் - உண்மை அறிவு 4இல் ஒன்று. கேட்-பின் ஆராய்ந்து உறுதி செய்யப்படுவது.
தெளியக் காண்டல்; தெளிவுப்புலன் - உறுதிச் காட்சி.
தெறிப்பு - குலைவு.
தென்பாண்டிமாதேவி - மதுரை மீனாட்சி, எ-டு சுரந்த தன முடையாள் தென்பாண்டி மாதேவி (திப 54).
தென்புகலி வேந்தன் - ஒங்கு புகழ் சீர்கழி அரசர் சம்பந்தர்.
தென்முகக் கடவுள் - தெட்சிணாமூர்த்தி.
தே
தேகம் - உடம்பு.
தேகாத்தும வாதம் - உடம்பே ஆன்மா என்னுங் கொள்தை சாருவாக சமயக் கொள்கை
தேகான்மாவாதி - உடம்பைத் தவிர உயிர் வேறில்லை. உடம்பு தான் உயிர் என்னும் கொள்கையினர்.
தேசு - இறை ஒளி, எ-டு தேசு அருவம் அருவுருவம் உருவமாகித் (சிசிபப3).
தேட்டு - தேடுதல்.
தேயம் - தேசு, உடம்பு.
தேயு - தீ. ஐம்பூதங்களில் ஒன்று. உருவத்தினின்றும் தோன்றுவது.
தேரர் - புத்த முனிவர். எ-டு தெளிந்திடும் தேரர் வீடு.
தேரர் மதம் - புத்த சமயம்.
தேரர் வீடு - புத்த முனிவர் இல்லம்.
தேரன் உரை - புத்த முனிவன் சொல்.
தேருங்கால் - ஆராயுங்கால்.
தேவர் - வானோர்.
தேவர்கோன் - இந்திரன்.
தேவர் மூவர் - மும்மூர்த்திகள்.
தேவன் - முருகன்.
தேவி சந்நிதி சிறப்புத்தலங்கள் - இவை 24
1) திரு ஆனைக்கா - அகிலாண்டேஸ்வரி.
2) காஞ்சிபுரம் - காமாட்சி.
3) திருவண்ணாமலை - உண்ணாமுலை அம்மை.
4) அவிநாசி - கருணாம்பிகை.
5) திரு ஆமாத்துர் - முத்தாம்பிகை.
6) திருஆரூர் - கமலாம்பிகை.
7) திரு ஆலவாய் - மீனாட்சி
8) திரு ஐயாறு - அறம் வளர்த்தநாயகி.
9) திருக்கடவூர் - அபிராமி
10)திரு ஒற்றியூர் - வடிவுடையம்மை.
11) திருக்கழுக்குன்றம் - திரிபுரசுந்தரி.
12)திருக்காளத்தி - ஞானப் பூங்கோதை அம்மை.
13)குடமுக்கு - மங்கள நாயகி.
14)குற்றாலம் - குழல்வாய்மொழி அம்மை.
15)திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழலி அம்மை.
16) திருநள்ளாறு - போக மார்த்த பூண்முலையம்மை.
17)நாகை - நீலாய நாட்சி அம்மை.
18)திருநெல்வேலி - காந்திமதி அம்மை.
19) திருப்பாதிரிப்புலியூர் - பெரிய நாயகி. 20) புள்ளிருக்குவேளுர் - தையல் நாயகி.
21) திருமறைக்காடு - யாழைப்பழித்த மொழியம்மை
22) திருமுல்லை வாயில் (வடக்கு) - கொடியிடை நாயகி.
23)திருமயிலை - கற்பகாம்பாள்.
24)சிதம்பரம் - சிவகாம சுந்திரி.
தேவாரம் - முதல் ஏழு திருமுறைகள் முதல் மூன்று திருஞான சம்பந்தராலும், 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசராலும் 7ஆம் திருமுறை சுந்தரராலும் அருளப்பெற்றவை.
தேவாரப் பண்கள் - இவை 28. இவற்றின் முதல் பெயரும் தற்பொழுதுள்ள பெயரும் பின்வருமாறு.
பண்
முதல் பெயர்
இந்நாள் பெயர்
1)
செவ்வழி
யதுகுலகாம்போதி
2)
தக்கராகம்
காம்போதி
3)
புற நீர்மை
பூபாளம்
4)
பஞ்சமம்
ஆகிரி
5)
நட்ட பாடை
நாட்டை
6)
ஆந்தாளிக்குறிஞ்சி
சாமா
7)
காந்தாரம்
நவரோஸ்
8)
பழம்பஞ்சுரம்
சங்கராபரணம்
9)
மேகராகக் குறிஞ்சி
நீலாம்பரி
10)
கொல்லிக்கௌவானம்
நவரோஸ்
11)
பழந்தக்கராகம்
ஆரபி
12)
குறிஞ்சி
குறிஞ்சி
13)
நட்டராகம்
பந்துவராளி
14)
வியாழக்குறிஞ்சி
சௌராஷ்டிரம்
15)
செந்துருத்தி
மத்யாவதி
16)
தக்கேசி
காம்போதி
17)
கொல்லி
நவரோஸ்
18)
இந்தளம்
நாதநாமக்கிரியை
19)
காந்தாரபஞ்சமம்
கேதாரகௌளம்
20)
கெளிசிகம்
பைரவி
21)
பியந்தைக்காந்தாரம்
நவரோஸ்
22)
சீகாமரம்
நாதநாமக்கிரியை
23)
சாதாரி
பந்துவராளி
24)
திருக்குறுந்தொகை
மாயாமாளை கௌளம்
25)
திருத்தாண்டகம்
அரிகாம்போதி
26)
திருநேரிசை
அரிகாம்போதி
27)
திருவிருத்தம்
பைரவி
28)
திருவிசைப்பா
ஆனந்தபைரவி
தேவு - கடவுள்.
தேறு - தெளிவாயாக
தேறும்- அறுதியாக
தேறிற்று - உண்டு என்று.
தேனஞ்சு- பஞ்சாமிர்தம்
தையலார் - பூவையர்.
தைவதம் - தெய்வம்.
தைவம் - தெய்வ உடைமை, அடிமை.
தைவரல் - தடவல்.
தைவிகம் - தேவர்களால் நிலை கொள்வது.
தொங்கல் - சத்திரசாமரங்கள், குடை முதலியன.
தொகுதல் - அடங்குதல்.
தொகுத்துணர்தல் -சுருக்கி விளக்குதல்.
தொகுப்புப் போலி - பகுதிக்குப பொருந்துவதை அவற்றின் சேர்க்கையான தொகுதிக்கும் பொருந்துமெனக் கொள்வது. எ-டு ஆடையிலுள்ள ஒவ்வொரு நூலும் எளிதில் அறுபடக்
கூடியதால், நூல்களின் சேர்க்கையான ஆடையும் அவ்வாறே எளிதில் அறுபடும் என்று கொள்ளுதல்,
தொகை - 1) தொகுதி, கூட்டம் 2) இது மந்திரம் 11, பதம் 81, வன்னம் 51, புவனம் 224, தத்துவம் 36, கலை 5
தொகை அடியார்கள் - தொகுதியாக உள்ளவர். இவர் ஒன்பதின்மர். 1) தில்லை வாழ் அந்தணர் 2) பொய்யடிமை இல்லாத புலவர் 3) பத்தராய்ப் பணிவார் 4)பரமனையே பாடுவார். 5) சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார் 6)திருவாரூர்ப் பிறந்தார் 7) முப்போதும் திருமேனி தீண்டுவார் 8)முழு நீறு பூசிய முனிவர் 9)அப்பாலுமடிச் சேர்ந்தார். பா. தனி அடியார்.
தொகை ஆறு - ஆறு கொண்டது.
தொகை உவமம் - உவமானம் உவமேயம் இரண்டிலும் பொது அறம் தொக்கு நிற்பது எ-டு 'எங்குமுளன் என்ற அளவை” என்னும் சிவஞானபோத வெண்பா 15 பொன் ஒளிபோல் ஈசன் என்னும் உவமானம் உவமேயம் இரண்டினும் அவ்விரண்டினுக்கும் பொதுத் தன்மையாகியது பிரிக்க முடியாமை தொக்கு நிற்பது.
தொகை நாலிடை - நான்கு கொண்டது.
தொகை நிலைச் சொல் - உருபு முதலியவை தொக்கு நிற்கும் சொல்.
தொகைப் பொருள் - பிண்டப் பொருள்.
தொடர்புக் கொள்கை - இணைப்புக் கொள்கை மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை.
தொடர்முறை - நூற்பாவில் எழுவாய் தொடர்படுத்திக் கூறப்படுவது பற்றிய ஒழுங்கு
தொடுதல் - தோண்டுதல்
தொண்டர் - அடியார்.
தொண்டு - அடியவர் பணி.
தொண்ணுற்று அறுவர் - உடலிலுள்ள தத்துவக்குப்பைகள் 96 (36+60).
தொத்து - மலப்பிணைப்பு
தொல்காப்பியம் - பண்டைத் தமிழ் இலக்கண நூல்களுக்கு முற்பட்ட முதல் தமிழ் இலக்கண நூல். ஆசிரியர் தொல்காப்பியர் இதில் இறையாகிய சிவம் பற்றிப் பேசப்படுகின்றது. கடவுள், அறிவன், முனைவன் என்னும் சொற்கள் கையாளப்படுகின்றன. கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (புறத் 85) 26 வினையின் நீங்கி விளங்கிய அறிவன் முனைவன் (மரபியல் 96) வினை பற்றியும் பேசப்படுகிறது. வினையே பூதம் (தொல், களவியல்; 21; 17)
தொல்காப்பியமும் சைவசித்தாந்தமும் - மறை ஞான தேசிகர் இதனை ஓர் அளவை நூலாகக் கொள்கின்றார். மொழி இலக்கணத்தைக் கொண்டு உலக இலக்கணத்தை அவர் தம் மதிநுட்பத்தால் தெளிவுபடுத்துவது கருத்திற்கு விருந்து இந்நூல் சித்தாந்தக் கருத்துகளுக்கும் இடமளிக்கிறது.
- இதில் எழுத்து, திணை, அகம், புறம் பற்றி வருவன எல்லாம் இக்கருத்துகளைக் கொண்டவை. எ-டு 1) எழுத்து வகை - முப்பொருள்கள்-2) பால்வரை தெய்வம் 3) கந்தழி.
வினையே செய்வது செயப்படுபொருளே
நிலனே காலம் கருவி என்றா
இன்னதற்கு இதுபயன் ஆகஎன்னும்
அன்னமரபின் இரண்டொடுந்தொகை
ஆயெட்டு என்ப தொழில்முதனிலையே
தொல்.சொல்.595.
- இந்நூற்பாவிற்கும் சைவ சித்தாந்தத்திற்குமுள்ள தொடர்பை மறைஞான தேசிகர் பின்வருமாறு:
- "வினை - ஆன்மாக்கள் செய்யுந்தொழில். ஆன்மா செய்யப்படுபொருள்-செய்பவன். செய்வது இருவினை. நிலனே அவ்வான்மாக்கள் இருக்கும் புவனம். காலம்-முக்காலங்களையும் உண்டாக்கும் காலத்தன்மை
- கருவி -36 தத்துவம்.
- இன்னதற்கு இருவினைப் பயன்களைப் புசிக்க வேண்டிய காரணம். இது பயன் சுகதுக்கங்களைப் புசித்துத் தொலைத்த பின் கன்ம க்ஷயம் பிறந்து மோட்சம் அடைக என அறிக”.
தொல் சுடர் மூவா - அநாதியான முதல்வன்.
தொல்லை - பழமை.
தொழில் - உயிர் அல்லது கருவியின் செயல். பா. ஆன்மாவின் தொழில்கள்.
தொழிற்கருவிகள் - பா.ஆன்ம தத்துவம்.
தொழிற்படும் சொல் - ஏவும் வாக்கியம்.
தொழிற்பொறிப் புலன்கள் - வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்
தொழுகை - வழிபாடு.
தொழுகை வலி - வழிபாட்டு வலிமை.
தொழும்பு - அடிமை
தொள்ளை - குற்றம். எ-டு தொள்ளைகொள் ஆகம் (சிசிபப178)
- 2) துளை தொள்ளை உடல்.
- 2) துளை தொள்ளை உடல்.
தொன்மை - அநாதி அன்றே.
தோ
தோகை - கூந்தல்.
தோகையார் - கூந்தல் கொண்ட பூவையர். இங்கு இவர்கள் பரவை நாய்ச்சியாரும் சங்கிலி நாய்ச்சியாரும் ஆவர்.
தோடம் -குற்றம்.
தோடு -காதணி, தோடுடைய செவியன். ஆரம்முடி தோடு நாண் (சிசிபப 258).
தோத்திரம் - சமயத்தின் ஒரு கண், இறைவன் புகழ்பாடுவது. தமிழில் உள்ளதுபோல் பக்திப் பாடல்கள் எந்த உலகமொழி இயக்கத்திலும் இல்லை என்று கூறலாம். இம்மை மறுமை வாழ்வைத் துய்க்க உதவுவது.
தோத்திரமும் சாத்திரமும் - இவை சைவாகமங்களுக்கே உரியவை.தோத்திரம் திருமுறையாகிய 12. சாத்திரம். 28.மெய்கண்ட நூல்கள்.14 பண்டார சாத்திரங்கள் 14.
தோல்வித்தானம் - அளவை வழக்குரையில் பேசத் தெரியாத நிலை. இது மயங்கிப் பேசு
163
- தலும் வாளா இருத்தலும் என இருவகை விரிக்கின் 22. சிவாக்கிரயோகியர் தம் உரையில் இது பற்றி விரிவாகக் குறிப்பிடுகின்றார்.
தோலாத- இல்லாத பேரிருள் தோலாத வானம்.
தோற்பாவைக் கூத்து - தோலால் ஆன பொம்மைக் கூத்து.
தோற்ற - இன்பதுன்பங்களைத் தோற்றுவிக்க.
தோற்றம் - :1) உண்டாதல், மலர்தல் இது கருத்தாவால் உண்டாவது, 2)சரம் அசரம் என இருவகை. 3)முட்டையிற் பிறப்பன, பையில் பிறப்பன (சராயுசம்) வேர்வையில் பிறப்பன (சுவேதசம்) மேற்பிளந்து பிறப்பன (உற்பிச்சம்).
தோற்றியதிதி- ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருள். தானே தோன்றியது அன்று. இங்கு உலகாயதர், பெளத்தர், ஆருகதர், பூர்வமீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், ஐரணிய கருப்பமதத்தினர் ஆகியோரது கொள்கைகள் மறுக்கப்பட்டுப் பதி உண்மை நிறுவப்படுகிறது.
தோற்றுவாய் - தொடக்கம்.
தோன்றிய - தன்வினைதானாக உண்டாகிய, ஒ. தோற்றிய.
ந
நக- மகிழ எ-டு நிற்கவிமாந்தர்
நகரி - நகரம், பட்டணம்.
நக்கீரதேவ நாயனார் - 11 ஆம் திருமுறையில் இவர் அருளிய 10 நூல்களாவன. - 1) கயிலை பாதி காளாத்தி பாதி அந்தாதி.
2) திருஈங்கோய் மலை எழுபது.
3) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
4) திருவெழு கூற்றிருக்கை
5) பெருந்தேவபாணி.
6) கோபப் பிரசாதம்.
7) கார்எட்டு.
8) போற்றித் திருக்கலிவெண்பா
9) திருமுருகாற்றுப்படை
10) திருக்கண்ணப்ப தேவர் திருமறம்.
நகுலம் - கீரிப்பிள்ளை.
நகுலீசர் - இறைவனின் 18 அவதாரங்களில் ஒன்று.
நகை - அவமதிப்பு. எ-டு நிறையினார் குணத்தோர்க் கெல்லாம் நகையினை நிறுத்தும் அன்றே (சிசிசுப5).
நங்கை - உமையவள், அணிகலன்.
நச்சினார் - தேவர்கள். எடு நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொடுத்தான் (சிபிப273).
நசித்தல் - கெடுதல்.
நசிப்பிலா - கேடிலாத, எ-டு நிகிப்பிலா மந்திரங்கள்.
நஞ்சின் கொலை தவிர்த்தல் - பா.திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்.(தி.ப71) நட்சத்திரம் விண்மீன் 27.
1)அசுவினி 2)பரணி 3)கார்த்திகை 4)உரோகணி 5)மிருக சீரிடம் 6)திருவாதிரை 7)புனர்பூசம் 8)பூசம் 9)ஆயிலியம் 10)மகம் 11)பூரம் 12)உத்திரம் 13)அத்தம் 14)சித்திரை 15)சுவாதி 16)விசாகம் 17)அனுடம் 18)கேட்டை 19)மூலம் 20)பூராடம் 21)உத்திராடம் 22)திருவோணம் 23)அவிட்டம் 24)சதயம் 25)பூரட்டாதி 26)உத்திரட்டாதி 27)இரேவதி.
164
நட்டார் - நண்பர்.
நட்டு - பொருந்தி
நடைப்பிணம் - பயனற்றவர். எ-டு பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின் நடைப் பிணங்கள் போல (சிசிசுப 186).
நடைமுறைக் கொள்கை - மெய்யறிவுக் கொள்கையில் ஒரு வகை. நடைமுறையை மையமாகக் கொண்டது.
நண் அனல் - நெருப்பின் நடுவே.
நண்ணல் - புகுதல்.
நண்ணார் - வழிபடாதார்.
நண்ணி - பொருந்தி எ-டு நாயகன் கழல்கள் நண்ணி (சிசிபப252)ஒ. மன்னி.
நண்ணினோர் - வழிபடுவோர்.
நண்ணுதல் - தலைப்படுதல்.
நண்பகல் - மதியம்.
நண்பலார் - நட்பு கொள்ளாதவர்.அகன்பதியரில் ஒருவர்.
நதி - கங்கை.
நத்தம் - நிறைதல்.
நந்தம் - தீய எ-டு நந்தம் மலங்கள் அற (திப 11).
நந்தி - திருநந்தி தேவர். அகச்சந்தான குரவர் நால்வரில் ஒருவர்.
நந்திகேசுவரர் - இலிங்க தாரண சந்திரிகா என்னும் சித்தாந்த நூல் எழுதியவர்.
நந்தி சிறப்புத்தலங்கள் - இவை
1) நந்தி சங்க மதலம் - கூடலையாற்றுார்.
2) நந்தி விலகி இருந்த தலங்கள் பட்டீச்சுரம், திருப்புன்கூர், திருப்பூந்துருத்தி.
3) நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் - திருவெண்பாக்கம்.
4) நந்திதேவர் நின்ற திருக்கோலம் - திருமாற்பேறு.
5) நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் - திருமழபாடி.
நந்தியம் பெருமான் - கோயிலில் தற்காப்பிற்காக இத்திருவுருவம் அமைந்துள்ளது.
நமஸ்காரம் - வணக்கம் நிலத்தில் நெடுங்கடையாக விழுந்து எழுதல்.
நமன் - எமன்.
நம்பன் - சிவன், நம்பிக்கைக்குரியவன்.
நம்பி - உமையவள் பாகன், சிவன்.
நம்பியாண்டார் நம்பிகள் - 11ஆம் திருமுறையில் இவர் செய்தருளிய 10 நூல்கள்;
1) திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை.
2) கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
3) திருத்தொண்டர் திருவந்தாதி
4) ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
5) ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
6) ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவை.
7) ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை.
8) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்.
9) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
10) திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை.
11) ஆம் திருமுறை 12 நூலாசிரியர்களில் ஒருவர்.
165
நயப்பு - விருப்பு, நாயகன் கண் நயப்பால் (சிசிசுப72)
நயம் - பயன், நியாயம்.
நயனம் - திருநோக்கம். தீக்கை வகைத் தொடர்பானது.
நரகம் - பொய்யர் வாழுமிடம் ஒ. சொர்க்கம்.
நரசிங்கம் - திருமால். எ-டு நர சிங்கம் வாமனனாய் வென்றி (சிசிபப266).
நரசிங்க முனையரைய நாயனார் - குறு நில மன்னர். திருநாவலூர் நடு நாடு. திருவாதிரை தோறும் அடியார்க்கு அமுது செய்வித்து 100 பொன்னும் கொடுத்து வந்தவர் சங்கம வழிபாடு (63).
நரர் - மனிதர். ஒ. தேவர்.
நரி உழுவை- நரியம் புலியும். எ-டு அரியினொடு (சிங்கத்தோடு) நரிஉழுவை ஆதியாக (சிசிபப 100).
நலன், நலம் - குணம் மேம்பாடு.
நல்லாய் - நல்லறிவுள்ள மாணவனே.
நல் உணர்வு - பேராற்றல்.
நல் மார்க்கம் நால்- 4 நல்ல சமய நெறிகள் பா. மார்க்கம்.
நல்ல சிவஞானம் - நலந்தரும் சிவ அறிவு.
'நல்ல சிவதன்மம் - நலந்தரும் சிவ தர்மம் .
நல்ல சிவயோகம் - நலந்தரும் சிவப்பயிற்சி.
நல்லார் - சிவஞானமே சிறந்த நலம். அந்நலத்தைப் பெற்றவர்கள் நல்லோர் எனப்படுவர்.
நல்வினை- நலம் பயக்கும் வினை. அதாவது புண்ணியம்.
நலிதல் - வருந்துதல்.
நவம்- ஒன்பது. நவம் தரும்பேதம்
நவக்கிரகம்- 9 கோள்கள் 1) ஆதித்தன் 2) சோழன் 3) அங்காரன் 4) புதன் 5) பிரகற்பதி 6) சுக்கிரன் 7) சனி 8) இராகு 9) கேது.
நவா- வாசி- திருவடி பெற எய்திய உயிர், குற்ற மற்றதாகிய மறைப்பாற்றல் எனப்படும் நகரத்துக்கும் சிறப்பாற்றலாகிய வகரத்துக்கும். நடுவில் நில்லாது, திருவருள் சிறப்பாற்றலாகிய சிகரத்துக்கும் நடுவில் நிற்பதே முறையாகும். இவை முறையே சிவயநம, சிவயசிவ ஆகும்.
நவையம் நலனும் - குற்றமும் குணமும் தீயதை நல்லதெனல்.
நள், நண்- நடுவே.
நள்ளார் - பகைவர்.
நறவு - தேன்.
நற்கணத்தார் - நல்ல தேவர் கூட்டம்.
நற்கல் - சூரிய காந்தக்கல்.
நற்சார்பு - உயர்ந்தோர்.
நற்றவர் - நல்ல தவம் உடையவர்.
நற்றானம் - நாலாந்தானமாகிய திரோதன ஆற்றல்.
நனவு - சாக்கிரம், விழிப்பு.
நன்மை- நல்லது, முத்தி, ஒ.தீமை.
நன்னுதல் - புருவந்டு.
நன்னெறி - நன்மைக்கு ஏதுவாகிய நெறி, எ-டு சன்மார்க்கம்நா
நாகர் - தேவர்.
நாகார்சுனர் - தம் செல்வாக்கையும் அறிவையும் பயன்படுத்திப் பெளத்தத்தைத் தீவிரமாகப் பரப்பியவர்.
நாகம்மா நதிமதியம் - நாகம் நல்ல பாம்பு மாநதி, கங்கைய மதிம் திங்கள்.
நாகமுழை - குகை.
நாச உற்பத்தி - நொடிதோறும் கன்மம் அழிந்து கொண்டே இருப்பினும், தோற்றமும் இடையறாது இருத்தலால் அது முடிவின்றி இருப்பதாய் உள்ளது. கன்மத்தின் இந்நிலையே நாச உற்பத்தி. அதாவது அழிவில் உண்டாவது.
நாடகம் - கூத்து.
நாடரிய - நாடுதற்கு அரிய.
நாடறிய - எல்லோரும் அறிய.
நாட்டு - உறுதி செய்.
நாட்டில்- கிரியை, சரியை செய்தல்.
நாடி - 1) கருதல் அளவையால் ஆராய்ந்து 2) இடை, பிங்கலை சுழுமுனை என மூன்று வகை.
நாண் - வடம், அணி வகை.
நாண்மீன் - விண்மீன். அசுவினி முதலிய 27.
நாத சம்பிரதாயம் - சிவனைப் போற்றும் மரபு.
நாதம் - சத்தி தத்துவத்திற்கு மேலுள்ள சிவதத்துவமும் அப்பொகுட்டிலுள்ள 51 விதைகளும். அதாவது, 36 ஆம் தத்துவம் ஆகும்.
நாத்தி - இன்மை
நாத்திகம்- கடவுள் இன்மை, கடவுள் இல்லை என்னுங் கொள்கை. ஒரு சமயம் ஒ. ஆத்திகம்
நாத்திக மதம் - தத்துவநூல் இதனை உலகாயதம், சாரு வாகம் (சாருவாகர் தழுவிய மதம்), என்றும் குறிப்பிடும். வேதத்தை வெறுப்பது. உலகம் ஒன்றே பொருள் என்றும் புலன் கடந்த பொருள் இல்லை என்றும் கூறும் தந்தை பெரியார் நாத்திகத்தைப் பரப்பியவர்.
நாதாந்தம் - ஞான நெறிகளில் ஒன்று. பஞ்ச கருத்தாவில் ஒருவன்.
நாதாந்த நாடகம் - தத்துவத் திருக்கூத்து.
நாதாந்தன் - சிவன்.
நாபி - உந்தி, கொப்பூழ்.
நாயகன் - சிவன்.
நாயகி- பார்வதி.
நாயன்மார்கள், நாயனார்கள்- சிவத் தொண்டர்கள் அதிபத்த நாயனார் முதல் விறல்மிண்ட நாயனார் வரை 63 பேர் இருண்டகாலத்தில் பக்தி நெறி பரப்பியவர்கள்.
நாயனார் தமைப் பூசித்தான்- ஒரு காலத்தில் திருமால் இராமனாய்த் தோன்றித் திருமகள் தன்னுடன் காட்டுக்குச் சென்றார். அப்பொழுது இராவணன் ஒரு பொய்மானை ஏவ அம்மான் பின்னால் இராமன் செல்லத் திருமகளை இராவணன் துக்கிச் சென்றான். இராமன் இலங்கைக்குத் தன் படையுடன் சென்று இராவணனைக் கொன்று திரும்பினான். அக்கொன்ற பாவம் நீங்கச் சேதுவிலே வந்து பரமேசுவரனைப் பூசை செய்து தீவினை நீக்கிக் கொண்டான் இராமன் (சிசிபப 285).
நாரணன் - திருமால். நாராசம் - இரும்புச் சலாகை
நாராயண ஐயர் சி வி.- தென்னிந்தியாவில் சைவ வரலாறும் அதன் தொடக்கமும் என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதியவர்.
நால் எழுத்து - ஓம் சிவாய,
நால்கோடு - நான்கு கொம்பு.
நால்வகை வாக்கு - பா. வாக்கு.
நால்வர் - சமயக்குரவர் நான்கு பேர். சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மணிவாசகர் சந்தான குரவர் நான்கு பேர். மெய்கண்டார், அருணந்திசிவாசாரியார் மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார்.
நால்வர் சென்ற வழி - தில்லை கோயிலுக்குள் சென்ற வழி. 1) திருஞான சம்பந்தர் தெற்குக் கோபுர வாயில் 2) திருநாவுக்கரசர் - மேற்குக் கோபுர வாயில், 3) சுந்தரமூர்த்தி சுவாமிகள் - வடக்குக் கோபுர வாயில் 4) மணிவாசகர் - கிழக்குக் கோபுர வாயில்.
நாலாய பூதம் - நான்காம் பூதமான வளி,
நாலாம் நிலை - நாற்படிகளில் இறுதி நிலையான ஞானம்.
நாலு திசை - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் 4 திசைகள்
நாலுபாத சைவம் - 16 சைவத்துள் ஒன்று.சரியை, கிரியை,யோகங்களில் ஆன்மா வீடு பெறும் என்று கூறுவது.
நாளம் - தண்டு, குழாய்.
நான் 27 - அசுவதி முதலியவை.
நானார் - எமன்.
நாவலர் பெருமான் - சுந்தர மூர்த்தி நாயனார் பண்டு ஒரு முதலை உண்ட மைந்தனை வெளிக் கொணர்ந்து உயிர்ப்பித்தார்.
நாற்காலி - நான்கு கால் விலங்கு. ஆடு மாடு. நான்குகால் இருக்கை.
நாற்கோணம் - 4 மூலைகளைக் கொண்ட கோணம் எ-டு பூமி நாற்கோண வடிவம்.
நாற்பகுப்பு - மாயையின் காரியத்தைத் தனு,கரணம்,புவனம், போகம் என நான்காகச் சைவ சித்தாந்தம் குறிப்பிடும்.
நாற்படிகள் - நான்கு பாதங்கள்.
நான் - நான் என்னும் அகங்காரம்
நான்கு சாதனங்கள் - சரியை, கிரியை,யோகம், ஞானம். பயன் பாசநீக்கமும் வீடுபேறும்
நான்கு பதங்கள் - நாற்படிகள் வீடுபேறு அடைய உதவுபவை.
இனம்-சரியை-கிரியை-யோகம்-ஞானம்
1.நெறி-தாசமார்க்கம்-சற்புத்திர மார்க்கம்-சகமார்க்கம்-சன்மார்க்கம்
அடிமை நெறி-மகன்மைநெறி-தோழமை நெறி-நன்னெறி
2.உவமை-அரும்பு-மலர்-காய்-கனி
3.குரவர்-அப்பர்-சம்பந்தர்-சுந்தரர்-மணிவாசகர்
4.தொழில்-புறத்தொழில்-அகமும் புறமும்-அகமும் புறமும்-அறிவு
தொழிற்படல்-தொழிற்படல்-தொழிற்படுதல்
நான்கு பூதம் - மண், புனல், அனல், கால். .
நான்கு பொருள் - சிவம், பதி,பசு, பாசம்.
நான்கு பேறு - அறம், பொருள், இன்பம், வீடு.
நான் மலத்தார் - ஆணவம், கன்மம், சுத்த மாயை, திரேதாயி என்னும் நான்கு மலமுடைய பிரளயாகலர்.
நான்மறை - 4.வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். பா. 22 வேதங்கள்.
நான்முகன் கிழத்தி - நாமகள்.
நிகண்டவாதி - சைனரில் ஒரு சாரர்.
நிகமனம் - முடிவு.
நிகழ்ச்சி, நிகழ்தல் - உண்டாதல்
நிகளம் - பந்தம், தளை, கட்டு, எடு நிகளமாம் ஆணவ மூலமலம் அகல (திப4).
நிக்ரகம் - ஒறுத்தல், குறை நிறுத்தல்.
நிக்ரதானம் - தோல்வித்தானம்.
நிசகுண சிவயோகி - சீகண்டர் இயற்றிய பிரமசூத்திர பாடியத்திற்கு உரை எழுதியவர்.
நிட்களம் - கலையற்றது, அருவமானது.
நிட்கள சிவம் - அருவமான சிவம்.
நிட்காமிய வினை - வேள்வி முதலிய வைதீகச் செயல்களில் பயன் கருதிச் செய்யும் செயல். ஞானம் வாயிலாக வீட்டைத் தருவது.
நிட்டை - தியானம். உண்மையறிவு 4இல் ஒன்று. நிட்டை மேவில் கிடைப்பது வீடு, சிந்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி உறுதியாக நிற்றல்.
நித்தம், நித்தலும் - நாள்தோறும்
நித்தப்பொருள் - என்றுமுள்ள பொருள்.
நித்தர் (ன்) - நிலைத்தவர், இறைவன் எ-டு நீடுபல காலங்கள் நித்திரராய் இருந்தும்.
நித்தலும் - நாள்தோறும்
நித்திரை - உறக்கம்.
நித்திய ஆனந்தம் - அழியாத இன்பம்.
நித்தியம் - நித்திய தத்துவம்
நிதியம் - பொருள்.
நிமலன் - தூய வடிவினன்.
நிமித்தம் - ஏதேனும் ஒன்றின் காரணம்.எ-டு நிமித்த காரணம் உலகிற்கு நிமித்த காரணன் கடவுள்.
நியதி - ஒழுங்கு மாயையில் தோன்றுவது. கன்மத்தை உண்டாக்குவது. (சிசிசுப 144) அந் தந்த உயிர் செய்த வினையை அது அதுவே நுகருமாறுவரையறுத்துச் செலுத்தும்.
நியதி தத்துவம் - சுத்த சுத்தா தத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கன்ம பலனை நுகரச் செய்வது.
நியமம் - உறுதி.
நியாயம் - வழக்குரை. மூன்று வகை 1) அனுவாதம் 2) அவ்வளவின் மகிழ்தல் 3) துலாருந்ததி
நிரஞ்சன் - கடவுள்.
நிரதிசய குணம்- மிக மேலாகிய குணம்.
நிரயம் - நரகம்
நிரயத் துன்பம் - நரகவேதனை.
நிரனிறை இடம் - முறைமையாக நிறுத்தப்பட்ட இடம்.
நிர்க்குண சைவம்- சைவம் 16இல் ஒன்று. குணமற்றவனாகச் சிவனைத் தியானிக்க வேண்டும் என்று கூறும் சமயம்.
நிர்தத்துவன் - தத்துவம் நீங்கியவன்,இறைவன்.
நிர்ப்பீசம் - நிர்மூலம்
நிர்ப்பீசதிக்கை - சமயநடைமுறைகளைச் செய்ய இயலாதவர்க்கு அவற்றைச் செய்வதற்கு மாறாகச் செய்யும் அவுத்திரி ஒருவகைத் தீக்கை.
நிர்மலன் - மலம் நீங்கிய இறைவன்.
நிர்வாணம்- பிறவாநெறி பிறந்தமேனி,
நிர்வாண மார்க்கம் -புத்த சமண சமயங்கள்.
நிர்வாணத்தீக்கை - முத்திப்பேற்றுத் தீக்கை, சிவதீக்கை.
ராகரணம - மறுபட, எ-டு சங் நி ம் - மறுப்பு எ-டு சங் கற்ப (கொள்கை) நிராகரணம் ராதர தீக்கை - தன்மை முன் நிராதர தீ தி (ԼՔ
னிலைகளில் இறைவன்தானே நேராக ஞானத்தை உணர்த் துதல். ராதர யோகம்-அன்ம வடிவம் நிராத ஆண்ம வடி நிராதரன் - ஆதாரம் ஏதும்
இல்லாத இறைவன். நிராதாரம் - இறையருள். நிராலம்பம்-ஆதாரம்இல்லாதது. நிருத்த நிலை - பற்றற்ற நிலை. நிருத்தம்-தாண்டவம்,வைதிகச்
சொல்லை ஆராய்வது. நிருத்தன் - சிவன், நிருவசனம் - பேசாமை,
நிருவிகற்பம் - 1) பொது நிருவா ணம் 2) ஒருபொருளை வேற் றுமை இல்லாது கூறுதல் ஒ. சிவிகற்பம். நிருவிகாரி - செயலற்று இருப்பவன்.
நிரீச்சுர சாங்கியம் - கடவுள் இல்லை என்னுங் கொள்கை. இது நிரீச்சுரவாதம் எனப்படும்
நிரீச்சுரவாதிகள் - இறைவன் முதல் ஆவதிற்கில்லை என்னுங் கொள்கையினர்.
நிருபித்தல் - மெய்ப்பித்தல். நிரோதன முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.
நிலக்கூறு - பிருதிவி, எலும்பு, தசை, மயிர்த்ோல், நரம்பு.
நிலை - ஆச்சிரமம், அவத்தை
நிலைக்களம் - அதிகரணம்.
நிலைத்திருக்கும் சைவம்- சைவம் 16இல் ஒன்று. இன்று நிலைத் திருப்பவை காச்சுமீரச் சைவம், சிவாத்துவைத் சைவம், வீர சைவம், சைவசித்தாந்தம்.
நிவிர்த்தி - நீக்குதல்.
நிவர்த்தி கலை- கலை 5இல் ஒன்று. ஆன்மாக்களைப் பாசத் தினின்றும் விடுவிப்பதாகிய கலை
நிவேத்தியம் - கடவுளுக்குப் படைக்கப்படும் அமுது.
நிறம் - வன்னம், இயல்பு:வெண் மை, கருமை, செம்மை, பொன் மை.பசுமை என 5. அறிவியல் 7 நிறங்களைக் கூறும். ஊதா, அவுரி,நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு.
நிற்குணன் - முக்குணங்களும் இல்லாதவனாகிய கடவுள்.
நிற்கை - நிற்றல். நிற்றல் - நிலைத்து வாழல்.
நின்பவனி - சிவன் வலம் வருகை.
நின்பவனி ஆதரித்தார் - ஆர்ப்பாட்டம் செய்து வந்த யானையைக் கொன்று ஐராவதத்தின் மேல் வலம் வந்த சிவனை எல்லோரும் தொழுது உளங்கொள வரவேற்றனர்.
நின் பிரமிதா - ஆன்ம அறிவு ஆகிய பிரமிதா.
நின்பெறல் - நின்னை அடைதல்.
நின்மல சாக்கிரம் - சுத்த அவத்தையின் முதல் நிலை. இதில் ஆன்மா சிவன் அருளால் சத்தாதிப் பொருள்களைச் சிவாகாரமாகவும் சிவ ஆனந்தமாகவும் நுகரும் நிலை.
நின்மல சுழுத்தி - சுத்த அவத்தையின் மூன்றாம் நிலை. ஆன்மா, ஞாதுரு, ஞானம், ளுேயம் என்னும் வேறுபட்ட அறிவுடன் அருள்மயமாகி இன்பத்தை நுகர்வது.
நின்மல சொப்பனம் - சுத்த அவத்தையின் இரண்டாம் நிலை. அருளிடத்தே ஆன்மா நின்று அதனை உணரும் நிலை.
நின்மல துரியம் - சுத்த அவத்தையின் 4 ஆம் நிலை, ஆன்மாவின் மலம் நீங்க, அதற்கு ஆனந்த ஒளி தோன்றும் நிலை.
நின்மல துரியாதீதம் - சுத்த அவத்தையின் 5ஆம் நிலையான இறுதிநிலை. ஞாதுரு, ஞேயம் என்னும் வேறுபாட்டையடைந்து, ஆன்மா ஆனந்தமயமாகி விளங்கும் நிலை.
நின்மலன் - மலமில்லா இறைவன்.
நின்றசீர் நெடுமாற நாயனார் - அரசர். மதுரை- பாண்டிநாடு.சோழ மன்னன் மகள் மங்கையற்கரசியாரை மனைவியாகப் பெற்றவர். இவர்தம் அமைச்சர் குலச்சிறையார். இவ்வரசர் சமணராய் இருந்து வெப்பு நோயால் துடித்தவர்.திருஞான சம்பந்தரால் இவர் வெப்பு நோய் நீங்கப் பெற்றவர். சைவம் தழைக்கச் செங்கோலோச்சியவர். குருவழிபாடு (63).
நின்றவர் - தாம் அடங்கி இறைவன் பின் நின்றவர்.
நின்று - வேறு நிற்றல்.
நினைப்பு - எண்ணம், அறிவு.
நினைப்பு மறப்பு - இலாடத்தே ஆன்மா எய்தும் ஐந்தவத்தை.
நீ
நீ - இறைவன் (முன்னிலைப் படுத்தல்) ஒதே.
நீக்கம் - பிரிவு.
நீக்கமின்றி - இரண்டற, சமவேதமாய்.
நீங்காமை - தாதான்மியம்.
நீத்தார் - சமணர்.
நீத்தோர் - நீங்கியவர். எ-டு அவ்வறிவினராய்
வாழ்ந்திருப்பவர் நீத்தோர்கள் (திப 32) நீதிமுறைமை, ஒழுக்கம், தருமம், அறம், எ-டு நீதியினில் நிற்பன நடப்பனவும் (சிசிபப 16)
நீதியார் - புத்தர்.
நீதியார் வேதநூல் - பிடக நூல்.
நீர்க்கூறு - அப்பு சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம்
நீர் மூன்று - மூன்று நீர்,கடல் நீர்.
நீர்மை - ஒளி, தன்மை, இயல்பு. எ-டு தெள்நீர்மையாய் இதனைச் செப்பு (திப 6)
171
நீலகண்டசிவாசாரியார் - வேதாந்த சூத்திரத்திற்குச் சிவாத்துவிதப் பக்கமாகப் பாடியம் செய்தவர். வேதாகம இதிகாச வல்லுநர். வேதமும் சிவாகமும் ஒன்றே என்றவர்.
சங்கராச்சாரியார் போல் நன்கு மதிக்கப்படுவர்.
நீலாதி - நீலம், எ-டு பொன்மை.நீலாதி,வன்னம் (சிசிசிப 88)
நீள்நாகர் - நெடுவானவர்.
நீள்வாசியான் - நெடும் போக்குடைய சிவன்.
நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய். திருநாவுக்கரசரைச் சமணர்கள் 7 நாட்கள் இவ்வறையில் பூட்டி வைத்திருந்தும் அவர் வேகாது பிழைத்தது இங்குக் குறிப்பிடப்படுகிறது. பா. சமணர் கொடுமைகள் (திப 71)
நு
நுகர்தல்' - துய்த்தல்.
நுகர்வினை - பிராரத்துவம்,ஊழ்.
நுங்க - நீங்க. எ-டு மலங்கள் எல்லாம் நுங்க நோக்கி ஒதுமிய.
நுட்பம் - நுண்மை.
நுண்ணுடம்பு - சூக்கும உடம்பு.
நுண்மை - சுத்தமாயை சார்ந்தது.
நுணுகுதல் - சிறுத்தல்.
நுதல் - புருவநடு, இலாபம்.
நுதலிய பொருள் - நூலில் கூறப்பட்ட பொருள்.
நுதலார் - அழகிய நெற்றியுள்ள அரிவையர்.
நுதலுதல் - கருதுதல்.
நுந்துழி - தூண்டுதல் விடுதல் எ-டு நுண்நூற் குடம்பை நுந்துழி போல் (சிநி4).
நுழைதல் - உட்செல்லுதல்.
நூ
நூக்கு - சென்று.
நூல் - பனுவல்.
நூல் ஆகமம் - வேதாகமம். இறைவன் அருளிச் செய்தது. இது கரும காண்டம், உபாசனா காண்டம், ஞான காண்டம் என மூவகை.
நூல் இரண்டு - வேதநூல், சைவ நூல்.
நூல் உபதேச முறை - திருவருள் வேண்டித் தம் குருவை வழித் துணையாகக் கொண்டு, நூல் நுவல் பொருளைக் கூறுவ தாகும். சிவப்பிரகாசத்தில் இறுதியில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல் கருத்து - நூல் செய்யும் ஆசிரியன் தான் யாக்கும் நூலின் கருத்து என்ன என்று கூறுதல். சிவப்பிரகாசத்தில் அது பிற புன்சமயக்கூற்றை மறுத்துச் சைவத்தின் உயர்வை நிலை நாட்டுதல் ஆகும்.
நூல் பிற - சமயநூல், பூருவபக்க நூல் முதலியவை.
நூல் மூன்று - முதல்நூல்; வேதம், சிவஞானபோதம். வழி நூல் : உபாகமம், சிவஞானசித்தி யார் சார்பு நூல் வேதாங்கம் சிவப்பிரகாசம்.
நூற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள்.
நூறு - சுண்ணாம்பு.
நூனங்கள் - பாவ புண்ணியங்கள்.
172
நூனாதிகம்- குறைகூறும் இயல்பு. எ-டு அரசன் கன்மம் நூனாதிகம் அற்று (சிசிபப 134).
நூன்முகம் - நூல் முகவுரை.
நெ
நெஞ்சுவிடுதூது- 14 மெய்கண்ட நூல்களில் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். 129 கண்ணிகளால் அமைந்த கலி வெண்பாவால் அமைந்தது. இதில் இவர் தம் ஞான குருவாகிய மறைஞான சம்பந்தரிடம் சென்று தம் நிலை உணர்த்தித் திருக்கொன்றை மாலை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் தூது விடுக்கின்றார். பொதுவாகத் தூது, தமிழ் மொழிக்கு உரியவையான 96 பிரபந்த வகைகளுள் ஒன்று.
நெடுமுரசோன் - சிவன், போராலியே பெரிய பேரிகை ஒலியாய் உடையவன்.
நெறி - வழி, ஒழுக்கம்,விதி, சமயம். எ-டு நன்னெறி, நெறிமுறை.
நெறி அறுவகை- அறுவகைச் சமயங்கள் எ-டு நெறி அறுவகையும் மேலோடு, கீழடங்க (இசிசு 297).
நெறி நிலம் நான்கு- மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி.
நெறியிலா அறங்கள்- ஐராதமவாதம், அகத்திருவாதம் முதலியவை.
நே
நேச நாயனார்- சாலியார். காம்பிலி நகரம்- பெல்லாரி மாவட்டம். மனத்தால் சிவனை நினைந்து வாக்கால் திருவைந்தெழுத்து ஒதியும் மெய்யால் அடியவருக்குக் கோவணமும் நீளுடையும் நெய்து கொடுத்து வந்தவர். சங்கம் வழிபாடு (63).
நேசத்தார் - அன்பர்.
நேசம் - பத்தி.
நேயம், நேசம்- அன்பு எ-டு மனித நேயம்.
நேயம் மலிந்தவர் வேடம்- அன்பு மிக்க அடியார் சிவவேடம். எ-டு மால்அற நேய(ம்) மலிந்தவர் வேடமும் (சிபோதுபா 12).
நேர் - ஒப்ப, வழிபாடு, அருட்பார்வை, பூசனை செய்.
நேர்த்தி முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.
நேர் நிற்றல் - ஒப்ப நிற்றல்.
நேரியன்- ஒப்பற்றவன். எ-டு நேரி யனாய்ப்பரியனுமாய் உயிர்க்கு உயிராய் எங்கும் (சிசிசுப280).
நேரிழையாள் - ஆரணங்கு.
நை
நைட்டிக தீக்கை - சபீச தீக்கை வகை
நைத்திகம், நைத்தியம்- நித்திய தத்துவம்.
நைமித்திகம்- ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்புப் பூசைகள.
நைமித்திய காமியம் - சிறப்புப் பொருள்.
நையாயிகம்- கெளதமர் இயற்றிய நியாய நூல் கொள்கை. ஒருமதம். நையாயிகர்- உலகம் அறியப்படுவது போல் முதல்வனும் அறியப்படும் பொருள் என்னும் கொள்கையினர்.
நையும் இயல்- நைக்கும் தன்மை.
நொ
நொடித்தல் - அழித்தல்.
நொடியாது நொடித்து- அழியாது அழித்து.
நோ
நோக்கமுடைமை - மேலை நாட்டு மெய்யுணர்வியலில் இறை உண்மைக்குத் தரப்பெறும் வழக்குரைகளில் இது ஒன்று. வேறு பெயர் வடிவமைப்பு. இறைவன் படைப்பு நோக்க முடையது. ஆதலால், இயைபுகள் அல்லது பொருத் தங்களை அதில் நாம் காணலாம்.
நோக்கிற்றை - நோக்கியதை அறிந்து.
நோக்கு- பார்வை, அருள். எ-டு சிங்க நோக்கு அருள்நோக்கு.
நோக்குதல்- காத்தல், பார்த்தல்.
நோன்தாள்- இறைவன் திருவடி.
நோன்பு - விரதம், தூய்மை நோக்கி மேற்கொள்ளப்படுவது.
நோன்மை- பொறுத்தல் வலிமை, எ-டு அருந்தவர் நோன்மை.
நோன்றல் - பொறுத்தல்.
ப
பக்கம்- துணிபொருள் இருக்குமிடம்.
பக்கப்போலி- 1) பிரத்தியக்க விருத்தம், 2)அனுமான விருத்தம் 3) சுவசன விருத்தம் 4) உலோக விருத்தம் 5) அப்பிரசத்தி விசேடணம் 6) அப்பிரசித்த விசேடியம் 7) அப்பிரசத்த உபயம் 8) அப்பிரசத்த சம்பந்தம் எனப் பலவகை. அளவை இயலில் இது பக்கத்தின் ஆபாசம் எனப் படும். பா. போலி.
பக்கிசைத்தல்- பிரிந்து இசைத்தல்.
பக்குவம் - முதிர்ச்சி.
பக்தி - இறைப்பற்று.
பக்தி மார்க்கம்- இறைப்பற்று நெறி. எ-டு நன்மார்க்கம் நான்கு. பொதுவாகச்சைவமும் வைணவமும் பத்தியைப் பரப்புபவை.
பகுப்பு - தனு, கரணம், புவனம், போகம் என உலகைநான்காகப் பிரித்துக் காட்டுதல் சைவ சித்தாந்த முறை. தனுஉடம்பு கரணம்கருவி புறக் கருவி. ஐம் பொறிகள். அகக்கருவி-மனம் புவனம் வாழும் உலகம்போகம் -நுகர் பொருள். சீவான்மா, பரமான்மா என ஆன்மா இருவகை.
பகாது - பிரியாது எ-டு பகாச்சொல்.
பங்கம் - பழுது, பங்கு.
பங்கயம்- தாமரை (பங்கஜம். பங்கம்-சேறு. ஐம்-தோன்றுதல்)
பங்கன் - கடவுள்.
பங்கி - மயிர்வகை ஆண்முடி எ-டு பங்கியாது உயிர் தானும் (சிசி பட 52).
பங்கியாது - அழியாது.
பசாசர் - கொடியவர்.
பசாசம் - இரும்பு. எ-டு காந்தங்கண்ட பசாசத் தவையே (சிபோது பா 5).
பசிப்புளன் - பசியுள்ளவன்.
பசு - உயிர். பாசத்தால் கட்டப்பட்டது. சைவசித்தாந்தம் ஏற்கும் முப்பொருள்களில் இரண்டாவது. இதுபற்றிச் சிவஞான போதமும் சித்தியாரும் பேசுகின்றன. பசு உண்டு என்று நிறுவி, அதன் தன்மை, பன்மை ஆகியவை பற்றிச் சைவசித்தாந்தம் எடுத்துரைக்கிறது. பதியும் பாசமும் வீட்டுநிலையில் தம் பெயர் நீங்கி முறையே முத்தன் எனவும் அருள் எனவும் அறியப்பெறும் என்று சிவ ஞானமுனிவர் கூறுகின்றார். பார்க்க: பதி, பாசம்.
பசுஞானம் - உயிர் அறிவு, காட்டும் ஒளியாகிய விளக்கொளி போன்றது.
பசுத்துவம் - பசுதத்துவம் பாசத்தால் உயிர் கண்டுகொண் டிருக்கும் தன்மை.
பசுந்தேன் ஞானம்- பசிய இறையறிவு.
பசுரீநீகாரம் - பசுவின் அறிவை மூடல்.
பசு புண்ணியம் - உயிர்களை நோக்கிச்செய்யப்படும் நல்வினை.
பசுபதி - இறைவன், சிவன்.
பசுப்பான் - ஒருவன் அடையும் இன்பம்.
பசுபோகம் - ஆன்ம நுகர்ச்சி, சமயப் பொருள் எட்டில் ஒன்று, பா. சமய பதார்த்தம்.
பசுபோதம்- ஆன்ம அறிவு, அகங் காரமமகாரங்கள், பா.தற் போதம்.
பசுவர்க்கம் - உயிர்வர்க்கம்.
பசுவர்க்கம் மூன்று- விஞ்ஞானகலர், பிரளாயகலர், சகலர்
பசுவின் மலம் - உயிர்மலம்.
பஞ்சு- ஐந்து.
பஞ்ச அங்கநமக்காரம் - முழங் கால்கள், கைகள், தலை ஆகிய ஐந்து உறுப்புகளும் நிலந் தோய வணங்குதல்.
பஞ்ச அமிர்தம்- வாழைப்பழம், தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்னும் இனிய பண்டங்கள் சேர்ந்தது. அபிடேகத்திற் குரியது.
பஞ்ச ஆதனம்- ஐந்திருக்கை கூர்மாசனம், அநந்தாசனம், சிங்காசனம், பத்மாசனம், யோகாசனம்.
பஞ்ச அவத்தை- ஐந்து அவத்தை.
பஞ்ச உலோகம்- பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
பஞ்சகஞ்சுகம் - ஐந்து சட்டை காலம், நியதி, கலை, வித்தை, அராகம் பா. அந்தக் கரணம்.
பஞ்சகம் - ஐந்தின் கூட்டம்.
பஞ்சகந்தம் - உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்னும் ஐந்து.
பஞ்சகருத்தாக்கள்- பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் 5 கருத்தாக்கள். பரசிவன் உருவங்கள்.
பஞ்சகலைகள்- ஐந்துகலைகள். சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அப்பகுதிகள் கலை எனப்படும். அவையாவன; நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை ஒவ்வொரு கலையிலும் படைப்பவன், காப்பவன் என்பவரோடு கூடஅழிப்பவனாகிய உருத்திரனும் இருப்பான். கீழக்கீழ் உள்ளவை மேன்மேல் உள்ளவரால் படைக்கவும் அழிக்கவும்படும். இக்கலைகள் உள்ள உலகங்களாகக் கீழிருந்து ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொன்றாக அழிந்து வரும். எல்லாவற்றிற்கும் மேலேயுள்ள சாந்திய தீத கலையில் உள்ளது அழிவதே முற்றழிவு. இது உருவ சங்காரம் மகாசங்காரம் எனப்படும். இதனைச் செய்பவன் மகாசங்கரன். உலகத்தை மாயையினின்றும் தோற்றுவித்து ஒடுக்குபவனும் அவனே. அயன் படைத்தலைச் செய்பவன் திருமால் நிலைபெறச் செய்பவன், அரன் அழிப்பவன். முற்றழிப்புக் காலத்தில் அரனே உலகைத் தன்னுள் ஒடுக்குகிறான். இக்காலத்தில் அயனும் மாலும் தத்தம் நிலையிலிருந்தால், முற்றழிவு ஏற்படாது. இவர்கள் இருவரும் அரனின் ஏவலால் தத்தம் தொழிலைச் செய்கின்றனர்.
பஞ்ச கலைப் பிரணவம்- ஒம் என்னும் பிரணவத்திற்குப் பல்வேறு கலைகள் (கூறுகள்) உண்டு. இவற்றில் பஞ்சகலைப் பிரணவமும் ஒன்று. இது 5 கூறுகளைக் கொண்டது. இவை அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என்னும் ஐந்து இவ்வைந்தும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம், ஒம் என்னும் சமட்டிப் பிரணவமே அதோமுகம்.
பஞ்சகவ்வியம்- பா. ஆனைந்து.
பஞ்ச கிருத்தியம்- படைப்பு, திதி, அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள். இவை ஆன்மாக்கள் மும்மலங்கனை ஒழித்து, வீடுபேறு அடையப் பயன்படுபவை.
பஞ்ச கிலேசம்- ஐங்குற்றம், பிர கிருதியின் காரியமாக ஏற்படும் 5 குற்றங்கள். அவையாவன; அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம். இதனைத் திருவள்ளுவர் காமம் எனக் கூறுவார்.
விளக்கம்
1) அவிச்சை; நல்லதைத் தீயது என்றும் தீயதை நல்லது என்றும் இது மதிப்பது.
2) அகங்காரம்; செருக்கு.
3) அவா, இன்றியமையாததாய் உள்ளதைப் பெற நினைப்பது இது
4) ஆசை. தான் பெற்றுள்ள பொருள்களின் மேலுள்ள விருப்பத்தால் அதை விட மறுப்பது,இது
5)கோபம்; சினம். வள்ளுவர் வகைப்படி அவாவும் ஆசையும் சேர்ந்தது காமம் அவிச்சையும் அகங்காரமும் சேர்ந்தது மயக்கம்.
பஞ்சகோசம்- கோசம் - உடம்பு. ஐந்து உடம்பு. அவையாவன; அன்னமயகோசம் (துலசரீரம்பருவுடல்), பிராணமயகோசம் (உயிர்வளி உடம்பு), மனோமய கோசம் (குணஉடம்பு), விஞ்ஞானமயகோசம் (அறிவுடம்பு), ஆனந்தமயகோசம் (இன்ப உடம்பு)
அன்னமயகோசம்; பூதம் 5, ஐம்பொறி 5, தொழிற்பொறி 5 ஆக 15 கொண்டது. பிராணமயகோசம்; ஐம்புலன், சித்தம் நீங்கிய அகக்கருவி ஆகியவற்றைக் கொண்டது. மனோமயகோசம்- பிரகிரு தியே சித்தாய் நிற்பது. விஞ்ஞானமயகோசம், மாயை ஒழிந்த வித்தியா தத்துவங் களைக் கொண்டது. ஆனந்தமயகோசம், இது மாயையை மட்டும் கொண்டது.
பஞ்ச சத்தி- ஐந்தாற்றல், அவையாவன, பராசத்தி, திரோதன சத்தி, இச்சாசத்தி, ஞான சத்தி, கிரியாசத்தி,
பஞ்ச சபை- ஐந்தவை. 1) திருவாலங்காடு இரத்தின சபை 2) சிதம்பரம் கனகசபை 3) மதுரை- வெள்ளியம்பலம் 4) திருநெல்வேலி தாமிர சாலை 5) திருக்குற்றாலம் சித்திரசாலை.
பஞ்ச சமிதி- ஐந்து நியமங்கள். அவையாவன. ஆகாரசுத்தி, திருப்தி, தவம் அத்தியயனம், தெய்வபத்தி.
பஞ்ச சாதாக்கியம்- ஐவகைச்சிவ பேதங்கள்; சிவசாதாக்கியம் அமூர்த்தி சாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக்கியம்.
பஞ்சசீலம்- 1) இன்னா செய்யாமை 2) உண்மை 3) ஒதுநிலை 4) சுருக்கம் 5) மாணி.
பஞ்சசுத்தி- மானபூசையில் பயன்படும் 5 சுத்திகள்; பூதகத்தி, ஆன்ம கத்தி, திரவியசுத்தி மந்திரகத்தி, இலிங்ககத்தி. காமம், கொலை, கள், பொய், களவு.
பஞ்ச திராவிடம்- திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம்.
பஞ்ச பல்லவம்- பூசைக்குரிய ஐம்பொருள்கள். ஆத்தி, மா, முட்கிளுவை, முல்லை, வில்வம் என்னும் 5 தளிர்கள்.
பஞ்ச பிரமம்- 1) ஈசானம், தற்புருடம், அகோரம், வாம தேவம், சத்யோசாதம் என்னும் சிவனின் 5 முகங்கள். 2) சிவனின் 5 திருமுகங்கள் பற்றிய மந்திரங்கள்.
பஞ்ச புராணம்- தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகியவற்றுள் ஒவ்வொரு பாடலாக நாள்தோறும் வழிபாட்டில் ஆத்மார்த்த பூசையிலும் பரமார்த்த பூசையிலும் 5 திருப் பாடல்களைப் பத்தியுடன் வழிபடும் மரபு.
பஞ்ச பூதத் தலங்கள்- ஐம்பூத இடங்கள் 1) திருஆரூர்- நிலம் 2) திருஆனைக்கா- நீர் 3) திருவண்ணாமலை- தீ 4) திருக்காளத்தி- வளி 5) சிதம்பரம்-விசும்பு.
பஞ்சமந்திரம்- ஐந்து மந்திரம். தலை, முகம், நெஞ்சு, திருவடி, மறைவிடம் என்றும் 5 மறை மொழிகள் பா. அத்துவாக்கள்.
பஞ்சமலம்- ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம்.
பஞ்ச முத்திரை- திருநீறு, உருத்திராக்கம், பூணுரல் உந்தரீயம், உட்டிணிடம் என ஆசாரியக் குரிய 5 அடையாளங்கள்.
பஞ்சமூர்த்தி- 1) சிவனுக்குரிய சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன் என்னும் 5 மூர்த்தங்கள் 2) விநாயகன், முருகன், சிவன், உமை, சண்டேசுவரன் என்னும் ஐவகைக் கடவுளர்.
பஞ்சயாகம்- கர்மயாகம், செபயாகம், ஞானயாகம், தபோயாகம், தியானயாகம் என்னும் ஐவகை வழிபாட்டுமுறை பஞ்சமூலம்- செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு என 5.
பஞ்சலிங்கம்- பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம். இவை ஐந்தனுக்கள்.
பஞ்சாக்கரம் - 1) தூலபஞ்சாக்கரம் நகரத்தை முதலாக உடையது. 2) சூக்கும பஞ்சாக்கரம். நகரமகரங்கள் இரண்டுமின்றி ஏனைய மூன்றெழுத்தும் முன்னும் பின்னுமாக மாறுதலால் ஐந்து எழுத்து ஆகிச்சிகரத்தை முதலாக உடையது. வேறு பெயர் காரண பஞ்சாக்கரம். ஸ்ரீபஞ்சாக்கரம் என்பது முத்தி பஞ்சாக்கரம்.
பஞ்சாக்கரம், முத்தி- பதி ஞானத்தால் பதியை அறிவினுள் கண்ட பின், அக்காட்சி மலத்தின் வாசனை காரணமாக முன்போல மறையாமல் எப்பொழுதும் நிலைத்து நிற்பது கருதிச்சொல்லப்படும் பஞ்சாக்கரம் குரு மரபுகளில் இது ஆங்காங்கு ஒவ்வொரு வகையாக உபதேசிக்கப்படுவது.
பஞ்சாக்கினி வித்தை- மறு பிறப்பு உண்டாகும் முறை. உயிரானது முறையே சொர்க்கம், முகில் மண்டபம், நிலம், தந்தை, தாய் என்னும் 5 இடங்களில் தங்காதுவந்து பிறக்கும்தன்மை.
பஞ்சாசாரம்- ஐவகை ஒழுக்கம். இலிங்கசாரம், சதாசாரம், சிவாசாரம், பிருத்யாசாரம், கணா சாரம்.
பஞ்சாயதனபூசை - கணபதி, திருமால், சிவன், பார்வதி கதிரவன் ஆகிய ஐந்து கடவுளர்களுக்கும் வீட்டில் செய்யும் அன்றாட வழிபாடு.
பஞ்ச வாசகம்- இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
படர்தல்- செல்லுதல், பரத்தல்.
படம் - சட்டை.
படலம்- உறை, கூடுபோர்வை எ-டு படலம் நீங்குதல் கடன் ஆகும்.
பட்டாசாரியார்- மீமாஞ்சகருள் ஒரு சாரர். நிட்காமிய வினை வீடு தருமாதலால் சரியை முதலிய சிவபுண்ணியங்கள் ஞானத்தை நல்கும் எனல் தேவை இல்லை என்பது இவர்கள் கருத்து. இக்கூற்றைச் சிவ ஞானபோதம் மறுக்கும்.
பட்டாசாரியர் மதம்- மீமாஞ்சகர் சமயம்.
பட்டோலை- ஆணை ஒலை.
பட்டோலை தீட்டும்- அவரவர் கணக்குப் பிள்ளையாய் இருந்து பட்டோலை எழுதி ஒப்பு விக்கும் சிவன்.
படிகம்- பளிங்கு. எ-டு பன்னிறம் காட்டும் படிகம்.
படிகள் - பாதங்கள் நான்கு.
பட்டினத்துப் பிள்ளையார்- 11 ஆம் திருமுறை ஆசிரியர்கள் 12 பேரில் ஒருவர். இவர் அருளிய நூல்கள்.
1) கோயில் நான்மணிமாலை.
2) திருக்கழுமல மும்மணிக்கோவை.
3) திருவிடை மருதூர் மும்மணிக்கோவை.
4) திருவேகம்பமுடையார்திருவந்தாதி.
5) திருவொற்றியூர்ஒருபாஒருபஃது.
படியில் அருத்தி செய்த அன்பர்- சரியை கிரியை, யோகம் செய்பவர். படியின்மிசை - நாட்டின் எல்லாப் பக்கங்களிலும் திரிந்து.
படுத்தலோசை - மெல்லக் கூறுதல்.
படைப்பு வரலாறு - 1) சுத்த மாயை. இதிலிருந்து வாக்கு 4, சுத்தத்தத்துவம் 7 ஆகியவை தோன்றும். 2) அசுத்த மாயை; இதிலிருந்து அசுத்த தத்துவம் தோன்றும். 3) பிர கிருதிமாயை; இதிலிருந்து ஆன்மதத்துவம் 24 தோன்றும்
பண்- 1) குறிஞ்சி, பாலை, மருதம், செவ்வழி. 2) கதி.
பண்அமர- பண்ணுதல் அமரும் படி எ-டு பண் அமர மாச்செலுத்தும் பாகரினும் (சிபோபா 66)
பண்டாரசாத்திரங்கள் - இவை 14 மெய்யறிவு நூல்கள்.
1)தசகாரியம் 2) சன்மார்க்க சித்தியார் 3) சிவாக்கிரமத் தெளிவு 4) சித்தாந்தப் பஃறொடை 5) சித்தாந்த சிகாமணி 6) உபாய நிட்டை வெண்பா 7) உபதேச வெண்பா 8) நிட்டை விளக்கம் 9) அதிசயமாலை 10) நமச்சிவாயம் 11) தசகாரிய மாலை 12) உபதேச பஃறொடை 13) தசகாரியம் 14) பஞ்சாக்கரப் பஃறொடை. இவற்றில் 1-10 நூல்களின் ஆசிரியர் அம்பலவாண தேசிகர். 11-12 நூல்களின் ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி தேசிகர். 13ஆம் நூல் சுவாமிநாத தேசிகர். 14ஆம் நூல் பின்வேலப்ப தேசிகர். இவை மெய்கண்ட நூல்கள் போல் அவ்வளவு புகழ்வாய்ந்தவை அல்ல.
பண்டாரி - பண்டாரம். எ-டு பண்டாரி ஆனபடிபோற்றி (போப 20).
பண்டிதாராத்யர் - வீர சைவ ஆசாரியர்.
பண்டித் டாக்டர் பி.என்- மகாராட்டிரத்தில் ஸ்ரீவித்யா உபாசகர்களாக இருந்த நாதபந்தைச் சார்ந்தவர்களின் ஒரு வெள்ளம், காச்மீரத்தில் கலந்திருக்க வேண்டும் என்பது இவர் கருத்து.
பண்டிபட - வயிறு பருக்க
பண்டு - தொன்மை, எ-டு பண்டு போல் பண்ணும் ஈசன்.
பண்ணுதல்- குதிரையை விரைவாக ஒட்டுதல்.
பண்பலார்- பண்பில்லாதவர். அகன்பதியினரில் ஒரு வகையினர்.
பணி - தொண்டு. எ-டு நாதன் பணி.
பணிஞானி- தொண்டு தவச்சீலர். இவர்கள் நால்வர்: ஞானி, யோகி, வேகி, போகி, எ-டு ஞானயோகக் கிரியா சரியை நான்கும் நாதன்தன் பணிஞானி நாலினுக்கும் உரியன்.(சிசிசுப326).
பணிமொழியார் - மாதர்.
பதங்கள் - பதவிகள், எ-டு பதங்கள் நால்ஏழ்.
பதஞ்சலி- யோகசூத்திரம் செய்தவர். யோகமதம் இவர் பெயரால் பாதஞ்சலம் எனப்படும்.
பதம் - மந்திரம் இது 11.
பதமுத்தி - சாலோகம், சாமீபம், சாரூபம்.
பதவி - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம்
பத்ததி- சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம் ஆகிய மூன்று பாதங்களை விளக்கும் நூல்கள். சிவாசாரியர்கள் இயற்
179
பத்தர் - சிவ பத்தர்.
பதாத்துவா - பதங்கள். அத்துவா 6 இல் ஒன்று.
பதார்த்தம் - பருப்பொருள். 1) பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் 2) சித்து, அசித்து, ஈசுவன் என்னும் மூவகை மூலப் பொருள்கள்.
பதி - இறைவனாகிய சிவனைக் குறிக்கும் சைவ சித்தாந்தச் சொல். முப்பொருள்களில் முதல்பொருள். பதி உண்டு என்பதைக் கருதல் அளவை மூலம் சிவஞான போதம் காட்டுகிறது.இதனை வழிநூலாகிய சித்தியார் சுபக்கமும் சார்பு நூலாகிய சிவப்பிரகாசமும் விரிவாக விளக்குகின்றன. மற்றும் ஊர் இடம் என்றும் பொருள்படும்.
இரு வழக்குரைகள்.
1)உலகியல் வழக்குரை: உலகத்தை ஒரு காரியமாகக் கொண்டு,அதனை உண்டாக்கிய காரணன் ஒருவன் உண்டு எனக் கொள்ளுதல்.
2)அறவியல் வழக்குரை: உயிர்கள் செய்யும் இருவினைகளின் பயன்களைத் தக்கவாறு அவ்வுயிர்களுக்கு ஊட்டி,அவற்றை உய்யச் செய்யும் அறங்காவலனாக இறைவன் இருக்கிறான்.
விளக்கம்
உலகமானது அவன், அவள், அது என்னும் முப்பகுதிகளைக் கொண்டு தோன்றியும் நிலைத்தும் மறைந்தும் வருவது. ஆதலால் அது காரியமாகும். அதனை உண்டாக்கியவன் ஒருவன் இருக்க வேண்டும். உலகு எதில் மறைந்ததோ அதிலிருந்துதான் மீண்டும் உருவாக வேண்டும். தன்னுள் உலகத்தை ஒடுக்கிய ஒருவனே அதனை மீண்டும் உருவாக்குவான்.மீண்டும் இறைவன் அதனைப் படைப்பது உயிர்களைப் பற்றியுள்ள மலம் நீங்குவதற்காக ஆகும். ஆகவே, உயிர்கள் செய்யும் இருவினை காரணமாக நிகழும் போக்குவரவைத் (இறப்பு, பிறப்பு) தன்னில் பிரியாது நிற்கும் தன் ஆற்றலைக் கொண்டு இறைவன் நெறிப்படுத்தி நிகழுமாறு செய்கிறான்.
பதி இருவினை ஒப்பு - பதித் தீவினை விரும்பப்படாத ஒன்று. அதுபோல், பதி நல்வினையும் பசுபோதங் கெடாத சாலோ காதி பதங்கருதி விரும்பப்படாது நீங்கல்.
பதிகம்- பாயிரம், 10 செய்யுட்களைக் கொண்டது. தெய்வத்தைப் பற்றிப் பாடப்படுவது.
பதிஞானம் - இறையறிவு.
பதிஞான வாழ்வு - பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் நுகர்வு.
பதிதன் - சண்டாளன்.
பதிபாசம் - ஆணவமலம்.
பதிபாசத் தொடர்பு - அத்துவிதத் தொடர்பாகும். கலப்பினால் ஒன்றாயும் பொருள் தன்மையால் வேறாயும் உயிருக்கு உயிராம் தன்மையால் உடனாயும் இறைவன் இருக்கும் தொடர்பு.
- சிவனுக்குச் செய்யும் திருப்பணி
180
பதினோராம் திருமுறை - இது 40 நூல்களைக் கொண்டது. இவற்றை அருளியவர்கள் 12 பேர். விளக்கம் அவ்வவ்வாசிரியர் தலைப்பில் காண்க.
பந்தம் - தளை, கட்டு ஆணவத்தோடு ஆன்மா அத்துவிதமாய் இருத்தல்.
பந்தனை - பாசம்.
பந்தித்தல் - பற்றுதல்.
பயப்பித்தல் - பெறுவித்தல்.
பயன் - பேறு.
பயிலல் - கற்றல்.
பயிற்சி - பழக்கம்.
பரகதி - நற்கதி.
பரக்கும் - பரவும்.
பரகாயம் - பிற உடம்பு, எ-டு பரகாயம் தன்னில் பாய்வோர் (சிசிசுப128)
பரங்கெட்டார்- சிவனடி நோக்குபவர்.
பரசமயம் - பிற சமயம், எ-டு உலகாயதம்.
பரசரீரம் - பிற உடம்பு.
பரசாதி - அதிகமானவைகளில் தோன்றுவது.
பரசு - மழு, எ-டு பரசுடன் பிறந்தான் தானும் (சிசிபப 286).
பரசுராமன்- திருமாலின் ஆறாம் அவதாரம். இராமர் மூவரில் ஒருவர் பரசுடன் பிறந்தவன். ஆகவே, பரசுராமன்.
பரஞ்சோதி முனிவர் - அகச்சந்தான குரவர் நால்வரில் ஒருவர்.
பரஞானம் - பிறவழியறிவு.அதாவது அருளால் நிகழும் அறிவு.
பரணதேவ நாயனார் - 11ஆம் திருமுறையில் சிவபெருமான் திருவந்தாதி பாடியவர். 12 ஆசிரியர்களில் ஒருவர்.
பரதிப் பிரமாணம் - பிறிதாலுணர்தல்.
பரதந்திரம் - பிறன் வயமுற்று அவனைத் தலைமையாகக் கொண்டு நிற்றல்.
பரத்வாசர் - ஏழு முனிவர்களில் ஒருவர்.
பரதுக்கதுக்கன் - புத்தன்.
பரபக்கம் - பிறர்பக்கம் எ-டு சிவஞான சித்தியார் பரபக்கம் ஒ. சுபக்கம்.
பரப்பிரமம் - பரமசிவன் பரம
சுகம் - மேலான இன்பம்.
பரம் - பரம்பொருள்.
பரம்பரை - ஒன்றன்பின் ஒன்று வருவது. கால்வழி, வாழையடி வாழை.
பரமன் - சிவன்.
பரமனார் இகலிடாமல் - ஒரு காலத்தில் நான்முகனும் திருமாலும் கூடித் தங்களின் மாறுபட்ட படைப்பாலேதான் வினை முதல் என்று கூறினர். அவர்களிடமிருந்து மாறுபடாமல் அவர்கள் செருக்கை அடக்க, அயன் நினைத்தார். “உங்களால் எம் அடிமுடி அறிபவரே இவ்வுலகின் வினை முதல் என்று அயன் அறைந்து, அழல் பிழம்பாக நின்றார். இருவரும் திருமுடியைக் கண்டு வருவோம் எனப் புறப்பட்டனர்.நான்முகன் அன்னமாகப் பறந்தார். திருமால் பன்றியாக உருவெடுத்தார் பாதாளத்தைப் பிளந்து பார்த்தார்.இருவரும் திருமுடியைக் கண்டாரில்லை. இகலிடாமல் மாறுபடாமல் (சிசிபப 296).
center
181
பரமானந்தம்-பேரின்பம்
பரமான்மா-பரம்பொருள்.
பரமுத்தி-ஆன்மாஎவ்வகையான உடம்போடும் கூடி நில்லாது நீங்கித் தான் தனித்தே இறைவனை அடையும் நிலை. முத்தியில் ஒருவகை "அயரா அன்பின் அரன்கழல் செலுமே" (சிபோதுபாll)
பரமுத்தியில் பத்தி- முத்தியிலும் ஆன்மா இறைவன்பால் அன்பு செலுத்துதல்.
பரமேசுவரன்- பரமசிவன்
பரவசம்- மலமாகிய புறப்பொருள் வசம்
பரவிப் பார்த்தல் - புடைபட ஒற்றி ஆராய்தல்.
பரவுடம்பு - காரண உடல்.
பரவுதல்-யாவருக்கும்புலனாகும் படி நிகழ்தல்.
பரன் உணர்வு- சிவன் உணர்வு.
பராசத்தி - அறிவு வயமான சிவசத்தி
பராசரமாமுனி- வியாசர் மகன். வசிட்டரின் பேரன். வாய்மையுள்ளவர், மறைஞான சம்பந்தர் இம் முனி கோத்திரத்தைச் சேர்ந்த்வர்.
பராபரன் - பரம்பொருள்.
பரார்த்த பூசை -1) அனைத்துயிருக்கும் அருள வேண்டிச் சிவனைக் கோயில்களில் பிரதிட்டை செய்து பூசித்தல்.2)சமுதாயநலன்கருதிச்செய்யும்பூசை
பரார்த்தலிங்கம்- சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிக லிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐவகைப் பட்டதும் திருக் கோயில்களில் உள்ளதுமான சிவலிங்கம்.
பராவுதல் - சஞ்சரித்தல்
பரிகரித்தல் - களைதல்
பரிக்கிரக சத்தி- மாயை தொழிற்குக் காரணமாய் இருக்கும் வினையாற்றல்.
பரிசம்- ஊறு ஐம்புலன்களில் ஒன்று.
பரிசத் தீக்கை-தொட்டுத் தீக்கையளித்தல், சைவ தீக்கை 7இல் ஒன்று.
பரிசனம் - பரிவாரம்.
பரிசாங்கிய விதி-ஒன்றை நிறுவப்பயன்படும் தர்க்க விதி.
பரிசு-கொடை பயன், இயல்பு. எ-டு பார்ப்பாய வேடங்கட்டி ஆடுவோர் பரிசு போலும், (சிசிசு 214).
பரிணாமம்-1) உள்ளது சிறத்தல், கூர்தலறம், படிநிலை வளர்ச்சி உயிர் மலர்ச்சி 2) ஒன்று மற்றொன்றாதல்-பால் தயிராதல்.
பரிணாம வாதம்- ஏகான்ம வாதம் பரப்பிரமமே உலகமாக மலர்ந்தது என்னும் கொள்கை இது ஏகான்மா வாதிகளுள் ஒரு சாரர் கொள்கை. இக்கொள்கையினர் பரிணாமவாதிகள்.
பரிதல் - இரங்குதல்
பரிதி,பரிதியங்கடவுள்-கதிரவன்.
பரிபவம் - அவமானம்.
பரிபாகம் - உத்தம பக்குவம்
பரிபாலித்தல் - காத்தல்.
பரிமா - குதிரை.
பரியந்தம் - முடிய, வரை, எ-டு பாதாளசத்திபரியந்தம்(இஇ6)
பரியாயம்- ஒத்த பொருளுடைய பெயர்.
பரியாயப் பெயர்-ஒத்த பொருளுடைய பெயர். பரிவட்டம்-கோயில் மரியாதை தரிசிப்பவருக்குத் தலையைச் சுற்றிக் கட்டும் கடவுள் ஆடை
பருவம்-1) காலம் 2) அகவை.
பருவம் ஏழு- 1) பேதை (5-7) 2) பெதும்பை (8-11) 3) மங்கை (12-13) 4) மடந்தை (14-19).5) அரிவை (20-25) 6) தெரிவை (26-31) 7) பேரிளம் பெண் 32-40)
:பருவ காலம்- கார், கதிர், முன் பனி, பின் பனி, இளவேனில், முதுவேனில் என 6.
பருவரல்- துன்பம், எ-டு இருள் உறுமலத்தில் பருவரல்படு தலின் (சநி 7).
பருவுடம்பு- பார்க்கக் கூடிய உடம்பு.
பருவுடல் தோற்றம்- பெளதிக உடல்தூல உடல்நீங்கியவுடன் நுண்ணுடல் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ ஏற்ற உடம்பைத் தோற்றுவிக்கும். அவ்வாறு அவ்வுடம்பைப் பெற்ற உயிர் சொர்க்கத் தையும் நரகத்தையும் அடைந்து முறையே இன்பத்தையும் துன்பத்தையும் நுகரும். அந்நுகர்ச்சிக்குக் காரணமான வினைகள் தீர்ந்தவுடன் அவ்வுடம்பு நீங்கும். முன்பு நில வுலகில் வாழ்ந்ததையும் பின் சொர்க்க நிரயங்களை அடைந்து இன்ப துன்பங்கள் நுகர்ந்ததையும் விழிப்பு நிலையில் நிகழ்ந்த வற்றைக் கனவு நிலையில் முற்றும் மறுத்தல் போல, நுண்ணுடம்பையே உடம்பாகக் கொண்டு அடுத்தவினை காரணமாக அவற்றின் பயனை நுகர்தலில் அவர் எழும். ஆகவே, அந்த அவாவின் வ்ழியே மனம் அவ்வுயிரைச் செலுத்துவதால் நிலவுலகில் அதுதான் அடைய வேண்டிய பிறப்பிற்கு ஏற்றகருவை அடைந்து பிறக்கும்.
பரை - 1) பார்வதி 2) சிவசத்தி 3) சீவான்மா தன் செயலற்றுச் சிவன் அருள் பெற்று நிற்கும் நிலை 4) நைட்டிகத் தீக்கை
பலம் - காய், எ-டு பலம் இலை பழம்பூ (சநி 4).
பலசாங்கியம் -,பல எண்ணுடையது.
பல தேவன்- பலபத்திரன்.
பலர் - பல சமயங்கள்.
பல்குதல்- பெருகுதல், விரிதல்.
பல்பொருள் பெயர்- கனகம், இரணியம் காஞ்சனம், ஈழம், தனம், நிதி, ஆடகம், தமனியம் எனப்பலபெயருடையபொருள்.
பலாலம் - வைக்கோல்.
பலி - பூசைப் பொருள்.
பலிபீடம்-பாசத்தைக் குறிப்பது. நம் வெளி எண்ணங்களை எல்லாம் அப்பலி பீடத்திலேயே விட்டுவிட்டு, இறை எண்ணத்தோடு செல்லவே இது அமைந்துள்ளது.
பாலை நெய்தல் பாடியது-பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்
பவம் - பிறப்பு, உலகம், பாவம்.
'பவம் செய்தல்- மீண்டும் பிறத்தல்
பவத்துயர் - பிறவித் துன்பம்
பவகன்மம்- பாவ வினை.
பவநனி-வலிய பகை
பவளத்திருசடை-பவளக்கொடியுள்ள சடை
பவனி - வலம். எ-டு பவனி வரக்கண்டு (நெவி து 85)
பவ்வம் - கடல். பழக்கம் - வழக்கத்தில் இருப்பது. எ-டு சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
பழமொழி - முதுமொழி
பழம் - முக்கனி : மா, பலா, வாழை,
பழி - குற்றம்
பழுதிலா அருள் - கண்ணப்ப நாயனார் அன்பு.
பழுதை - கயிறு, எ-டு பழுதையைப் பாம்பென நினைத்தல்.
பழைய வினை - உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளால் துய்த்தனவும் பிறந்த உடம்பால் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் துய்க்கக் கடவதாகவுள்ள வினை.
பள்ளியறை - காலையில் இது திறக்கப்படுவது. சிவமும் சத்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு அதனை மூடுதல் சத்தியானது சிவத்தில் ஒடுங்கும் பொழுது ஏற்படும் இலயத்தையும் குறிப்பவை.
பளிங்கு - படிகம்.
பறவாக்குளவி - மலைப்பச்சை
பற்றதனைப் பற்று விடல் - ஐம்பொறிகளால் இயங்கும் ஐம்புலன்களை ஒழிக்கும் ஒப்பற்ற திருவருனை அறிவாயாக அவ்வருளை இன்பமாகக்கொண்டு சிவத்தால் பொருந்திப் பற்று விடாது இருப்பாயாக அப் பொழுது பேரின்பம் தோன்றும் (திப 31;திவ14; குறள்,350)
பற்றறுதல் - பாசம் நீங்குதல்
பற்றறுப்பார் - பற்றை விடுபவர்.
பற்று - ஆசை. விட்டொழிக்க வேண்டிய ஒன்று. எ-டு பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள் 350) பா.பாசம்.
பற்றுக்கோடு - கொழுகொம்பு.
பறி - நீக்கு எ-டு தலை பறிஉற்று.
பன்மம் - திருநீறு.
பன்றி - வராகம்.
பன்னகம் - பாம்பு.
பன்னகைப்பூணினான் - பாம்பை அணிகலனாகக் கொண்ட பரம்சிவன்.
பன்மை - உயிர், இறை, தளை
பன்னிரு சோதிலிங்கத் தலங்கள் -
1) கேதாரம் (இமயம்) - கேதாரேசுவரர்.
2) சோமநாதம் (குஜராத்) - சோமநாதேசுவரர்
3) மகாகாளேசம் (உஜ்ஜனி) - மகாகாளேசுவரர்
4) விசுவநாதம் (காசி) - விசுவநாதேசுவரர்.
5) வைத்திய நாதம் (மகாராட்டிரம்) - வைத்திய நாதேசுவரர்.
6) பீமநாதம் (மகாராட்டிரம்) - பீமநாதேசுவீரர்.
7) நாகேசுரம் (மகாராட்டிரம்) - நாகநாதேசுவரர்
8) ஓங்காரேசுவரம் (மத்தியபிரதேசம்) - ஓங்காரேசுவரர்.
9) திரயம்பகம் (மகாராட்டிரம்)- திரயம்பகேசுவரர்.
10) குசுமேசம் (மகாராட்டிரம்) - குசுருணேச்சுவரர்.
11) மல்லிகார்சுனம் - சீசைலம் (ஆந்திரம்) - மல்லிகார்ச்சுனர்.
12)இராமநாதம் (இராமேசுரம்) - இராமநாதேசுவரர்.
பன்னிருபடலம் - தொல்காப்பியர் முதலிய 12 பேரால் 12 படலமாகச் செய்யப்பட்ட ஒரு புறப் பொருள் இலக்கண நூல்.
பன்னிறம் - சார்ந்தவற்றின் நிறம்.
பன்னினம் - ஐந்நிலை அவத்தை எ-டு மன்னிய கரண மாறாட்டத்தில் பன்னினம் (சிநி 4).
பன்னும் - கூறும். எ-டு பன்னும் அதி தெய்வங்கள்.
பனுவல் - நூல் எ-டு சிவஞான போதம் ஒரு மெய்யறிவுப் பனுவல்.
பனை தாளம் - பொற்றாளம். பாடல் பாடச் சம்பந்தர் சிவனிடம் திருக்கோலக்காவில் பெற்றது. பா. திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.
பா - வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு.
பாகடை - பாக்கும் வெற்றிலையும்
பாகம் - பகுதி, பக்குவம்
பாகர் - குதிரைப்பாகர், யானைப்பாகர்.
பாக்கியம் - பேறு.
பாகுபாடு - பிரிவு.
பாசம் - பந்தம், தளை, கட்டு. முப்பொருள்களில் மூன்றாவது. நிலம் முதல் நாதம் முதலாகச் சொல்லப்படும் பாசக் கூட்டம். பா. பற்று.
பாசஞானம் - வாக்குகளாலும் கலாதி அறிவாலும் அறியும் அறிவு.
பாசட்சயம் - பாச நீக்கம்.
பாசத்தார் - பாசக் கட்டுடையவர்.
பாச நீக்கம் - ஆறு அத்துவாக்களையும் உயிர் படிப்படியாக விட்டுச் செல்வதே பாச நீக்கம். இது துன்ப நீக்கம். ஆனால் வீடுபேறே நிலையானது.
பாசமும் பதியும் - பா. பதிபாசத் தொடர்பு.
பாசமோசனம் - பாச விடுதலை. எ-டு பலவிதம் ஆசான் பாச மோசனம்தான் பண்ணும் (சசிசுப 255)
பாசயித்திரு (நுகரி) காண்டம் - பா காண்டம்.
பாசர்வஞ்ஞர் - மிகச்சிறந்த நியாய சாத்திர அறிஞர்.
பாச வீடு - பாச விடுதலை
பாசனம் - மண்பாண்டம்.
பாசுகரர் - சிவசூத்திர வார்த்திக ஆசிரியர்.
பாசுபதம் - 5 அகப்புறச் சமயங்களில் ஒன்று. -
பாசுபதவாதம் - மாயையும் கன்மமுமே ஆணவ மலமாகும் என்னும் கொள்கை. இக்கொள்கையினர் பாசுபதவாதிகள்.
பாஞ்சராத்திரம் - இது ஒரு வைணவ ஆகமம். இதன் வழித் தோன்றிய வைணவ மதம் பாஞ்சராத்திரம். இது ஒரு புறச்சமயம். இராமானுசர் பிரம சூத்திரத்திற்குச் செய்த விசிட்டாத்துவம் என்னும் கொள்கையையே இதன் தத்துவம் பெரும்பாலும் பின்பற்றுகிறது. நாராயணனே பரம்பொருள். அவனைச் சரண் அடைதலே வீடு பேறு என்னும் கொள்கை. இக் கொள்கை உடையவர் பாஞ்சராத்திரிகள். இவர்களுக்கும் சிவாத்துவிதிகட்கும் பல வகையில் ஒற்றுமை உண்டு.
பாஞ்சாக்கினி வித்தை - சுவர்க்கம், மேகமண்டலம், நிலம், தந்தை,
தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும், அவற்றிற் பொருந்திய ஆன்மாவை ஆகுதியாகவும் தியானிப்பது ஒரு சாதகமாதலின் இது பஞ்சாக்கினி வித்தை எனப்படும்.
பாடம் - படிக்கப்படுவது.
பாடல் பெற்ற தலங்கள் - தேவாரத்தில் பாடல் பெற்ற தலங்கள் 274. பாடிய பதிகங்கள் 749.
நாடு
தலம்
பதிகம்
தமிழ்நாடு
265
729
சேரநாடு
1
1
ஈழநாடு
2
3
வடநாடு
6
16
274
749
சமயக்குரவர் நால்வரும் பாடிய தலங்கள்: மூவரும் பாடியவை 44. சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியவை. 52. சம்பந்தரும் சுந்தரரும் பாடியவை 13, அப்பரும் சுந்தரரும் பாடியவை 2. அப்பர் மட்டும் பாடியவை 28. சுந்தரர் மட்டும் பாடியவை 25. சம்பந்தர் மட்டும் பாடியவை 110. ஆக 274
பாடலார் - பாடுவோர். அகன்பதியரில் ஒருவகையினர்.
பாட்டாசாரியர் மதம் - உயிர் சுதந்திர அறிவுடையது என்னுங் கொள்கை. '
பாடாணம் - கல், பருப்பொருள். எ-டு பாடாணம் போல் கிடந்து (சிசிசுப 127)
பாடாணம் போல்கை முத்தி - கல்போல் அறிவின்றி இருப்பதை வைசேடிகர் முத்தி என்பர். முத்தியில் ஒருவகை. பா. முத்தி.
பாடாண வாதசைவர் - சகசமலம் உயிரை விட்டு நீங்காது என்னுங் கொள்கையினர். இக்கொள்கை உடையவர் பாடாணவாதி.
பாடிகாவல் - சிறைக்காவலர்.
பாடியங்கள் - உரைகள். வட மொழியில் வேதாந்த சூத்திரம் எனப்படும். பிரமசூத்திரத்திற்கு அவரவர் தம் கொள்கைக்கு ஏற்ப உரைகள் வகுக்கப்பட்டன. அவ்வுரைகளே பாடியங்கள் ஆகும். தமிழில் திராவிட மாபாடியம் என்பது சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு எழுதிய பேருரையாகும். சிற்றுரை பாடியம் எனப்படும்.
பாடு - பக்கம்
பாடை - மொழி, பிணக்கட்டில்.
பாணர் - பாடுவோர்.
பாண்டாரகர் தே.இரா - முனைவர். இவர் கருத்துப்படி அசோகனுடைய ஏழாவது தூண் கல்வெட்டில் பாபநேஸூ ஆஜிவிகேஷூ என்னும் சொல் பிராமண ஆசீவர்களைக் குறிப்பிடுவதாகும்.
பாண்டாரகர் ரா.கோ - முனைவர். சீகண்டர் என்பவர் மனித உருவில் இலகுலீசருக்குக் குருவாக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்தம் கருத்து.
பாண்டியன் - பாண்டிய அரசன். இவன் கேட்பதற்குரியதாகச் சம்பந்தர் ஆட்பாலவர்க்கருள்” என்னும் பதிகம் பாடினார்.
பாணி - கை. தொழிற்பொறிகள் 5இல் ஒன்று தொழில் எடுத்தல் அல்லது பற்றல்.
பாதகம் - தீமை, ஒ சாதகம் பஞ்சமா பாதகம் கொலை, பொய், களவுகள், குரு நிந்தை
பாதஞ்சசலர்மதம் - உயிர் அருவம் என்னும் கொள்கையுள்ள சமயம்.
பாத தீக்கை - திருவடித்தீக்கை
பாதம் - 1)திருவடி 2)படி நான்கு. 3)கால்.
பாதமுத்தி - பரமுத்தி.
பாதராயணர் - வேதவியாசர்.
பாதவம் - மாலை, மரம்.
பாத்யம் - கால் கழுவ நீர் அளித்தல் வழிபாட்டு முறைகளில் ஒன்று.
பாதிவரை மகளிர் - செம்பாதியாகிய மலையரையன் மகள்.
பாம்பொழியப் பாடுதல் - பாம்பின் நஞ்சு நீங்குமாறு பாடுதல். திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகிய இருவரும் பாடி நஞ்சு நீக்கினர். சம்பந்தர் திருமருகலிலும் திருநாவுக்கரசர் திங்களூரிலும் பதிகம் பாடினர். பா. பாலன் மரணம்.
பாமறைக் கிழத்தி - கலைமகள்.
பாயாவேங்கை - வேங்கை மரம்.பொன்.
பாயிரம் - அணிந்துரை. நூல்மரபாகப் பாவில் வழங்கப் படுவது சிறப்புப் பாயிரம் பிறர் சிறப்பு கருதி வழங்குவது.தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் வழங்கியுள்ளார். சிவஞானபோதத்திற்குச் சிறப்புப் பாயிரம் அளித்தவர் பெயர் தெரியவில்லை.
பாயிரப்பொருள்கள் - இலக்கணப் படி 11. ஆனால் சிவஞான போதத்திற்குள்ளது 8மட்டுமே.
- 1) ஆக்கியோன் பெயர்; சுவேதனன், மெய்கண்டதேவன்
- 2) வழி; நந்தி முனிகணத்து அளித்த நூலின் வழி
- 3) எல்லை; தமிழ் வழங்கும் பகுதி
- 4) நூற்பெயர்
- 5) யாப்பு
- 6) நுதலியப் பொருள்
- 7) கேட்போர்
- 8) பயன். உயர்சிவஞானபோதம் என்பதனால் உய்த்துணரப்பட வேண்டியவை. கண்ணிருள் தீர்ந்து கண்டு மயர்வறல்.
பாய்பரியோன் - குதிரை மீது எழுந்தருளிய சிவன். தில்லையில் முதல்வனைக் குதிரைமீது மணிவாசகர் எழுந்தருளச் செய்தார். சிவபெருமான் திருவடிப்பேரின்பத்தை அவனருளால் திருவாசகம் திருக்கோவையாகப் பாடினார்; அதனை அப்பெருமானே எழுதியருளும்படிச் செய்தார். (திப 73). பாய்பரியோன் தந்த பரமானந்தப் பயனை.
பாயு - எருவாய் தொழிற்பொறி 5இல் ஒன்று. தொழில் மலக் கழிப்பு.
பாரகர் பரிக்க - காவுவோர் சிவிகை சுமக்க.
பாரகார்க்கயர் - இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று.
பார் - 1) புத்தன் 2) உலகு - பார் ஆதி ஐந்து. -1) பஞ்ச மூர்த்திகள் 2) பூதம் 5.
பார் ஏழு - உலகம் ஏழு பிலகத் தீவு முதல் புண்டரீகத்தீவு. ஈறா காவுள்ள ஏழு தீவுகள்.
பார்த்தனார் - அருச்சுனன், பஞ்ச பாண்டவர்களில் ஒருவர். இங்
187
பார்த்திபம் - மரம்.
பார்த்து - அறிந்து.
பார்ப்பாய வேடம் - ஆடுவதற்குரிய வேதியர் வேடம். எ-டு பார்ப்பாய வேடங்கட்டி.
பார்ப்பார் - பார்ப்பவர்.
பாரிசேடம் - ஒழிவு.
பாரிசேட அளவை - முப்பொருள்களில் இரண்டு. பதியாகிய சிவமும்
- பாசமாகிய உலகமும், இவை இரண்டும் ஒன்றை மற்றொன்று அறியாது என்பதை விலக்க வேண்டும். இதற்கு எஞ்சி நிற்கும் பசுவாகிய உயிரே அவ்விரண்டையும் அறியும் என்று பாரிசேட அளவையால் உணரலாம்.
- (மூலத்தில் ’பாதியாகிய சிவமும்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. ’பதியாகிய சிவமும்’ என்பது திருத்தம்)
பாரிசேடப் பிரமாணம் - ஒழிபளவை, மீட்சி மொழி மொத்தத் தொகை கண்டு
- அவற்றில் கழிந்தவை போக எஞ்சியதைக் காட்டல், எ-டு மூவரில் இருவர் திருடவில்லை மற்றொருவன் திருடினான் என்பது பொருள். இங்குப் பதி பசு பாசம் என்னும் மூன்றில் பசுவிற்கும் பாசத்திற்கும் வினைப் பயனைக் கூட்ட முடியாது என்று விலக்கவே, பதிக்குக் கூட்ட முடியும் என்பதால் பாரிசேடமாயிற்று.
பாரியாயப்பெயர் - இயற்பெயர். அல்லாத பெயர் எ-டு ஆணை என்பது
- சத்தியின் பெயர். பா. இயற்பெயர்.
பாலன் - சிறுவன், பிள்ளை. இங்குத் திருஞானசம்பந்தரையும் அப்பூதியடிகள்
- மகனையுங் குறிப்பது.
பாலன் செய்த பாதகம் - இளமை பெற்ற சண்டீச நாயனார் தன் தந்தையைக்
- கொன்ற பாவமும் புண்ணியமாய் முடிந்தது. இது அன்பர் செய்யும் பாவம்
- புண்ணியமாகும் என்பதற்கு எடுத்துக்காட்டு (சிசிசுப19).
பாலன் சேட்டை - மழுவின் செய்தி அல்லது ஒடுங்கும் செயல், புமானகிய
- சுத்த புருடன் பிரகிருதியின் சந்நிதியில் மழுவின் செயலைப் போல் அறியாமை பொருந்திய உலகம் பிறப்பு வேறுபாடுகளைக் கொண்டது (சிசிபப260).
பாலன் மரணம் - அப்பூதியடிகளின் மகன் திங்களுரில் நாகந்தீண்டி இறக்க,
- அவனைத் திருநாவுக்கரசர் உயிர்ப்பித்தது. எ-டு பாலன் மரணந்தவிர்த்ததுவும் (திப 12).
பால் - ஒன்று, பக்கம்.
பால் ஆழி - பாற்கடல் ஒ மால் ஆழி.
பால் வடிவு - ஐந்து வடிவங்கள்.
பால்வரை தெய்வம் - ஊழ். ஊழ்வினை தானே வந்து உயிர்களைப் பற்றுத்
- தன்மை உடையதன்று. அறங்காவலனாகிய இறைவன் :வகுக்கும் வழியே அது செல்வதற்குரியது. பால்வரை தெய்வம் வினையே பூதம் (தொல் சொல் 540) இக்கருத்துப் பெரிய புராணத்திலும் வற்புறுத்தப் பெறுகிறது. “செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள்”
பாலாலயம் - இளங்கோயில், மூலத்தானத்தைப் பழுது பார்த்துப்
188
பாலாறு
பாவும் மறுப்பும்
புதுப்பிக்கும் காலத்தில் கடவுளை வேறாக ஆவாகனம் செய்து வைக்கும் கோயில்.
பாலாறு - தீர்த்தம் 9 இல் ஒன்று.
பாலினார் - அருளாளர்.
பாலைக் கிழத்தி - பாலைக்குரிய துர்க்கை அல்லது காளி.
பாலை நெய்தல் பாடியது - திருஞானசம்பந்தர் திருநனிபள்ளியில் பாலை நெய்தலாகும்படி பாடினார்(திவ12)பா.திருஞானசம்பந்தர் செய்த அற்புதங்கள்.
பாவகம் - பாவனை, பா. பாவனை
பாவம் - உண்மை. தீவினை.
பாவனாந்தம் - பாவித்தலுக்கு அப்பாற்பட்டது.
பாவனாதீதம் - பாவனையைக் கடத்தல்.
பாவனை - 1)பஞ்ச கந்தங்களுள் ஒன்று. 2) தியானம் வகை 1) கருவிகளோடு கூடிப் பாவித்தல் 2)கருவிகளோடு கூடியும் கூடாதும் பாவித்தல் 3) எய்தியதாகப் பாவித்தல். இப்பாவனைகளைச் சிவஞான போதம் மறுக்கும்(எ.டு) பாவக மேல் தான் அசத்தாம் பாவனா அதீதம் எனில் (சிபோ பா 37)
பாவாடையமுது - கடவுள் முதலியோர்க்கு முன் ஆடையில் படைக்கும் சோறு.
பாவினம்- தாழிசை, துறை, விருத்தம் என மூன்று.
பாவி - பாவகம் செய்தவன்.
பாவிய - பரவிய. எ-டு பாவிய சத்திய ஞான தரிசினிகள்.
பாவும் மறுப்பும் - நூற்பா வரிசையாகச் சிவஞான போதம் மறுக்கும் மதங்கள் பின்வருமாறு:
நூற்பா 1
- 1)அநேக அந்தவாதி 2)அநேக ஈசுவரவாதி.3)ஆவேசவாதி 4) இரணிய கருப்பவாதி 5) உலகாயவாதி 6) உற்பத்திவாதி 7) சாங்கியர் 8) சிவசாங்கிராந்த வாத சைவர், 9) சிவ சமவாத சைவர் 10)சூனிய ஆன்மவாதி 11) பரிணாம வாதி 12)பாஞ்ச ராத்திரிகள் 13)புத்தர் 14) மாயாவாதி 15) முதற்காரணவாதம்.
நூற்பா 2
நூற்பா 3
நூற்பா 4
நூற்பா 5
நூற்பா 6
ஏகான்மவாதி 2) சாங்கியர் 3) சிவாத்துவித சைவர் 4) சிவசம வாத சைவர் 5) சுத்த சைவர் 6)
189
நூற்பா 7
- 1)ஈசுர அவிகாரவாதி 2) சிவ சங்கிராந்தவாதி சைவர். : 3)ஏகான்மவாதி 4) ஐக்கியவாத சைவர் 5)சிவாத்துவித சைவர் 6)சிவசமவாத சைவர் 7)சுத்த சைவர் 8)பாடாண வாதி 9)பேதவாத சைவர்.
நூற்பா 8
நூற்பா 9
சிவ சமவாத சைவர்.
நூற்பா 10
1) சுத்த சைவர் 2) மாயாவாதி.
நூற்பா 11
1) ஏகான்மவாதி. 2)பாடாணவாதி 3) புத்தர்.
நூற்பா 12
- மறுப்பு இல்லை.
பாவை - பதுமை
பாவை, தோல் - தோல் பாவைக்கூத்து.
பாவை, மரப் - மரப்பாவை இயக்கம்.
பாழ் - சூனியம்.
பாழி - பொருள், கோயில், எ-டு பதமும் பாழியும் சொல்லும் பொருளும்
பாற்கரியன் வாதம், மதம் - பரிணாம வாதத்தைக் கூறியவர். பாற்கரர். இவர் தம்பெயரால் அமைந்தது இக்கொள்கை.
பானு - பகவலன்.
பி
பிஞ்சு எழுத்து -வகாரம் ஆகிய பராசத்தி.
பிடகம் - பெளத்த மறை திரிபிடகம். தேவாரத்தில் இது பிடக்கு எனப்படும்.
பிடகநூல் - அயற்சமய நூலான செளத்திராந்திக (பெளத்த) மதநூல்.
பிடக நெறி -புத்த ஆகமங்களின் வழி.
பிடி - பெண் யானை,ஒ களிறு.
பித்தாந்தம் - பித்த முடிவு. ஒ.சித்தாந்தம்
பித்தி - சுவர்.
பித்து - 1) பேரன்பு 2)மனக்குலைவு.
பிணங்கல் - மாறுபடுதல்.
பிணம் - சவம்.ஒ.நடைப்பிணம்.
பிண்டம் - கருவி.
பிண்டப்பொழிப்பு - நூற்பாவின் பொருளை ஒரு சொல்லேனும் எஞ்சாதபடி எல்லாச் சொற்களின் பொருளையும் முழுமையாகத் திரட்டி உரைப்பது. இதனை மெய்கண்டார் தாம் உரையாது மாணவர்களே உரைத்துக் கொள்ளுமாறு விடுத்தார்.
பிணி - நோய் : வாதம், பித்தம், சிலேத்துமம் என மூன்று.
பிணிப்பு - கட்டு.
பிணிப்புண்ணுதல் - கட்டுண்ணுதல்.
பிம்ப பிரதிபிம்பவாதம் - கேவல அவத்தையின் படி பரபிரமம் மாயையில் பிரதிபிம்பமாகும். அதாவது, இறைவனது சைதன்யம் அந்தக் காரணத்தால் பதியும்போது, அது உயிராகிறது.
190
சுருங்கக் கூறின், இறைவன் உயிர் ஆகிய இரண்டுமே பர பிரமம் என்னும் பிம்பத்தின் பிரதி பிம்பங்கள் ஆகும்.
பிரகாசம் -காட்சி,புலனாதல்,சித்து விளக்கம். இயல்பாக எளிதில் உரைப்படுவது.
பிரகாசம் இன்மை- சாதனங்களைப் பயன்படுத்தினாலும் அறியப்படுதல் இல்லாமை.
பிரகலாதன்- இரணியன் மகன். ஒரு பரம பாகவதன்.
பிரகிருதி- பருவுடல் மூலம் இயல்பாய் உள்ளது. மும்மாயையில் ஒன்று. வேறு பெயர்அவ்வியத் தம் (வெளிப்படாமை) புருடன் முன் தொழிற்படுவது. இதிலிருந்து ஒன்றிலிருந்து மற்றொன்றாக 23 தத்துவங்கள் தோன்றும்.
பிரகிருதி- துர்க்கை, இராதை, இலட்சுமி, சரசுவதி, சாவித்திரி என்னும் பஞ்ச சத்திகள் ஐவகைப் பிரகிருதிகள் ஆகும்.
பிரகிருதி தத்துவம்- மூல தத்துவம், சடத்துவம், இராசம், தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவமாக மூலப்பிரகிருதி உடையது.அக்குணங்கள் வெளிப்படாமல் நிற்கும் நிலையே பிரகிருதி அல்லது மூலப்பிரகிருதி பிரகிருதி என்பது தமிழில் பகுதி எனத் திரித்து வழங்கப்படும். இது கலையில் தோன்றுவது. முக்குணங்கள் வெளிப் படாமல் நுண்ணிலையில் இருந்தால், பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்று பெயர். வியத்தம் - வெளிப்பாடு. அவ்வியத்தம் - வெளிப்படாமை. முக்குணங்கள் வெளிப்பட்டுச் சமமாய் நிற்கும் நிலை குண தத்துவம் எனப்படும்.இக்குணத் துவமே சித்தம் என்னும் அந்தக் கரணம் என்பது பலரது கருத்து. சைவ சித்தாந்தம் ஏற்கும் 36 தத்துவங்களாவன சிவதத்துவம் 5, விந்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, சைவம் நீங்கலான ஏனைய மதங்கள் ஏற்கும் தத்துவம் 24.
பிரகிருதியும் புமானும்- இவ்விரண்டையும் இரட்டை எனலாம். இவற்றில் பிரகிருதியானது மூலம், புரியட்டகம், விகர்தி என்று மூன்றாகித் தூல மாயும் சூக்குமமாயும் பரவி நிற்கும். புமானே சுத்த புருடன், இது பிரகிருதியின் திருமுன் மழுவின் செய்தியைப்போல அறியாமையோடு கூடி உலகப் பிறப்பு வேறுபாடுகளுடன் விரிந்து நிற்கும்.
பிரகிருதிபுவனாந்தம்-பிரகிருதி தத்துவத்திலுள்ள புவனம் வரை.
பிரகிருதி மாயை- மும்மாயைகளில் ஒன்று. வேறு பெயர் மான்
பிரசாதம்-1)இறைச்சோறு 2)திருவருள்.
பிரணவம்- ஒம். இதில் அகரம் அகங்காரத்தினையும், உகரம் புத்தியினையும், மகரம் மனத் தினையும், விந்து சித்தத்தினை யும், நாதம் உயிரினையும் செலுத்தும்.
பிரணவ கலைகள்- ஒம் என்பதே பிரணவம், அஃது ஐந்து கலை கள் அல்லது கூறுகளைக் கொண்டது. அவை அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்பவை. அவையே முறை யாக அகங்காரம், புத்தி, மனம், சித்தம் என்னும் அகக்கருவிகளையும் புருடத் தத்துவத்தையும் செலுத்தும்.
பிரதட்சிணம்- கோயில் பிரகாரத்தை இடப்பக்கத்திலிருந்து வலம் வருதல். ஒ. அப்பிர தாட்சிணம்.
பிரத்தியட்சம்- காட்சி
பிரதிக்ஞை - மேற்கோள்.
பிரதிட்டை- நிலை நிறுத்தல். கோயில் கொள்ளுவித்தல். கலை 5இல் ஒன்று.
பிரதிட்டாகலை- சிவ சத்தியின் 5 கலையில் சீவான்மாவைப் பிறவா நெறியில் உய்க்கும் கலை.
பிரபஞ்சம்- உலகம், விண்ணகம் இது ஐந்து வகைப்படும்.
1) அசுத்தப் பிரபஞ்சம்: பிரகிருதி மாயாகாரியமாகிய சாத்து விகம், இராகதம், தாமதம் என்னும் முக்குணவடிவமாய் அளந்தறியப்படுதல்.
2) சுத்தா சுத்தப் பிரபஞ்சம்: இம் முக்குணங்களையுங் கடந்த ஆணவ மல காரியமாகிய சுக துக்காதி ரூபமாகவும் அளந்தறியப் படுவது.
3) சுத்தப் பிரபஞ்சம்; மலகன்மங் களைக் கடந்த சிவ தத்துவ ரூபாமாய் அளந்தறியப்படுவது
4) சேதனப்பிரபஞ்சம் அறிவுடை உலகமாகிய உயிர்.
5) அசேதனப் பிரபஞ்சம், உயிரற்ற பொருள் உலகம்.
இறைவனால் காரியப்படும் பிரபஞ்சம் நிலம், நீர் காற்று, வான். இவற்றின் கூறாகிய உடல், மலை, மரம், கடல் முதலியவை இதற்கு முதற்காரண மாயை. உயிரால் காரியப்படும்பிரபஞ்சம் குடம், மாடம், மாளிகை, ஆடை, ஏரி முதலியன. முதற்காரணம் இறைவனால் உண்டாகும் காரியப் பிரபஞ்சம்.
பிரபஞ்ச அனுக்கிரகம்- ஆன்மாவிடம் கடவுள் செய்யும் திருவருள்.
பிரத்தியயம்- விகுதி, இடைச்சொல்
பிரதிபந்தம்- ஆணவத்திற்குநேர்ப் பகையானது.
பிரதிபத்தி- சரண் அடைதல். இறைவன் வல்லமையிலும் அருளிலும் முழு நம்பிக்கை வைத்துத் தன்னை முற்றாக அவனிடம் ஒப்படைத்தல் இது பேருடை நெறி.
பிரதிபிம்பம்- எதிர் உரு, நிழல் உரு. . .
பிரபந்தம் - 1) தடை 2) நூல் ஆழ்வார் பாடல்கள் கொண்டது எ-டு நாலாயிர திவ்விய பிரபந்தம், நெஞ்சு விடு துது
பிரபாகரன் மதம்- ஒரு புறச் சமயம்.
பிரம காண்டம்- வேத ஞான காண்டம்.
பிரமகிழத்தி- இறைவி, தேவி, எ-டு பேரின்பமான பிரமக் கிழத்தியுடன் (திப 77)
பிரமகுரு- பிரமத்தை உபதேசிக்கும் ஆசாரியன்.
பிரமஞானம் - இறையறிவு.
பிரமசரியம் - இல்லறம் நீங்கிய வாழ்க்கை.
பிரம சூத்திரம்- வேதாந்த சூத்திரம். இதனைச் செய்தவர் வாதராயணர். வியாசர் தொகுத்த பிரம சூத்திரங்கள் எல்லா இந்து சமயங்களுக்கு மூலம். பா. ஏகான்மவாதம். பிரமதத்துவம்- இறையாண்மை.
பிரமத் தன்மை- ஒருவன் ஒருவனை வீைத இடத்தும் வாழ்த்திய இடத்தும் கைகாலை தறித்த இடத்தும் அறம் மறம் அடையாமல் இருக்கும் இறை நிலை.
பிரம புராணம்- பதும புராணம்.
பிரமம் - இறைவன்.
பிரம முத்திரை- சைவ சமய முத்திரைகளில் ஒன்று.
பிரம ரூபம்- பிரம வடிவம். பத்துச் செயலில் ஒன்று. நாம் வடிவத்திற்கும் சீவனுக்கும் அதிட்டானமாயுள்ளது. சச்சி தானந்தம் என்று உணர்தல்.
பிரம வாதம்- உலகம் எல்லாம் பிரமன் இட்ட முட்டை என்னுங் கொள்கை.
பிரமன்- முழு முதற்பொருள்.
பிரமாணம்- பொருள்; அளவை, சான்று. அதாவது அறிவதற்குக் கருவியாய் இருப்பது. எண்ணிக்கை குறைந்தது 3 நடு நிலை 6. அதிகம் 10 அல்லது அதற்குமேல்.
வகை
அளவை பத்து பின்வருமாறு,
1) காட்சி (பிரத்தியட்சம்)- உலகாயதன்.
2) கருதல் அளவை (அனுமானம்)- பெளத்தர் வைசேடிகர்.
3) உரை, ஆக்மம் (சப்தம்)-சாங்கியர்.
4) ஒப்பு (உவமானம்)- நையாயிகர்.
5) பொருள்(அருத்தாபத்தி)- பிரபாகர்
6) இன்மை(அனுலப்தி)-பாட்டர்.
7) உண்மை (சம்பவம்)- பெளராணிகர்.
8) ஒழிபு(பாரிசேடம்)- பெளராணிகர்.
9) மரபு வழிச் செய்தி ( ஐதிகம்)-பெளராணிகர்.
10)இயல்பு (சுவாபலிங்கம்)- பெளராணிகர்.
பிரமாணஇயல்- 1) சான்றுகளை ஆராயும் மெய்யறிவுத் துறை 2) நூற் பிரிவு.
பிரமாதா- அறியும் பொருள் (உயிர்), அளந்து கொள்பவன்.
பிரமான்மவாதி- பிரமம் என்பது சித்தாகிய ஆன்மாவே என்னுங் கொள்கையினர். பிரமம் ஆன்மா ஆகாது எனச் சிவஞான போதம் மறுக்கும்.
பிரமிதி- அறிதல், அளவையால் அறிந்த மெய்யுணர்வு.
பிரமேயம்- அறியப்படும்பொருள். அளவையால் அறிந்து கொள்ளப்படுவது.
பிரயோகம்- வழங்கும் முறை.
பிரவர சைவர்- ஏழு வகைச் சைவருள் சிவதீக்கைபெற்றவர்.
பிரவாக அனாதி- தொடர்ந்து வரும் நீரோட்டத்தில் முன் வந்த நீர் எது பின் வந்த நீர் இது எனப்பிரித்து அறியப்படாமை.
பிரவாக நித்தம்- பொதுவாகக் கன்மம் என்று பார்க்கும் பொழுது, அதி அந்தம் இல்லாத நித்தப் பொருள் ஆகும். இதுவே பிரவாக நித்தம் எனப்படும்.
பிரவிருந்தன்- விந்துவின் காரியங்களைத் தொடங்கினவன்.
பிரளயாகர்- முத்திற உயிர்களில் பிரளயத்தில் கலை நீங்கிய ஒருவர்; ஆணவத்தையும் கன்மத்தையும் கொண்ட இரு மலத்தார். இவர்களுக்கு இறைவன் தானே அவர்கள் முன் தோன்றி ஞானத்தை உணர்த் துவான். ஒ. விஞ்ஞானகலர். சகலர், அகலர்.
பிரளயா கேவலம்- பிரளயாகலருக்குரிய கேவலம்.
பிராகாமியம்- 8 சித்திகளில் ஒன்று. விரும்பிய இன்பம் துய்த்தல், வாக்கு மனங்களால் அறியப்படுவது.
பிராகிருதர்- பிரகிருதியில்தோற்றிய பொருள்களையே உண்மை என்று எண்ணுபவர்.
பிராகிருதம்- இலக்கண வரம்பிலாத மொழி, உரையாசிரியர்கள் இதைப் பாகதம் என்பர்.
பிராகிருதச் சிதைவு- வட சொற்கள் தமிழில் திரிந்து வருவதற் குச்சில வரையறைகள் உண்டு இவற்றிற்கு உட்படாத திரிபு பிராகிருதச் சிதைவு எனப்படும்.
பிராணகோசம் - உயிர்வளி உடம்பு.
பிராணமய கோசம்- ஐந்து உடம்புகளுள் ஒன்று. உயிர்வளி மயமாயுள்ளது.
பிராணலிங்கம்- வீர சைவர்தம் உடலில் பூண்டுப் பூசிக்கும் இலிங்கம்.
பிராணாயாமம்- உயிர்வளியைத் தடுத்தல்.
'பிராணான்மாவாதம்- பிராணனே (உயிர் வளியே) ஆன்மா என்னும் கொள்கை. இக் கொள்கையினர் பிராணான்மா வாதிகள்.
பிராதி பதிகம்- பெயர்ச்சொல் மூலம். எ-டு ஒப்பிலா தாம்பி ராதிபதிகமாம் (சிசிபப 187)
பிராந்தி- மயக்கம் எ-டு மனப்பிராந்தி.
பிராப்தி- 8 சித்திகளில் ஒன்று. நினைத்த அளவில் எவர் உதவி யுமின்றி எங்கும் செல்லுதல்.
பிராமாணியம்- பிரமாணமுள்ள தன்மை.
பிராரத்தம், பிராரத்துவம் - ஊழ்வினை, நுகர் வினை, முன்செய் வினை.
பிராரத்த கன்மம்- ஓர் உயிர் ஒரு பிறப்பில் நுகர்வதற்கு அமைகின்ற வினையே இது.
பிரார்த்தம்- பிறர் பொருட்டு.
பிரார்த்தனை- வேண்டுகோள். நேர்த்திக் கடன். ஒரு குறிக்கோள் நோக்கி இறைவனை வேண்டுவது.
பிரான்- இறைவன், எம்பெருமான்.
பிரிநிலை- பிரிக்கும்நிலை வினைத் தொகை. இருவகை 1) இயை பின்மை: நிக்கும் பிரிநிலை - இவன் சாத்தனே. இது தேற்றம் எனப்படும் 2) பிறிதின் இயைபு: நீக்கும் நிலை- இவனே சாத்தன். பொதுவாக, இது பிரிநிலை ஏகாரம் ஆகும்.
பிரிப்பின்றி- உடனாதல்.
பிரிய அப்பிரியம்- விருப்பு வெறுப்பின்றி.
பிருங்கி- சத்தியை வணங்காது சிவனையே வழிபட்டமுனிவர்.
பிருகு, பிருகுசாபம்- பா. தீவி.
பிருதிவி- நிலம் அல்லது மண் 5. பூதங்களில் ஒன்று. கந்தத்தினின்றும் தோன்றுவது.
பிரேரகம்- செலுத்துதல், பிறப்பு.
பிரேரக அவத்தை- இலாடத்தில் ஆன்மா நிற்க, எல்லாக் கருவிகளும் தொழிற்பட, அறிவு இனிது விளங்குவதால் இதற்கு இப்பெயர்.
பிரேரகக் கருவிகள்- இவை 5 அதாவது, சுத்த தத்துவம் 5. பிரேரகாண்டம்- பா.காண்டம்.
பிரேரகாசாரியன்- சைவத்திற்குரிய மாணாக்கர்க்குத் தக்க ஆசிரியரைக் காட்டி உய்விப்பவன்.
பிரேரரி - உண்டாதல், சத்தி பிரேரரிப்பது.
பிள்ளை- சிறுவன். திருஞான சம்பந்தர் அவர் சிறுவனாக இருந்த பொழுது பார்வதி ஞானப் பால் ஊட்டியது. எ-டு சுரந்துண்டார் பிள்ளை எனச்சொல்லி (திப 54).
பிறவாநெறி- வீடுபேறு.
பிறப்பு- உலகியல், நமசிவாய.
பிறவாமை- இவ்வுலகில் பிறவா திருத்தல். அடியார் வேண்டுவது இதே.
பிறழ்தல்- மாறுபடுதல்.
பிறிதின் இயைபு நீக்குதல் - மற்றொன்றின் தொடர்பை விலக்குதல்.
பிறிதின் கிழமை- தன்னை வேறாவது. ஒரு பொருளை எனது என்று கூறுமிடத்து அதனைத் தனக்கு வேறாகக் கருதிக் கூறுதல் ஒ. தற்கிழமை.
பின்செய்வினை- ஆகாமிய வினை.
பின்னம்- சிறியது. சிதைவு, எ-டு 1) சின்னாபின்னம் 2) பின்னமாகிப் பிரமத்தை (சிசிப 253).
பின்னமாய்- சிறியதாய். எ-டு பின்னமாய் வன்னங்கள் தோற்றம்.
பின்னுதல்- இரண்டறச் சேர்தல்.
பீ
பீசம்- விதை, விரை. வீசம் எனத்தமிழில் தற்பவமாகும்.
பீலி- மயில்தோகை. எ-டு உண்டு பாயினோடு பீலிமேல் (சிசி பபl43).
பீலியார்- சமணர்.
பு
புகழ் சீவன் முத்தர்- மிக்கதொரு பக்குவத்தில் மிகு சத்திநி பாதம் மேவியவர். ஞானம் விளைந்தவர். குருவழி நிட்டை புரிந்தவர். (சிசி சுப 281)
புகழ்சோழ நாயனார் - அரசர். உறையூர்-சோழநாடு. சிறந்த சிவ பத்தர். அதியமானுடன் போர் தொடுத்த பொழுது, அவன் படை வீரர்கள் தலைகளை இவன் வீரர்கள் வெட்டிக் கொணர்ந்து காட்டினார். அத்தலைகளில் ஒன்று சிவனடியார் தலையாய் இருக்க, அத்தலையை ஏந்தித் திருவைந்தெழுத்து ஒதித் தீக்குளித்தவர். சங்கவழிபாடு (63).
புகழ்த்துணை நாயனார் - ஆதி சைவர். செருவிலிபுத்துர்-சோழநாடு. உலகில் பஞ்சம் வந்தபொழுது சிவவழி பாட்டை முட்டின்றிச் செய்து வந்தவர். அக்காலை ஒருநாள் பசி மிகுதியால் இறைவன் முடி மீது திருமஞ்சனக் குடத்தை வீழ்த்தித் தானும் மயங்கிவிழ, இறைவனால் பஞ்சம் நீங்கும் வரை படிக்காசு கொடுக்கப்பட்டவர். இலிங்க வழிபாடு (63).
புக்கு - மறைந்து.
புகுதல்- செல்லுதல்.
புகுந்து- வணங்கித்தோன்றுதல்.
புசிப்பு - நுகர்வு.
புட்கள் - பறவைகள் புட்பம் - பூ.
புடை நூல் - சார்பு நூல் எ-டு சங்கற்ப நிராகரணம். பா. நூல்
புணர்தல்- தலைப்படல்.
புண்டரம் - சந்தனம், நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் இடுங்குறி.
புண்டரிகம் - தாமரை, வண்டு.
புண்டரிகத்தாள்- செந்தாமரை மலர் திருவடி.
புண்டரிகன் - திருமால்.
புண்டரிகை - இலக்குமி.
புண்ணியம் - நல்வினை, அற வினை. சிவனை நோக்கிச் செய்யப்படுவது சிவபுண்ணியம் அல்லது பதி புண்ணியம். உயிர்கள் முதலியவறறை நோக்கிச் செய்யப்படுவது பசு புண்னியம். புண்ணியம், தவம் என்பவை ஒரு பொருட் சொற்கள். ஆகவே, ஞானத்தைக் கொடுக்கக்கூடிய தவங்கள் பதிபுண்ணியமாகிய சிவ புண்ணியமே. புண்ணியம் தமிழில் அறம் எனப்படும் தானம், கல்வி, தவம், ஒழுக்கம் என இது நால்வகை.
புண்ணும்- புண்ணுடம்புத் துன்பம்.
புத்தசமயத்தவர் பெயர்- சாக்கியர், தேரர், பெளத்தர், சீவகர்.
புத்த மதம் - வேதநெறி ஏற்காத சமயம். வேறுபெயர் சாக்கிய மதம். இது ஒரு வகைதேர மதம். சாக்கிய இனத்தில் தோன்றியதால், சாக்கிய மதம் எனப் பெயர் பெற்றது.
புத்தர்- 1) உயிர் குணப்பொருளே; குணம் அன்று முத்திநிலையில் உயிர்க்கு அறிவு விழைவுச் செயல்கள் தொழில் இல்லை என்று இவர் கூறுவர். 2) கெளதம புத்தர்.
புத்தர் உபதேசிகள் - மத்தியா மிகர், யோகாசாரர், வைபாடிகர், செளத்திராத்திரகர் என நால்வர். இப்பெயரால் அமைந்த மதங்களாவன; மாத்திமிகம், யோகாசாரம், வைபாடிகம், செளத்திராந்திரிகம்.
புத்தர் நால்வர் - பா. புத்த உபதேசிகள்.
புத்தன்- புத்த மதத்தைத் தோற்றுவித்த கெளதம முனி.
புத்தி, புந்தி- அறிவு. ஒரு தத்துவம் அதாவது, நுகர்வில் பட்ட பொருளை இன்னதென அறிவது. அகக் கருவி 4இல் ஒன்று. சத்துவம் மிகுந்து, இராசதம், தாமதம் குறைந்து இருக்கும். இன்பம், துன்பம், மயக்கம் இதில் தோன்றும். அவற்றை உணர்ந்து ஆன்மா நுகரும்.
புத்தி இந்திரியம், எந்திரம் - அறிவுப்பொறி 5.
புத்தி தத்துவம் - தத்துவம் 36இல் ஒன்று.
புத்திபூர்வம்- அறிந்து செய்யும் வினை. ஒ. அபுத்திபூர்வம்.
புத்திமன் - புத்தி எ-டு புத்திமன் காரியத்தால் பூதாதி புருடன் தானும் (சிசிசுப37).
புத்திர மார்க்கம் - மகன்மை நெறி. பா. மார்க்கம்.
புத்திவிருத்தி- மனத்தின் தொழில்.
புத்தேன் - புதுமை, தெய்வம்.
புத்தேளிர் - தேவர்.
புமான் - புருட தத்துவம்.
புயல்வண்ணன்- திருமால். புரங்கொல் நூல் - அருச்சுனன் போர் செய்யத் தேரிலே ஏறி நின்று, “இன்று பகைவர்களாக இருப்பவர்கள் எல்லாம் என்னுடைய சுற்றத்தாரே. இவர்களைக் கொன்று அரசாள மாட்டேன்”, என்றான். அவனுக்குத் தேர்ப்பாகனாக இருந்த கண்ணன், அருச்சுனன் மனம் தேறக் கூறியதாவது, "கொல்வது எல்லாம் யாமே செய்வோம். நீ கவலற்க” இது மயக்கச் சொல். திரிபுரத்துள்ளோர் சிவலிங்கத்தைக் கைவிடும் பொருட்டுத் திருமால் புத்த முனிவராக இருந்து தெய்வம் ஒன்றில்லை என்று மயக்குவித்துச் சிவலிங்கத் தைக் கைவிட்டனர். ஆகக் கண்ணன் மயக்குச் சொல் கொண்ட நூலும் சிவலிங்கத்தைக் கைவிட்ட நூலும் இங்குப் புரங்கொல்நூல் எனப்பட்டது. (சிசிபப 293).
புரணம் - நிறைவு.
புரம் - உடல், எ-டு புரங்கொல் நூல்.
புராணம் - உலகத் தோற்றம், ஒடுக்கம், தலைமுறைகள், மரபு வழிக் கதைகள் முதலியவற்றைக் கூறுவதால், ஐந்தழகு உடையது இது. புராணங்கள் ஒன்றுக்கு மற்றொன்று மாறுபடுவன போல் தோன்றினாலும், உண்மையில் அவை ஒற்றுமை கொண்டவை. உயர் நெறிகளைப் புகட்டுபவை. எ-டு பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம்.
புராணம் 18 - சிவபுராணம் 10, விட்டுணு புராணம் 4, பிரம புராணம் 2, சூரிய புராணம் 1, அக்கினி புராணம் 1.
புராணம் 10 - 1) சைவ புராணம் 2) கந்த புராணம் 3) இலிங்க புராணம் 4) கூர்ம புராணம் 5) வாமன புராணம் 6) வராக புராணம் 7) பெளடிய புராணம் 8) மச்ச புராணம் 9) மார்க்கண்டேயபுராணம் 10) பிரமாண்ட புராணம்.
புராணம் 4- விட்டுணு புராணம். 1) நாரதீய புராணம் 2) பாகவத புராணம் 3) கருட புராணம் 4) வைணவ புராணம்.
புராணம் 3- 1) பெரிய புராணம் 2) கந்த புராணம் 3) திருவிளையாடல் புராணம்.
புராணம் 2- 1) பிரம புராணம் 2) பதும புராணம்.
புராணம் 1- சூரிய புராணம் 1. அக்கினி புராணம் 1
புரி, புரிதல் - எப்பொழுதும் மேற்கொள்ளல், செய்தல்.
புரியட்டகம், புரியட்டக உடம்பு - எண் கருவி நுண்ணுடம்பு. அவையாவன. சுத்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், மனம், புத்தி, அகங்காரம்.
புரியட்டருபம் - புரியட்டக வடிவம் பூதான சரீரம் போனால் புரியட்ட ரூபம்.
புருடன் - 1) உயிர் 2) சிவம் 3) அறிவுடைப்பொருள். மூலாதாரத்தில் தொழிற்படும் ஒரே ஒரு கருவி. இங்கு உயிர்ப் படங்கல் என்னும் அவத்தை நிகழ்வது. இதன் குணம் அவித்தை என்றால், பின் அது சடமே. புலன்கள் வழிப்பொருள்களை இது உணரவல்லது. சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் கழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியா தீதம் என்னும் 5.அவத்தைகளை இது அடைவது. நெற்றிக்குநேரே புருவத்து - இடைவெளி உற்றுப்பார்க்கஒளிவிடும்மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று தெரிந்து கொண்டேனே - திருமூலர் இத் திருமந்திரச் செய்யுள் புருவநடு சிறப்பை விளக்குவது.
புருவநடுவிலிருந்து - அமிழ்தம் ஒழுகும் என்பது யோக நூல் கருத்து. இங்கு அந்த அமிழ்தமே நெய்யாகவும் சுழுமுனை (இரடகலை) என்னும் நாடிகளே சுருக்குச் சருவங்களாகவும் கொண்டு, உந்தித்தானத்தில் ஞானமாகிய தீயில் ஓமம் செய்தல் வேண்டும் என்பது கருத்து.
புருட தத்துவம் - ஐவகையால் உறுபயன்கள் நுகரவரும் காலம். இது சுத்தா சுத்தம் 7இல் ஒன்று. மும்மலங்களோடு கூடியது.
புருடோர்த்தம் - நூற்பயன் நான்கு அறம், பொருள், இன்பம், வீடு.
புருடோத்தம நம்பி -9 ஆம் திருமுறை பாடிய 9 பேரில் ஒருவர்.
புருவ நடு - இலாடம், நுதல், விந்துத் தானம்.
புருவநடு சாக்கிரம் - இதில் நிகழ்பவை இரண்டு கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்.
புரையும் - ஒழிந்து நிற்கும். எ.டு. இருளில் ஒளி புரையும்.
புரோகிதன் - வைதிக வினை செய்பவன்.
புரோதாயம் - உடலை சுத்திக்காகச் செய்யும் விடியற்காலத்து சடங்கு குளியல்.
புலப்படக் காண்டல் - வெளிப்பட்டுத் தோன்றக் காண்டல்.
புலப்படுதல் - அறிவித்தல்.
புலவர் - அளவை நூல் உணர்ந்தோர்.
புலன் - பொறிநுகர்வு. கண்பார்த்தல், செவி-கேட்டல் மூக்கு- முகர்தல், நாக்கு சுவைத்தல், மெய் ஊறு.
புலன் ஐந்து - ஊறு, சுவை, பார்த்தல், கேட்டல், முகர்தல்.
புலன் மூன்று - தொழில், அறிவு, விழைவு.
புலனிகந்த காட்சி - அறிவியல் காட்சி அல்லது யோகக் காட்சி சார்ந்தது. இதுபற்றி இன்று மேலை நாடுகளில் முறையாக ஆய்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. சைவசித்தாந்தம் பயில்வோர் அறிவியல் காட்சி, சிவஞான காட்சி ஆகிய இரண்டையும் ஊன்றிக்கற்பது நல்லது.
புல்லறிவு - சிற்றறிவு.
புலிஅதள் - புலித்தோல் ஆடை
புலியூர்கள் - 1) பெரும் பற்றப் புலியூர் (சிதம்பரம்) 2) திருப்பாதிரிப் புலியூர் 3) ஓமாம் புலியூர் (சிதம்பரம்) 4) எருச்சத்தம்புலியூர் 5) பெரும் புலியூர்,
புலைச்சி - இழியவள்.
புலையர் -இழிந்தார்.
புவனம் - உலகம் என்று சிறப்பாக கூறப்படுவது. இது 224, 36 தத்துவங்களிலும் புவனங்கள் உள்ளன. அவற்றில் அவற்றிற்குரிய தகுதியாளர் வாழ்கின்றனர். ஒவ்வொரு புவனமும் பல அண்டங்களைக்கொண்டது.
புவனத்துவா - புவன வழி. அத்துவா 6இல் ஒன்று.
புளகம்
பூசலார் நாயனார்
புளகம் - மயிர்ச் சிலிர்ப்பு, எ-டு : சீதப் புளகம் அரும்ப
புளகம்பம் - மகிழ்ச்சி.
புறம் - 1) மறம் 2) உள். ஒ. அகம் 3) புறத்திணை.
புற அந்தக்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என நான்கு.
புறஇருள்- புறத்தே காணப்படும் பூத இருள்.
புறக்கருவி - வாயரதி, சோத்திராதி
புறச்சமயங்கள் - வேதத்தை மட்டும் ஏற்றுச் சிவாகமத்தை ஏற்காது மறுக்கின்ற சமயங்கள். அவையாவன : தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் (பாஞ்சலம்) என ஆறு வகை.
புறத்தடியார் - சைவமல்லா ஏனைய சமயத்தவர்.
புறத்திணை - புறஒழுக்கம் ஒ.அகத்திணை.
புறம்பு - புறத்தே எ-டு உள்ளும் புறம்பும் நினைப்பு அறின் (திஉ 26) 2) வெளி.
புறப்புறச் சமயங்கள் - வேதம், ஆகமம் ஆகிய இரண்டையும் மறுக்கும் சமயங்கள். அவையாவன: உலகாயதம், மாத்துமிகம், யோகாசாரம், சவுத்திராந்திகம், ஆருகதம், வைபாடிகம் என ஆறுவகை. இவற்றில் முதலும் கடையும் தவிர, ஏனையவை பெளத்தம் சார்ந்தவை
புறப்பூசை - கோயில் முதலிய இடங்களில் சிவபெருமானுக்குப் புரியும் அருச்சனை.
புறநடை - ஒழிபு. கூறப்பட வேண்டிய பொருள்கள் பலவற்றில் முன்னமே கூறியவை போக, எஞ்சி நிற்கின்ற
ஒன்றைக் கூறுவது. சிவஞான போதத்தில் நூற்பா நூற்பா 6.க்குப் புறநடை7. இதனை வடமொழியில் வாக்கிய சேடம் என்பர்.
புறன் - உலகாயதர் முதலிய புறச்சமயத்தார் கூறும் புன்மொழி. எ-டு புணராமை கேளாம் புறன் (சிபோ அவையடக்கம்)
புற்கலம்- கல், இரும்பு, மரம் முதலியவை.
புற்பலாலம் - புல்லும் வைக்கோலும்.
புற்று - கரையான் புற்று (பாம்புப் புற்று).
புனர் உற்பவம் - மீளப் பிறத்தல்.
புனர்பூசை - சிறப்புப் பூசைக்கு மறுநாள் செய்யப்படுவது.
புனருத்தி - கூறியது கூறல் என்னும் குற்றம்.
புனல் - ஆறு, நீர்.
புன்சமயம்- அக,புறச்சமயங்கள்.
புன்னகம் - பாம்பு.
புனித மாயை - சுத்த மாயை.
புனிற்று - புதிய, புத்திளம்.
புனிதன் - சிவன்.
புனைந்துகோடல்- சூடுதல்.
புனைதல் -1) தலைமேல் சூடி வணங்குதல் 2) அடங்கி நிற்றல்.
புனைமொழி- புனைந்து கூறும்
சொல்.
பூ -
பூ - தாமரைப் பூ, மலர் தூவி வழிபடுதல் மலரனைய உந்தி.
பூசலார் நாயனார் - மறையவர்.
திருநின்றவூர்-தொண்டைநாடு மனக்கோயில் கட்டி வெற்றி பெற்றவர். பல்லவ மன்னன்
199
பூசனை, பூசை
பூதம்5
கட்டிய கோயிலின் குட முழுக்கு நாளையும் மாற்றி வைக்கச் செய்தவர். இலிங்க வழிபாடு (63).
பூசனை, பூசை - பூ கொண்டு வழிபடுதல். இது அகப்பூசை, புறப்பூசை என இருவகை முன்னதில் பருப்பூக்களும் பின்னதில் கற்பனைப் பூக்களும் பயன்படும். இவற்றில் வெவ்வேறு மந்திரங்களால் வெவ்வேறு செயல்கள் செய்யப்படும். அத்தகைய பூசை கிரியா பூசை எனப்படும். சிவன் மேனி வெவ்வேறு மந்திரங்களால் கற்பிக்கப்படும்.
பூசை,ஞான - இதில் அஞ்செ ழுத்து மந்திரம். ஒன்றே எல் லாச் செயல்களுக்கும் விதிக்கப் பட்டுள்ளது.
அஞ்செழுத்தால் உள்ளம் அரன் உடைமை கண்டு
அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் அண்டனாம் சேடனாம் அங்கு ( சிபோ பா 59)
பூசாத்துதல் - எட்டுப்பூக்கள் சாத்துதல். புறப்பூசையில் அதற்கு உண்மையான எட்டுப் பூக்கள் சாத்தப்படும். அவை யாவன. புன்னை, வெள்ளெருக்கு,சண்பகம்,நந்தியவட்டை, நீலோற்பவம், பாதிரி அலரி, செந்தாமரை.
அகப்பூசைக்குரிய குணமலர்களாவன: கொல்லாமை, ஐம்பொறியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.
பூசை அங்கி - பூசைக்குரிய நெருப்பு. ஓமமும் தியானமும் நெருப்பும் பூசையுறுப்புகள். இம்மூன்றும் செய்தற்குரிய இடங்கள் முறையே இதயம், உந்தி, புருவநடு ஆகும்.
பூசைக்காலச்சிறப்புத்தலங்கள் - 1) திருக்குற்றாலம் திருவனந்தில் சிறப்பு. 2) இராமேச்சுரம் - காலை பூசைச் சிறப்பு 3) திரு ஆனைக்கா - மதியப் பூசைச் சிறப்பு 4) திருஆரூர் சாயுங் கால பூசைச் சிறப்பு 5) மதுரை - இராக்கால பூசைச் சிறப்பு 6) சிதம்பரம்-அர்த்த சாம பூசைச் சிறப்பு.
'பூஞை - பூனை.
பூட்கை -மாறுகோள். எ-டு
ஓடாப் பூட்கை நாடி
பூட்டு- அரை.
பூட்டுவிற் பொருள்கோள் - வில்லின் நுனியும் அடியும் நாணினால் தொடர்பு கொண்டு இருப்பது போல், இறுதியும் முதலும் தொடர்பு கொண்டு பொருந்துதல். இது செய்யுளுக்குரியது. சிவஞானபோதத் தில் பசு உண்மை கூறும் 3ஆம் நூற்பாவில் ஆன்மா என்னும் இறுதியும் உளது என்னும் முதலும் தொடர்புபட்டு ஆன்மா உளது என்னும் பொருளைத் தருவது.
பூண் -பூணுதல், அணிகலன்,திருவருள்.
பூத -கடந்த காலம்.
பூதம் -1) பூதப்பொருள், மூலப்பொருள்2) பேய்.
பூதம் 5-வான் (ஆகாயம்), காற்று (வாயு), தீ (தேயு)நீர்(அப்பு), நிலம் (பிருதிவி).
200
பூதக்குணமும் தொழிலும்
பூதம்
குணம்
தொழில்
1) மண்
கடினம்
தாங்குதல்
2) நீர்
குளிர்ச்சி
பதமாக்கல்
3) தீ
சுடல்
ஒன்றுவித்தல்
4) காற்று
பரவியிருத்தல்
திரட்டல்
5) வான்
நிலைத்திருத்தல்
இடமளித்தல்
பூதக் குறிகள்
பூதம்
குறி
1) மண்
வச்சிராயுதம்
2) நீர்
தாமரை
3) தீ
சுவத்திகம்(ஸ்வத்திக்)
4) காற்று
அறுபுள்ளி
5) வான்
அமுதவிந்து
பூதத் தோற்றம்
பூதம்
தோன்றும் மூலம்
1) வான்
ஓசை
2) காற்று
ஊறு
3) தீ
உருவம்
4) நீர்
சுவை
5) நிலம்
நாற்றம்
பூத நிறங்கள்
பூதம்
நிறம்
எழுத்து
1) நிலம்
பொன்னிறம்
ல
2) நீர்
வெண்மை
வ
3) காற்று
கருமை
ர
4) அனல்
சிவப்பு
ய
5) வான்
புகைநிறம்
அ
பூத வடிவங்கள்
பூதம்
வடிவம்
1)புவி
சதுரம்-நாற்கோணம்
2)புனல்
அரைத் திங்கள்,இருகோணம்
3)அனல்
முக்கோணம்
4)காற்று
அறுகோணம்
5)வான்
வட்டம்
பூதாசார உடம்பு - சொர்க்க இன்பத்தை நுகர, ஆன்மா எடுக்கும் தெய்விக உடல், ஐம்பூதங்களாலானது.
பூதசுத்தி - ஆன்மசுத்தி உறுப்பு, செய்த பாவங்களை நீகுவதற்குரிய எழுவாய்.
பூதமயம் - பூதவடிவம்.
பூதலக்கிழத்தி - நிலமகள்
பூந்துருத்தி நம்பி காட நம்பி - 9ஆம் திருமுறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
பூதாதி - பூதத்தை முதற்காரணமாகக் கொண்ட உலகு.
பூந்தொடை -பூ மாலை
பூப்பலி - பூசனை.
பூமகள், மடந்தை, மாது - இலக்குமி.
பூமா - பூ மா; இருபொருள். 1) மலர், திருமகள் 2) பூவுலகு, விலங்கு
பூரணம் - நிறைவு.
பூரித்தல் - நிறைத்தல், பொலிதல்
பூருவ பக்கம் - விடயமும் பிறவுமாகச் சித்தாந்தத்திற்குப் புறம்பாய்ப் பிறரால் கூறப்பட்ட வாக்கியம்.
பூருவ மீமாஞ்சை - கருமமே சிறந்தது எனக் கூறும் தத்துவ நூல். ஆகவே, இது கரும சூத்திரம் எனப்படும்.
பூர்(வாங்க)க் காட்சி அனுமானம்- முழுக் காட்சிக் கருதல். வேறுபெயர் தருமாதருமி அனுமானம் பூருவதரிச பிரமாணம். முன்னர் மலரையும் அதன் மணத்தையுங் கண்ட ஒருவன் மலரைக் காணாது மணத்தை
மட்டும் நுகரும்போது, மணத்தில் மலரை அனுமித்து அறிதல்
பூவலயம் - பூவுலகம்.
பூவன் - நான்முகன் எடுபடைக்கும் பூவன்.
பூழி - தூள்.
பெண் (தனி) அடியார்கள் - மூவர். காரைக்கால் அம்மையார் (திருமுறை ஆசிரியர்), மங்கையற்கரசி, இசைஞானியார். இவர்கள் நாயன்மார் வரிசையில் அடங்குவர்.
பெண்பாகன் - சிவன்.
பெணே - பெண்ணே.
பெத்தம் - பாசபந்தம், கட்டு
பெத்த காலம் - ஆன்மா பாசபந்தத்திற்கு உட்பட்ட காலம்.
பெத்த முத்தி - 1) பந்தமும் வீடும் 2) இலயமுத்தி.
பெத்தமுத்திப்பயன்கள் - பெத்தம், முத்தி ஆகிய இரண்டிலும் உயிர்கள் உணரும் பொருளை இறைவனும் உடன் நின்று உணரினும், பெத்த காலத்தில் உயிர் இறைவனை உணர்வதில்லை. எல்லாவற்றையும் அது தானே அறிவதாகவும் செய்வதாகவும் கருதுகிறது. அதனால், அப்பொழுது, இறைவன் அவ்வுயிர்களேயாய்த் தான் தோன்றாமல் நிற்கின்றான். அதனால் அப்பொழுது உண்டாகும் விளைவுகள் எல்லாம் உயிர்களுக்கே உரியன. முத்திக் காலத்தில் அதற்கு நேர் மாறாக உயிர்கள் தம்மையும் தமது அறிவு விழைவுச் செயல்களையும் சிறிது உணராமல் எவ்விடத்தும் இறைவனையே உணர்ந்து நிற்றலால், அப்பொழுது ஏற்படும் விளைவுகளில் இறைவனது எல்லையிலா இன்பத்தைத் தவிர, ஏனைய யாவும் இறைவனுடையதாகவே ஆகின்றன. ஆகவே, பெத்த நிலையில் உயிர்கள் வினைகளால் தாக்கப்படுதலும், முத்தி நிலையில் வினையில் தாக்கப்படாமலும் இருக்கும்.
பெத்தர் - பாசத்தோடு கூடிய உயிர்கள்.
பெம்மான் - கடவுள், எம்மான்.
பெயர்த்து உணர் - மாறி மாறி உணர்கின்ற.
பெரியான் - பெருமை உடையவன்.
பெருஞ்சாந்தி - கோயில் பெருவிழா முடிவில் நடக்கும் பெரிய திருமுழுக்கு.
பெருஞ்சோதி - பெம்மான்.
பெருந் தீ - வடவா முகாக் கனி என்னும் பசி,
பெரும்பதம் - பெரிய இறைப்பேறு.
பெரும்பிரான் - சிவன்
பெரும்பெயர் - மகாவாக்கியம். அஞ்செழுத்து மந்திரம் அல்லது சைவ மூலமந்திரம். இது பதி, பசு, பாசம் ஆகிய மூன்றையும் குறிப்பது. இருப்பினும் தலைமைப் பற்றிப் பதியே அதன் பொருளாகக் கொள்ளப்பட்டது. வடமொழியில் இதனை மகாவாக்கியம் என்பர். ஒவ்வொரு வேதத்தின் கருத்தையும் ஒரு சொல்லில் அடக்கிக் கூறும் மகாவாக்கியங்கள். வேதத்திலுள்ளன. அவை வேதாந்த மகாவாக்கியங்கள் சித்தாந்தத்தில் அவை சித்தாந்த
மகா வாக்கியங்கள் அல்லது பெரும்பெயர்கள் எனப்படும். பா. ஈண்டிய பெரும்பெயர்.
பெருமிழலைக் குறும்ப நாயனார் - மிழலை சோழநாடு. சுந்தரரைக்கு குருவாக எண்ணி யோகத்தில் இருந்தவர். குரு வழிபாடு (63)
பெருவடிவு - இறைவன்.
பெருவெழுத்து - நமசிவாய என்பதில் சிவபெருமானைக் குறிக்கும் சிகரம் என்னும் சிவம்.
பெறுதல் - அடைதல்.
பெற்றி - பெருமை, பேறு. எ-டு பெருமான் பெற்றியே பெற்றி.
பெற்றிமை - சாதி, இனம், பிரிவு.
பெறுவிக்கப்பட்ட - தோற்றுவிக்கப்பட்ட
பேசா எழுத்து - சிகாரம் ஆகிய சிவம்.
பேசாமை பெற்று - திருவைந்தெழுத்து ஓதுதல் இது ஓதுமுறை. ஒலிக்கும் முறை, நிற்குமுறை என மூவகை ஓது முறை பிறர் செவிக்குக் கேட்பது. ஒலிக்குமுறை: தன் செவிக்கு மட்டும் கேட்பது. நிற்குமுறை உள்ளத்தமைவது.
பேசும் எழுத்து - வகாரம்
பேதம் - வேறுபாடு. இது 14. சிவபேதம் 7. சத்திபேதம் 7. ஒ. அபேதம், பேதாபேதம்
பேத சித்தாந்தம் - உயிரும் இறைவனும் இருளும் ஒளியும் போல் உள்ளவர்கள் என்னும் கொள்கை.
பேதவாதம் - சிவனுக்கு வேற்றுமை கூறுங்கொள்கை. இக்கொள்கையினர் பேதவாதிகள்.
பேதவாத சைவம் - ஐம் பொறிகளை நீக்கி மெய்ப்பொருளை அடைதல் தேவை இல்லை என்னுங் கொள்கையினர். ஏனெனில், கருவிகளை நீக்கினால், செயல் ஒன்றும் இல்லை என்பதே இவர்கள் வாதம் இக்கொள்கை உடையவர் பேதவாத சைவர்.
பேதாபேதம் - வேறு வேறு அல்லது வேற்றுமையில் ஒற்றுமை அத்து வைதத்துக்கும் விசிட்டாத்து வைதத்துக்கும் நடு நிலையான ஒரு முடிவு.
பேதாபேத வாதம் - உயிரும் இறைவனும் ஒன்றுதான்; வேறுதான் என்னுங் கொள்கை.
பேதை - அறிவிலி. ஒ மேதை
பேய் - பிசாசு, அருவம்
பேய்த்தேர் - கானல்நீர்.
பேரருள் உடையனாதல் - பதி இயல்புகளில் ஒன்று. இறைவன் அறிவே பேரறிவு. ஆகவே, அவன் பேரருள் உடையவனாதல் இயற்கை
பேரன்பு - திருவருள் அன்பு.
பேராமல் - மாறிப்பிறழாமல்
பேராளன் - இல்றைவன் பேராற்றல் படைத்தவன்.
பேரின்பம் - நிலைத்த இன்பம். வேறு பெயர் முத்தி, வீடுபேறு, பிறவா நெறி சிவஞான போதம் 10ஆம் நூற்பாவில் உயிர் ஏகனாகி இறைபணி நிற்றலால், மலம் மாயை வினை நீங்கும் என்றும் 11ஆம் நூற்பாவில் அவை நீங்கிய இடத்து உயிர் பேரின்பம் எய்தும் என்றும் கூறப்படுகின்றன. சிவஞான சித்தியார் இவ்வின்பத்தை எட்டு வகையாகப் பிரிக்கின்றார். பா. முத்தி.
அவனே தானேயாகிய அந்நெறி ஏகனாகி இறைபணிநிற்க மலமாயை தன்னொடுவல் வினை இன்றே (நூற்பா10) அயரா அன்பின் அரன் கழல்
செலுமே (நூற்பா 11) பேரின்பத்தை அளிப்பவை ஞானமும் சாத்திரமும் ஆகும்.
பேறு - நலம். செல்வம் எ-டு யான் பெற்ற பேறு இவ்வையகம் பெறுக.
பேறு 16 - 1) புகழ் 2) கல்வி 3)வலிமை 4) வெற்றி 5) நன் மக்கள் 6) பொன் 7)நெல் 8) நல்லூழ் 9) நுகர்ச்சி 10) அறிவு 11) அழகு 12) நோயின்மை 13) வாழ் நாள் 14) பெருமை 15) இளமை 16) துணிவு.
பேறுஇன்மை-பயனில்லாமை
பைசந்தி - பைசந்தி வாக்கு அல்லது மொழி. சிந்தனைதனில் உருவாவது உயிருடன் சேர்ந்து வருவது, வாக்கு 4இல் ஒன்று.
பைம்மறி - பையைத் திருப்பிப் பார்த்தல். பைமறியாப் பார்த்தல் மறிக்கப்பட்டவை போலப் பார்த்தல் மறித்தல் - உள் வெளியாகத் திருப்பல்.
பைய - மெல்ல, மெதுவாக
பையக் கொடுத்தார் பரங்கெட்டார் - பரங்கெட்டார் என்பது இங்கு 63 சிவனடியார்களைக் குறிக்கும். தங்களை இவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகச் சிவனுக்கு ஒப்படைத்தவர்கள்.
பைரவர் -துர்க்கையின் படைக்கணங்கள்.
பைரவன் - சிவ மூர்த்தங்களுள் ஒருவரான வைரவக் கடவுள்.
பைரவி - துர்க்கை
பொகுட்டு - கொட்டை காய், அதாவது, தாமரை மலர் இதழ்களுக்குநடுவில் இருக்கும்பகுதி இதுவே பின்காயாவதும் காயா வதற்கு முன் தாமரை விதைகள் இப்பகுதியில் மெல்லிய உருவில் இருக்கும். பொகுட்டு முற்றிய நிலையில், அவ்விதைகள் தெளிவாகத் தெரியும் பொதிந்து கொள்ளுதல் அடக்கிக் கொள்ளுதல்
பொசிந்து- கசிந்து.
பொதுக் காட்சி - மூவகைக் காட்சிகளில் ஒன்று.
பொது நீக்கல் -ஒருவர்க்கே உரிமையாக்கல்.
பொதுவிதி - முயற்சியைவிட ஊழே வலியது என்பது. பா. சிறப்பு விதி.
பொதுவியல்பு - பொது இலக்கணம்.
பொய் - சுட்டுணர்வு, ஒ. மெய்,
பொய்கை - நீர்நிலை
பொய்கைவாய் முதலை - பொய்கையில் முதலை வாயில் யானை சிக்குண்டு கரையேறமாட்டாமல், தவித்து ஆதி மூலமே என அரற்றி அழைக்கத் திருமால் பறந்தோடி வந்து அம்முதலை வாயினின்று அதனை விடுவித்து, அவ்விரு உயிர்களுக்கும் வைகுண்ட பதவிஅளித்தார் (சிசிபப268),
பொருட்பிரிவு - உடைப் பொருள்; உடைய பொருள் எனப் பொருள் இருவகை. உயிர் உடைப்பொருள். இறைவன் உடைய பொருள்.
பொருட்பிறிதின் கிழமை - தன்னோடு ஒற்றுமையில்லாப் பொருள். எ.டு. குமரன்வேல்.
பொரும் அறையார் - தவம் மிக்கோர்.
பொருள் - அர்த்தம்
பொருள் 7 - சிவம், பதி, பசு, ஆணவம், கன்மம், சுத்த மாயை, அசுத்த மாயை.
பொருள் 6 - சிவத்தை நீக்கிய ஏனைய ஆறு.
பொருள் 5 - பதி, பசு, ஆணவம், கன்மம், மாயை.
பொருள் 4 - 1) சிவம், பதி, பசு, பாசம் 2) அறம், பொருள், இன்பம் , வீடு.
பொருள் 3 - பதி, பசு, பாசம்.
பொருள் இயல்பு உரைத்தல் - வரும் பொருள் உரைத்தல். இது மூவகை வாழ்த்துள் ஒன்று.
பொருள் இயல்பு கூறும் - வாக்கியம் பொருளின் இலக்கணம் கூறும் தொடர்மொழி
பொருள் உலகம் - அர்த்தப் பிரபஞ்சம். இதில் புவனமும் (224) தத்துவமும் (36) அடங்கும். மூன்று மாயையிலிருந்து தோன்றுவது. மொழியால் அறியப்படும் பொருள்கள் இதில் உள்ளன. இதில் தனு, கரணம், போகம் ஆகியவையும் உண்டு. தனு, கரணம், புவனம், போகம் ஆகிய நான்கும் மாயையிலிருந்தே உண்டாகுபவை.
பொருள் சொல்லத் தேவை மூன்று - ஒரு பொருளைச் சொல்வதற்கு உத்தேசம், இலக்கணம், பரீட்சை என்னும் மூன்றும் வேண்டும்.
உத்தேசம் : சொல்லப்படும் பொருளைப் பெயர், மாத்திரையால் எடுத்துரைத்தல்.
இலக்கணம் : அப்பொருளின் சிறப்பியல்பை எடுத்துரைத்தல்.
பரீட்சை : அவ்வியல்பு அப்பொருளுக்கு உண்டோ இல்லையோ என ஆராய்தல், உத்தேசம்- இனங்கூறல், இலக்கணம் - இயல்பு.
பரீட்சை - ஆய்வு
பொருள்படா - உண்மை ஆகா.
பொல்லாங்கு - தீங்கு.
பொல்லார் - பொல்லாப்பிள்ளையார், சிவஞான போதம் மங்கல வாழ்த்தில் குறிப்பிடப்படும் கணபதி திருவெண்ணெய் நல்லூரிலுள்ள மெய்கண்டாரின் வழிபடு தெய்வம்.
பொழுது - போது 1) சிறுபொழுது: மாலை, யாமம், வைகறை, விடியல்,நண்பகல், ஏற்பாடு என ஆறு 2) பெரும் பொழுது : பா. பருவம்.
பொள்ளார் - உளியால் பொளிந்து செதுக்கப்படாதது. இயற்கையாகத் தானே தோன்றும் உருவம். சுயம்பு. இதுபொல்லார் என மருவிற்று.
பொற்கை - பொன் கை பொலிவுள்ள கை, எ-டு உற்கை தரும் பொற்கை (திப 68).
பொற்கொழு - பொன்னாலான கொழு, எ-டு பொற்கொழு கொண்டு வரகுக்கு உழுவதேன்? (திஉ38).
பொற்பிதிர் - பசலை.
பொற்பினான் -அழகுள்ளவன், இறைவன்.
பொற்பு -அழகு, பொலிவு. எ-டு பொற்புள்ள இறைவன்
பொறி - இந்திரியம், கருவி. அறிவுப் பொறி 5 தொழிற் பொறி 5. பொறிகள் புலன்கள்
உடையவை. எ-டு கண்பார்த்தல் ஒ. புலன்.
பொறிபுலன் தொழில் அட்டவணை
அறிவுப் பொறி புலன் தொழிற் பொறி புலன் இடம்
1. செவி ஓசை வாக்கு மொழி பேசுதல் வானம்
2. தோல் ஊறு பாதம் கால் நடத்தல் வளி
3. கண் பார்த்தல் பாணி கை ஏற்றல் தீ
4. நா சுவை பாயு எருவாய் மலக்கழிப்பு நீர்
5. மூக்கு முகர்தல் உபத்தம் கருவாய் இனப்பெருக்கம் மண் (நிலம்)
பொறிபுலன் தோற்றம் -அகங்காரச் சத்துவத்திலிருந்து மனமும் ஐம்பொறிகளும், அகங்கார இராசதத்திலிருந்து தொழிற் பொறிகளும், அகங்காரத் தாமதத்திலிருந்து ஐம்புலன்களும் தோன்றுவன.
பொறியிலியேன் - பொறி இல்லாதவன்.
பொன் - கதிரவன்.
பொன் எயில் - பொற்கோட்டை அருகர் வாழுமிடம் எ-டு படர்வர் பொன் எயில் எனாய் (சிசிபப162),
பொன் எயில் இடம் - பொற் கோட்டைப் பதி, எ-டு ஏர்கொள் பொன் எயிலிடத்து (சிசி பப154)
பொன் ஒளி - பகலவனும் ஒளியும் போல, இறைவன் சிவனும் சத்தியுமாக இருக்கிறான்.
பொன் தாள் - பொலிவுள்ள இறைவனடி.
பொன்பார் - பொன்னான உலகம்
பொன்வாள் - பொன்னே போன்ற கதிரவன் ஒளி,
பொன்றுகை - அழிகை
பொன்னிறம் - கதிரவன் ஒளி
போகம் - 1)நுகர்ச்சி,நுகர்பொருள், பயன். இது பாவமும் புண்னியமும் ஆகும். எ-டு போக பாக்கியங்கள் (செல்வமும் நுகர்வும்). பா ஆணவம், 2) கடவுள் அவத்தை 3இல் ஞானமும் கிரியையும் சமமாக இருத்தல்
3) பெண், ஆடை அணிகலன், போசனம், தாம்பூலம், பரிமளம், பாட்டு, பூவமளி என எட்டு.
போக அவத்தை - உலகத்தைப் படைத்துக் காக்கும் சிவன் நிலை.
போக தத்துவம் - சதாசிவ தத்துவம்
போகமீன்ற புண்ணியன் - சிவன்
போக முத்தி - போக சிவத்தை அடைந்து உலகப் பற்றை விடுதல், சகல வகை ஆன்மாக்களுக்கும் போக சிவம் பதியே ஆகும். வேறுபெயர் நின்மலசுழுத்தி, சிவஞானபோதம் நூற்பா 9இல் "பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடிப் பாசமொருவ" என்பதால் கூறப்படுதல்
போகர் - தேவர்.
போகன் - சிவமூர்த்தங்களுள் ஒன்று.
போக்கியம் - 1) நுகர் பொருள் எ-டு குலவு போக போக்கியம் 2) மனம்.
போக்கிய கன்மம் பெளத்தம்
போக்கிய கன்மம் - கன்மமலத்துள் ஒன்று.
போக்கிய (போக) காண்டம் -
பா. காண்டம்.
போக்கு-இறப்பு. எ-டு போக்கு வரவு
புரிய (சிபோநூபா 2)ஒ.வரவு
போகி- 1) நுகர்வோர் ஒ.யோகி பா. ஆணவம் 2) உருவத் திரு மேனிகளில் ஒன்று. உமையொரு பாகனாக இருந்து உயிர்களுக்கு இன்பந்தருதல்.
போசதேவர் - சிவதத்துவத்தை விளக்கிய அறிஞர்.
போசராசன் -கல்விமான், தாராதி பதி. கி.பி. 1018-1060. தத்துவ பிரகாசிகை என்னும் நூல் இயற்றியவர். இது சித்தாந்த சைவ மதத்தை நிறுவுவது. இதற்குச் சோழநாட்டு அகோர சிவாசாரியரும் குமாரதேவரும் இயற்றிய உரைகள் உள்ளன. பின்னவர் இயற்றிய உரை வெளிவந்துள்ளது.
போதம் - உயிர் உணர்வு, ஐயம் அகற்றல் எ-டு சிவஞானபோதம், துகனபோதம் போதமே பொருளாய்த் தோன்றும் பொருள தாய் எழலால் போதம் (சிசி LIL | 135).
போதரும் - புலப்படும்.
போதல் -வருதல்.
போத்திருத் தத்துவங்கள் -இன்ப துன்பங்களை நுகருந்தன்மை. இதனை ஆணவம் நிகழ்த்துபவை. போதி -1)போதி மரம். புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றது. 2) அருள் அறம்5) பெளத்தசமாதி
போதித்தல் -அறிவித்தல்.
போது -1) காலம் 2) மலரும் அரும்பு.
போந்தது - வந்தது.
போந்த பயன்- பெறப்பட்ட
பயன்.
போம் - போகும், நீங்கும். சாவி
போம்
போம் ஆறு -போகுந்தன்மை, வழி.
போய் -பொய்.
போலி-அனுமானத்தில் நிகழும் பிழை. இது மூவகை 1) பக்கப் போலி-4(2) ஏதுப்போலி -21 (3) உவமைப் போலி 18 தோல் வித்தானம் 22யும் சேர்க்க போலி 65. இது சிவஞான சித்தியார் கணக்கு (சிசிசுப20)
போழ்தல் - பிளத்தல்.
போற்றிப் பஃறொடை -முழு முதற் கடவுளாகிய சிவன், ஆன் மாக்களின் பாசத்தை நீக்கித் தன்பால் அவற்றை ஏற்கும் முறையில் பல வகையிலும் கூறும் நூல். போற்றி -பாது காத்தல், பஃறொடை பல் தொடை 95 கண்ணிகளைக் கொண்டது. தோத்திரமும் சாத்திரமுமாகும்.14போற்றிகள் உள்ளன. இதற்குப் பழைய உரை ஒன்றுள்ளது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார்.
போனகம்- கடவுளுக்குப் படைக்கும் உணவு.
போனகக்குருத்து-கடவுளுக்கு அமுது படைக்கும் வாழை நுனி இலை.
பெள
பெளடிய - வருங்கால பெளடியம் - இருக்குவேதம் பெளத்தம் - புத்தம், பெளத்த மதம் உண்மையை உணர்தலே ஞானம். அந்த ஞானம் வந்தால்
207
உலகப் பற்று அறும். அப்பற்று அறுதலே வீடுபேறு என்னும் மையக்கருத்துடையது.மற்றும் உலகம் உள்ளது அன்று; இல்லதும் அன்று. இப்பொருள் தானே தோன்றி அழியும்.
இதற்கொரு கர்த்தா தேவை இல்லை என்று இம்மதம் கூறும். பா. புத்த உபதேசிகள்.
பெளத்தர் கொள்கை - திருந்த சான்று கிடைக்கும் வரை அறிவை மெய்யென்று ஏற்க முடியாது என்பது இது அறிவின் ஏற்புடைமை.பா.பெளத்தம்.
பெளத்தன் - புத்த சமயத்தான்.
பெளதிக பாவனை- கடவுளை உருவனாகத் தியானித்தல்.
பெளதிகம், பவுதிகம் -1) பூதச்செயல் 2) பூத நூல். இது தற்பொழுது இயற்பியல் எனப்படும்.
பெளதிகத் தீக்கை- உலோக தருமிணி.
பெளராணிகம் - புராணத்தைப் பின் பற்றும் சமயம்.
பெளராணிகர் - உயிர் உருவமுடையது என்னுங் கொள்கை யினர்.
ம
ம- சிவன்.
மகரம் - மனம் பாமனம்.
மகவு - பிள்ளை.
மகாகாயம் - பெருவெளி.
மகாசகலம் - மத்தியாலவத்தை
ஆன்ம நிலையைச் சார்ந்தது.
மகாசனப் பரிக்கிரமம்-பொது மக்கள் ஒப்புதல்.
மகாசைவம் - சைவம் 16இல் ஒன்று. விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடை வளர்த்துச் சிவனைச் சற்குணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டும் என்று கூறும் சைவம்.
மகா சைவன் - சிவதீக்கை பெற்றவன்.
மகாரம் - பா. மகரம்.
மகாமுத்திரை - திரிசூல முத்திரையில் தர்ச்சனியை அநாமி கை வளைப்பதாகக் காட்டும் முத்திரை.
மகா ருத்திரன்-பரமசிவன்.
மகாவிரதம்-1) சைவ சமயத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்றான மாவிரதம். 2) சைன விரத வகை.
மகாவாக்கியம் -பெரும் பெயர். அஞ்செழுத்து.பா.தத்துவமசி
மகிமா -8 சித்திகளில் ஒன்று. எல்லா இடங்களிலும் ஒரே காலத்தில் காணப்படுதல்.
மகுடசூளாமணி - திருமுடி மாணிக்கம். எ-டு இறைவன் மகுடசூளாமணியாய் வையம் போற்ற.(சிசிபப2).
மகேச்வரானந்தர் -காச்மீர கெளலசம்பிரதாயத்தினரின் முன்னவர்.
மகேசை - சிவசத்தி.
மகேசுரம் -அறிவு குறைந்து வினை மிகுந்தது.
மகேசுரமூர்த்தி - சந்திரசேகர், உமா மகேசர், இடாபாரூபர் முதலிய 25 கேவல வடிவம்.
மகேசுரர் - பரம் பொருள்.
மகேசுர வடிவம் - இலிங்க வடிவம் ஒத்த சிவமூர்த்தம்.
மங்கலம்-சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு கொடி, இணைக்கயல் என 8.
மங்கல வாழ்த்து - கடவுள் வணக்கம். நூல் செய்யும் ஆசிரியர் நூல் இனிது முடிய முதற்கண் கடவுளை வாழ்த்துவதும் அதன்பின் நூலைத் தொடங்குவதும் மரபு. இம் மரபுப்படி சிவஞான போதத்திற்கும் மங்கல வாழ்த்து அமைந்துள்ளது. தமிழ் நூல்களுள் முதன் முதலில் மங்கல வாழ்த்துக் கூறுவதாக அமைந்தது சிவஞான போதமே. நூலினுள் கூறப்படும் பொருள் பாகுபாடு பற்றிய குறிப்பைத் தன்னகத்தே அடக்கி நிற்றல் மங்கல வாழ்த்துக்கு இலக்கணம். இவ்விலக்கணத்தைச் சிவஞானபோதம் முழுவதும் பெற்றுள்ளது. இதில் விளக்கப்படும் அனைத்துப் பாகுபாடுகளும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.
மங்கிப் போதல் -குறைதல்.
மங்கையற்கரசியார் - அரசி, சோழ நாடு, கூன் பாண்டியன் மனைவி. தம் கண்வனை நெடு மாறனாக்கியவர். தென்னர் குலப்பழி தீர்த்த தெய்வப் பாவை. பாண்டிய நாட்டில் சமணம் நீங்கவும் சைவம் தழைக்கவும் சம்பந்தரை வரவழைத்துச் சைவம் வளர்த்த மங்கையர் திலகம்.குருவழிபாடு (63)
மஞ்சனம் - நீராட்டல்.
மஞ்சன நீர் - திருமுழுக்கு நீர் விடல். எ-டு புகை ஒளி மஞ்சனம் அமுது முதல் கொண்டு (சிசிசுப 272)
மடக்கி - திருப்பி
மடங்குதல் - முனைத்து எழாமை
மடந்தை - மகள். மூவகையினர். பூ மடந்தை - பூ மகள். புகழ் மடந்தை - இலக்குமி நாமடந்தை - சரசுவதி .
மடவாள் - மங்கை, எ-டு மடவாள் உடனே சென்று உந்தீ பெற (தி உ44)
மடவோனே - பேதாய்.
மட்டியம் - ஏழு வகைத்தாளங்களில் ஒன்று.
மட்டு -1)தேன். எ-டு மட்டு அவிழ்தோர் தேன் சிந்தும் பூமாலை 2) அளவுள்ள அலகு
மடி - சோம்பல், விழுப்பு.
மடைப்பள்ளி - கோயில் அடுக்ககளை.
மணத்தல் - சேர்தல்.
மண், மண்ணகம் - நிலம், புவி.
மண் அந்தம் - நிலம் ஈறாகிய தத்துவங்கள்.
மண்டகப்படி - சுவாமி வீதியுலா வருகையில் ஆங்காங்கு செய்யும் சிறப்பு ஆராதனை.
மண்டபம் - கொலு மண்டபம்.
மண்டபங்களின் தத்துவம் - 1) கர்ப்பக் கிரகம் - மூலாதாரம் 2) அர்த்த மண்டபம் - சுவாதிட் டானம் 3) மகாமண்டபம் மணி பூரகம், 4) நீராடு மண்டபம் - அனாதகம் 5) அலங்கார மண்டபம்- விசுத்தி 6) சபா மண்டபம் - ஆக்ஞை
மண்டலம் - 1) வாயு வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு என ஏழு. 2) 48 நாட்கள்.
மண்டல அபிடேகம் - குட முழுக்கைத் தொடர்ந்து 40-45 நாட்கள் நடைபெறும் நித்திய திருமஞ்சனம்.
மண்டலர்- அருகபரமரில் ஒருவர். புவியில் வாழும் ஆன்மாக்களைப் போன்றவர்.பா. செம்போதகர்.
மண்டு எரி- மருத்துவன் இரும்பு நாராசம் காய்ச்சிச் சுடவும், சத்திர மாட்டு அறுக்கவும் கண் படலத்தை உரிக்கவும் இவ்வாறு பல செயல்கள் செய்து நோய் தீர்ப்பவன். இதற்காகத் தாய் தந்தையர் அவனுக்கு நல் நிதியம் அளித்து மகிழ்வர்.
மண்டும் - மண்டிக் கிடக்கும்.
மண் முதல் நாளம் - நிலம் முதலிய 24 தத்துவங்களும் உந்தியினின்று தோன்றுபவை. விரல் அளவுள்ள தண்டு அல்லது கொடி வடிவமாகும்.
மண்ணகம் - புவி.ஒ.விண்ணகம், வானகம்.
மணி - கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என 9.
மணிமார்பன் - திருமால்.
மணிமேகலை - ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். இதில் சமயக் கணக்கர் திறங்கூறுவதில் சைவவாதியின் கொள்கை எடுத்துரைக்கப்படுகிறது.
மதம் -1) சமயம். மனித வாழ்வை நன்னெறிப்படுத்துவது. 2) தன்னைப் போல் ஒருவரும் இல்லை என மதித்தல் ஆணவ விளைவுகளுள் ஒன்று. 3) கொள்கை
மதமறுப்பு - மூன்று மெய் கண்ட நூல்களில் பல மதங்கள் கூறப்பட்டு, அவற்றின் கொள்கைகள் மறுக்கப்படுகின்றன. அகச் சமயம், அகப் புறச் சமயம், புறச் சமயம், புறப்புறச் சமயம் என நான்கு வகை அவை. சிவஞானபோதத்தில் 42 மதங்களும் சிவஞானசித்தியாரில் (பரபக்கம்) 14 மதங்களும் சங்கற்ப நிராகரணத்தில் 9 மதங்களும் போதிய சான்றுகளுடன் மறுக்கப்படுகின்றன.
மதமாச்சரியம் - மதக்காழ்ப்பு.
மதமாச்சரியன் - மதக் காழ்ப்புடையவன்.
மதலை - குழந்தை இங்கு முருகன் ஆகும். எ-டு மயில் ஏறி வரும் ஈசன் அருள் ஞான மதலை (சிபி 4).
மத்திமை - மத்திமை வாக்கு. உன்னல் எ-டு ஓசை முழங்கிடும் மத்திமைதான் (சி.பி.38).
மத்தியாமிகர் - பெளத்த சமயத்தினர்.
மத்தியாலவத்தை - செல்லும் நிலையை பொறுத்து மூன்று அவத்தைகளிலுள்ள ஒன்று. வேறுபெயர் மையநோக்கு அவத்தை.
மத்துவ மதம் - சைவம்.
மந்தம் - குறைவு. எ-டு மந்த புத்தி.
மந்தர வெற்பு - மேருமலை,
மந்ததரம் - மிகக் குறைவு. எ-டு மந்தரபுத்தி.
மந்திரம் - மறைமொழி நினைப்பவனைக் காப்பது. அத்துவா 6இல் ஒன்று. இது 11. தேவ மந்திரம், வேதமந்திரம் என இருவகை.
மந்திர உச்சரிப்பு - மானதம், மந்தம், உரை என மூவகை. மனத்தால் பாவித்தல் மானதம், சூக்கும வைகரி வாக்கால் தன் செவிக்கு மட்டும் கேட்கும்படி உச்சரித்தல் மந்தம், தூல வைகரி வாக்கில் தனக்கும் பிறருக்கும் கேட்கும்படி உச்சரித்தல் உரை.
மந்திர சாந்தித்தியம் - மந்திரத்தின் அண்மை.
மந்திர சுத்தி -1) மூல மந்திரம், பஞ்சப்பிரம மந்திரங்கள்,சடங்கு மந்திரங்கள் ஆகியவற்றை முறையோடு உச்சரித்தல் 2) 5 சுத்திகளில் மந்திர நீரால் சுத்தமாக்கும் செயல்.
மந்திரமகேசர் - சதாசிவ மூர்த்தியால் மந்திரருக்குத் தலைவராக அமர்த்தப்பட்டுச் சுத்த தத்துவாவில் இருப்போர்.
மந்திராத்துவா - அத்துவா6இல் ஒன்று. மந்திர வடிவமானது.
மந்திராபிடேகம் - அனுட்டான வகை.
மந்திர வாதம் - மந்திரமே பரம் பொருள் என்று கொள்ளும் சமயம்,
மந்திரி - அமைச்சர்.
மதி - பிறைத்திங்கள்.
மதியாதார் - அசுரர்.
மதுகை - வலி,
மமகாரம் - எனது என்னும் செருக்கு பொருள்களை எனது எனது என்று பற்றி உரிமை கொள்வது.
மம்மர் - கல்லாமை, மயக்கம்.
மயக்கம் - தெளியாமை. பா. மருள்.
மயக்க வாசனை - திரிபு அறிவு.
மயர்வு - மயக்க வாசனை.
மயல், மயர்வு - மயக்கம், காமம், பயம்.
மயிர்க்குட்டி - கம்பளிப்புழு,
மயில் - மயிலின் அண்டம்
மயிலின் அண்டம் - மயிலின் முட்டை நீர்.
மரப்பாவை இயக்கம் - மரப் பாவையின் அசைவு, அதை இயக்குபவர்.
மரப்புல்லூரி- புல்லுருவி.
மரபு - வழி.எ-டு முனிமரபு.
மரிதொண்டதார்யர் - கி.பி. 14. சித்தாந்தசிகாமணி உரையாசிரியர்.
மரிப்பார் - நினைப்பார்.
மரீஇ - கலந்து உறவு கொள்க. எடுஅன்பரோடு மரீஇ (சிபோ நூ. பா 12).
மரு இயல் - குற்றம் பா. உருஇயல், அருஇயல், இருஇயல்.
மருத்து - காற்று.
மருவார் - குற்றமில்லாதவர்.எ-டு மருவார் மறைக் காட்டில் வாசல் திறப்பித்தல்.
மருள் - 1) மயக்கம் 2) குறிஞ்சி யாழ்த்திறம்.
மருள் கொண்ட மாலையாய் - மருளாகிய பண்ணை வண்டுகள் அமர்ந்து பாடப்பட்ட மாலையினை உடையான்.
மருவு - தலைப்படு.
மருவுவன் - தலைப்படுவன.
மருள்சித்தர் - பழைய வீரசைவ ஆசாரியார்.
மலக்கதிர் - மும்மலத்தார்.
மலகன்மம் - பாமலம்.
மலக்கயம் - மலவினை.
மலத்திரயம் -மும்மலம்
மலபரிபாகம் - மலமுதிர்வு. இதற்குக் காரணம் வினை ஒப்பு. ஆணவ மல காரியமான மோகம் முதலாகக் கூறப்பட்ட தீய குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். ஆணவமலம் முதிர்ந்து நீங்குவதற்கு ஏதுவாதல். இதனைத் தொடர்வது சத்திநிபாதம். வினை ஒப்பு, மலபரிபாகம், சித்திநிபாதம் ஆகிய மூன்றும் தொடர்நிகழ்ச்சி களான முந்நிகழ்ச்சிகள், பா. வினை ஒப்பு, சத்திநிபாதம்.
மலர் - பூ விரிந்த மலமுடையவர் திருவடித் தாமரை.
மலர்தலை- விரிந்த இடம். எ-டு மலர்தலை உலகின் மாயிருள் துமியப்(சிபோ சிறப்புப் பாயிரம்)
மலம் - பொருள். அழுக்கு, இருள், குற்றம், தீவினை. வகை. மும்மலம், ஆணவம், கன்மம், மாயை. பொதுவாக இச்சொல்மலத்தையேகுறிக்கும். இயல்புகள், 1) பாசக்கூறு 2) அறிவை மறைத்து குற்றத்திற்கு உள்ளாக்குவது. 3) நிகழ்ந்ததை மறக்கச் செய்வது 4) நிகழப் போவதை அறியவிடாமல் தடுப்பது.
மல மாயை - பா. மலம்,
மல வாசனை - மலப் பயிற்சி.
மலிந்தவர் - மிக்கவர்.
மலைபடுபொருள் - அகில், குங்குமம், கோட்டம், தக்கோலம், மிளகு மலைமாது, மகள் - உமை, மலையற்க மயங்கற்க,
மலைவில்லார் -1) மலைவு இல்லார். மலைப்பு அல்லது ஐயப்பாடு இல்லாதவர்.2) மலை வில்லார், மேருமலையை வில்லாகக்கொண்ட சிவபெருமான்.
மலைவு, மலைதல் - ஒன்றின் ஒன்று மாறுபடுகின்ற சமய நூல்களைப் பயிலுங்கால் தோன்றும் ஐயமும் திரிபும். ஞானாசிரியருயை அறிவுரையின்றி மலைவு தீர்வதற்கு வழி இல்லை. ஆகவே, சிவபெருமானே கல்லால் மரத்தின் கீழ் இருந்து ஆசிரியர் கோலத்தில் சனாகாதி முனிவர் நால்வருக்கும் ஞான விளக்கம் நல்கினார் என்பது வரலாறு.
மழவு - குழவு.
மழுவாளி-மழுவைக் கொண்ட சிவன்.
மறப்பித்தல்-இழக்குமாறு செய்தல்.
மறப்பு - விடுவது.
மறம்- வீரம் தீவினை. எ-டு மறம் அற்றவர். தமிழ் மறம் உடையார் மறவாமை இடை ஈடில்லாமை.
மற்ற வீடு- உருவம் ஆதி ஐந்தையும் மாய்ப்பது.
மற்று -அதனின்று வேறு.
மறிகடல் - திரைகடல்.
மறித்தல் -தடுத்தல்.
மறுதலை - எதிர்மறை எ-டு அதர்மம் X தர்மம் உயிர் x இறைவன். முற்றிலும் மாறுபாடு உடையது அன்று.
மறுப்பு உத்திகள்-வாதம்,செற்பை, விதண்டை ஏது ஆகிய நான்கு மறுப்பு நுட்பம் ஒருவர் கொள்கையை மறுக்கும்பொழுது, அவர்கள் ஏற்றுக் கொள்கின்ற கொள்கையை வைத்தே மறுக்கும் பாங்கு தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்னும் உளவியல் நெறிமுறையில் அமைந்தது. இந்நெறிமுறை கொண்ட சிறந்த சற்காரிய வாதத்தினால் சைவத்திற்கு மாறான சமயக் கொள்கைளை எல்லாம் மெய்கண்டார் மறுப்பது வியப்பிற்குரியது.
மறுமை -சுவர்க்கம். ஒ. இம்மை.
மறை - வேதம். எ-டு நான்மறை.
மறைக்காடு - திருமறைக்காடு (வேதாரண்யம்) எ-டு நல்ல மருவார் மறைக்காடு (திப 71)
மறைஞான சம்பந்தர் - அந்தணர். திருப்பெண்ணாகடம். மெய் கண்டார் மாணாக்கர். இவர் மாணவர் உமாபதி சிவாசாரியார். நூல் ஒன்றும் எழுதவில்லை. நான்கு புறச் சந்தானக் குரவரில் ஒருவர். கி.பி. 13. சிவதிருமோத்திரத்தை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்துப் பாடியவர்.
மறைஞானதேசிகர் - தத்துவநெறி கற்றவர். தொல்காப்பியச் சைவ சித்தாந்தக் கருத்தை விளக்கியவர். சிவஞானசித்தியாருக்கு உரை கண்டவர்.இவர் சிதம்பரம் கண்கட்டி மறை ஞான பண்டாரத்தின் மாணவர். சீகாழிப் பதியினர். இருமொழி வல்லவர்.
மறைப்பு உண்ணுதல்- மறைக்கப்படுதல்.
மறைமொழி - மந்திரம் நிறை மொழி மாந்தர், தம் ஆணையால் சொல்லிய மறைந்தமொழிதான் மந்திரமாகும். நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (தொல் 1427).
மறைமுடிவு-வேதாந்தம், கடவுள்.
மறைமுதல் - 1) சிவன் 2) பிரணவம்.
மறைமுதலி - சிவன்.
மறையோன் - மறை விற்பன்னர்.
மறையோன் புலைச்சி - மறையவன் புலைச்சியை மருவுவார் என்பது முறையன்று. அது புனைமொழி.
மனக்கு - மனம்.
மனம் - உள்ளம். பசுஞானம். அகங்காரச் சத்துவக் குணக் கூறில் முன்னதாகத் தோன்றுவது. இது தைசத்தில் வந்து ஒரு பொருளை முந்தி நினைத்து, அங்கு ஐய நிலையில் நிற்கும். இது ஒரு தத்துவம்
மனஎழுச்சி -உள்ளக் கிளர்ச்சி.
மனமாதி - மனம் முதலிய அந்தக்கரணங்கள்.
மனவாசகங்கடந்தார் - மெய் கண்டார் மாணாக்கர்களில் ஒருவர். திருவதிகையில் பிறந்தவர். உண்மை விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர். இது சைவ சித்தாந்த பால பாடம். செய்யுள் நடையில் அமைந்தது 54. வெண்பாக்கள்.
மன்உலகு இசைக்கும் - மெய்யறிவாளர் கூறுவார்.
மன்ற - உறுதியாக, எ-டு மன்ற மதிக் கலை போலக் (சிசிபப10)
மன்ற பாண்டியன் -கூன் பாண் டியன். பா. மங்கையற்கரசி.
மன்று - திருச்சிற்றம்பலம்.
மன்ன- பெரும.
மன்னர்க்கு மன்னராய் - தைத்திரியரை அழித்துப் பரசுராமனாதல் இராமனாய் இராவணனைக் கொல்லுதல். பலராமனாய் உலகைக் காக்க யோகத்தில் நின்றது. வாசுதேவராய் அசுரரை அழித்தது. இவை எல்லாம் மாமன்னருக்குரிய செயல்கள்.
மன்னன் அருள் - அரசன் கருணை. மன்னன் வழி எவ்வழி, அவ்வழி அரன் அருள்.
மன்னா - பொருந்தா, மன்னவனே.
மன்னி - நிலைபெற்று. எ-டு ஒன்றுஅறிந்து ஒன்று அறியாதாகி உடல் மன்னி (சிபோ பா 18).
மன்னுதல் - நிலைபெறுதல்.
மன்னுபவம் - பிறவிப்பிணி.
மன்னுபலன்கள் - நிலைத்த புலன்கள்.
மன்னும் - நிலைபெற்று நிற்கும்.
மன்னும் சிவன் - பேரின்பக்காரணன்.
மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்.
மனை - மனைவி.
மனோவிகற்பம் - மனவேறுபாடு.
மனோன்மணி - இறைநிலை, பார்வதி.
மா
மா - பெரிய, அரு குதிரை, எ-டு மாமறை, அருமறை, மாநாடு, மாநிலம்.
மாஇருள் - பெரிய இருள்.
மாசறு - மாசிலா, எ-டு மாசறு பொன்.
மாட்சி - சிறப்பு:இறைமாட்சி
மாட்டாமை - இயலாமை,
மாட்டு - கூற்று. உரிமைகொளல் எ-டு. எனதென்ற மாட்டின்
(சிபோ பா 17).
மாட்டெறிதல் - ஒன்றுக்குச் சொன்ன விதியைப் பிறிதொன்றுக்கு மாட்டி விடுதல், எ-டு ஸ்ரீபஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க, முத்திப் பஞ்சாக்கரத்தை ஓதும் முறை கூறப்பட்டுள்ளது போல், ஸ்ரீபஞ்சாக்கரத்தையும் ஓதுக என இங்கு மாட்டி விடப்பட்டது.
மாட்டேறு - மாட்டெறிதல். ஏறிட்டுக் கூறுதல். ஓர் உத்தி. இந்நுட்பத்தால் சிவஞான போத நூற்பா 4, 3உடன் தொடர்பு உடையதாய் ஆன்ம இலக்கணம் உணர்த்துவது.
மாடு - செல்வம்.
மாண்ட - மாட்சிமை பொருந்திய, எ-டு மாண்ட என் மனைவி மக்கள் பிசிராந்தையார்.
மாணிக்கவாசகர் - சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாசகம், திருக்கோவை ஆகிய தோத்திர நூல்களின் ஆசிரியர். அந்தணர் திருவாதவூர். வேறுபெயர் மணிவாசகர். சிறப்புப் பெயர் மணிமொழியார், கோவை வேந்தர். படி, ஞானத்தில் ஞானம் நெறி நன்னெறி, முத்திநிலை சாயுச்சியம். திருமுறை 8. முத்தியடைந்த வயது 32. காலம் மூவர் முதலிகளுக்கு முற்பட்டவர்.
மாணிக்க வாசகர் செய்த அற்புதங்கள் -1) சிவபெருமானே நரியைப் பரியாக்கி கொண்டு வருமாறும் மண் சுமந்து அடி படிமாறும் பத்தியால் கருணை பெற்றது. 2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகளாக்கிப்பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது. 3) பிறவி ஊமையாய் இருந்த பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படிச் செய்தது. 4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுதிப்படி பெற்றுக் கொண்டவர். 5) எல்லோரும்காணக்கனகசபையில் புகுந்து சிவத்தோடு கலந்தது.
மாணவக - மாணவனே.
மாணாமை - மாட்சி இல்லாமை.
மாதர் எழுவர் - அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி.
மாதவன் - திருமால்,
மாத்திரை தன் - ஐம்புலன்கள். எ-டு பேசும்மாத்திரைகள் ஐந்தும் (சிசிசு 154)
மாத்தியாமிகன் - மாத்துவர். உயிரும் இறைவனும் வேறு என்னுங் கொள்கையர்.
மாத்துவர் - பா.மாத்தியாமிகன்.
மாந்திரிகன் - மந்திரவாதி.
மாந்திரவினை - வினை 5இல் ஒன்று. மந்திரம் செபித்தலும் ஞானநூல் ஓதுதலும் சாந்திய தீத கலையில் அடங்கும். சுத்த போகங்களைத் தரும்.
மாது - பெண்.
மாதுங்க பாரதம் - மிக்கபெருமையுள்ள மகாபாரதம். வியாசர் அருளியது. ஐந்தாம் வேதம் எனப்படுவது.
மாதுபாகன் - பெண்பாகன், சிவன்,
மாநாகம் - மாணிக்க மணியுள்ள பெரிய நல்ல பாம்பு.
மாமணி - மாணிக்கம்.
மாமாயை - 1) சுத்த மாயை 2) பார்வதி
மாயம் - பொய், வியப்பு.
மாயக்கருவாதை - மாயப் பிறப்பு.
மாயக்கள் - அறிவை மயக்கும் பொருள். ஒ. மாய ஞானக்கள்
மாயமான் - பொய்மான்.
மாயவன் - இறைவன், திருமால்.
மாயிருள் - மாயை.
மாயா இலக்கணம் - மாயையின் இயல்பு 5. அசத்து, சடம், அநித்தம், துக்கம், கண்டம் பா.மாயை.
மாயா இயந்திரதனு - மாயையின் காரியமாகிய உடம்பு, எ-டு மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (சிபோநூபா 3).
மாயா காரியம் - மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன.
மாயா சத்தி - மாயை ஆகிய ஆற்றல்.
மாயாசுத்தி - செயல்10இல் ஒன்று.
மாயா தரிசனம் - செயல் 10 இல் ஒன்று. உலகின் பெயர் வடிவங்களை மாயை என அறிதல்,
மாயாதருமம் - சங்கோசவிகாசங்களாகிய மாயையின் தன்மை,
மாயா பஞ்சகம் - மாயை ஐந்து. தமம், மாயை, மோகம், அவித்தை, அநிருதம்
மாயா மலம் - மும்மலத்தில் ஒன்றான மாயை ஆகிய மலம்.
மாயாவல்லமை - உலகப் படைப்பில் காணும் மாயையின் ஆற்றல்
மாயா வாதம் - இது ஏகான்ம வாதத்தில் ஒரு வகை. உலகம் யாவும் மாயையே என்று பெளத்தம்முதலிய அத்துவைத மதங்களில் கூறப்படும் கொள்கை. இக்கொள்கை உடையவர் மாயாவாதிகள். மாயை உண்டு என்றோ இல்லை என்றோ கூற இயலாது என்பர் இவர்கள். 'நான் பரபிரமமே வேறல்லன்' என்று உணர்ந்து அவ்வுணர்வில் நிலைபெற்று விடுவதே வீடுபேறு என்று இவர்கள் வற்புறுத்துவர். பா. மாயை. ஏகான்ம வாதம்.
மாயா விகற்ப ஞானம் - ஒரே பொருள் வெவ்வேறு பொருள்களாகக் காண வரும் அறிவு.
மாயாள் - மாயை.
மாயேயம் - 1) மலம் 5இல் ஒன்று. 2) அசுத்த மாயையின் காரியம்; காலம், நியதி, கலை, வித்தை,
இராகம், புருடன், மாயை எனனும் 7 தத்துவங்கள்.
மாயை - பொருள்: மும்மலங்களுள் இறுதியானது. ஒடுங்கி உண்டாவது. இயல்புகள்: 1) உயிர் ஆகாது 2) மலத்தைப் பற்றும் 3) முதற் காரணம் 4) அசத்து 5) சடம் 6) அநித்தம் 7)துக்கம் 8) கண்டம்.
வகை: 1) சுத்த மாயை 2) அசுத்த மாயை 3) பிரகிருதி மாயை. வரையறுத்துக் கூற, அசுத்த மாயை, சுத்த மாயை என இரண்டே.
1)மாயை உள்ளதும் அன்று; இல்லதும் அன்று இன்னது என்று சொல்ல முடியாத அநிர்வசனப் பொருள் அது “ என்பர் மாயாவாதிகள். “வித்து உள் பொருளாய் நிலத்தில் இருந்து உலகத்தைத் தோற்றுவிக்கிறது" என மறுத்து, “மாயை உள் பொருளே’ என மெய்கண்டார் கூறுவார்.
2) மாயை இறைவனின் வேறான ஒரு பொருளன்று. இறைவனேதான் மாயையாயும் இருக்கின்றான் என்பர் சிவாத்துவித சைவரும் பாஞ்சராத்திரிகளும். “மாயை வித்துபோல்வது; இறைவன் நிலம் போல்வன்" எனக்கூறி, ‘மாயையும் இறைவனும் வேறு வேறு பொருள்களே' என அவ்விரு மதத்தாரும் மறுக்கப்படுகின்றனர். `
3) "உலகத்தைத் தோற்றுவிப்பது மாயை அன்று; இறைவனே உலகமாகப் பரிணமிக்கிறான்” என்பர் பரிணாம வாதிகள். இவர்கள் மாயாவாதிகளை ஒப்பர். ஏகான்ம வாதம் கூறுபவர்."நிலத்தின்கண் வித்துள்ள போதே முளை தோன்றுதலும் நிலத்துக் கண்வித்து இல்லாத பொழுது முளை தோன்றாமையும் போல, இறைவனிடத்து மாயை இருப்பது ஆகவே, உலகம் தோன்றிற்று. அஃது இல்லையாயின் தோன்றாது.” எனச் சற்காரிய வாதங்கூறி, அவர்கள் கூற்று மறுக்கப்படுகின்றது.
சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஒன்றிலிருந்து தோன்றாத காரணம் பொருள்கள். பிரகிருதிமாயை மட்டும் அசுத்த மாயையிலிருந்து தோன்றிய காரியப் பொருள். உலகைத் தோற்றுவிப்பது மாயை. இதிலிருந்து காலம், நியதி, கலை ஆகியவை தோன்றும் கலையிலிருந்து வித்தையும் வித்தையிலிருந்து அராகமும் தோன்றும்.
மாயையை அகற்றுதல் - பெயர் வடிவத்தின் அதிட்டானம் எனச் சச்சிதானந்தத்தை காணும் நிலை.
மார்க்கம் - நெறி.நால்வர் ஒழுகிய நால்வகைச் சமய நெறி. அவை யாவன: 1) சகமார்க்கம் - தோழமை நெறி 2) சற்புத்திரமார்க்கம் - மகன்மை நெறி 3) தாசமார்க்கம் - அடிமை அல்லது தொண்டுநெறி 4) சன்மார்க்கம் - ஞான நெறி அல்லது நன்னெறி பா. நான்கு பாத அட்டவணை.
மார்க்கர் - மார்க்கமுடைய ஞானிகள். எ-டு அப்பர், திருஞானசம்பந்தர்.
மார்த்தாண்டவபைரவர், மூர்த்தி - சூரியன்
மாருதம் - காற்று.
மாருதி- வீமன், அனுமான்.
மால் - மயக்கம், திருமால்.
மால் ஆழி - அருட்கடல்
மால் சமயம் - வைணவம்
மால் சமயத்தோர் - வைணவர்.
மால் தங்கை- உமை.
மாலினார் சேலினார் - பேரழிவுக் காலத்திலே உலகைக் காக்க வேண்டி மீன் வடிவு கொண்டு ஏழு கடல்களையும் ஒரே செலுவில் (செவுளில்) திருமால் அடக்கித் தான் வினை முதல் என்று செருக்கு கொண்டார். அவர் செருக்கை அடக்க வேண்டி, அந்த மீனைப் பிடித்து அதன் செலுவினையும் கண்ணினையும் இடந்து, கூரிய திரிசூலத்தின் மேல் சூலபாணியாகிய அயன் அணிந்தார். மாலினார். திருமால் சேலினார் - மீன் வடிவினார். (சிசிசுப 280).
மாலினி - துர்க்கை
மாலைத்தேவு - திருமாலே கடவுள்.
மாலை மாற்று - புதிய அணி வகையில் ஒன்று எழுத்துகளை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமலிருக்கும் மிறைக்கலிவகை.பா. திருஞான சம்பந்தர்.
மாபாடியம் - பேருரை, சிவஞான முனிவர் சிவஞான போதத்திற்கு எழுதிய சிறப்புரை. இது திராவிட மாபாடியம் எனப்படும். பா. பாடியம்
மாமுனி - பரஞ்சோதி முனிவர்.
மாவலி - ஓர் அரசன். மூவடி கொடுத்த இவ்வரசனைத் திருமால் சிறையிலிட்டது ஈனம் என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.
மாவிரதம் - அகப் புறச் சமயம் 5இல் ஒன்று.
மாற - பரிவர்த்தனை செய்ய,
மாற்றமதி - போக்குவீராக.
மாறு - முரண்.
மாறுகோள் - மறுபாடு.
மாறுகோள் உரை - முன்பின் முரணும் வசனம்.
மாறுதல் - இறத்தல், மாற்றமடைதல்.
மான் - 1) மகான் 2) மூலப்பகுதி 3) பெருமை.
மான்று இருப்பு - மயக்கம்.
மானக்கஞ்சாற நாயனார் - வேளாளர் தஞ்சாவூர்-சோழ நாடு மாவிரதியார் கோலம் பூண்டு வந்த சிவபெருமானுக்கு மணக்கோலத்தில் இருந்த தன் பெண் கூந்தலைக் கேட்டபடி அரிந்து கொடுத்தவர். சங்கம வழிபாடு (63),
மானசதீக்கை - தீக்கை 7இல் ஒன்று. மனத்தால் பாவித்துத் தீக்கை செய்தல். சீடன் மனத்தில் யோக சித்தியால் குரு புகுந்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீக்கை வகை.
மானச பூசை - மனப் பாவனையாலே வழிபடுதல் அகவழிபாடு.
மானதக்காட்சி - ஒரு பொருளை ஐயந்திரிபற அறிதல். காட்சியில் ஒரு வகை
மானம் - 1) குற்றம் 2) காட்சி முதலியவை.
மானுட லிங்கம் - மனிதரால் நிறுவப்பட்ட உரு.
மானுடர் - மனிதர்.
மானே தொழுகை வலி - பெரியோரை வழிபடுதல் உயிர்க்கு வலிமையாகும் (சிபோபா 80)
மி
மிக்கு வழங்குதல் - பரந்து நிகழ்தல்.
மிகுதிப்பாடு, மிகை- அதிகம்.
மிச்சிரம் - கலந்தது.
மிசிரப் பிரபஞ்சம்- சுத்தா சுத்த மாயா பிரபஞ்சம்.
மிசை - மேலிடம், மிக்கு
மித்தை உணர்வு - பொய்யறிவு.
மத்தியாத்துவம்- உண்மை நில மறைத்தல்.
மிருதி- சமயம் சார்ந்த அறநூல். முனிவரால் செய்யப்பட்டது.
மிருத்தியு- இறப்பு நிகழ்த்துவது.
மிருத்தியுஞ்சயன்- சிவபிரான்.
மீ
மீட்சி - மீளுதல்.
மீதானம் - மேலானம் இடம், சிவனடி, எ-டு மீதானத்தே செல்க உந்தீ பற (திஉ8)
மீமாஞ்சகர் - மீமாஞ்சை சமயத்தினர்.
மீமாஞ்சை - சைமினி என்னும் முனிவர் வேதத்தின் பூருவ காண்ட ஆராய்ச்சியாகச் செய்த நூல்
மீமாஞ்சை மதம் - மீமாஞ்சை நூலில் கூறப்பட்டுள்ள கருத்து களைத் தழுவிய சமயம். இது பட்டாசாரிய மதம், பிரபாகரன் மதம் என இருவகை. பிரபஞ்சம் முத்தொழில் உடையது. முதல்வனிடமிருந்து சத்தி வேறுபட்டது என்னும் கொள்கை உடையது இது.
மீன் - விண்மீன்.
மீனாட்சி- மதுரைத்தெய்வமாகிய உமை
மு
முகத்தல் - அள்ளுதல்.
முக்குணம்- சத்துவம், இராசதம், தாமதம் என்னும் மூன்று குணங்கள்.
முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம். இது வள்ளுவர் வகைப்பாடு
முக்குற்றம் கடிந்தவர் - மெய்யுணர்வு முதிரப் பெற்றவர்.
முக்கோணம்- மூன்று மூலைகளைக் கொண்டது. அனல் முக்கோணம் ஒ. அறுகோணம்
முகுரம்- கண்ணாடி எ-டு கவரும் தன்மை முகுரம் போல.
முகை - அரும்பு, மொட்டு, எ-டு கண்டஇரு தயகமல முகைகள் எல்லாம் (சிசிபப 6).
முட்டாமல் - தடைப்படாமல்
முடி- தலையணி, அணிகலன்களில் ஒன்று.
முடித்ததுமுடித்தல்- முன்முடித்ததைப்பின் முடித்துக்காட்டல் சிவஞான போதம் வெண்பா 5இல் ஈறே முதல் என்றது சங்காரமே முதல் என்னும்மேற்கோளை முடித்துக் காட்டியமையால், முடித்தது முடித்த லாகும்.
முடிவினை - ஊழ்வினை.
முண்டகம் - தாமரை.
முண்டபங்கி- ஆன்மார்த்த பூசையில் இலிங்க உருவமாய் உள்ள சிவனை ஐந்து முகங்களோடு கூடியவராகத்தியானித்தல்.
முண்டர் - சைவர். முண்டன் - சைவன்.
முத்தர் - மலம் நீங்கியவர்.
முதலி - முதல்வன்.
முதல்- தோற்றம், இறைவன் முழு முதலை வணங்குக.
முதல் ஆசிரியன் - இறைவன் தனக்கு யாரும் குரு இல்லாமல் தானே எல்லாவற்றையும் செய்யும் அறிவன். ஞானம் அருளப் பெற்றவர்களால், அவன் அருள் உலகத்தில் வழிவழி வருவது என்ப்து கொள்கை, கல்லால் நிழற்கடவுளே முதல் ஆசிரியன். இவர் நந்தி பெருமானுக்கு அறிவு வழங்கினார்.
முதல் காரணம் - காரணப்பொருள். பா. காரணம்.
முதல் காரண வாதம் - இறைவனே உலகத்திற்கு முதற்காரணன் என்னும் கொள்கை.
முதல் குரு- முதல் ஆசிரியன், இறைவன்.
முதல் நான்கு - தூல உடல், சூக்கும உடல், காரண உடல், யாதான உடல். எ-டு மூல உடம் பாகும் முதல்நான்கும் (திப37)
முதல் வந்த முவர் - பிரமர், சத்திரியர், வைசியர்.
முதல்வ - முதல்வனே.
முதல்வன் - இறைவன்.
முதல்வன் இயல்புகள்- நிர்குணன், நின்மலன், நித்யானந்தன்.
முதல்வன் இலக்கணம் - சித்தாலும் சத்தாலும் உடையவனாய் நிற்றல்.
முத்தம் - முத்து.
முத்தன்- மலம் நீங்கியவன், இறைவன்.
முத்தி- பொருள்; வீடுபேறு, ஆன்மாஆணவத்திலிருந்து நீங்கி, இறைவனோடு இரண்டறக் கலத்தல்.
வகை
பண்பு வகை- 1) இம்மை முத்தி ஏந்திழையார் முத்தி, சிற்றின்பம் உலகில் துய்ப்பது. 2) குண முத்தி தீயகுணங்களை நீக்குவது. அட்டகுண முத்தி.
இறைநிலை வகை: 1) சலோக முத்தி 2) சாமீப முத்தி 3) சாருப முத்தி 4) சாயுச்சிய முத்தி 5) சீவன் முத்தி - சீவத் தன்மை விடுபடுதல் 6) அதிகார முத்தி. அதிகார சிவத்தை அடைந்து உடல்பற்றை விடுதல் 7) போக முத்தி போக சிவத்தை அடைந்து உலகப்பற்றை விடுதல் 8) இலய முத்தி இலயசிவத்தை அடைந்து மலமாயா கன்மங்களை விடுதல் 9) பரமுத்தி சிவத்தை அடைந்து பாசப் பற்றை விடுதல்.
சித்தியார்வகை: 1) ஏந்திழையார் முத்தி 2) ஐந்துகந்தம் அறக் கெடுகை முத்தி 3) சுவர்க்க முத்தி, 4) அட்டகுணமுத்தி 5) பாடாணம் போல்கை முத்தி 6) விவேக முத்தி 7) தன் மெய், வடிவாம் சிவத்தைச் செம்மையே பெறுகை முத்தி 8) சிவனடி யைச் சேரும் முத்தி விளக்கம் அவ்வதி தலைப்பில் காண்க.
சிவப்பிரகாசம் வகை: 1) அரிவையர் இன்புறும் முத்தி 2) ஐந்து கந்தம் அறும் முத்தி 3) திரி குணம் அடங்கும் முத்தி 4) விரிவு வினை கெடும் முத்தி 5) மலம்போம் முத்தி 6) விக்கிரக நித்த முத்தி 7) விவேக முத்தி 8)பரவும் உயிர்கெடுமுத்தி 9) சித்த முத்தி 10) பாடாணமுத்தி 11) அருள் சேர் முத்தி 12) திகழ் முத்தி. இவற்றில் 1-10 வரை பழிசேர் முத்தியில் அடங்கும். இவை 36 தத்துவங்களுக்கும் உட்பட்டு அவற்றின் அழிவில் நீங்குபவை. 11-12 இறையருள் சேர்க்கும் முத்திகள்.
முத்திமுதல்- முத்திக்குரிய ஆன்மா.
முத்தி மூன்று முதல்- 1) ஆன்மா பேரின்பத்தைத் தூய்ப்பது 2) இறை பேரின்பத்தைத் தருவது 3) மலம் இத்தை விளைவிப்பது.
முத்தியளிக்கும் தலங்கள்- 1) திருஆரூர் - பிறக்க முத்தி தருவது. 2) சிதம்பரம்-தரிசிக்க முத்தி தருவது 3) திருவண்ணாமலை - நினைக்க முத்தி தருவது. 4) காசி-இறக்க முத்தி தருவது.
முத்திரை - ஒரு கை, இரு கை மற்றும் கைவிரல்களைக் கொண்டு குறிப்பாக ஒரு பொருளையோ செயலையோ உணர்த்துவது முத்திரை எனப்படும். எ-டு காமதேனு அல்லது சுரபி முத்திரை. உள்ளங்கைகளைச் சேர்த்து விரல்களைப் பசுவின் மடியைக் குறிக்கும் வகையில் காட்டுவது. இது காமதேனுவின் மடியிலிருந்து பாலைப்பொழியச் செய்வதை உணர்த்துவது.
முத்திறத்து அவத்தை- காரண அவத்தை மூன்றிலும் ஐந்தவத்தை நிகழ்வதால், இதற்கு முத்திறத்து அவத்தை என்று பெயர்.
முத்திற உயிர்- பந்த வேறுபாட்டால் உயிர்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுவர். பா. மூவணு ஐந்தனு.
முத்தீப்பெயர்- காருகபத்தியம், ஆகவனியம், தக்கணாக் கனியம்
முத்தொழில் - காத்தல், படைத்தல், அழித்தல் என்னும் கடவுளர் தொழில் மூன்று. பா. ஐந்தொழில்
முதுவேனில்- முதிர்ந்த வெயிற்காலம். இது ஆனி ஆடி.
முந்நிகழ்ச்சி- உடன்நிகழ்ச்சியாக வரும் மூன்று நிகழ்ச்சிகள் இருவினை ஒப்பு, மலபரி பாகம் சத்திநிபாதம்.
முப்பத்தாறு தத்துவம்- சிவதத்துவம் 5, வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.
முப்பத்தோர் தத்துவம் - வித்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.
முப்பூ- கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ.
முப்பொருள்- உள்பொருள்களாகிய பதி (இறைவன்), பசு (உயிர்), பாசம் (தளை) ஆகிய மூன்றும் இம்மூன்று பொருள் பற்றிச் சிவஞான போதம் முழுமையாக விளக்கும் முதல் நூல்.
மும்மதத்தன்- கணபதி.
மும்மதம் - மதயானையின் கன்ன மதம், கைமதம், கோசமதம் என்னும் மூவகைப்பட்ட நீர்கள்.
மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. இவை அணுவின் உண்மையினை மறைக்கும். பொய்மை செய்போக பந்த போத் திருத் தத்துவங்கள் பண்ணும்.
மும்மாயை- சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை.
மும்மூர்த்தி உள்ளது - சுத்த வித்தை மற்றும் சுத்த தத்துவம் ஐந்தனுள் இது கீழ்நிற்பது.
மும்முர்த்திகள் மூவர் - சிவன், பரமன், அரி. மும்மை - இம்மை, மறுமை, உம்மை (வருபிறப்பு).
மும்மையணு - மூன்று சேர்ந்த ஒர் அணு.
மும்மை மலர் - மும்மலங்கொண்ட சகலர். பா.மும்மலம்
முயங்கி - மயங்கி.
முயலகனார் - நடராசப் பெருமான் ஏறி நடிக்கும் ஒரு பூதம்.
முயற்கொம்பு- இல்லாத பொருள். எ-டு முயற் கொம்பு ஏறி ஆகாயப்பூ பறித்தல். இரண்டும் இல்லாதவை.
முயற்கோடு- இல்லாத பொருள். இல்வழக்கு.
முரசு - வீரம்,கொடை,மணம் என மூன்று.
முரண் செயல்கள் - வைதல், வாழ்த்தல், கொய்தல், கொளுத்தல், வணங்கல், உதைத்தல். இவை நம்மால் செய்யப்பட்டாலும் பிணங்குதல் செய்யும் தன்மை பிரமனுடையது.(சநி4).
முரணுதல் - மாறுபடல்.
முருகநாயனார்- மறையவர். திருப்புகலுர் சோழ நாடு. மலர்த் திருமாலை தொடுத்து இறைவனுக்குச் சூட்டி வந்தவர். இலிங்க வழிபாடு (63).
முருகன் சந்நிதி சிறப்புத் தலங்கள்- 1) கச்சி (குமரக் கோட்டம்), 2)கீழ் வேளுர், 3) கொடி மாடச் செங்குன்றுர், 4) கொடுங்குன்றம், 5)சிக்கல், 6) திருப்பரங்குன்றம், 7) புள்ளிருக்கு வேளுர்.
முருட்டு - கரட்டான - முருட்டுச்சிரம்.
முருட்டுச்சிரம்- மொட்டைத்தலை.
முழங்குதல் - ஆரவாரித்தல்.
முளரி - தாமரை, எ-டு முளரி கட்கு இரவியும் போல் (சிசிசு 232).
முளை - பாசம்.
முற்கோள்- கூட்டுப் பொருளாய் உள்ளது. முதல் பொருளாகிறது என்பது சைவ சித்தாந்த முற்கோள்.
முற்செய் வினை- நல்வினை, தீவினை.
முற்பக்கம் - பூருவ பக்கம்.
முற்றம் - வீடு திருச்சிற்றம்பலம் எ-டு மூலை இருந்தாரை முற்றத்தேவிட்டவர்(திஉ12) ஒமூலை.
முற்றவர் - ஞானியர், சான்றோர். எ-டு முற்றவரின் மாட்சியே மாட்சி.
முற்றவரும் பரிசு- பேரின்பப் பயன் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய் வருவது.
முற்றுணர்வினன் ஆதல் - பதி இயல்புகளில் ஒன்று. ஒரு பொருளை முழுதும் ஒருங்குணர்தல், எல்லாவற்றையும் அறியும் பேரறிவு இதுவே.
முறுகுதல்- நன்கு முதிர்தல்.
முன் - 1) காலை 2) அநாதி 3) அறிவாய் 4) சந்நிதி.
முன் செய்வினை- பிராரத்த (முடிவு) வினை
முன்றில் - முற்றம், வாயில் எ-டு மணிநிலா முன்றில் ஏறி.
முன்னம் - குறிப்பு, கருத்து, எ-டு கருதுவதன் முன்னம் கருத்தழியப்பாயும் (திப35).
முற்றுணர்வு- இறைவனுக்கு என்றும் இயற்கையாக உள்ள உணர்வு. ஒ. சுட்டுண்ர்வு. முனைதல் முற்படுதல், முனைவன் - முதல்வன்.
முன்னை நாள்- முதல் நாள்.
முன்னை முதல் இல்லோன் - தனக்கு மேல் ஒரு வினை முதல் இல்லாதவன்.
முனிகணம் - முனிவர் கூட்டம். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் மாணவராக உள்ளவர்.
முனி மரபு - இறைமை.
முனிவு - சினம், ஒறுத்தல் எ-டு ஈசனார் முனிவு.
முனையடுவார் நாயனார் - வேளாளர் நீடூர்-சோழநாடு போரில் பகைவரை வென்றும் பிறர்க்குத் துணையாய் நின்று வெற்றி வாங்கித் தந்தும் பெற்றபொருளால் சிவனடியார்க்கு அன்னம் பாலித்து வந்தவர். சங்கம வழிபாடு (63).
முனைவன் - கடவுள், புத்தன்.
மூ
மூ - மூன்று.
மூட்சி- மூளுதல்.
மூடருபம் - முடமாய் இருக்கும் தன்மை.
மூத்திராதி - சிறுநீரக உறுப்பு.
மூத்தோர் - அடிகள், ஆசான், தலைவன், ஐயன், பெருமான்.
மூர்க்க நாயனார் - வேளாளர். திருவேற்காடு தொண்டை நாடு. சூதாடி அதிற் கிடைத்த பொருளை எல்லாம் அடியவர்க்கு அமுதுாட்டுவதற்குச் செலவு செய்தவர். சங்கம வழிபாடு (63).
மூர்ச்சை - மயக்குவது.
மூர்த்திநாயனார் - வணிகர். (மதுரை) பாண்டி நாடு. திருஆலவாய் இறைவனுக்குச் சாத்தச் சந்தனம் அரைத்து வந்தவர். இலிங்க வழிபாடு (63).
மூல அருங்கட்டில் - மூலாதாரமாகிய கட்டில்.
மூலஅவத்தை- கேவலம், சகலம், சுத்தம் ஆகிய மூன்றும்.
மூல உடம்பு - முதல் உடல் 31 தத்துவமும் மூல உடம்பு. வித்தியா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24.
மூலம்- முதல், முனை, இறை சித்தம் எ-டு மூலநூல், முதல் நூல் துரியாதீதம் எனப்படும் மூலாதாரம்
மூலம்ஐந்து- 1) வில்வவேர் பெருங் குமிழம் வேர், தழுதாழை வேர், பாதிரிவேர், வாகைவேர். இவை பெருபஞ்சமூலம் 2) கண்டங்கத்திரி வேர், சிறு மல்லிவேர், பெருமல்லிவேர், சிறுவழுதுளைவேர், நெருஞ்சி வேர் இவை சிறு பஞ்சமூலம்
மூல கன்மம்- அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம்.
மூலகாரணம்- முதல் காரணம்.
மூலநோய் - ஆணவ மலம்.
மூலபஞ்சாக்கரம்- நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தாகிய மந்திரம்.
மூலப்பிரகிருதி- பொருள் மூலப்பகுதி, மூலம்
கொள்கை
1) சாங்கியர் கொள்கை கலை என்னும் தத்துவத்திலிருந்து வித்தை, அராகம் ஆகிய இரண்டும் தோன்றியபின் பிரகிருதி தோன்றுவது. "இது எல்லாவற் றிற்கும் மூலம் இஃது அநாதி ஆகும். ஒன்றிலிருந்து தோன்றியது அன்று” என்பதுசாங்கியர் கொள்கை. இக்கொள்கையை ஏனைய வேத மதங்களும் ஒப்புக் கொள்கின்றன.
2) சைவசித்தாந்தக்கொள்கை. இது அசுத்தமாயையின் காரியமான கலை, கலை என்னும் தத்துவத்திலிருந்து தோன்றுவது. சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இயற்கை மாயை இரண்டுடன் இப்பிரகிருதியையும் சேர்த்து மும்மாயை என்று சைவசித்தாந்தம் கூறும்.
விளக்கம்
மூலப்பிரகிருதி ஒரு தத்துவமே இது சத்துவம், இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களையே வடிவாகக்கொண்டது. இம்முக்குணங்கள் வெளிப்படாத நிலை அவ்வியத்தம் எனப்படும். அம்மூன்றும் வெளிப்பட்டுச் சமமாய் நிற்கும் நிலை குணதத்துவம் ஆகும். இக்குண தத்துவமே சித்தம் என்றும் அந்தக் கரணம் என்றும் கூறப்படும். மனம் என்கின்ற அதுவே சிந்தனை செய்யும் பொழுது சித்தம் எனப் பெயர் பெறுகிறது என்பார் சிவஞான முனிவர்.
பெயர்க் காரணம்: கலையிலிருந்துதோன்றுவதால், இதற்கு இப்பெயர். மொழியப்படும் தத்துவங்களுக்கு எல்லாம் இது முதல் காரணம் ஆதல் பற்றி இது பிரகிருதி மாயை என்றும் கூறப்படும்.
அகக்கருவித் தோற்றம் 1) புத்தி: சத்துவகுணத்தை மிகுதியாகவும் ஏனையவற்றைக் குறைவாகவும் கொண்டு தோன்றுவது 2) அகங்காரம் : புத்தியினின்று இராசத குணம் மிகுதியாகக் கொண்டுதோன்றுவது இது 3) மனம்: அகங்காரத்தின் சத்துவக் குணக்கூறில் தோன்றுவது இது.
மூலமலம்- ஆணவம் அறிவதற்கு மூலத் தடையாக இருப்பதால், இதற்கு இப் பெயர். அறியாமை ஆணவம் என்று உண்மை விளக்கம் இதனை உரைக்கும்.
மூலாதாரம் - மூலம்.
மூலை - முற்றம் மூலை-மூலாதாரம் முற்றம்- நிராதாரம், மூலாதாரத்தில் மயங்கிக் கிடக்கும் உயிரை முறையாக நிராதாரத்தில் செலுத்தித் திருவருளில் அழுந்தி நிற்போரே சாலப்பெரியவர் ஆவர். அவரே தவத்தில் தலைவராவார். நிராதாரம் செல்லும் அளவும், அலைந்து நிற்கும் உயிர் திருவருளால் அதன்கண் நிற்பின் அலைவற்று நிற்கும் (அருணைவடிவேலு முதலியார்) எ-டு மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர் (திப 12)
மூவகை அணு- மூவகை உயிர்கள்; விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர். ஒ. அகலர்.
மூவகை உணர்நிலை- பா. மூன்று வகை உணர் நிலை.
மூவகைக் காரணம்- முதற் காரணம் துணைக் காரணம், நிமித்த காரணம், உலகமாகிய காரியத்திற்கு மாயை முதல் காரணம். இறைவன் நிமித்த காரணம். அவன் ஆற்றல் அவனுக்குத் துணைக் காரணம். ஒரு காரியம் நடைபெற இம்மூன்று காரணங்களும் தேவை பா. காரணம். மூவகைத் திருமேனிகள்- பா. திருமேனிகள்.
மூவகைப் பிரபஞ்சம்- சுத்தப் பிரபஞ்சம் மிச்சிரப் பிரபஞ்சம், அசுத்தப் பிரபஞ்சம் மிகச்சிரம், சுத்தம் அசுத்தம் ஆகிய இரண்டின் கலப்பு.
மூவகைப் புறச் சமயம் - புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப் புறச் சமயம்.
மூவகைவழி- 1) மெய்யறிவு நூல் ஓதுதல் 2) திருத்தொண்டு புரிதல் 3) சிவப்பணி செய்தல்.
மூவர்- சமயக்குரவர் அப்பர், சுந்தரர், சம்பந்தர் என்னும் மூவர்.
மூவர் தமிழ் - மூவர் பாடிய தேவாரம்
மூவர் முதலிகள்- பாமூவர்.
மூவா முதல் - கடவுள்.
மூவினை அதிகரணம்- சிவஞான போத முதல் நூற்பாவின் முதல் அதிகரணம்: அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் இதில் உலகம் மூவினை உடைத்தாதல் தடை விடைகளால் நிறுவப்படுவதால், இது மூவினை அதிகரணம் என்று பெயர் பெறுவதாயிற்று.
மூவினை(மை)- தோற்றம், இருப்பு, ஒடுக்கம். இவை மூவினைமையின் ஒடுக்கம். (சிபோ நூபா 1) ஒ.இருவினை
மூளுதல் - தாக்குதல்.
மூற்கை- மயக்கம்.
மூன்றாய தன்மை- காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் என்னும் மூன்று தன்மை.
மூன்று - உள் பொருள்களான உயிர் உறுப்பு முதலியவை மும்மூன்றாக உரிய அடிப்படையில் பிரிக்கப்படுதல். எ-டு முக்குணம், முக்குற்றம்.
மூன்று அவத்தை - காரண அவத்தை; கேவலம், சகலம், சுத்தம் ஒ. காரிய அவத்தை.
மூன்று உறுப்பு வணக்கம் - திரியங்க நமக்காரம். தலை மேல் இருகைகூப்பி வணங்குதல். பா. வணக்கம்.
மூன்று ஏதுக்கள் - "உலகம் தோன்றி அழியும்" என்பதற்குக் கூறப்படும் மூன்று காரணங்கள். அவையாவன: 1) அவயப் பகுப்புடைமை 2) சமமாயும் பலவகையாகவும் இருத்தல் 3) சுட்டியுணரப்படுதல். இம்மூன்றாலும் உலகம் தோற்றல், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டிருப்பது நிறுவப்படுவதால், அதனையே ஏதுவாகக் கொண்டு உலகம் உள்பொருள் ஆதல் நிறுவப்படுகிறது.
மூன்று குற்றம்- பா.முக்குற்றம்.
மூன்று திறம்- தொழில், அறிவு, விழைவாற்றல் ஆகிய மூன்று.
மூன்று பாசங்கள்- திரோதனம், வினை, மாயை ஆகிய மூன்று.
மூன்று வகை உணர்நிலை- 1) இறைவன் இல்லை;நான் மட்டும் உள்ளேன் 2) இறைவன் உள்ளான்; நான் நானும் உள்ளேன் 3) இறைவன் உள்ளான்; நான் இல்லை, இவற்றில் முதல் இரண்டில் தற்போதம் ஒழியாது. இறுதி ஒன்றில் தற்போதம் ஒழியும்.
மெ
மெய்- 1) உயிர், எழுத்து, பருவுடல், முதல்வன், உண்மை, தத்துவம் 2) வெண்ணிறு, வேடம், பூசை 3) இயற்கை உணர்வு
மெய்யுணர்வு- உயிர்கள் உடைமைப் பொருள். இறைவன் உடைய பொருள். இந்நிலையை உணர்தலே மெய்யுணர்வு என்பது சைவசித்தாந்தம்.
மெய்கண்டசாத்திரங்கள்- இவை14 சைவ சித்தாந்த நூல்கள். 1) திருவுந்தியார் 2) திருக்களிற்றுப்படியார் 3)சிவஞானபோதம் 4) சிவஞான சித்தியார் (பரபக்கம் சுபக்கம்) 5) இருபா இருபஃது 6) உண்மைவிளக்கம் 7) சிவப்பிரகாசம் 8) திருவருட்பயன் 9) வினாவெண்பா 10) போற்றிப்பஃறொடை 11) கொடிக்கவி 12) நெஞ்சுவிடு தூது. 13) உண்மைநெறி விளக்கம் 14) சங்கற்ப நிராகரணம். மெய்கண்ட சந்தானத்தில் தோன்றியதால் இவற்றிற்கு மெய் கண்ட நூல்கள் என்று பெயர். இவை சிவாகமத்தின் ஞான காண்டம் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ் நூல்கள். வேதத்தின் ஞான காண்டப் பொருளை உள்ள படி அறிவிக்கும் தமிழ் நூல்கள் தேவாரமும் திருவாசகமும் ஆகும். இவை இரண்டும் தமிழ் வேதமாகும்.
மெய்கண்டார்- வேளாளர். திருப்பெண்ணாகடம். வேறுபெயர். சுவேதனப் பெருமாள். சிறப்புப் பெயர்; திருவெண்காடர், சைவ சிகாமணி. இவர்தம் குருபரஞ் சோதி முனிவர். இவர் தம் அருளுரை பெற்று மெய்கண்டார் என்னும் பெயர் பெற்றவர். திருஞானசம்பந்தரைப் போல் இவர் ஈராண்டிலேயே சிவஞானம் பெற்றவர். தமிழுலகம் உய்ய வேண்டிச் சிவ ஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முதல் நூலை அருளினார். இவர்தம் மாணாக்கர் 49பேர். முதல் மாணாக்கர் சகலாகமபண்டிதர். அருள்நந்தி என்னும் பெயர் சூட்டப்பட்டவர். சிவஞான போதத்திற்குச் சிவஞான சித்தியார் என்னும் வழிநூல் அருளியவர். மெய்கண்டார் காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
மெய்கண்டார்நிலையம்- இஃது ஒர் ஆலயம், மெய்கண்டாருக்காக அவர் பிறந்த பெண்ணாகடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பரப்பு 1 ஏக்கர் 15 செகண்டு 1-5-1952இல் இவ்வாலயம் கட்டப்பட்டது. இதில் மெய்கண்டாரைப் பிரதிட்டை செய்து குடமுழுக்கு நடைபெற்றது. இங்குச் சைவ சித்தாந்தசாத்திரங்களின் சொற் பொழிவு முறைப்படி விளக்கப்பட்டு வருகிறது; தருமை ஆதீனைக்கட்டுப்பாட்டில் உள்ளது. இது சிறந்த ஆராய்ச்சி மையமாக வளர்வது மிக இன்றியமையாதது. தவிரச் சென்னை அண்ணா சாலையில் (603) உள்ள சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், சென்னைப் பல்கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் சைவ சித்தாந்தத் துறைகள், தருமை ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகிய இரண்டின் மையங்கள். ஆக இவையனைத்தும் சைவசித்தாந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
மெய்கண்டார் மறுக்கும்- மதங்கள்-மெய்கண்டார் 11 நூற்பாக்களில் 42 மதங்களைச் சற்காரிய வாதங் கொண்டு மறுக்கின்றார். 12ஆம் நூற்பாவில் மத மறுப்பு இல்லை. நூற்பா 1-4இல் பத்தும், 5இல் இரண்டும் 6இல் ஏழும் 7இல் ஒன்பதும் 8இல் ஐந்தும் 9இல் இரண்டும் 10இல் ஒன்றும் 1இல் ஆறும் ஆக 42.
மறுக்கப்படும் மதங்கள்- அகரவரிசையில் பின்வருமாறு.
1. அநேக அந்தவாதி
2. அநேக ஈசுரவாதி
3. அந்தக்கரண ஆன்மவாதி
4. ஆவேசவாதி
5. இந்திரிய ஆன்மவாதி
6. இரணிய கருப்பவாதி
7. ஈசுவர அவிகாரவாதி
8. உலகாயத வாதி
9. உற்பத்திவாதி
10. ஏகான்மவாதி
11. ஐக்கியவாத சைவம்
12. கடவுளர்
13. கீரீடாபிரம வாதி
14. சமூக ஆன்மவாதி
15. சமணா
16. சாங்கியர்
17. சிவசங்கிராந்தவாத சைவர்
18. சீவாத்துவித சைவர்
19. சீவசமவாத சைவர்
20. சித்த ஆன்மவாதி
21. சுத்த சைவர்
22. சூனிய ஆன்மவாதி
23. சூக்குமதேக ஆன்மவாதி
24. தூலதேக ஆன்மவாதி
25. நையாயிகர்
26. பரிணாமவாதி
27. பாஞ்சராத்திரி
28. பாசுபதவாதி
29. பாடானவாதி
30. பாட்டாசாரியர் மதம்
31. பாதஞ்சலர் மதம்
32. பிராண ஆன்மவாதி
33. புத்தர்
34. பேதவாத சைவர்
35. பெளராணிகர்
36. மாயாவாதி
37. மாத்துவர்
38. மீமாஞ்சகர்
39. முதற்காரணவாதம்
40. யோகசாரன்
41. விஞ்ஞான ஆன்மவாதி
42. வைசேடிகர்.
மெய்கண்டார் மாணவர்கள் - இவர்கள் 49 பேர். இவர்களில் அருணந்தி சிவாசாரியார். மனவாசகங்கடந்தார், சிற்றம்பல நாடிகள், கண்ணுடைய வள்ளலார் என்னும் நால்வர் பெயர் தான் நன்கு தெரிகிறது.
மெய்கண்டான் - உண்மையறிந்த மெய்கண்டார்.
மெய்ஞ்ஞானி- மெய்யறிவாளர்.
மெய்ஞ்ஞானிக்கு ஆகாதவை- புண்ணிய பாவங்களின் பயனாயும் காரணமாயும் பொருந்துகின்ற கன்ம மலமும், மண் முதல் மோகினி ஈறாகச் சொல்லப்படுகின்ற மாயாமலமும், விபரீதமாகிய சுட்டறிவைப் பயக்கின்ற ஆணவ மலமும் மெய்ஞ்ஞானிகளுக்கு ஆகாதவை. ஆதலின், இம்மூன்றையும் அவர்கள் விடல் அறிவுடைமையாகும்.
மெய்ஞ்ஞானம்- மெய்யறிவு, மெய்யுணர்வு சிவம். ஒ. அஞ்ஞானம்.
மெய்ஞ்ஞானக் கண் - மெய்யறிவு ஒளி. ஒ. ஊனக்கண். மெய்ஞ்ஞானக்கள் - மெய்யறிவுத்தேறல்
மெய்யடியார் - உறுவது நீற்றின் செல்வம் எனக் கொள்ளும் உளம் உடையவர்கள் பெறுவது சிவன்பால் அன்பாம் பேறு எனக் கருதி வாழும் பெற்றியர். இவ்விரண்டையும் இவர் உள்ளகத்துக் கருதாது பழிக்கவும் செய்வர். ஆதலின் இவர்கள் இழிந்தவர்களானார்.
மெய்த்தவம்- ஐயன் உணர்வினார் உணரும் தவம். ஏனைய தவங்கள் மெய்யாகா.
மெய்த்தவர்- சிவஞானி, மெய்ஞ்ஞானி, இவர்களை ஊழ்வினை மேவர்.
மெய்த்தேவே - மெய்கண்ட தேவனே.
மெய்ந்நூல் வழியளவை - மிருதி, புராணம் கலை, சுருதி, வேதம், சிவாகமம் முதலியவை.
மெய்ப்படும்- உள்ளதும்போகும்.
மெய்ப்பாவகன்- உண்மைப் பாம்புப் பிடாரன்.
மெய்ப்பொருள்- பரம்பொருள்.
மெய்ப்பொருள் நாயனார் - மலையமான். திருக்கோவலூர் நடுநாடு சிவனடியார்களின் திருவேடத்தையே சிவ பெருமானாகக் கருதி வழிபட்டவர். சங்கமே வழிபாடு(63).
மெய்ம்மைக் கொள்கை - மெய்யறிவுக் கொள்கை மேனாட்டு அளவை இயலில் மெய்ம்மை பற்றி 3 கொள்கைகள் நிலவுகின்றன.அவையாவன; 1) தொடர்புக் கொள்கை, நம் நுகர்வில் உள்ள பொருள்களுக்கு நேர் இணையான பொருள்கள் உளவா எனச் சரிபார்ப்பதைச் சார்ந்தது. 2) இணைவுக் கொள்கை நுகர்வில் பெறப்படுபவை தம்முள் ஒருங்கியைந்திருத்தல். 3) நடைமுறைக் கொள்கை; இது பயன் வழிக் கொள்கை. பேரா. எஸ். எஸ். சூரிய நாராயண சாத்திரியார் சைவசித்தாந்தத்தில் மெய்ம்மை என்னுந்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சைவ சித்தாந்தம் இணைவுக் கொள்கையைப் பின்பற்றுவதாக அவர் கருதுகிறார். அனைத்தையும் சேர்க்கும் முறையில் ஒன்றையும் விடாது உள்ளீடாகக் கொள்வதில் சாருவாக தரிசனத்தையும் சித்தாந்தம் ஏற்பதையும் அவர் குறிப்பிடுகின்றார்.
மெய்ப்பொருள்- செம்பொருள்.
மெய்ப்பொருளியல்- எப்பொருளையும் ஊடுருவி ஆராய்ந்து அதன் உண்மை இயல்பைக் காண்பது. மெய்ப்பொருளியல் அறிவியலின் தந்தை. வேறுபெயர் தத்துவ இயல், மெய்யறிவியல், மெய்யுணர்வியல்.
மெய்ம்மை- பேரன்பு, மெய்ம்மைச் சிவயோகம்.
மெய்யர்(ன்) - கடவுள், ஞானி.
மெய்யறிவியல் - பா. மெய்ப்பொருளியல்.
மெய்யாதி - ஐம்பொறிகள். ஒ.பூதாதி.
மெய்யுணர்வு - பேருணர்வு, இறையுணர்வு, உண்மையறிவு.
மெய்யுணர்வு ஆய்வு- மேனாட்டுக் காரணகாரிய மெய்யுணர்வு ஆய்வில் வடிவம், பொருள், நிமித்தம், மார்க்கம் என்னும் நான்கு கருத்துகள் வலியுறுத்தப்படுகின்றன. அவற்றுள் நோக்கம் எதன் பொருட்டுக் காரியம் செய்யப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இக்கருத்தை நாம் நிமித்தம் என்னும் சொல்லிலிருந்தே பெற வேண்டும். நிமித்த காரணம் என்னுந்தொடரை வினைமுதல்வன் என்னும் பொருளிலும், அவ்வினை எதன் பொருட்டு, எந்நோக்கம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படுகின்றது என்னும் பொருளிலும் கொள்ளலாம்.
மெய் வைத்த சொல் - வாய்மைச் சொல் திருவள்ளுவர் சொல்
மெல்ல- மெதுவாக
மெல்வினை- புண்ணியம். ஒ.வல்வினை.
மெள்ளவே- பையவே.
மே
மேகன், மேகம்- மேகநோய்.
மேதக்கோர் - மேலானவர்.
மேதி - எருமை.
மேதினி - உலகு.
மேதை- 1) அறிஞர் 2) கொழுப்பு.
மேலன- முன்னர்த் தோன்றும் தத்துவங்கள். ஒ. கீழன.
மேலாலவத்தை- மூன்று அவத்தைகளில் ஒன்றான ஏறு அவத்தை மேல் நோக்கி நடைபெறுவது. அதாவது, ஆன்மா மேல் நோக்கி ஏறுவது. வேறு பெயர் மேல் நோக்கு அவத்தை ஒ. கீழாலவத்தை
மேவா- பொருந்தா, எ-டு மேவாவினை.
மேவா வினை- மெய்ஞ்ஞானிகளுக்கு ஊழ்வினைகள் வந்து பொருந்தா.
மேளித்தல்- கூட்டுதல்,கலத்தல்.
'மேற்கோள் - தான் கொண்ட கொள்கையை நிலைநாட்டப் பயன்படுவது. சிவஞானபோத நூற்பா அதிகரணத்தின் ஒர் இன்றியமையா உறுப்பு, ஏனைய இரண்டுஏது, எடுத்துக்காட்டு
மேற்கோடல்- ஏது, எடுத்துக்காட்டு முதலியவற்றில் சாதிக்கப்படும் தன்மை உண்மை எனில், மற்றைய போலி உறுதிகளை வென்று ஏற்புடன் மேற்பட்டு எழுதுதல்.
மை
மைதுனம்- புணர்ச்சி, கோபம்
மைப்படி - இருள், குற்றம் எ-டு மைப்படிக் கண்டன் அண்டன் (சிசிபப 301).
மைப்படி கண்டன்- நீலகண்டன்.
மையல் - மயக்கம். எ-டு மையல் மானுடர் செருக்கு.
மொ
மொழிபெயர்த்தல்- ஒரு மொழியிலுள்ள பொருளை மற்றொரு மொழியில் கூறுதல். எ-டு Warm-Glooded animal- வெப்பக் குருதி விலங்கு.
மொழியாக்கம் - ஒரு மொழியிலுள்ள பொருள் கருத்துகளை மற்றொரு மொழியில் கோவையாகக் கூறுதல் எ-டு Warm Glooded animal- வெப்பநிலை மாறா விலங்கு.
மொழி மாற்று - புதிய இலக்கிய உத்தி பா. திருஞான சம்பந்தர்.
மொய் - வலிய.
மொய் வரை- வலிய மலை எ-டு மொய்வரை எடுத்தான் மூலம் (சிசிபப289) காட்டில் மலையை எடுத்துத் திருமால் ஆநிலை காத்தது இங்குக் குறிப்பிடப்படுவது.
மொள்- எடு, எடு உன்னுள்ளே மொள்ளா அமுதாம் என்று உந்தீ பற (திஉ 26).
மோ
மோகம்- ஆன்மாவோடுசகசமாகவுள்ளது. மதம் முதலிய செயல்களுக்கு ஏதுவாகியது அஞ்ஞானம்.
மோகக் கொடி- மோகம் கொடி போன்று வளர்தல் உருவகம்.
மோகருபம்- மோகமாய் இருக்கும் தன்மை.
மோகன்- விரும்பும் இறைவன்.
மோகனம்- மோகனியம் என்னும் கருவி.
மோகினி- அசுத்த மாயை.
மோகனீயம்- எண்குற்றங்களுள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யும் குற்றம்.
மோசித்து - விரும்பி, எ-டு மும்மலத்தை மோசித்து.
மோட்சம் - வீடுபேறு, முத்தி, பிறவா நெறி பா. முத்தி
மோதிரம்- கணையாழிகை அணிகலன்களில் ஒன்று.
மோனந்த- பேசா. மெளன. எ-டு மோனந்த மாமுனிவர்.
ய
யசோவர்மா - சைவத்தை ஆதரித்த வடநாட்டு அரசன். கி.பி. 8
யமுனை - 9 தீர்த்தங்களில் ஒன்று.
யா
யாகம்- வேள்வி. இது 18 வகை பொதுவாகக் கர்மயாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம் என 4 வகை. இவை அளிப்பது போகம்.
யாக குண்டம்- வேள்விக்குழி.
யாகசாலை - வேள்விச் சிலை.
யாக பாகம்- அவிர்ப்பாகம்.
யாக்கை- உடம்பு, பிறவாயாக்கை பெரியோன்; கடவுள்
யாத்தல்- கட்டுதல்.
யாதனா சரீரம்- உடலில் ஒரு வகை. பா. வேற்றுடல் சரீரம்.
யாப்பு- 1) இந்நூல் கேட்டபின் கேட்பதற்குரியது என்னும் இயைபு 2) யாத்தல் 3) செய்யுள்.
யாப்புறுத்தல் - வலியாக்கல்.
யாமை - ஆமை
யாழ்- பேரியாழ், சகோட யாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ் என 4.
யான்- யான் என்னும் செருக்கு.
யு
யுகம்- ஊழிகாலம், கிரேதயுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் என 4.
யோ
யோகம்- இது சிவயோகமாகும். இயமம், நியமம், ஆசனம், பிராணா யாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகைகளில் படிப்படியாக நிற்றல். ஐம்பொறிகளை ஒடுக்கி, உயிர்ப்பை நிலைநிறுத்தி மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் உள் வழிகளை அறிந்து அவ்விடங்களில் பொருத்திச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதத்தை உடல் முழுவதும் நிரப்புதல். முழுச் சோதியை நினைத்திருந்து வினைகள் கெடுதற்குரிய நெறியைக் கடைப் பிடித்தால் சிவ உருவத்தைப் பெறுவர். சுந்தரர் யோக நெறியில் நின்றவர். சுருக்கமாகத் திருமேனியைத் தியானித்தல் யோகம் ஆகும்.
யோகம் - கேசரி சாங்கியம். பா.யோகமதம்.
யோகக்காட்சி- அறிவைத் தடை செய்கின்ற மல ஆற்றலை யோகமுறைகளில் ஒருவாறு ஒழித்து, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையும் காண்கின்ற காட்சியோகக் காட்சியாகும். இது சிவஞான முனிவர் கூற்று.
யோகசம்- சிவாகமம் 28இல் 1.
யோக சமாதி- உடலையும் மனத்தையும் விட்டு ஆன்மா பிரிந்து நிற்கும் யோக நிலை.
யோகசாரர்- புத்தர். அறிவே ஆன்மா என்னுங் கொள்கையினர்.
யோகசாரம், யோகம்- அறிவே (விஞ்ஞானம்) ஆன்மா அல்லது கடவுள் இல்லை என்னுங் கொள்கை. பெளத்த மதப்பிரிவில் ஒன்று. பா. யோக சூத்திரம்.
யோக சூத்திரம் - பதஞ்சலி முனிவர் செய்த நூல். யோக மதம் அவர் பெயரால் பாதஞ்சலம் எனப்படும்.
யோக சைவம் - சைவம் 16இல் 1. தீக்கை பெற்றவன் அட்டமாகயோகம் பயின்று அட்டமா சித்தி பெறுதலைக்கூறும் சமயம்.
யோகதீக்கை- 1) யோக நெறியால் சீடனது உடலுக்குள் குரு சென்று, அவன் ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் வினை. 2) தீக்கை ஏழில், நிராதர யோகத்தைப் பயிற்சி பண்ணுமாறு செய்தல்.
யோகப்படி நிலை - 4 யோகச் செய்திகள்.
1) யோகத்தில் சரியை- இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம் என்னும் நான்கினையும் பழகுதல். 2) யோகத்தில் கிரியை- பிரத்தியாகரம், தாரணை என்னும் இரண்டினையும் பழகுதல். 3) யோகத்தில் யோகம்- தியானம் செய்தல். 4) யோகத்தில் ஞானம்- சமாதி கூடுதல்.
யோகபரர்- ஞானிகள், தவசீலர். ஒத்தாரே யோகபரர் என்பது திருவுந்தியார் வாக்கு.
யோக பாதம் - 1) ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி. 2) யோகத்தைப் பற்றிக் கூறும் பாஞ்சராத்திர ஆகமப் பகுதி.
யோகபூசை- அறிவின் ஒளியாகச் சிவனைத் தியானித்தல்.
யோகமதம் - பதஞ்சலம். கடவுள் உண்டு என்று நிறுவுஞ்சமயம் வேறு பெயர் கேசரசாங்கியம். கேசரம். ஈசுரனோடு கூடியது.
யோகர்- 1) யோகியர் 2) சமண முனிவர் உருவத் திருமேனி களில் ஒன்று. தென்முகக் கடவுள் இருந்து யோகமுத்திக்கு உதவுதல். யோனி- உற்பத்திக் காரணி இது 84,00,000 என்று பகரும் சிவஞான சித்தியார் (சிசிசு 179) 40,000 என்று கூறும் சிவப்பிரகாசம் (சி.பி. 47)
யோனி பேதம் - 84,00,000.
ர
ரசம் - சுவை.
ரா
ராகம்- பண், கவலை.
ராசகேசர சூரி- சைன ஆசிரியர். கி.பி. 14
ராசீகரர்- இறைவன் 28 அவதாரங்களில் ஒன்று.
ராம கண்டர்- சித்தாந்த சைவ ஆசாரியார். பா. அகோரா சாரியார்.
ரூ
ரூபகம்- ஏழுவகைத் தாளங்களில் ஒன்று.
ரூபம்- 1) வடிவம்: உருவம், தன் மாத்திரை 5இல்1 2) பொதுக் காட்சி
ரே
ரேவணசித்தர்- பழைய வீரசைவ ஆசாரியார்.
ல
லகிமா- எண் சித்திகளில் ஒன்று. உடலை மிகவும் இலேசாகக் கொள்ளுதல். ஒ. கலிமா
லகுதை- நொய்மை, ஒரு குணம்.
லலிதாதித்தியன்- காச்மீர அரசன் கி.பி. 8. காச்மீர சைவம் வளர உதவியவன்.
வ
வகை - கூறுபாடு, பாகுபாடு.
வசனாதி- 11 புறநிலைக் கருவிகளில் வசனம் (வாக்கு), கமனம் (பாதம்), தானம் (பாணி), விசர்க்கம் (பாயு), ஆனந்தம் (உபத்தம்) ஆகிய ஐந்தையும் கொண்டது. இவற்றிற்கு முறையே தமிழ் பின்வருமாறு: மொழி, கால், கை, எருவாய், கருவாய்.
வசன்- ஒரு நிலைக்கு உள்ளாகும் இறைவன் தன்வசன் நின்வசன், பரவசன் என மூவகை.
வசனிக்கும்- வசனத்தைச் சொல்லும் ஒ. நிர்வசனம்.
வச்சிரம்- ஒரு கருவி, எ-டு குறிகள், வச்சிரத்தினோடு (சி.சி.சு 158),
வசித்துவம்- எண் சித்திகளுள் ஒன்று. எல்லா உலகங்களையும் தன் வயப்படுத்துதல்.
வசிட்டர் - ஏழு முனிவர்களில் ஒருவர்.
வசிப்பில் - குற்றமிலா. எ-டு வசிப்பில்நான்மறைகள் சொன்ன
வசீகரித்தல் - வசப்படுத்துதல்.
வஞ்சம்- சூழ்ச்சி, வஞ்சனை.
வஞ்சமணர்- சூழ்ச்சியுள்ள சமணர்.
வடகண்டம்- வடபுலம்.
வடங்கொண்ட- முத்து வடம் தாங்கிய.
வடம்- புலன், பற்று. எ-டு வடம் போல அடக்கி நிற்கும் வட விடத்தே (திப 48) கதிர் நிலா வடங்கொள்ள (சிசிபப 30)
வடமொழி மதம்- வடநூல் கொள்கை. வட விருச்சம்- ஆலமரம்
வணக்கம் - வணங்கல், இறை வணக்கம் எ-டு வணக்கம் உன் இறைக்கு மேல் (சிசிபப152).
வணக்க வகை- ஒருறுப்பு வணக்கம், மூவுறுப்பு வணக்கம், ஐந்துறுப்பு வணக்கம், தரை உறுப்பு வணக்கம், எட்டுறுப்பு வணக்கம் என வணக்கம் ஐந்து வகை.
வணக்குறிர்- வணங்குகிறீர்.
வண்ணம்- வன்னம், நிறம், அழகு, குணம், நிலை, வழி எ-டு திருமாலின் கிடந்த வண்ணம்.
வண்மை - வளப்பம், வண்மை தரு.
வத்திரம் - அழகிய ஆடை அணி வித்தல், வழிபாட்டுநிலைகளில் ஒன்று.
வத்திர பங்கி- ஆன்மார்த்த பூசையில் சிவனது ஐந்து திருமுகங்களையும் பூசனை செய்தல்.
வத்து- பொருள். எ-டு வத்து நிச்சயம் பண்ணி.
வந்தனை-' வணக்கம்.
வந்தித்தல்- வழிபடுதல்.
வயதிரேகி- எதிர்மறை.
வயித்திய நாதன்- உயிரைப்பற்றியுள்ள இறைவன். பிணியைத் தீர்ப்பவன்.
வயிரவர்- வைரவர். சங்ககார ருத்திரர். வேறு பெயர் சிவ குமாரர்.
வரத்து - விளங்கி, வருகை.
வரம்- தெய்வப்பேறு எ-டு வரங்கள் தருபவர் இறைவர்.
வரம்பு- எல்லை.
வரம்பிலா இன்பம் உடையவன் ஆதல்- பதி இயல்புகளில் ஒன்று.பதி, பேரறிவும் பேராற்றலும் உடையவன். ஆகவே, அவன் பேரின்பம் உடையவன்.
வரம்பின்றி ஒடல் - எல்லை இன்றிச் செல்லுதல்.
வரவு - பிறப்பு. பா. போக்கு.
வரிசின்னம்- சங்கு எ-டு வரி சின்னம் ஊதி.
வருக்கம்- ஓரினக் கூட்டம்.
வருதல்- தோன்றுதல்.
வருவாய்- வரும் வழி. வினை வகையில் ஒன்று.
வருவினை- வரும் வினை. எ-டு இசைத்து வருவினையில் இன்பம் (சிபோபா 46).
வரைந்து வைத்தல்- முடிவு செய்தல்.
வரைமகள்- தெய்வ மகள்.
வரையறை- இலக்கணம். எல்லைப்படுத்தல்.
வர்ணத்துவா- வன்னம், அத்துவா 6இல்1
வர்த்தமானம்- நிகழ்காலம்.
வர்த்திக்கும்- வளரும்.
வல்லபடி- வலுவாக, எ-டு வல்ல படி வாதனையை மாற்றும் வகை இதுவே. (திகப56).
வல்லி- மாயமலம். எ-டு வல்லி மலகன்மம் (சிபோ பா 12)
வல்லுதல் - வலிமை உடைத்தாதல்.
வல்லுநர்- இயலுநர் வல்லமையுள்ளவர்.
வல்லுப்பலகை- சூதாடுபலகை, மூர்க்க நாயனார் தாம் சூதாடி அதில் பெற்ற பொருளை எல்லாம் அடியவர்களுக்கு அமுதூட்டச் செலவழித்தவர்.
வல்லை - வன்மை, எ-டு வல்லைவாமி வலிய துர்க்கை. வல்விடம்- வலிய (கொடிய) நஞ்சு.
வல்வினை- வலிய கன்ம மலம் ஒ. மெல் வினை.
வலி- வலிமை, உயிர்க்கு வலிமை ஊழ்வலி, எ-டு ஊழிற்பெரு வலி யாவுள (குறள் 380).
வலித்தல்- அசைத்தல், ஈர்த்தல், இழுத்தல் எ-டு இரும்பைக் காந்தம் வலித்தல் போல் (சிசிசு 321).
வலிந்துசெல்லும் தொண்டன்- தானே வரிந்து கட்டிக் கொண்டு செல்லும் இறைவன். பரவைக்காகச் சுந்தர மூர்த்தி நாயனார் சார்பில் இறைவன் தூது சென்றது இங்குக் குறிப்பிடப்படுகிறது. (திப 72).
வழக்கு- பிரசித்தி, உலகவழக்கு, செய்யுள் வழக்கு என இரு வகை. பா. இல்வழக்கு.
வழக்குரை- வாதம் ஒரு கருத்தை நிலைநாட்ட அளவை இயலில் கூறப்படும் கூற்று. இது இருவகை 1) உலகியல் வழக்குரை: புற உல கைக் காரியமாகக் கொண்டு காரணங் கூறுவது. 2) அறவியல் வழக்குரை : அற உலகை நெறிப்படுத்துவதற்காக ஒருவன் வேண்டும் என்பது. இவை இரண்டும் சைவசித்தாந்தத்தில் கூறப்பெறுகின்றன. இருவினை காரணமாக உயிர்களின் போக்குவரவு நெறிப்படுத்தப்படுவது இங்குக் குறிப்பிடப்படுவது.
வழக்குரையின் ஏற்புடைமை- இது வடிவமைப்பு பற்றியதாகவும் பொருள் இயைபு பற்றியதாகவும் அமையவேண்டும் இம் முறையில் வடிவமைப்பைச் சிவாக்கிரமயோகியர் உரை எடுத்துக் காட்டுகிறது. பொருள் இயைபு பற்றியது பிறகொள்கையினர் கூறும் தடைகளுக்கு விடை கூறி, மேல் செல்வது வேண்டப்படுகிறது. முதல் நூல் (சிவஞான போதம்) நுட்பமாகச் சொல்வதை வழிநூல் (சிவஞான சித்தியார்) விளக்கமாக எடுத்துரைக்கிறது.
வழங்குதல்- நடைபெறுதல்.
வழி - ஆறு. நூல் வந்த வழி.
வழிபடுதெய்வம்- ஒருவன் தன் குலத்துக்கும் தனக்குமுரியதாக வணங்கும் கடவுள் எ-டு மெய்கண்டார் வழிபடு தெய்வம் பொல்லாப் பிள்ளையார்.
வழிபாட்டு நிலைகள்- இவை வழிபாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப் பெறுபவை. நோக்கம் மெய்யறிவு பெறுதல் இறைவனை நிலைபெறச் செய்தபின் மேற்கொள்ளப்படும் பணிவிடைகளாவன. 1) ஆசனம்; இருக்கை அமைத்தல் 2) பாத்யம், நீர் தருதல் 3) ஆசமனம் மந்திரநீர்கொள்ளல் 4) ஆர்க்கியம், நீரளித்தல் 5) அபிடேகம்; திருமுழுக்கு. 6) வத்திரம் ஆடை அணிவித்தல் 7) கந்தம்; நறுமணம் இடல் 8) பூ, மலர் சாத்தல் 9) தூபம், புகையிடல் 10)நைவேத்தியம்; திருவமுது படைத்தல் 11) தாம்பூலம்-வெற்றிலை பாக்கு வைத்தல் 12)தர்ப்பணம்-கண்ணாடிகாட்டல் 13) சாமரம், விசிறியால் விசுறுதல் 14) நமக்காரம்- வணங்குதல் 15) பிரதட்சிணம்- வலம் வருதல் 16) விசர்சனம்- வெளியேற்றல் வழிபாட்டு வகை - இடவகை வழிபாடு: 1) தனி வழிபாடு; தன் பொருட்டு இல்லத்தில் நடைபெறுவது. 2) கூட்டு வழிபாடு; பிறர் பொருட்டுக் கோயிலில் நடைபெறுவது. கோயில் வழிபாடு மக்கள் தொழில் அனைத்திற்கும் மையமாக இருப்பது போல், தனி வழிபாடும் பிற செயல்களுக்கு மையமாக அமைதல்வேண்டும். 3) உருவ வழிபாடு- 1) இலிங்க வழிபாடு 11) குருவழிபாடு 111)சங்கம வழிபாடு.
வழிமொழிதல்- அநுவதித்தல். பரிந்து கூறுதல்.
வழு- குற்றம்.
வழுவிலா- குற்றமிலா.
வழுவிலா ஆறு - பா.அத்து வாக்கள்.
வளர்ச்சி - பா. சுத்த மாயை
வள்ளமை- வளமிகுந்த அருளின் தன்மை
வள்ளல்- 1) இறைவன் 2) கொடைஞர்.
வள்ளல்கள், இடை ஏழு- அந்தி மான், சிசுபாலன், அக்குரன், வக்கிரன், சந்திமான், கன்னன், சந்தன்.
'வள்ளல்கள், கடை ஏழு- பாரி, எழிலி, நள்ளி, ஆய், மலையன், ஒரி, பேகன்,
வள்ளல்கள், முதல் ஏழு- சகரன், கர்ரி, நளன், துந்துமாரி, திருதி, செம்பியன், விராடன்.
வளார்- மிலாறு.
வளி - வாயு, காற்று.
வளிக்கூறு- உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்து.
வளைதல் - தனக்குட்படுதல்.
வறட்டுப் பசுக்கள்- வறண்ட உயிர்கள்.
வறிது - சும்மா
வன் பகை- வலிய பகை, எ-டு பவநணிை வன்பகை கடந்த (சிபோ சிறப்புப் பாயிரம்)
வன்றொண்டன்- சுந்தரமூர்த்தி பரவைக்காகச் சிவபெருமானைத் தூதராக அனுப்பியவர் (திப 72)
வன்னம்- வண்ணம், எழுத்து, படம்
வன்னபேதங்கள்- பலவகை நிறங்கள், பலவகை உலகங்கள்.
வன்னி - நெருப்பு.
வா
வாக்காதி- வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் என 5 தொழிற் பொறிகள்.
வாக்கியம்- அவாய் நிலை, தகுதி, அண்மை ஆகிய மூன்றும் உடைய சொற்களின் சமூகம். சுருதியும் இலிங்கமுமின்றிச் சொற்றொடர் பற்றிப் பொருள் உரை வருவது.
வாக்கியசேடம்- வாக்கியக் குறை. அதாவது, ஒரு வாக்கியத்தை ஐயமறத் துணிவதற்கு ஏது வாகிய குறை வாக்கியம்.
வாக்கு- 1) சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நான்கு வகை. 2) மொழி: செயற் பொறி 5இல் 7.3) பாச அறிவு.
வாக்கு மனாதீதமாய்- பாச ஞான பசு ஞானங்களுக்கு அப்பாற்பட்டது. வாசகம், வாசகத்தீக்கை - தீக்கை 7இல் 1.அஞ்செழுத்தை 11 மந்திரங்களுடன் உச்சரிக்கும் முறையைக் குரு தம் சீடனுக்கு செய்தல். உபதேசிக்கும் தீக்கை.
வாசம் - மணம்.
வாசல் திறப்பித்தல் - திருநாவுக்கரசர் திருமறைக் காட்டில் திருக்கதவு திறக்கப் பாடியது.(தி.ப.71)பா.திருநாவுக்கரசர் செய்த அற்புதங்கள்.
வாசனா மலம் -ஆணவ மலம்.
வாசனை -கந்தம்,மணம்.
வாசி-வகாரம் ஆகிய அருள் சிகாரம் ஆகிய சிவத்தைக் காட்டி யகாரம் ஆகிய உயிரை வீட்டின்பத்தில் இருத்தும்.பமன்
வாசுதேவர்- ஒரு முனிவர்.உபமனியு தேவர் இவரைச் சிவத்தோடு சேர்த்தவர்.அன்றியும் அவ்வருளே அந்தச் சிவத்திற்குக் குற்றம் தீர்த்த திருமேனியாய் இருப்பதுமாகும்.
வாஞ்சை-விருப்பம்,மோகம். எ-டு வாஞ்சைக் கொடி-உருவகம்.
வாட்டம்-வாடுதல், மலர்ச்சியின்றி இருத்தல். ஆணவ விளைவுகளுள் ஒன்று.
வாடுதல்-மெலிதல்.
வாதம்-வழக்குரை,மறுப்பு உத்திகளில் ஒன்று.பிறர் கூற்றை ஏது காட்டி மறுத்தல்.சமயத்தில் நிகழ்வது.பா.வழக்குரை.
வாதனாமலம்-பயிற்சி பற்றி வந்த மலம்.
வாதனை-துன்பம் ஒன்று உலகத் துன்பம்.மற்றொன்று சமணரால் சைவருக்கு ஏற்பட்ட இன்னல்.
வாதி - தம் கொள்கையை நிலைநாட்ட வாதம் செய்பவர்,
வாதித்தல்- வருத்துதல், வாதம் செய்தல்.
வாதியாபேதி-அஞ்செழுத்து அருளினால் வந்தவாறு உரை செய்பவர்.
வாம தேவம்-மறைவிடம்
வாமநூல் -பெளத்த நூல்.
வாமம், வாம மதம்- சிவம், சத்தி ஆகிய இரண்டில் சத்தியே மேலானது என்று வழிபடும் சமயம்.வேறு பெயர் அசாத்த மதம்.
வாமன அவதாரம் - குறள் வடிவமான திருமால் அவதாரம்.
வாமனன்- திருமால். 10 பிறவிகளுள் குறள் வடிவாய்த்தோன்றிய திருமால்.
வாமன்- 1) சிவன் 2} அருகன்.
வாமி- வாம தந்திரி. எ-டு வாழவே வல்லை வாமி. வாம ஆகமத்தை மேற்கொள்பவன்.
வாய்தல் - அமைதல்.
வாய்த்தல்- நேர்தல், கிடைத்தல்.
வாய்த்த நெறி - அமைந்த விதிப் உருவகம் பயன். மனு நீதி சோழன் தன் மகனைத் தானே தேர்க்காலில் கொல்ல நேர்ந்தது ஊழ்வினைப் பயனே.
வாய்ந்த-சிறந்த.
வாய்பாடு-விதி,கருதலைச் சொற்களாய்க்கூறும் பொழுது, அச் சொல்லமைப்பு அல்லது வாய்பாடு இன்றியமையாத மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவையாவன, வாதனை- துன்பம். ஒன்று மேற்கோள்; தான் கொண்ட கொள்கை.ஏது, அக்கொள்கையை நிறுவும் வாயில். எடுத்துக்காட்டு; அவ்வாயில் நேரிதலாதலை விளக்குவதற்குக் கூறப்படுவது. விளக்கம்; ஒரு மலையின் மேல் புகை எழுவதாகக் கொள்வோம். அங்கே நெருப்புள்ளது என்று துணியப் படுமானால், அதைக் கூறும் முறை பின்வருமாறு 1) இம்மலைதீயைக் கொண்டது. 2) புகையைக்கொண்டுள்ளதால் 3) எங்குப் புகை இருக்கின்றதோ அங்குத் தீயிருக்கும். அடுக்களையில் தீ இருப்பது போல, இக்கூற்றில் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு ஆகிய மூன்றும் முறையே அமைந்துள்ளன.
வாயாதி - வாய் முதலிய தொழிற்பொறி.ஒ.பூதாதி
வாய்மை - உண்மை. எ-டு ஒன்றதாகவரும் உரை தந்தவாய்மை
வாயிலார் நாயனார் - வேளாளர் மயிலாப்பூர் தொண்டை நாடு மனத்தைச் செம்பொற் கோயிலாகக் கட்டி, ஞானத்தை விளக்காக ஏற்றி, இன்பத்தைத் திருமஞ்சனமாக ஆட்டி அன்பை அமுதமாகப் படைத்து நாள் தோறும் வழிபட்டு வந்தவர். இலிங்க வழிபாடு (63)
வாயில் - கண் (2), காது (2), மூக்குப் புழை (2), வாய் (1), கழிவாய் (1), மறைவிடம் (1), ஆக9.
வாயில் காட்சி - இந்திரியப் பிரத்தியட்சம். கண் முதலிய 5 பொறிகளையும் அவற்றிற்குத் துணையாய் வலிவுதந்து உடன்நிற்கும் தீ முதலிய 5 பூதங்களையும் அப்பூதங்களுக்குக் காரணமாய் அவற்றை விட்டு நீங்காது உடன் நிற்கும் தன் மாத்திரைகளையும் கொண்டு ஐயம், திரிபு, பெயர் முதலிய விகற்பமின்றி ஒரு பொருளை நிவிகற்பமாய் அறிதலாகும். இதிலுள்ள 6 வகைத் தொடர்புகளாவன;
1)சையோகம், சம்யோகம்; கண்னினால் குடத்தைக் காணல்.
2)சையுத்த சமவாயம், சம்யுக்தி சமவாயம் குட உருவத்தைக் காணல்.
3)சையுத்த சமவேத சமவாயம் சமயுக்த சமவேதசமவாயம் உருவத் தன்மைப் பொதுத் தன்மையைக் காணுதல்.
4) சமவாயம் - செவியால் ஒசையை உணர்தல்.
5)சமவேத சமவாயம் - ஒசைத் தன்மையை உணர்தல்.
6) விசேடண விசேடிய பாவம், விசேடணதா - அபாவத்தைக் (இன்மை) காணுதல். குடம் இல்லது இப்பூதலம்.
வாயு - வளி. இது பத்து வகை. ஊறிலிருந்து தோன்றுவது.
வாயுத்தம்பனை - உயிர்வளி ஒட்டம்.
வாரணம் - யானை.
வாரணன் - கணபதி.
'வார்த்திகம் - பொழிப்புரை. காண்டிகை உரை. சிவஞான போத நூற்பா ஒவ்வொன்றும் முடிந்த பின் அதன் கருத்துரையாகக் கூறப்படுவது. வேறு பெயர் வார்த்திகப் பொழிப்பு, ஒ. சூர்ணிக்கொத்து. மெய் கண்டார் தாம் அருளிய சிவ ஞானபோதத்தின் பொருளைக் கருதல் வழி நிறுவ அதற்குத் தாமே வார்த்திகம் எழுதினார். இப்பொழிவுக்கு முன், கருத்துரை உரைக்கப்படவேண்டும். வார்த்தை - சொல்.
வாரிகள் - 1) வாயில்கள் 2) கடல்கள் 3) வார்க்குத்தி.
வாலிசர் - அறிவிலி நிர்ப்பிச தீக்கை பெறும் அறுவரில் ஒருவர். ஏனைய ஐவர் பாலர், முதியோர், பணி மொழியார், பலபோகத்தவர், நோயாளிகள் (சிசிசு 256)
வாழவே வல்லை வாமி - வாமதந்திரியே இவ்வுலகில் எம்மைப் போலவே நீயும் வாழ வல்லாய்.
வாழ்க்கை - வாழ்வு. வாழ்வின் நோக்கம் ஞான வளர்ச்சியே.
வாழ்த்து - கடவுள் வாழ்த்து கூறு மிடத்து வாழ்த்த, வணங்கல், பொருள் இயைபு உரைத்தல் என்னும் மூன்று வகையில் கூறுதல். வாழ்த்துவாம், துதிப்பாம், போற்றுவாம் போன்று வருவன வாழ்த்துதல், வணங்கு வாம், பணிவாம் தொழுவாம் போன்று வருவன வணங்கல், இவ்வாறின்றிக் கடவுள் வடிவம் செயல் பெருமை குறித்துக் கூறப்பொருளியல்பு உரைத்தலாகும். சிவஞானபோத மங்கல வாழ்த்துபொருளியல்பு உரைத் தல் சார்ந்தது.
வாழுலகு அளந்தும் - வாமன வடிவில் வாழ்கின்ற வையகத்தை அளந்தும்.
வாள் - ஒளியாகிய அறிவு. எ-டு கூட்டில் வாள் சாத்தி நின்று உந்தீபற (திஉ 30)
வாள் சாத்தி - திருவருள் பெற்று.
வாள் நுதல் - ஒளி பொருந்திய நெற்றி.
வாறு - போல.
வானகம் - விண், விண்ணகம் ஒ. மண்ணகம்.
வான் கூறு - சுத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தாரி, குருதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் 10 நாடிகள்.
வான் நாடர் - வானை நாடி இருக்கும் தேவர். எ-டு வான் நாடர் கோமுதலாய் வந்த பெரும்பதத்து (போப 40)
வான் பொருள் - விண் பொருள்.
வானோன் - மேலோன்.
வி
விகற்பம் - வேறுபாடு.
விகற்ப உணர்வு - வேறுபடு உணர்வு, பெயர், சாதி, குணம், கன்மம், பொருள் என ஐந்து இதற்குண்டு.
விக்கிரகம் - கடவுளின் பூசனைக் குரிய வடிவம்.
விகாரம் - வேறுபாடு, திரிபு.
விகாரி - திரிபுள்ளவன், இறைவன்.
விகிர்தி - வேறுபாடு உறுவது. பருவுடலும் உலகும்.
விசர்சனம் - வெளியகற்றல், அன்பினால் உருவத்தில் கட்டுப்படுத்திய இறைவனை மீண்டும் தம் கட்டற்ற நிலைக்குக் கொண்டு வருதல்.
விச்சை - வித்தை கல்வி, அறிவு, மந்திரம் என மூன்று. விச்சையில் தோன்றுவது அராகம்.
விச்வாராத்தியர் - பழைய வீர சைவ ஆசாரியார்.
விசிட்டாத்துவம் - திருமாலை சரணடைதல் என்னும் பாஞ்சராத்திரக் கொள்கை தத்துவத்திரயங்களுள் சித்து, அசித்து என்னும் இரண்டும் ஈசுவரனுக்கு உடனாதலால், அவ் விரண்டும் ஈசுவரனும் ஒன்றே என்று கூறும் இராமானுசர் சமயம்
விசித்திரம் - வேறுபட்டசிந்தனை அதாவது, எச்செயலும் வினையின் வழியாய் நிகழ்வதென்று எண்ணாது தான் செய்ததாகவும் பிறர் செய்ததாகவும் எண்ணுதல்.
விசும்பு - விண்.
விசுவகரணன் - விசுவாதிகன். விசுவார்த்தயாமி- இறைவன்.
விசுவாமித்திரர் - முனிவர்களில் ஒருவர்.
விசேடதீக்கை - சிறப்புத் தீக்கை மாணாக்கனைச் சிவபூசைசெய்தற்குத் தகுதியாக்கும் இரண்டாவது தீக்கை.
விசேடம் - சிறப்பு ஒருபொருளுக் குரிய தன்மை.
விஞ்ஞானம் - 1) ஐந்து கந்தத்தில் ஒன்றாய் நான்கு கந்தங்களின் உண்மை நிலையை அறியும் அறிவு. 2) சிவன் அறிவாற்றல் 3) உலகப் பொருள் பற்றிய சிறப்பறிவு அறிந்தவற்றை முறைப் படுத்துவது அறிவியல் என்றும் கூறப்பெறும்.
விஞ்ஞானகலர் - விஞ்ஞான + அகலர் விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் ஒரு மலத்தார். ஆணவமலம் மட்டும் உள்ளவர். இறைவன் தான் உள்நின்ற வாறே இவர்களுக்கு ஞானம் உணர்த்துவன், விஞ்ஞானத்தால் (உண்மையறிவால், கலை நீங்கியவர்) ஒ. பிரளயாகலர்; சகலர், அகலர்.
விஞ்ஞான கேவலம் - விஞ்ஞானகலருள் நெடுங்காலமாகப் பர முத்தியடையாமல் கேவல நிலையில்பொருந்திக்கிடப்பவர்.
விஞ்ஞானதீக்கை - ஞான தீக்கை.
விஞ்ஞானமய கோசம் - ஐந்து உடம்பில் ஒன்றாய் அறிவு மயமாய் உள்ள உடம்பு.
விஞ்ஞான வாதி - அறிவு மட்டும் உள்ளது என்று கூறும் யோகசாரன்.
விஞ்ஞானான்மாவாதி - விஞ்ஞானமே (பிரமமே) ஆன்மா என்னும் கொள்கையினர்.
விடயம் - காரியம், புலன்.
விடயித்தல் - பற்றுதல்.
விட்டு - நீங்க.
விட்டுணு - திருமால்.
விட்டுணு புராணம் - நாரதீய புராணம், பாகவாத புராணம், காருடபுராணம், வைணவ புராணம் என நான்கு.
விடு - விட்டொழி.
விடை - உத்திரம். பதில்
விடைவகை - சுட்டு எதிர்மறை, உடன்படல், ஏவல், எதிர்வினாதல், உற்று உரைத்தல். உறு விது கூறல், இனம் மொழிதல் என 8.
விண் - வான். சுவர்க்கம். இது ஏழு பா. பார் ஏழு.
விண்ணப்பம் - கோரிக்கை, முறையீடு விண்ணப்பம் பொய் காட்டா (உ.வி2).
விண்டநிலை - வேறுபட்ட நிலை.
விதண்டை - வீண் தர்க்கம். புறச் சமயத்தவர் கூற்று. வாதயுத்திகளில் ஒன்று. எ-டு வாதம் செற்பை விதண்டையும் ஏதுவும் (சநி2).
விதந்து ஒதுதல் - எடுத்துச் சொல்லுதல்.
வித்தகம் - திறல், வல்லமை, சதுரப்பாடு. வித்தகர் - எல்லா வல்லமையும் படைத்தவர் சித்தர்.
வித்தியா தத்துவம் - பெயர்: சிவன் அருளால் வழி நிற்கும் வித்தியேசுவரராகிய அனந்த தேவர் தொழிற்படுத்துவதால், இதற்கு இப்பெயர்.
தோற்றம்: அசுத்த மாயையிலிருந்து தோன்றுவது. காலம், நியதி, கலை ஆகிய மூன்றும் மாயையினின்று தோன்று பவை. காலத்துக்குப் பின் நியதி தோன்றும் நியதிக்குப் பின் தோன்றுவது வித்தை, கலையினின்று தோன்றுவது.
வகை:தத்துவம் மூன்றில் ஒரு வகை. இதில் அடங்குவன; காலம், நியதி,கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என ஏழு இவை ஒவ்வொன்றும் ஒரு தத்துவமே.
செலுத்துகை; சிவ தத்துவம் (நாதம்) மாயையினையும், சத்தி (விந்து) கால நியதிகளையும், சாதாக்கியம் புருடனையும், ஈசுவரம் அராகத்தையும், சுத்த வித்தை வித்தையினையும், செலுத்துவதால், உலக நுகர்ச்சியில் உயிர்கள் ஈடுபடமுடிகின்றது.
காலம்: நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என மூவகை. இது தனக்குக் கீழுள்ள உலகத்தை எல்லாம் கால வரையறை செய்து தோற்றியும் நிலை நிறுத்தியும் அழித்தும் இறைவன் ஆணைப்படி நடத் துவிக்கும்.
நியதி: இது உயிர்களின் இரு வினைகளை அவரவர்களே நுகருமாறு ஒழுங்கு செய்யும்.
கலை: இது ஆணவத்தின்ன மறைப்பைச் சிறிது நீக்கி உயிர்களின் வினையாற்றலைத் தொழிலில் ஈடுபடுமாறு செய்கிறது.
வித்தை - இது உயிர்களின் அறிவாற்றலை உண்டாக்கிச் செய்திகளை அறியச் செய்வது. உயர் கலைகளில் சிறிதேதோன்றுவது.
அராகம்: விருப்பம் இருவினைக் கேற்ப நுகர்ச்சி ஏற்படுமாறு உயிர்களின் விருப்பாற்றலை விளக்கி நிற்கும்.
புருடன்: இதுகாறும் கூறிய 5 உடல்களையும் அணிந்து அறிவு, வினை, விருப்பம் ஆகிய ஆற்றல்கள் விளக்கமுறுவதால், உயிர் புருடன் எனப்படும். ஐந்து உடல்களாவன; பஞ்சகஞ்சகம், காலம், நியதி, கலை, வித்தை,அராகம்.
மாயை: அசுத்த மாயையின் முதல் தத்துவமாக உயிரைச் சார்ந்து விளங்குவது காரிய மாயை. மாயை தனித்தே உள்ள காரணப்பொருள். பிற பொருளைத் தோற்றுவிப்பது.
வழக்கு: காரிய மாயையைக் காரண உடல் என்பது ஆகம வழக்கு. உபநிடத வழக்கு ஆனந்தமயகோசம் எனப்படும். மலத்தால் மறைப்புண்டுள்ள உயிரின் அறிவு செயல், விழைவு ஆகியவை விளங்கும் பொழுது நுகர்வோனாகிறது. உலகப் பொருள்களைப் பெண் எனவும் அவற்றில் மயங்கி ஈடுபடுவோனை ஆடவன் எனவும் கொள்வது தத்துவ மரபு. உபநிடத வழக்கில் ஐஞ்சட்டை விஞ்ஞானமயகோசம் எனப்படும்.
ஒப்பீடு: ஆன்மத் தத்துவத் தொகுதி உயிர்க்கு உணவு. வித்தியா தத்துவத் தொகுதி அதனை நுகர்வதற்கு இடமாய் அமைந்த உடம்பு, சிவ தத்துவத்தொகுதி அவ்வுடம்பின் தலையில் அமைந்த நரம்பு மண்டலம் நிவிருத்தி முதலிய ஐந்துகலைகள் தலையினின்று இறங்கி, எல்லா உறுப்புகளையும் பிணைத்து நிற்கும் நாடிகள். இவ்வாறு ஒப்பீடு அமைகின்றது.
வித்து - 1) விதை 2) இறை.
வித்தை - திறம் ஐந்து வித்தைகளில் ஒன்று. அறிவாற்றலை உண்டாக்குவது. இதில் மந்திரம் 2, பதம்20, எழுத்து 7, புவனம் 27, தத்துவம் 7 உள்ளன.
வித்தை மலர் - 8 தத்துவ இதழ்களைக் கொண்ட பூவித்தியா தத்துவம்7 சுத்தவித்தை1ஆக8
வித்தை முதல் - உயிர் இறை அருளால் அறிவது. இம்முதல் ஐவரால் விளங்கும் அறிவு (சிபி 39).
விதி - ஊழ்.
விதி இரண்டு - ஆதாரயோகம், நிராதாரயோகம் என மீதானத்து அமர்ந்த இரண்டு விதி. முன்னது ஆதாரத்தை ஆக்குவது பின்னது ஆக்காதது.
விதிமுகம் - நிருமிக்கும் வாயில்
விதிமுன்று - 1) முன்பொருந்தாத ஒன்றைப் பொருந்த வேண்டும் என்று விதிப்பது 2) முன் பொருந்திய ஒன்று நீங்காமல் இருக்க வேண்டுமென்று விதிப்பது 3) பொருந்தியதில் ஒரு பகுதியை விலக்க வேண்டும் என்று விதிப்பது.
விதிவாக்கியம் - செய்க என விதிக்கும் வாக்கியம்.
விதிக்குஞ்சொல் - விதியைப் புலப்படுத்துஞ் சொல். இதனைச் செய்க என நியமிக்குஞ் சொல்.
விந்து - 1) சித்தம் 2) சிவ தத்துவம் 3) சுத்த மாயை.
விந்து தத்துவம் - சத்தி தத்துவம்
விந்து ஞானம் - சுத்தமாயாகரிய மென நால்வகை வாக்குகளினால் உண்டாகும் சவிகற்ப உணர்வு அல்லது அறிவு.
விநாயகக் கடவுள் - கணபதி.
விபக்கம் - எதிரிடையான கொள்கை. அனுமான உறுப்பில்துணி பொருள் இல்லாத இடம்.
விபரீதம் - திரிபுணர்ச்சி.
விபரீத ஞானம் - திரிபுணர்வு, மயக்க உணர்வு.
விபவம் - செல்வம்.
விம்முதல் - சுரத்தல்.
விமலதை - தூய்மை.
விமலன் - வினை முதல்.
வியஞ்சகம் - துணை.
வியத்தம் - வெளிப்பாடு.
வியட்டி - பிரிவு, பகுதி.
வியட்டிப்பிரமாணம் - பிரணவத்தின் கூறுகளாய் நிற்பதால், அகரம் முதலிய ஐந்தும் வியட்டிப் பிரணவம் எனப்படும்.
வியர்த்தி - அடக்கம் முறையான உடன். நிகழ்ச்சி.
வியவகாரம் - வழக்கம்.
வியனுலகம் - வானுலகம்.
வியாகரணம் - உலகியற் சொல்லையும் வைதிகச்சொல்லையும் ஆராய்வது.
வியாக்கியானம் - உரை. வியாதி - நோய்.
வியாப்பியம் - வியாபிக்கப்படுவது.
வியாபகம் - நிறைவு.
வியாபக உணர்வு - சுட்டுணர்வு.
வியாபரித்தல் - தொழிற்படுதல்
வியாபி - நிறைந்திருப்பவன், இறைவன்.
வியாபிருதி - குணங்களில் ஒன்று வெளிக்காட்டமை, மறைத்தல்.
வியாப்பியம் - வியாபகத்தால் அடங்கிய நிறைவு, மலங்கள்.
வியூகம் - வகுப்பு.
விரதம் - நோன்பு சைவவிரதங்கள் 18. இவற்றில் சிவவிரதம் 9, தேவி விரதம் 3, விநாயகர் விரதம் 3, சுப்பிரமணியர் விரதம் 3, ஆன்ம சுத்திக்காகச் செய்யப்படுவது. இதனால் உடலும் சுத்தி பெறும்.
விரவுதல் - கலத்தல், பொருந்துதல்.
விராய் - கூடுதல். எ-டு ஒராலினை உணர்த்தும் விராய் நின்றனையேல் (இஇ2) ஒ. ஒராய்.
விரிசகம் - விரிந்த உலகம்.
விரிந்த நூல் - பூர்வ பக்கம் முதலியன.
விருத்த ஏதுப்போலி - ஏதுப் போலிகளுள் ஒன்று.பா.போலி
விருத்தி - விரிவு.
விருத்திப்படுதல் - படம் குடிலானது போல் விரிதல்.
விரை - கோட்டம், துருக்கம், தகரம் அகில், சந்தனம் என ஐந்து.
விலக்கியல் - விலக்குவனவற்றைக் கூறும் நூல்.
விலங்குகதி - 4கதிகளுள் ஒன்றான விலங்குப் பிறவி,
விலங்கு பேறு பெற்ற தலங்கள் - இவை பின்வருமாறு. 1) குரங்கணில் முட்டம் - அணில், குரங்கு.
2) திருமணஞ்சேரி - ஆமை.
3) திருச்சிற்றேமம் - ஈங்கோய், மலை ஈ.
4) எறும்பீச்சுரம் - எறும்பு
5) திருவைாறு - ஏறு.
6) மதுரை, வலிவலம் - கரிக்குருவி
7) சிறுகுடி - கருடன்.
8) கரவீரம் - கழுதை
9) குரங்கணில் முட்டம் - காகம், குரங்கு.
10)அயவந்தி - குதிரை.
11) திருநல்லூர் - சிங்கம்.
12) ஊற்றத்துர் ( வைப்புத்தலம்) - தவளை.
13) நாரையூர், மதுரை - நாரை.
14)திருவாவடுதுறை - பசு.
15) சிவபுரம் - பன்றி.
16)காளத்தி - பாம்பு.
17) மயிலாடுதுறை - மயில்.
18)திருச்சேலூர் - மீன்.
19)திருப்பாதிரிப்புலியூர் - முயல்.
20)திருக்குற்றாலம் - யானை.
21) சீசைலம் திருவெண்டுறை - வண்டு.
22)திருந்துதேவன்குடி - நண்டு.
விலை - வில, மதிப்பு.
விலையால் ஏற்கும் - வலிந்து ஏற்கும்.
விவகரிக்குஞ் சொல் - பொருனை அறிவுக்குஞ் சொல். விவர்த்தகம் - ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காட்டல்.
விவர்த்தனம் - பெருக்கம். எ-டு பரிமாணம், விவர்த்தனம், மாயம் (சிசிபப 209)
விவர்த்தனனவாதம் - பரிணாம வாதம்.
விவேகம் - நிறைதன்மை.
விவேகித்து அறிதல் - மெய்யாக உணர்தல்.
விவேகமுத்தி - எண் முத்திகளில் ஒரு வகை பிரகிருதியினின்றும் உயிர் தன்னை வேறாகப் பகுத்தறிவதேமுத்தி. இது சாங்ககியர் கொள்கை. உலகம் பிரமத்தின் தோற்றம். இத்தோற்றத்திற்குக் காரணமாகிய மாயையின் வேறாகிய பிரமமே யான் என உணர்வதே முத்தி. இது அத்வைதிகள் கொள்கை.
விழவு - விளையாட்டு.
விழுச் சுடர் - மிக்க ஒளி.
விழும் - பிறக்கும்.
விளக்கு - காட்டு.
விளம்பு - கூறு.
விள்ளற்பாலது - விடற்பாலது.
விளித்தல் - அழைத்தல், மெய் கண்ட நூல்களில் இது ஐந்து வகையில் அமைந்துள்ளது. 1) இறைவனை நோக்கி விளித்தல் தேவே, ஐயனே,அரனே, சிவ பெருமானே. 2) குருவை விளித்தல் மெய்கண்ட தேவே. மருதச் சம்பந்தா. 3) மாணாக்கரை விளித்தல் - அப்பா, புதல்வா, உத்தமனே. 4) ஒருமை பன்மையில் விளித்தல் -நவிற்றுவேன். நவிற்றினரே, நீ நாம். 5) உடன்பாடு, எதிர்மறை விளிப்பு -என்பர் ஒரார்.
விளைதல் - மேம்படுதல்.
விளையாடி - நுகர்ந்து.
விளையாட்டு - இறைவன் திருவிளையாடல். இறைவனுக்கு எச்செயலும் ஒரு விளையாட்டே எளிதிற்செய்யப்படக் கூடியதால்விளையாட்டு எனப்பட்டது. இது உயிர்கள் உய்வதற்கே உரியது.
"ஐயா ஆட் கொண்டிருக்கும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகை யெல்லாம் உயந்தொழிந்தோம்”
மாணிக்க வாசகர்.
விளையாது - உளதாதலின்றி.
விளைவிக்கப்படுதல் - உண்டாக்கப்படுதல்.
விறல் - பெருமை, சீர்த்தி, சொல் எ-டு அண்ணல் விறல் எண்ணாது (சிபி 4).
விறல்மீண்டநாயனார் - வேளாளர். செங்குன்றுர் - மலைநாடு சிவனடியார்களை வணங்காது சென்ற சுந்தரமூர்த்தி நாயரை, 'இவ்வன்றொண்டன் அடியார் களுக்குப் புறம்பு” என்றவர். சங்கம வழிபாடு (63).
விறற்கட்டு - வென்றதாகக் கூறும் உரை.
வினை - பொருள் செயல் அல்லது தொழில் வகை; 1) இருவினை: நல்வினை, தீவினை 2) மூவினை: மானதம், வாசிகம்,காயிகம் 3) நால்வினை: மூலகன்மம், ஆகாமிய கன்மம் சஞ்சித கன்மம், பிராரத்த கன்மம் 4) ஐவினை: நல்வினை, ஆத்தியான்மிகவினை, ஆதி மார்க்க வினை, மாந்திர வினை, வைதிக வினை. இயல்புகள்: 1) உடம்பாலும் மனத்தின் நினைவாலும் ஆவது 2) வாக்கின் சொல்லாலும் ஆகும் 3) அது பருப்பொருள் 4) தானே அறிந்து அடைத்துப் பயன் தராது. இறைவனே அதினை அறிந்து கூட்டுவிப்பான் 5) ஒருவினை (பாவம்) மற்றொரு வினையை (புண்ணியம்) அழிக்க இயலாது. 6) வினை விதைத்தவன் வினையே அறுக்க வேண்டும். அதாவது வினை பயன் யாரையும் விடாது.
வினைக்குஈடாக - வினைக்குச் சமமாக.
வினையும் உயிர் வடிவமும் - வினைக்கு ஈடாகச் சொர்க்கம் புகுவதாயின், அதற்கேற்ற பூதவுடல், அதுவே, நரகம் புகுவதாயின் அதற்கேற்ற உடல்யாதனா உடல். அதுவே பூவுலகை அடைவதாயின் அதற்கேற்றது பருவுடல்.
வினையும் கலையும் - உலக வினை நிவர்த்தி கலையிலும், வைதிகவினை பிரதிட்டை கலையிலும், ஆத்தியான்மிக வினை வித்தியா கலையிலும், ஆதி மார்க்க வினை சாந்தி கலையிலும், மாந்திரவினை சாந்திய தீத கலையிலும் அடங்கும்.
வினைநோய் - வினைப்பயன். பாவ புண்ணியம். எ-டு நூனங்கள் அதிகம் நோக்கி நுகர்விப்பன் வினைநோய் தீர (சிசிசுப. 111).
வினைமை - வினை உடைமை.
வினை மாற்று - முன் கூறியதற்கு மாறான பொருள்கூறுவது. பா. மொழி மாற்று, மாலை மாற்று. எ-டு சிவஞான போத வெண்பா40இல் "அன்னியம் இலாமை அரற்கு உணர்வு இன்றாம்” என்பதில் உணர்வு இன்றாம் என்பதற்கு மாறாகக் காண்குவன் என்று பொருள் கொள்வது.
வினை முதல் - வினை நிகழ்ச்சிக்குத் தலைமைப்பட்டு நிற்பது கர்த்தா.
வினைவயம் - வினையே தலைமையாக அதன் பால் அமைதல்.
வீ
வீடு - நான்கு பேறுகளில் ஒன்று. ஏனைய மூன்று அறம், பொருள், இன்பம். இது துறவறமாகும்.
வீடுபேறு - முத்தி. இது பற்றியும் சிறந்த உண்மைகளை எல்லாம் தெறிவுற விளக்குவது சிவஞான போதம்.
வீடுபேற்றுக்கு வழி - ஞானமடைதலே .
வீயாத - கேடில்லாத.
வீரம் - 1) 28 சிவாகமங்களுள் ஒன்று. 2) ஒன்பது சுவைகளில் ஒன்று.
வீழ்க்கும் - வீழும்படிச் செய்யும்.
வெ
வெகுளல் - கோபித்தல்.
வெண்ணெய் - திருவெண்ணெய் நல்லூர்.
வெண்ணிது - திருநீறு, சைவ சாதனங்களில் ஒன்று.
வெண்மை - வெள்ளை. ஐவகை நிறங்களில் ஒன்று.
வெதிரேகம், வயதிரேகம் - வேறுபாடு, எதிர்மறை ஒ. அன்னு வயம். வெதிரேகச் சொல் - நெருப்பு இல்லாத இடத்தில் புகை இல்லை என்று எதிர்மறையாக நீரோடையை உவமை கூறுவது. இதற்கு 5 உறுப்புகள் உண்டு. மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு ‘உபநயம், நிகமனம்' மற்றொரு சொல் அன்னுவயம். இதற்கு 5 உறுப்புகள் உண்டு.
வெப்பு - காய்ச்சல், சம்பந்தர் பாண்டியன் காய்ச்சலைப் பாடிப் போக்குதல் (திப70) பா. திருஞான சம்பந்தர் செய்த அற்புதங்கள்.
வெம்குரு - எமன்.
வெம் சினம் - கடுங்கோபம்.
வெம்பந்தம் - கொடிய தளை.
வெம்பிறவி - கொடிய பிறப்பு.
வெம்மை - வெப்பு.
வெய்துற்று - துன்புற்று, சின முற்று. எ-டு வெய்துற்று உரைக்க.
வெய்ய - கொடிய.
வெய்யோன் - பகலவன்.
வெரிந் - முதுகு.
வெள்ளறிவு - பொய்யுணர்வு.
வெள்ளி - 1) உலோகம் 2) 9 கோணில் ஒன்று.
வெள்ளுயிர் - சுத்தான்மா.
வெளி - விண், ஒளி.
வெளியன் - சிவன்.
வெற்பின் மிசை - கயிலை மலையின் மேல்.
வெற்றெனத் தொடுத்தல் - ஓர் உத்தி. பொருள் வெளிப்படையாகத் தோன்றச் சொற்களைத் தொடுத்தல்.
வெறு வெளி - அபரநாதம்.
வெறும் பாழ் - பரநாதம்.
வே
வேகம் - கதி.
வேகி - உருவத் திருமேனிகளில் ஒன்று. இறைவன் காமாரி உருவத்தில் இருந்து வினை ஒழித்தல்.
வேடம் - திருவேடம். விபூதி, உருத்திராக்கம் எ-டு மலிந்தவர் வேடமும் (சிபோ நூபா 12)
வேட்கை - அவா.
வேட்டுவன் - குளவி,புழு.
வேணாட்டடிகள் - 9ஆம் திரு முறை ஆசிரியர்கள் 9 பேரில் ஒருவர்.
வேண்டாமை - மறுபிறவி வேண்டாத நிலை எ-டு வேண்டாமை வேண்டவரும்.
வேதம் (சுருதி) - மறை ஒருவரால் செய்யப்பட்டதன்று. தானே உண்டானது. அவ்வாறெனின், அது பிரமாணம் எனப்படும். இதன் முற்பகுதி தரும காண்டம் பிற்பகுதி ஞான காண்டம். உலகம்தோன்றி அழியும் முறை ஞான காண்டத்திலே கூறப்படுகிறது. இது ஆறு உறுப்புகளும் மூன்று உபவேதங்களும் கொண்டது. இருக்கு, யசுர், சாமம்,அதர்வணம் என 4 பழமையானது இருக்கு.
வேதக் கோவந்து - வேதவினை முதலான சிவன், திருமால் நெற்றியிலே தோன்றி, அவருக்குப் படைப்பை உண்டாக்கிக் கொடுத்தான்.
வேதமும் கடவுளரும் - வேதத்தில் பல கடவுளர் கூறப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் தனித்தனிச் சுதந்திரக் கடவுளர் என்பது வேதத்தின் கருத்தன்று. ஏனென்றால், கடவுள் ஒருவனே என்னும் கருத்துப் பல இடங்களில் அதில் வருகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் ஒருவன் பதி அல்லது சிவனே.
வேத மதம் - இந்திய நூல்களில் மிகப் பழமையானது வேதமே ஆயினும், சைவசமயம் வேத காலத்திற்கு முற்பட்டது. வேத காலத்தில் சைவமே வேதமாயிற்று. வேத மதம் அல்லது வேத நெறி என்பதை வைதிகம் எனவும் வழங்குவர். வேதத்தை ஏற்றுக் கொள்ளாத மதங்கள் அவைதிகம் எனப்படும்.
வேதவியாசன் - பாற்கரியர், மாயாவாதி, சத்திப்பிரமவாதி, கிரீடாப்பிரமவாதி ஆகிய வேதாந்தவாதிகளுக்கு நூல் செய்தவர்.
வேதன் - நான்முகன்.
வேதனை - கந்தம் 5இல் 1. இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சி.
வேந்தன் - அரசன், மன்னன்.
வேந்தன் செயல் - பா. அரசர் தொழில்.
வேந்தனார் - சிவன், எ-டு அவிழ் சடைவேந்தனார் ஒசேந்தனார்.
வேதாகமம் - பிரணவத்தின் விரிவு, கடவுளின் அருட்கொடை, அறிவுக்கருவி. 12 திருமுறைகளும் வேதாகமங்களின் விளக்கமே.
வேதாங்கம் - வேதக் கருவிநூல். எ-டு மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்க வேதாங்கம் (சிசிபப 216) 2) சிட்சை, வியாகரணம், சந்தகம், நிருத்தம், சோதிடம், கற்பம் என ஆறு.
வேதாந்தம்,வேதாந்த சூத்திரம் - உபநிடதங்கனை எல்லாம் ஆராய்ந்து வியாச முனிவர் இயற்றிய நூற்பா பிரம மீமாஞ்சை வேதாந்தம் எனப்படும். இது உத்தர மீமாஞ்சை சாரீரக, மிமாஞ்சை என இரு வகை. இது 4 அத்தியாயங் களையும் 550 நூற்பாக்களையுங் கொண்டது. இரண்டாம் அத்தியாத்தில் சாங்கியம் முதலிய புறச் சமயப் பகை நீக்கமும் மூன்றாம் அத்தியாத்தில் வித்தியாசமான நிர்ணயமும் நான்காம் அத்தியாயத்தில் ஞான சாதன பலனாகிய வீடு பேறும் கூறப் பெறுகின்றன.
வேதாந்த வாதிகள் - பாற்கரியன், மாயாவதி, சத்தப்பிரமவாதி, கிரீடாப் பிரமவாதி.
வேதாந்தி - 1) அத்துவைதி 2) உத்தர மீமாஞ்சையாகிய வேதாந்தக் கொள்கையினர்.
வேதிப்பான் - வேறாக்குபவன்.
வேதியன் - 1) கடவுள் 2) அந்தனன்.
வேர்ப்பு - வேர்.
வேள் - மன்மதன்.
வேள்வி - கன்ம வேள்வி, தவ வேள்வி, செப வேள்வி, தியான வேள்வி, ஞான வேள்வி என ஐந்து வகை.
வேற்றுச் சமயக் கொள்கை - சைவ சமயத்திற்கு மாறான கொள்கை. இதில் உலகாயதம், பெளத்தம்,சமணம், சாங்கியம் முதலியவை அடங்கும்.
வேறாதல் - 3முக்கிய இயல்புகளில் ஒன்று. பொருள்தன்மையால் வேறாதல் கண்கள் இயங்கக் கதிரவன் ஒளி தேவை. ஆனால், கண்களிலிருந்து கதிரவன் வேறுபட்டது. அது போல, ஆன்மா இயங்க இறைவன் வேண்டும். இருந்தாலும் ஆன்மாவிலிருந்து இறைவன் வேறுபட்டவன்.அதாவது, தானேயாய் நிற்றல்.
வேறிசை - வேற்று. எ-டு: வேறிசை பெண்ணொடு (சிசிபப 45)
வேறு - மாறு, அந்நியம்.
வேறு ஐந்து - வேறாகிய எஞ்சிய சத்தாதி 5, வாசனாதி 5, உட்கருவி 4, புருடன் வளிகள் 10 ஆகிய 25 கருவிகள்.
வை
வை - வைக்கோல்.
வைகரி - செப்பல், திரிபடைவது. எ-டு: வைகரி செவியில் கேட்ப (சிசிசுப 40).
வைகாரிகம் - சத்துவ குணமும் இராசத குணமும் மேலிட்டது. அல்லது இனம் மலி சேத்திராதியையும் கன்ம இந்திரியத்தையும் தருவது (சிசிசுப 150).
வைகுண்டம் - பரமபதம். திருமால் உலகம்.
வைச்சநதி - அணிந்துள்ள கங்கை,
வைசேடிகம் - கணாதரால் நிறுவப்பட்ட சமயம். வைசேடிகர் - ஆன்மா சடப் பொருள் என்னுங் கொள்கையினர்.
வைணவம் - வைணவ ஆகம வழிப்பட்ட சமயம்.
வைணவ ஆகமம் - திருமாலைச் சிறப்பித்துக் கூறும் ஆகமம். அதின் வழிபட்ட சமயம் வைணவ சமயம்.புராணங்களாலேயே பழம் பெருமையுடன் விளங்குவது. வைணவ ஆக மங்களில் பாஞ்ச்ராத்திரம் என்னும் ஆகமமே பெரும்பான்மை வழக்கு பெற்றதால், வைணவ மதம் பாஞ்சராத்திர மதம் எனப்படும்.
வைணவர் - வைணவ சமயத்தினர்.
வைதன்மியம் - ஒப்பின்மை.
வைதன்மிய திட்டாந்தம் - இயலாத விடத்தில் ஏது இன்மையைக் குறித்த திருட்டாந்தம்.
வைதிகம் - வேதநெறி. எ-டு: சைவம் வைணவம்.
வைதிகர் - வேதத்தை நன்கு உணர்ந்தவர். ஆயினும், அதற்கண் கூறப்படும் பொருளை மலைவின்றி உணர இயலாதவர்.
வைதிகவினை - வினை 5இல் 7. வேள்வி முதலியன செய்தல். பிரதிட்டாகலையில் அடங்கும் அசுத்த போகங்களைத் தரும்.
வைநாயிகராவார் - மலம் நீங்கி வீடு பேறு பெறுபவர்.
வைபாடிகம் - பெளத்த சமயப் பிரிவு நான்கில் ஒன்று.
வைபாடிகன் - வைபாடிகச் சமயத்தவன்.
வைப்புத்தலங்கள் - உண்டாக்கிய தலங்கள். இவை 79. நமக்கு நன்கு அறிமுகமானவை: தஞ்சாவூர், காசி, குமரி, தவத்துறை, நாங்கூர்,பேரூர், வழுவூர். இவை திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன.
வைப்பு முறை - நூலாசிரியர் தாம் யாக்கும் நூலில் தாம் கூற விரும்பும் பொருளைத் தொகை வகை செய்து வைக்கும் பாங்கு எடுத்துக்காட்டாக, மெய்கண்டநூல்களில் மெய்ப் பொருள் வைப்பு முறை மாறு படுகிறது. சிவஞான போதத்தில் பதி, பாசம், பசு என எடுத்து பசு, பாசம், பதி என முடிக்கப்படுகிறது. இதே முறை சிவஞான சித்தியார் சுபபக்கத்திலும் பின்பற்றப்படுகிறது. ஆனால், சிவப்பிரகாசத்திலும் திருவருட்பயனிலும் பதி,பசு, பாசம் என்று வைப்பு முறை உள்ளது.உண்மைவிளக்கத்தில் பாசம், பசு, பதி என்னும் வைப்புமுறை காணப்படுகிறது. இம்முறை தெரிந்ததலிருந்து தெரியாததற்குச் செல்வதால் புரிந்து கொள்வது எளிது.
வையகம் - உலகம்.
வைரவம் - வைரவக் கடவுளை வணங்கும் சமயம்
வைரவன் - 1) வைரவ சமயத்தினன் 2) வைரவக் கடவுள்.
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
தலைமை நிலையம்:
154, டி.டி.கே. சாலை, ஆள்வார்பேட்டை, சென்னை - 18.
கிளை நிலையங்கள்:
79, பிரகாசம் சாலை, (பிராடுவே) சென்னை - 108.
91, கீழைத் தேர்த் தெரு, திருநெல்வேலி - 6.
18, ராஜவீதி, கோயமுத்துர் - 1
28, நகர் உயர் பள்ளிச் சாலை, கும்பகோணம் - 1.
24, நந்திகோயில் தெரு, திருச்சி - 2
36, செர்ரி ரோடு, சேலம் - 1.
70/71, தானப்ப முதலி தெரு, மதுரை - 1.