தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/030-066
தோடாப் பெறுதல்
1906-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், அவருடைய தேவியாரும் சென்னைக்கு விஜயம் செய்தார்கள். அப்போது சென்னை நகரமே விழாக்கோலம் கொண்டிருந்தது. வெளியூர்களிலிருந்து ஜமீன்தார்களும், பிரபுக்களும் வந்திருந்தார்கள். ஆளுநர் மாளிகையில் தர்பார் ஒன்று நடந்தது. அதற்கு முன்பு சென்னை நகரில் இந்தியர்கள் வசித்து வந்த பகுதியை “ப்ளாக் டவுன்” என்று ஆங்கிலேயர்கள் வழங்கி வந்தார்கள். அது பலருடைய உள்ளத்தை உறுத்திக்கொண்டிருந்தது. ஜார்ஜ் இளவரசர் வந்ததையொட்டி அதன் பெயரை “ஜார்ஜ் டவுன்" என்று மாற்றி வழங்கலாயினர். -
அப்போது அறிஞர் பெருமக்களுக்குப் பலவகையான பட்டங்களும், சன்மானமும் அளிக்கப்பெற்றன. ஆசிரியப் பெருமானுக்குத் தங்கத் தோடா அணி வித்து மதிப்புச் செய்தனர்.