தமிழ்ப் பழமொழிகள் 2/1
தொகுதி 2
ஒ
ஒக்கச் சிரித்தார்க்கு வெட்கம் இல்லை.
ஒக்கப் பிறந்த தங்கை ஓலமிட்டு அழுதாளாம்; ஒப்பாரி தங்கைக்குச் சிற்றாடையாம். 5840
ஒக்கலிலே பிள்ளையை வைத்து ஊரெல்லாம் தேடினாளாம்.
ஒச்சியம் இல்லாத ஊரிலே பெண் வாங்கின கதை.
ஒட்ட உலர்ந்த ஊமத்தங்காய் போல.
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
ஒட்டகத்தின் முதுகுக்குக் கோணல் ஒன்றா இரண்டா? 5845
ஒட்டகத்துக்கு உடம்பெல்லாம் கோணல்.
ஒட்டகத்துக்குக் கல்யாணம், கழுதை கச்சேரி.
ஒட்டகத்துக்குத் தொட்ட இடம் எல்லாம் கோணல்,
ஒட்டகமே, ஒட்டகமே, உனக்கு எவ்விடத்தில் செவ்வை.
ஒட்டத்து அப்பம் தின்பாரைப் போலே. 5850
ஒட்டப் பார்த்து மட்ட நறுக்கு.
ஒட்டன் கண்டானா லட்டுருண்டை? போயன் கண்டானா பொரியுருண்டை?
ஒட்டன் குச்சி வைத்துப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல; வீட்டைப் பெருக்குகிற விளக்குமாறும் அல்ல.
ஒட்டன் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்தாற் போல.
ஒட்டன் வீட்டு நாய் கட்டில் ஏறித் தூங்கிற்றாம். 5855
ஒட்டன் வீட்டு நாய் கூழுக்குக் காத்த மாதிரி.
ஒட்டன் வீட்டு நாய் திட்டையில் இருந்தாற் போல.
ஒட்டனுக்குத் தெரியுமா லட்டுருண்டை?
ஒட்டாது பாவம்; கிட்டாது சேவை.
ஒட்டி உலர்ந்து ஊமத்தங்காயாய்ப் போய்விட்டான். 5860
ஒட்டிய உடம்பும் ஒடுக்கிட்ட வாழ்நாளும்.
ஒட்டிய சீதேவி நெட்டியோடே போம்.
ஒட்டின பேரைத் தொட்டிலும் கொள்ளும்; ஒட்டாத பேரைக் கட்டிலும் கொள்ளாது.
ஒட்டினாலும் உழக்குப் பீச்சுகிறதா?
ஒட்டுக் கதை கேட்பவர் செவிட்டுப் பாம்பாய்ப் பிறப்பார். 5865
ஒட்டுத் திண்ணை நித்திரைக்குக் கேடு.
ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாய் போட்டவன்.
ஒட்டு மூத்திரத்துக்கு ரக்ஷாபந்தனம் செய்தாளாம்; பட்டறைப் பீயைப் பாயோடு பிடித்தாளாம்.
ஒட்டைக்குக் கரும்பு மெத்தக் கசப்பு.
ஒட்டைக்குச் சுளுவு பட்டாற் போல. 5870
ஒட்டைக்குப் பளுவு ஏற்றுகிறது போல.
ஒடக்கான் முட்டு வைக்காத காடு,
ஒடிந்த கோல் ஆனாலும் ஊன்று கோல் ஆகும்.
ஒடுக்கம் சிதம்பரம்.
ஒடுக்கி ஒடுக்கிச் சொன்னாலும் அடங்குமா? 5875
ஒண்ட வந்த எலி உரம் பெற்றது; அண்டியிருந்த பூனை ஆலாய்ப் பறக்கிறது.
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தியதாம்.
ஒண்டாதே, ஒண்டாதே, ஓரிக்கால் மண்டபமே; அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே என்றாற் போல.
ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.
ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு. 5880
ஒண்ணாந் தேதி சீக்கிருப்பவனும் ஒற்றைக் கடையில் சாமான் வாங்குபவனும் உருப்பட மாட்டான்.
ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, எள்ளுக்குள்ளே எண்ணெய்:
ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது.
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு.
ஒண்ணைப் பெற்றாலும் கண்ணைப் பெறு. 5885
ஒண்ணோ, கண்ணோ?
ஒத்த இடத்தில் நித்திரை கொள்.
ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம்.
ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம்.
ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை வோலிக்கொமின வேண்டும். 5890
ஒத்துக்கு ஏற்ற மத்தளம். ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாகப்
போகுமா?
ஒதி பெருத்தால் உரல் ஆகுமா?
ஒதி பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது.
ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து. என்ன? 5895
ஒதி பெருத்துத் தூண் ஆமா? ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒதிய மரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.
ஒப்புக்குச் சப்பாணி. ஊருக்கு மாங்கொட்டை.
ஒப்புக்கு மாங்கொட்டை, ஊருக்குச் சப்பாணி.
ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். 5900
ஒயிலாய்ப் பேசுகிறாள்; ஆனால் கனம் அறிந்த கப்பறையும் அல்ல; கண்டறிந்த #நாயும் அல்ல.
ஒரு அச்சிலே உருக்கி வார்த்தாற் போல.
ஒரு அடி அடித்தாலும் பட்டுக் கொள்ளலாம்; ஒரு சொல் மட்டும் கேட்க முடியாது.
ஒரு அப்பம் தின்னாலும் நெய்யப்பம் தின்ன வேணும்.
ஒரு இழவு என்றாள் உள்ளபடி ஆகும். 5905
ஒரு உறையிலே இரண்டு கத்தியா?
ஒரு ஊர் நட்பு, ஒரு ஊருக்குப் பழிப்பு.
ஒரு ஊரில் இரண்டு பைத்தியக்காரர்களா?
ஒரு ஊருக்கு ஒரு வழியா?
ஒரு ஊருக்கு வழி கேட்க ஒன்பது ஊருக்கு வழி காட்டுகிறான். 5910
ஒரு கட்டு வைக்கோலைத் தண்ணீரில் போட்டு ஒன்பது ஆள் கட்டி இழுத்தாற் போல.
ஒரு கண்ணிலே புகுந்து மறு கண்ணிலே புறப்படுகிறான்.
ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு.
ஒரு கண் முடி ஒரு கண் விழிக்கிறவன்.
ஒரு கம்பத்தில் இரண்டு ஆனையைக் கட்டினாற் போல். 5915
ஒரு கரண்டி எண்ணெய் கொண்டு பலகாரம் சுட்டுப் பந்தி விசாரித்து வந்த பெண்டுகள் வாரி முடித்துப் பெண்டுகளால் பிடிமானம் இல்லாமல் புறக்கடை வழியாய்ப் போய் விட்டது.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.
ஒரு கல விதையடி உவட்டை மாற்றிட, ஆறு பல வேப்பம்
ஒரு கவளம் சோற்றுக்கு நாய் பல்லை இளிப்பது போல,
ஒரு கழிச்சலில் உட்கார்ந்து மறு கழிச்சலில் மல்லாந்து போக, 5920
ஒரு காசு அகப்படுகிறது குதிரைக் கொம்பு.
ஒரு காசு என்ற இடத்தில் அழுகிறான்.
ஒரு காசுக்கு மூக்கு அரிந்தால் ஒன்பது காசு கொடுத்தால் ஒட்டுமா?
ஒரு காசுக்கு மோர் வாங்கி ஊரெல்லாம் தானம் பண்ணினாளாம்.
ஒரு காசு கொடாதவன் ஒரு வராகன் கொடுப்பானா? 5925
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்.
ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விடுவது.
ஒரு கால் செய்தவன் இரு கால் செய்வான்.
ஒரு கால் பார்த்தால் புஞ்சை; இரு கால் பார்த்தால் நஞ்சை,
ஒரு காலிலே நிற்கிறான். 5930
ஒரு காலை செய்த தச்சன் மறு காலும் செய்வான்.
ஒரு குட்டியும் பெட்டையும் போல.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை.
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போதும்.
ஒரு குண்டிலே கோட்டை பிடிக்கலாமா? 5935 :
- (முடியுமா?)
ஒரு குருவி இரை எடுக்க ஒன்பது குருவி வாய் திறக்க, :(திறக்குமாம்.)
ஒரு குலைத் தேங்காய்.
ஒரு குளப்படி நீரைக் கண்டு திரைகடல் ஏங்குமா?
ஒரு கூடை முடைந்தவன் ஒன்பது கூடை முடைவான்.
- (கூடு, கூண்டு.)
ஒரு கூடைக் கல்லும் தெய்வமானால் கும்பிடுகிறது எந்தக் கல்லை? 5940
ஒரு கூடைச் செங்கல்லும் பிடாரி.
ஒரு கூன் சர்க்கரையா ஒத்து வாழ்.
ஒரு கை சத்தம் எழுப்புமா?
ஒரு கை தட்டினால் ஓசை கேட்குமா?
ஒரு கை முழம் போடுமா? 5945
ஒரு கோபம் வந்து கிணற்றில் விழுந்தால் ஆயிரம் சந்தோஷம் வந்தாலும் எழும்பலாமா?
ஒரு கோமுட்டியைக் கழுவில் போட்டதற்கு ஒன்பது கல எள் ஆச்சுதே; ஊர்க் கோமுட்டிகளை எல்லாம் கழுவில் போடு, என்றானாம்.
ஒரு சந்திப் பானையை நாய் அறியுமா?
ஒரு சாதிக்கு ஏச்சு: ஒரு சாதிக்குப் பேச்சு.
ஒரு சாண் காட்டிலே ஒருமுழத் தடி வெட்டலாமா? 5950
ஒரு சுருட்டைப் பத்து நாள் பிடிப்பான்.
ஒரு சுற்றுச் சுற்றி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டது போல,
ஒரு கூடைச் செங்கலில் அத்தனையும் வேகாத செங்கல்,
ஒரு செடியிலே விளைந்தாற் போல்.
ஒரு செவியில் வார்த்தாற் போல. 5955
ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகிறது இல்லை.
- (ஒருத்தர் போக.)
ஒருத்தன் ஜோலிக்குப் போகவும் மாட்டேன்: என் காலை மிதித்தால், விடவும் மாட்டேன்.
ஒருத்திக்கு ஒருமகன்.
- (திருவிளையாடற் புராணம்.)
ஒரு தட்டில் ஒர் ஆனை மறுதட்டில் ஆயிரம் பூனை.
ஒரு தம்படி மிச்சப்படுத்தியது ஒரு தம்படி சம்பாதித்தது ஆகுமா? 5960
ஒரு தரம் விழுந்தால் தெரியாதா?
ஒரு தலைக்கு இரண்டு ஆக்கினையா?
ஒரு தலை வழக்கு நூலிலும் செவ்வை.
- (செம்மை.),
ஒரு தாய் அற்ற பிள்ளைக்கு ஊர் எல்லாம் தாய்.
- (அற்றவருக்கு.)
ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை. . 5965
ஒரு துட்டு ஒரு ரூபாயாய் இருக்கிறது.
ஒரு துரும்பு பழுதை ஆகுமா?.
- (துரும்பும்.)
ஒரு துஷ்டனுக்கும், ஒரு துஷ்டனுக்கும் ஒரே வழி;
ஒரு துஷ்டனுக்கும். ஒரு நல்லவனுக்கும் இரண்டு வழி;
இரண்டு நல்லவர்களுக்கு மூன்று வழி.
ஒரு தையல் ஒன்பது தையலைத் தவிர்க்கும்.
ஒரு தொழிலும் இல்லாதவர் நாடகக்காரர் ஆனார். 5970
ஒரு தொழுமாடு முட்டிக் கொள்ளவும் செய்யும், நக்கிக் கொள்ளவும் செய்யும்.
ஒரு நன்றி செய்தாரை உள்ளளவும் நினை.
ஒரு நாக்கா, இரண்டு நாக்கா?
ஒரு நாய் ஊளையிட ஊர் எல்லாம் நாய் ஊளை.
ஒரு நாய்க்குத் தலை வலித்தால் ஒன்பது நாய்க்குத் தலை வலிக்கும். 5975
ஒரு நாய் குரைத்தால் எல்லா நாயும் குரைக்கும்; ஒரு நாய்க்கு வலித்தால் எல்லா #நாய்க்கும் வலிக்கும்.
ஒரு நாய் குாைத்தால் பத்து நாய் பதில் கொடுக்கும்.
ஒரு நாய் வீட்டில் இருந்தால் பத்துப் பேர் காவல் காத்தது போல் ஆகும்.
ஒரு நாள் ஆகிலும் திருநாள்.
ஒரு நாள் ஒரு யுகமாக இருக்கிறது. 5980
ஒரு நாள் கூத்துக்கு மீசையைக் சிரைத்தானாம்,
- (தலையைச் சிரைத்தானாம்.)
ஒரு நள் பஞ்சத்தை உற்றாரிடம் காட்டினாளாம்.
ஒரு நாளும் இல்லாத திருநாள்.
ஒரு நாளும் இல்லாமல் திருநாளுக்குப் போனால் திருநாள் எல்லாம் வெறு நாள் ஆச்சு.
ஒரு நாளும் சிரிக்காதவன் திருநாளிலே சிரித்தான்; திருநாளும் வெறு நாள் ஆச்சு. 5985
ஒரு நாளும் நான் அறியேன். உள்ளே விளக்கெரிந்து.
ஒரு நாளைக்கு இறக்கிறது கோடி, பிறக்கிறது கோடி.
ஒரு பக்கம் பெய்தால் ஒரு பக்கம் காயும்.
ஒரு பசியும் இல்லை என்பாள் ஒட்டகத்தையும் விழுங்கி விடுவாள்
ஒரு பணம் இரண்டு பாளை; ஒன்று கள்; ஒன்று நுங்கு. 5990
ஒரு பணம் கொடுத்து அழச் சொல்லி ஒன்பது பணம் கொடுத்து ஓயச்சொன்னது போல.
ஒரு பணம் கொடுப்பானாம்; ஓயாமல் அழைப்பானாம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம்.
- (ஒன்றே மாதிரி.)
ஒரு பிள்ளை என்று ஊட்டி வளர்த்தாளாம்; அது சொரிமாந்த குணம் பிடித்துச் செத்ததாம்.
ஒரு பிள்ளை பிள்ளை ஆகுமா? ஒரு மரம் தோப்பு ஆகுமா? 5995
- (பிள்ளையும் பிள்ளை அல்ல.)
ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உள்ளங்கையில் சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுச் சந்தியிலே சோறு.
ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியிலே சோறு; நாலு பிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவிலே சோறு.
- (ஒரு பெண் பெற்றவளுக்கு, நடுத்தெருவிலே ஒடு.)
ஒரு பிள்ளை பேளவும் ஒரு பிள்ளை நக்கவும்.
ஒரு புடலங்காயை நறுக்கிப் பாதி கறிக்கும் பாதி விதைக்கும் வைத்துக் கொள்ள முடியுமா?
ஒரு புத்திரன் ஆனாலும் குருபுத்திரன் ஆவானா? 6000
- (குரு புத்திரன் சிலாக்கியம்: புத்திரன் வாக்கியம்,)
ஒரு பூனை மயிர் ஒடிந்தால் ஒன்பது பிராமணனைக் கொன்ற பாவம்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
ஒரு பெட்டை நாய்க்கு ஒன்பது ஆண் நாயா?
ஒரு பெண் என்று ஊட்டி வளர்த்தாள்; அது ஊர்மேலே போச்சுது.
ஒரு பொய்க்கு ஒன்பது பொய்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டும். 6005
ஒரு பொருள் ஆகிலும் எழுதி அறி.
ஒரு பொழுது சட்டி; அதன்மேல் கவிச்சுச் சட்டி.
ஒரு மயிர் போனாலும் கவரிமான் வாழாது.
ஒரு மரத்துக் கொம்பு ஒரு மரத்தில் ஒட்டாது.
ஒரு மரத்துப் பட்டை ஒரு மரத்திலே ஒட்டுமா? 6010
ஒரு மரத்துப் பழம் ஒரு மரத்தில் ஒட்டுமா?
ஒரு மரத்துப் பழமா ஒருமிக்க?
ஒரு மரத்தை அதன் கனியால் அறியலாம்.
ஒரு மரம் இரண்டு பாளை, ஒன்று நுங்கு; ஒன்று கள்; அறிவுடன் பார்க்கும் போது அதுவும் கள்ளே; இதுவும் கள்ளே.
ஒரு மரம் தோப்பு ஆகுமா? 6015
ஒரு மனப்படு: ஓதுவார்க்கு உதவு.
- (ஒருவர்க்கு உதவு)
ஒரு மிளகுக்கு ஆற்றைக் கட்டி இறைத்த செட்டி.
ஒரு மிளகும் நாலு உப்பும் போதும்.
ஒரு மிளகைப் போட்டு விட்டுப் பொதி மிளகு என்னது என்றாற்போல.
ஒரு முத்தும் கண்டறியாதவனைச் சொரிமுத்துப் பிள்ளை என்றானாம். 6020
ஒரு முருங்கையும் ஓர் எருமையும் உண்டானால் வருகிற விருந்துக்கு மனம் களிக்கச் செய்வேன்.
ஒரு முழுக்காய் முழுகிவிட வேண்டும்.
ஒரு முழுக்கிலே மண் எடுக்க முடியுமா?
- (முத்து எடுக்க. எடுக்கிறதா?)
ஒரு முறை செய்தவன் ஒன்பது முறை செய்வான்.
ஒருமைப்பாடு இல்லாத குடி ஒருமிக்கக் கெடும். 6025
ஒரு மொழி அறிந்தவன் ஊமை; பல மொழி அறிந்தவன் பண்டிதன்.
ஒரு ரோமம் போனாலும் கவரிமான் வாழாது.
ஒருவர் அறிந்தால் ரகசியம்; இருவர் அறிந்தால் பாசியம்,
- (அகசியம்.)
ஒருவர் கூறை எழுவர் உடுக்க.
ஒருவர் துணியை இருவர் உடுத்தினால் இருவரும் அம்மணமாம் 6030
- (நிர்வாணம்.)
ஒருவர் படுக்கலாம்; இருவர் இருக்கலாம்; மூவர் நிற்கலாம்.
- (ஆழ்வார்கள் கூற்று).
ஒருவர் பொறை, இருவர் நட்பு.
ஒருவராய்ப் பிறந்தால் நன்மை: இருவராய்ப் பிறந்தால் பகைமை,
ஒருவருக்கு இடுக்கண் வந்தால் அடுக்கடுக்காய் வரும்.
ஒருவருக்கு நிறைவும் குறைவும் ஊழ்வினைப் பயன். 6035
ஒருவரும் அறியாத உச்சித ராமன்,
ஒருவன் அறிந்த ரகசியம் உலகத்தில் பரவும்.
ஒருவன் அறிந்தால் ரகசியம் இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவன் குழியிலே விழுந்தால் எல்லாரும் கூடி அவன் தலையில் கல்லைப் போடுகிறதா?
- (மண்ணை அள்ளிப் போடுகிறதா?)
ஒருவன் செய்த தீமை அவன் காலைச் சுற்றி வேரை அறுக்கும். 6040
ஒருவன் தலையில் மாணிக்கம் இருக்கிறதென்று வெட்டலாமா?
ஒருவன் துணையாக மாட்டான்; ஒரு மரம் தோப்பாக மாட்டாது.
ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒருவனாய்ப் பிறப்பது ஒரு பிறப்பாமா? ஒன்றி மரம் தோப்பாமா?
- (பிறப்பா? தோப்பா?)
ஒருவனுக்கு இருவர் துணை. 6045
ஒருவனுக்குத் தாரம்; மற்றவனுக்குத் தாய்.
- (ஒருவனுடைய தாரம்.)
ஒருவனேனும் உயிருடன் உளனோ?
ஒருவனை அறிய இருவர் வேண்டும்.
ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்; பல பேரைக் கொன்றவன் பட்டம் ஆள்வான்.
ஒரு வார்த்தை வெல்லும்; ஒரு வார்த்தை கொல்லும். 6050
ஒரு விரல் நொடி இடாது.
ஒரு விரல் முடி இடாது.
ஒருவிலே இருந்தாலும் இருக்கலாம்; ஒழுக்கிலே இருக்க முடியாது.
ஒரு விளக்கைக் கொண்டு ஓராயிரம் விளக்கை ஏற்றலாம்,
ஒரு வீடு அடங்கலும் பிடாரி. 6055
- (பஜாரி.)
ஒரு வேலைக்கு இரு வேலை.
- (புத்தி கெட்டவன் வேலை.)
ஒரு வேலைக்கு இரு வேலை, ஓதி வைத்தார் வாத்தியார்.
- (பண்டாரம்.) .
ஒரு வேளை உண்போன் யோகி; இருவேளை உண்போன் போகி; மூவேளை உண்போன் ரோகி.
ஒரே காலில் நிற்கிறான்.
- (இருக்கிறான்.)
ஒரே துறையில் குளித்த உறவு. 6060
ஒல்லி நாய்க்கு ஒட்டியாணம் வேண்டுமாம்.
ஒலி இருந்த சட்டி, இன்ன சட்டி என்று தெரியாது.
ஒவ்வாக் கட்டிலும் தனிமை அழகு.
ஒவ்வாப் பேச்சு வசையோடு ஒக்கும்.
ஒவ்வொரு நாய்க்கும் அதன் நாள் உண்டு. 6065
ஒவ்வொருவனும் தன் தன் பாட்டைத் தானே அனுபவிக்கவேண்டும்.
ஒவ்வொன்றாய் நூறா?.ஒரேயடியாய் நூறா?
ஒழிந்த இடம் பார்க்கிறதா?
ஒழிந்த இடமும் தாவாரமும் தேடுகிறதா?
ஒழுக்கத்தைக் காட்டிலும் உயர்வில்லை. 6070
- (பழமொழி நானுறு.)
ஒழுக்கம் உயர் குலத்தில் நன்று,
- (உயர்குலம்)
ஒழுக்கிலே முக்காடா?
ஒழுக்குக்கு வைத்த சட்டி போல.
ஒழுக்குக்கு வீட்டிலே வெள்ளம் வந்தது போல.
- (ஒழுக்கு வீட்டிலே.)
ஒழுகாத வீடு உள்ளங்கையத்தனை போதும். 6075
ஒழுகுகிற வீட்டில் ஒன்றுக்கு இருந்தால் வெள்ளத்தோடு வெள்ளம்.
ஒழுங்கு ஒரு பணம்; சளுக்கு முக்காற் பணம்.
- (சழக்கு.)
ஒழுங்கு கணக்கப்பிள்ளை; இடுப்பு இறக்கவில்லை.
ஒள்ளியர் தெள்ளியராயினும் ஊழ்வினை பைய நுழைந்து விடும்.
ஒளி இல்லா விட்டால் இருளையும் இருள் இல்லா விட்டால் ஒளியையும் காணலாம். 6080
ஒளிக்கத் தெரியாமல் விதானையார் வீட்டில் ஒளித்துக்கொண்டானாம்.
- (யாழ்ப்பாண வழக்கு.)
ஒளிக்கப் போயும் இடம் இடைஞ்சலா?
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல்.
- (வீட்டிலா ஒளிப்பது?)
ஒளிக்கும் சேவகனுக்கு முகத்தில் ஏன் மீசை?
ஒளிகிற சேவகனுக்கு மீசை எதற்கு? 6085
ஒற்றியும் சீதனமும் பற்றி ஆள வேண்டும்.
ஒற்றுமை இல்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- (குடும்பம். ஒரு சேரக் கெடும்.)
ஒற்றுமையே வலிமை.
ஒற்றை ஆளுக்கு விளையாட்டு இல்லை.
ஒற்றைக் காலில் நிற்கிறான். 6090
ஒற்றைக் காலும் ஓரியுமாய்ச் சம்சாரம் செய்கிறான்.
ஒற்றைப் பாக்கு எடுத்தால் உறவு முறியும்.
ஒன்றரைக் கண்ணன் ஓரைக் கண்ணனைப் பழித்தானாம்.
ஒன்றாம் குறைவு வண்ணான் கழுதைக்கு.
ஒன்றால் ஒன்று குறைவு இல்லை; முன்னாலே கட்டத் துணி இல்லை. 6095
ஒன்றான தெய்வம் உறங்கிக் கிடக்கும் போது பிச்சைக்கு வந்த தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்கச்சே, மூலை வீட்டுத் தெய்வம் குங்கிலியம் கேட்குமாம்.
- (குங்கிலியத்துக்கு அழுததாம்.)
ஒன்றான தெய்வம் ஒதுங்கிக் கிடக்க ஹனுமந்தராயனுக்குத் தெப்பத் திருநாளாம்.
ஒன்றான தெய்வம் ஒதுங்கி நிற்கிறதாம்; சுற்றுப்பட்ட தெய்வம் ததியோதனத்துக்கு அழுகிறதாம்.
ஒன்றான பிரபு உறங்கிக் கிடக்கையில் பிச்சைக்கு வந்தவன் ததியோதனத்துக்கு அழுகிறானாம். 6100
ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை.
ஒன்று ஒன்றாய் நூறோ? ஒருமிக்க நூறோ?
ஒன்றுக்கு இரண்டாம் வாணிபம் இல்லை.
ஒன்றுக்கு இரண்டு: உபத்திரவத்துக்கு மூன்று.
ஒன்றுக்குப் பத்து; உரைக்குப் பதினாறு.
ஒன்றுக்கும் அற்ற தங்காளுக்குக் களாக்காய்ப் புல்லாக்கு. 6105
ஒன்றுக்கும் ஆகாத ஊர்ப்பறை.
ஒன்றுக்கும் ஆகாதவன் உபாத்தியாயன் ஆகட்டும்.
ஒன்றுக்கு வாங்கி எட்டுக்கு விற்றால் லாபம்.
ஒன்று கட்டி விதை; ஒன்று வெட்டி விதை.
ஒன்று குறைந்தது கார்த்திகை: ஒக்கப் பிறந்தது மார்கழி. 6110
- (ஒக்கப் பிறந்தது சங்கராந்தி.)
ஒன்று செய்தாலும் உருப்படியாகச் செய்ய வேண்டும்.
ஒன்று தெரிந்தவனுக்கு எல்லாம் தெரியாது.
ஒன்று நினைக்க ஒன்று ஆயிற்று.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
- (பாரதியார்.)
ஒன்றும் அற்ற தங்காளுக்கு ஒன்பது நாள் சடங்கா? 6115
ஒன்றும் அற்ற நாரிக்கு ஒன்பது நாள் சடங்கு; அதுவும் அற்ற நாரிக்கு ஐந்து நாள் சடங்கு.
ஒன்றும் அறியாத கன்னி, அவளைப் பிடித்தது சனி.
ஒன்றும் அறியாளாம் கன்னி, ஓடிப் பிடித்ததாம் ஆறு மாத ஜன்னி.
- (அவளைப் பிடித்ததாம்.)
ஒன்றும் இல்லாத தங்கைக்கு ஒன்பது நாள் சடங்காம்.
ஒன்றும் இல்லாததற்கு ஒரு பெண்ணையாவது பெற்றாளாம். 6120
ஒன்றும் இல்லாத தாசனுக்கு ஒன்றரைத் தோசை.
- (ஒன்றரை முழத் தோசை.)
ஒன்றும் இல்லாவிட்டால் அத்தை மகள் இருக்கிறாள்.
ஒன்றும் இல்லை என்று ஊதினான்; அதுதானும் இல்லை என்று கொட்டினான்.
ஒன்றும் தெரியாத சின்னக் கண்ணு, பானை தின்னுவாள் பன்றிக் கறி.
ஒன்றும் தெரியாத பாப்பா, போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள். 6125
ஒன்றும் தெரியாதவனுக்கு எதிலும் சந்தேகம் இல்லை.
ஒன்றே ஆயினும் நன்றாய் அறி.
ஒன்றே குதிரை; ஒருவனே ராவுத்தன்.
ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்.
- (திருமந்திரம் )
ஒன்றே செய்க, இன்றே செய்க, இன்னே செய்க. 6130
- (கபிலர் அகவல்.)
ஒன்றே செயினும் நன்றே செய்.
ஒன்றே பிறப்பு, ஒன்றே சிறப்பு.
ஒன்றே ராசா, ஒன்றே குதிரை.
ஒன்றைத் தொடினும் நன்றைத் தொடு.
ஒன்றைப் பத்தாக்கு. 6135
ஒன்றைப் பத்தாகவும், பத்தை ஒன்றாகவும் சாதிக்கிறான்.
ஒன்றைப் பிடித்தால் உடனே சாதிக்க வேண்டும்.
ஒன்றைப் பெற்றால் நன்றே பெற வேண்டும்.
ஒன்றைப் பெற்றாலும் கடுகப் பெறு.
ஒன்றைப் பெற்றாலும் கன்றைப் பெறு. 6140