தாய்மொழி காப்போம்/வாழ்க்கைக் குறிப்பு

கவியரச முடியரசன்
வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் : துரைராசு
பெற்றோர் : சுப்புராயலு - சீதாலெட்சுமி
பிறந்த ஊர் : பெரியகுளம்.
வாழ்ந்த ஊர் : காரைக்குடி
தோற்றம் : 7.10.1920 - இயற்கையடைவு : 3.12.1998
கல்வி : பிரவேசபண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934 - 39)
வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி (1939-43)
பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை , (1947 - 49).
மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949 - 78)
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்)
துணைவியார் : கலைச்செல்வி


மக்கள்: மருமக்கள்: பேரப்பிள்ளைகள்:
குமுதம் +: பாண்டியன் = அருள்செல்வம்,திருப்பாவை
பாரி +: பூங்கோதை = ஓவியம்
அன்னம் +: சற்குணம் = செழியன், இனியன்
குமணன் +: தேன்மொழி = அமுதன், யாழிசை
செல்வம் +: சுசீலா = கலைக்கோ, வெண்ணிலா
அல்லி +: பாண்டியன் = முகிலன்

இயற்றிய நூல்கள்

  1. முடியரசன் கவிதைகள் (கவிதைக் தொகுதி) ... 1954
  2. காவியப் பாவை ... 1955
  3. கவியரங்கில் முடியரசன் ...1960
  4. பாடுங்குயில் ... 1983
  5. நெஞ்சு பொறுக்கவில்லையே ... 1985
  6. மனிதனைத் தேடுகின்றேன் ... 1986
  7. தமிழ் முழக்கம் ... 1999
  8. நெஞ்சிற் பூத்தவை ... 1999
  9. ஞாயிறும் திங்க ளும் ... 1999
  10. வள்ளுவர் கோட்டம் ... 1999
  11. புதியதொரு விதி செய்வோம்.... 1999
  12. தாய்மொழி காப்போம் ... 2009
  13. மனிதரைக் கண்டு கொண்டேன் .... 2005
  14. பூங்கொடி (காப்பியம்) ... 1964
  15. வீரகாவியம் (காப்பியம்)... 1970
  16. ஊன்றுகோல் (காப்பியம்)... 1983
  17. இளம்பெருவழுதி ... 2008
  18. எக்கோலின் காதல் (சிறுகதைத் தொகுப்பு) ... 1999
  19. அன்புள்ள பாண்டியனுக்கு (கடித இலக்கியம்) ...1999
  20. இளவரசனுக்கு (கடித இலக்கியம்) ... 1999
  21. எப்படி வளரும் தமிழ் (கட்டுரைத் தொகுப்பு) ... 2001
  22. சீர்த்திருத்தச் செம்மல் வை.சு.சண்முகனார்... (கட்டுரை) .. 1990
  23. பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு)... 2008
  24. பாடுங்குயில்கள்(கவிதைக் தொகுதி) ... 1975
  25. முடியரசன் தமிழ் இலக்கமன் ... 1967

தேடிவந்த சிறப்புகள்

(விருது/பட்டம் பரிசு - வழங்கியவர், இடம், ஆண்டு)

‘அழகின் சிரிப்பு’ என்ற கவிதைக்கு முதல் பரிசு - பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை - 1950

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ பட்டம் - பேரறிஞர் அண்ணா 1957.

‘கவியரசு’ பட்டம், பொற்பதக்கம்’ - குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்பு மலை - 1966

‘முடியரசன் கவிதைகள்’ நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966

‘வீர காவியம்’ நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1973.

‘நல்லாசிரியர்’ விருது, வெள்ளிப் பதக்கம் - கே.கே.ஷா, ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974.

‘சங்கப்புலவர்’ பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974

‘பாவரசர்’ பட்டம், பொற்பேழை - மொழி ஞாயிறு ஞா. தேவ நேயப்பாவாணர், பெங்களுர் - 1979

‘பொற்கிழி’ - பாவாணர் தமிழ்க் குடும்பம், நெய்வேலி - 1979.

‘பொற்குவை’ - ரூ.10,000/- மணிவிழா எடுப்பு - கவிஞரின் மாணாக்கர்கள், காரைக்குடி - 1979

‘பொற்கிழி’ - பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு, சிவகங்கை

‘கவிப் பேரரசர்’ பட்டம், பொற்கிழி ரூ.10,000/- மணிவிழா எடுப்பு- கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க.மாநில இலக்கிய அணி, சென்னை - 1980

‘தமிழ்ச் சான்றோர்’ விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983.

‘கலைஞர் விருது’ - என்.டி. இராமராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க. முப்பெரும் விழா, சென்னை - 1988

‘பாவேந்தர் விருது’ (1987க்குரியது), பொற்பதக்கம், கலைஞர் மு கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1989 ‘பொற்கிழி’ - விக்கிரமன் - அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர், காரைக்குடி கவிஞர் இல்லம் - 1993

‘பூங்கொடி’ நூலுக்கு இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5,000/ இந்திராணி அறக்கட்டளை, கரூர் - 1993

‘சிறந்த தமிழ்த் தொண்டிற்கான’ அரசர் முத்தையவேள் நினைவுப்பரிசில் - வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000/அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை - 1993.

‘இராணா இலக்கிய விருது’ பொற்குவை ரூ.10,000, - தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு - 1994.

‘கல்வி உலகக் கவியரசு’ விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், (அழகப்பா பல்கலைக் கழகம்) காரைக்குடி - 1996

‘பொற்கிழி’ பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசர் செந்தமிழ்க்கல்லூரி, மேலைச்சிவபுரி - 1997

‘கலைமாமணி’ விருது, பொற்பதக்கம் - செல்வி பாத்திமா பீவி, ஆளுநர், கலைஞர் மு.கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை - 1998.

பெற்ற பாராட்டுகள்

பாவேந்தர் வழித்தோன்றல், புதுமைக்கவிஞர், கவிமாமன்னர், கவிச்சிங்கம், இருபதாம் நூற்றாண்டின் இமயக் கவிஞர், கவிதை இமயம், தமிழ்த்தவம் கொண்ட தலைமைக் கவிஞர், தமிழ்க் குடியரசின் பாட்டு முடியரசர், கவியுலக முடியரசர், சுயமரியாதைக் கவிஞர், தமிழிசைப் பாவலர், தமிழியக்கக் கவிஞர்.

வள்ளுவர் நெறியில் வாழ்ந்தவர், சொல்லும் செயலும் ஒத்த வாழ்வினர், வறுமையிலும் செம்மை போற்றியவர், திமிர்ந்த ஞானச் செருக்குடைய சங்கப் புலவரனையர், சங்கத் தமிழனைய தூயவர், பீடுநடையினர், பெருமித வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர் கொண்ட பார்வையர், அண்டிப் பிழையார். ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், கசயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர். குழந்தை உள்ளத்தினர், பூமனத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர்.

இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக, தன் மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும் அரசவைப் பதவிகள் நாடிவந்த போதும், அவற்றைப் புறக்கணித்தும் 'வளையா முடியரசர்' என்றும் 'வணங்கா முடியரசர்' என்றும் புகழ்பெற்றவர், தன்மானக் கொள்கையால், மைய, மாநில அரசுகளின் பல அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர்களாக்கியவர், கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும்" கொள்கையுடையவர். 'தன்னை மறந்த லயம் தன்னில்' இருக்கும் இயல்பினார்.

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்

இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்.

- பாவேந்தர்