தாய்/பொலேவோய் ப. உண்மை மனிதனின் கதை
< தாய்
முதல் பாகம்
—-
1
இரண்டாம் பாகம்
—-
253
சோவியத் மக்கள் நாஜி ஜெர்மனியை எதிர்த்து நடத்திய மாபெரும் தேசபக்தப் போரின்போது, 1941 மாரிக் காலத்தில் அலெக்செய் மரேஸ்யெவ் (இந்த நூலில் வரும் மெரேஸ்யெவின் முன்மாதிரி) எனும் இளம் போராளி விமானி எண்ணிக்கையில் மிகுதியாக இருந்த விரோதிகளுடன் நடந்த கடும் சண்டையில் சுட்டுவீழ்த்தப்பட்டார். 18 நாட்கள் இரவு பகல் பாதங்கள் நசுங்கிய நிலையில், பசியுடனும் குளிரில் விறைத்தும் பனி மூடிய காடுகளின் ஊடே ஊர்ந்து சென்று சோவியத் படையணிகளைப் போய் அடைந்தார்.
முகவுரையில் மரேஸ்யெவ் - இப்போது அவர் வரலாற்று இயல் காண்டிடேட்டாகவும் பழம்பெரும் போர் வீரர்களின் சோவியத் கமிட்டியின் நிர்வாகச் செயலராயும் உள்ளார் - இந்த நூல் எவ்வாறு எழுதப்பட்டது என்பது பற்றியும் இதன் ஆசிரியர் பரீஸ் பொலேவோய் பற்றியும் கூறுகிறார்.