திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை
தொகுஆசிரியர்: தெரியவில்லை
தொகுநூல்
தொகுகாப்பு
திருக்கோவை யாதி வராகர்தங் கோவை சிறந்தவைந்து
தருக்கோவை வாழ்வித்த சக்கரக் கோவைத் தமிழ்மணக்கு
மருக்கோவை யாங்கரந் தைக்கோவை சாற்றும் வருக்கமீந்தீ
ருருக்கோவைப் புள்ளர சைப்பணிந்த தேதுணிந் தோதுவனே. ()
உயிர் வருக்கம்-12 பாடல்கள்
தொகுகைக்கிளை
காட்சி
பாடல்:01 (அரவிந்த)
தொகுஅரவிந்த முங்குமி ழுங்கருங் காவியு மாம்பலுந்தேன்
விரவுந் தளவமுங் கோங்கமுந் தாங்கிவெண் சங்கமுஞ்சக்
கரமுந் தரித்தவ ராதி வராகர் கரந்தைவெற்பில்
வரவந் தாவாவிம் மலர்க்காவிற் கற்பக வல்லியொன்றே. (01)
- பதவுரை
- கருத்துரை
- விசேடவுரை
ஐயம்
பாடல்: 02 (ஆலோன்)
தொகு- ஆலோன் விழுங்குமும் மண்டல மோகும்ப னாலயமோ ()
- வேலோன் பொருத வியலிட மோகன்று மேய்த்தசெங்கண் ()
- மாலோன் கரந்தையி லாதி வராகர் மலரணையின் ()
- பாலோ விவர்பொற் பதத்தூளி தாங்கிப் பயனுறவே. (02)
துணிவு
பாடல்: 03 (இருங்காவி)
தொகு- இருங்கா வியங்கண் கயல்போ லிமைக்கு மெழுத்துரைக்கும் ()
- பெருங்கா மவல்லி பிணையலும் வாடும் பெயர்த்துநடை ()
- தருங்கான் மலருந் துழாய்மால் வராகர்சந் தாடவிக்குள் ()
- வருங்கா மவல்லியிம் மாதரை யாளு மலர்விழியே. (03)
பாடல்: 04 (ஈட்டிய)
தொகு(குறிப்பறிதல்)
ஈட்டிய நோயுமந் நோய்தீர் மருந்து மிருந்தவத்தாற் ()
காட்டிய கற்பனை காரிகை யார்கடைக் கண்ணிலுண்டாஞ் ()
சூட்டிய பச்சைத் துளவோன் வராகன் சுரும்புவரை ()
கோட்டிய கும்ப முலைப்பாவை பார்வைக் குறிப்புநன்றே. (04)
பாடல்: 05 (உரைக்குங்)
தொகு(இடம்பெற்றுத் தழாஅல்)
உரைக்குங் கிளிகள் கருங்குயில் கூவுங்கள் ளுண்டுசுரும் ()
பிரைக்கும் பனிமலர் வாசங்கள் வீசுஞ்சந் தீர்த்தரைத்துக் ()
கரைக்கும் பொருநைத் துறையார் வராகர் கரந்தையன்னார் ()
வரைக்குங் குமமுலை விம்முநெஞ் சேயிடம் வாய்த்ததின்றே. (05)
(முன்னைலையாக்கல்)
பாடல் 06 (ஊர்பெற்ற)
தொகுஊர்பெற்ற பாவைய ராயம்பெற் றீர்பந் தொடுகழங்குண் ()
டேர்பெற்ற வாவியும் பூஞ்சோ லையுமுண் டெழுதரிய ()
கார்பெற்ற மேனித் திருமால் வராகர் கரந்தையன்னீர் ()
நீர்பெற்ற தியாவர்பெற் றார்விளை யாட்டின்றி நிற்பதென்னே. (06)
(வறிது நகை தோற்றல்)
பாடல் 07 (எல்வந்)
தொகுஎல்வந் தரும்பு மணிமேக வண்ணத்தி லிந்திரவான் ()
வில்வந் தரும்ப வருவார் வராகர்பொன் மேருவெற்பில் ()
வல்வந் தரும்பு மணிமுலை யாள்வத னாம்புயத்தி ()
லல்வந் தரும்பு நிலாப்போ னகைவந் தரும்பியதே. (07)
(முறுவல் குறிப்புணர்தல்)
பாடல் 08 (ஏர்முத்)
தொகுஏர்முத் தமிழ்தங்கு மெங்க ணுமேபண் டிடைச்சியர்வாய்ச் ()
சீர்முத் தமுதஞ்செ யாதி வராகர் சிலம்பிலிரு ()
பேர்முத்த மும்பெறச் செய்வாய் பவளம் பிறங்குநகை ()
கூர்முத்த வாணகை கோடிபொன் னேவிலை கூறிடினே. (08)
(இரந்து பின்னிற்றல்)
பாடல் 09 (ஐந்தாரு)
தொகுஐந்தாரு வேந்துனு மம்புயத் தோனு மமரர்களும் ()
பைந்தார் கொடுபணி யாதி வராகர் பழனவயற் ()
செந்தா மரையன மேயும தேவல் செயவறியேன் ()
வந்தாள வென்று விலையோலை வாங்கு மனந்துணிந்தே. (09)
(மெய்தொட்டுப் பயிறல்)
பாடல் 10 (ஒண்போத)
தொகுஒண்போ தலருந்தி யாதி வராக ருயர்வரையின் ()
பண்போ திசைகள் பயில்வண்டு காளிடை பார்த்துமின்னார் ()
கண்போல் விளங்கியுங் காவியந் தேறியுங் கண்மலருந் ()
தண்போது சென்று பரிசாரஞ் செய்தல் தகாதுமக்கே. (60)
(பொய் பாராட்டல்)
பாடல் 11 (ஓலக்கடற்)
தொகுஓலக் கடற்பள்ளி கொண்டோன் வராகனெட் டோடையொக்கு ()
நீலக் கருங்குழ னேரிழை யீருங்க ணீள்விழிகள் ()
போலக் கவின்பெற வேண்டியன் றோவண்டு போற்கயலுஞ் ()
சீலப் புவனத்தி லெப்போது மாதவஞ் செய்குவதே. (09)
(உள்ளக்கருத்தை வள்ளல் அறிதல்)
பாடல் 12 (ஔவியந்)
தொகுஔவியந் தீர்ப்பவ ராதி வராக ரணிவரையார் ()
நௌவியங் கண்ணி லமுதளித் தார்வெண் ணகையளித்தார் ()
திவ்விய கொங்கை திறந்துமுத் தாரந் திருத்தினரா ()
றுவ்வியன் காவி லிசையுங்கொல் லோதுணிந் தோர்மனமே. (60)