திருக்குறள் செய்திகள்/மதிப்புரைகள்

மதிப்புரைகள்

"மிக அழகாகவும் எளிய முறையில் யாவரும் புரிந்த கொள்ளும்படியாகவும் நடைமுறையில் கருத்துகள் சொல்லப் பட்டுள்ளன. இதுவரையில் இந்தமாதிரி ஒரு புத்தகத்தை நாம் கண்டதில்லை"

16-8-94 (ஒப்பம்) S. சம்பந்தம் சென்னை -600 081

"தங்கள் திகட்டாத 'திருக்குறள் செய்திகள்' என்னும் நூல் தின இதழ், தினத்தந்திபோல் படித்தவர்க்கும் பாமார்க்கு பயன்படும் பாங்கு பெற்றதாகும்."

"கவியரசு கண்ணதாசனை, ' நீ கவிதைக்குப் புருஷன் உரைநடைக்கு அரசன்' என்றார் கவிஞர் வாலி.

ஆனால் நீங்களோ "இரண்டுக்கும் இணையற்ற ஏகோபித்த எஜமானனாக, வேதத்தின் வியாசராக, எழிலான செந்தமிழ் சிம்மாசனத்தில் சீலத்துடன் அமர்ந்து ஒளிர்கிறீர்கள்"

31-8-94 (ஓப்பம்) டாக்டர் மன் ஜெயராமன்

"கவியரசு கண்ண தாசன் கழகம்

சென்னை -600 00