92. வரைவில் மகளிர்
(விலை மகளிர்)


சொன்னால் நீ கேட்கமாட்டாய்; அவள் உன்னிடம் பிரியம் காட்டுகிறாள் என்று சொல்கிறாய்; நீ காசு இல்லாமல் போ; உன்னைச் செல்லாக் காசுக்கும் மதிக்கமாட்டாள். அந்த வீடு அன்பு அகம் அன்று; பொருள் அகம்; இவர்களைப் பொருட்பெண்டிர் என்றுதான் வழங்குகின்றனர்.

அளவோடு இனிக்கப் பேசி வளமாக வாழ்கிறவள் அந்த வனிதை; உன் மனைவி அதிகம் பேசி அலுப்பைத் தந்துவிடுகிறாள் இவள் குறைவாகப் பேசுவாள்; நிறை வாகச் சம்பாதிப்பாள். அஃது அவள் தொழில்; இனபம் அளவுச் சாப்பாடுதான்.

அவள் உன்னை இறுகத் தழுவுகிறாள்; அதனைக் கண்டு நீ மனம் உருகுகிறாய்; அவள் உடம்புதான் தழுவ இடம் கொடுக்கிறது; உணர்வு உங்களைப் பிணிக்கவில்லை. அதனை விட இருட்டறையில் முன்பின் பார்க்காத ஒரு பிணம் இருந்தால் அதனைத் தழுவலாம். அதற்கு உணர்வு இருக்காது. இவளைவிட அது மேல்; அது காசு கேட்காது.

அருள் உள்ளம் படைத்தவர், ஒழுக்கம் உடையவர் இவர்களுக்கு அவர்கள் வீட்டின் முகவரியே தெரியாது. சலன புத்தி உடைய சாமானியரே அவர்கள் வாடிக்கைக்காரர் ஆகின்றனர். இந்த நரகத்தில் கால் வைப்பவர் மீள்வதே இல்லை.

தீய பழக்கங்கள் என்று கடியப்பட்டவை சூதும் கள்ளும்; இவற்றோடு இந்த மாதையும் சேர்க்க வேண்டியது

10 தான். இந்தப் பழக்கம் உடையவர் பொருளை வைத்துக் காப்பாற்றமாட்டார்கள்.

‘திருமகள் இல்லம்’ என்று வெளியே இதற்கு முன் எழுதி இருந்தான்; அதற்கு வேலையே இல்லை. செல்வம் அங்குக் குடியிருக்க மறுத்துச் செல்விகளை நாடிச் சென்றுவிடுகிறது. இத் தீய பழக்கம் உடையவர் வாழ்வு கருகிவிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/92&oldid=1106502" இலிருந்து மீள்விக்கப்பட்டது