திருக்குறள் மணக்குடவருரை/ஊழ்

ஊழியல்.

ஊழியலாவது, ஊழினது இயல்பு. ஊழாவது, முன்பு செய்த வினை பின்பு விளையும் முறை. மேல் கூறிய அறப்பகுதியும், இனிக் கூறுகின்ற பொருட்பகுதியும் இன்பப் பகுதியும் முன் செய்த நல்வினையால் வருதலையும், அவற்றிற்கு மாறான பாவமும் வறுமையும் துன்பமும் தீவினையால் வருதலையும் அறியாதே பல மக்கள் தமது முயற்சியால் வந்ததென்ப. அஃது அன்று என்பதற்காக இது கூறப்பட்டது. ஒருவன் செய்த வினை தனது பயனை வழுவின்றிப் பயத்தல் அறத்தின் ஆகுமாதலான், இஃது அறத்தின் இறுதிக்கண் கூறப் பட்டது.

௩௮-வது.-ஊழ்.

அஃதாவது, ஊழினுடைய தன்மையைக் கூறுதல். (ஊழ் இன்ன தென்பது மேலே உரைக்கப்பட்டது.)

கூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்;
போகூழால் தோன்றும் மடி.

இ-ள்:- கைப்பொருள் ஆகும் ஊழால் அசைவின்மை தோன்றும்-(ஒருவனுக்கு) ஆக்கத்தைக் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் முயற்சி தோன்றும்; போகும் ஊழால் மடி தோன்றும்-(ஆக்கத்தின்) அழிவைக் கொடுக்கின்ற ஊழ் தோற்றினால் மடி தோன்றும்.

இஃது, ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வரு மென்றது. ௩௭௧.

பேதைப் படுக்கும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

இ-ள்:- இழவு ஊழ் பேதை படுக்கும்-கெடுக்கும் ஊழ் (தோன்றினால்) அறியாமையை உண்டாக்கும்; ஆகல் ஊழ் உற்றக் கடை அறிவு அகற்றும் -ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும்.

இஃது, அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது. ௩௭௨.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை யறிவே மிகும்.

இ-ள்:- நுண்ணிய நூல் பல கற்பினும்-(ஒருவன்) நுண்ணிதாக ஆராய்ந்த நூல்கள் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை யறிவே மிகும்-பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்.

மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார். "அஃது எற்றுக்கு, கல்வியன்றே காரணமாம்?" என்றார்க்குக் கல்வியுண்டாகினும் ஊழானாகிய அறிவு வலியுடைத்தென்று இது கூறிற்று. ௩௭௩.

ழிற் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

இ-ள்:- ஊழின் பெருவலி யா உள-ஊழினும் மிக்க வலியுடையன யாவை உள? மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும்-பிறிது ஒன்றை ஆராயும் காலத்தும் தான் முற்பட (ஆராய்ச்சிக்கு உடன்பட்டு) நிற்கும்.

இஃது, ஊழே எல்லாவற்றிலும் பெரிய வலியை உடைத் தென்றது. ௩௭௪.

ல்லவை யெல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

இ-ள்:- செல்வம் செயற்கு தீயவும் நல்லவாம்-செல்வத்தை உண்டாக்குதற்கு (முன்பு தனக்குத்) தீதாயிருந்தனவும் நன்றாம்; (செல்வம் அழித்தற்கு) நல்லவை யெல்லாம் தீயவாம்-செல்வத்தை இல்லையாக்குதற்கு (முன்பு தனக்கு) நன்றாயிருந்தன வெல்லாம் தீதாம்.

ஆகூழ் உற்ற காலையில் தீயகருவிகள் நல்ல கருவிகளாய்ச் செல்வத்தை ஆக்குமென்றும், போகூழ் உற்ற காலையில் நல்ல கருவிகள் தீய கருவிகளாய்ச் செல்வத்தை அழிக்குமென்றும் இது கூறிற்று. ௩௭௫.

ரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

இ-ள்:- பால் அல்ல பரியினும் ஆகாவாம்-(ஊழால்) தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் (தமக்கு) ஆகா; தம உய்த்து சொரியினும் போகா-(ஊழால்) தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் போகா.

[ஆம் என்பது அசை.]

இது, முன்புள்ள செல்வம் காவல்படுதலும் களவு போதலும் ஊழினாலே ஆகுமென்றது. ௩௭௬.

குத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.

இ-ள்:- வகுத்தான் வகுத்த வகை அல்லால்-விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினால்லது, கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது-கோடி பொருளை ஈட்டினவனுக்கும் (அதனால் வரும்) பயனைக் கோடல் அருமையுடைத்து.

[விதானம் பண்ணினவன்-ஒவ்வோர் உயிரின் வினையின் பயனை அஃதஃது அநுபவிக்கும்படி விதித்தவன். வினைப்பயன் சடமாதலால், தன்னைச் செய்த உயிரை அறிந்து பொருந்தாது. அதனை அறிந்து பொருந்துவோன் கடவுளென்பது ஆசிரியர் கொள்கை. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து, கெடுக உலகியற்றி யான்" என்று பிறாண்டும் கூறியுள்ளார்.]

இது, பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ் வேண்டு மென்றது. ௩௭௭.

ருவே றுலகத் தியற்கை, திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

இ-ள்:- திரு(வினராதலும்) தெள்ளியர் ஆதலும் வேறு வேறு- செல்வமுடையராதலும் தெள்ளியராதலும் வேறு வேறு (ஊழினால் வருமா தலால்), இருவேறு உலகத்து இயற்கை-இரண்டு வகை (யாதல்) உலகத்தின் இயல்பு.

[தெள்ளியர்-அறிவுடையார். தெள்ளியராதலும் என்றதனால், திருவினராதலும் என்று கொள்ளப்பட்டது.]

இது, செல்வத்தை அளிப்பதும் அறிவை அளிப்பதும் வெவ்வேது ஊழா மென்றது. ௩௭௮.

துறப்பார்மன் துப்புர வில்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

இ-ள்:- துப்புரவு இல்லார் துறப்பார்-நுகரும் பொருள் இல்லாதார் துறக்க அமைவர், உறல் பால ஊட்டாது கழியும் எனின்-தமக்கு வந்துறும் துன்பப் பகுதியானவை உறாது போமாயின்.

[மன் என்பது அசை. ஊட்டாது என்பது ஈறு கெட்டு நின்றது. துன்பப் பகுதியானவை-துன்பத்தைக் கொடுக்கும் ஊழைச் சேர்ந்தவை.]

இது, துறவறம் ஊழினால் வரு மென்றது. ௩௭௯.

ன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லல் படுவ தெவன்?

இ-ள்:- நன்று ஆம் கால் நல்லவாக காண்பவர்-நன்மை வரும் காலத்து நன்றாகக் கண்டவர்கள், அன்று ஆம் கால் அல்லல் படுவது எவன்-தீமை வரும் காலத்து அல்லல் படுவது யாதினுக்கு?

அறிந்தவர்கள் வருவனவெல்லாம் இயல்பென்று கொள்ள வேண்டுமென்று இது கூறிற்று. ௩௮0.

 
.

அறத்துப்பால் முடிந்தது

எனது நூல்களுக்குத்
தென்னாபிரிக்காவிலிருந்து பொருளுதவிய
இந்திய சகோதரர்களின் பெயர்கள் முதலியன.

⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗⚯⛗


மகா௱-௱-ஸ்ரீ ஷி  பெ
வி. ரெ. நமசிவாய முதலியார், மாயவரம் ... 5 5 0
ரா. இராமச்சந்திர நாயுடு, போர்ட் எலிசபெத் ... 2 2 0
சி. நாராயணசாமி நாயுடு, கொட்டுப்பாளையம் ... 0 2 6
வே. த. சுப்பிரமணிய பிள்ளை, பரங்கிப்பேட்டை ... 0 10 0
நா. கா. ரெங்கசாமி படையாட்சி அண்டு கம்பெனி,
கீழப்பெரும்பள்ளம் ... 0 10 0
வெ.நாராயணசாமி முதலியார், தில்லையாடி ... 0 10 0
சீனிவாச வாண்டையார், மோரீஸ் ... 0 2 0
மு. சுப்பிரமணிய செட்டியார் ... 0 10 6
க. கரத்தா படையாட்சி,
சிதம்பரம் கோயில் பத்து ... 0 3 0
ஆர். வேலுப்பிள்ளை, போர்ட் எலிசபெத் ... 2 2 0
க. முத்துப்பத்தர், கள்ளிவளாகம் ... 0 5 0
ப. ஆறுமுக முதலியார்.
மேலக்கட்டளை செம்பொனார் கோயில் ... 1 1 0
வே. முத்தைய படையாட்சி, பனக்குடி ... 0 5 0
எஸ். பொன்னுசாமி பிள்ளை, திருவாரூர் ... 0 10 6
பொ. மாரிமுத்துப் பிள்ளை, தில்லையாடி ... 0 5 0
த. முத்துசாமி படையாட்சி, மேலூர் ... 0 5 0
ரா, கோவிந்தசாமி படையாட்சி, உமையாள்புரம் ... 0 5 0
பெ. இருளப்ப படையாட்சி, நாச்சகட்டளை ... 0 5 0
மா, சிவலிங்க படையாட்சி, மேலூர் ... 0 5 0
ரா, முத்தைய படையாட்சி, தாண்டாம்பட்டணம் ... 0 5 0
சு. பக்கிரி படையாட்சி, குமாரகுடி ... 0 5 0
நா, சவரி நாயுடு, ஆக்கூர் ... 0 5 0
மு. குப்புசாமிபிள்ளை, போர்ட் எலிசபெத் ... 0 5 0
டி. கிருஷ்ணசாமி பிள்ளை, போர்ட் எலிசபெத் ... 0 2 6
நா. பெருமாள் நாயுடு, போர்ட் எலிசபெத் ... 0 3 0
இருளப்ப செட்டியார், தில்லையாடி ... 0 10 0
த. வடிவேலு பிள்ளை, போர்ட் எலிசபெத் … 0 2  6
ஜெ. ரெட்டி, போர்ட் எலிசபெத் … 0 2 6
எஸ். எம். டேவிட், போர்ட் எலிசபெத் … 0 2 6
வி. எம். பொன்னுசாமி நாயக்கர், போர்ட் எலிசபெத் … 0 5 0
வி. எம். நாராயணசாமி பிள்ளை, போர்ட் எலிசபெத் … 0 4 0
அ. சிங்காரவேலு முதலியார், போர்ட் எலிசபெத் … 0 3 6
கா. சா. பக்கிரி படையாட்சி, கீழையூர் … 0 10 0
குமாரசாமி முதலியார், திருச்செம்பொன்பள்ளி … 0 2 6
என். எஸ், நாகப்ப படையாட்சி, போர்ட் எலிசபெத் … 0 5 0
சா. சபாபதிபிள்ளை, தில்லையாடி … 0 10 6
பொ. கோவிந்தசாமி பிள்ளை, தில்லையாடி … 0 5 0
கோ, இராஜாங்க நாயுடு, தில்லையாடி … 2 2 0
மூ. மாணிக்க வாண்டையார், முப்பேத்தங்குடி … 0 2 6
வை. ஷண்முக வாண்டையார், நூப்போர்ட் … 1 1 0
சி. அப்பாவு பிள்ளை, டி ஆர் … 5 5 0
ஆ. நாராயணசாமி படையாட்சி, நடராஜபிள்ளை சாவடி … 1 0 0
என். ரங்கசாமி செட்டியார், நடராஜபிள்ளை சாவடி … 1 0 0
நாரயண நாயுடு, நடராஜபிள்ளை சாவடி … 0 10 0
கோ , வீரராகவ நாயுடு, நடராஜபிள்ளை சாவடி … 0 10 0
த. கோவிந்தசாமி படையாட்சி, தாண்டாம்பட்டணம் … 0 10 0
ப. நாராயண சாமி படையாட்சி, தாண்டாம்பட்டணம் … 0 2 6
ப. கரும்பாயிர படையாட்சி, கடாத்தலையன் பாளையம் … 0 10 0
சுப்பராய ஆசாரி, தில்லையாடி … 0 10 0
வெ. இலக்ஷ்மண மூப்பன், ஆக்கூர் … 1 0 0
செ. இரத்தினசாமி படையாட்சி, செம்பொனார் கோயில் … 5 0 0
வே. காத்தபெருமாள் படையாட்சி, சேத்தூர் … 1 0 0
தி. நாராயணசாமி படையாட்சி, தில்லையாடி … 1 1 0
வீ. கோவிந்தசாமி படையாட்சி, ஒழுகமங்கலம் … 1 10 0
சி. நாகமுத்து படையாட்சி, மேலையூர் … 1 10 0
சி. கோதண்டபாணி நாயுடு, தில்லையாடி … 1 1 0
த. கந்தசாமி பிள்ளை, சந்திரபாடி … 1 0  0
சி. சீனிவாச படையாட்சி, வைத்தீசுவரன்கோயில் … 1 0 0
வி. சாமிபிள்ளை, கிம்பர்லி … 1 0 0
எம். சாமிபிள்ளை, கிம்பர்லி … 1 0 0
வே. வெங்கட்டராம நாயுடு, கிம்பர்லி … 1 1 0
நா. அய்யலு நாயுடு, தில்லையாடி … 1 1 3
கோ வேணுகோபால் நாயுடு, சேத்தூர் … 0 10 0
சொ. உருத்திராபதி முதலியார், நாங்கூர் … 0 5 0
வை. இரத்தினசாமி படையாட்சி, தில்லையாடி … 0 2 6
ஹரி. கண்பத், கிம்பாலி … 0 2 6
சி. நடேச படையாட்சி … 0 1 0
ரா. சுப்பிரமணிய படையாட்சி, கிம்பர்லி … 0 10 0
நா. மாரிமுத்துப் பிள்ளை, தில்லையாடி … 0 2 6
சொ. கோவிந்தசாமி படையாட்சி … 0 2 0
வை. குமாரசாமி படையாட்சி, இராதாநல்லூர் … 0 2 0
மா. சுப்பிரமணிய படையாட்சி … 0 2 0
சொ, நடராஜ படையாட்சி, பாலூர் … 0 10 0
ரெ. கோவிந்தசாமி பிள்ளை, … 0 5 0
ஆ. முனிசாமி பிள்ளை … 0 2 6
வே. கணபதி படையாட்சி … 0 2 6
பெ, நடேச பிள்ளை … 0 2 6
ந. பக்கிரிசாமி பிள்ளை … 0 5 0
வி. கனகசபை படையாட்சி, தொடரிபட்டு … 0 2 6
ஆ. கோவிந்தசாமி படையாட்சி, நயனிபுரம் … 0 5 0
ஆ. ரெங்கசாமி படையாட்சி, காழியப்ப நல்லூர் … 0 10 0
வ. நடேச ஆசாரி, உத்தரங்குடி … 0 5 0
நா .சொக்கலிங்கம் பிள்ளை, நீடூர் … 0 2 6
செ. வைத்தியலிங்க படையாட்சி, புளியந்துறை … 0 2 6
ப. ரெங்கசாமி படையாட்சி, திருவெண்காடு … 0 5 0
முத்துகுமாரசாமி படையாட்சி, சேத்தூர் … 0 10 0
இ. சிருஷ்ணசாமி படையாட்சி, வைத்தீசுவரன் கோயில் … 0 5 0
எஸ். கோவிந்தசாமி நாயுடு, கிம்பர்லி … 0 10 0
நா .வீ ராசாமி படையாட்சி, நயனி புரம் … 0 7 6
ரா. ஆறுமுக படையாட்சி, மேலக்கட்டளை … 0 5 0
க. பக்கிரி முதலியார், சீர்காழி … 0 5 0
ச. வீரப்பிள்ளை, பத்தம் … 0 5 0
வீ. சிவக்கொழுந்து படையாட்சி, அன்னப்பன்பேட்டை … 0 2 6
சு. கிருஷ்ணசாமி முதலியார், திருமருகல் … 0 5 0
வி. கலிய முதலியார், செம்பொனார் கோயில் … 0 5 0
சு. கோவிந்தசாமி முதலியார், மேலப்பாதி … 0 5 0
நா. சொக்கலிங்க முதலியார், திருச்சொம்பொன்பள்ளி … 0 3 0
சு. சரவண முதலியார், திருச்சொம்பொன்பள்ளி … 0 2 6
ச. கந்தசாமி படையாட்சி, தில்லையாடி. … 0 1 0
பொன்வசாமி படையாட்சி, கிம்பர்லி … 0 2 6
சு. மாரிமுத்து படையாட்சி, கிம்பர்லி … 0 2 6
க.வைத்தியலிங்க படையாட்சி, மேலைச்சாலை … 0 11 0
ம. முத்துசாமி படையாட்சி, கிம்பர்லி … 0 1 0
நா. இராமசாமி செட்டியார், தரங்கம்பாடி … 0 2 0
மலைப்பெருமாள் பத்தர், தில்லையாடி … 0 2 0
சா. ஆதிமூல படையாட்சி, கிம்பர்லி … 0 2 0
எச்.கே. நாயுடு, கிம்பர்லி … 0 2 0
க. வெங்கடாசல ராஜன், சீர்காழி … 2 13 4
க. பக்கிரி படையாட்சி, … 0 1 0
ந. பெருமாள் பிள்ளை, வாழ்க்கை … 0 1 0
க. சின்ன தம்பி பிள்ளை, நல்லாடை … 0 1 0
கொ. பக்கிரி முதலியார், மேலப்பாதை … 0 1 0
எஸ். கே. சொக்கலிங்க பண்டிதன், பிறையார் … 1 0 0
கே. சுப்பிரமணிய முதலியார், திருமலைராயன்பட்டணம் … 0 10 0
பி. எல். செட்டி, சாத்தங்குடி … 0 2 6
குமரப்பிள்ளை, சாத்தங்குடி … 0 5 0
சி. இரகுநாத படையாச்சி, மாயவரம் … 1 10 0
த.வேதியப் பிள்ளை, தில்லையாடி … 6 14 0
ஆக மொத்தம் .... ப.
… 73 14 1

பிரம்பூர், சென்னை பிங்கள ௵
சித்திரை ௴ 17 ௳